சொர்க்கம் உன்னருகில் 1.1

அரசு போருந்தின் பின் அந்த  இருசக்கர  வாகனத்தில் பெண்கள் இருவரும் சிலபல நிமிடங்களாக தங்களுக்குள் பேசிக் கொண்டே சென்று   கொண்டிருக்கின்றனர்.

  • “ஏய் சுஜி இப்ப ஹார்ன அழுத்திப் பிடிக்கிறயா இல்லையா? நாம என்ன ஊர்வலமா போறோம்? காலையில இந்த ஆள் பண்ற வேலைய பாரேன்” என்று சத்தம் போட்டாள் காயு.

“இன்னும் சில நிமிஷத்துல ஸ்கூல் போயிடுவோம். அதுக்குள்ள நீ பண்ற              அடாவடி இருக்கே,அப்பப்பா முடியலடீ. “ என்றாள் சுஜி.

“என்ன பெரிய அன்னை தெரசான்னு நெனப்போ? அந்த ஆள் தெனமும் இப்படித்தான் பண்றான். நாளையிலிருந்து நா வண்டி ஓடறேன். அப்புறம் பாக்கலாம். அவசர அவசரமா கெளம்பி வந்தா இங்க.. “ என்று பொங்கினாள் காயு.

“காயு ஜஸ்ட் ரிலாக்ஸ். இது எல்லாம் ஒரு விஷயமுன்னு டென்ஷன் ஆகாத”என்ற சுஜி

“அவருக்கு நாம அவர் பின்னாடி  வர்றதுல ஒரு சந்தோசம். இன்னைக்கு அவர் நம்மால சந்தோசமா இருக்கட்டுமே” என்றாள்.

“அம்மா பரதேவதை இன்னைக்கு யார் யாரை சந்தோசபடுத்தின, உங்க வீட்டு எஜமானி அம்மாவையா? அந்தம்மா உன்னை பதம்பாக்குது. நீ அதுக்கு சேவகம் செய்யற. “என்றாள்.

பள்ளியினுள் நுழைந்து வண்டியை நிறுத்தி ஸ்டாப் ரூம் சென்றனர்.

“சுஜி எங்க உன் பைய்யில காலையில சாப்பிட எதுவும் காணோம். காலையில நீ சாப்டியா? ஆனா உன் சந்தோச புராணம் பார்த்தால் சாப்பிட  வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல தான். வா பெல் அடிக்கும் முன் சாப்பிட்டு முடிக்கலாம். நான் இன்னைக்கு பூரி செஞ்சேன்.              உனக்கும் சேர்த்து தான் கொண்டு வந்தேன்” என்றாள் காயு.

சாப்பிட்டுவிட்டு  கையெழுத்து இட்டு  தங்கள் பணியை துவக்கினர்.

மாலை கிளம்பும் போது “ சுஜி எத்தனை மணிக்கு நலுங்குக்கு வரிங்க? என்று காயு கேட்டாள். “வீட்டுக்கு போயிட்டு கால் பணறேன் காயு. ப்ரோக்ராம் எப்படி சேஞ்சாகுமுன்னு தெரியல. எப்படியும்           வருவோம் பார்ப்போம் “ என்றாள்.

அவங்க வீடு போய் ரெடியாகுமுன் நாம அவங்களைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமா? வாங்க.

சுஜி என்கிற சுஜாதா, ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி  ஆசிரியை. காயு அலைஸ் காயத்ரி கணித முதுகலை ஆசிரியை.

இருவரும் பள்ளி தோழிகள். படிக்கும் காலம்தொட்டே நெருங்கிய தோழிகள். சுஜி கலகலப்பானவள். கவிதை, கதை என அவள் வானம் பெரியது. எல்லாம் சில காலத்தற்குமுன் வரை. காயு யதார்த்தவாதி. தோழியிடம் மிகுந்த பாசம் கொண்டவள்.

“ஜெய் எங்கடா உன் பொண்டாட்டி மினுக்கிக்கிட்டு கிளம்பறா? இன்னைக்கு எங்க பெரிய பாட்டியோட அக்கா பேத்திக்கு பேரப்பிள்ளை பிறந்திருக்கு. அத பார்க்க போகணும்ன்னு காலையிலேயே சொன்னேனா இல்லையா? அப்பறம் எங்க இவ யோகனையும் கவியையும் கூட்டிக்கிட்டு கெளம்பறா? ஏய் என்னடி! இது என்ன பழக்கம்? நாங்க  எங்க சொந்தக்காரங்க  வீட்டுக்கு போகும் போது இவ்ளோ அசிங்கமா நடந்துகிற? என்றார் சுஜியின் மாமியார் சுசிலா.

“அம்மா என்ன இப்படி பேசறிங்க? சுஜி ஸ்கூல் ஏ ஹெச் எம் பொண்ணூக்கு இன்று நலுங்கு. நாளைக்கு வரவேற்பு. உங்ககிட்ட தானே அன்னைக்கு பத்திரிக்கை குடுத்தாங்க. நீங்க இப்படி பேசுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல “என்றான் சுஜியின்                கணவன் ஜெயந்தன்

“மறந்து போச்சு. வயசாயிடுச்சி இல்லையா. இவ என்கிட்ட சொல்லிட்டு கிளம்ப மாட்டாளா? சரி சரி போயிட்டு சீக்கிரம் வந்திருங்க”. என்றார் சுசிலா.

பரமசிவம், சுசிலா தம்பதியருக்க இரு மகன்கள். விஜயன், ஜெயந்தன். விஜயன் விவசாயி.

பரமசிவம் ஓய்வுபெற்ற ஆசிரியர். சுசிலா இல்லத்தரசி.  ஆடு, மாடு, வயல் தோட்டம் என அரசாண்டவர். இப்போ மகன்கள் வீட்டில் மாறி மாறி, பெரும்பாலும் ஜெய் வீட்டில் இருந்து வருகிறார்கள்.

ஜெய்யும் அருகில் உள்ள சிறு நகரத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் முதுகலைஆசிரியர்

“சுஜி அம்மாகிட்ட சொல்ல உனக்கு என்ன பிரச்சனை? எங்க அம்மா என்னை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைச்சாங்க தெரியுமா?” என்றான்.

“அப்பா அம்மா வந்தவுடன் டீ வைக்கும்போதே சொல்லிட்டாங்க, “ என்று யோகன் ஆரம்பிக்க “டேய் என்ன உங்க அம்மா உனக்கும் சொல்லிக் குடுத்துட்டாளா என் பேச்சை கேட்காதன்னு” என கத்தினார் சுசிலா.

சுஜி எதுவும் பேசாமல் தானும் தயாராகி, தன் பிள்ளைகளையும் தயார் செய்தாள்.

நால்வரும் காரில் ஏற செல்ல “ஜெய் உன் சித்திக்கிட்ட குழந்தையை பார்க்க எல்லாரும் எங்க கார்ல போலாமுன்னு சொல்லிட்டேன். கிளம்பி இருக்கவும் சொல்லிட்டேன். நீங்க சீக்கிரம் வந்துருங்க. இவங்க மூணுபேரையயும் வீட்ல விட்டுட்டு                   நாம போய் பாத்துட்டு வரலாம். “என்றார்.

ஜெய் திரும்பி மனைவியை பார்க்க அவள் காது கேளாததுபோல் கவியின் பூவை சரி செய்து கொண்டிருந்தாள்.

“அம்மா இப்பவே மணி ஆறு. நாங்க போனவுடன் எப்படி வர முடியும்? சுஜி ஸ்கூல் மேம் வீட்டு பங்ஷன். குழந்தையை பார்க்க வெள்ளிக்கிழமை சாயங்காலம் அல்லது சனிக்கிழமை போலாம். சுஜியும் வருவா. நான் சித்திக்கிட்ட பேசிக்கிறேன் விடுங்க” என்றான் ஜெய்.

“இன்னைக்கிதான் புதன்கிழமை.  சனிக்கிழமை வர இன்னும் மூணு நாள் இருக்கு. எல்லாரும் வந்து பாத்துட்டு போன பின்னாடி நாம போனா நல்லாவா இருக்கும். அரை மணி நேரம் போதாதா விருந்துல சாப்பிட்டு வர? அவங்க என்ன நம்ம ஜாதியா சனமா? ஒரேடியா அவ சொல்லறதுக்கு எல்லாம் தலையை ஆட்டாதடா “ என்றார் சுசிலா.

“சரிமா. நீங்க கிளம்புங்க. நான் இவங்கள மண்டபத்துல விட்டுட்டு வரேன். நாம போய் குழந்தையை பாத்துட்டு வந்து இவங்கள போய் கூட்டிட்டு வரேன் “            என்றான் ஜெய்.

“இவள விட்டுட்டு வந்தா நம்ம கூட வர நம்ம சொந்தகாரங்களுக்கு யார் சமைச்சி போடுவா? அதனால நீ இவங்க மூணு பேரையும் அரை மணி நேரத்துல கூட்டிட்டை வந்துடு” என்றார் சுசிலா.

இப்போதும் ஜெய் மனைவியை பார்த்தான். அவளோ இலக்கின்றி எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ சரியில்லை, புரிந்தது. ஆனால் என்ன? மகன், மகளை பார்த்தான். இருவரும் சுஜியின் கைகளை ஆளுக்கொன்றாய்        இறுக பற்றி தலை குனிந்திருந்தனர்.

“அம்மா இன்னைக்கு கண்டிப்பாக   போக முடியாது. குழந்தையை அவங்க வீட்டுல போய் பார்த்துட்டு வந்திடலாம். ராணி சித்திக்கிட்ட நான் பேசிக்கிறேன். இப்போ நாங்க கிளம்பறோம். நீங்க உள்ள போய் கதவை நல்லா தாழ் போட்டுக்கங்க’              என்றான் ஜெய்.                                                                               “க்கும் இது எனக்கு தெரியாது பாரு… இங்க வந்து இருக்கிறதுக்கு நல்ல மரியாதை கிடைச்சது எனக்கு “என்று புலம்பியபடி         கதவை தாழிட்டு உள்ளே சென்றார்.

காரில் “கவிமா என்ன மா பிரச்சனை? “ மகளையும், மகனையும் வினவ, கவி கண்களில் கண்ணீருடன் “ அப்பா எங்க ஸ்கூல்ல ஹாஸ்டல் இருக்கு நாங்க மூணு பேரும் அங்க போயிடறோம். நீங்க உங்க அம்மா கூட இருங்க நாங்க எங்க அம்மா கூட இருந்துக்கிறோம் அம்மா எங்க போனாலும் நானும் இல்ல இல்ல நாங்களும் போறோம். ஸ்கூல் லீவ் விடற வரை அம்மாவும் நாங்களும் இங்க இருந்துக்கவா பா? ப்ளீஸ் பா” என்றாள்.

யோகனோ “அப்பா நாம இருக்குற  வீடு யாரு கட்டினாங்க?  நீங்க மட்டுமா? இல்லை நீங்களும் அம்மாவுமா? அது எங்க வீடு இல்லையா?  காலையில நீங்க கிளம்பிப் போன உடனே தாத்தாவும்   பாட்டியும் அம்மாகிட்ட ஒரே சண்டை “என்ன சமைச்சி வச்சிருக்க, வாயில வைக்க முடியல. கீதா கேட்டா கேட்டத சுடச்சுட அருமையா சமைச்சி தருவா, இங்க மரியாதையே இல்ல, இன்னைக்கி என்ன சமைக்கன்னு கேட்டா கொறஞ்சா  போய்டுவ, வேலக்கி போற திமிரு இன்னைக்கு என் பையன் வரட்டும் உன்னை உங்க அப்பன் வீட்டுக்கு  தெரத்தி விடல என் பேரு சுசிலா இல்லை”ன்னு சத்தம் போட்டாங்க.

“எங்க அம்மா சத்தம் போட்டாங்க, உங்க அம்மா என்னடா சொன்னாங்க? என்றான் ஜெய். “அம்மா போசவே இல்லப்பா. காலையில நாங்க யாருமே சாப்பிடலப்பா. லஞ்ச் மட்டும் எடுத்துட்டு கிளம்பிட்டோம்”. என்ற யோகன் மேலும் ஏதோ சொல்ல வர சுஜி வேகமாக அவன் கையை பற்றினாள். அவன் அமைதியானான்.

“ஏன் கவி என்கிட்ட கேட்ட கேள்வியை அம்மாகிட்ட கேட்டியா? “” கேட்டேன்பா அம்மா பாட்டி  சுஜிமா மேல இருக்க கோவத்துல புரியாம பேசிட்டாங்க. நைட் நான் இதபத்தி சொல்றேன்னு சொல்லிட்டு ஸ்கூல்ல விட்டுட்டு போயிட்டாங்க, “ என்றாள் கவி.  இரவு பத்து மணியாகியது   வீடு  வரும் போது. வந்ததும் உடை மாற்றி சமையலறை வர வைத்தது வைத்தபடியே இருந்தது.. மாவை வெளியே எடுத்து வைத்து  வேகவேகமாக சாம்பார், காரச் சட்னி, தேங்காய் சட்னி செய்து தோசை               ஊற்றினாள் சுஜி.

தன் அப்பா, அம்மாவை சாப்பிட அழைக்க ஜெய்   அவர்களின் அறைக்கு சென்றான். சுசிலா வர முடியாது என்க, பரமசிவம் நான் கூட்டிட்டு வரேன். நீ போய் பசங்க ஹோம்வொர்க் பாரு என்றார். “இப்போ நீ பேசினா யோகன், கவி ரெண்டு பேரும் நடந்தத ஜெய்கிட்ட சொன்னா பிரச்சனை தான். நீ நாளைக்கு மதியம் ஜெய்யை வீட்டுக்கு வர சொல்லி பொறுமையா பொண்டாட்டிய எப்படி எங்க வைக்கனுமுன்னு சொல்லி கொடு. இப்ப அமைதியா வந்து சாப்பிடு. “என்றார்.

அவர்கள் டைனிங் டேபிளில் வந்தமர சுஜி மௌனமாக இருவர் தட்டிளும் சூடான தோசைகளை ஒவ்வொன்றாக வைக்க ஜெய் சாம்பார், சட்னிகளை ஊற்றினான்.

இருவரும் அமைதியாக சாப்பிட ஜெய் “அப்பா இன்னும் ஒரு தோசை வைக்க சொல்லட்டுமாப்பா? நாலு மெலிசான தோசையில எப்படி வயிறு நிறையும்? ஏங்கப்பா குழம்பு நல்லா இல்லையா? என்க வாரிசுகள் இரண்டும் அப்பனை முறைத்தன.

“அம்மா எனக்கு ஒரு சினன்ன பேப்பர் ரோஸ்ட் பாப்பாவுக்கு ஆனியன் ரோஸ்ட் போடுங்க. ஐ லவ் யுவர் சட்னி. இட்ஸ் ஸோ யம்மி” என்றான் யோகன்.

“நல்லா சாப்பிட்டாதான் நல்லா இருக்க முடியும்” என்று ஜெய் கூற, “

“ நாங்க எப்படி இருந்தா இனிமேல் என்ன? வீடு போ போங்குது, காடு வா வாங்குது. இன்னைக்கு வரேன்னு சொல்லி வரலன்னு அவங்க எங்கள கேவலமா பேசியிருப்பாங்க. இப்போ இந்த சோறா முக்கியம் “ என்று நொடித்த சுசிலா

“கண்டவங்க வீட்டு கல்யாணத்துல மினுக்கிக்கிட்டு குடும்பமா போய் கும்மாளம் அடிச்சிட்டு வரீங்க. இத நா கேட்டா மூஞ்ச தூக்கிகிட்டு பேசாம இருக்கா. இதை எல்லாம் நீ  கேக்காத. எங்களையே குறை சொல்லு “என்று முகத்தை திருப்பினார் சுசிலா.

ஜெய் அம்மா பிள்ளையா? பொண்டாட்டி தாசனா?      வரும் நாட்களில் வாங்க கண்டுபிடிக்கலாம்.