அத்தியாயம்:13

கோவிலுக்கு உள்ளே சென்று அங்கு முன்னாடி இருந்து நந்தியை வணங்கிவிட்டு சிவபெருமானை கண் மூடி வேண்டி கொண்டு இருந்தாள்,அப்போதே சிவபெருமானின் திருவிளையாடல் ஆரம்பமாகி விட்டது..

அவள் கண்ணை  மூடி வேண்டி கொண்டிருக்கும்போது,அவன் சரியாக சாமியை கும்பிட்டுவிட்டு கண்ணை திறந்தான்..திறந்தவனுக்கு பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது..கடவுளை நன்றாக வேண்டியவன் வெளியே சென்று விட்டான் ..

இவள் நண்பர்களோடு அங்கு இருக்கும் அனைவருக்கும் சிறு CHOCOLATESகளை  வழங்கி கொண்டு இருந்தாள் ,அங்கு இருந்த வயதான  தாத்தாவிடம் சென்று  ஆசிர்வாதம் வாங்கும்வரை அனைத்தையும் பார்த்து கொண்டு தான்  இருந்தான்..

அவனால் அவளை தாண்டி யாரையும் பார்க்கவே முடியவில்லை ,அவளை விட்டு கண்ணை சிறிதும் அகற்ற கூட முடியவில்லை..

நண்பனின் திருமணம் முடிந்தும் தஞ்சை  கோவில் போலாம் என்று தோன்றியதும் இங்கு வந்துவிட்டான்..

“இவனுக்குள் இருக்கும் ஒரு நல்ல பழக்கம் இது தான் தோன்றியதும் அதை செய்து முடிப்பவன் அப்படிதான் அவன் இங்கு வந்ததும்..”

அவன் தாயிடம் வேண்டியது நடந்தே விட்டது..அவள் கோவிலின் கருவறை வந்து கண்ணை மூடும்போது தான் அவளை பார்த்தான்..அவள் தானா என்று சந்தேகம் கூட வந்துவிட்டது ..எங்கே பார்த்தாலும் அவளை போல் யாராவது போகிறார்களோ என்று இந்த ஒரு மாதம் முழுவதுமாக தேடி கொண்டு தான் இருந்தான் ..

அதனால தான் இன்று அவள் தானா என்று அவ்வளவு சந்தேகம் அவனுக்கு…இன்று நான் தேடாமலே என்னிடம் வந்து சேர்ந்து விட்டாளே  என்று தான் அவனுக்கு தோன்றியது..அதும் அவளின் பிறந்த நாள் அன்று அந்த சிவனே அவனிடம் சேர்த்து விட்டார்.

அன்று பார்த்ததைவிட இன்று அவ்வளவு அழகாக இருந்தாள்..இவளிடம் சும்மாவே மனம் மயங்கும் இன்றும் அப்படி தான் அவள்  பின்னே மனம் சென்றது..

அவள் கோவிலை சுற்றிவரும்போது அந்த கல்வெட்டுகளை எல்லாம் கையால் தொட்டு பார்த்தவளுக்கு அப்படி ஒரு பூரிப்பு தமிழ் மன்னர்களின் பெயர்களில் “ராஜராஜ சோழன்(அருள்மொழிவர்மன் )” என்றாள் அப்படி ஒரு பிரமிப்பு..இவரின் ஆட்சிதிறன் இங்கு இருந்த மன்னர்களை மட்டுமில்லை “இலங்கை” வரை ஆட்டி வைத்தது  என்றாள் மிகையில்லை

மொத்தமாக அந்த கோவிலை பார்த்தவளுக்கு அந்த சிற்ப்பிகளையும் நினைத்து அவ்வளவு பெருமையாக இருந்தது..

இதை எல்லாம் யோசித்து கொண்டே வந்தவளுக்கு,”புடவை தடுக்கி யார் மேலோ விழுவது போல் தோன்றியது யார் என்று பார்த்தவளுக்கு அவனிடம் இருந்து பார்வையை விலக்கிக்கொள்ள முடியவில்லை..அவனோ அவள் விழாமல் இருப்பதர்க்காக அவளின் இடையை வளைத்து தாங்கி நின்றான்”..இருவரும் பார்வையாலே பேசிக்கொண்டு  இருந்தனர்,

“காதலின் திருவிழா கண்களில் நடக்குதே! குழந்தயை போலவே இதயமும் தொலையுதே !

வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன் காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்”..

அவன் தான் முதலில் சுதாரித்தான்..சாரி கீழ விழ போனிங்க அதான் என்று சொல்ல வந்தவன்,அவளுக்கோ அதில் இருந்து வெளியே வரமுடியவில்லை…ஒருவராக தன்னை சமாளித்தவள்..

இட்ஸ் ஓகே விடுங்க and தேங்க்ஸ் என்றாள்..

அவளின் முகத்தில் தெரிந்த “அந்த கள்ளம் கபடம் இல்லா அந்த சிரிப்பு அவனுக்கு உயிர் வரை சென்றது” இவளை கடைசி வரை இந்த  சிரிப்போடு  பார்த்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான்..

Happy பர்த்டே beauty என்றான்..

அவள் சற்று அவனை முறைத்து பார்த்தாள்

அவனோ கூலாக,பெயர் தெரியாது வேற எப்படி கூப்பிட என்றான் and ரொம்ப அழகா இருக்கீங்க அதான்..

எங்கிட்ட தான் இப்படி சொல்றிங்கள இல்ல எல்லார்கிட்டயும் இப்படிதானா…இந்த கேள்விக்கு அவன் அவளையே விடாமல் பார்த்து கொண்டு இருந்தான் அதில் அவ்வளவு கோவம் வந்தது..

First டைம் பார்க்கிற பொண்ணுகிட்ட இப்படி பேசினா கோவப்படாம உங்கள கொஞ்சுவாங்களா என்ன என்று அவளும் அவனை தான் முறைத்தாள்…

அவனுக்கு திடீர்ன்னு கொஞ்சுவன்களான்னு அவள்  கேட்டதுக்கு அவன் முகத்தில் சிறு முறுவல் வந்தது..

உங்கள இன்னைக்கு நான் ரெண்டாவது டைம் பார்க்கிறேன்,முன்னாடியே ஒருவாட்டி பார்த்திருக்கேன் அன்றில் இருந்து இன்னைக்கு வரை அதாவது இந்த ஒரு மாதகால  இடைவெளியில் உங்களை மட்டும் தான் நெனச்சிட்டு  இருக்கேன் and உங்கள தான் தேடிகிட்டு இருக்கேன் and இன்னும் ஒன்று கூறவேண்டும் i love you Bangaram என்றான்…

அவளோ திகைத்து நின்றாள்..”சும்மா பேசனும்ன்னு எதையாவது பேச கூடாது சரியா நீங்க  நெனைக்கிற மாறி பொண்ணு நான் கிடையாது சரியா”

இவளுக்கு எப்படி தான் புரிய வைப்பது என்று அவனுக்கே தெரியவில்லை

அவனிடம் பேசிக்கொண்டே திரும்பியவள் கல்லில் மோதி பாதத்தில் ரத்தம் சொட்டியது,அவள் வலியில் முகத்தை சுருக்கினாள்..அவன் சற்றும் யோசிக்கவில்லை கீழே உட்காந்து அவளின் பாதத்தை தன்மேல் எடுத்துவைத்து அவனிடம் இருந்த கைக்குட்டை வைத்து துடைத்து விட்டவன் அதை அவள் காலில் கட்டி விட்டான்..

சின்ன காயம் தான்டா ஒன்னும் ஆகாது என்றான் ..வலிக்குதா! என்று அவன் கேட்டபோது அவனது  கண்ணிலும் வலி இருந்தது..

“யாரவது பார்க்க போறாங்க ப்ளீஸ் எழுந்திரிங்க என்றாள்”!…அவனின் வேட்டியில் இவளின் பாதத்தில் இருந்து வழிந்த ரத்தம் கரையாக மாறியது..நல்லவேளையாக யாரும் அவர்களை கவனிக்கவில்லை..

அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை உங்களுக்கு என்ன வேண்டும்!

அவளின் அருகில் வந்தவன் நீ நெனைக்கிற மாறி நான் பொறுக்கிலாம் இல்லை..உன்னோடு காலேஜ்ல லாஸ்ட் MONTH நடந்த culturalsக்கு நான் தான்  guest ஆக வந்தேன்..என்னோட பெயர் பிரகாஷ் குமார்..அப்போ வந்தபோது தான் உன்னோட நடனத்தை பார்த்தேன்…அதுக்கு அப்பறம் தான் நடந்ததலாம்  சொல்லிட்டனே என்றவன் அவளின் கையில் தன்னோடைய போன் நம்பரையும், சாமிக்கு வைத்து பூஜை செய்து கொடுத்த பூவில் ஒரு ரோஜாவை எடுத்து அவளின் கையில் கொடுத்தான்..

சற்று தூரம் சென்றவன் திரும்பி அவளை பார்த்தவன்,அவள் SHOCK ஆகி இருக்கும் நிலையை பார்த்தவன் அவளின் அருகில் வந்து அவளின் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு நல்ல பதிலாக சொல்லு ,என்னை பத்தி விசாரிச்சிட்டு சொல்லு but நல்ல பதிலாக சொல்லு Bangaram..

அவள் முற்றிலும் குழம்பி போய்விட்டாள்…இவளின் தோழிகளோ அவர்களின் ஆளோடு அப்போ தான் போன்  எல்லாம் பேசி முடித்துவிட்டு வந்தனர்..

என்னடி அஞ்சு பேயடிச்ச மாறி இருக்க ஒருவேளை யாரவது propose பண்ணிவிட்டர்களோ என்று அவளை கலாய்க்க செய்தனர்…

உங்கள என்று அவர்களை துரத்தி சென்றாள்..

Hotel க்கு சென்றவர்கள் நன்றாக சாப்பிட்டு முடித்து விட்டு ரூமிற்கு சென்று படுத்தனர் அனைவரும் உறங்கி விட்டனர்..இவளுக்கு தான் தூக்கம் தூர சென்றது.. இவளின் தந்தை தான் இந்த ஹோட்டல் புக் செய்து கொடுத்தார் safe ஆக இருக்கும் என்று சொன்னார் இது போதாது என்று ஒரு செக்யூரிட்டி ஒருவரையும் அனுப்பி இருந்தார்..

தூக்கம் வராததால் சற்று வெளியே வந்து இயற்கையை பார்த்துகொண்டு இருந்தாள் மனம் அவனை பற்றியே சிந்தித்து கொண்டு இருந்தது.. உள்ளே செல்லலாம் என்று திரும்பியவள் எதிர்பாராமல் அவனை பார்த்து விட்டாள்..

அவனும் அவளையே தான் பார்த்துகொண்டு இருந்தான்..இந்த டிசம்பர் மாத குளிர்ல வெளிய என்ன பண்றிங்க என்றான்…

அவளும் அதையே தான் கேட்டாள்,tower இல்லைங்க madam அதான் வெளியே வந்தேன் அது உண்மையும் கூட ஏனென்றால் இவளுக்கும் அதே பிரச்சனை தான் அதனால் தான் வெளியே வந்தாள்..

என்ன ஒரு surprise!!நீங்களும் இதே ஹோட்டல் தான் புக் பண்ணிருக்கிங்க போல என்றவன்..அப்படி கூறியவனை அவள் முறைத்தாள்..

இது ஒரு coincident madam..சந்தேகமாக பார்க்காதிங்க என்றான்..

நம்பிட்டேன் என்றாள்.

நம்பி தான் ஆகணும் madam..என்னோட நண்பனோட கல்யாணம் அதான் இங்க வந்தேன் என்றான் ஆனா உங்கள நான் பார்த்தது எல்லாமே coincident தான்..

ப்ரீயாக இருந்தாள் கீழ வாங்களேன் ஒரு COFFEE குடிக்கலாம் என்றான்..

தாரலமா நம்பி வாங்க ஒன்னும் பண்ண மாட்டேன் என்றான்..

அந்த டிசம்பர் மாத குளிருக்கு அவளுக்கும் அது தான் தேவைப்பட்டது,அவளுக்கு பசியும் எடுத்துவிட்டது அது தான் முதல் காரணமும் கூட..

கீழே சென்றவர்கள் ரெண்டு காபி ஆர்டர் செய்தனர்..அவள் கண்ணோ ஏக்கமாக வேறு எதாவது கிடைக்குமா என்று பார்த்தது அதை புரிந்தவன்,எழுந்து சென்று FOOD எதாவது கிடைக்குமா என்று பார்த்தான்..நல்லவேளையாக அங்கு இருந்தவர் நல்ல மனிதனாக இருந்ததால் 5 நிமிடங்களில் தோசை ரெடி பண்ணி எடுத்து வரேன் சார் என்றார் ..

அங்கு மேசையில் அமர்ந்தவன், நல்ல மனிஷங்களும் இருக்காங்க madam என்றான்..

எதையுமே புரியிற மாறி பேச மாட்டிங்களா என்றாள் அதற்குள் 2 காபி, ஒன் PLATE தோசைலாம் எடுத்து வந்து கொடுத்தார் அப்போது நேரம் சரியாக 11:50 ஆகியது..

இவள் அவருக்கு காசு எதாவது குடுக்கலாம் என்று எழுந்தவள் அவளை அமர வைத்து அதெல்லாம் வேண்டாம், “அவருக்கு இருக்க HUMANITY நம்ம மதிக்கணும் காசு குடுத்து கெடுக்க கூடாது என்றான்”..அவருக்கு எங்க officeல FOOD எல்லாம் பாத்துக்க மேனேஜர் போஸ்டிங்  APPOINTபண்ண போறேன் என்றான்..

அப்பவும் அவள் சந்தேகமா தான் பார்த்தாள்..ஒரு கார்டு நீட்டினான்..P.G CONSTRUCTIONcompany அவளுக்கு நன்றாக தெரியும்..அவள் முகத்தையே பார்த்தவன்,மரியாதை எதாவது கிடைக்குமா? என்று பார்த்தான்..

அவளோ அதை பார்த்தவிட்டு ohh அப்படியா! என்று விட்டு சாப்பிடுவதில் கவனத்தை செலுத்தினாள்..

“டேய் பிரகாஷ் உன் நிலைமை ரொம்ப கஷ்டம் தான் போல என்று யோசித்தவன் முகத்தில் ஒரு சிரிப்பு வந்தது” ..

சாப்பிடுபவளை விழுங்குவது போல் பார்த்தான்..அதை பார்த்தவள் மறுபடியும் சாப்பிடுவதில் கவனம் செலுத்தினால் ..

Night சாப்டிங்களா இல்லையா என்றான்..

சாப்பிட்டேன் ஆனாலும் இப்போ முழிச்சிட்டு இருந்ததால் பசிச்சிருச்சி..

எப்படி கண்டுபிடிச்சிங்க என்றாள்..

எதை madam என்று ஆர்வமாக கேட்டான்..

அதற்க்கு அவள் முறைத்தாள்..

உங்க முகத்த பாத்தாலே தெரிஞ்சுது அதான் தோசை சொல்லிட்டு வந்தேன் என்றான்..

சாப்பிட்டு முடித்தவள்,அவனையே பார்த்தாள் ,நல்ல பால் நிறம்,அப்படி ஒரு பிங்க் colour உதடு ,SIX பீட் HEIGHT இருக்கிறான், இதில் சிரித்தால் கன்னத்தில் குழி வேற மொத்தத்தில் பேரழகன் தான்,கண்ணில் உண்மையே தெரிந்தது..

“போதும் madam எவ்வளவு நேரம் தான் சைட் அடிப்பிங்க உங்க அளவுக்கு இல்லன்னாலும் நானும் கொஞ்சம் அழகுன்னு தான் நெனைக்கிறேன் சரியா என்றான்”..

சும்மாலாம் சொல்ல கூடாது உண்மையாக  அழகா தான் இருக்கீங்க என்றாள்..சற்று நேரம் அமைதியாக இருந்தாள்..

ஒரு YELLOW நிற KURTI, WHITEcolourPANT,நீண்ட கூந்தலை பின்னி போட்டிருந்தால்,கூர்மையான மூக்கு அதில் அவள் போட்டிருந்த வைர மூக்குத்தி அவளுக்கு  அவ்வளவு அழகாக இருந்தது..களைந்த கூந்தளிலும் அவ்வளவு அழகாக இருந்தாள்..

Madam என்றவன் சட்டுன்னு திரும்பியவள் முன் ஒரு GIFTயை வைத்தான்..”அவளோ எதற்கு என்பது போல் பார்த்தாள்”..

அவனோ BIRTHDAYBABYக்கு ஒரு சின்ன GIFT என்றான்..”பிரிச்சி பார்த்தாள் அதில் ஒரு கிளிபச்சை நிற தங்க நிற ஜரிகை வைத்த பட்டு  புடவை” ஒன்று இருந்தது…

எப்போதாவது பார்பேன்னு தெரியும்.. ஆனா இன்னைக்கு பார்பேன்னு சத்தியமா நினைக்கல, ஆனா கோவில்ல பார்த்த பிறகு அதும் பிறந்த நாளாக போயிற்று.. அதனால தான் evening போயிட்டு எடுத்து வந்தேன் திரும்ப பார்க்கும்போது கொடுக்கலாம்ன்னு நெனச்சேன் அதுவும் இன்னைக்கே அமைந்துவிட்டது என்றான்..

அவளோ அவனைபார்த்துக்கொண்டே இருந்தாள்..

Madam என்னை கல்யாணம் பண்ணிகிறிங்களா..