இடம் மாறும் மனங்கள்!

2

சூரியன் மஞ்சள் வண்ணமாகி பின் சிவப்பு வண்ணமாக ஒளிர.. உமர் ஷாபிராவின் திருமண நிகழ்வுகள் தொடங்கியது.. சுற்றமும் சொந்தமும் சூழ இருவரும் தம்பதிகளாகினர். 

இரவு நேரம் நெருங்க நெருங்க.. மின்னவிலக்கு அலங்காரங்கள்.. வாத்தியங்களின் சப்தங்கள்.. பெண்களின் சந்தோஷ சிரிப்புகள்.. குழந்தைகளின் ஆரவாரம் என அந்த மண்டபம் ஆனந்தமாகியது.

விருந்தினர்கள் வர தொடங்கியிருந்தனர். ஷர்மி தனியாக எந்த வேலையையும் செய்ய முடியாமல்.. பழக்கமாக “வர்ஷினி.. வர்ஷினி” என தன் அருகிலேயே வைத்துக் கொண்டாள் தோழியை.

பதின்ம வயதிலிருந்தே  தோழிகள்.. ஒரே காலனி.. ஒரே பள்ளி.. நீண்டகால தோழிகள்.. குடும்பகளும் அப்படியே என்பதால்.. ஷர்மிக்கும் வர்ஷிக்கும் பெரிதாக வித்யாசம் காட்டுவதில்லை இரு குடும்பங்களும்.

வர்ஷினி தன் பெரிய லெஹங்காவினை கையில் பிடித்துக் கொண்டு.. வேலையை பார்த்துக் கொடிருந்தாள். முக்கிய சடங்குகள் எல்லாம் முடிய.. பெண்ணவள் அமர்ந்தாள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் வந்து சேர்ந்தனர். எல்லோரின் பார்வையையும் ஏற்று.. புன்னகையோடு பதில் பார்வை கொடுத்துக் கொண்டு ஆர்பாட்டமில்லாமல் அமர்ந்திருந்தாள்.  

வர்ஷினி ஆர்பாட்டம் இல்லாதவள்.. தெரிந்த ஒருசில நபர்கள் மட்டுமே அவளின் எல்லைக்குள் அனுமதிபாள், மற்றபடி எல்லோரிடமும் ஒரு புன்னகையோடு கடந்திடுவாள். அண்ணன் அக்கா என அவர்களும் அப்படிதான்.. பேசுவாள் பழகுவாள்.. ஆனால், நெருங்கி பழகுவது.. உரிமை எடுப்பது என்பதெல்லாம் அவளிடம் இல்லைவே இல்லை. 

இப்போதும் உமரின் திருமணத்தை முன்னிட்டு.. தர்ஷன் குடும்பத்தோடு வந்திருந்தான்.  ஆதிரனை முன்னாள் அவளோடு கூட்டி  செல்ல சொல்லி ஐஸ்வர்யா சொல்ல.. வர்ஷினி ‘இல்ல அண்ணி என்னால் பார்த்துக்க முடியாது.. நீங்க வரும் போது கூட்டி வந்திடுங்க’ என்றுவிட்டாள்.

தர்ஷன் தன் மனையாளை முறைத்தான். ஐஸ்வர்யாவிற்கு யாராவது ஆதிரனை பார்த்துக் கொண்டால் போதும் என்றிருக்க.. வர்ஷினி முடியாது என்றது என்னமோ போலானது. இப்போது இவள் இப்படிதான் என தெரியும்.. அதனாலேயே நிறைய வர்ஷினியோடு பேசி அவளை புரிந்துக் கொள்ள முயலுவாள். ஆனால், அது இதுவரை கைவரபெறவில்லை ஐஸ்வர்யாவிற்கு.

வர்ஷினி முன்பே மண்டபம் வந்துவிட்டாள்.. உமரோடு சற்று நேரம் இருந்தாள்.. பின் ஷர்மியோடு உலாவத் தொடங்கிவிட்டாள். திருமணம் முடிந்து.. சடங்குகள் முடியவும்தான் ஷர்மி அவளை விட்டால்.. அதனால் இப்போதான் வந்து அமர்ந்தாள். 

இப்போது தன் அண்ணன் அண்ணி.. தன் மகனோடு வந்தனர். வர்ஷினி தானாக வந்து ஆதிரனை தன் கைகளில் வாங்கிக் கொண்டாள்.. ஐஸ்வர்யா லேசாக முறைத்தாள். தர்ஷன் ஒன்றும் சொல்லவில்லை.. உமர் பெற்றோரின் வரவேற்பினை ஏற்றுக் கொண்டு உமரினை பார்த்து கையசைத்தான். இடம் பார்த்து மனையாளோடு அம்மர்ந்தான், தர்ஷன்.

சிவகுமார் விஜயா முன்பே வந்துவிட்டனர்.. அவர்கள் உணவு பரிமாறும் இடத்தில் நின்றுக் கொண்டு எல்லோடும் பேசிக் கொண்டிருந்தனர். இப்படிதான் அக்கம் பக்கம் பிள்ளைகளின் திருமணம் என்றால்.. தாங்களாகவே முன்வந்து வேலைகள் எல்லாம் பகிர்ந்து செய்வர். இவர்கள் குடியிருப்பில் இது புதிதல்ல.

வர்ஷினி, தன் அண்ணன் மகனோடு.. பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருக்கும் இருக்கும் இடத்திற்கு வந்தாள். சற்று நேரம் குழந்தையை கவனித்துக் கொண்டாள்.

வர்ஷினி வாசலில் நின்றிருக்க.. வந்தது பிரதாப்.. மனையாளோடு வந்தான். வர்ஷினியைதான் முதலில் பார்த்தான்.. அவள் பிள்ளையோடு இருக்க.. “ஹாய் வர்ஷினி” என அழைத்தான்.

வர்ஷினிக்கும் பிரதாப்பினை உடனே தெரிந்தது.. “பிரதாப் வா.. வா..” என மலர்ந்த புன்னகையேடு  அழைத்தாள்.

பிரதாப் “வாவ்.. வர்ஷினி அப்படியே இருக்க” என சொல்லி ஆதிரனை நோக்கி கண்கள் சென்றது.. ‘திருமணம் ஆகியும்’ என செய்தி இருந்தது அதில்.

வர்ஷினிக்கு புரியவில்லை “தேங்க்ஸ் “ என்றவள் “ஹாய்..” என்றாள் அவனின் மனையாளை பார்த்து.. அதன்பிறகுதான் பிரதாப் தன் மனையாளை அறிமுகம் செய்து வைத்தான்.

பெண்கள் இருவரும் நலம் விசாரித்துக் பேசி முடித்தனர்.

அப்போதும் பிரதாப் வர்ஷினி கையில் இருக்கும் பிள்ளையை பார்த்து.. “ஹேய் உன் மகனா? பேரென்ன?” என்றான்.

வர்ஷினி  கோவமில்லாமல் முறைத்தாள்.. “என் அண்ணன் பையன்” என்றாள்.

“யாரு ஹரிபரி பையனா..” என்றான் கண்கள் விரிய.

வர்ஷினி புன்னகையோடு ‘ஆம்’ என்றாள்.. 

“அப்போ கொடு அவனை.. எங்களை என்னபாடு படுத்தினான் அவன் அப்பன்” என சொல்லிக் கொண்டே ஆதிரனை கையில் வாங்கிய பிரதாப்.. லேசாக தூக்கி போட்டு பிடித்தான், குழந்தையை.

உள்ளே வர  உமரின் பெற்றோர் வரவேற்றனர். அதன்பின் பிரதாப் தர்ஷன் இருக்குமிடம் சென்றான் “ஹாய் அண்ணா” என்றான்.

தர்ஷன் புன்னகையோடு எழுந்தான் அடையாளம் தெரியவில்லை.

பிரதாப் “என்ன தெரியலையா.. பிரதாப் ண்ணா” என்றான்.

தர்ஷன் “இல்ல இல்ல தெரியுது.. பேர் வரலை” என்றார்.. பின் “எப்படி இருக்க..” என கேட்டு அவனின் மனையாளை பார்த்தார்.

பிரதாப் மனையாளை அறிமுகம் செய்து வைத்தான். தர்ஷன் தன் மனைவியை அறிமுகம் செய்தான்.

தர்ஷன் பிரதாப் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அதற்குள் வர்ஷினி பிரதாப் மனைவி  இருவரும் அமர்ந்தனர்.

அடுத்து உள்ளே வந்தான் இந்தர்ஜித்.. தனியாகத்தான் வந்தான்.. பிரதாப் தர்ஷன் இருவரும் அவனருகே சென்று பேசினர்.

வர்ஷினி எழுந்தே செல்லவில்லை. வர்ஷினிக்கு இந்தர்’ரினை கண்டால் பயம்.. அவள் கண்டுக் கொள்ளாமல் அமர்ந்திருக்க.. இப்போது பிரதாப் இந்தர் இருவரும்.. பெண்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தனர்.. பிரதாப் தன் மனையாளை அறிமுகம் செய்து வைத்தான்.. பின் “வர்ஷினி டா” என அவளையும் அறிமுகம் செய்து வைத்தான்.

இந்தர் மிக அமைதியாக “ஹாய் வர்ஷினி எப்படி இருக்க” என்றான்.

வர்ஷினி புன்னகைத்தாள்.. ஏதும் பேசவில்லை. இரு ஆண்களும் அமர்ந்தனர். வர்ஷினி “இதோ வரேன்” என கிளம்பிவிட்டாள். 

வர்ஷினிக்கு, இங்கே இருக்க முடியவில்லை பழைய ஞாபகங்கள் கண்ணில் மின்ன.. கிளம்பிவிட்டாள்.

தன் தந்தையை தேடி சென்றாள். அவர் யாரோடோ பேசிக் கொண்டிருந்தார்.. வர்ஷினி தந்தையின் அருகே சென்று அவரின் கை கோர்த்துக் கொண்டாள். அவரும் மகளின் கைகளை பிடித்துக் கொண்டார்.. ஆனாலும், நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார்.

சற்று நேரம் சென்று அவர்கள் கிளம்பியதும் மகளிடம் “என்னாச்சு வர்ஷினி” என்றார் அவளின் தந்தை.

வர்ஷினி “அப்பா, வீட்டுக்கு போட்டா.. எனக்கு போர் அடிக்குது.. நான் போறேன்” என்றாள்.

“அடி லூஸு பொண்ணே.. எத்தனைபேர் இருக்காங்க, என்னாச்சு.. ஷர்மி.. ஓ.. அவ வேலையா இருப்பாளோ..” என்றார் தானாகவே.

பின் “கொஞ்சம் எல்லோரிமும் பேசுடா.. எல்லோரையும்தான் உனக்கு தெரியுமே..” என்றார்.

வர்ஷினி “கொஞ்சம் அபீஸ் வேலை இருக்கு..” என்றாள்.

தந்தை இதற்குமேல் மகளை பிடித்து வைக்க முடியாது என எண்ணி “சாப்பிட்டு போ” என்றார்.

“அதுக்குள்ளே எப்படி, எனக்கு பசிக்கலை ப்பா.. நீங்க சாப்பிடும் போது கூப்பிடுங்க” என்றாள்.

வர்ஷனி கிளம்பிவிட்டாள்.. தன் வீட்டிற்கு.

வீடு வந்தாள்.. ஏதேதோ ஞாபகங்கள் எழயிருந்ததை அடக்கி தனக்குள் திணித்துக் கொண்டு.. போனில் தன் கவனத்தை செலுத்தினாள்.

சற்று நேரத்தில் எதோ மெயில் வர.. அதை செக் செய்தால்.. தன் தோழனிடமிருந்து.. அவன் சென்னையில் இருக்க.. அவன் தனக்கு தெரிந்த இடத்தில் வேலை இருப்பதாக சொல்லி அதன் விவரங்கள் அனுப்பியிருந்தான்.

வர்ஷினி அதில் மூழ்கிப் போனாள்.

சற்று நேரம் சென்று.. அவளின் தந்தை அவளை அழைத்தார் உண்பதற்கு. கிளம்பினாள் மண்டபத்திற்கு. தூரம் அதிகமில்லை.. தன் தந்தையின் வண்டியில்தான் வந்திருந்தாள். அதை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

வாசலில் தன் தந்தையோடு, இந்தர் பிரதாப் சர்வேஷ் ராக்கேஷ் என நால்வரும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.. வண்டியை மண்டபத்தின் நடுவாசலில் கொண்டு வந்து நிறுத்திவிட்டு பெண்ணவள் பார்க்க.. சர்வேஷ் புன்னகையோடு நண்பர்களோடு பேசிக் கொண்டு நிற்பது தெரிந்தது.. எதிரில்.

பெண்ணவளின் கண்களை பறித்தது அந்த புன்னகை.. அஹ.. ‘எவ்வளோ மேன்லியாக இருக்கான்..’ என எண்ணம் வர.. மனது அவளிடம் நினைவுபடுத்தியது ‘கல்யாணம் ஆகிடுச்சி அவனுக்கு’ என.

வர்ஷினி ஹெல்மெட் கழற்றி.. வண்டியில் மாட்டிவிட்டு.. தந்தையை பார்க்க.. இவளுக்கெனவே காத்திருந்த அந்த நால்வரும்.. புன்னையோடு அவளையே பார்த்தனர் இப்போது.

பெண்ணவளின் தந்தை “வர்ஷினி.. பாரு எல்லோரும் உனக்காகத்தான் காத்திருக்காங்க.. வா.. ஷர்மி கேட்டுட்டே இருக்கா.. வா” என்றார்.