உன்னை கண்டிப்பா நான் நல்ல பாத்துப்பேன் அதை பத்திலாம் கவலைபடாத,உன்னை நான் ஏமாத்தனும்ன்னுலாம் நெனைக்கல,உன்னோடு சூழ்நிலை புரியுது திடீர்ன்னு யாராவது வந்து இப்படி பேசினா எப்படி நம்ப முடியும்ன்னு புரியுது..
உனக்கு எப்போ என்மேல் நம்பிக்கை வருதோ அப்போ ஓகே சொல்லுடா…
எனக்கு அம்மா அப்பாலாம் கிடையாது அவங்க இறந்துட்டாங்க..தாத்தாவும்,பாட்டியும் தான் வளர்த்தாங்க..
எனக்கு வாழ்க்கைல அப்படி வெறுமை இருக்கு பணத்துக்கு பிரச்சனை இல்லை ஆனா எனக்குன்னு யாரும் இல்லை..உன்னை பார்கிறதுக்கு முன்னாடி வரையுமே எதுக்கு வாழணும்ன்னு தான் தோணும்,உன்னை எப்போ கல்லூரி culturalsல பார்த்தேனோ அப்போ இருந்து மனசு அப்படி ஒரு நிம்மதியா இருக்கு..உன்னை கல்யாணம் பண்ணிகனும்ன்ன்னு இந்த ஒருமாதமாக தோணிகிட்டே தான் இருக்கு..
இப்போ கூட அப்படி தான் தோணுது ஆனா என்ன பண்ண முடியும் நீ தான் இன்னும் ஓகே சொல்லலையே என்றான்..
அவளோ பேசி முடிச்சிட்டியா என்பது போல் பார்த்தாள்..ஒருவேளை நான் வேற யாராவது love பண்ணிட்டு இருந்தா என்ன பண்ணிருப்பிங்க என்றாள்..
ரொம்ப சிம்பிள் வேற ஒரு பொண்ண தேடிருப்பேன் அவ்வளவு தான் என்றான்..
அது சரி என்று அவளும் புன்னைகைத்தாள்..
ஒரு உண்மையா சொல்லனும்ன்னா நீங்க இவ்வளவு வெளிபடையா பேசறது பிடிச்சிருக்கு ஆனாலும் லைப் partner ஆக choose பண்ண கொஞ்சம் தயக்கமா இருக்கு ..கொஞ்சம் டைம் வேணும் என்றாள்..
டேக் யுவர் ஓன் டைம் madam…உங்க நேம் என்ன அதை முதலில் சொல்லுங்க என்றான்…
என்னையே கண்டுபிடிச்சிட்டிங்க ஏன் பேரையும் கண்டுபிடிக்க வேண்டியது தான.. அதுக்கு ஒரு ரெண்டு மாசம் ஆகும் போலவே என்று வருத்தமாக கூறினான் ..
சிரித்துக்கொண்டே கீதாஞ்சலி என்றாள்..
அப்போ நான் அஞ்சு என்று கூப்பிடுறேன்..
உங்க விருப்பம் என்றாள்..
நீங்க ப்ரீயாக இருந்த சொல்லுங்க என்னோட வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என்றான்..
அவள் அவனை ஆவேன பார்த்தாள் ..
அவள் அப்படி பார்த்ததும் அவன் போனை எடுத்து அதில் இருந்த தான்னோடைய தாத்தா பாட்டியை காட்டினான்…இவர்களை பார்க்க போலாம்ன்னு தான் கூப்பிட்டேன்..நீ நெனைக்கிற மாறிலாம் இல்லை என்றான்..
அதற்கும் அவள் சிரித்தாள்..
அஞ்சு!! என்று அவ்வளவு ஏக்கமாக கூப்பிட்டு அவளை ஏக்கமாகவும் பார்த்தான்..ஒரு வார்த்தையில் தன்னுடைய காதலை புரிய வைக்க முயலுமா என்ன?ஆனால் அவனால் புரிய வைக்க முடிந்தது..
“சீக்கிரம் ஓகே சொல்லிரேன்..காத்திருக்க முடியவில்லை என்றான் ..அவன் கண்ணில் ஒரு துளி கூட காமம் இல்லை முழு காதல் தான் இருந்தது”
வந்ததில் இருந்து அவளும் தான் பார்க்கிறாள்,அவன் அவளின் முகத்தை தாண்டி வேறு எங்கும் பார்க்கவில்லை..
கொஞ்சம் யோசிக்க டைம் குடுங்க boss..இவ்வளவு ஸ்பீட் எதுக்கு என்று சிரித்தாள்..
அதுவும் சரி தான் அஞ்சு..கேளம்பவோமா என்றான்..
அப்போது தான் அஞ்சுவிர்க்கே நியாபகம் வந்தது மணி இரண்டு ஆகி விட்டது என்று..உங்ககிட்ட பேசினதுல டைம் எப்படி போச்சுன்னே தெரிலங்க என்றாள்..
எதுக்கு அஞ்சு வாங்க போங்கலாம்..கால் மீ பிரகாஷ் இல்லைன்னா உனக்கு எப்படி பிடிக்குமோ அப்படி கூப்பிடு ..
உங்க வயசு என்ன என்றாள் ,26 என்று கூறினான்..என்னை விட 4 வருடம் பெரியவங்க அவ்ளோதான் என்றாள்..
நடந்துகொண்டே சென்றவர்கள் அப்பறம் madam திரும்ப எப்போ பார்க்கலாம்! என்றான் அதர்க்கும் அவள் சிரிப்பையே பதிலாக கொடுத்தாள்..
கண்டிப்பா பாக்கலாம் என்றாள்..
சரி அஞ்சு ரூமிற்கு போ என்றவனை அவள் பார்த்துக்கொண்டே இருந்தாள்..
என்ன madam இவ்வளவு சைட் அடிக்கிறிங்க!!..
இவ்ளோ அழகா இருக்கீங்க பார்க்க கூடாத என்ன..
நீங்க சொன்ன சரி தான் madam..அஞ்சு நீcivi Lfinal YEAR தான அடுத்து என்ன பண்ண போற?வொர்க் எதாவது போற ஐடியா இருக்கா அப்படி இருந்த நம்ம company க்கு நீ தாரலாமா வரலாம்..உனக்கு விருப்பம் இருந்தாள் வரலாம் என்றான்..
இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை பார்க்கலாம் என்றாள்..
சரி என்றவன் goodnight அஞ்சு and BYE…இன்னும் TWO ஹெர்ஸ்ல சென்னை கிளம்பிருவேன் நாளைக்கு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு..நீ பாத்து கெளம்பு என்றவன்,ரூமிற்கு உள்ளே சென்று விட்டான்..
ரூமிற்கு உள்ளே சென்றவளுக்கு தூக்கம் வர மறுத்தது,அவன் கொடுத்த புடவையை திறந்து பார்த்தால் அவ்வளவு அழகா இருந்தது..மனம் நிறைய அவன் மட்டுமே இருந்தான்..அவனின் நினைவிலே இருந்தவளுக்கு இந்த விஷயத்தை நண்பர்களிடம் கூட சொல்ல தோன்றவில்லை…எப்படியோ தூங்கியும் போனாள்..
காலையில் சூரியா தான் anjuu அஞ்சு என்று கத்தி கொண்டு இருந்தாள்..மெதுவாக கண்ணை திறந்தவளுக்கு திறக்க சிரமமாக இருந்தது..
ஏன்டி சூரியா கத்துற என்றாள் அஞ்சு…கண்ணை நன்றாக தேய்த்து விட்டு பார்த்தவளுக்கு அப்போது தான் புரிந்தது,நாம் HOSTEL செல்ல வேண்டும் என்று நினைவு வந்தது அவர்கள் இருவரும் கிளம்பி ரெடி ஆகி விட்டு தான் இவளை உலுக்கினார்கள்..
திரும்பவும் பெட்டில் படுத்தவளுக்கு உறக்கம் தன்னை மறுபடியும் இழுத்துகொண்டது போல் இருந்தது ..இது சரி வராது அம்பிகா, நம்ம போயிட்டு சாப்பிட்டு விட்டு இவளுக்கும் ரூமிற்க்கே எடுத்து வந்தரலாம் என்றவர்கள்,சாப்பிட்டுவிட்டு வந்து அவளை மறுபடியும் எழுப்பினர்கள்..
இப்போது எழுந்து விட்டாள்..என்னடி அஞ்சு உடம்பு சரி இல்லையா ஹோச்பிடல் போலாமா? என்று அவர்கள் கவலையாக கேட்டார்கள்..
அஞ்சுவிற்கு ,அவர்கள் அப்படி கேட்டதும் ஒரு மாறி ஆகிவிட்டது அவர்களிடம் மறைப்பது தப்போ என்று தான் தோன்றியது..
காதல் வந்துவிட்டாள் கள்ளத்தனமும் வந்து விடுகிறது..
பாவம் அவளும் தான் என்ன செய்வாள்..அதெல்லாம் ஒன்னும் இல்லடி night நல்ல தூங்கல இப்போ ஓகே தாண்டி..அரை மணி நேரத்தில் கிளம்பிரலாம் என்றாள்..
சொன்னதுபோல் அரைமணிநேரத்தில் கிளம்பி,ரூமை காலி செய்தனர்..காரில் செல்லும்போது மூவருக்கும் அப்படி ஒரு உறக்கம்..ஒருவழியாக HOSTELற்கு வந்து சேர்ந்தனர்..வந்தார்கள் சிறிது நேரம் தூங்கியர்வர்கள் மெஸ்க்கு சென்று சாப்பிட்டு விட்டு வந்தனர்..
ரூமிருக்கு வந்து கொஞ்ச நேரம் பேசியவர்கள் வழக்கம் போல் அவர் அவர் ஆளோடு பேச சென்று விட்டனர் ..அப்போ அஞ்சுவிற்கு நியாபகம் வந்தவளாக அவன் கொடுத்த கார்டை எடுத்து,அவனின் நம்பரை போனில் டைப் செய்து கால் பண்லாம வேண்டாமா என்று யோசித்தவள் அவனிற்கு அழைத்து விட்டாள்..அழைத்துவிட்டு திரும்பவும் கட் செய்தாள்..திரும்பவும் அழைத்தும் அவன் எடுக்க வில்லை..சரி என்று சிறிது நேரம் போனை நோண்டினாள்..
சரி தூங்கலாம் என்று படுக்கும்போது,அவன் சரியாக அழைத்தான்..
இவள் ஹலோ என்று சொல்வதற்கு முன்பு ,
சொல்லு அஞ்சு என்றான்..
எப்படி கண்டுபிடிச்சிங்க என்றாள்..நீ பண்ணுவன்னு ஒரு நம்பிக்கை அதான்டா எட்ன்றவன்,HOSTELவந்துட்டியா எப்போ வந்த,எல்லாம் ஓகே தான என்று கேட்டுவிட்டு அப்பறம் madam என்று ஒரு கிறங்கும் குரலில் பேசினான்..
அவள் ஒன்றும் பேசாமல் இருந்ததால் அஞ்சு!!என்று மறுபடியும் ஒரு ஏக்கமான குரலில் அழைத்தான்..எப்போ அஞ்சு ஏங்கூட வருவ,நீ இல்லாம இருக்க முடிலடி!!
நான் ஒன்னு கேட்கவா என்றாள்…”கேளு அஞ்சு”உங்களுக்கு ஏன் என்னை இவ்வளவு பிடிச்சிருக்கு??
அதற்க்கு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது…தெரில அஞ்சு உன்னை பார்த்ததில் இருந்து வாழ்க்கை அவ்வளவு நிறைவா இருக்கு அதனால நீ ஏன் பக்கத்துல இருக்கனும்ன்னு ஆசைபடுறேன்…உங்க வீட்டுல வந்து பேசவா என்றது அவள் அவசரமாக வேண்டாம் என்றாள்…
கொஞ்சம் நாள் போகட்டும்ங்க..
அப்போ madam என்னை love பண்றிங்க அப்படித்தான என்றதும்..
“தெரியலையே” என்று புன்னைகைத்து கொண்டே கூறினாள்…
“சரி அஞ்சு நீ தூங்கு” நல்லா படி உன்னை DISTURB பண்ண விரும்பல..பேசனும்ன்னு தோணினா கூப்ப்பிடு என்று கூறிவிட்டு வைத்து விட்டான்..
அவனுக்கு அவளை DISTURB பண்ண விருப்பம் இல்லை..சின்ன பெண் படிப்பில் கவனம் சிதறி விடும் என்று அளவோடு பேசி வைத்து விட்டான்.அவளோடு பேசும்போது அவள் தன் அருகாமையில் வேண்டும் என்ற ஏக்கம் தான் அதிகமாகிறது..
“எவ்வளோ பெண்களை பார்த்திருப்பான் ஆனாலும் யாரிடமும் இப்படி ஒரு எண்ணம் தோன்றவில்லை..”அஞ்சு கோவிலின் கருவறையில் இருக்கும் தெய்வம் போன்று கையெடுத்து கும்பிடும் அளவுக்கு தூய்மையானவள்” அவளை பூ போல் தாங்க வேண்டும் என்று முடிவு செய்தவன்…குடிக்க தோன்றியது ஆனாலும் குடிக்காமல் சென்று படுத்து உறங்கி விட்டான்..
அவளும் இதை நண்பர்களிடம் சொல்லாமலே மறைத்து விட்டாள் ஒருவேளை கூறிஇருந்தாள் வருங்காலத்தில் பிரச்சனை இல்லாமல் இருந்திருக்குமோ என்னவோ…
எப்பவும் போல் கல்லூரி வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது…அனைவரும் கடைசி SEMESTER என்பதால் படித்து கொண்டு இருந்தனர்..இவனும் அதனால் தான் அவளை அழைக்கவில்லை …சூரியாவும் அம்பிகாவும் தான் அடிக்கடி அஞ்சுவை கிண்டல் செய்து கொண்டே இருந்தனர்..”இப்போலாம் அஞ்சுவின் முகம் அடிக்கடி ஏனோ சிவந்து விடுகிறது” என்று அவர்கள் கிண்டல் செய்தனர்..
அவள் அவனின் நினைவுகளிலே நாட்களை கடத்தினாள் அதுவும் அன்று “கோவிலில் அவன் நெற்றியில் கொடுத்த முத்தம் அவளை உயிர்வரை தீண்டி சென்றது” அதனால் தான் அவளுக்கு முகம் சிவந்தே போகிறது..
ஹே அஞ்சு! அஞ்சு! என்று இந்த முறை அம்பிகா கத்திகொண்டே இருந்தாள்..
ஏன்டி கத்துற என்றாள் அஞ்சு..
எத்தனை முறைடி கூப்பிடுறது உன்னை என்று முறைத்தாள்..”love பண்ற எங்களை விட நீ தாண்டி அதிகமா ROMANCEMODE ல இருக்க என்றனர்..
அதற்கும் அவள் புன்னகையே பதிலாக கொடுத்தாள்..
ஐயோ இவ என்னடி வெட்கம்லாம் படுறா என்று சந்தேகமாக பார்த்த்தனர்…
ஹே அஞ்சு உனக்கு என்ன தாண்டி ஆச்சு அதாவது எங்ககிட்ட சொல்லு…
“முன்னாடி மாறி இருந்திருந்த நாங்க கத்தின கத்துக்கு எங்க முடிய புடிச்சி பேய் ஒட்டிருப்ப,இப்போ என்னடான்னா உனக்கே பேய் ஓட்டனும் போல என்று சிரித்தார்கள் ..”