“இது லவ் ஆஃப்டர் மேரேஜ் டைப் ஸ்டோரி, இதுல என்ன இருக்கு கிக்? வீட்ல ஒத்துக்க வைக்கணும்னு கஷ்டம்லாம் கிடையாது”
“ஆனா ஆஃப்டர் மேரேஜ் லவ் வர்றது கஷ்டம்ல அஞ்சலி? இவ என் வைஃப்னு கட்டாயத்துல காதல் வரலை, நான் சொல்றது பேச்சுலர் பையனுக்கு திடீர்னு ஒரு பொண்ணு மேல ஏதோ ஸ்பார்க் ஆகுமே, அப்படி லவ், அது உம்மேலயும் வந்துச்சு”
“நிஜமா அப்படி வந்துச்சா?”
“கன்னாபின்னான்னு” என அவன் சொல்லவும் அவனது விரல்களை இறுக்கிக் கொண்டாள் அஞ்சலி.
திருமணம் ஆன பிறகு தங்களுக்குள் காதல் மலர்ந்த கதையை நினைத்துக் கொண்டே நடந்தனர் இருவரும்.
“பாஷை பிரச்சனை வரக்கூடாதுன்னு வேற எந்த ஸ்டேட் பையன்னாலும் எனக்கு பையாதான். ஃப்ரெண்ட்ஸ் கூட இருக்கும் போது அங்க பாரு ஹேண்டசம் பையன்னு சொன்னா நிமிர்ந்து பார்த்து ஆமாம்னு சொல்றதோட சரி. ஸ்பார்க், லைட்னிங் எந்த மண்ணாங்கட்டியும் வரலை. என்னை யாரும் ப்ரொபோஸ் பண்ணினது கூட இல்லை தெரியுமா?”
“ரொம்ப வருத்தமோ?”
“சேச்ச… கமிட் ஆன என் ஃப்ரெண்ட்ஸ் பார்த்திருக்கேன். இத செய் அதை செய்யாதன்னு அவனுங்க போட்டு படுத்தி, அப்புறம் இவளுங்க பிரேக் அப் பண்ணி… நான் அப்படிலாம் சிக்காம ஜாலியா இருந்தேன்”
“உன் ஹார்மோன்ஸ்ல ஏதோ பிரச்சனைடி”
“லவ், இன்ஃபாச்சுவேஷன் ரெண்டையும் என்னன்னு கண்டுபிடிக்க தெரிஞ்சுது எனக்கு. ஹார்மோன்லாம் சரியாதான் இருந்தது. ஆனா அப்பவே அடி மனசுல இருக்கும், எனக்கு ஏத்தவன் தானா என்னை தேடிகிட்டு வருவான்னு. மூஞ்சு தெரியாத ஒருத்தன் அடிக்கடி கனவுல வருவான்”
“எவன் அவன்?” என வேகமாக அவன் கேட்க, கிண்டலாக சிரித்தவள், “நீங்களா இருப்பீங்களோ?” எனக் கேட்டு அவனை கொஞ்சம் சமாதானம் செய்தாள்.
சற்று நேர அமைதிக்கு பின், “நமக்கு கல்யாணம் நடந்தப்போ உங்க மேல நல்ல கோவம் மட்டும்தான். போக போகத்தான் தெரிஞ்சுது…” என்றாள்.
“என்னன்னு?”
“என்னை தேடி வந்த மாப்பிள்ளை நீங்கதான்னு. கனவுல வந்த மூஞ்சு தெரியாதவனுக்கு உங்க அடையாளத்தை கொடுத்தா ரொம்ப பெர்ஃபெக்ட்டா மேட்ச் ஆச்சு. சமத்து சக்கரக்கட்டி நீங்க…” என சொல்லிக் கொண்டே அவனது கன்னங்களை பிடித்து செல்லம் கொஞ்ச போனாள்.
அவளின் கைக்கு அகப்படாமல் முகத்தை இழுத்துக் கொண்டான்.
“இதான் உங்கள்ட்ட எனக்கு பிடிக்காது, ஆசையா கொஞ்ச வந்தா நீங்களும் ஆசையா கன்னத்தை காட்ட வேணாமா?”
“எல்லாம் ரூமுக்குள்ள”
“உலகமே பெரிய ரூம்தான். தோன்றப்பலாம் என் ஹஸ்பண்ட்டை செல்லம் கொஞ்ச எனக்கு ரைட்ஸ் இருக்கு” என நெருங்கி வந்தவளிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடிச் சென்று விட்டான்.
கேட்டை திறந்து கொண்டு வந்து நின்றவனுக்கு மூச்சு வாங்கியது. அவளும் மூச்சு வாங்க வந்து நின்றாள்.
“தெருவுல நாலைஞ்சு வீட்ல சி சி டி வி வச்சிட்டாங்க. நீ இப்படி சேட்டை பண்ணினா நைட் வாக் கட்” என்றான்.
“திருடன் வர்றானான்னு பார்க்கத்தான் கேமரா, நம்மள பார்க்க கூடாதுன்னு சொல்லுங்க, நமக்கு பிரைவேசி வேணாம்?”
“லோகல் டி வி நியூஸ்ல இத சொல்ல சொல்றேன்” என சொல்லிக் கொண்டே கேட்டை பூட்டினான்.
வீட்டுக்குள் வரவும் அவனது கன்னங்களை ஆசை தீர பிடித்து இழுத்து கொஞ்சினாள். அறைக்கு வந்த பின்னும் அவன் மீசை அளந்து, காது மடலை கிள்ளி, உதடுகளை பிடித்து இழுத்து கொஞ்சி என வம்பு செய்து கொண்டே இருந்தாள்.
அவளது சேட்டையை நிறுத்த எண்ணி அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டினான் அவன். படுக்கையில் விழுந்தவள் அவனை தடுக்க முற்பட்டுக் கொண்டே சிரித்துக் கொண்டிருந்தாள்.
“சத்தம் போடாத” என்றவன் அவளை விட்டு விட்டான். இப்போது அவள் அவனை பிடித்து தள்ளி அவனது டி ஷர்ட்டை நன்றாக மேலே ஏற்றி விட்டு வெறும் வயிற்றில் கிச்சு கிச்சு செய்ய, திணறிப் போய் விட்டான்.
அவளை அசைய விடாமல் தன்னோடு அணைத்துப் பிடித்துக் கொண்டான்.
வேக மூச்சுகளோடு, தளர்ந்து போனவளாக அவன் மீதே வாகாக படுத்து விட்டாள். சுகமான அவஸ்தை அவனுள்.
அவள் அணிந்திருந்த சட்டை மேலேறிப் போயிருக்க, அவனது கை அவளின் இடையில் பதிந்திருந்தது. அவள் மேனியில் அலைபாய துடித்த தன் கையை அசைய விடாமல் கட்டுப்படுத்த அவளது இடையை இன்னும் இறுக்கிப் பிடித்தான்.
“கையை எடுங்க, கூச்சமா இருக்கு” என கிசு கிசுத்தாள்.
“பழக பழகத்தான் கூச்சம் போகும், சும்மா தடை போட்டுட்டே இருக்காத. நான் பாவம்ல?” எனக் கேட்டான்.
“என்ன பாவம்?”
“உனக்கு தெரியாதா?”
“அது அப்ப, இப்ப என்ன?”
“இப்ப மட்டும் என்ன மாறிச்சு, தள்ளி தள்ளிதான் இருக்கோம்”
“அப்படியா!” கேலியாக கேட்டவள் அவனுக்கு முத்தமிட்டாள்.
“வெறும் கிஸ்லாம் போதாதுடி. இப்பலாம் கிஸ் பண்ணினா வேற மாதிரி ஆகிடுறேன், என்னை கண்ட்ரோல் பண்ண கஷ்டமா இருக்கு”
“அப்படி யார் கஷ்ட பட சொன்னா?” எனக் கேட்டவளின் முகத்தை நிமிர்த்தி பார்த்தான். துள்ளிக் கொண்டிருந்த சிரிப்பை உதடுகளை கடித்து அடக்கிக் கொண்டிருந்தாள்.
அவளது முகத்தை தன் முகத்தால் உரசினான். அவனது மீசைமுடி உராய்வு அவளுள் குறு குறுப்பை ஏற்படுத்த, அது பிடித்தும் இருக்க, அனுபவித்துக் கொண்டே கண்களை மூடிக் கொண்டாள்.
ஆவளிப்போடு மனைவியை உணரத் தொடங்கினான். காதல் மயக்கத்தில் ஆழ்ந்தாள் அஞ்சலி.
அவள் மீது அத்தனை ஆசையிருந்தும் அவளுக்கு பிடிக்குமோ, பயமில்லாமல் இருக்கிறாளா என நினைத்த யுகிக்கு மேலும் முன்னேற நிறைய தயக்கம்.
வெட்க சிரிப்போடு, “யுகியை அணு அணுவா எனக்கு பிடிக்கும், உங்களுக்காக பொறந்த பொண்ணு நான்தான், இவ்ளோ ஹெசிடேஷன் வேணாம் உங்களுக்கு” என்றாள்.
யுகி இந்த தருணத்துக்காக காத்திருந்தான் தான், ஆவல் இருந்ததுதான். ஆனால் இப்போதும் அவசரமில்லை, நிதானமாகவே அவளை அணுகினான். அவனது மென்மையான அணுகுமுறையில் தானாக அவனிடம் தஞ்சமடைந்தாள்.
தடைகள் நழுவி விழ, வெட்கம் வேடிக்கை பார்க்க, தயக்கம் தள்ளி நிற்க, தழுவல்கள் மாலையாக, முத்தங்கள் பன்னீர் தூவ, வெப்ப மூச்சுகளும் செல்ல சிணுங்கல்களும் மந்திரமாக, கொழுந்து விட்டெரியும் காமத்தீயில் காதலை வார்த்து, இருள் மட்டும் சாட்சியாக தன் பெண் பாவையை மொத்தமாக ஆட்கொண்டான் அவளின் மன்னன்.
விழிகள் மூடி தளர்ந்தவளை நிறைவான புன்னகையோடு பார்த்தான். தன் முகத்திற்கு நேராக இருந்த அவளின் கழுத்து வளைவில் அழுந்த முத்தமிட்டு விலகிப் படுத்தான். நொடி கூட தாமதிக்காமல் அவனோடு ஒண்டிக் கொண்டாள்.
ஒரு காலால் அவளது கால்களை தன்னிடம் வளைத்துக் கொண்டவன் குளிருக்கு இதமாக தன்னோடு பொத்திக் கொண்டது போல அவளை வைத்துக்கொண்டான்.
கணவனின் அணுக்கத்தில் உடல் மட்டும் அல்ல அவளின் மனமும் கூட கத கதப்பை உணர்ந்தது.