தான் பேசியது அதிகம் தான் என்று தோன்றி அழ ஆரம்பித்து விட்டாள்..அவங்கள புரிஞ்சிக்க நான் ட்ரைபண்ணவே இல்லையே…
அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும். அவங்க கூட இருந்து இனி தொல்லை பண்ண வேண்டாம் காலையில கிளம்பிறது தான் நல்லது..
தனியாக சிறிது நேரம் பொலம்பியவள்..இப்போ எந்த ரூமிற்கு செல்வது என்று தெரியாமல் யோசனையில்இருந்தவள்,பசிப்பது போல் தோன்றியது..
உறங்கியதால் ஏதும் சமைக்கவில்லை இப்போ என்ன செய்வது என்று அவளுக்கு தெரியாமல் முளித்துகொண்டு அவர்களின் ரூமிற்கு முன்பு, நின்று கொண்டு இருந்தாள்.. அவனையும் கூப்பிடுவோமா ??கூப்பிட்டு தான் பாப்போமே பாவம் அவனும் சாப்பிட்டு இருக்க மாட்டானே..
“என்னங்க வெளிய வாங்களேன் எனக்கு பசிக்குது.. நான் பேசினது எல்லாம் தப்பு தான் என்னை மன்னிச்சிகோங்க நாளைக்கு நான் கிளம்பிறேன் ..நீங்க இத்தனை நாளாக கேட்டதையும் கொடுத்து விடுகிறேன் என்றாள்..அதை சொல்லும்போது அவளுக்குள் அப்படி ஒரு நடுக்கமாக இருந்தது”…
அப்போது தான் அவன் கதவை திறந்தான்..அவள் அழுவதை அவனால் பார்க்க முடியவில்லை அதும், இன்னைக்குன்னு பார்த்து தான் அழ வைத்திருக்க வேண்டுமா..நானும் கொஞ்சம் கோவப்பட்டு இருக்க கூடாதோ, என்று அவனுக்கு தோன்றியது…
அழும் அவளை தூக்கிக்கொண்டு கீழே ஹாலுக்கு சென்றான்…
“என்னை மன்னிச்சிருங்க என்று அவனிடம் ஆயிரம் வாட்டி கேட்டு விட்டாள்..அதற்க்கு பலன் தான் இல்லை..”
அங்கே அவளுக்காக SURPRISE செய்து இருந்ததை அப்போது தான் பார்த்தாள்..
அவனை சங்கடமாக பார்த்தாள்..உங்க கூட இருக்க எனக்கு எந்த தகுதியுமே இல்லங்க என்று தாலியை கழட்ட கழுத்தில் கை வைத்து இருந்தாள்.. அதற்குள் அவன் அவளை ஓங்கி அறைந்திருந்தான்…அவன் அடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்திருந்தாள் …
நான் செத்ததுக்கு அப்பறம் கழட்டுடி!! என்று கூறி இன்னொரு அறையையும் விட்டு இருந்தான்..
எதையுமே அப்போவே கேட்கர பழக்கமே உனக்கு இல்லையா?எல்லாம் சேர்த்து வெச்சு கேட்டா இந்த மாறி MIND கேவலமா தான் யோசிக்கும்….அவன் அடித்ததில் அவள் கன்னம் இரண்டும் நன்கு சிவந்து இருந்தது,அவள் அவங்க வீட்டில் எவ்வளவு செல்லமாக வளர்ந்தாள் என்று அவனுக்கு நன்றாக தெரியும்..
“அவன் அடித்தது கூட அவளுக்கு பெரிதாக தோன்றவில்லை,அவன் நான் செத்ததுக்கு அப்பறம் கழட்டு என்று கூறியது தான் வலித்தது”..
அவளை அடித்ததும் அவனுக்கே ஒரு மாறி ஆகிவிட்டது எவ்வளவு தான் நானும் என்னை புரிய வைக்க முயற்ச்சி செய்வது…
அவளை தூக்கி விட்டவன் எழுந்து போயிட்டு FACE வாஷ் பண்ணிட்டு வா என்றான்..
அவள் வந்ததும் அவளுக்காக கேக் கட் பண்ணி பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினான்…பிறகு தன் கையிலிருந்த இரண்டு பட்டு புடைவைகளையும் ஒரு RED ரோசையையும், கையில் கொடுத்தான்…பிறகு அவளை அமர வைத்து காலில் அவளின் பாதத்தை ஏந்தி “தங்க கொலுசு அணிவித்தான்”..
அவனுக்கு நன்றாக தெரியும் அவளுக்கு ஆடம்பரம் பிடிக்காது என்று இருந்தாலும் தன் ஆசைக்காக அவளுக்கு அணிவித்தான்..
HAPPY BIRTHDAY collector madam..
அவளுக்காக CANDLE LIGHT DINNER ரெடி பண்ணிருந்தான்…இருவரும் பேசாமல் சாப்பிட்டனர்..அவன் எவ்வளவு ஆசையாக இங்கே சாப்பிடலாம்ன்னு நெனச்சி ரெடி பண்ணிருந்தான்..
நம்ம ஆசைபட்டது எது நடந்துருக்கு, இது நடக்க அப்போது தான் அவள் முகத்தை பார்த்தான்,கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது…அவனுக்கு நன்றாக தெரியும் தான் அடித்தால் அவள் அழவில்லை என்று..
அவள் ஒழுங்காகவே சாப்பிடவில்லை என்பதை கவனித்தவன்,நீ ரூமுக்கு போ நான் வரேன் ..
இவன் கிட்சேன்க்கு சென்று இருவருக்குமே பாலை எடுத்துகொண்டு ரூமிற்கு சென்றான்..அதற்குள் அவள் அழுது அழுது முகம் எல்லாம் சிவந்து வீங்கி போயிருந்தது அது மட்டுமில்லாமல் அவன் கைவிரல் அவள் கன்னத்தில் நன்றாக பதிந்து இருந்தது ..அருகில் சென்று அவள் கன்னத்தில் மருந்தை தடவி விட்டான்..
“பாவா” என்று அழைத்தவள் அவனை கட்டி அணைத்துக்கொண்டு அழுது கரைந்தாள்..நீங்க விஷ் பன்னலன்னு கூட அவ்வளவு கோவம் இல்லை “உங்க வாழ்க்கைல இன்னொரு பொண்ணு இருக்கிறான்னு சொன்னதுல இருந்தே எனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு”..என்னால அத கடந்து வர முடில ரொம்ப வேதனையா இருக்கு அதனால தான் இப்படி எல்லாம் நடந்துக்கிறேன்..
இனி தேவை இல்லாமலாம் நான் யோசிக்க மாட்டேன்…
நீங்க என் புருஷன் எனக்கானவரா மட்டும் இருக்கணும்ன்னு ஆசைப்படுறேன் அது தப்பா ??
Anjuu இங்க பாரு உனக்கு என்மேல எப்போ முழு நம்பிக்கை வருதோ அன்னைக்கு உனக்கு தேவையான கேள்விக்கு தேவையான பதிலும் கிடைக்கும்…
“உன்கிட்ட மட்டும் தான் பதில் இருக்கு அதை நீ தான் கண்டுபிடிக்கணும் சரியா ..”
“ம்” என்றாள்…
அவள் கையில் பாலை கொடுத்து பருக சொன்னவன் தானும் குடித்து விட்டு படுத்தான்..
“அஞ்சு எனக்கு ஒரு டவுட் நீ நிஜமா படிச்சி தான் வேலை வாங்கினியா??”
பாவா என்று சிணுங்கினாள்…
“எங்க அத்தை உன்னை எவ்வளவு செல்லமா வளர்தாங்களோ அதே அளவுக்கு கொஞ்சம் அறிவோடையும் வளர்த்து இருந்துக்கலாம்”..அப்படியே உங்க அப்பன் மாறி அறிவே இல்லாம வளர்ந்திருக்க..
பொய்யாக முறைத்து பார்த்தாள்…ஹாப்பி ஹாப்பி BDAY MYY பொண்டாட்டி என்று ஆசையாக கூறினான்..
இத காலையிலே சொல்றதுக்கு உங்களுக்கு என்ன நான் எவ்வளவு ஆசையா எதிர்பார்த்தேன் தெரியுமா??
உனக்கே நல்ல தெரியும் இந்த ONEWEEK எவ்வளவு பிஸியாக இருந்தேன்னு அதுல மறந்துட்டேன்டா பட் LASTMINUTE ல நியாபகம் வந்துச்சுல எப்புடி ..
ம் ம்.. SUPERU தான் …இன்னொன்னு கேட்கணும்,நீ என்னை கேட்க போறன்னு நல்லா தெரியும்..
அதுக்கான நேரம் வரும்போது அதுவா நடக்கும் சரியா என்றான்..
படுக்கலாமா என்றான் ??
அவளின் நெற்றியில் இதழ் பதித்து அவளின் கன்னத்திலும் இதழ் பதித்தான்…அவளும் அவனின் இதழில் இதழ் பதித்து விட்டு அவனை இறுக கட்டிக்கொண்டு உறங்கினாள்..
அதிகாலையில் எழுந்தவன்,அவளுக்கு முன்னவே குளித்து கிளம்பி இருந்தான் அவனே சமையலையும் முடித்து இருந்தான்..
அவளை எழுப்பி விட்டு சென்றான்,அவள் கீழே வரும்போது குளித்து முடித்து தலையில் துண்டை கட்டிக்கொண்டு ஒரு சுடிதாரில் இறங்கி வந்தாள்..அவளின் கொலுசு சத்தத்தில் திரும்பி பார்த்தான் ,அவளுக்கு அந்த கொலுசு அவ்வளவு அழகாக இருந்தது..
Good morning BAVA..
Good morning anjuu…
இன்னைக்கு என்ன ஸ்பெஷல் BAVA….
அவள் கையில் COFEE கப்பை கொடுத்தான் ..அவள் சமையல் அறையில் உட்கார்ந்து சமையல் செய்யும் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்….
இன்னைக்கு நமக்கு என்ன ஸ்பெஷல் நீயே சொல்லு பாப்போம் என்றான்…
அது வந்து என்று இழுத்தவள்…
எது வந்து எப்படி madam …
“போங்க பாவா சொல்ல மாட்டேன்” …என்று முகம் சிவந்தாள்..
நமக்கு கல்யாணம் நாள்டி …இதுக்கே இவ்ளோ வெட்கமா அப்போ அன்னைக்கு night என்ன நடந்துச்சுன்னு சொன்னா madam எப்படி வெட்கபடுவிங்க …
சொல்லு பேபி அன்னைக்கு என்ன நடந்துச்சு..
என்று கூறியதும் அவள் முகத்தில் சொல்ல முடியாத அளவுக்கு வெட்க்க சாயல் ..
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைடா ஆனா, பாரு தோசை கருகுது” அதன் இப்போ பிரச்சனை அடுப்பை நிறுத்தி விட்டு விட்ட வேலையை தொடர்ந்தாள்…
Anjuu உனக்கு பசிகலையா??
இல்லை என்றாள் …நீங்க கேட்டதும் தான் எனக்கு பசிக்குது என்றாள் ..
சிரித்து விட்டு அவளை தள்ளி நிறுத்திவிட்டு தோசையை ஊற்றினான்…அவள் அவன் பின்னால் இருந்து கட்டி கொண்டாள்…
அனைத்தையும் முடித்தவன் வா சாப்பிடலாம் என்றான்…
அவனை நோக்கி கையை நீட்டினாள் அதன் பின்பு அவளை தூக்கி கொண்டு சேரில் அமரவைத்து ஊட்டியும் விட்டான் …
Anjuu உனக்கு இன்னைக்கு ஒரு SURPRISE இருக்கு என்றான்…
நீங்க எது குடுத்தாலும் எனக்கு ஓகே தான் BAVAA…
அவனும் சாப்பிட்டு விட்டு ,கெளம்புடா கோவில்க்கு போலாம் என்றான்…
அவன் சீக்கிரம் கெளம்பி வந்து காத்து கொண்டு இருந்தான்..அவள் அவன் வாங்கி கொடுத்த ஒரு புடவையை கட்டிக்கொண்டு கீழே வந்தாள்..
அவள் வெட்கபட்டு கொண்டே தன்னை நோக்கி வருவதை ஆசையாக பார்த்து கொண்டு இருந்தான் ….
அவன் வாங்கி கொடுத்த “கருநீல நிற தாமரை பூ நிறத்தில் சிறு சரிகை கரையிட்ட சேலையில் தேவதை போல் இருந்தாள்”…
ஏதோ ஒன்னு கொறையுதுடா என்றவன், அவளின் நீண்ட கூந்தலின் பின் மல்லிகை சரத்தை வைத்து விட்டான் அதில் கண் கலங் கியவள் …அதை அவன் பார்த்துவிட்டு என்ன ஆச்சு டா?
அம்மா இப்படி தான் பூ வெச்சிவிடுவாங்க அவங்க நியாபகம் வந்துரிச்சி அவங்ககிட்ட நான் இவ்ளோ வருஷத்துள்ள ஒரு டைம் கூட நான் இந்த விஷயத்தை சொல்லல …
பயமா இருந்துசுச்சு சொல்றதுக்கு ஒருவேளை நான் சொல்லிருந்தா அவங்க என்னை ரொம்ப கேவலமா நெனச்சிருப்பாங்க தான…
“சரி விடு இத அவங்ககிட்டயே கேட்றலாம் என்றான்”
எப்பவுமே விளையாட்டு தான் உங்களுக்கு …
இன்னும் ஒன்னும் குறையுது டா என்றான் …தன்னை ஒரு முறை நன்றாக பார்த்தாள் எல்லாம் ஓகே தான் பாவா…அவளின் இடுப்பை வளைத்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் !!!எவ்வளவு அழகா இருக்க தெரியுமா என்றான் அவன் முகத்தில் அவ்வளவு ஏக்கம் தெரிந்தது…
எனக்கு அப்படி ஒன்னும் தெரில, நீங்க தான் புது மாப்பிள்ளை மாறி புது வேட்டி சட்டைல சும்மா கும்மும்ன்னு இருக்கீங்க அதிலும் நீங்க சிரிக்கும்போது உங்க கன்னக்குழிஅவ்வளவு அழகு தெரியுமா ? அதை அவனுக்கு புரிய வைக்க இதழ் முத்தம் கொடுத்தாள் அவன் தான் அதில் மயங்கினான்…
வீட்டுல இருக்கும்போது சண்டை போடவேண்டியது வெளியே செல்லும்போது ROMANCE பண்ண வேண்டியது…
ரூமுக்கு போலாமா ANJUUU ,அதில் அவள் முகம் செவ்வானமாக சிவந்து போனது…
அதில் திருப்தி அடைந்தவன், கோவிலை நோக்கி புறப்பட்டான்…காரில் செல்லும்போது அவர்கள் இருவருக்கும் அவ்வளவு மன நிம்மதியாக இருந்தது ..
உள்ளே சென்று சிறப்பு பூசை எல்லாம் முடித்தவர்கள் கோவிலை சுற்றி வந்தார்கள் …
Anjuu என்று யாரோ தன்னை அழைப்பது போல் இருந்தது…அவளின் தாயின் குரல் போல் இருந்தது…
திரும்பி பார்த்தவள் அதிர்ச்சி அடைந்தாள் !!!அவளின் தாயே தான் அவ்வளவு கோவமாக பார்த்துகொண்டு இருந்தார்
அவள் உள்ளே வரும்போதே, அவர் பார்த்து விட்டார்…தன் மகளா! என்று அதிர்ச்சியோடு பார்த்தார் ..