இனியவன் மாமா, அண்ணா சொன்னது போல… அம்மா, அக்காவை நீங்க தான் கொன்னீங்களா? ராகவனிடம் கேட்டு விட்டாள் இந்துஜா.
“இந்துஜாவை ஏமாற்றி அடைந்து விடலாம்” என்று எண்ணியவன் எண்ணத்தில் மண் விழுந்து விட, வக்கிர சிரிப்பை உதிர்த்த ராகவன்..
“ஆமா இந்து, எனக்கு உன் மேல அவ்வளவு ஆசை. நீ தொட்டு பேசும் போதெல்லாம் என் மனம் உன்னை அடைய துடிக்கும். உன்னோட அக்கா தொந்தரவா இருந்தா… நானும் எத்தனை நாள் பொறுப்பேன். அவளை நோய்வாய்ப்பட வைத்து உன்னை நெருங்கினேன்.
“அவ போகவும் நீயே என்னை நெருங்கி வந்த? விடுவேனா? அத்தையிடம் உன்னை கட்டிக்க தான் கேட்டேன்” பிராமிஸ் தொண்டையில் கை வைத்தான்.
அவங்க முடியாதுன்னு சொல்லீட்டாங்க. அதான் போட்டுட்டேன். உனக்கு தெரிந்தால் உன்னை அடைய முடியாதில்லையா? அவன் விழிகள் இந்து சட்டையின் அவிழ்ந்திருந்த முதல் பொத்தானிடம் வந்தது. அவள் அழகு அவன் கண்ணுக்கு விருந்தாக…” அவன் கரங்களும் அவ்விடம் நோக்கி பயணித்தது.
சட்டையை இழுத்து பிடித்துக் கொண்டு நகர்ந்தாள் இந்துஜா.
உனக்கு அந்த இனியவனை பிடிச்சிருக்குல்ல? ஒன்று செய்யலாம். ஒரு… வாரம் மட்டும் என்னோட தங்கீட்டு அவனை கல்யாணம் பண்ணிக்கோ…
விரைந்து அவளை நெருங்கி அவளது ஆடையை கிழிக்க அவன் முனைய, அவனை தள்ளி விட்டு இந்துஜா ஓடவிருந்த காலை தாவி பிடித்தான். பொத்தென தரையில் விழுந்தாள் இந்துஜா.
கீழே விழுந்ததில் தலை வலிக்க, தலையை பிடித்தாள். அவளது கால்களை இழுத்து ஓரிடத்தில் தள்ளியவன் துள்ளிய அவளது கால்களையும் கரங்களையும் திரைச்சீலையை இழுத்து கட்டினான்.
இந்துஜா கதறியவாறு, “என்னை விட்ருங்க…” அழுதாள்.
சிரிப்புடன், உன்னை அனுபவிக்க எண்ணினேன். ஆனால் நீ அழுற? அவளது கன்னத்தில் அவனது கரங்கள் பதிந்தது. இந்துஜா அவனை வெறிக்க, அவளை அடைய எண்ணி நெருங்கிய சமயம் இனியவன் அவனை இழுத்து அடித்து கீழே தள்ளினான்.
இந்துஜாவிற்கு அழுகையை நிறுத்த முடியவில்லை. இருவரும் சண்டையிட சஞ்சய் ராகவனை இழுத்து அடித்தான்.
இனியவன் சீற்றமுடன் இந்துஜாவை வெறித்து, அவள் கழற்றி போட்டிருந்த ஆடையை அவள் மீது விட்டெறிந்தான்.
குளியலறைக்குள் புகுந்து ஆடையை மாற்றி வந்த இந்துஜாவிடம் “மாமா, அவ்ளோ சொல்லியும் இந்தாளை நம்பி வந்திருக்க?” கன்னத்தில் மாறி மாறி அறைந்தான் நவீன்.
ராகவன் எழ முடியாதவாறு அடித்த சஞ்சய், நவீனை தடுத்து… “வீட்டுக்கு வா” சத்தமிட்டான்.
அழுது கொண்டே மூவரையும் பார்த்தான்.
“போ…” நவீன் இந்துஜாவை தள்ளினான்.
வெளியே வந்தவுடன் பெருமூச்சுடன், “மாமா நான் கிளம்புகிறேன். பேசும் நிலையில் நானில்லை” இந்துஜாவை முறைத்து வண்டியில் விரைந்தான் இனியவன்.
நவீன் காரில் ஏறிய இந்துஜா, அழுது கொண்டே வீடு வரை வந்தவள், அவளுக்காக காத்திருந்த அனைவரையும் பார்த்து விட்டு நிற்காமல் அழுது கொண்டே அவளறைக்கு ஓடினாள்.
“சஞ்சய், என்னாச்சு? இந்து எதுக்கு அழுதுட்டு போறா? கன்னத்தில் அடித்த தடம் பதிஞ்சிருக்கு” பதட்டமுடன் சுவர்ணலதா கேட்க,
பிரியசகியும் சுவர்ணலதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து வேகமாக இந்து அறைக்கு சென்றனர். எப்போதும் போல கதவடைத்து அழுது கொண்டிருந்தாள் இந்துஜா.
சினமுடன் வந்த நவீன், “ஏய்..ஜா வெளிய வா. என்ன பேச்சு பேசுன? வர்றீயா? கதவை உடைக்கணுமா? “சத்தமிட்டான்.
கதவை திறந்தவள் சுவர்ணலதாவை அணைத்து அழுதாள்.
“பெரிம்மா, மாமா என்னை வீடியோ எடுத்தாங்க” நடந்ததை கூற, சஞ்சய் அதிர்ந்து அவளை பார்த்தான்.
வேகமாக மாடி ஏறியவன், “என்ன சொல்ற? வீடியோவா?”
“சாரி அண்ணா…” சஞ்சயை கட்டிக் கொண்டு முழுமூச்சாய் அழுதாள் இந்துஜா.
“அதான் மடிக்கணினியை உடைத்து விட்டாளே மாமா!”
இப்ப இருக்கிற டெக்னாலஜில எதையும் எடுக்க முடியும் என்று பைக்கை எடுத்து ராகவனை சந்திக்க சென்றான்.
இந்துஜா போட்ட போடில் மடிக்கணினியின் இன் அன்ட் அவுட்டும் ஆட்டம் கண்டிருந்தது.
ச்சே…என அவனது குளியலறைக்கு சென்று அவனது கேமிராவை எடுத்தான்.
இதுல இருக்கும் என்று அவனது ஆட்களிடம் பேசிக் கொண்டிருக்க, சஞ்சய் அதனை கண்டு விட்டான். இருவருக்கும் மறுபடியும் ஓர் யுத்தம்..
இருவருக்குமே அடி பட்டாலும் சஞ்சய் விடாது அதனை பிடுங்கி கேமிராவை சுக்குநூறாய் உடைத்து விட்டான்.
“சஞ்சய், உன்னை சும்மா விட மாட்டேன். என்னுடைய எல்லா திட்டத்திலும் இடையில வந்து நிக்கிற? முதல்ல அந்த ஹரியை முடிக்கிறேன். அவனை நீ எங்கே மறைத்து வைத்திருந்தாலும் நான் கண்டுபிடிச்சு அவனை கொன்றே தீருவேன். அதே போல இந்துவையும் விட மாட்டேன்” கீழே விழுந்தவாறே சத்தமிட்டான் ராகவன்.
தடுமாற்றமுடன் சஞ்சய் வெளியே வந்து நவீனை அழைத்தான்.
நவீனுடன் அடிபட்டு வரும் கணவனை தாங்க பிரியசகியும், தன் மகனின் காயம் கண்டு தாங்க சுவர்ணலதாவும் ஓடி வந்தனர்.
சஞ்சயோ இருவரையும் பார்த்து, “என்னை தனியே விடுங்க” அவனறைக்கு அருகே இருக்கும் அறைக்கு சென்றான். இருவரும் அவன் பின்னாலேயே சென்றனர்.
“அவன் சொன்னது உங்களுக்கு கேட்கவில்லையா?” நாகேந்திரன் காயத்திற்கு மருந்திட மகன் இருக்கும் அறைக்கு சென்றார். அப்பொழுதும் விடாமல் இருவருமே உள்ளே வந்தனர்.
பிரியசகி அமைதியாக நிற்க, “சஞ்சய்…ரொம்ப வலிக்குதா? அம்மா மருந்து போட்டு விடவா?” சுவர்ணலதா பாசமுடன் அவனை நெருங்க,
“நான் எழும் போது புள்ள தூங்கிட்டு தான் இருந்தது சஞ்சய்” நாகேந்திரன் கூற, நான் விழித்த போது குளிக்க…சுவர்ணலதா தடுமாற, “இப்ப இனியவா சொல்லலைன்னா இந்து வாழ்க்கையே முடிஞ்சு போயிருக்கும்” சத்தமிட்டான்..
வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த இந்துஜா சஞ்சயை நோக்கி ஓடி வந்தாள்.
“சாரி அண்ணா…சாரி சாரி…நான் உங்களையும் இனியவன் மாமாவையும் தப்பா புரிஞ்சுகிட்டேன். மாமா இப்படி இருப்பார்னு நான் நினைக்கல. அம்மா, அக்காவை அவர் கொன்னதாக அவரே சொன்னார்..” சஞ்சயை கட்டிக் கொண்டு கதறி அழுதாள்.
சஞ்சய்… ராக்கி? நாகேந்திரன் வினவ,
“ராக்கி நம்முடன் இருக்கட்டும். அவன் வந்தால் வீட்டுக்குள்ள விடவும் கூடாது. ராக்கியை கொடுக்கவும் கூடாது. இந்து நீ ராக்கியுடன் தான் இருக்கணும்” என்று தன்னவளை பார்த்து கையசைத்தான்.
பிரியசகி அமைதியாக அவனருகே வந்தாள்.
இவங்க செஞ்ச அதே தப்ப நீ பண்ண மாட்டன்னு நினைக்கிறேன். அவன் ஹரியையும் தேடிட்டு இருக்கான். பார்த்தால் அந்நிமிடம் ஹரி உயிரோட இருக்க முடியாது சகி… புரியுதா? அவன் கேட்க,
ம்ம்! என்ற பதிலுடன் அவனது காயத்தை தொட வந்தாள்.
அவள் கரம் பற்றி, “உணவு தயார் செய். நான் சீக்கிரம் கிளம்பணும்..”
ரெஸ்ட் எடுக்கலாமே!
“நான் ஓய்வெடுக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவங்க தான் வெற்றி பெறுவாங்க. நான் குளிக்கணும். எல்லாரும் கவனமா இருங்க” சஞ்சய் அவனறைக்கு செல்ல, படுக்கையில் சாய்ந்து வரும் சஞ்சயை பார்த்தான் ஹரிஹரன்.
“ஹரி இங்கே இருக்கிறானா?” சிந்தனையுடன் தன் அண்ணன் சென்ற வழியை பார்த்தாள் இந்துஜா.
ரக்சன் மண்பட வேலைகளை கண்காணித்துக் கொண்டிருக்க, ரக்சனிற்கு சஞ்சய் அழைப்பு விடுத்தான்.
“இப்பொழுது எப்படி முடியும் சஞ்சய்? எனக்கு திருமண வேலைகள் இருக்கு” ரக்சன் கூற, சஞ்சய் நடந்ததை விளக்கினான்.
சரி, எனக்கு தெரிந்தவரிடம் விசாரிக்கிறேன் என்ற ரக்சன், அவன் சித்தி மகன் தேஜை கவனிக்க சொல்லி அமர்ந்தான்.
ஹரிஹரன் தந்தையின் இறப்பை பற்றி அறிந்து கொள்ள சஞ்சய் ரக்சனிடம் உதவி கேட்க, ரக்சன் அவனது சீனியர் உதவியை நாடினான்.
ரக்சனுக்கு கிடைத்த பதில் ஏமாற்றமாக இருந்தாலும் ஹரியின் தந்தை கொலை தான் செய்யப்பட்டிருக்கிறார் என்று உறுதியாக தெரிந்தது.
சஞ்சயை அழைத்தான்.
நீ எண்ணியது சரி சஞ்சய். அவரை கொலை தான் செய்திருக்காங்க பட் எந்த ரெக்கார்ட்ஸூம் எடுக்க முடியாதுன்னு சொல்றாங்க..
“வேறு யாரிடமாவது முயற்சி செய்யேன்” சஞ்சய் கூற,
“பண்ணலாம் சஞ்சய் பட் அதுல பெரிய ரிஸ்க் இருக்கு. ராஜனுக்காக தான அங்க எல்லாரும் விசுவாசமா இருப்பாங்க. நான் கேட்டு அதை அவரிடமே கூறினால் என்ன செய்வது?” சீரியசாக முகத்தை வைத்தான்.
சஞ்சயிடம் பதிலில்லாது போகவே,
கொஞ்சம் டைம் குடு சஞ்சய். ஏதாவது யோசிக்கலாம்? ஹரி என்ன பண்றான்?
அவன் வலியை காட்டிக்காதது போல இருக்கான். அந்த ராஜன் சாதாரண ஆள் இல்லை. சரண் அவருக்கு கையாள் போல தான். அவனுக்கு மேல் இன்னும் யாரோ இருக்காங்க.
உன்னோட மாமாவை என்ன செய்யலாம்னு இருக்க?
இப்பொழுதைக்கு ஹரியும் நம்மை சார்ந்தவர்களின் உயிரும் தான் முக்கியம். நீ சொல்வது சரிதான். அவசரப்பட வேண்டாம் என்றான் சஞ்சய்.
“நாளை காலை எல்லாரும் சீக்கிரம் வந்துருங்க” அழைத்தான்.
“வாரோம் ரக்சா. உன்னுடைய உதவிக்கு நன்றி” என கூறி சஞ்சய் அழைப்பை துண்டித்தான்.
ரக்சனுக்கு பிரைவேட் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
யோசனையுடன் அழைப்பை ஏற்றான்.
ஹலோ…
“ரக்சன், உங்க ஹாஸ்பிட்டல் வேலையை மட்டும் நீங்க பார்த்தீங்கன்னா நல்லது இல்ல உங்க குடும்பம்” என்று ஒருவன் சத்தமாக சிரிக்கும் சத்தம் கேட்டது.
ஹேய், யார்டா நீ?
நான் யாரா இருந்தால் உனக்கென்ன? சொன்னதை செய் இல்லை உன்னோட தங்கையை மணக்கவிருக்கும் மாப்பிள்ளை கைலாசம் போயிருவான்…
வாட்? ஏய்…ரக்சன் சத்தமிட, ரக்சனின் சத்தம் கேட்டு தேஜ் ஓடி வந்தான்.
“அண்ணா, என்னாச்சு?” தேஜ் கேட்க, நகர்ந்து அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விட்ரு..
“நீ இதுல சம்பந்தப்படாம இரு. விடுறேன்” அழைப்பை அவன் துண்டித்து விட்டான்.
சஞ்சய்கு உதவ எண்ணிய ரக்சன் இவர்களை விடக் கூடாது என அந்நேரம் முடிவெடுத்தான்.
“ஒன்றுமில்லை” என்று விழிகளை மூடி மாப்பிள்ளையை அழைத்து காரருகே வந்தான்.
மாப்பிள்ளையை அழைத்து பேச, அவர் சாதாரணமாக தான் பேசினார். இப்பொழுது தான் ரக்சனுக்கு நிம்மதி பிறந்தது.
“பிரச்சனையா அண்ணா?” தேஜ் கேட்க, அவன் பதிலளிக்காமல் உள்ளே சென்று விட்டான்.
அந்நாளின் இரவு தொலைக்காட்சி செய்தியில் அரசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கொலைகள் பற்றிய செய்தி கார்டூனாக வெளி வந்தது மக்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
ரக்சனாவின் திருமணத்திற்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.
“மாமா, இவனை என்ன செய்வது?” ஹரிஹரனை நவீன் கேட்க, “அவன் இருக்கட்டும்” என்ற சஞ்சய், “என்ன நடந்தாலும் நீ அறையை விட்டு வெளியே வரக் கூடாது ஹரி” என்றான் அவனிடம்.
தலையை ஆட்டிய ஹரிஹரன் பிரியசகியை பார்த்தான்.
“ஹரிக்கு உணவு?” அவள் சஞ்சயை பார்த்தாள்.
நான் வாங்கி கொடுத்துக்கிறேன்..
“பிரசாத் வரலையா?” பிரியசகி கேட்க,
அவன் நேரே வந்துருறேன்னு சொன்னான்.
“சகி எனக்கு ஜூஸ் வேணும்” ஹரிஹரன் கேட்க, சஞ்சய் அவனை முறைத்தான்.
பிராமிஸ்… டயர்டா இருக்கு..
“மாமா, இவன் ஏதோ பிளான் போடுறான். நம்பாதீங்க..” நவீன் கூற,
“என்னால நடக்கவே முடியவில்லை. நான் என்ன பிளான் போட போகிறேன்?” பிரியசகியை பார்த்தான்.
“ஜூஸ் தானே! ஐந்தே நிமிடத்தில் வருகிறேன்” பிரியசகி அறையை விட்டு வெளியே வர, “அதெல்லாம் வேண்டாம். நாம கிளம்பலாம்” சஞ்சய் ஹரியை பார்த்தான்.
“எனக்கு வேண்டும் சகி..” பிடிவாதமாக அவன் சஞ்சயை பார்க்க, “அவ தயாராகும் முன் கேட்காமல் இப்பொழுது கேக்குற?” சத்தமிட்டான் சஞ்சய்.
“சஞ்சய் பிராபிளம் இல்லை” பிரியசகி சென்று விட்டாள். சஞ்சயை உரிமையுடன் பெயர் கூறி அழைக்கத் தொடங்கி இருந்தாள் அவன் மனைவி.
“கிளம்பியாச்சா?” நாகேந்திரன் வந்தார்.
“இவனை வச்சுட்டு கிளம்ப வேண்டியது தான்” நொடித்துக் கொண்டான் நவீன்.
ஏன்? அவர் ஹரியை பார்க்க, அவன் கண்ணடித்தான்.
பிரியசகி ஜூஸூடன் வந்தாள்.
ஹரியிடம் கொடுக்க அருகே செல்ல, “சகி நில்லு” சஞ்சய் அவள் கரத்தில் இருந்ததை வாங்கி ஹரி கையில் கொடுத்தான்.
பிரியசகியுடன் தனியே நேரம் செலவழிக்க ஹரி செய்த திட்டம் பாழாய் போனது. ஜூஸை பிரியசகி மீது கொட்டி அவளை போக விடாமல் தடுக்க எண்ணினான்.
“நவீனுடன் காரில் கிளம்புங்க. சகி நீ குடிக்க தண்ணீர் எடுத்துட்டு வா” என அனைவரும் கிளம்பவும் ஹரியை நெருங்கி, “உனக்காக நான் ராஜனை ஆதாரமுடன் பிடிப்பேன். கவலைப்படாதே! உன்னோட பிளான் மொக்கையாகிடுச்சுல்ல? இனி சகிட்ட வச்சுக்காத…” சீரியசாக தொடங்கி சஞ்சய் ஹரிஹரனை பார்த்து கண்ணடித்தான்.
“ஓ! அப்படியா? சகிட்ட வச்சுக்கக் கூடாதா?” அவன் கேட்க, தண்ணீர் எடுத்து வந்தாள் பிரியசகி.
ஹரியின் சிறுவயதில் பிரியசகி அவனுடன் சேர்ந்து சிறுபிள்ளை போல் விளையாடுவாள். அவன் மனதில் ஆழ பதிந்திருந்த அந்நினைவு தன் அம்மாவின் பின் இவள் என்று எண்ணத் தோன்றியது. வருடங்களுக்கு பின் இவளை பார்த்திருக்கிறான். ஏனோ அவளை விட்டு அவனால் பிரிய முடியவில்லை. மனம் பயமுறுத்தியது. அம்மாவை போல இவளுக்கும் ஏதும் ஆகி விடுமோ? எண்ணினான்.
“சஞ்சய், நீங்க போயிட்டு வர்றீங்களா? சிட்டி தனியா இருப்பான்” ஹரியை பார்த்து சஞ்சயை திகைத்து பார்த்தாள். நாற்காலியை இழுத்து அமர்ந்து விட்டான் சஞ்சய்.
நான் மட்டும் எதுக்கு போகணும்??? இருவருமே ஹரியை பார்த்துக்கலாம்.
சஞ்சய், கமிஷ்னர் சார் கோவிச்சுப்பார்.
“அதனால என்ன? ஹரியை விட என்ன முக்கியம் நமக்கு?” சஞ்சய் கேட்க, ஹரி இதை எதிர்பார்க்கவில்லை.
“சரி, போயிட்டு சீக்கிரம் வந்துறணும். எனக்கு தனியே இருக்க ஒரு மாதிரியா இருக்கு” ஹரிஹரன் சஞ்சயை பார்த்தான்.
“தாலி கட்டும் நேரமே முடிந்து விடும்னு நினைக்கிறேன்” சஞ்சய் கூற,
ஹரி கன்னத்தில் கை வைத்த பிரியசகி, “சீக்கிரம் வந்துருவோம். அவர் சொன்னது போல நீ வெளியே வரவே கூடாது. அறைக்குள் தான் இருக்கணும்…பிராமிஸ்…” கரம் நீட்டினாள். பிரியசகி கரம் மீது கரம் வைத்து, “நீயும் சீக்கிரம் வரணும்” என்றான்.
சஞ்சய்க்கு ஏதோ தவறாக பட்டது. ஏன் இப்படி விடாமல் தடுக்கிறான்? எண்ணமுடன் அவனை திரும்பி பார்த்துக் கொண்டே சஞ்சய் கதவை பூட்டி சென்றான்.
திருமண வேலைகள் அனைத்தும் முடியவும் குளித்து தயாராகி ரக்சன் வெளியே வந்தான். அவனின் சொந்தங்கள் சூழ்ந்திருக்கும் அம்மண்டபத்தில் தன் தந்தையை தேடினான்.
அவன் கரம் பிடித்து சந்திரசேகர் தனியறைக்கு அழைத்து சென்றார். இருவரும் ஒரு அறையில் இருந்தனர்.
“ரக்சா, ராஜன் விசயத்துல நீ தலையிடாத. அதை சஞ்சய் பார்த்துப்பான்” சந்திரசேகர் கூற,
நானும் அவ்வாறு தான் இருந்தேன் டாட் பட் என்னை மிரட்டும் அளவிற்கு சென்றிருக்கான். நான் எப்படி சும்மா இருக்க முடியும்?
“சொன்னா கேளு” சந்திரசேகர் சத்தமிட, சஞ்சய்கு உதவி வேண்டுமோ இல்லையோ? நான் அவர்களை விடுவதாக இல்லை.
“இதையாவது கேளு” அவர் சத்தம் போட, உள்ளே இருந்த அறைக்கதவை திறந்து ரதியும், வெளியிலிருந்து இனியவனும் வந்தனர்.
ரதி மூவரையும் பார்த்து விட்டு, “இனியவன் சார் என்னாச்சு?” அவன் கட்டிட்ட கையை பார்த்து கேட்டுக் கொண்டே வெளியே அழைத்து செல்ல, தன் தந்தையிடம் பிடிவாதம் செய்து கொண்டிருந்த ரக்சன் கவனம் முழுவதும் வெளியே சென்றவர்கள் பின் சென்றது.
“ரக்சா…” அவர் அழைக்க, “வெயிட் டாட்” கதவை திறந்தான்.
இந்து உங்ககிட்ட ஓவரா பேசிட்டாலாம். ரொம்ப கில்ட்டா இருக்காம். வந்ததிலிருந்து புலம்பிக்கிட்டே இருக்கா.