காலையில் எழுந்தவனுக்கு ஏதோ வானத்தை வசபடுத்திய மாறி ஒரு நிம்மதி,தன்மேல் உறங்கும் மனையாளின் முகத்தை பார்த்தவனுக்கு,இந்த முகத்துக்காக என்ன வேணாலும் பண்ணலாம் என்றே தோன்றியது..
அவளை தொந்தரவு செய்யாமல் எழுந்தவன் தன்னுடைய excercise செய்ய கிளம்பி விட்டான் அதை முடித்துவிட்டு வரும்போதும் அவளுக்கு அவ்வளவு சோர்வாக இருந்தது போல அவள் எழுவே இல்லை..
அவளை எழுப்பிவிட்டும் சென்றான் அப்போதும் எழ வில்லை சரி என்று, குளித்துவிட்டு அலுவலத்திற்கு செல்ல ரெடி ஆகினான்..அப்போது தான் எழுந்தாள் அவளின் அருகில் வந்தவன் அவளின் நெற்றியல் இதழ் பதித்து goodmorning அம்லு என்றான்..
அப்போதுதான் அவள் சுயநினைவிற்கு வந்தாள் தன்னை பார்த்தவளுக்கு வெட்கமாக வந்தது..
அவன் சென்றதும்,குளித்துவிட்டு சமையல் செய்து சாப்பிட்டு விட்டு,அம்மாவிற்கு அழைத்து பேசிவிட்டு தன்னுடைய வேலையை laptopள் கவனித்தாள்..
அவன் சாப்பிடாதது நியாபகம் வந்தவளாக அவனுக்கு அழைத்து பேசினாள்,அவன் நான் “சாப்பிட்டு விட்டேன்” என்று கூறிய பிறகு அவளது வேலையை தொடர்ந்தாள்..அப்போது அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது..மதியம் ரெடியாக இரு வெளிய சாப்பிட போகலாம் என்றான்..
அவள் வேலையை முடித்துக்கொண்டு,அவனுக்காக ரெடியாகி காத்திருந்தாள்..அவன் வந்ததும் அவளுடைய உடையை பார்த்தவன்,நன்றாக தான் இருக்கு என்று யோசித்தவன் அவளை கூட்டிகொண்டு பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு கூட்டி சென்றான் அவன் முகம் சரி இல்லையோ என்று அவளுக்கு தோன்ற, அதை அவனிடம் அவள் கேட்டும் விட்டாள்..
என்ன ஆச்சு ஒருமாரி டென்ஷன் ஆக இருக்கீங்க,அவன் அப்படி ஏதும் இல்லை என்றுவிட்டான்..
ஏதும் இல்லையா என்று அவள் கேட்டதும்,அவனுக்கு முகத்தில் சிறு முறுவல் தோன்றி பிறகு தான் நார்மலாக பேசினான்..
இருவரும் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டே பேசினார்கள்..
“அஞ்சு என்ன நடந்தாலும் என்னை விட்டு போக மாட்ட தான என்றான்..”
அவளுக்கு தான் என்னவோ போல் இருந்தது..என்ன தான் ஆச்சு சொல்லுங்க என்று கேட்கும்போது,
ஹே anjuu!!! என்று குரல் கேட்கும்போதே புரிந்துவிட்டது அவளோட அப்பா அவளை பார்த்துவிட்டார்..அதன் பிறகு அவளால் நிலையாக இருக்க முடியவில்லை..
அப்பா என்றாள்!!அவள் அப்படி கூறும்போதே அவளுக்கு கன்னத்தில் ஒரு அடி விழுந்தது..இதுதான் உன்னோடு special மீட்டிங்கா என்று ஒருமாரி கேட்டார்..
அதில் இவனுக்கு கோவம் அதிகமாக வந்தது..”வார்த்தைய பாத்து பேசுங்க என்றான்”..
ஹே நீ யாரு டா என்ன பத்தி பேச,”உங்க ரெண்டு பேரையும் பிரிக்க என்னால முடியாதுன்னு நெனச்சியா!” என்றார்..
“உன்னால முடிஞ்சா இந்தா டைம் பண்ணி பாரு அதுக்கு அப்பறம் உன் பொண்ணு பின்னாடி நான் வரவே மாட்டேன் என்று கூரியே விட்டான்..”
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை..
என்ன தான் நடக்குதுன்னு சொல்லுங்க என்றாள்..
“யாரும் ஏதும் சொல்லாமல் “வா போகலாம்” என்று இருவரும் கூறினார்கள்”..
அவளுக்கு மனம் மிகவும் குழப்பக தான் போனது.மனம் தைரியம் பெற்றவளாக “அப்பா” நான் இவர கல்யாணம் பண்ணிகிட்டேன் ,இப்போ இவருகூட தான் இருக்கேன் என்றாள்..
“அவளின் தந்தையோ அது எல்லாம் எனக்கு ஐந்து வருஷத்துக்கு முன்னவே தெரியும் என்றார்..”
“இப்போ அதலாம் நான் கேட்கல,அவன் கட்டின தாலிய கழட்டி வீசிட்டு வா என்றார்”.. எங்க கூட வா அடுத்த முகூர்த்தத்தில் உனக்கு கல்யாணம் ரெடி பண்ணிருக்கேன் என்று கூறியே விட்டார்..
அவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை..என்ன தான் சொல்றிங்க ஒழுங்கா சொல்லுங்க..
“நீ இப்படி அறிவு இல்லாம இருக்கிரத்தலா தான் உன்னை அவன் நல்லா ஏமாத்திட்டு இருக்கான்..”
இது ஏதும் தெரியாம அவன் பின்னாடி ஈன்னுட்டு போய்டுற என்று அசிங்கமாக கூறினார்..
அவளின் அப்பாவின் முகத்தை உடைக்கும் அளவுக்கு அவனுக்கு கோவத்தில் முகம் சிவந்து விட்டது..நல்ல வேலையாக இதை எல்லாம் யாரும் பார்க்கா வண்ணம் ஓரமாக table பூக் செய்து இருந்தான்..நாம் தலையிட கூடாது அவளுக்கு அனைத்து உண்மையும் அவளின் அப்பாவின் மூலமே தெரியட்டும் என்று அமைதியா இருந்தான்..
உன்ன நான் இவன்கிட்ட இருந்து ஐந்து வருஷத்துக்கு முன்னாடியே நான் தான் பிரிச்சேன் ..இவன் ஒரு “அநாதை நாய்”என்று கூறியதுமே அவனுக்கு கோவத்தில் அடிக்கலாம் தோன்ற கை ஓங்க அதற்க்கு முன்பு அவலோ அவங்க அப்பாவின் சட்டயை பிடித்திருந்தாள்..
உனக்கு எவ்வாளவு தைரியம் இருந்த என்கிட்டேயே இப்படி சொல்லுவ என்று கத்தினாள்..
அவன் இப்போது அமைதியா உட்கார்ந்து கால் மேல் கால் போட்டுகொண்டு அவளின் அப்பாவை கெத்தாக பார்த்தான்..
அதை பார்த்ததும் அவளின் தந்தைக்கு வெறியாக ஆனது திரும்பவும் தன் மகளை ஓங்கி “இரண்டு அரை விட்டிருந்தார்” அதை பார்த்ததும் அவன் எழுந்த வேகம் அவரை அடித்து விடுவானோ என்று இடையில் வந்தாள்..
நீங்க கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க என்றாள் நான் பேசிக்கிறேன் ..
அப்பா உங்களுக்கு என்ன தான் பிரச்சனை,நீங்க ஏன் இத ஒத்துக்க மாற்றிங்க..
இங்க பாரு anjuu காசு பணம் முக்கியம் தான் அதை மறுக்க வில்லை ஆனா இவனுக்கு பல பொண்ணுங்களுக்கும் தொடர்பு உண்டு ,நல்ல கேரக்டர் கிடையாது மரியாதை என்றால் என்னவென்றே தெரியாது..இது ஏதும் இல்லாத இவனை நீ ஏன் கல்யாணம் பண்ணிகிட்ட அதும் திருட்டு கல்யாணம் பண்ணியிருக்க இத நான் எப்படி ஏத்துப்பேன்..
ஆனா இப்போ எல்லாம் அந்த மாறி இல்லைப்பா..
அது எல்லாம் ஏத்துக்க முடியாது ஹைதராபாத்தில் இவன் என்னை வேலைலாம் பார்த்தானோ என்று ஒரு மாறி கேவலமாக பார்த்தார்
உண்மையும் அதுவே இவன் வாழ்க்கை அந்த மாறி தான்..இவர் ஒரு நாள் அங்கு வேலையாக சென்ற போது இவன் ஒரு பெண்ணோடு லிப்ட்ள் பார்த்த வேலை அப்படி..அதை தான் அவர் இப்படி கூறுகிறார்..
இவள் அப்பா கூறிய அனைத்துமே அவளுக்கு புதிது தான்..இதுவரை அவளுக்கு மறைக்கபட்ட விஷயமும் கூட..
இவனை தயவு செஞ்சு மறந்துட்டு ஏன் கூட வீட்டுக்கு வர வழிய பாரு என்றவர் அவளின் கையை பிடித்து இழுத்து சென்றார் அவன் அவரை தடுக்கவே இல்லை..
அவள் அவனையே பார்த்துக்கொண்டே சென்றாள்,அவன் பார்வை அவள் உயிர்வரை பாதித்தது “போகாத அம்முலு” என்று கெஞ்சுவது போல் தோன்ற அவரின் கையை உதறிவிட்டு அவனிடமே வந்தவள்..
“இப்போ நான் செய்யட்டும் சொல்லுங்க என்றாள்”.
அதை பார்த்தவனுக்கு ஒரு புறம் சிரிப்பு வந்தாலும்,மறுபுறம் குழந்தை போல் தான் தெரிந்தாள்..
சொல்லுங்க என்றாள்..
உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணு anjuu என்றான்..இந்த பதிலை அவளும் எதிர்பார்க்கவில்லை, அவளின் தந்தையுமே இந்த பதிலை எதிர் பார்க்கவில்லை…
அவளோ அவனையே பார்த்துக்கொண்டே இருந்தாள்,அவளால் ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை..தைரியம் வர பெற்றவளாக அவளின் தந்தையிடம் சென்று “உங்களோடு இனி என்னால் வர முடியாது” என்று கூறிவிட்டு அவனிடம் வந்து, வாங்க நம்ம வீட்டுக்கு போலாம் என்று அழுதுகொண்டே கூறினாள்..
அவளின் தந்தையோ இனி நீ என்னோட பொண்ணே இல்லை என்று கூறி விட்டு சென்று விட்டார்…
வீடு வரும் வரை எதுமே பேசவில்லை..அவனிடம் எதும் பேசாமல் ரூமிற்கு சென்று படுத்து கொண்டாள்.அவனுக்குமே என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை…
இவளை இப்படி விட்டுவிட்டு எப்படி அலுவலகத்திற்கு செல்ல முடியும் என்று வொர்க் எல்லாம் போனிலே பேசி முடித்தான்..z
அவளாக எழுந்து வருவதை பார்த்தவன்,
“அஞ்சு COFEE போடட்டுமா என்றான்.”
“அதற்கு அவளோ சொன்ன தான் போடுவிங்களா என்ன” என்று கேட்டாள்.
அவள் கேட்டதை போட்டுகொடுத்தவன்,குடித்துவிட்டு சாமிக்கு விளக்கேற்றி வந்தவள்..இரவுக்கு என்ன டின்னெர் என்று எப்பவும் போல் பேசியவளை பார்த்தவனுக்கு என்னவோ போல் ஆனது..
அவள் வாய்விட்டு கேட்டு இருந்தாள் கூட, அவனுக்கு நன்றாக இருந்துருக்கும் இப்படி இருப்பது தான் அவனுக்கு கோவத்தை கொடுத்தது….
“என்னடி வாழ்க்கை பிச்சை போடுறியா என்றான்..”
அப்படியா!!! என்று கூறிவிட்டு போய்கொண்டே இருந்தாள்..
நான் எவ்வளவு சீரியஸ்யாக இருக்கேன் இவ என்ன ரொம்ப CASUAL ஆக போய்கிட்டே பதில் சொல்றாள் என்ற கோவத்தில் பின்னாலே சென்று,
“என்னடி பேச்சுலாம் ஒரு மாறியா இருக்கு என்ன என்று கேட்டான்..”
“முன்னாடி அஞ்சலி ஸ்ரீராம் இனி அப்படி இல்லை..”
“அஞ்சலி பிரக்ஷ்குமார்” அதனால திமிறா தான் பேசுவேன் என்ன இப்போ என்று பேசியவளை பார்த்தவனுக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை..
நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்,பேசலாமா என்று கேட்டவனை வெட்டவ குத்தவா என்பதை போல் பார்த்தாள்..
அவன் அமைதியாக இருப்பதை பார்த்தவளுக்கு மனம் வேதனையாக இருந்தது..
“பாவா” I நீட் you,வாட் youthinkஅபௌட் இட் என்றவளை இமைக்காமல் பார்த்தான்..
அது இல்லை அஞ்சு ஏதோ கூற வந்தவனை இதழ் முத்தம் மூலமாக சிறை செய்து இருந்தாள்..அவனால் நம்பவே முடியவில்லை..
அஞ்சு குடிச்சிருக்கியா?
அவன் அப்படி கேட்டதும் அவளுக்கு அப்படி ஒரு சிரிப்பு,இது என்னடா வம்பா போச்சு என்றவளை வித்தியாசமாக பார்த்தான்..
உங்களுக்கு என்மேல பீலிங்க்ஸ் இருக்க மாறி எனக்கும் பீலிங்க்ஸ் இருக்கும்..
அது ஏன்டி இப்போ??
நிதானமாக அவனை பார்த்தாள்,உங்களுக்கு என்ன தான் பிரச்சனை அத முதலில் சொல்லுங்க..
நீ எங்கிட்ட ஏதும் கேட்காம இருக்கியே, அதான் இப்போ பிரச்சனை..அவனின் அருகில் வந்தவள் “அவனை தன் மடி தாங்கினாள்”..
உனக்கு என்மேல கோவமே இல்லையா ?
இல்லை என்றாள்..உங்க முன்னாடி வாழ்க்கை எனக்கு தேவை இல்லாத ஒன்று..அத பத்தி நான் கேட்க போறதில்லை..
அப்பறம் ஏன் இவ்வளவு நேரம் அமைதியா இருந்த அதை முதலில் கூறு என்றான்..
என் அப்பா உங்கள அப்படி பேசினதால எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அதான் அமைதியா இருந்தேன்..
அவனுக்குமே அதில் வருத்தம் தான் ஆனாலுமே அதை அவன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
பாவா நீங்க எதை பத்தியுமே யோசிக்காதிங்க எந்த சூழ்நிலை வந்தாலும் “உங்கள விட்டு நான் போகமாட்டேன்”..
உங்கள விட்டு என்னாலையும் இருக்க முடியாது..இந்த ஐந்து வருஷதுள்ள நான் பட்ட கஷ்டம் அதிகம்..
ஒரு குடும்பமா உங்க கூட வாழ ஆசைபடுறேன் இதுல எதும் தப்பு இருக்க மாறி தெரில என்றாள் ..
இந்த பதிலை கேட்டவனுக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது .என்ன பத்தி தெரிஞ்சும் உனக்கு என் மேல கோவம் வரல,இப்பவும் அதே love தான் கொடுக்கிற..நீ ஒரு தேவதை பெண் அமுலு என்று அவளை அணைத்துக்கொண்டு அழுது விட்டான்..
அவன் அழுவதை காண சகிக்காமல் அதெல்லாம் இருக்கட்டும் “எங்க உங்க இன்னொரு பொண்டாட்டி “அவளை வர சொல்லுங்க என்றதும் அவன் “திரு திரு” என்று முழித்தான்..
அவனை பார்த்து செல்லமாக முறைத்தவள்,
அது வந்து anjuu என்று ஓடினான் இவளும் அவனை அடிக்க பின்னாலே ஓடினாள்..அவள் தான் மூச்சு வாங்கி நின்றாள்..
அவளின் அருகில் வந்தவன்,எப்படி கண்டுபிடிச்ச anjuu..இந்த மூஞ்சிய என்ன தவிர வேற யாரும் பார்க்கமாடாங்க..
அவ்வளவு மோசமாவா நான் இருக்கேன்..
ஏன் புருஷன் எவ்வளவு அழகுன்னு எனக்கு மட்டும் தெரிஞ்ச போதும்,நான் மட்டும் ரசிச்ச போதும் என்றவள் அன்னைக்கு ஒரு நாள் நான் காணோம்ன்னு உட்காந்து அழுதிங்கள்ள அப்பவே கண்டுபிடிச்சிட்டேன்..அதும் இல்லாம நீங்களே ஒருவாட்டி சொன்னீங்கள்ள உனக்கான கேள்விக்கு உன்கிட்ட தான் பதில் இருக்குன்னு அப்போவே கண்டுபிடிச்சிட்டேன் என்று கலகலன்னு சிரித்தாள்..
சிரிக்கும் அவளையே பார்த்து இருந்தான்..உன்னை இப்ப என்ன பண்றேன்னு
பாரு என்றவன் அவளை மொத்தமாக அள்ளிக்கொண்டு ரூமிற்கு சென்றான்..