அத்தியாயம்:12

இரவு முழுவது தன்னை மறந்து அவளையே நினைத்துகொண்டு இருந்தவன் அவளை பற்றிய நினைவுகளை  ஏனோ அவனால் தடுக்க முடியாமல் குடித்துக்கொண்டே இருந்தான்..

அதிகாலையில் எழுந்தவன் இது சரி வராது என்று யோசித்தவன் அலுவலகத்திற்கு சென்று விட்டான்..

இவன் பெயர் பிரகாஷ் குமார்..பரம்பரை சொத்துகாரர்கள்…இவன் பிறந்தது வளர்ந்தது கல்லூரி படித்தது அனைத்தும் ஹைதராபாத் தான் ..இவனுடைய அப்பா அம்மா என்று யாரையும் இவன் பார்க்கவேயில்லை ஏனென்றால் இவன் பிறக்கும்போது பிரசவ வலியில் அவன் தாய் உயிர் துறந்தார்.. தந்தை சிறு காலம் நன்றாக தான் பார்த்துகொண்டார் ஆனால் தன்  மனைவி இல்லை என்ற ஏக்கம் அதிகமாக இருந்ததால், தன்னை கவனிக்க கூட மறந்தார் அதனால் அவரும் இறைவன் அடி சேர்ந்தார்.. அப்போது பிரகாஷ் வயது ஐந்து தான்..

மொத்த சொத்துமே இவன் பெயருக்கு அவர் மாற்றி விட்டிருந்தார்..பிரக்ஷின் தாய் வழியில்  அம்மா, அப்பா தான் இவனை ஐந்து வயது முதல் பார்த்து கொண்டனர் அவர்களும் நன்றாக தான் வளர்த்தனர் ..

இவர்கள் அனைவரும் தெலுங்கு பேசுபவகர்கள்..இவனின் தந்தையின் முதல் பிசினஸ் சென்னையில் தான் முதலில் அராம்பித்து நல்ல வளர்ச்சி அடைந்தார்.. அதே இவனும் பின்பற்றி சென்னையில் பிசினஸ் தொடங்கி நல்ல வளர்ச்சி அடைந்தது…அதனால் இவனும் தாத்தா பாட்டி அனைவரும் சென்னைக்கே வந்து விட்டார்கள்..இங்கு வந்து தான் நம்ம தமிழை கற்று கொண்டான் மற்றபடி வீட்டில் அனைவரும் தெலுங்கில் தான் பேசுவார்கள்..

இவன் கல்லூரி படித்தபோது இவனோடு இருந்த  அனைத்து நண்பர்களும் ஹைகிளாஸ் SOCIETYஎன்று கூறுவார்களே அவர்கள் தான்.. அவர்களோடு இவனும் சேர்ந்து தான்  மது, மாது என்ற பழக்கங்கள் வந்தது..அதற்காகவே இருக்கும் பெண்களிடம் தான் இவன் செல்வான் மத்தபடி பெண்கள் மேல் நல்ல மதிப்பு கொண்டவன் தான் அதில் குறை கூறவே முடியாது.

இவன் செய்யும் எந்த கேவலத்தையும் வீட்டிற்கு  கொண்டு வர மாட்டான். வீட்டில் தாத்தா, பாட்டியோடு  அவ்வளவு நல்ல பிள்ளையாக இருப்பான் ஏனென்றால், பெற்றவர்கள்  இல்லாதபோது நான் பாத்துக்கிறேன் என்று  தானாக முன்வந்தவர்கள் அதனால் அவர்களின் மேல் நல்ல பாசமும், நல்ல மரியாதையும் உண்டு..

காலையில் அலுவலகத்திற்கு கிளம்பியவன் கீழே வந்து goodmorning தாத்தா பாட்டி என்றான்..

பாட்டி இன்னைக்கு என்ன ரொம்ப அழகா இருக்கீங்க,எதாவது ஸ்பெஷல் DAYன்னா சொல்லுங்க மாஸ் பண்ணிறாலாம் என்று அவர்களோடு சற்று நேரம் உரையாடினான்..

அதற்க்கு அவன் தாத்தா! அப்படி ஒரு ஸ்பெஷல் DAYன்னா அது  உன்னோட கல்யாணமாக  தான் இருக்கும் என்று சிரித்தார்..

கல்யாணம் பத்தி என்ன யோசிச்சிருக்க பிரகாஷ் வயசு தான் 26 ஆகிருச்சுல என்று கூறியவர்,“எங்களுக்கும் வயசு ஆகுது” என்றவரை வேதனையோடு பார்த்தான்..

அவர் கல்யாணம் பத்தி பேசும்போது இவனுக்கு அஞ்சுவின் முகம் தான் நியாபகம் வந்தது ஏன்னென்று தான் புரியவில்லை இது சும்மா ஏஜ் ATTRACTION ஆக இருக்கும் என்று தான் நினைத்தான்..அவளின் நினைவுகளை சற்று தள்ளிவைத்தவன்,சரிங்க தாத்தா பாட்டி பண்ணிருவோம் எனக்கு பிடிச்ச பொண்ணு கிடைக்கும்போது பண்ணிரலாம் என்றான்..

அவனுக்கும் ஆசை தான் ஆனால் இவள் மேல் உள்ளது காதலா! இல்லை வெறும் ஈர்ப்பு தானா! என்று புரிய இவனுக்கு சற்று கால அவகாசம்  தேவைப்பட்டது..இதற்க்கு மேல் யோசித்தால் சரி வராது என்று அவளின் நினைவுகளை தற்காலிகமாக தள்ளி வைத்தான்.

இங்கு இவனோ அவளின் நினைவுகளில் இருந்தான் ஆனால் அவளோ அங்கு பெரிய சண்டையை கல்லூரியில் கிளப்பி கொண்டு இருந்தாள் ..

ஹே என்னடா ஓவரா பேசுற! நான் யாருன்னு உனக்கு தெரியாது! என்று அஞ்சு கத்திக்கொண்டு இருந்தாள்,சண்டை என்னவென்றே தெரியாமல் அம்பிகாவும் சூரியாவும் அவளோடு சேர்ந்து கத்தி கொண்டு இருந்தனர்…

சூரியா போன் பேசிக்கொண்டே “டேய் இருடா கூப்டறேன் இங்க ஒரு பிரச்சனை” போய்கிட்டு இருக்கு என்று அவளும் வந்து இதில் கலந்துகொண்டாள்..

இருவரும் ஹே அஞ்சு என்ன ஆச்சு! என்றனர்,இவன் என்கிட்ட love சொல்றான், எங்கயாவது ஓடிபோலாமான்னு கேட்டுட்டு இருக்கான்.. என்று அவள் கூறியதுமே இருவரும் ஒரே டைம்ல அவளை முறைத்தனர்.. இருந்தாலும் அவளை விட்டு தர முடியாது அல்லவா!!

டேய்!” உன் பிரச்சனை தான் என்னடா” என்று அவனிடமே கேட்டார்கள்..ஹே லூசுங்களா! அவளுக்கு போயிட்டு சப்போர்ட் பண்ண வந்துருக்கிங்க,என்ன நடந்துச்சுன்னு நானே சொல்றேன்..பாக்க அழகா இருக்கன்னு அவளையே பார்த்துட்டு இருந்தேன் பதிலுக்கு இவளும் சிரிச்சா,

அப்பறம் என்று ஆர்வமாக அம்பிகா கேட்டாள்!..

சரி பொண்ணு நல்ல இருக்குன்னு பேச ஆரம்பிச்சேன் இவ தான் முதலில் எங்கிட்ட என்னை பிடிச்சிருக்கா! என்ன love பண்றியா!  நம்ம ஓடிபோய்டலாமான்னு! இவ தான் எங்கிட்ட கேட்டா.. இப்போ “இவளே” நான் தான் இப்படி சொன்னேன்ன்னு ஆளுங்கள கூட்டிகிட்டு வந்து பிரச்சனையை பண்றா..

இப்போ சொல்லுங்க யாருமேல தப்புன்னு என்றான்…அப்படியா!என்பது போல் அஞ்சுவை இருவரும் பார்த்தனர்..”அவளோ கண் அசைவில் அப்படித்தான் என்றாள்”.

சரி அவனை விரட்டிருவோம் விடு என்று கண்ணால் பதில் சொன்னார்கள் ..

ஏன்டா உனக்கு என்ன ஒரு தைரியம் இருந்தா அவகிட்ட போயிட்டு இவ்ளோ மோசமா பேசியிருப்ப ,அவ அப்பா எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா அவரு நெனச்சா இன்னைக்கு நீ உயிரோடவே இருக்க முடியாது என்று பயமுறுத்தினர்..அது நன்றாக வேலையும் செய்தது ,அவனோ மூன்று பேருக்கும் ஒரு கும்பிடை போட்டுவிட்டு ஓடியே விட்டான்..

அவன் ஓடியதை பார்த்ததும் அவர்களுக்குள் அப்படி ஒரு சிரிப்பு..

ஆமா நீ ஏன்டி அவன்கிட்ட காலையிலே பிரச்சனையை பண்ணிருக்க!அதற்க்கு அஞ்சு நீங்க ரெண்டு பேரும் எங்கிட்டா ஒருவார்த்தை கூட  சொல்லாம  எங்கயோ போய்ட்டிங்க ..எனக்கு ஒரே BORE அடிச்சுதுடி அதான் சும்மா கொஞ்ச நேரம் விளையாடிட்டு இருந்தேன் என்று கூலாக கூறினாள்..

இருவருமே சாரிடி என்றனர்..சூரியாக்கு ஏற்கனவே ஆள் உண்டு இவள் அங்கு அதிகம் போன் பேசி கொண்டிருக்கிறாள்..

 இது போதாதுன்னு இப்போ “அம்பிகாவும் காதலில் விழுந்துவிட்டாள் அதனால் அவளும் பிஸி ஆகி விட்டாள்”..இவளுக்கு தான் இந்த தனிமையை திடீர் என்று ஏற்க முடியவில்லை..அதனால் தான் இருவரும் சாரி கேட்டனர்..

இட்ஸ் ஓகே டி என்று கூறிவிட்டு அமைதியாக செல்லும் அவளையே பார்த்துகொண்டு இருந்தனர்..இது சரி வராது என்று முடிவு செய்தவர்கள் இரவு HOSTELலில் சாப்பிட்டு முடித்து வந்தவர்கள் “ஒரு ட்ரிப் போலாம்” என்று கூறி அவளை நோக்கினர்..அவளுக்கு ஒரே ஆர்வம்  வந்து “தஞ்சை பெரிய கோவில் போலாம்” என்றாள் அதையே இருவரும் ஏற்று கொண்டனர்..

“சரி என்று கூறியவர்கள் மறுபடியும் போன் பேச சென்று விட்டனர்” இவளுக்கு தான் என்னவோ போல் இருந்தது போனை நோண்டி கொண்டு இருந்தவள் அப்படியே உறங்கியும் போனாள்..

இன்னும் கல்லூரி முடிய ஓரிரு மாதங்களே இருந்தன அதனால்,அஞ்சுவின் வீட்டில் யாரும் இங்கு வா என்று தொந்தரவு செய்யவில்லை..கல்லூரி வேறு ஒருவாரம் விடுமுறை நாட்களாக இருந்ததால் தான் அங்கு போலாம் என்று முடிவு செய்தார்கள்..

இந்த ஒருபயணம் தான் அஞ்சுவின் வாழ்க்கையே மாற்ற போகிறது என்று அவளுக்கு தெரியுமா என்ன??எதிர்க்காலத்தை யாரால் தான் கணிக்க முடிகிறது..

இரவு அனைத்து வேலைகளையும் முடித்தவன் அவள் நியாபகமாக இருந்தது  “இது என்னடா  நமக்கு வந்த சோதனையாக இருக்கு” என்று யோசித்தவன் இது சும்மா ATTRACTION ஆக தான் இருக்கும் என்று முடிவு செய்தவன்,அவன் போனில் இருந்து “மோனிகா” என்ற பெண்ணிற்கு அழைத்தான் ,அவன் அழைத்ததும் அவள் அடுத்த பத்து நிமிடங்களில் அந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தாள்..

இவனோ முழு போதையில் இருந்தான் சுற்றுபுறத்தை கவனிக்க மறந்தான்..அவளுக்காக காத்திருந்தவன் பக்கத்தில் ,ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதனும் காத்திருந்தார்..இவனை பார்த்ததுமே அவருக்கு பிடிக்கமல் போயிற்று எழுந்து லிப்ட்காக அங்கு சென்று நின்றார்..

அஞ்சுவின் அப்பா தான் வேறு யாரும் இல்லை.. அவரோ கீழே செல்வதற்காக காத்திருந்தார..லிப்ட் ஓபன் ஆனதும் அங்கு வந்த ஒரு பெண்ணை பார்த்தார் அவ்வளவு அருவருக்கத்தக்க உடையில் இருந்தாள்..இவளை பார்த்ததுமே அவருக்கு எப்போடா இங்கு இருந்து போகலாம் போல் இருந்தது..

அவளோ நேராக சென்று பிரகாஷை கட்டி பிடிக்கும் வரை  அனைத்தையும் அவர் பார்த்துகொண்டு தான் இருந்தார்..”இருவரும் ஒட்டிக்கொண்டு செல்லும் அந்த கன்றாவியை பார்த்ததும் அவருக்கு ஒமட்டிகொண்டு வந்தது”..

அவரை அவன் கண்ணாலே என்னையா லுக்கு விடுற என்று கேட்டு விட்டான் இந்த பிரச்சனை தான் அவன் வருங்காலத்தில் பெரும் பிரச்சனையாக அமையும் என்று அவனுக்கு தெரியுமா என்ன?

“இந்த நாயைலாம் எவன்தான் பெத்துவிட்டானோ” என்று கேவலமாக நினைக்க தோன்றியது..இந்த மாறி கேடுகேட்டவனை  ENCOUNTERல தான் போடணும் என்று நினைத்தார்..

இதை தான் விதி என்று கூறுவார்களோ!!

அவனோ அவளை உள்ளே அழைத்து சென்றும் அவளோட ஒன்ற முடியவில்லை உடனே அவளுக்கு பணத்தை அள்ளி அவள் கையில் திணித்து அனுப்பி விட்டான்…

ஏனோ அவனிற்கு “அஞ்சுவின் குழந்தை தனமான முகம் தான்  நியாபகம் வந்தது”..ஒருவழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தான்..

இவனின்  நண்பனுக்கு இன்று திருமணம் தஞ்சாவூரில் தான்அதனால் “காலையிலே வேட்டி  சட்டையில் கிளம்பி கீழே இறங்கி வந்தான்”கீழே வரும் அவனையே அவனின் தாத்தாவும் பாட்டியும் பார்த்து கொண்டு இருந்தனர்..அவர்களின் அருகில் வந்தவன் “சாப்டிங்களா” தாத்தா, பாட்டி என்றான்..

சாப்டோம் கண்ணு என்றவர் அவனுக்கு முகத்தை சுற்றி ஒரு நெட்டி முறித்தார்..

அதை பார்த்தவன் “அவ்வளவு அழகாவா இருக்கேன்” என்றான்..

இவ்வளவு அழகும் வீணா போககூடாது பிரகாஷ் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ என்று அவன் தாத்தா கூறினார்..அதை அவனும் ஆமோதித்தான்..

அந்த காலத்துல நான்லாம் என்று அவனின்  தாத்தா ஆரம்பிக்கும்போதே,அவரின் மனைவி முறைத்தார்..ஒரு முறைப்பிலே அடங்கி விட்டார் அவர்..இருவரையும் பார்க்கும்போது அஞ்சுவின் நியாபகம் தான் வந்தது அவனுக்கு அவளும் நானும் இதே போல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவன்..

அவனின் தாய் போட்டோவிர்க்கு முன்பு சென்றவன் “அவளை எப்படியாவது தன்னவளாக்கி கொள்ள உதவி செய்யுங்கள்” அம்மா என்று வேண்டி கொண்டான்.

அஞ்சு, அம்பியா, சூர்யா மூவரும் தஞ்சாவூருக்கு காரில் வந்து இறங்கி,ஒரு பெரிய ஹோட்டல்யை அடைந்தனர் ..ரூமிற்கு சென்றதும் உறங்கி விட்டனர் அவர்கள் அதிகாலையிலே இங்கு வந்து சேர்ந்து விட்டனர்..

முதலில் அஞ்சு தான் எழுந்தாள்,எழுந்து குளித்து  விட்டு வந்தவள் அவர்களையும் எழுப்பி விட்டாள்,அவர்கள் அனைவரும் சல்வாரில் ரெடி ஆகினர் ஆனால் அஞ்சுவோ புடவையில் ரெடி ஆகிக்கொண்டு இருந்தாள்..

அவர்களுக்கு தெரியும் அஞ்சுவிற்கு,”நம்ம தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் என்றாள் அவ்வளவு பிரியம்” அங்கு போகும்போது புடவையில் தான் செல்ல வேண்டும் என்று எப்போதும் சொல்லி கொண்டே இருப்பாள்..

மெரூன் நிற பட்டுடுத்தி,பட்டு கரையின் நிறத்தில் blouse அணிந்து காதில் மெரூன் நிற ஜிமிக்கி அணிந்து,கழுத்தில் ஒரு சிறு செயின் எப்பவும் போல ,அதற்க்கு ஏற்றாற்போல் மெரூன் நிற கண்ணடி வளையல்களை கை நிறைய அணிந்து இருந்தாள்..தன் நீண்ட கூந்தலை பின்னி அதில் கூந்தலின் நீளத்திற்க்கு மல்லிகை பூ வைத்திந்தாள்..

அவளை பார்த்த இருவருக்குமே அவ்வளவு ஆனந்தம்,அஞ்சுவை பற்றி அவர்களுக்கு நன்றாக தெரியும் முக்கியமாக அவளின் செல்வ செழிப்பு நன்கு தெரியும்..அப்படி இருந்தும் அவள் அவ்வளவு எளிமையாக தான் இருப்பாள்.. எப்போதும் போல் இன்றும் தன் தோழியின் எளிமையை பார்த்து வியந்தனர்..

ஹே அஞ்சு எங்க கண்ணே பட்டுவிடும் போலடி!..”கல்யாண பொண்ணு மாறி அவ்வளவு அழகா இருக்கடி நீ” ஒன்னு தான் கொறையுதுடி அஞ்சு என்றவர்கள்,”அவளின் கண்களை மூடி அவளுக்காக வாங்கிய கேக்கை காட்டி வெட்டினர்”..அவளுக்கு மறந்தே போய் இருந்தது..அவர்களை நெகிழ்வோடு கட்டிகொண்டாள்,அவர்களுக்கும் கண்ணில் நீர் நிறைந்தது..அவளுக்காக வாங்கிய giftsயை கொடுத்தனர்..

Anjuu இன்னைக்கு உன்னோட treat தான் மறந்துறாத சரியா? என்றனர்..

அதெல்லாம் கோவிலுக்கு போயிட்டு வந்து பேஷாக பண்ணிரலாம் என்றனர்..

இப்போ நம்ம கிளம்புவோமா என்றாள்…போனை எடுத்துபார்த்தாள் வீட்டில் இருந்து அழைத்து இருந்தனர் அனைவரிடமும் வாழ்த்துகளை வாங்கி கொண்டு கோவிலுக்கு புறப்பட்டாள்..

போகும்போது சூரியா வேறு” ஏன்டி உன் காதலனை பார்க்க போற மாறி இவ்வளவு அழகா கிளம்பிருக்க” என்று அவளை கிண்டல் செய்து கொண்டே வந்தாள்..

அஞ்சுவிற்கு கிட்டத்தட்ட அப்படி தான் அவளுக்கு படித்த புத்தகத்தில் இருந்து “ராஜ ராஜ சோழன்” என்றாள் அவ்வளவு பிடிக்கும் அதனால தான் தஞ்சை கோவில் என்றாள் அவ்வளவு பிரியம் என்று கூட கூறலாம்..

தன் நினைவுகளை தள்ளி வைத்தவள் கோவிலின் வாசலில் நின்று கொண்டு பார்த்தாள்,அதை பார்க்கும்போதே அவளுக்கு கண்ணில் நீர் வழிந்தது..

நுழைவாயிலை தாண்டி உள்ளே கால் வைக்கும்போது அவளுக்குள் அப்படி ஒரு சிலிர்ப்பு உடலில்,

“காணீரோ?

நீர் காண்

சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ?

ஓ அழகியே பூவே?

செல்லுதியோ?

மலரிடு போசகி!

வீரா ராஜ வீர

சூரா தீர சூர

வீழா சோழ வீர

சீரார் நாலம் வாழ

வாராய் வாகை சூட

தொடுவோர் பகைபோரை

நடுகல் சேர்க்கும் விழா

மாற காதல் மாறா

பூவோர் ஏங்கும்  தீரா

பாவோர் போற்றும் வீரா

உடைவாள் அதைத் தாங்க

பருதோல் புவி தாங்க

வளமாய் எமை ஆழ

வருவாய் தனம் ஏற..”

என்ற பாடல் தான் அவளுக்கு மனதுக்குள் ஓடியது…