அத்தியாயம் 9:

அவளோ பயத்தில் அவன் பின்னால் ஒளிந்துகொண்டாள் ..

பாவா அம்மா!!!!.

எங்க அத்தையா எங்கடி??

இந்த டைம்ல கூட உங்களால எப்படி காமெடி பண்ண முடியுதுன்னு தான் தெரில.

ஹே anjuu என்னடி இது! எங்ககிட்ட சொல்லாம ஒரு பையன் கூட சுத்திகிட்டு இருக்க,இது தான் உன் மீட்டிங் அஹ??

அவளை வேண்டும் என்றே முன்னாடி இழுத்து விட்டான்..

சொல்லு அஞ்சு யாருடி இவன்? ..

இங்க இவன் கூட என்ன பண்ற கழுத்தை பார்த்தவர் என்ன anjuu இது கல்யாணமே பண்ணிட்டியா ?

அவருக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது..

அத்தை அது வந்து என்று கூற வந்தவனை கை நீட்டி தடுத்தவர் ??

நீ யாருடா? உன்கிட்ட நான் பேசவே விரும்பல இது எங்க குடும்ப பிரச்சனை என்றார்..

அவளுக்கு கோவமே வந்துவிட்டது என் புருஷன என் முன்னாடியே அசிங்கபடுதுற, மாறி பேச நீங்க யாரு ??

இப்ப கல்யாணம் பண்ணவன் உனக்கு அவ்வளவு முக்கியமா போயிட்டான என்ன??

ஆமா!!அதுக்கு என்ன இப்போ..எனக்கு இப்போ ஒன்னும் கல்யாணம் ஆகல ஐந்து வருஷத்துக்கு முன்னாடியே ஆகிவிட்டது ..

அத்தை கேட்டிங்களா உங்க பொண்ணு வாயால !!நான் சொன்ன அப்போ நம்பாம பாத்திங்க, இப்போ என்ன சொல்றிங்க என்றான்..

ஆமா மாப்பிள்ளை இப்போ நம்புறேன் ஏன் பொண்ண இது ??இவ்வளவு வாய் பேசறா  அதும் இவ்வளவு கோவமா வேற பேசறாலே??

தினமும் என் கூட சண்டை போட காரணத்தை தேடி தேடி நான் வரதுக்குள்ள ரெடி பண்ணி,வந்ததும் ஆரமிச்சிருவா அத்தை..இவள சமாதனம் பண்றதுக்குள்ள எனக்கு போதும் போதும்ன்னு ஆகிருது அத்தை.. அப்போ ஏன் நிலமைய யோசிச்சு பாருங்க அத்தை..

“நீங்க ரொம்ப பாவம் மாப்பிள்ளை என்றார்..”

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை ..இங்க என்ன தான் நடக்குது யாராவது சொல்லுங்கலேன்..

நானே சொல்லிடுறேன் அத்தை ..

சொல்லுங்க மாப்பிள்ளை …

உங்க அம்மா கிட்ட சொல்லிட்டு தான், உன்னை நான் நம்ம வீட்டுக்கே கூட்டிட்டே போனேன்…அவங்க கிட்ட எல்லா உண்மையும்  சொல்லிட்டேன் என்று கூலாக கூறினான்…

அவளுக்கு என்ன சொல்வதென்று ஒன்றும் புரியவில்லை…

அவளின் தாய் முகத்தை பார்த்தாள்,அவர் முகத்தில் வேதனையின் சாயல் நன்றாக தெரிந்தது..

அம்மா,என்னை மன்னிச்சிருங்க மா ,சொல்ல கூடாதுன்னு இல்லமா எனக்கு பயமாக இருந்தது.. அதனால தான் இத்தனை வருஷமா சொல்லல என்று தேம்பி அழுதவளை வேதனையுடன் பார்த்தார்..

நான் அந்த அளவுக்கு உன்கிட்ட கடுமையாகவா நடந்துகிட்டேன் உங்கள நெனச்சி இல்லம்மா, அப்பாவ நெனச்சி தான்…

எங்கிட்ட சொல்லிருந்தா அப்போவே உங்கள சமாதானம் பண்ணி மாப்பிள்ளை கூட அனுப்பி வெச்சிருப்பேன்….

உங்களுக்கு அவர பிடிச்சிருக்காமா ??

பிடிக்கலன்னு சொன்னா  என்ன பண்ணுவ anjuu..

அம்மா !!!அவருக்கு நான் வாக்கு குடுத்திருக்கேன் மா இனி ஒருவாட்டி விட்டுட்டு போக மாட்டேன்னு..

அஞ்சு என்று அழுதுவிட்டார் …உன்னை இப்படி பாக்கணும்ன்னு எவ்வளவு நாள் ஆசை தெரியுமா..

நீ கோவிலுக்கு உள்ளே வரும்போதே உங்கள பார்க்க அவ்வளவு அழகா இருந்தது ,வீட்டுக்கு போனதும் ரெண்டு பேருக்கும் சுத்தி தான் போடணும்..

மாப்பிளைய பத்தி நல்ல விசாரிச்சிட்டேன்டா ..அவரு உனக்கு நல்ல பொருத்தம்டா தங்கமான பையன் டா..இன்னொருத்தவனா இருந்தா வேற ஒருத்தி கூட  போயிருப்பான்டா BUT HE IS PURE GEM டா…

அப்போது அவ்வளவு பெருமையாக இருந்தது..

இனியாவது அவருக்கூட நல்ல வாழனும் நீ.. ஆனா அப்பாகிட்ட என்னமா சொல்லுவது அவருகிட்ட எப்படி சொல்றதும்மா??

அதை மாப்பிள்ளை பாத்துகிறேன்னு சொல்லிருக்கார்..

அப்போது தான் போனை பேசி முடித்துவிட்டு வந்தான்..என்ன அத்தை என் பொண்டாட்டிக்கு அட்வைஸ்லாம் பண்ணிடிங்களா..

அதைலாம் நல்ல பன்னிருக்கேன் மாப்பிள்ளை ..”இவ கொஞ்சம் அவ அப்பா மாறி” என்று அவள் அம்மா சொன்னதும், அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு..

நான் நெறைய வாட்டி சொன்னேன் அத்தை உங்க வாயல கேட்கும்போது ஒரே ஆனந்தமா  இருக்கு அத்தை..

இவள் செல்லமாக முறைத்தாள்..

சீக்கிரம் இவ அப்பாகிட்டையும் சொல்லிருங்க மாப்பிள்ளை ,சொன்னதும் ஒரு FUNCTION வெச்சிரலாம் என்றார்..

அதெல்லாம் இருக்கட்டும் அத்தை வீட்டுக்கு வாங்க போலாம் ..மூவரும் வீட்டை நோக்கி சென்றனர்..

அவருக்கு அந்த வீட்டை பார்த்ததுமே அவருக்கு சிறு நிம்மதி..வீட்டுக்கு சென்றதும் அஞ்சு நீ அத்தைக்கு வீட்டை சுத்திக்காட்டு நான் லஞ்ச் ரெடி பண்றேன் என்றான்..

சரி என்றவள்,சுத்தி காட்டிவிட்டு வந்ததும் லஞ்ச் மூவரும் அமர்ந்து சாப்பிட்டனர்..தன் மகளுக்கும் தனக்கும் பார்த்து பார்த்து பரிமாருவதை பார்த்த அந்த தாய் உள்ளம் நிம்மதி அடைந்தது..

உடனே ஒரு போன் கால் அவருக்கு வந்தது,யாரு அத்தை  என் மாமனாறா என்றான் ..

எப்படி மாப்பிள்ளை இப்படி!!!!

அவரே தான் மாப்பிள்ளை நான் கெளம்பிறேன் என்றார்..அவளின் தாய் கெளம்பும்போது அஞ்சுக்கு அழுகை அதிகமா வந்தது …

உன்மேல கோவமா தான் இருக்கு, அஞ்சு இருந்தாலும் இந்த மாறி பையன நாங்கலா தேடினாலும் கிடைச்சிருக்காது என்று தன்   மகளை உச்சி முகர்ந்தார்..

இருவரும் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்…

அவளின் தாய் சென்றதும்,அவர் வாங்கி கொடுத்த அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு சிறு தூக்கத்திற்கு சென்றாள்..அவன் குளித்து முடித்து விட்டு வரும்போது அவள் உறங்கிவிட்டாள்..

தூங்கும் அவளையே வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்தான்..அவள் முகத்தில் அவ்வளவு நிம்மதி..

“உன் முக சந்தோசத்துக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன் அம்லு” என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்..அவனுக்கும் மனம் நிம்மதியாக இருப்பதால் நன்றாக உறங்கி விட்டான்..

அவள் தான் முதலில் மாலை எழுந்தால்,உறங்கும் கணவனை பார்த்தால் அவளை நன்றாக கட்டிக்கொண்டு உறங்கினான்..

இவனை நான் கணவனாக பெற்றது நான் செய்தம் தவம்..எழுந்தவள் திரும்ப அவனையே கட்டிக்கொண்டு மீண்டும் உறக்கத்திர்க்கு சென்றாள்.

முதலில் இவன் தான் எழுந்தான் எழுந்ததும் தன்னவளை பார்த்தான் அவளும் எழுந்து விட்டாள்,எழுந்தும் அவனை எழ விடாமல் அனைத்தே மறுபடியும் படுத்திருந்தாள்.

Madam என்னது இது!!

ஏன் புருஷனை கட்டிபிடிச்ச்சிருக்கேன் தெரிலையா உங்களக்கு என்றாள்

அது சரிங்க madam..

அவனும் அவளை விட முடியாமல் அதே நிலையில் இருந்தான்..

அஞ்சு பசிக்கலையா உனக்கு??

ஆமா பாவா..

அது ஏன்டி உன்னால பசி தாங்க முடியிறதில்லை..

அது ஏன்னு தெரில ஆனா பசி தாங்கிட்ட மாறியும் நியாபகம் இல்லை..

ஆனா நான் நீ என்னை பிரிஞ்சி போனதுக்கு அப்பறம் நெறைய நாள் சாப்பிட்ட நியாபகமே இல்லை..மனசுகுள்ள அவ்வளவு வேதனை ஏன்  தான் உயிரோட இருக்கோம்ன்னு அவ்வளவு வாட்டி தோணிருக்கு..பல நாள் இரவு  உன்னோட அருகாமையை தான் மனசு ஏங்கிச்சு..

இவன் இப்படி வருத்தமாக கூறியதும் அவனை விட்டு  எழுந்து அமர்ந்து கொண்டாள் அவனுக்கு தான் ஏதோபோல் ஆனது..

அஞ்சு நான் ஜஸ்ட் என்னோட பீலிங்க்ஸ் சொன்னேன் அவ்வளோதான்..

“பாவா” என்று அழைத்தவள்,நான் ஒன்னு கேட்கட்டுமா

 கேளு அஞ்சு..

அவன் மடியில் படுத்துகோண்டு, உங்களுக்கு உண்மையாவே என்னை பிடிச்சிருக்கா?

இது என்னடி அசட்டுத்தனமான கேள்வி..பிடிக்கமா தான் என்னோட மடியில படுத்துருக்கியா என்ன..

அதுக்கு இல்ல நான் இவ்வளவு தொந்தரவு  பண்ணியும் ஏன் கூட இருக்கீங்க அதான் கேட்டேன்..

உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க?

“நெறைய பிடிக்கும் அஞ்சு” சொன்ன புரியாது வேணும்னான இரவு சொல்றேன் அப்போ புரியுதான்னு பாரு என்றான்..

உடனே அவள் முகம் சிவந்து விட்டது..

இன்னைக்கு ஏன் anjuu உன் முகம் அடிக்கடி செவந்து போகுது..

“பாவா” என்று சிணுங்கினாள்..

“இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கா அஞ்சு”…இந்த புடவை, அப்பறம்  தாலிலாம் போட்டு ஏதோ புது பொண்ணு மாறி சும்மா கும்முன்னு இருக்க…என்னை எப்பவும் காதலோட  பார்க்கிற கண்ணு இன்னும் ரொம்ப அழகு டா..உனக்கு மட்டும் எப்படிடி இவ்வளவு அழகான கண்ணு அமைஞ்சிருக்குன்னு சொல்லு..

நாம்ம பிரிஞ்ச இவ்வளவு வருஷத்துல எத்தனை பொண்ணுங்களை கடந்திருப்பேன்  ஆனா உன்  அளவுக்கு ஒரு பொண்ண நான் பார்த்ததே இல்ல..

அப்படியா என்று சிரித்தாள்..

சரி ஓகே அஞ்சு நீ பிரெஷ் ஆகிட்டு கீழே வா என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான்..

அவள் குளித்து முடித்து விட்டு மாலை சாமிக்கு விளக்கு எல்லாம் ஏற்றிவிட்டு ,ஒரு பிங்க் நிற சுடிதார் போட்டு கொண்டு கீழே வந்தாள்.வந்ததும் அவளுக்காக COFEE எல்லாம் ரெடி செய்து கொடுத்து விட்டு அவளை அழைத்துக்கொண்டு பால்கனிக்கு சென்றான்..

இருவரும் ஊஞ்சலில் அமர்ந்தனர்.வந்ததில் இருந்து அவளையே பார்த்த்கொண்டு இருந்தான்..

என்ன பார்வைலாம் பலமா இருக்கு என்றாள்

சொன்ன புரியுமா anjuu??உனக்கு அவ்வளவு அறிவு இருக்கா என்ன..

செல்லமா அவனை  முறைத்து வைத்தாள்..

Anjuu என்று அவளின் கையை பிடித்தவன்,இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்..உனக்கு என்ன வேணுமோ கேளு நான் குடுக்குறேன் என்றான்..

நான் கேட்கட்டுமா என்றாள், எனக்கு …

உனக்கு..

குழந்தைய பத்தி என்னை யோசிக்கிறிங்க ?

அதை கேட்டதுமே அவன் முகம் மாறியது..

இப்போ என்ன அவசரம் என்றான்..

அவளுக்கும் கோவம் வந்தது..என்ன தான் உங்களுக்கு பிரச்சனையை அதை சொல்லுங்க முதலில்.

உனக்கு சொன்னா புரியாது அதை விடு..கொழந்தைங்க வேண்டான்னு ஏன் யோசிக்கிரிங்க?அதனால உங்களுக்கு என்ன தான் பிரச்சனை வரும்ன்னு சொல்லுங்க..

உன்னை இழந்துருவேன்னு பயம்!!!

என்ன சொல்றிங்க!!

நான் பொறக்கும்போது என்னோட அம்மாவ  நான் பார்த்ததில்லை…நான் பிறந்தததாள தான் ஏன் அம்மா இறந்துட்டாங்க.. அதனால எனக்கு ரொம்ப பயம் நீயும் என்னை விட்டு போயிருவியோன்னு..

அதை கேட்டவளுக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தது மறுபக்கம் அவனுடைய வருத்தம் நன்றாக புரிந்தது..

பாவா இதுக்கு எல்லாம் பயந்தா எப்படி என்று அவனை அனைத்து கொண்டாள்..அவனை சற்று திசை திருப்ப அவனுக்கு இதழ் முத்தம் அளித்தாள்,அந்தவலியை போக்க இவனுக்கு மருந்தாக இருந்தது இதற்க்கு மேல் இவளை பிரிந்து இருக்க முடியாது என்று தோன்ற,அந்த ஒரு முத்தம் அவனை பித்தாக்க வைத்து முடிவில் அவன் இவளோடு ஒன்றாகினான்..அவளை இரவு முழுவதும் சிறிதும் பிரியவில்லை,சிறிது விலகினாலும் இது கனவாகி விடுமோ என்று தோன்ற மேலும் மேலும் ஆவலுடன் ஒன்றினான்..

முதலில் அவனின் அன்பில் தினறியவள் பிறகு, அவனின் மென்ன்மையை பார்த்து அவனுக்கு ஈடுகொடுத்தாள்…

பலவருட ஏக்கம் இங்கே நல்ல இல்லறமாக தொடங்கியது