காலையில் எழுந்தவனுக்கு மனம் அவ்வளவு உற்சாகமாக இருந்தது என்றும் இல்லாமல் இது ஏதோ ஒரு புது உணர்ச்சியை தந்தது…அவளிடம் இருந்து நகர்ந்தவன்,அப்போது அவள் இன்னும் அவன் சட்டையயை பிடித்து கொண்டே உறங்குவதை பார்த்தவனுக்கு மனதில் எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது கூடவே என்னவள் என்ற கர்வமும் வந்தது…அவளின் விரலை பிரித்தவன் அவளை தலையணையில் படுக்க வைத்து விட்டு உடற்பயிற்சிக்கு சென்றான்..
அவன் சென்ற அரை மணி நேரம் கழித்து எழுந்தவள்,மார்கழி மாத குளிர் அவளை எழ விடாமல் செய்து..ஒருவராக தன்னைசரி செய்து கொண்டு குளியலறைக்கு சென்று குளித்துவிட்டு வெளியே வந்தவள்,வாசலில் தண்ணீர் தளித்து கோலம் போட்டாள்…அது வரை யாரும் வரவில்லை ஹாலிர்க்கு, எல்லோருக்கும் COFEE ரெடி செய்யும் போது பிரகாஷ் சரியாக அந்நேரத்திற்கு உள்ளே வரும்போதே அவள் போட்ட கோலத்தை பார்த்துவிட்டு சின்ன சிரிப்போடு உள்ளே வந்தான் … அவள் எழுந்து விட்டாள் என்று உணர்ந்தவன்,சத்தம் போடாமல் அவளின் பின்னே சென்று அனைத்து கொண்டான் ..
அவள் கத்துவாள் என்று நினைத்தான் ,அவள் ரொம்ப கூலாக குளிச்சிட்டு வாங்க பால் ரெடியாக இருக்கு என்றவளை அவன் வியப்பாக பார்த்தான்..
ஹே அஞ்சு nightல குழந்தை மாறி இருக்க காலையில பெரிய மனுஷி மாறி அதட்டுர, என்னவோ போ என்றவன்,அவளை விட்டு நகரவில்லை..தலை கூட ஒழுங்கா துவட்டாமல் எதுக்கு இப்போவே வேலையெல்லாம் செஞ்சுட்டு இருக்க என்று சொல்லிக்கொண்டே அவள் தலையை நன்றாக துவட்டி விட்டு,அவள் முடியை ஒரு கிளிப்பில் அடக்கினான்..
வேலை முடிஞ்சுதா என்றதற்கு முடிஞ்சுது அம்முலு என்று சிறு குழந்தை போல் பதில் சொன்னவனின் பக்கம் திரும்பி அவனுக்கு வாகாக அனைத்து கொண்டாள்…
இப்படியே இருந்துரனும் போல இருக்கு அஞ்சு..
அப்படியா ஒன்னும் பிரச்சனை இல்லை என்று STOVE ஆப் செய்து விட்டு அவனை இன்னும் இறுக அணைத்துகொண்டாள்..
எதுக்குடி காலையிலே மனிஷன புடவை கட்டி இப்படி கொல்ற…MIND வேற எதுமே யோசிக்க மாட்டேன்குது என்றவன் அவலின் வெண்ணிற இடுப்பைத்தான் பார்த்தான்.. வேலை செய்வதற்காக புடவையை இடுப்பில் தூக்கி சொருகிருந்தாள்..
அதை இழுத்து விட்டவனின் கை அவள் இடுப்பில் தீண்டியதும் அவளுக்கு உடல் சிலிர்த்தது அதை உணர்ந்தவனுக்கு ஒரே உல்லாசமாக இருந்தது…விசிலடித்து கொண்டே ,எப்பவும் போல இந்த புடவையில் அழகா இருக்க அஞ்சு என்றவனுக்கு
அப்படியா!! என்று கண்களால் பதில் கேள்வி கேட்டாள் ..
சரி நீங்க போயிட்டு குளிச்சிட்டு வாங்க நான் சமையலை பார்க்கிறேன் என்றாள்…
அஞ்சு வீட்டுல கல்லூரி முடிய எவ்வளவு நாள் ஆகும்ன்னு சொன்ன?
அதுவா என்றவள் ஒன் வீக் சொல்லிருக்கேன் என்றாள் ..
ஓகே என்றவன் அறைக்கு சென்று குளித்துவிட்டு பத்து நிமிடத்தில் ஓடி வந்துவிட்டான்…
அப்போது பெரியவர்களும் வெளியே வந்ததும் அவர்களுக்கு காபி குடுத்து விட்டு ,அவனின் கையில் பாலை கொடுத்து விட்டு அவளும் எடுத்து கொண்டாள்…
அஞ்சு இந்த வேலைலாம் நீ ஏன்டா கண்ணு செய்யிற வீட்டுக்கு வேலை ஆளு போட்டுக்கலாம் என்றார் பாட்டி…
அதற்க்கு அவள், பாட்டி எல்லா வேலைக்கும் தான ஆளு வெச்சிருகிங்க இந்த வேலை மட்டும் தான் நம்ம செய்றோம் அதனால ஒன்னும் பிரச்சனை இல்லை என்றாள்…
இன்று பிரகாஷ்க்கு லீவ் தான் அஞ்சு..அதனால எல்லா வேலையும் அவனுக்கும் சொல்லி கொடு என்ற தாத்தாவுக்கு,கண்டிப்பா தாத்தா அதை விட எனகென்ன முக்கியமான வேலை இருக்க போகுது என்றவளை அவன் செல்லமாக முறைத்தான்…
பாட்டி பூவை எல்லாம் பறித்து வந்து அதை கட்டி அஞ்சுவிடம் கொடுத்தார்…தலை வாரி வெச்சிட்டு வா கண்ணு..
ஓகே பாட்டி என்று அவள் எழுந்ததும் அவனும் எழுந்தான்…
அதை பார்த்த அவன் தாத்தா, அஞ்சு நீ கொஞ்சம் உட்காரு ,சரி தாத்தா என்று அவளும் உட்காந்தால் அவனும் உட்காந்தான்…….
சரிடா நீ கிளம்பி என்றதும் பிரகாஷ் எழுந்தான்..
பெரியவர்கள் இருவரும்,டேய் பிரகாஷ் என்னடா நீ இப்படி மாறி போய்ட்ட என்றது தான் , அப்போது தான் அவள் அவனை கவனித்தாள்…புரிந்ததும் தலையை குனிந்து கொண்டு சிரித்து கொண்டே ரூமிற்கு வந்து விட்டாள்…
அவனுக்கு வெளியே என்ன சொல்வதென்று தெரியாமல் ஹிஹிஹி என்று சமாளித்துவிட்டு,போன் வருகிறது என்று வராத போனை எடுத்துகொண்டு ரூமிற்கு வந்துவிட்டான்…
பாவா என்ன இப்படி அசிங்க படுத்திட்டாங்க உங்கள என்று கலகலவென்று சிரித்தாள்..
ஆமா அஞ்சு என்று பாவமாக மூஞ்சை வைத்து கொண்டு கூறியவனை பார்த்தவளுக்கு மறு படியும் சிரிப்பு தான் வந்தது..
உடனே அவளின் அருகில் சென்று,அவளை சுவற்றோடு சாய்த்தவன்,அவளின் மூச்சு தன் மேல் படும் அளவு அவள் மேல் சாய்ந்தவன்,இப்போ சிரி பாப்போம் என்றவனுக்கு வெட்கத்தையே பதிலாக கொடுத்தாள்….
அவள் கண்களோ வேறு ஒன்றை எதிர்பார்த்தது ,அவளின் இதழ்கள் துடித்தது,அவளின் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கு கேட்டது,அதை அவனும் உணர்ந்தான்..இருவருமே ஒரு மோன நிலையில் தான் இருந்தனர்…
அதை கலைக்கும் விதமாக அவனின் போன் அடித்தது பேசிக்கொண்டே அவளின் முகத்தில் விரலால் கோலம் போட்டு இருந்தவனை, அவன் விரலை எதிர்பாரா விதமாக கடித்ததும் அவன் “அம்மா” என்று கத்தி விட்டான்….
இவனிடம் பேசிய அந்த பெரியமனிதர்,பிரகாஷ் are you ஓகே என்றார்..
எஸ் சார் i M ஓகே சார்..IF YOU DON’T MIND ,I CALL YOU BACK SIR என்று அவன் போனை வைத்ததும்,அவளை அடிக்க ஓடினான்..
அவளின் கைய்யை பிடித்து நிறுத்தியவன் சரியான கொரங்குடி நீ இப்படி கடிச்சி வைக்கிற என்றதும், அவள் கெத்தாக இல்லாத காலரை தூக்கி பெருமைபட்டு கொண்டாள்..
உன்ன இப்படியே விட்டு வைத்தால் சரி வராது போலவே என்றவன்,அவளின் அருகில் மறுபடியும் வந்தவன்,என்னடி என்று இருபுருவத்தையும் உயர்த்தி கேட்டவன் இப்போ உன்னோட சேட்டைய காட்டுடி…
என்ன பன்னிருவிங்க என்று தைரியமாக நின்றாள்..பயம் இல்லையா என்று கேட்டதற்கு இல்லை என்று தலையை ஆட்டினாள்…
அவளின் இந்த நம்பிக்கை அவனுக்கு பிடித்து தான் இருந்தது…
சின்ன பொண்ணுன்னு பார்க்கிறேண்டி..
இல்லன்னா என்ன செய்றதா உத்தேசம் சொல்லுங்க..
உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு பாத்துகிறேன்டி என்றவன் அவளின் தலை முடிகளை சரி செய்து விட்டு பாட்டி கொடுத்த பூவை அவள் தலையில் வைத்து விட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தான்…
என் மேல இருக்க இந்த நம்பிக்கை உனக்கு எப்பவுமே இருக்கனும் சரியா என்றவனுக்கு,
சரி என்றாள்…
அஞ்சு வெளிய போகலாமா என்றதும் அவள் ஆர்வமாக போகலாம் என்றாள்..
நீ போயிட்டு கீழ வெயிட் பண்ணு நான் வரேன் என்றான்…
ITS OK பாவா நான் இங்கயே இருக்கேன் …அவன் அவளை ஆவேன பார்த்தான்…
Anjuu என்று அவன் கத்தியதும் அவள் ஓடிவிட்டாள்..
கீழே வந்து இட்லி அவித்து உருளைகிழங்கு குருமா, தக்காளி சட்னி செய்து முடித்திருந்தாள்.
அவன் கிளம்பி வந்து table லில் உட்கார்ந்ததும் அவனுக்கு பரிமாரும்போது, “அஞ்சு நீ செம்ம ஸ்பீட் தான் போ என்றான்..”
அவளை உட்கார வைத்தவன் அவளுக்கு எடுத்து வைக்கும்போது, பின்ன என்ன உங்கள மாறின்னு நெனச்சிங்களா என்று நமட்டு சிரிப்பு சிரித்தாள்..
அடியே உனக்கு நான் நல்லவனா இருக்கிறது பிடிக்கல போல அப்படித்தான என்றதும்,
அவளும் குறும்பாக ஆமா என்றாள்..
அது சரி என்றவன்,பெரியவர்களிடம் நாங்கள் வெளியே செல்கிறோம் என்று கூறிவிட்டு சென்னையில் இருக்கும் மாலிர்க்கு கூட்டி சென்றான்..
அவளுக்கு உடை எடுக்கும்போது எனக்கு வேண்டாம் ஏற்கனவே இவ்வளவு இருக்கு என்று கண்களை விரித்து, கையையும் விரித்து கட்டியவளை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது இருந்தாலும் பரவால்லை என்று அவளுக்கு ஐந்து புடவைகள் எடுத்து கொடுத்தான்…..
பாவா நீங்களும் எடுத்துகோங்க என்றதும்,எனக்கு தனியாக DEISGNER இருக்காங்க அஞ்சு…வீடு தேடி அதெல்லாம் வந்து விடும்…இருந்தாலும் எதாவது எடுத்துகோங்க நான் PAY பண்றேன் என்றவளை,எப்படி அஞ்சு காசு கொடுப்ப என்றதும், தன்னிடம் இருந்த கார்டு காட்டினாள் ஆனால் அஞ்சு அதெல்லாம் உன்னுடைய காசு இல்லையே உன்னுடைய அப்பாவோட காசு…
நீ எப்போ வொர்க் போறியோ அப்போ எடுத்து கொடு இப்போ ஏதும் வேண்டாம் என்றவனை சிறு கோபத்துடன் பார்த்தாள்..அப்போது இவர்கள் இருவரையும் இவ்வளவு நெருக்கத்துடன் “மோனிகா “பார்த்து கொண்டு இருந்தாள் ..
சமீப காலமாக இவன் தன்னை ஏன் தவிர்க்கிறான் என்று இப்போதான் அவளுக்கு புரிந்தது …அவளுக்கு இவன் மேல் காதல் எல்லாம் கிடையாது ஆனால் இவன் அளவுக்கு அதிகமாகவே பணத்தை வாரி கொடுப்பான் …
அந்நேரம் மோனிகா அஞ்சுவை தான் பார்த்து கொண்டு இருந்தாள் கண்டிப்பாக அவள் பேரழகி தான் மறுக்க முடியவில்லை இருந்தாலும் இவளுக்கு தான்தான் அழகு என்ற கர்வமும் எட்டி பார்த்தது …அவள் எதாவது சொல்வதும் இவன் அதை அமோதிப்பதையும் பார்த்தவளுக்கு எரிச்சலாக வந்தது…..
இவர்களை இப்படியே விட்டாள் சரி வராது என்று நினைத்தவள் ஒட்டி வந்து பிராகாஷ்யை கட்டி பிடித்தாள்…அதில் பிரகாஷிர்க்கு அவ்வளவு ஒரு வெறியாக வந்தது ..இருந்தாலும் அஞ்சு இருப்பதால் அவன் அமைதி காத்தான்…பெண்ணாக வேறு போய்விட்டாளே என்ன செய்வதென்று அடிக்க கூட முடியாமல் போய் விட்டது..
இவனிர்க்கே இப்படி என்றாள்,அன்சுவிர்க்கு ஒன்றுமே புரியவில்லை…அவள் அப்படி செய்ததும் இவள் அவனோடு கோர்த்திருந்த கையை விட்டு விட்டாள்…
அவள் அப்படி கையை விட்டதும்,அவனிற்கு என்ன செய்வதென்றே புரியாமல் நின்றவன் கொஞ்சம் சுதாரித்து விட்டான்..
மோனிகாவை தள்ளி விட்டுட்டு,அஞ்சு இவங்க என்னோடு கல்லூரியில் படித்தவள் என்றான்…
OHH என்றவள்,ஹாய் என்று மோனிகா கையை நீட்டியதும் கையை குலுக்காமல் அவளை இரு கைகளையும் கூப்பி வணக்கம் என்றாள்…
அவள் அப்படி செய்தது பிரகாஷ்க்கு அவ்வளவு பெருமையாக இருந்தது,மோனிகாவிர்க்கு காதில் புகை வராத குறையாக இருந்தது..
தன்னவன் மேல் இருந்த நம்பிக்கையில் அவள் அவனை சந்தேகம்லாம் படவில்லை…சிரித்த முகமாகவே இருந்தாள்….
சரி பாவா, நீங்க பேசிட்டு வாங்க நான் ஐஸ் கிரீம் வாங்கிட்டு வரேன் என்று அவள் விலகியதும் அவனிற்கு அப்படி ஒரு வேதனையாக இருந்தது..
அவள் சென்றதும் அவளிடம் எரிந்து விழுந்தான் ..ஹே உனக்கு அறிவு இல்லை பப்ளிக் PLACE ல இப்படி தான் BEHAVE பண்ணுவ அவ இருந்ததால தப்பிச்ச இல்லை இங்க நடக்கிறதே வேற …
எதுக்கு பிரகாஷ் இப்படி கோவபடுரிங்க நம்ம எப்பவுமே இப்படி தான என்று அவள் சொல்லியதும் தான் அவனுக்கு நன்கு உரைத்தது அது உண்மையும் கூட…இளமையில் செய்த தவறுகள் இப்போது அவனை துரத்துவது போன்று இருந்தது..
இங்க பாரு மோனிகா இது தான் கடைசி முறை உன்னை பார்கிறத இருக்கணும்..இனி இன்னொரு முறை உன்னை நான் பார்த்தால் அது தான் நீ இந்த பூமியில் இருக்கும் கடைசி நாள் சரியா..
என்னை விட அவள் அவ்வளவு முக்கியமா என்ன,அவளும் என்னை போல தான என்று அவள் கூறும்போதே அவளை ஓங்கி அரை விட்டிருந்தான்…அவளை போயி உன்கூட சேர்கிற..
சீ… என்று அவன் கூறும்போது அப்போ அவள் யாரு உங்களுக்கு அப்படி என்னை விடவா, அவள் உங்களுக்கு சுகத்தை கொடுத்து விட்டாள் என்று அவள் அஞ்சுவை அசிங்கமாக பேசியதும் அவனுக்குள் அப்படி ஆத்திரம் வந்தது ..பொது இடத்தில் இப்படி நடந்துக்க கூடாது என்று அவளை எச்சரித்து விட்டு செல்லும் முன் அவ யார்ன்னு கேட்டல்ல “அவ தான் என்னோட மொத்த உலகமும்” இப்போ புரியுதா என்றவன் நீ பேசியதற்கு உன்னை கொல்லும் வேகம் வருகிறது ஆனாலும் என்னால ஏதும் செய்ய முடியவில்லை ஏனென்றால் பாதி தப்பும் என்னுடையது என்று தான் நான் அமைதியாக போகிறேன்…
செல்லும் அவனை வெறியோடு பார்த்தாள் ஒரு நாள் எங்கிட்ட உன்னை கெஞ்ச வெக்கிறேண்டா, அவளை உன்கிட்ட இருந்து பிரிக்காம விட மாட்டேன்டா பிரகாஷ்…அந்த நாளுக்காக கரு கொண்ட நாகம் போல் காத்திருப்பேன் என்று சூளுரைத்து விட்டு சென்று விட்டாள்