இடம் மாறும் மனங்கள்!

3

வர்ஷினிக்கு அலைச்சலில் நல்ல உறக்கம்.

மறுநாள் காலையில் எழுந்ததும்தான் நினைவு வந்தது ‘சர்வேஷ் பார்க்கனும்ன்னு சொன்னாங்களே’ என. அவசர அவசரமாக கிளம்பினாள்.. கீழே வந்து உண்டுவிட்டு.. ஓட்டமும் நடையுமாக அலுவகலம் கிளம்பிவிட்டாள். தந்தையை எழுப்ப மனதில்லை.. அசதியில் இருப்பார் என தெரிந்து கிளம்பிவிட்டாள் பெண். 

வர்ஷினி அலுவலகம் சென்றதும் சரியாக அழைப்பு வந்தது. இவள், நம்பர் பார்த்தே கண்டுக் கொண்டாள்.. சர்வேஷ்தான் என. அவளுக்கு அவனை மீற வேண்டும் என எண்ணம்.. நேரில் இருக்கும் போது அவளால் எதுமே செய்ய முடியாது இப்போது வரை.. ம்.. அவன் திருமணம் ஆனவன் என தெரிந்தும் ஏதும் செய்ய முடிவில்லை.. இன்னமும் தயக்கம் பயம்.. எதற்கு பேசுவது என ஒருமாதிரி உணர்வு. அதனால், இந்த அழைப்பினை ஏற்கவில்லை.

இரண்டுமுறை அழைத்தான் சர்வேஷ்.. அவள் எடுக்கவில்லை. இந்தர் ஊருக்கு கிளம்பினான். அவனை வழியப்பிவிட என ஸ்டேஷன் வந்தனர் இருவரும். அதனை முடித்துக் கொண்டு சர்வேஷ்  வக்கீலை பார்க்க செல்ல வேண்டும். வேலை இருந்தது. அதற்காக கிளம்பினர்.

ராக்கேஷ் டாக்ஸ்யில் ஏறியதும் தன் மனையாளிடம் பேசினான். ராக்கேஷ் குடும்பத்தோடுதான் சென்னை வந்திருக்கிறான். சர்வேஷ் ராக்கேஷ் இருவருக்கும் சென்னைதான் பிறந்த ஊர். இப்போது இருவரும் சேர்ந்தேதான் ஸ்வீடன்னில் வேலையில் இருக்கின்றனர்.

இடம் வந்ததும் இருவரும் இறங்கி.. வக்கீலை பார்த்து வந்தனர். சர்வேஷ்க்கு வெளியே வந்ததும்,  கண்கள் கசிந்தது.. நண்பனுக்கு தெரியகூடாது என எண்ணினான் போல லேசாக மறைத்துக் கொண்டான் ராக்கேஷ் “நாம எதிர்பார்க்காத நேரத்தில்தான் வாழ்க்கை எதையாவது கையில் கொடுக்கும் டா.. வா.. வா.. பார்த்துக்கலாம்” என்றான்.

சர்வேஷ் ஒரு மூச்சினை இழுத்துவிட்டான்.. பின் “சும்மா பழைய வீட்டை பார்த்துட்டு வருவோமா டா” என்றான்.

ராக்கேஷ் புன்னகையோடு “போலாம் வா.. வேறென்ன வேலை” என்றான்.

சர்வேஷ், ஹைதராபாத்திற்கு வந்தது..தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையில்.. தன் தந்தையின் வேண்டுகோளுக்காக இங்கே வந்து தங்கி படித்தான் நான்கு வருடங்கள். தன் அத்தை வீட்டில். அவர்களுக்கு குழந்தையில்லை.. அவர்கள் இறந்து இரண்டு வருடமாகிறது. ஆனால், சொத்துகளில் ஒருபகுதியை சர்வேஷ் பெயரில் எழுதி வைத்திருக்கின்றனர். அஹ.. அவனால் இந்த அழுத்தத்தை தாங்கவே முடியவில்லை. ஒரு வீடு கோயம்புத்தூரில் இருக்கிறது.. அதை இவன் பெயருக்கு எழுதியிருந்தனர்.. அத்தோடு பாங்கில் பணம்.. அதை அவனின் உடன்பிறப்புகளோடு பிரித்துக் கொள்ளுமாறு எழுதியிருந்தனர். 

 மாமாவின் சொந்தங்களுக்கு இங்கே இருக்கும் வீட்டினை சொந்தமாக்கியிருந்தனர்.. அந்த உயில் முன்பே படிக்கப்பட்டு எல்லோருக்கும் வழங்கப்பட்டுவிட்டது. 

சர்வேஷ் அத்தையின் இறப்புக்கு வந்துவிட்டு உடனே சென்றுவிட்டான்.. அத்தையின் கணவனும் நான்கே மாதத்தில் இறந்துவிட.. இவனால் திரும்ப வர முடியவில்லை. அதன் பிறகு இப்போதுதான் இந்தியா வருகிறான்.. அதனால் இபோதுதான் விவரம் தெரிந்தது.

சர்வேஷ் தாங்கள் முன்பிருந்த பழைய வீட்டின் முன் வந்தான்.. இப்போது அந்த வீட்டினை புதுபித்துக் கட்டியிருந்தனர்.. ஆனாலும் முன்பக்கம் கொஞ்சம் பழைய சாயல் இருந்தது.. அக்கம் பக்கம் எல்லாம் கொஞ்சம் மாறியிருந்தது. சர்வேஷ் சற்று தள்ளி நின்று அந்த வீட்டினையே பார்த்திருந்தான். 

முன்பு, அத்தை.. தான் பள்ளி விட்டு வந்ததும்.. சாதம் பிசைந்து கையில் உருண்டைகளாக கொடுக்க.. வாங்கி வாங்கி உண்டது ஞாபகம் வந்தது. மாமா காலையில் எழுந்து தன் சைக்கிளை துடைப்பது நினைவு வந்தது. நான் இந்தர் ராக்கேஷ் உமர் பிரதாப் என எல்லோரும் வாசலில் நின்று அரட்டை அடித்தது நினைவு வந்தது.. எப்போதாவது வர்ஷினியையும் வைத்து வம்பு வளர்ப்பார்கள் அதுவும் நினைவு வந்தது.. அவளின் அண்ணன் தர்ஷன்.. தங்களை முறைத்துக் கொண்டே.. டியூஷன் செல்லுவதும் நினைவு வந்தது.

சர்வேஷ் நினைவுகளின் கனத்தினை ஏற்றுக் கொண்டு நின்றான்.

ராக்கேஷ் “அத்தையும் மாமாவும் கண்டிப்பா சந்தோஷப்படுவாங்க டா.. நீ நல்லா வாழனும் டா.. நீ உடைஞ்சிட போறேன்னு உன்னை யோசிச்சிருக்காங்க சர்வா.. கல்யாணம் செய்துக்கோடா.. எல்லோரும் சந்தோஷப்படுவோம்..” என்றான்.

சர்வேஷ் “வாயை மூடுறீயா..” என்றான். மீண்டும் தனது நினைவுகளுக்குள் மூழ்கிப்போனான்.

சற்று நேரம் சென்று.. அந்த ஏரியாவின் மெடிக்கல் கடை வைத்திருந்தவர்.. பார்த்து இருவரிடமும் நலம் விசாரித்தார். அப்படியே இருவரும் கிளம்பினர். 

அடுத்த தெருவில்தான் உமர் வீடு.. ராக்கேஷ் “சர்வா.. வா, உமரை  பார்த்துட்டு போலாம்” என்றான்.

சர்வேஷ் “வேண்டாம் டா.. அவன் பிசியா இருப்பான்..” என்றான் யோசனையோடு.

ராக்கேஷ் சின்னக் குரலில் “அதனால் என்ன வர்ஷினியை பார்த்துட்டு போவோம்” என்றான் வானத்தை அண்ணார்ந்து பார்த்து.

சர்வேஷ் “இங்க பார்.. எதையாவது கற்பனையோட.. நீ, நான் அவ கூட பேசுவதை பார்த்தேன்னா.. அதை விட்டுடு இத்தோட. எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லை சொல்லிட்டேன். அவளோடு பேசும் போது முறைக்கிறது.. ஜாடை செய்வதெல்லாம் வேண்டாம் சொல்லிட்டேன். அதனால், இப்போ நாம சாப்பிட போறோம்.. உன் பெண்டாட்டிக்கு எதோ வாங்கனும்ன்னு சொன்னியே அதை வாங்கிட்டு ரூம் போறோம்” என்றான்.

“அப்போது எதுக்கு நம்பர் வாங்கின” என்றான்.

“டேய்.. அவ என்னை பார்த்து பயப்படுறா மாதிரி இருக்கு.. என்கூட பேசவேயில்ல.. பழசையெல்லாம் அவள் இன்னமும் மறக்கலை போல.. அதான்.. கொஞ்சம் அவளை பிரென்ட்லியா ட்ரீட் பண்ணலாமேன்னு.. நம்பர் வாங்கினேன்.. அவ்வளவுதான்.” என்றான்.

ராக்கேஷ் “அவ்வளவுதானா.. நாங்க கூட என்னமோன்னு  நினைச்சோம்.” என்றான்.

சர்வேஷ்  முறைத்தான், நண்பனை.

மீண்டும் நண்பன் “அப்படினா வா, சும்மா உமரை பார்த்துட்டு தர்ஷனை பார்த்துட்டு வருவோம்.. எனக்கு வர்ஷினி கூட பேசணும்.. அவங்க அப்பா சென்னை வரதாக சொல்லிட்டு இருந்தார்.. நான் பார்க்கனும் அவரை.. ஹெல்ப் வேணும்மான்னு கேட்டனும்” என்றான்.

“இவ்வளோ நல்லவனான நீ.. நீயே வெளிநாட்டுகாரன்.. உனக்கு என்ன தெரியும் ஹெல்ப் பண்ண” என்றான்.

நண்பன் “வா டா வா..” என சொல்லிக் கொண்டு நடந்தான்.

பழங்கள் இனிப்புகள் எல்லாம் வாங்கிக் கொண்டு இருவரும் உமர் வீடு வந்தனர்.. உறவுகளால் நிறைந்திருந்தது வீடு. சற்று நேரம் இருந்துவிட்டு.. எல்லோருடும் பேசிவிட்டு காபி பலகாரங்கள் உண்டுவிட்டு கிளம்பினர் இருவரும். ராக்கேஷ் சொன்னது போலவே வர்ஷினி வீடு வந்தனர்.

தர்ஷன் வரவேற்றான்.. புன்னகை முகமாகவே பேசினான். அவரின் தந்தை அறையிலிருந்து எழுந்து வந்தார்.. பேசிக் கொண்டிருந்தார். மதிய உணவு தயாராகிக் கொண்டிருக்க.. உண்டுதான் செல்ல வேண்டும் என விஜயா சொல்லிவிட்டார்.

ஆதிரனோடு விளையாடிக் கொண்டே மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போதுதான் தர்ஷன் சொன்னான் “சென்னைக்கு அப்பா போகபோறார்.. வர்ஷினிக்குதான் ஜாப் கிடைக்கலை.. அவளை விட்டுட்டுதான் போகனும். என்ன பண்றதுன்னு தெரியலை.. வர்ஷினிக்கு தனியாக மேனேஜ் செய்ய கஷ்ட்டம்..” சொல்லிக் கொண்டிருந்தான்.

சர்வேஷ்க்கு, அவளின் தந்தையின் பேச்சில்  அவள் முதல்நாள் பள்ளிக்கு வந்த நினைவு வந்தது.. எட்டாம் வகுப்பில்தான் வர்ஷினி.. வந்து சேர்ந்தாள்.. முதல்நாள் பள்ளியின் லஞ்ச் டைம்.. அப்போதுதான் இவளை பார்க்கின்றனர் இந்த நால்வரும். உமருக்கு, பக்கத்து வீடு இவள் என்பதால்.. இவளை பார்த்திருக்கிறான்.. தெரியும்.

இரண்டடுக்கு கேரியர் டிபன் பாக்ஸ்.. அதை திறந்துக் கொண்டிருந்தாள்.. வர்ஷினி. டேபிளின் மேல் வைத்து.. அந்த பக்குல்ஸ் எடுத்துவிட்டாள். மூடியை திறக்க முடியவில்லை.. தன் மென்விரல்களால் திறக்க.. விரல்களின் அழுத்தம் அதில் பதியவில்லை.. மூடியை திறக்க முடியவில்லை அவளால். பெண்ணவள் தன் நெஞ்சோடு அழுத்தி திறக்க.. அதில் இருந்த கடலை கிரேவி அவளின் யூனிபார்ம்மில் சிந்தி.. கண்ணில் தெளித்து இவள் அதில் “ஸ்.. ஆ..” என கத்தி.. கண்ணில் நீரவர.. அந்த டிபன் பாக்ஸ்சினை தவறவிட்டாள்.

உண்டு முடித்துவிட்டு, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது ஐவரும்.. இயல்பு போல சிரித்துவிட்டனர்.

உமர்தான் சுதாரித்தான் “டேய்.. அவ தர்ஷன் தங்கச்சிடா..” என சொல்லிக் கொண்டே எழுந்து வந்தான்.

டிபன் பாக்ஸ் எடுத்து கொடுத்தான்.. சப்பாத்தி மட்டுமே இருந்தது.. கடலை கிரேவி.. பாதி கீழே கொட்டிவிட்டது.. உமர் “ஹோ.. என்ன ஆச்சு” என தெலுங்கில் கேட்டான்.. அவள் விழித்துக் கொண்டிருந்தாள்.. ஆங்கிலத்தில் கேட்டான் அப்போதுதான் “கான்ட் ஓபன் பாக்ஸ்..” என கண்ணில் நீரோடு தயங்கி திக்கிகே கொண்டே சொல்ல.. சர்வேஷ் அப்போதுதான் அவளை பார்த்தான்.

வர்ஷினி ஒதுங்கி.. லேசாக வெள்ளி நிலவின் நிறம்.. பளிச்சென கண்களை கூசியது.. தூக்கி போணி போட்டுக் கொண்டிருந்தாள்.. நளினமாக இருந்தாள்.. இந்த பள்ளிக்கு அவள் பொருந்தவில்லை.. ஒட்டாமல் நின்றாள். 

சர்வேஷ் “ஆர் யூ நீயூ.. திஸ் ஸ்கூல்..” என்றான்.

தலையசைத்தாள்.

“ஆர் யூ ஆங்கிலோஇந்தியன்” என்றான்.