சூரியன் 27

ரக்சன் சஞ்சயிடம் பேசி வெளியே வர, ஹரிஹரன் அவனை தள்ளி இழுத்து சென்றான்.

இனியவன் அவ்விடம் வந்து, “எதுக்கு வரச் சொன்ன?” ஹரிஹரனிடம் கேட்டான்.

தனியா பேசணும். உங்க அறைக்கு போகலாமா? அவன் ரக்சனை பார்க்க, போகலாம் என்று அவர்கள் சென்றனர்.

உள்ளே சென்றவுடன் ஹரிஹரன் அவன் பாக்கெட்டிலிருந்து அலைபேசியில் இருக்கும் கேலரி புகைப்படத்தை அவர்கள் முன் வைத்தான்.

இருவரும் அதை பார்த்து அதிர்ந்து ஹரிஹரனை பார்த்தனர்.

மக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு இறந்த சரண் உயிரோடு இருக்கும் புகைப்படம்.

இவன் சாகலைன்னா அன்று இறந்தவன் ஹரியை பார்த்தான் ரக்சன்.

அன்றும் கண்டிப்பாக சரண் தான் இருந்தான். அதுவும் எனக்கு நன்றாக தெரியும். ஆனால் இது எப்படி என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை…குழப்பமுடன் இருவரையும் பார்த்தான் ஹரி.

“நான் அதை விசாரிக்கிறேன். நீ இதில் தலையிட வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” இனியவன் ரக்சனை பார்த்தான்.

ஆமாம். நீ தலையிடாத. உன்னை கொல்ல தான் ஆட்கள் வந்ததாக சஞ்சய் கூறினான். நீ கவனமாக இருப்பது மிகவும் அவசியம்..

இனியவன் கண்ணசைத்து ஹரிஹரனுடன் சஞ்சயை காண சென்றனர்.

கையை பிசைந்து கொண்டிருந்த இந்துஜா இனியவன் வரவும், மாமா…கொஞ்சம் வீடு வரை போகணும். கூட்டிட்டு போறீங்களா? தனியே போனால் அண்ணா திட்டுவான்..

பிரசாத், நவீன் எங்க?

அண்ணாவை பார்த்து வரவும் அவங்க கிளம்பீட்டாங்க..

புருவம் சுருக்கி அவளை இனியவன் காண, “ராக்கியை பக்கத்து வீட்ல விட்டு வந்திருந்தோம். அண்ணா திட்டினான். அதான் அழைத்து வரணும்” ஹரிஹரனையும் பார்த்தாள்.

இப்ப தான் அண்ணா கேட்டான்.

வா…ஹரி நீ வெளியே எங்கேயும் போகாத. சஞ்சய் அருகேயே இரு என்று இனியவன் இந்துஜாவுடன் கிளம்பினான்.

ராக்கியையும் இந்துஜாவையும் இனியவன் மருத்துவமனையில் இறக்கி விட்டு, அவன் கிளம்ப எத்தனித்த நேரம் அரக்கப்பறக்க ஓடி வந்தான் விஷ்ணு.

“அண்ணா உள்ள வா…” விஷ்ணு இனியவன் கரம் பிடித்து சஞ்சய் அறைக்கு இழுத்து உள்ளே சென்றவன் அறையிலிருந்த தொலைக்காட்சியை போட்டு நடப்பு செய்தியை வைத்தான். வியர்த்து ஒழுக வந்திருந்தான் விஷ்ணு.

“என்னடா?” இனியவன் பதற, சஞ்சய் புரியாமல் அவனை பார்த்தான்.

நவீனிடமிருந்து சஞ்சய்கு அழைப்பு வந்தது.

சஞ்சய் தொலைக்காட்சியை கவனிக்க, பிரியசகி சஞ்சய் கைபேசியை அவனிடம் கொடுத்தாள்.

“மாமா, செய்தியை பார்த்தீங்களா? நம்ம ராகவன் மாமா…” அவன் கூற, “என்ன சொல்ற?” பதறினான் சஞ்சய்.

ராகவனின் சடலத்தை கண்டு அனைவரும் திகைக்க, மேலும் ஒரு அதிர்வாக கமலாவின் சடலமும் காவலர்களால் அவ்வாற்றிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.

சஞ்சய் எழ முயல,

“சஞ்சய்…” சுவர்ணலதா பதற, பிரியசகி அவன் கரத்தை பற்றியிருந்தாள். அவர் நின்று விட்டார்.

மாமா உங்க உடம்ப பாருங்க. நான் சாரை மீட் பண்ணப் போறேன் அவன் கூற, கைபேசியை சஞ்சய் இனியவனிடம் நீட்டினான் அதிர்வு மாறாமல்….

என்ன தான் ராகவன் தவறானவனாக இருந்தாலும் ராக்கியின் தந்தையாயிற்றே! மனம் கனத்தது அங்கிருந்தவர்களுக்கு.. இந்துஜா விழிகள் கலங்க ராக்கியை அணைத்து வெளியேறினாள்.

பிரசாத் இனியவனை அவ்விடம் வரச் சொல்லி அழைத்து விட்டான்.

இனியவா, கவனமா இருங்க. எனக்கு சரியா படலை. நான் சந்திரசேகர் சாரிடம் பேசுறேன். அவரும் பார்த்துக் கொள்வார் என்று சஞ்சய் கூறி,

“விச்சு முதல்ல வீட்டுக்கு போ. அம்மாவோட இரு..” அவனை அனுப்பி சஞ்சய் ஹரியை பார்த்தான்.

இனியவன் ரக்சனை அழைத்து இவர்களை கவனித்துக் கொள்ள சொல்லி வேகமெடுத்தான். பிரசாத்தும் நவீனும் ஏற்கனவே அவ்விடம் சென்று விட்டனர்.

பிரசாத்தை தனியே அழைத்த இனியவன் ஹரி சொன்ன அனைத்தையும் சொன்னான்..

சந்திரசேகர் ரக்சன் மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக ஆட்களை அனுப்பி வைத்திருந்தார். காவல் காத்துக் கொண்டிருந்தார்கள் இருவர்.

பரபரப்பாக சஞ்சயின் தாக்குதலின் பின் அவனது மாமாவும் அக்யூஸ்டும் கொலை செய்யப்பட்டதாகவும், அடுத்த குறி சஞ்சயாக இருக்கலாம் எனவும் ஹெட்லைனில் ஓடிக் கொண்டிருந்தது.

சஞ்சய் அந்நிலையிலும் கைபேசியில் அவ்வப்போது நடக்கும் நிலவரத்தை விசாரித்துக் கொண்டிருந்தான்.

இனியவனும் பிரசாத்தும் தீவிரமாக ஹரி கொடுத்த புகைப்படத்தை வைத்து சரணை பற்றி விசாரிக்கத் தொடங்கினார்கள்.

சரியாக மூன்று நாட்களுக்கு பின் இனியவனும் ரக்சனும் ஒரு விடயத்தை கண்டறிந்தனர். அவர்களுக்கு சரண் போல் ஒருவன் இருந்திருக்கிறான் என்று மட்டும் தெரிய வந்தது.

சஞ்சயிடம் பேச மருத்துவமனை வந்தனர். அங்கே பதட்டமுடன் ஹரி ஓடி வந்தான். அவனை நிறுத்தி, “எங்க போற?” இனியவன் கேட்டான்.

சஞ்சய் சார், திடீர்ன்னு வெளிய போயிருக்கார். எங்க யாருக்கும் தெரியல. அழைத்தால் எடுக்க மாட்டேங்கிறார்.

எவ்வளவு நேரம் ஆகுது?

“தெரியல. எங்களுக்கு இப்பொழுது தான் அவர் அறையில் இல்லைன்னு தெரியும்” பதட்டமுடன் கூறினான் ஹரிஹரன்.

ரக்சன் உடனே சஞ்சயை அழைத்தான். மற்றவர்களும் அவ்விடம் வந்தனர்.

“எல்லாம் முடிந்தது. நிம்மதியாக உறங்கு” என்று ரக்சனிடம் சொல்லி அழைப்பை துண்டித்தான் சஞ்சய். இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

அருகிலிருந்தவர்கள் பேசிய சேதியில் அதிர்ந்து இணையத்தை ஆராய்ந்தனர். அதில் சஞ்சய் ராஜனை ஆதாரத்துடன் கைது செய்து கொண்டிருந்தான். அவனருகே இருந்த சரணை கண்டு இவர்கள் அதிர்ந்தனர்.

என்ன நடக்கிறது?

அச்செய்தியில்….

இவர் தான் உண்மையான சரண். ராஜன் மருத்துவமனை உரிமையாளர் ராஜனை பிடிக்க உதவினார். உடல் உறுப்புகள் திருட்டு மட்டுமல்லாமல் குழந்தைகளை கடத்தி விற்கும் வேலையும் செய்துள்ளார் இந்த பெரிய மனிதன் என்று ராஜனை காட்டி…

தற்பொழுது வந்த குழந்தை காணாமல் போன செய்தியில் அனைத்தும் வெளி வந்துள்ளது என கூறி, பத்திரிக்கை மற்றும் சேனல் ஆட்கள் எழுப்பிய பலவாறான கேள்விகளுக்கு தக்க பதிலளித்தான் சஞ்சய்.

சரணின் தூரத்து சொந்தக்கார தரண் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர் தான் பிரியசகியின் கணவனாகவும், சிறந்த மருத்துவனாகவும் இருந்திருக்கிறார் என்று கூறவும் அவ்விசயம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கொண்டு வந்திருந்தது.

எனக்கு மிகவும் உதவியாக சரண் இருந்ததனால் என்று அவருக்கு சஞ்சய் கரம் கொடுக்க அவன் முகத்தை திருப்பி,

“சஞ்சய் சார் பிரியசகி என்னோட மனைவி. தரணை தான் அவள் விவாகரத்தை செய்தாள். அவளை நான் விட முடியாது. அவளை மருத்துவ முகாமின் போது சந்தித்து காதலுற்று அவளை திருமணம் செய்தேன். ஒரு நாள் கூட நான் பிரியாவுடன் வாழவில்லை. எனக்கு பிரியசகி வேண்டும்” தீர்மானமாகவும் தீர்க்கமான பார்வையையும் சஞ்சய் மீது பதித்தான் உண்மையான சரண்.

இதனை பிரியசகி கண்டு அதிர்ந்து விட்டாள். அனைத்தும் நேரலையில் மக்கள் முன் தான் நடந்து கொண்டிருந்தது.

“இதனை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த சஞ்சய், சரண் என்பவனுக்கு தான் என் மனைவி பிரியசகி விவாகரத்து கொடுத்து விட்டாள். அது நீங்கள் என்று அவளுக்கு மட்டுமல்ல அந்நேரம் எங்கள் யாருக்கும் தெரியாது. அதற்காக என் மனைவியை யாருக்கும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது. உங்களது விசயம் முடிந்தது. நீங்கள் கூறுவதை என்னால ஏற்றுக் கொள்ள முடியாது” என்று உறுதியான மனதுடன் கூறி அவனை நகர்த்தி ராஜனை அழைத்து சென்றான்.

சரண் அவன் பின்னே சென்று, “நம்மிள் யார் பிரியா அவள் வாழ்க்கையில் தேர்ந்தெடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன்” சத்தமிட்டான்.

ஓரப்புன்னகையுடன், “பார்த்து விடலாம்” என்று அனைவர் முன்னும் “வேந்தன்” என்று அழைத்து, இவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திடுங்க என்று கண்ணாலே ஜாக்கிரதை எச்சரித்து அவரிடம் ராஜனையும் இதில் சம்பந்தப்பட்ட நான்கு மருத்துவர்கள், உதவியாளர்கள், அவர் ஆட்களையும் ஒப்படைத்து அவனது காவல்துறை காரை எடுத்து சரண் முன் வந்து கதவை திறந்தான். இருவரும் மருத்துவமனைக்கு விரைய, செய்தியாளர்கள் பலர் அவர்களை பின் தொடர்ந்தனர்.

மயங்கிய பிரியசகியை பிடித்தது சுவர்ணலதா தான். நாகேந்திரன் நீரை எடுத்து தெளித்து அவளை விழிக்க வைத்தார்.

“இது என்னடா புது பிரச்சனை?” நவீன் தலையில் கை வைத்தான். பெருமூச்சுடன் அமர்ந்தான் இனியவன். இந்துஜாவோ நம்ப முடியாமல் அதிர்ந்தவாறே நின்றிருந்தாள்.

“இந்து…” இனியவன் சத்தம் கொடுக்க, அனைவரும் அவளை பார்த்தனர்.

மாமா, பிரியா சரணுடன் வாழவில்லையா? தரணா?

இனியவன் பிரியசகி அருகே வந்து கரம் நீட்டினான்.

“இத்தனை வருடங்கள் தன்னை சித்தரவதை செய்ததது சரண் இல்லையா? தரணா? சரண் இன்னும் என்னை காதலிக்கிறானா?” அவள் சிந்தனை மேலோங்கி இருக்க, அவள் முன் வந்து நின்றனர் சஞ்சயும் சரணும்.

இனியவன் நகர்ந்து கொள்ள, “சகி” சஞ்சய் அழைத்து முன்னேறும் முன் சரண் முந்திக் கொண்டு வந்தான். பிரியசகிக்கு அவனை காணவும் எப்போழுதும் போல கோபமும், அருவருப்பும் தான் வந்தது.

அவனை தொட விடாமல் சஞ்சய் அருகே சென்று, “என்ன சஞ்சய்? யார் வந்தாலும் இப்படி தான் போட்டி போடுவீங்களா? அதுவும் என்னை வைத்து…” அவள் சினந்து கேட்க,

“நான் என்ன செய்றது சகி? நீ தான் சில நாளுக்கு முன் என்னை வேண்டாம்னு போனேல்ல? ஒரு வேலை அந்நேரம் இவன் வந்திருந்தால் அவனுடன் போயிருப்பேல்ல?” சஞ்சய் கேட்க,

“சஞ்சய்…” சத்தமிட்டாள் பிரியசகி.

மனதினுள் சிரித்த சஞ்சய், “ஆமா சகி, இவன் தான் உன்னோட முதல் கணவனாம். உன்னுடன் வாழவேயில்லையாம். கேட்கிறானே? நான் என்ன சொல்ல உள்ளது?”

இவன் சரணாக இருந்தாலும் சரி தரணாக இருந்தாலும் சரி எனக்கு இவனுகள பிடிக்கவே பிடிக்காது. அவனோட இதே தோற்றம். என்னை அச்சம் கொள்ள தான் செய்யும். கோபப்படுத்த தான் செய்யும். காதலிக்கவோ வாழவோ முடியாது…

“பிரியா…நான் தான் உன் கழுத்தில் தாலி கட்டியவன். என்னை ஏமாற்றி அந்த தரண் உன் வாழ்க்கையில் வந்துட்டான். என்னால உன்னை மறக்கவெல்லாம் முடியாது. ரொம்ப கஷ்டம்..ப்ளீஸ் புரிஞ்சுக்கோ” பிரியசகி கரம் பற்ற வந்தான் சரண்.

“பக்கத்துல வராத. எனக்கு புடிக்கல. உன்னை பார்த்தால் அவனை போல தான் தோணுது…எனக்கு உன்னை பிடிக்கல…” கத்தினாள்.

சஞ்சய் பத்தி யோசிக்காத. அவன் நம்மை பிரிக்க மாட்டான் என சரண் கூற,

“அவரை பத்தி நான் யோசிக்காமல் யார் யோசிப்பா? என்னோட கசப்பான வாழ்க்கை சஞ்சயை கண்ட அன்றே முடிவுக்கு வந்துருச்சு. அவரை விட யாரும் எனக்கு தேவையில்லை. இத்தனை வருடம் நீ எங்க போன? ஒவ்வொரு நாளும் நான் பட்ட கஷ்டத்தை உன்னால புரிஞ்சுக்க முடியுமா? கமலா உன்னோட அம்மா தான?”

“ஆமா.. ஆமா..கமலா என்னோட அம்மா தான்” கத்திய சரண்,

தரண் அவங்கள என்ன செய்து அவன் பக்கம் இழுத்தான்னு தெரியாது. எனக்கு போதை மருந்து கொடுத்து அடிமையாக்கி வச்சிருந்தாங்க. ஆனால் என் வாய் எப்போதும் பிரியா தவிர எதையும் உச்சரிக்கவில்லை. எனக்கு உன்னை அவ்வளவு பிடிக்கும். உன்னை பற்றி செய்தியை கண்டு தான் அவ்விடம் விட்டு அந்த போதையிலும் வெளியே வந்தேன். உனக்காக மட்டும் தான்..

சரணை வெறித்து பார்த்தாள் பிரியசகி.

“என்னோட வா. உன்னை தவிர எனக்கு வேற யாருமில்லை ப்ளீஸ் பிரியா” கெஞ்சலுடன் அவளது கரம் பற்றினான் சரண். சஞ்சய் இறுகி நின்றிருந்தான். அனைத்தும் நேரலையானது…

சரணின் கரத்தை தட்டி விட்ட பிரியசகி, என்னால உன்னுடன் வாழ முடியாது. உன்னை பார்க்கும் போதெல்லாம் அவன் தான் என் நினைவில் வருவான். ப்ளீஸ் எனக்கு சஞ்சய் தான் வேண்டும்..

உன்னை விட முடியாது பிரியா..

“என்னாலும் சஞ்சயை விட முடியாது. நான் அவரை காதலிக்கிறேன். அவருடனும் வாழ முடியாதுன்னா எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம்” முகத்தை மூடி மடிந்து அழுதாள்.

மனம் மகிழ்ந்தாலும் சஞ்சய்கு பிரியசகியிடம் இன்னும் உறுதியை காண வேண்டும் போல இருந்தது. ஹரி அவளிடம் செல்ல, அவன் கை பிடித்து தடுத்தான்.

“அண்ணா…” இந்துஜா அழைக்க,

ஷ்ஷ்….

சரண் அவளிடம் மண்டியிட்டு அமர்ந்து, “ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கொடு பிரியா..” சொல்லிக் கொண்டிருக்க, பிரசாத் அப்பொழுது உள் நுழைந்தான்.

சரணை காணவும் பிரசாத் அவனை இழுத்து அடிக்க, “பிரசாத் வேண்டாம். அவனை விடு” உரக்க கத்திய பிரியசகி…

“நான் சொல்றது உனக்கு புரியலையா? நான் சஞ்சயை காதலிக்கிறேனு சொல்றேன். நீ அப்படியும் வாய்ப்பு கேட்டு நிக்கிற…” கேவலமான பார்வை சரணை நோக்கி வீசினாள்.

இவ்வளவு நேர பேச்சில் நம்பிக்கையுடன் இருந்த சரண் பிரியசகியின் பார்வையில் உடைந்து விட்டான்.

எழுந்தவன் விறுவிறுவென வெளியே நடக்க, ரிப்போர்ட்டர்ஸ் அவனை சூழ்ந்தனர். முகத்தை மறைத்து வெளியேறிய அவன் பின்னே சென்றான் சஞ்சய்.

காவலர்கள் அவ்விடம் வரவும் அவர்களை சரணிடம் அனுப்பி விட்டு தன்னவளை காண வந்தான் சஞ்சய்.

பிரியசகி சோர்வுடன் அவனறையில் இருந்தாள்.

“சகி…” சஞ்சய் அழைப்பில் மற்றவர்கள் அவனை முறைத்து வெளியேறினார்கள்.

பிரியசகி திரும்பி கூட பார்க்கவில்லை.

சஞ்சய் அவளை நெருங்கி அமர, “உங்களோட சோதனை முடிஞ்சிருச்சா சஞ்சய்?”

ஆமா சகி, முடிந்தது. இனி நீ என்னை விட்டு போக மாட்ட.

“ஏன் சஞ்சய்? உங்களுக்கு குணமானதை காட்டிக் கொள்ளவில்லை..” பெண் சிங்கம் சீறியது.

“இல்லை” தலையசைத்த சஞ்சய், எனக்கு குணமாகலை சகி. பெயின் ஹெவியா தான் இருக்கு. என்னோட ஆட்கள் மூலம் அந்த ராஜனை பிடித்து அவனை என் கையாலே கைது செய்ய தான் எண்ணினேன். ஆனால் இன்னும் சில விசயங்கள் முடியவில்லை…

“என்ன?” அவள் விழிக்க,

“ஆமா சகி, ராஜன் மகன் பாரினில் இருக்கிறான். அவனும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கான். ஆனால் அவனை வைத்து ஒரு ஆதாரம் கூட பிடிபடவில்லை. என்னுடைய உதவியாளன் ஒருவனை பாரின் அனுப்பி தகவலை சேகரிக்கணும்” சோர்வுடன் அவள் தோள் சாய்ந்தான்.

எழுந்து அவனை படுக்கையில் அமர்த்தி, “ஓய்வெடுங்க சஞ்சய்…ப்ளீஸ்” என்று ரக்சனுக்கு அழைப்பு விடுத்தாள். அறைக்குள் வந்தான் ரக்சன்.

“குணமாகிடுச்சுனு ஏன்டா ரிப்போர்டர்ஸ் கிட்ட சொன்ன?” ரக்சனும் சத்தமிட்டான்.

பிரியசகியிடம் கூறியதை சொல்லி, “நான் மெடிக்கல் விடுப்பும், திருமணத்திற்கான விடுப்பும் சேர்த்து எடுக்கப் போறேன்” என்று சஞ்சய் மனைவியை காண, அவள் முகம் முழுவதும் பூரிப்பு..

என்னமும் செய்…

“வீட்டுக்கு போகணும்டா இல்ல எல்லாருக்கும் சந்தேகம் வந்துரும்” சஞ்சய் கூற,

“சரி..போகலாம். விடுப்பு எத்தனை நாட்கள்?” ரக்சன் கிண்டலாக கேட்டான்.

நான்கு மாதங்கள்…என்றான் சஞ்சய்.

சஞ்சயா இது?

சகியுடனும் நேரம் செலவழிக்கணும். அம்மா அப்பாவிற்கும் நான் பெரிதாக நேரம் கொடுக்கவில்லை. இந்து மேரேஜூம் பண்ணிடணும்..

அதான பார்த்தேன் என்ற ரக்சன், “இவனை விட்றாதம்மா. இன்றே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். அடிக்கடி வந்து பரிசோதனை பண்ணிக்கணும் சஞ்சய்” ரக்சன் நகர்ந்தான்.

அனைவரும் உள்ளே வந்தனர்.

பிரியசகி சந்தோசமாக அனைவரிடம் விசயத்தை கூறினாள்.

“இப்படி தான்மா சொல்வான். ஆனால் வீட்ல இருக்கவே மாட்டான்” நாகேந்திரன் குறைபட்டார்.

அப்பா நான்கு மாதங்கள் வீட்டில் தான் இருக்கப் போகிறேன்.

“ஓய்வெடுங்க சஞ்சய்…ப்ளீஸ்” பிரியசகி கூற, அனைவரும் வெளியே வந்தனர். விழிகளை இறுக மூடிக் கொண்டான் சஞ்சய்.

அன்றிரவு சஞ்சய் அறையில் அவனுக்கு பிரியசகி உணவை கொடுத்து வெளியே வந்தாள். அப்பொழுது சுவர்ணலதாவும் நாகேந்திரனும் பேசும் சத்தம் கேட்டது.

கடந்து செல்ல பிரியசகி எண்ணிய போது சுவர்ணலதாவின் பேச்சு அவளை தடுத்தது.

“ஏன்டி, அறிவிருக்கா? இப்ப தான் மருமகள ஏத்துக்கிட்டன்னு நீ சொன்னதை கேட்டு சந்தோசப்பட்டேன். அதுக்குள்ள மீண்டும் குழந்தை விசயத்தை ஆரம்பிக்கிற? அதுவும் வாடகைத்தாய்னு சொல்ற? இது மட்டும் சஞ்சய்கு தெரிந்தது. ஒரேதா நம்மை விட்டு போயிருவான்…” அவர் சொல்லிக் கொண்டிருக்க கண்கலங்க சமையலறைக்கு சென்றாள் பிரியசகி.

மனம் பாரமாக, “சஞ்சய்கு குழந்தை கொடுக்க கூட தகுதி இல்லாதவளாக்கிட்டானே அந்த பாவி…நான் என்ன செய்றது? சஞ்சய் அவர் பெற்றோர் எண்ணத்தை புரிந்து கொள்ள மாட்டாரே!”

“பிரியா, முதல்ல உன்னோட புருசனை வேற ஒருத்தியுடன் உன்னால அனுப்ப முடியுமா?” என்ற கேள்வியே அவள் மனதை தைத்தது. கண்ணீருடன் சிந்தனையுடன் சாய்ந்து நின்றிருந்தாள். பிரசாத் அன்று அங்கு தான் நவீனுடன் தங்கி இருந்தான்.

தற்செயலாக கீழே வந்தவன் அடுக்கலை வெளிச்சத்தில் அவ்விடம் வந்தான். அவன் வந்ததை கூட உணராது கண்ணீருடன் இருந்தவளை கண்டு, “பிரியா எதுக்கு அழுற?” அவளை நெருங்கினான்.

சுயம் வந்து புன்னகையை இழுத்து, “சோர்வா இருக்கு பிரசாத்” அவள் பாட்டிலில் நீரை நிறைத்தாள்.

பொய் சொல்லாத. யாரும் ஏதும் சொன்னாங்களா?

இல்ல பிரசாத், நான் நல்லா தான் இருக்கேன். அந்த சரண் கஷ்டப்படுத்திய நினைவுக்கு வந்துருச்சு. கஷ்டமா இருந்தது.

அதை மறந்துருன்னு மாமா சொன்னாங்கள..

“உன்னோட வேலையை பாரு. நான் என்னமும் செய்கிறேன்” பட்டென அவள் கூற. “கரெக்ட் உனக்காக சிந்திப்பது தவறு தான்” சினமுடன் அவன் வெளியேறினான்.

பிரசாத்தின் சினம் அவளுக்கு மேலும் சோர்வை தந்தது. செயற்கை முறையில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என மனதில் எண்ணியவாறு அமர்ந்திருந்தாள்.

அறைக்கு வந்த பிரியசகி சஞ்சய் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு அவனருகே அமர்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சஞ்சய் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

“சாரி சஞ்சய்…என்னால உங்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போச்சு. என்னால உங்களை விட்டு இனி இருக்கவும் முடியாது” கலக்கமுடன் அவனருகே படுத்தாள். உறக்கம் தான் தூரப் போனது..