சூரியன் 21

ரதியும் ரக்சனாவும் சீரியசாக பேசிக் கொண்டிருக்க, ரக்சன் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தான்.

“யாராவது ராகவன் மாமாவை பார்த்தீங்களா? அவரை நான் வந்ததிலிருந்தே பார்க்கவில்லை” சஞ்சய்  அங்கு வந்தான்.

சந்திரசேகர் சஞ்சயிடம் வந்து, “முதல்ல மாப்பிள்ளையா இருங்க சஞ்சய். அப்புறம் மற்றவர்களை விசாரிக்கலாம்” கேலியுடன் நகைத்தவாறு கூறினார்.

“சார், முதல்ல உங்க மகனை கவனிங்க. மூஞ்சிய எப்படி வச்சிருக்கார்னு பாருங்க” ரக்சனை கோர்த்து விட்டு சஞ்சய் நகர்ந்தான்.

“ரதி…” இந்துஜா அழைக்க, “ஏன்டி உன்னோட திருமணத்துக்கு கூட இப்படி அமர்க்களம் பண்ண மாட்ட போல?” ஒருவர் கேட்க,

“சித்தி…என்னோட தோழி, அண்ணாவோட பங்சன். எனக்கு ஸ்பெசல் தான? கொஞ்சம் உங்க உறவுக்காரவங்க பேச்சை மட்டும் அடைக்க பாருங்க. இல்ல நான் பேசி விட்ருவேன். சின்னப்பொண்ணு வாய் பேசுறான்னு அப்புறம் பேசக் கூடாது” தோளை குலுக்கி,

“ஹலோ ரக்சன் சார், வெட்டியா இங்க இருக்காம அண்ணாவுக்கு உதவினால் நன்றாக இருக்கும்” அவனை வாரி விட்டு கையோடு ரதியை இழுத்து சென்றாள்.

ம்ச்ச்ச்… கடுப்புடன் எழுந்தான் அவன்.

சஞ்சய் அருகே ரக்சன் செல்லவும் அனைவரையும் பார்த்து புன்னகைத்து, அவன் கரம் பற்றி தரதரவென தனியே இழுத்து சென்றான் சஞ்சய்.

“சஞ்சய்…” ரக்சன் அழைக்க,

“ராஜன் எதுக்கு இங்க வந்துருக்கார்? உனக்கு ஏதாவது தெரியுமா?”

வாட்? அவரா? நீ அழைத்தாயா?

இல்லை. அதான் கேட்கிறேன்…

அழைக்காமல் எதற்கு வரப் போகிறார்?

ரக்சா, ஏற்கனவே உன்னிடம் கார்த்திகா மேம் விசயத்தை கூறினேன்ல. அன்று சகியை சமாதானப்படுத்தி அனுப்பிய பின் ராகவன் மாமா…என்று ராக்கியின் தந்தை பேசியதை கூறினான் சஞ்சய்.

இந்த கேஸை நானே பார்த்துக்கிறேன். பிரியாவும் உள்ளே நுழைய வேண்டாம். அந்த குழந்தை இறப்பை பற்றி நானே கண்டறிகிறேன் என்றும் ஹரியையும் பார்த்துக்கிறேன்னு சொன்னார்… ரக்சா எனக்கு என்னோட மாமாவும் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்னு தோணுதுடா…

அப்படியெல்லாம் இருக்காது சஞ்சய்…

இருக்கு ரக்சா, எங்க வீட்டிற்கு ஹரி வந்த போது அவனை பிடிக்க அவர் எண்ணவில்லை. அவனை சூட் தான் செய்தார்.

அவன் எதுக்கு உன்னோட வீட்டிற்கு வந்தான்?

“சகிக்காக வந்துருக்கான். கார்த்திகா மேம் மகன் தான் ஹரின்னு அவளுக்கு தெரியாது ரக்சா” என்று அவன் நடந்ததை கூறினான்.

ஆமா சஞ்சய். மேம்முடன் பழகிய அனைவருக்கும் அவனை ஹரின்னா தெரியாது சிட்டின்னு தான் அவங்க அழைப்பாங்க..

இப்பொழுது என்ன பிரச்சனைன்னா காலையிலிருந்தே ராகவன் மாமாவை காணோம். என்னுடைய பெற்றோர் அழைத்தால் கூட அவர் அழைப்பை ஏற்கவில்லை. ஒன்று அவருக்கு ஏதாவது ஆகி இருக்கணும் இல்லை அவரால் ஏதாவது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

அவருக்கும் பிரியசகி, ஹரியை ஒருவருக்கு ஒருவர் தெரியும்னு தெரியுமா?

தெரியும் ரக்சா..

உங்களது நிகழ்ச்சிக்கு ஹரி வருவான். அவனை பிடிக்க கூட உன்னோட மாமா மறைந்திருக்கலாம்…

ஆமா, இதை யோசிக்கவில்லையே! அவர் ஹரியை பிடிக்கலாம் மாட்டார். கொல்ல தான் நினைப்பார். உன் கண்ணில் ஹரி மாட்டினா அவனை திசைதிருப்ப ஏதாவது செய்…

ம்ம்! ரக்சன் சிந்தனையுடன், சஞ்சய் ஹரி இங்க வந்து ராஜனை பார்த்தாலும் பிரச்சனை தானே!

அவரும் அவனுக்காக தான் வந்திருப்பார்னு தோணுது. அவன் பழிவாங்க செய்றான். அவனுக்கு யாரோ உதவுறாங்கடா இல்லை பதினாறு வயதுடைய சிறுவன் இந்த அளவிற்கு செய்யும் வாய்ப்பில்லை..

“மாமா…” என்ற குரலில் இருவரும் பிரசாத்தை பார்த்தனர்.

யாரு மாமா ஹரி?

ரக்சா உதவி வேணும்னா பிரசாத்தை அழைத்துக் கொள். பிரசாத் உன்னிடம் சொல்றேன். பிரச்சனை இல்லாமல் விழா முடியணும் இல்லை எல்லாத்துக்கும் அம்மா சகியை தான் சொல்வாங்க. உதவுவேல்ல?

ம்ம்! எனவும் அவன் தோளை தட்டி நகர்ந்தான் சஞ்சய்.

ரக்சன் மூலம் ஹரியை பற்றி பிரசாத் அறிந்து கொண்டான்.

மணமேடையில் சஞ்சய் அமர்ந்திருக்க, அவன் கவனம் ராஜனிடமே இருந்தது.

பிரியசகியை மணமேடைக்கு அழைத்து வரவும் தான் அவன் மனநிலை மாறியது. வேகவேகமாக அனைத்தும் நடந்து கொண்டிருந்தது.

அனைவரின் முன்னிலையில் பிரியசகிக்கு கோர்த்து வைத்திருந்த மணிகளுடனான திருமாங்கல்யத்தை அணிவித்து தன் சகியாக ஏற்றுக் கொண்டான்.

ஒவ்வொருவராக வந்து வாழ்த்துக்களை கூறினாலும் சிலர் அவர்களின் வஞ்சனையை காட்டியும் சென்றனர். பிரியசகிக்கு ஆறுதலாக அந்நேரம் அவளது கரத்தை இறுக பற்றுவதை தவிர சஞ்சயாலும் அந்நிலையில் ஏதும் பேச முடியவில்லை..

இனியவனும் இந்துஜாவிடம் பேச முயன்று அவள் மனதை சமாதானப்படுத்த முடியவில்லை. அவள் விலகிக் கொண்டே இருந்தாள்.

திடீரென ஒருவனின் விசில் சத்தம் காதை கிழிக்க, சத்தம் வந்த திசையை அனைவரும் பார்த்தனர்.

உயரமான மாடியில் கருப்பு ஆடையில் முகத்தை மறைத்தவாறு ஹரி நின்று கொண்டிருந்தான்.

அவனை எல்லாரும் பார்க்கும் சமயம், கீழே குதித்து பைக்கில் உள்ளே நுழைந்து சஞ்சய் முன் வந்து ஹெல்மெட்டை தளர்த்தி அவனது விழிகளை காட்டி அவனை பார்க்க சொன்னான்.

ராஜன் கைபேசியை எடுக்க, ரக்சன் சஞ்சயின் விழாவிற்கு வந்த ஆட்கள் மற்றும் பிரசாத் ஹரியை நோக்கி வர, மலர்க்கொத்தை பிரியசகியிடம் தூக்கி போட்டான் ஹரி.

அன்று வீட்டிற்கு வந்தது ஹரி என்று அவளுக்கு தெரியாது. அவள் நகர, சஞ்சய் அவள் கரம் பற்றினான்.

கண்களால் சில இடங்களை பார்த்த ஹரியின் விழிகள் சஞ்சயின் விழிகளுக்கு எச்சரிக்கை செய்தது. சஞ்சய் அதனை புரிந்து கொள்வதற்குள் சர்ரென பைக்கை ஹரி விரட்ட, இடைபுகுந்து ராஜன் அவனை விழ வைத்தான்.

ஹரி விழுந்து ஓட, அனைவரும் நடப்பதை திகைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

காலையிலிருந்து தேடிக் கொண்டிருந்த ராகவன் துப்பாக்கியுடன் ஹரியை சுட, அவரை விரட்டி சென்ற பிரசாத் அவரது துப்பாக்கியை தட்டி விட்டான்.

“பிரசாத்… என்னன…பண்ற?” ராகவன் கத்த, அவரை நகர விடாமல் தடுத்து பிடித்தான் பிரசாத். இருவரும் சண்டையில் உருண்டு கொண்டிருந்தனர்.

ஹரி பார்த்த இடத்தை சஞ்சய் பார்க்க, ராகவனின் பின்னே துப்பாக்கியுடன் சென்றவர்கள் ஹரியை விரட்டினார்கள்.

“ரக்சா….” சஞ்சய் சத்தமிட்டு மாலையுடன் கீழே இறங்க, பிரியசகிக்கு கண்ணீர் வந்து விட்டது. ரக்சன் இனியவன் அருகே சென்று அவன் பைக் கீயை பிடுங்கி பைக்கை எடுக்க, இனியவனும் ரக்சனுடன் சென்றான்.

“மாமா…” நவீன் சத்தமிட்டு சஞ்சயை தடுத்தான். பிரியசகியை பார்த்தாலும் இப்பொழுது ஹரியின் உயிர் முக்கியமாயிற்றே! மாலையை கழற்றி நவீன் கையில் கொடுத்து,

“சகிட்ட கொடு. அவளை கவனமா பார்த்துக்கோ” சஞ்சய் வேஷ்டியை மடித்து கட்டி தன் மாமாவை முறைத்து ஹரியை விரட்டி செல்பவர்களை பின் தொடர்ந்தான்.

இனியவா, “அந்த பையன் அருகே செல்லவும் அவனை இழுத்து நம்மிருவருக்கும் இடையே போடு” என்ற ரக்சன் பைக்கை விரட்டினான்.

“யாரு சார் இவனுக? என்ன நடக்குது?” இனியவன் கேட்டான்.

“சொல்றதை மட்டும் செய்” என்றான் ரக்சன் அதிகாரமாக.

ஹரியை நெருங்கவும் இனியவன் மூச்சிறைத்துக் கொண்டிருந்த ஹரியை இழுத்து பைக்கில் அமர வைத்தான். ரக்சன் தோளில் ஹரி சாய, அவனை விரட்டியவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்கள்.

“ஸ்கூலுக்கு போற வயசு பையன் மாதிரி இருந்துட்டு இப்படி ஒரு வேலைய பாக்குற?” இனியவன் ஹரி தலையில் தட்டினான்.

நான் பள்ளியில் தான் படித்துக் கொண்டிருந்தேன்…

என்ன? இனியவன் கேட்க, அந்நேரம் பைக்கில் விரைந்து கொண்டிருந்த சஞ்சய் ஹரியை பைக்கில் விரட்டுபவர்களை இடித்து கீழே தள்ளிக் கொண்டே முன்னேறினான்.

“மாமா, எனக்கும் கன் கொடுங்க” இனியவன் சத்தமிட, அதை காதில் வாங்காத சஞ்சய் அவன் பணியை திறம்பட செய்ய, ஹரியின் சோர்வு ரக்சனுக்கு சந்தேகத்தை வர வைத்தது.

பைக்கின் வேகத்தை குறைத்து, “ஹரி…அடி ஏதும் பட்டிருக்கா?” அக்கறையுடன் வினவினான்.

“சாரி சார்” ரக்சன் தோளில் ஹரிஹரன் மயங்க, இனியவன் அவனை அதிர்ந்து பார்த்தான். ஹரியின் இடையில் தோட்டா துளைத்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

“மாமா, இவன் இடுப்பில் தோட்டா துளைத்திருக்கு” இனியவன் சத்தமிட்டான். ஹரியை கொல்ல வந்த ஆட்கள் இதை கேட்டதும் நின்று விட்டனர்.

மூவரும் ஹரியை ரக்சனின் மருத்துவமனையில் சேர்த்தனர்.

“ரக்சா, ஹரி இங்கே இருப்பது யாருக்கும் தெரியக் கூடாது. இனியவா நீ சற்று நேரம் இவனை பார்த்துக்கோ. நானும் ரக்சாவும் உடனே செல்லணும்” ஹரியை பார்த்தான் சஞ்சய்.

இருவரும் திருமண மண்டபத்திற்கு வந்தனர். கண்ணீர் தடத்துடன் தனியே அமர்ந்திருந்தாள் பிரியசகி.

சஞ்சய் ஓடிச் சென்று பிரியசகி கரம் பற்ற, ரக்சனை முறைத்து நின்றாள் ரக்சனா.

“அண்ணா, ஏன் இப்படி பண்ண?” இந்துஜா தன் பலம் கொண்டு சஞ்சயை அடித்தாள்.

“சகி இங்க பாரு” சஞ்சய் அழைக்க,

அவனை பார்த்த பிரியசகி, “நான் எதுவும் கேட்கவில்லையே! தாலி தான் கட்டுனீங்க. நான் வீட்லயே இருந்துருப்பேன்ல?” வெறுமையுடன் பேச, அவன் விக்கித்து அவளையும் இந்துஜாவையும் பார்த்தான்.

“நீ போன பின் எல்லாரும் பிரியாவை கண்படி பேசிட்டாங்க. அனைவரும் வாழ்த்து கூறிக் கொண்டிருக்கும் போது பாதிலே போகலாமா? தலை போகும் விசயமானாலும் எப்படிடா உன்னால இவள விட்டு போக முடிஞ்சது? இதே போல தான் அவ வாழ்க்கையிலும்…” இந்துஜா சொல்லி முடிக்கும் முன் அவள் வாயை அடைத்தான்.

“இந்து நீ போ. நான் என்னோட சகியை பார்த்துப்பேன்” அவளை நகர்த்தி, பிரியசகியை நெருங்கி அமர்ந்தான்.

சகி, இப்ப நான் போகலைன்னா ஹரிய கொன்றுப்பானுக. இதுக்கு தான் முன்னமே ஆட்களிடமும் ரக்சன், பிரசாத்திடமும் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் இத்தனை பேர் வருவாங்கன்னு நான் எண்ணவில்லை. அவன் சின்னப்பையன்னு உனக்கே தெரியும். அவன் மோதுவது சாதாரண ஆள் இல்லை. சொன்னால் கேட்கவே மாட்டேங்கிறான். அவனை இப்பொழுது பிடித்தும் பாதுகாக்க முடியலை..

“என்னாச்சு அவனுக்கு?” பதறினாள் பிரியசகி.

சுட்டுட்டாங்க. தோட்டா இடுப்புல இறங்கிடுச்சு. யாருக்கும் சொல்லாமல் மறைச்சு வச்சிருக்கோம். அவன் பிழைச்சிருவான்னு தோணுது…ப்ளட் அதிகமா போயிருக்கு என்றான் சோர்வுடன்.

பிரியசகி அவன் தோளில் சாய்ந்து, “ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால உங்க வாழ்க்கையும் பாழாகிடுச்சுல்ல? நாம சந்திக்கலாமலே இருந்திருக்கலாம்…”

அவளை நகர்த்தி நெற்றியில் முத்தமிட்டு, “யார் என்ன சொன்னாலும் நீ இவ்வாறு நினைக்கக் கூடாது. உன்னை மறக்க முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா சகி? நான் என்னுடைய தயக்கம் விட்டு உன்னிடம் என் காதலை சொல்ல எண்ணிய நேரம் நீ பிரசாத்தை காதலிப்பதாக இந்துவிடம் கூறிக் கொண்டிருந்தாய். என்னால் சொல்ல முடியவில்லை.

உன்னுடைய திருமணத்தையும் நிறுத்த மனமில்லாமல் நான் அடைந்த வேதனையை சொல்ல வார்த்தைகள் இல்லை. பின் நீயும் சென்னை வந்து விட்டாய். பார்க்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் எங்கே உன்னை பார்த்தால் காதலை கூறி உன் வாழ்க்கை என்னால் பிரச்சனையாகுமோ என பயந்து தான் வரவில்லை.

இந்து, ராக்கியை உன்னிடம் சேர்க்க வந்த போது சரியாக உன்னை கவனிக்காமல் விட்டுட்டேன். ஆனால் நீ உன் வாழ்க்கையை இப்படி பழியாக்குவன்னு நினைக்கல… சஞ்சய்கு கண்ணீர் வந்து விட்டது.

சஞ்சய் கண்ணீரை தொட்டு துடைத்து, அவன் மார்பில் புதைந்து கொண்டாள் பிரியசகி.

“இந்து, என்னோட தோழி. எப்படி அவள் வாழ்க்கை பாழாக நான் காரணமாவேன்? இது பழக்கம் தான். ஆனால் அவன் அதிகமாக கஷ்டப்படுத்திட்டான்” அவன் மார்பில் சாய்ந்தவாறு முகம் நிமிர்த்தி சஞ்சயை பார்த்தாள்.

“அம்மா அதிகமா பேசிட்டாங்களா?” அவன் கேட்க, இவர்களை அந்நிலையில் பார்க்கவும் சுவர்ணலதாவிற்கு மேலும் சினம் அதிகமானது.

“கொஞ்சம் கூட வெட்கமேயில்லை” சுவர்ணலதா மேடை ஏறி பிரியசகி கூந்தலை பற்ற, சுவர்ணலதாவின் கரத்தை அழுத்தி பிடித்தான் சஞ்சய்.

“விடுங்கம்மா” சீற்றமுடன் கத்தினான்.

“சஞ்சய், அவ உன்னோட அம்மா. அவள விட நேத்து வந்தவ முக்கியமா போயிட்டாளா?” உறவுக்கார பெண்மணி சத்தமிட, மண்டபத்தினுள் இருந்த உறவுகள் வேடிக்கை பார்த்தனர்.

“லதா…” நாகேந்திரன் சத்தமிட்டு மேடை ஏறினார்.

“அம்மா கையை எடுங்க” அப்பெண்ணை முறைத்தான் சஞ்சய்.

நாகேந்திரன் தன் மனைவி கரத்தை எடுத்து விட, மனம் துவண்டு அமர்ந்திருந்தாள் பிரியசகி.

உங்க எல்லாருக்கும் என்ன பிரச்சனை? நான் எனக்கு பிடிச்ச பெண் கழுத்துல தாலி கட்டி இருக்கேன். அவளுக்கு குழந்த பிறக்காதுன்னா திருமணமே பண்ணிக்கக் கூடாதா? எங்களுக்கு எந்த குழந்தையும் தேவையில்லை. எனக்கு அவளும் அவளுக்கு நானும் போதும். எனக்கு என் காதல் கிடைச்சிருச்சு அது போதும். சும்மா எங்களை தொந்தரவு செய்யாதீங்க. ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழித்து பாவத்தை சம்பாதிச்சுக்காதீங்க…

அம்மா, பிரியசகிக்கு குழந்தை பிறக்காது. அதான பிரச்சனை. அவளை போல நானும் ஆனால் என்னையும் குறை சொல்வீங்களா? அடிப்பீங்களா? வீட்டை விட்டு விரட்ட எண்ணுவீங்களா? இயலாமையுடன் கத்தினான்.

“சஞ்சய்…” நாகேந்திரன் அதட்ட,

அவன் நிறுத்தாமல், “நானும் என்னோட ஆண்மையை இழந்தால் எங்களது ஜோடி சரியாக இருக்கும்னா அதை இழக்கவும் நான் தயார்” அவன் கூற, அனைவரையும் விட அதிர்ந்து சோர்வுடன் பிரியசகி அவன் வாயை அடைத்து, “வேண்டாம்…” கண்ணீருடன் தலையை அசைத்தாள்.

சுவர்ணலதா உடைந்து நகர்ந்து நின்றார்.

“என்னடா பேசுற?” நாகேந்திரன் தன் மகனை அடித்து, “போதுமாடி..இதுக்கு தான் முதலில் இருந்தே கூறினேன். உன்னோட மகன் காதல் உயர்ந்ததுடி. அவனை நல்லபடியாக வளர்த்து நீ இப்படி தவறானவளா நிக்கிற?”

“யார் இனி என்னை என்ன செய்தாலும் உங்களை விட்டு போக மாட்டேன்” பிரியசகி சஞ்சயை இறுக கட்டிக் கொண்டாள்.

“எல்லாரும் சாப்பிட்டு கிளம்புங்க” பிரியசகியுடன் உணவுண்ணும் இடத்திற்கு சென்றான் சஞ்சய்.

எல்லாருக்கும் முன்னதாகவே வீட்டிற்கு சஞ்சய் அவன் மனைவியுடன் வந்து விட்டான். இருவரும் களைப்பில் நேராக அறைக்கு சென்று விட்டனர்.

கதவை தாழிட்ட சஞ்சய்,  “சகி ஒரு நிமிடம்” என்று நகைக்கடையில் அவள் ரசித்த நகையை அவளுக்கு போட்டு விட்டான்.

“சஞ்சய் இது….???” அவள் கேட்க,

எனக்கு தெரியும். எப்படி இருக்கு?

ம்ம்! கண்கலங்க “தேங்க்ஸ்” அவனை கட்டிக் கொண்டாள்.

வெளியே சத்தம் கேட்க, “இரு வாரேன்” சஞ்சய் செல்லவும் கண்ணாடி முன் நின்று சஞ்சய் போட்டு விட்ட தங்கநகையை வருடிக் கொண்டிருந்தாள்.

சஞ்சய் சத்தம் அவ்வீடே அதிரும் வண்ணம் ஒலிக்க, அறையிலிருந்து பிரியசகி வெளியே வந்தாள்.

“சஞ்சய் நீ அதிகமா பேசிட்ட. இதுக்கான விளைவை சந்திக்க போற” ராகவன் சத்தமிட,

“மாமா நீங்க தப்பு மேல தப்பு பண்றீங்க. எனக்கு தேவையான அந்த லிஸ்டை கொடுங்க” கர்ஜனையுடன் சத்தமிட்டான்.

“சஞ்சய், நம்ம வீட்டு மாப்பிள்ளடா அவரு? என்ன பேசுற?” சுவர்ணலதா தன் மகனை அதட்ட,

அம்மா இவரை பற்றி தெரியாம பேசுறீங்க. இவர் ஆரம்பத்திலிருந்தே ஹரியை கொல்ல தான் பார்க்கிறார். இதில் இவருக்கும் சம்பந்தம் இருக்கு…

“யாருடா அந்த பையன்? அவனுக்காக உன்னோட மாமாகிட்டவே சண்டை போட்டுட்டு இருக்க?” சுவர்ணலதா ஏகத்துக்கும் கத்தினார்.

அம்மா…நீங்க இதுல தலையிடாதீங்க என்ற சஞ்சய், தன் தந்தை கரத்தை விலக்கி… “மாமா ஒழுங்கா அதை கொடுத்துருங்க” மிரட்டினாலும் அத்து மீறாமல் கேட்டான்.

“எதை கொடுக்கணும்? நீ நினைப்பது போல அவன் சிறுவனாக இருந்தாலும் நல்லவன் இல்லை. அத்தையை கொன்றது அவன் தான். என்னையும் கொல்ல நினைக்கிறான்” ராகவன் கூறி ஓரக்கண்ணில் இந்துஜாவை பார்த்தார்.

“மாமா, அம்மாவை அவன் எதுக்கு?” கண்ணீருடன் ராகவன் அருகே சென்றாள் இந்துஜா.

“சஞ்சய் என்னடா சொல்றாரு மாப்பிள்ள?” நாகேந்திரன் சினமுடன் கேட்டார்.

“அப்பா, மாமா பொய் சொல்றாரு. அத்தையை கொன்றது உங்க இதே மாப்பிள்ள தான்” வெறியுடன் சத்தமிட்டான்.

“அண்ணா…” இந்துஜா சஞ்சயை அடிக்க கரம் ஓங்கினாள். ஓடி வந்து இந்துஜாவின் கரத்தை பிடித்தாள் பிரியசகி.

“பிரியா, இதுல நீ தலையிடாத” இந்துஜா சத்தமிட,

“எதையும் யோசித்து செய் ஜா…” பிரியசகி கூற, அவளது கழுத்தில் இருக்கும் நகையை பார்த்து தன் அண்ணனை பார்த்தாள் இந்துஜா.

ஏன் உன்னோட புருசன் தான் நல்லவனா? என்னோட மாமா எந்த தப்பும் செய்யலை. நீ கூட இந்த நகைக்காக மொத்தமாக அண்ணா பக்கம் சாஞ்சுட்ட பிரியா…

பிரியசகி கண்ணீருடன் சஞ்சயை பார்த்தாள். “என்னடா இது?” என்று தான் இருந்தது அவனுக்கு.

பிரசாத் இருவருக்கும் இடையில் வந்து, “சிறுவயதிலிருந்து ஒருநாள் கூட ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காம இருந்தீங்க ஜா..இப்ப என்ன வந்தது உங்களுக்கு?” சத்தமிட்டான்.

“மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப உன்னோட அறைக்கு போ ஜா…” நவீன் கூற, இந்துஜா பிரசாத் நவீன் கரத்தை தட்டி விட்டு சுவர்ணலதாவிடமிருந்து ராக்கியை பிடுங்கி ராகவன் அருகே சென்றாள்.

“இந்து….” சஞ்சய் சினமுடன் அழைக்க, நான் மாமாவை நம்புறேன். மாமா மீது பழி சுமத்தும் இந்த வீட்டில் நான் இருக்க மாட்டேன்..

நொடிக்குள் சிந்தித்த நாகேந்திரன், “நானும் மாப்பிள்ளையை நம்புகிறேன் இந்து. மாப்பிள்ளைக்கு வேலை இருக்கும். நீயும் ராக்கியும் எங்கள் அறையில் தங்கிக்கோங்க” கூறினார்.

“என்னங்க பேசுறீங்க? நம்ம சஞ்சய் பொய் சொல்றான்னு சொல்றீங்களா?” சுவர்ணலதா கணவனிடம் மகனுக்காக சண்டைக்கு நின்றார்.

“பரவாயில்லைம்மா” என்ற சஞ்சய், பிரியசகியின் கரம் பிடித்து நகர, “அந்த ஹரி எங்கிருந்தாலும் அவனை பிடிச்சு உள்ள தள்ளாமல் விட மாட்டேன் சஞ்சய்” சீறினான் ராகவன்.

“இந்து நீ உள்ள வாம்மா” நாகேந்திரன் அழைக்க, உரிமையுடன் ராகவன் இந்துஜாவின் தோளில் கரம் போட்டு, “நானே பார்த்துக்கிறேன் மாமா…”என்று கூற,

பிரசாத் சினமுடன் ராகவன் கையை தட்டி விட்டு,  “ஜா.. ஆன்ட்டி அங்கிள் அறையில் இருக்கட்டும்” தரதரவென அவளை இழுத்து சுவர்ணலதா அருகே நிறுத்தினான்.

கண்கலங்க தங்கையை பார்த்த சஞ்சய் மனம் சற்று நிம்மதியடைந்தது. அவள் மறுக்காமல் அவர்களுடன் நிற்க, ராகவன் தான் விடாமல்…. “வா இந்து நம்ம வீட்டுக்கு போகலாம்” அழைத்தார்.

“மாமா, நான் இங்க இருக்கேன்” ராக்கியுடன் விறுவிறுவென பெரியவர்கள் அறைக்கு சென்று விட்டாள்.

“நீங்க கிளம்புங்க” நவீன் கதவை அடைத்தான்.

“அம்மா, இந்துகிட்ட எதையும் பேசி வைக்காதீங்க” சஞ்சய் பிரியசகியுடன் அறைக்கு சென்றான்.

இந்து ராக்கியை அணைத்து படுத்துக் கொண்டாள்.