காலையில் எழுந்தவனுக்கு மனம் அவ்வளவு நிம்மதியா இருந்தது,ஏதோ ஒன்று அவளிடம் மறைக்கிறோம் என்று வேதனையும் கொடுத்தது அவளிடம் அனைத்தையும் சொல்லி தான் ஆகணும் என்று முடிவு எடுத்தவன்..
அவன் கீழே சென்று அவளுக்கான உணவை தயாரித்தவன்,அவளுக்காக காத்திருந்தான் அவனை வெகு நேரம் காக்க வைக்கவில்லை உடனே அவளும் வந்து விட்டாள்..
“GOODmorning பாவா” என்று அழகாக சிரித்து கொண்டே இறங்கினாள்..அந்த பச்சை நிற சுடிதார் அவளுக்கு அவ்வளவு பாந்தமாக அமைந்தது..அதிலும் அவள் நெற்றியில் வைத்த அந்த குங்குமம் அவ்வளவு அழகாக இருந்தது அவளுக்கு..
You LOOK SO PRETTY anjuu!
அவ்னா பாவா(ஆமா வா என்றாள்)..சிறு வெட்கம் அவளின் முகத்தில்
மேடம் எப்போ தெலுங்கு கத்துகிட்டிங்க என்றான்…
ஹைதராபாத்தில் இருந்து வந்த நீங்க இந்த அளவுக்கு தமிழ் பேசும் போது, நான் கொஞ்சமே கொஞ்சம் தெலுங்கு பேச கூடாத என்ன என்றாள் ..
அதை அமோதித்தவன் சரிங்க madam என்றான்..அவளுக்கு அவனே உணவை ஊட்டிவிட்டன்..
“சரிங்க பாவா ஏதோ சொல்லனும்ன்னு நெனைக்கிறிங்க என்ன அது சொல்லுங்க என்றாள் அவனோ, அவளை ஆச்சர்யமாக பார்த்தான்..”
சரி என்றவன்..நம்ம எப்படி மீட் பன்னோம்ன்ன்னு உனக்கு நியாபகம் இருக்கா என்றான்.
மறக்க முடியுமா என்றாள்..”மோதலில் தான் காதல்ன்னு சொல்லுவாங்க அதை நம்ம விஷயத்துல தான் பார்த்தேன் என்றாள்..”
ஐந்து வருடத்திற்கு முன்பு ,,
Anjuu எழுந்திரிடி! அவளின் தாய் கத்தி கொண்டு இருந்தார் இவளோ கேட்டும் கேட்காத மாறி படுத்தே இருந்தாள் அவள் அப்படி ஒரு கனவில் இருந்தாள்,சரியாக அவள் தாய் அவளின் அறைக்கு வரும்போது( இன்னும் கொஞ்சம் தான் பக்கத்துல வந்துட்டாங்க)என்று உளறி கொண்டு இருந்தாள்..
அவளின் தாய் அவளின் தலையில் ஒரு கொட்டு வைத்து எழுப்பி விட்டார்..என்னடி ஒலரிகிட்டு இருக்க என்றார்..
போங்க மா சரியான நேரத்துல வந்து எழுப்பிவிட்டிங்க!
“ஏன் ஹீரோவ காணோம் இன்னும் ஒரு ஐந்து நிமிஷத்துல அவன் ஏன் பக்கம் வந்துருப்பான் நீங்க வந்து இப்படி பண்ணிடிங்க என்று சலித்தாள்..”
உங்க அப்பாகிட்ட சொல்லி உனக்கு முதல மாப்பிள்ளை பக்க சொல்லணும் போல என்றார்..
WOW அம்மா அதை முதலில் பண்ணுங்க என்று அவரின் கன்னத்தில் முத்தமிட்டு எழுந்து குளியல் அறைக்கு ஓடிபோனாள்..
“BRUSH கூட பண்ணாம இப்படி பண்ணாதடி என்று சலித்தவர் சரியான சேட்டை காரியா இருக்கா என்ன தான் செய்வதோ என்று பொலம்பி கொண்டே போனார்.. “
ஸ்ரீராம்-சுமதி இருவருக்கும் திருமணம் ஆகி எட்டு வருடத்திற்கு பிறகு பிறந்த அவர்களின் செல்ல மகள் ..அவள் பிறந்த பிறகே இவர்களின் தொழில் கூட உச்சிக்கு சென்றது என்று கூட சொல்லாம் ..அதனால் அவள் எதை செய்தாலும் ரசிப்பார்கள்,
இவள் மட்டும் 6 ஸ்கூல் மாற்றி விட்டிருந்தனர்.. அதுவுமே இவர்களின் பண பலத்தினால் தான் எந்த பள்ளி சென்றாலும் இவளை பற்றி கம்ப்ளைன்ட் செய்யாதவர்கள் யாரும் இல்லை அவ்வளவு சேட்டை செய்வாள்..
இதை எல்லாம் நினைத்து பார்த்தவர்கள்,அப்படி ஒரு சிரிப்பு சரி கல்லூரி சென்றுவிட்டால் சரியாகி விடும் என்று நினைத்தார்கள்
அங்கே தான் அவளுக்கு நண்பர்கள் அதிகம்,அவளின் நல்ல நேரமோ என்னவோ அவளுக்கு அனைவரும் உடனே CLOSE ஆகிவிட்டார்கள்..அதும் இவளை போலவே அனைவரும் சேட்டையில் சிறந்தவர்கள் என்றாள் மிகையில்லை..
இவளின் GANG பற்றி கூறத்தான் வேண்டும் இவள்,சூர்யா,அம்பிகா, இவங்க மூன்று பேரையும் “முப்பெருந்தேவி” என்றே அழைக்க வேண்டும்..
பிரின்சிபால் ரூமிற்கு அவரை விட இவர்கள் மூவரும் தான் அதிகம் சென்று இருப்பார்கள்..படிப்பில் இவர்களை மிஞ்சி விட யாரும் இல்லை அதைப் போல் சேட்டயிலும் இவர்களை மிஞ்ச யாரும் கிடையாது..
இவர்களின் தொல்லையினால் வேற PRINCIPAL போட்டு விட்டார்கள் இல்லை இல்லை அவரே ராஜினாமா செய்து விட்டார் என்று தான் கூற வேண்டும்….
இவர்கள் படித்த படிப்பு civil engineering FINAL YEARபடித்துகொண்டு இருக்கிறார்கள் இதில் இவர்கள் மூவரும் வீட்டில் இருந்து தான் வந்து கொண்டு இருந்தார்கள் ,இனி HOSTEL சேர போகிறார்கள் ஹோச்டேல் தான் என்னவாக போகின்றதோ??
இவங்க மூவரும் ஹோச்டேல் வர என்ன காரணம் என்றாள்,அஞ்சலி தான் கடைசி வருடம் JOLLYஆக இருக்கணும் அதனால HOSTEL போயிறலாம் நம்ம இஷ்டதுக்கு இருப்போம் ஐடியா குடுத்தாள் அதை இருவரும் சரி என்று விட்டார்கள்..
சூரியாவுக்கு ஒரே மன நிம்மதி வீட்டில் இருந்தாள் போன் பேச முடியாது அவளின் ஆளோடு ,
“இவளுக்கோ அம்பிகாவிற்கோ love எல்லாம் கிடையாது ஆனா அப்படி சொல்ல கூடாது ஆள இப்ப தான் தேடிக்கொண்டே இருகிறார்கள்..”
இருந்தாலும் தாங்கள் MORATTUSINGLES என்று பெருமையாக கூறி கொள்வார்கள்..
இவர்கள் தனி தனியாக இருந்தாள் கண்டிப்பாக ஆள் கிடைச்சிருக்கும் ஆனால் மூவரும் சேர்ந்ததே சுத்துவதால் இவர்களை பார்த்தாலே ஆண்கள் தெறித்து ஓடுவார்கள்..
அதை மீறியும் ஒருவன் அஞ்சலியிடம் காதல் சொல்ல வந்தவன், ஒரு லெட்டரை அம்பிகாவிடம் கொடுத்து அதை அஞ்சலியிடம் கொடு என்று கொடுக்க,
அது என்ன நீ அவளுக்கு மட்டும் கொடுக்குற எங்களுக்குலாம் யாரு குடுபாங்க என்று அவனை கலாய்க்க அவன் தெறித்து ஒடியே விட்டான்..இதில் கடவுள் புண்ணியத்தில் சூரியாவுக்கு ஸ்கூல் படிக்கும்போதே காதல் மலர்ந்து இருந்தது..
அவனும் இதே கல்லூரியே ஆனாலும் ஒரு முறை கூட இந்த ரெண்டு கொரங்கும் பார்க்கவிடாதுங்க , ஏன் ஒரு போன் பேசக்கூட விடாதுங்க, அவளும் அதற்காக கோபித்துக்கொள்ள மாட்டாள் அவளுக்கு இந்த ரெண்டு கொரங்குமே போதுமானது..
“இதில் மூவருமே ஆடும் பரத நாட்டியம் அனைவரையும் ஆவென பார்க்க வைக்கும்.”.
அவர்களின் முகத்திற்கும் செய்யும் வேலைக்கும் சம்மந்தமே இருக்காது…அனைத்து CBCID வேலைகளையும் பார்ப்பார்கள்..GOSSIP அடிப்பதில் இவர்களை மிஞ்சி விட முடியாது..
அஞ்சு இங்க பாரு! HOSTEL போயிட்டு ஒழுங்கா இருக்கணும் சரியா உன் கூட ரெண்டு இருக்குமே அதுங்க கூட சேர்ந்துகிட்டு ஆட்டம் போடா கூடாது சரியா உன் விருப்பத்துக்காக தான் அனுப்பியே வைக்கிறோம் சரியா என்றார் சுமதி..
அம்மா போதுமா காலையிலே ஏன் இவ்வளவு போர் அடிக்கிறிங்க என்றாள்..நான் இல்லாம நீங்க எப்படிமா இருப்பீங்க என்று பொய்யாக மோகத்தை சோகமா வைத்துக்கொண்டாள்..
அடியே மாமியாரே இவ்வளவு நடிப்புலாம் வேண்டாம் நீ கெளம்பு என்றனர்..அவளை நல்லபடியாக HOSTEL சேர்த்து விட்டனர்..
அவளின் மேல் இருந்த நம்பிக்கையில் சேர்த்து விட்டனர் ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறது அல்லவா ஏன்டா இவள அங்க அனுப்பி வெச்சோம்ன்னு பீல் பண்ற நிலைமை அவர்களுக்கு வரும் என்று அவர்களுக்கு தெரியுமா என்ன?அது அவளின் விதி..
மூவரும் மாலை கல்லூரியை முடித்துக்கொண்டு HOSTEL வந்து அவர்களுடைய திங்க்ஸ் அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தனர்..
அனைத்தையும் முடித்ததும் சிறிது உறங்கினர்,உறங்கி எழுந்தபோது மணி பத்து மணி ஆகிவிட்டது..அஞ்சலி தான் முதலில் எழுந்தால் எழுந்து மணி பார்த்தால்,அடியே எழுந்திரிங்கடி மணிய பாருங்க..அப்போது தான் இருவரும் எழுந்து MESSக்கு போவோமா என்றனர்..
ஹே வெண்ணைங்களா !!!நல்ல முழிச்சி பாருங்க என்றாள்..அய்யோ டைம் ஆகிருச்சிடி அவ்வளவு தான் மெஸ் CLOSE பன்னிருபாங்க என்றாள் ..
ஹே இன்னைக்குன்னு பார்த்து ரொம்ப பசிக்குது டி என்னடி இப்போ பண்றது என்றாள் அம்பிகா..
மூவரும் யோசித்து வேற வழி இல்லைடி செவரு ஏறி குதிச்சு வெளிய போயிட்டு சாப்பிட்டு வருவோமா என்றாள் anjuu …
ஹே வாவ் செம்ம ADVENTURES என்று இருவரும் அதை ஆமோதித்தனர்..போனை எடுத்துகொண்டு மூவரும் ரூமை விட்டு வெளியே வந்து ஒரு ஸ்டூலை எடுத்துபோட்டு பார்த்தனர் எட்டவில்லை வேற வழி இல்லை என்று ஏணி எடுத்து போட்டு அதில் ஏறி மூவரும் சத்தம் போடாமல் வெளியே வந்து விட்டனர்..
ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்றார்கள்..அங்கு சென்றதும்,அனைத்து வகையான சாப்படுகளையும் ஆர்டர் செய்து வெட்டு வெட்டு என்று வெட்டினர்..சாப்பிட்டு கொண்டு இருக்கும்போதே அங்கே ஒரு பெண்ணும் ஆணும் ஒட்டிக்கொண்டு வந்தனர்..அஞ்சு சாப்பிடுவதில் ஆர்வமாக இருந்ததால் அவனை கவனிக்கவில்லை ஆனால் இவர்கள் இருவரும் கவனித்து விட்டனர்..
ஒருவேளை கவனித்து இருந்தாள் வருங்காலத்தில் இந்த வேதனையில் இருந்து தப்பித்து இருப்பாளோ என்னவோ??
கெளம்பும்போதும் ஒரு பார்சலை கட்டிக்கொண்டு கிளம்பி விட்டனர்..வந்த மாறியே திரும்பவும் ரூமிற்கு சென்று விட்டனர்..
வந்ததுமே சூரியா தான் ஆரம்பித்தாள் அஞ்சு அந்த ஹோட்டல்ல ஒரு HANDSOMe பாய் ஒருத்தன் ஒரு பொண்ணுகூட வந்தான்டி நீ பார்க்கலையா என்றாள்..
“ஹே அம்பி நீயாவது பாத்தியா ,ஹ ஹ ஹா என்றவள் என் கண்ணுல இருந்து ஒருத்தன் தப்பிக்க முடியுமா என்ன என்றாள்..”
ANJU தான் அதை பத்தி ஏதோ யோசித்துக்கொண்டே இருந்தாள் நம்ம ஏன் எவனையோ பத்தி யோசிக்கணும் என்றவள் திரும்பவும் மூவரும் அந்த பார்சலை காலிசெய்து விட்டு மூவரும் உறங்கினர்..
அடுத்த நாள் கல்லூரியில் ஒரு CULTURALFUNCTION நடந்தது அதனால அனைவரும் SAREE யில் தான் வந்தனர்..மூவரும் அதிலையில் இருந்து கெளம்பிகொண்டே இருந்தனர்..
அஞ்சு தான் முதலில் கிளம்பினாள் பேபி பிங்க் நிற SAREE அணிந்து இருந்தாள் அது அவளின் நிறத்துக்கு அவளவு அழகா இருந்தது கழுத்தில் ஒரு சிறு ஹார்ட் செயின் அணிந்து இருந்தாள் கையில் பிங்க் நிற வளையல்,அவளின் நீண்ட கூந்தலை விரித்து விட்டு ஒரு கிளிப்பில் அடக்கிருந்தாள் அவளின் முடியின் நீளத்துக்கு மல்லிகை பூ வைத்து இருந்தாள்..
“அம்பிகா தான் முதலில் கூறினால் அஞ்சு ரொம்ப அழகா இருக்கடி,பேசாம என்னையே கல்யாணம் பண்ணிகோயேன் என்று சிரித்தால்,மூவருக்குமே ஒரே சிரிப்பு..”
சூரியா கருப்பு நிற புடவையும் ,அம்பிகா பச்சை நிற புடவையும் அணிந்து இருந்தாள்..எல்லோருமே ஒருவழியாக கெளம்பி FUNCTION வந்து சேர்ந்தனர்..
இன்னைக்கு யாருடி GUEST ஆக வராங்க என்றாள் சூரியா ,தெரிலடி ஆனா ஏதோ பெரியCONSTRUCTION கம்பனி OWNERன்னு சொன்னாங்கடி என்றாள்..
இவர்கள் எதிர்பார்த்ததை விட விழா மிகவும் சிறப்பாக நடந்து கொண்டு இருந்தது..
சரியாக GUEST வருவதற்கும்,இவர்களின் மூவரின் பரத நாட்டியமும் அழகாக அரங்கேரியது..
வந்த GUEST ஏதோ வரணுமேன்னு தான் வந்தான்.ஏனென்றால் அவனின் வேதனைகள் அப்படி பட்டது..வந்தவன் போனையே பார்த்துகொண்டு இருந்தான்..திடீர் என்று மேடையை நோக்கினான்..அங்கே அவளை கண்டவனால் கண்களை அவளை விட்டு எடுக்க முடியவில்லை,
“இதயம் இதயம் எரிகின்றதே..
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே..
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் …
என்னுயிரும் கரைவதென்ன..
இருவரும் ஒருமுறை காண்போமா..
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா!!..”
என்ற பாடலின் வரிகளை கேட்டவனுக்கு என்னோவோ போல் இருந்தது அதும் அவளின் முகம் காட்டிய நலினங்களில் இருந்து அவனால் பார்வையை திருப்பவே முடியவில்லை..
ஒருவராக தன்னை சமாளித்தவன் உடனே அங்கே இருந்து அகன்று விட்டான்..கடைசியாக கெளம்பும் பொது அஞ்சுவை ஒரு ஏக்கத்துடன் பார்த்து சென்றான்..
அவன் வீட்டிற்கு சென்றும் அஞ்சுவின் முகம் அவன் மனதில் ஆழமாக பதிந்தது அதை அவனால் தடுக்க முடியவில்லை,அவன் அதை தடுக்க முயலவும்வில்லை..
அவன் மனம் அவளை எப்படியாவது தன்னவளாக்க வேண்டும் வெறி அவனுக்குள் கனன்றது..என்ன கண்ணுடா சாமி அவளுக்கு எவ்வளவு பொண்ணுங்க கூட இருந்திருக்கேன்.. ஆனால் ஒருத்தி கூட தன்னை இப்படி ஏங்க வைக்க வில்லை ஆனால், இவளோ ஒரு பார்வையிலே சாய்த்து விட்டாள்..
இவளை ஏன்டா பார்தோம்ன்னு ஒரு நாள் பீல் பண்ற நிலைமை வரும்ன்னு வருங்காலம் அவனுக்கு உணர்த்த தான் போகிறது…