அவன் அப்படி அவளிடம் கூறிவிட்டு அவளை கடந்து ரூமிற்கு சென்று விட்டான்..நான் தான் இவங்களோடு இருக்க வேண்டும் என்று கேட்டேன் ஆனால், இப்போ எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லையே,வீட்டில் இருக்கும் எல்லோரையும் எப்படி சமாளிப்பது என்றும் அவளுக்கு புரியவில்லை..அனைத்தையும் யோசித்தவளுக்கு தலை பாரமாக இருப்பது போல் தோன்றியது..குளித்து விட்டு எதுவாக இருந்தாலும் பொறுமையாக யோசிப்போம்.. சொன்னது போல் சீக்கிரம் கிளம்பி கீழே வந்தாள்..
இவளுக்கு முன்பே பிரகாஷ் வந்து விட்டான்..இவள் வந்து தோசை ஊற்றி ,தக்காளி சட்னி வைக்கும் வரை அவன் அவளை பார்க்கவே இல்லை…
எல்லாருக்கும் பரிமாறியவளை அமர வைத்து அவளுக்கு பரிமாறி சாப்பிட வைத்தான்…
அஞ்சு எப்பவும் போல் உன் கைப்பக்குவம் நன்றாக இருக்கிறது என்று தாத்தா புன்னகைத்தார்…அவர்கள் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் பேசவிட்டு சென்றதும் தான் அவனை அவள் கவனித்தாள்..
பாவா என்றாள்…
என்ன அஞ்சு ..
இப்படி முகத்தை கோவமாக வெச்சிகிட்டா நான் எப்படி பக்கத்துல வரது பயமாக இருக்கு என்று போலியாக கூறியவளை கண்டு அவனுக்குமே அதில் சிரிப்பு வந்தது..
உனக்கு பக்கதுல வர பயமா ஹஹா ஹா என்றவன்,அவள் சுவர் ஏரி குதித்தை நினைத்து சிரித்து விட்டான் …
எதுக்கு பாவா சிரிக்கிறிங்க சொன்னால் நானும் சிரிப்பேன் இல்லையா என்றவளுக்கு, கண்டிப்பா உன்கிட்ட சொல்லாம நான் யார்கிட்ட சொல்ல போறேன்..
நேத்து night மூணு குரங்கு செவரு ஏறி குதிச்சத பார்த்தேன் அஞ்சு…செம்ம காமெடியாக இருந்தது..
அப்படியா!!என்று அவளும் சிரித்தாள்..
அதுல நீயும் ஒரு குரங்கு தான் அஞ்சு என்றதும்,என்ன பாவா சொல்றிங்க என்று புரியாமல் அவனை பார்த்தாள் ..
உனக்கு செவரு ஏறி குதிக்க தெரியுமா அஞ்சு??அவன் அப்படி கேட்டதும் தான் அவளிற்கே புரிந்தது..
பாவா உங்களை..,, என்று அடிக்க அவன் பின்னாலே ஓடினாள் பிறகு, அவன் மட்டும் ஓடினான்,திரும்பி பார்த்தால் அவளை காணவில்லை எங்கே என்று பார்த்தான்..மூச்சு வாங்க நின்று கொண்டிருதவளின் அருகில் சென்றவன் அவளை தூக்கி கொண்டு, அங்கு இருந்த கல்லின் மேல் அமரவைத்தான்..
என்ன ஞ்சு பஞ்சு மாறி இருக்க,இதுக்கு தான் நல்லா சாப்பிடனும்ன்னு சொல்றது என்று கூறியவனை காதலாக பார்த்தாள்..
அவன் தோல் மேல் சாய்ந்து கொண்டவள் எதுவும் பேசவில்லை அவன் கையோடு கை கோர்த்து அவன் மேல் வரும் நறுமணத்தில் மூழ்கிருந்தாள்..
அஞ்சு நேத்து உங்களை அந்த ஹோட்டல்ல பார்த்தேன் என்று மறுபடியும் சிரித்தவனின் கன்னத்தை கடித்து வைத்தாள்..அதிலே அவளுக்கு நன்றாக புரிந்தது..
நாங்க செவரு ஏரி குதிக்கும் வரை பார்த்துகொண்டு தான் இருந்திங்களா என்பதர்க்கு ஆமா என்றான்…
ஆனாலும் அஞ்சு இப்போவரைக்கும் சிரிப்பு தான் வருது என்று சிரித்தவனை மறுபடியும் கன்னத்தில் கடித்து வைத்தாள்…
அஞ்சு என்றவனின் குரலில் அதற்க்கு மேல் வார்த்தையே வரவில்லை அதற்க்கு மேல் முடியாமல் அவன் எழுந்து நின்று கொண்டு நிலாவை ரசித்துக்கொண்டு இருந்தான்…
அவளின் அருகாமையில் அவன் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருந்தான் இதற்கு மேல் இவள் அருகில் இருந்தால் கண்ணியம் தவறி விடுவோமோ என்று தான் எழுந்து விட்டான்..
பாவா உங்களுக்கு நிலா பிடிக்குமா??எனக்கு நிலவை பார்க்க ரொம்ப பிடிக்கும் என்றாள் ..
அந்த பௌர்ணமி வெளிச்சத்தில் அவளின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் அவனையும் தொற்றி கொண்டது..நிலவிற்கு ஏற்றாற்போல் வெள்ளை குர்தி அணிந்து இருந்தாள்…
அஞ்சு நீ சாப்பிடறது எல்லாம் உன்னோட முடிக்கே போயிரும் போல இவ்வளவு ஒல்லியா இருக்க என்றவனின் பார்வை காதலனின் பார்வையாக மாறியது..
அந்த நிலா அழகான்னு கேட்டால் என்னிடம் பதில் இல்லை அம்முலு, அந்த நிலவின் வெளிச்சத்தில் நீ அந்த நிலவை விட அழகா தெரிகிறாய் என்று கூறியவன் அவளை ஆசையாக பார்த்தான்…
இதை அவன் சொன்னதும் அவளின் முகம் செவ்வானமாக சிவந்தது.. உடம்பில் ஓடும் முழு ரத்தமும் அவளின் முகத்தில் பாய்ந்தது போல் இருந்தது …
இந்த பார்வையின் அர்த்தம் புரியாத அளவுக்கு அவள் ஒன்றும் சிறு பெண் இல்லையே…
அவனிற்கு அவன் மேலே கோவம் வந்தது..தன்னை நம்பி வந்தவளை இப்படி பார்க்கிறோம் என்று அவனிர்க்கே எரிச்சலாக இருந்தது…அவள் கல்லூரி முடிக்கும் வரை அவளை தொல்லை செய்ய கூடாது என்று மனதை கட்டுபடுத்தி வைத்திருந்தான்…ஆனால் அவள் அருகில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதை எண்ணி அவனுக்கே ஒருமாரியாக இருந்தது..
அவளிடம் ஏதும் சொல்லமல் அவன் ரூமிர்க்கு சென்று விட்டான்..அவனை பின் தொடர்ந்து சென்றாள்,ரூமிற்கு சென்று டோரை லாக் செய்து விட்டு ,கதவை தட்டி விட்டு அவன் திறந்ததும் அவனுக்கு முன் சென்று நின்றாள் …அவனை கோவமாக முறைப்பது போல் நின்றவளை பார்த்தவனுக்கும் சிரிப்பு வந்தது..
sorry அஞ்சு என்றவனை புரியாமல் பார்த்தாள்,உன்னை அப்படி பார்க்க கூடாதுன்னு தான் நெனச்சேன் ஆனால் என்னால் முடியவில்லை என்மேலே எனக்கு கோவமாக வந்து விட்டது ..அதான் சொல்லாமல் கூட வந்துட்டேன் என்று சிறு பிள்ளை போல் கூறியவனை நன்றாக கவனித்து பார்த்தாள்…
என்னவன் பேரழகன் தான் அதை மறுக்கவே முடியாது…அவனின் கண்ணில் தெரிந்த ஏக்கத்தில் இவளுக்கு பேச்சே வரவில்லை…
அவனின் அருகில் சென்று,அவனது கன்னத்தை கையில் ஏந்தி நெற்றியில் இதழ் பதித்தாள்,அடுத்து கன்னத்தில் இதழ் பதித்து, கடைசியாக அவனின் இதழில் இதழ் பதித்தாள்…அவள் ஆரமித்து வைத்திருந்த இதழ் முத்ததை அவன் தனதாக்கி கொண்டு அதை ஒரு யுத்தமாக மாற்றினான்..அவள் மூச்சு காற்றுக்காக ஏங்கும் போது தான் அவளை விடுவித்தான்…அவன் ஒரே முத்தத்தில் அவளை எவ்வளவு காதலிக்கிறேன் என்று அவளுக்கு புரிய வைத்து விட்டான்…
அவளின் முகத்தில் அப்படி ஒரு வெட்க்க சாயல் இருந்தது அதை பார்த்தவனுக்கும் மனம் குதுகலமாக இருந்தது அவள் என்னவள் என்ற உரிமையும் வந்தது..
“பாவா” எவ்வளவு நேரம் தான் இப்படியே பார்த்துகிட்டே இருப்பிங்க என்று சினுங்களோடு அவனின் கண்ணை மூடினாள்…
சரி ஓகே ஓகே எனக்கு புரியுது..ஆனாலும் அம்முலு நீ இவ்வளவு ஸ்வீட்டாக இருக்க கூடாது என்று அவள் இதழையே பார்த்தான்…
அதில் அவன் முகம் மறுபடியும் சிவந்து அவன் நெஞ்சின் மேலே சாய்ந்து கொண்டாள்…அவளின் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தி, நெற்றியில் இதழ் பதித்து அவனும் அவளை இறுக கட்டிகொண்டான்…
இப்போ சொல்லுங்க பாவா என்னை உரிமையாக பார்க்க உங்கள தவிர வேற யாருக்கு உரிமை இருக்குன்னு சொல்லுங்க என்று அவன் முகத்தை பார்த்தாள்…என்னோட பொண்டாட்டியே சொல்லிட்டா இதுக்கு அப்பறம் என்ன…இனி டெய்லி ரோமன்சே தான் விடு என்றவன் அவளை செல்லமாக தலையில் முட்டினான்…
சரி அஞ்சு தூங்கலாமா என்றதும்,அவளோ ஹய்யய் JOLY என்று ஓடி வந்து பெட்டில் படுத்து கொண்டாள்…
அவனோ சில நேரம் பெரிய மனுசியாக தெரிகிறாள், சில நேரம் குழந்தையாக மாறி விடுகிறாள்…எப்படி இருந்தாலும் என்னோட பொண்டாட்டி அழகு தான்…
அவன் இப்போ நினைத்து இருந்தாள் கூட அவன் எல்லையை கடந்திருக்கலாம் அவள் ஏதும் சொல்ல போவதில்லை..ஆனால் பிறகு அவள் படும் கஷ்டத்தை அவனால் தாங்கி கொள்ள முடியாது… அவனுக்கு இதுவே போதும் என்று தான் இருந்தது..
பாவா என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க சீக்கிரம் வாங்க தூங்கலாம் என்றாள்..
வரேன் இரு அம்முலு என்றவன் கீழே சென்று இரண்டு கிளாஸ்ஸில் பால் எடுத்து வந்தான்…
அதை பார்த்தவளுக்கு சிறு பயம் கூட இல்லாமல்,
பாவா இது என்ன புது டெக்னிக் என்றவனுக்கும் அப்போது தான் புரிந்தது…அவள் தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்தான்..நெறைய தமிழ் படம் பார்ப்ப போல என்றவனுக்கு,திருப்பி பதில் கொடுக்க வில்லை என்றாள் அவள் அஞ்சுவே கிடையாதே.. ஏன் பாவா தெலுகு படத்துல பசங்க தான் இந்த மாறி சொம்போடு வருவாங்களா என்று கேட்டு சிரித்தவளுக்கு, மறுபடியும் தலையில் ஒரு கொட்டு வைத்தான்..
அதை அவள் குடித்த பிறகு வாங்கி அதை மேசை மேல் வைத்துவிட்டு வந்து கட்டிலில் படுத்தவன் அவளை நோக்கி இரு கைகளையும் நீட்டினான் அதற்காகவே காத்திருந்தவள் போல் அவனை சரணடைந்தாள்…
பாவா நான் ஒன்னு கேட்கட்டுமா என்றவளுக்கு,
கேளு அம்ம்லு…
நம்ம எப்போ பாவா கல்யாணம் பண்ணிக்கலாம் என்றாள்..
உனக்கு ஒரு CAREER அமைச்சி குடுத்துட்டு தான் கல்யாணம் பண்ணனும் என்றவனை யோசனையாக பார்த்தாள்..
என்னடி எதுக்கு இப்படி பார்க்கிற…
நீங்க சரியான மக்கு பாவா என்றவளை பொய்யாக முறைத்தான்…நீ எனக்காக தான் இப்படி சொல்றான்னு புரியுது இருந்தாலும் பரவா இல்லை உனக்காக நான் எத்தனை வருஷம் வேணாலும் காத்திருப்பேன் அஞ்சு…இந்த உடல் தேவை அவ்வளவு பெரிய விஷயம் இல்லை அஞ்சு ..நமக்குள் இருக்கும் இந்த குட்டி குட்டி ரோமன்சே எனக்கு போதும் அஞ்சு…
பாவா இன்னொரு சந்தேகம் என்றவளை,
இப்போ என்னடி சந்தேகம்,
நீங்க ஏன் இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க என்றவளை,
இது என்னடி படத்துல கேட்பங்கலே அந்த மாறி கேட்கிற…உன்னோட விஷயத்துல கண்டிப்பா நான் நல்லவன் தான் இதை நீ ஆயுள் முழுக்க நம்பனும் சரியா என்றவனுக்கு சிரிப்பை பதிலாக கொடுத்தாள்…
மறுபடியும் பாவா என்றவளை,
இப்போ என்னடி சந்தேகம்..
i love you பாவா..
அவள் அப்படி கூறியதும் அவனிற்கு கண் கலங்கியது,அவளை இருக அணைத்தவன் நேனு நின்னு பிரேமிஸ்துன்னான்னு(நானும் உன்னை காதலிக்கிறேன் )
பாவா எனக்கு தெலுகு தெரியாது TRANSLATE பண்ணுங்க என்றவளுக்கு நானும் உன்னை காதலிக்கிறேன் என்று கூறினேன் என்றான்…
எனக்கு நீங்க தெலுகு சொல்லி குடுங்க நானும் கத்துகிறேன் என்றாள்…
எனக்காக லாம் கத்துக்க வேண்டாம் அம்லு
உங்களுக்காக கத்துக்க போறேன்னு யார் சொன்னாங்க…
சரியான வாயடி கிட்ட நான் மாட்டிகிட்டனே என்று பொய்யாக கதருபவனை பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது…அவனுக்கும் முகத்தில் சிரிப்பு தான்..
அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவன் என்னடா அதிசயம் அமைதியா இருக்குது என்று பார்த்தவனுக்கு புரிந்தது அவள் உறங்கி விட்டாள் என்று…
அவனின் நெஞ்சில் தலை வைத்து, காலை தூக்கி அவன் மேல் போட்டிருந்தாள், ஒரு கையில் அவனது சட்டைய பிடித்து கொண்டே உறங்கும் அவளை பார்த்தவனுக்கு தாயை தேடும் சேயாக தான் தெரிந்தாள்..
இரவின் இருட்டில் ஒளிர்ந்த அவளின் மூக்குத்தியின் மேல் இதழ் பதித்தவனுக்கும் நித்திரை ஆட்கொண்டது…
இருவருமே கொஞ்ச நாளாக தூக்கத்தை தொலைத்து இருந்தனர்..அவளின் அருகாமையில் அவனும்,அவனின் அருகில் அவளும் உறங்கி விட்டார்கள்….