இந்த காதல் கிடைக்க தானே இவ்வளவு போராட்டம், தவம்..!!! தனா கண்கள் ஆனந்தத்தில் கலங்கி போக, மனைவியை இன்னும் தன்னோடு அழுத்தமாக அணைத்தான். அனு கணவன் மனம் புரிந்து தானும் அவனை நெருக்கமாக அணைத்தவள், அவன் நெஞ்சோடு முகம் புதைத்து கொண்டாள்.
அவ்வளவு உவகை இருவருக்கும். நடக்கவே நடக்காது, கிடைக்கவே கிடைக்காது, சேரவே முடியாது.. என்ற காதல் இன்று கை கூடியிருக்கிறது. இத்தனை வருட காதல் தவத்தின் பலன் முறையான அங்கீகாரம். அது அவர்களுக்கு ஊர் கூடி, உறவுகள் கொடுத்து கிடைத்து விட்டது.
இரு குடும்பமும் இணைந்து, இவர்களை பிணைத்திருக்கின்றனர். சில தடைகளை உடைப்பது என்பது சாதாரண விஷயம் இல்லையே..? இவர்களும் அதனை சாதாரணமாக உடைத்துவிடவில்லையே..! பல வருட போராட்டம், கண்ணீர், வலி, வேதனை தான்..!
ஏன் இவர்கள் காதல் தெரிந்த நாள் அன்று வாங்கிய பேச்சுக்கள்.. அடிகள்.. பார்வைகள்.. ஒதுக்கங்கள்.. இப்போதும் வலிக்கிறதே..?
ஆனால் அதற்காக பார்த்து காதலையும் விட முடியாதே..? சடங்குகள், சம்பிரதாயங்ளின் மூலம் கூடும் உறவு மட்டுமில்லை இரு மனங்களின் பிணைப்பும் வலுவானதே..? அதை பிரிப்பது சவாலான ஒன்று தான்.
தனா, அனுவை பிணைப்பும் அப்படி ஒன்று தான். அவர்களின் காதலும் கடுமையான பலப்பரீட்சைய எதிர்கொள்ள தான் செய்தது. இவர்களின் உறுதி, நம்பிக்கை, காத்திருப்பு, கட்டுப்பாடு மட்டுமே இன்று வெற்றியை கொடுத்திருக்க, அதை கொண்டாடமல் அவர்களால் இருக்க முடியுமா..? என்ன அந்த கொண்டாட்டத்தின் வழி இவர்களுக்கு கண்ணீராகி போனது.
அனு கண்ணீர் தனா நெஞ்சை நனைக்க, தனா கண்ணீர் துளி அவளின் உச்சி தலையை தொட்டது. அனு சில்லென்ற அவன் காதலை உணர்ந்து கணவனை நிமிர்ந்து பார்க்க, தனா உணர்ச்சி பொங்க நின்றிருந்தவன், “உனக்கு நன்றி சொல்ற வழி எதாவது இருக்கா..?” கரகரத்த குரலுடன் கேட்டான்.
எனக்கு ஏன்..? அனு கேள்வியாக பார்க்க, “நம்ம காதல் கல்யாணத்துல முடிய நீ.. நீ மட்டும் காரணம், உன்னோட நம்பிக்கை, காதல் தான் காரணம்..” என்றான் அவள் கன்னம் தாங்கி.
“இல்.. இல்லை.. நீங்களும் தான் நிறைய கஷ்டப்பட்டீங்க..?” அனு கமறிய குரலில் சொல்ல,
“உன்னைவிட இல்லைடி..” என்றவன் அவள் நெற்றியில் திரும்ப திரும்ப முத்தம் வைத்தான். அனு அவன் உதட்டின் ஈரத்தை உணர்ந்து ரசித்து நிற்க, தனா மனைவியின் முகப்பரவசத்தில் சிலிர்த்து அவள் கன்னத்தில் இதழ் பதித்தவன், லேசாக கடித்தும் வைத்தான்.
“ஸ்ஸ்..” அனு கண்கள் சுருக்கி கணவனை பார்க்க, தனா அவளை தன்னோடு அணைத்து தூக்கி கொண்டான். அனு கணவன் கழுத்தை கட்டி கொண்டவள், அவன் உச்சியில் முத்தம் வைத்தாள். தனா முகம் நிமிர்த்தி அவள் கழுத்தில் முத்தம் வைக்க, அனு கூச்சத்தில் திணறி போனாள்.
கணவன் உதடுகள் அவளின் தொண்டை குழியில் பதிய, அவனின் தலை முடியை இறுக்கமாக பிடித்து தடுத்தாள். ஏன்..? தனா மனைவியை பார்க்க, “கூசுது..” என்றாள் வெட்க குரலில்.
“ஹாஹா..” தனா சிரித்தவன், அவளை கீழிறக்கி, தன் கால் மேல் நிறுத்தினான். இருவரின் மூக்கும் உரச, வெளியே வானவேடிக்கையின் சத்தம். “திரும்ப வானவேடிக்கையா..?” தனா கேட்க,
“இது மாமா நமக்காக செய்றது..” என்றாள்.
“உங்க சக்ஸஸ்க்காக வானவேடிக்கை வைக்க போறேன்.. அதுல ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..” என்று அனுவிடம் சொல்லியிருந்தான் சஞ்சய். அதை அனு கணவனிடம் சொல்ல,
“அப்போ நாம பார்த்தே ஆகணும்.. வா..” என்று மொட்டை மாடிக்கு கூட்டி வந்தான். பல பல வண்ணங்கள் வானில் சிதறி கொண்டிருக்க, தனா, அனு அதனை ரசித்தனர்.
சில நிமிட தொடர் வானவேடிக்கை, நிறைவுறும் நேரம், இதய வடிவ வண்ணம் வானில் வெடித்து சிதறி காதலை கொட்டியது. புதுமண தம்பதிகள் இதை எதிர்பார்க்காமல் ஆனந்த அதிரிச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.
“இது தான் மாமா சொன்ன சர்ப்ரைஸ் போல..?” அனு சொல்ல,
“சஞ்சய் அண்ணா சேன்ஸ்ஸே இல்லை.. உங்க அக்காவுக்கு செம மேட்ச்..” என்றான் தனா.
“ம்ம்.. மாமா அக்காவை பொண்ணு பார்க்க வந்தப்போவே எங்க எல்லோருக்கும் அவரை பிடிச்சிடுச்சு..” என்று சித்ரா, சஞ்சய் திருமணம் நடந்த கதையை சொல்ல,
“சூப்பர்.. அவங்க காதல் வேற வகை, நமக்கும் சஞ்சய் அண்ணா சப்போர்ட் அதிகம்..” என்றான்.
“ம்ம்ம்.. நம்ம விஷயம் தெரிஞ்சப்போ மாமா தான் அப்பாகிட்ட பேசி அவர் ஏற்பாடு பண்ணியிருந்த நிச்சயத்தை நிறுத்தி, மேற்கொண்டு படிக்க சென்னை கூட்டிட்டு போனார்..” என்றாள் நெகிழ்வுடன்.
“சாரிடி..” தனா மிகவும் வருத்தத்துடன் சொன்னான். எதுக்கு..? அனு கேள்வியாக பார்க்க, “அன்னைக்கு என்னால் தான்.. என்னோட அவசரத்தானத்தால தான் நீ அவ்வளவு பேச்சு, அடி வாங்க வேண்டியதா போச்சு..” வேதனையுடன் சொன்னான்.
“அத்தை உன்னை நிறைய அடிச்சுட்டாங்கன்னு பூவம்மா சொன்னாங்க.. என்னை மன்னிச்சுக்கோடி..” அவளின் கை, கன்னம் எல்லாம் வருடினான்.
“அப்போ உன் பக்கத்துல வர முடியலையே..” தனா முகம் கசங்க சொன்னான்.
“அந்த நேரத்துல மாமா உன்னை ஏதும் பண்ணிடுவாரான்னு பயம் வேற, எனக்கு தெரியும் மாமா அப்படி இல்லைன்னு, ஆனாலும் அவ்வளவு பயம், பூவம்மா, பூமிகாகிட்ட கேட்டுட்டே இருந்தேன்..” தனா அன்றய நாளை நினைத்தான்.
“அப்பா என்னை கூட்டிட்டு போய்ட்டு வீட்ல தள்ளினவர் தான், பேசவே இல்லை. அம்மா தான் அடி பின்னிட்டாங்க, அக்கா, அண்ணா இல்லன்னா என் தோளை உருச்சியிருப்பாங்க..” அனு இப்போது சாதரணமாக சொல்ல, கேட்ட தனாவிற்கு தாங்க முடியவில்லை.
அவள் கைகளை பிடித்து கொள்ள, “எனக்கு அம்மா அடிச்சது கூட ஒன்னும் தெரியல, ஆனா அப்பா.. அப்பா இப்படி ஒரு பொண்ணா இவ இருப்பான்னு தெரிஞ்சிருந்தா கருவிலே அழிச்சிருப்பேன்னு சொல்லிட்டார், அது தான் ரொம்ப கஷ்டமா போயிடுச்சு..” அனு சொல்லும் போதே கண்ணீர் சிந்திவிட்டாள்.
இப்போதும் அவளுக்கு அந்த வார்த்தைகள் வலித்தது. சில வார்த்தைகள் நினைக்கும் நேரம் கண்ணீர் விட வைக்கும், அப்படி தான் அனுவிற்கும் இருந்தது. அவளின் கண்ணீரிலே அவளின் வலியை புரிந்து கொண்ட தனா, அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்.
அனுவும் அவளின் வலியை கணவன் அருகில் கரைக்க நினைத்தவள், அவனுக்கும் இப்படி தானே வலித்திருக்கும் என்று தோன்ற, விலகி அவன் முகம் பார்த்தாள். அன்று இவள் கண் முன்னே குருமூர்த்தி அறைந்தது, அதன் வேகம் இப்போதும் அனு உடல் நடுங்க, அவன் கன்னத்தை வருடினாள்.
“மாமா உங்களை ரொம்ப படுத்திட்டாரா..?” என்று கேட்க, தனா மூச்சை இழுத்துவிட்டான். எதை சொல்ல, எதை விட நிலை தான்.
“அவரை பத்தி தான் தெரியுமே..?” என்றான். அனுவிற்கு மேல் கொண்டு கேட்க முடியவில்லை. லேசுபாசாக குருமூர்த்தியின் பெண் பழக்கம் தெரிந்திருக்க, கேட்டு சங்கடப்படுத்த விரும்பவில்லை.
“அவர் நம்ம கல்யாணத்துக்கு வந்ததே பெரிய விஷயம் விடுங்க..” என்றாள் ஆறுதலாக.
“ம்ம்.. அவரோட மகனா பிறந்ததுக்கான பெரிய பலன் தான் அது..” என்றவன், தொலை தூரத்தை வெறித்தான்.
“என்னால இப்போவும் சிலதை மறக்க முடியல, அவர் குணம்.. அது இப்போ மாறினாலும் முழுசா மறுவாருன்னு சந்தேகம் தான், அம்மா அவரை விட்டு மூணு வருஷம் தனியா இருந்தது அவரை பாதிச்சிருக்கும் போல, அதான் அவரோட இயல்பை மீறி நம்ம கல்யாணத்துக்கு வந்துட்டார்..” என்றான் முகம் சுருங்க.
கணவன் முகத்திலே அவன் மனவுளைச்சல் தெரிந்தது. மிக நீண்ட பயணத்தை தான் கணவன் கடந்திருக்கிறான். புரிந்து கொண்டாள் மனைவி.
“நான் அம்மாவை கட்டுப்பாடு இல்லாம சந்தோஷமா வச்சுக்கணும் நினைச்சேன், ஆனா அம்மா குடும்பத்துக்காக திரும்ப அவரோட இருக்க ஆரம்பிச்சுட்டாங்க, அது அவங்க சாய்ஸ் தான், ஆனா அவங்களால முழுசா அப்பாவை ஏத்துக்க முடியாது, அவர் பண்ணது அப்படி, என்னாலயும் அவங்ககிட்ட இது பத்தி பேச முடியல, என்ன இருந்தாலும் இது அவங்க வாழ்க்கை, என்னை விட அம்மாக்கு வாழ்க்கைன்னா என்னன்னு தெரியும், அவங்களை நான் கைட் பண்ண முடியாது, சப்போர்ட் தான் கொடுக்க முடியும், கொடுத்துட்டு இருக்கேன், இனியும் கொடுப்போம், ஆனா அவங்களோட முழுமையான சந்தோஷம்.. அது இருக்குமான்னா தெரியல..” என்றான் துயரத்துடன்.
அனு அவன் தோளை ஆதரவாக பிடிக்க, “சாரு கல்யாணத்தப்போ அவ்வளவு பிரச்சனை, நான் தான் அம்மாவை பேச வச்சு தனியே வந்தோம், அதுவே எனக்கு பேச்சு தான், என் அத்தை கூட அப்பா, அம்மாவை பிரிச்சிவிட்ட மகன் நீயா தான் இருப்பன்னு கேட்டாங்க, எனக்கு என் அம்மா சந்தோஷமா இருக்கணும், நீங்க என்னவேனா பேசுங்கன்னு கண்டுக்கலை, ஆனா கடைசில என்னாலே அம்மா அவர்கிட்ட நிக்கிற மாதிரி ஆகிடுச்சு..” என்றான்.
அன்பழகன் நிபந்தனை தான் அதுக்கு காரணம் என்று புரிந்து கொண்ட அனு, “அப்பா அப்படி கேட்டிருக்க கூடாது..” என்றாள்.
“அனு.. சூழ்நிலை தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது, மாமா நிலையும் அப்படி ஒன்னு தான், நாம அவர் மேல கஷ்டப்பட்டுகிறது தப்பு, இப்போவும் என் அப்பா பொண்ணு கேட்டு வரலையே, மாமா நான் கேட்டதுக்கு ஒத்துக்கிட்டு நம்ம கல்யாணத்தை நடத்தி வச்சார் இல்லை.. இதை விட வேறென்ன வேணும்..?” என்றான்.
“அவங்களுக்கு வேற வழி இல்லை.. கடைசி வரை நான் அவங்க வீட்டை விட்டு நகர்ந்திருக்க மாட்டேன்.. என் அப்பா, அம்மா எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறது தான் எனக்கான மரியாதை, அவங்களுக்கான கௌரவம்.. அதை ஏன் இழக்கணும்..?” என்றாள் அனு.
“ம்ம்.. நீ இவ்வளவு உறுதியா இருக்கும் போது நான் தான் தேவையில்லாத வினையை இழுத்து விட்டுட்டேன், இதுல நீ எங்க என் கட்டுப்பாட்டை உடைச்சிடுவியோன்னு பயம் வேற..” என்றான் சிரிப்புடன்.
“அதான் என்னை விட்டு தள்ளியே இருந்தீங்களே அப்புறம் என்ன..?” அனு நொடித்து கொண்டாள்.
“என்ன தள்ளி இருந்து என்ன பிரயோஜனம்..? ஊர் நடுவுல வச்சு நம்ம காதலை எல்லோருக்கும் காட்டியாச்சு..” என்றவன், “நானும் என்ன பண்ண..? மேடம்க்கு அன்னைக்கு அவ்வளவு கோவம், போதததுக்கு கண்ணுல தண்ணீர் வேற, பார்த்துட்டு என்னால அமைதியா இருக்க முடியல, சமாதானம் பண்றேன்னு பஞ்சாயத்தை கூட்டியாச்சு..?” என்றான் மனைவி மூக்கை ஆட்டி.
அனு அன்றய நினைவில் முகம் கடுத்தவள், அவன் கையை தட்டிவிட்டு, “அதை பத்தி பேசாதீங்க..” என்றாள்.
“ஏனாம்..?” தனா அவளை இழுத்து அணைத்து கேட்க, திமிறி தள்ளி வந்தவள்,
“நீங்க ஊர்ல இருக்கிற பொண்ணுக்கு எல்லாம் வளையல், பொட்டு வாங்கி கொடுப்பீங்க, நான் பார்த்துட்டு இருக்கணுமா..? இதுல அய்யாக்கு இரண்டு பொண்டாட்டி வேற கேட்குது, அதுவும் பாமா, ருக்குமணி..” அனு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க பொங்கினாள்.
“ஏய் அது சும்மா கேலிக்காக சொன்னதுடி.. அதுக்கு இத்தனை வருஷம் ஆகியும் இன்னமும் கோவமா..? மனைவியை நெருங்கி வந்தான்.
“கிட்ட வந்தீங்க அவ்வளவு தான்.. இது கேலியா உங்களுக்கு..? எனக்கு தம்மாதுண்டு பின்னுக்கு கூட வழியில்லை, அவங்களுக்கு எல்லாம் வளையல், ஜிமிக்கி, ஸ்டிக்கர் பொட்டு. விட்டா கடையே தூக்கி கொடுத்திருப்பீங்க போல, மளிகை கடை மைனர்..” கடுப்பாக சொல்ல, தனாவிற்கு மளிகை கடை மைனரில் அப்படி ஒரு சிரிப்பு.
“ஹாஹா.. இது என்னடி பேர்.. அய்யா இப்போ இரும்பு கடை தெரியும் இல்லை.. உன்னை தவிர யார்கிட்டேயும் வளைய மாட்டேன்..” என்றான் கொஞ்சலாக.
“வளைஞ்சு தான் பாருங்க. நெருப்புல போட்டு வாட்டிடுறேன்..” கோவத்தை விடுவேனா என்றாள்.
“இது ரொம்ப பெரிய கோவமா இருக்கே..? இதை இங்க சமாதானம் செய்ய முடியாது..”தனா மனைவி திமிற திமிற தூக்கி கொண்டு ரூம் வந்தான்.
“ஒன்னும் வேணாம்.. விடுங்க என்னை..” அனு கீழிறங்க பார்க்க, கட்டிலில் விட்டு அவளை அணைகட்டி படுத்தான்.
“இப்போ தான் தெரியுது கல்யாணம், பொன்டாட்டின்னாலே அவனவன் ஏன் தெறிக்கிறான்னு.. முதல் நாளே குடுமி பிடிக்கிறா என் பொண்டாட்டி..” அவள் மூக்கை உரசினான்.
“பத்து வருஷமா ஒரு சைவ முத்தத்துக்கு கூட வழியில்லாம நொந்து போயிட்டேன்.. இன்னைக்கு விடுறதா இல்லை, மொத்தமா விருந்தே சாப்பிட்டுட வேண்டியது தான்..” என்று உல்லாசமாக கண்ணடிக்க, அனுவிற்கு உடல் சூடானது.
கணவனின் பார்வை அவளுக்கு வெட்கத்தை கொடுத்த நேரம், தாம்பத்திய அச்சத்தையும் கொடுத்தது. தனா கண்டு கொண்டவன், “என்ன அவ்வளவு பயம்..? என்னை பார்த்தா காய்ஞ்ச மாடு கம்புல பாயுற மாதிரியா இருக்கு..?” என்றான்.
“இல்லன்னு சொல்ல மாட்டேன்..” அனு குறும்பாக சொல்ல,
“அவ்வளவு ஆவேசமாவா தெரியுறேன்..” என்றவன், “அது என் தப்பு இல்லை.. நீ தான் இதுக்கு காரணம்..” என்றான் ஊடலாக.
“நான் என்ன செஞ்சேன்..?” அனு புரியாமல் கேட்க,
“எதுவும் செய்யலை, பத்து வருஷமா பார்த்துட்டே இருந்தா இப்படி தான் எடுத்ததும் பாய தோணும்..” என்றான் அவளை அணைத்து.
“உங்களுக்கு என்கிட்ட பேச கூட முடியல, நான் என்ன செய்ய..?” அனு அவன் சட்டை பட்டனை திருகினாள்.
“அப்போ பேசியிருந்தா..?” என்று அவள் காதில் ஏதோ சொல்ல,
“ச்சீ..” என்று அவன் நெஞ்சில் அடித்தாள்.
“ச்சீயா.. அடியேய் பொண்டாட்டி என்னோட இத்தனை வருஷ கனவை ச்சீ சொல்ற.. உன்னை..” என்று அவள் தன் மேல் கொண்டு வந்து இறுக்கமாக அணைத்தவன் அவளின் உதடுகளை தாபத்துடன் பார்த்தான்.
அனு கணவனின் பார்வையில், அவளின் கீழ் உதட்டை மடிக்க, “ம்ஹூம்..” என்றவன் ஒற்றை விரலால் அவளின் உதட்டை வருடினான். அனு கண் மூடி கொள்ள, தனா அவனின் உதட்டால் அவளின் உதட்டை உரசினான்.
அனு அவன் நெஞ்சு சட்டையை இறுக்கமாக பிடிக்க, தனா உதடுகள் மெல்ல அவளின் உதட்டை பிடித்தது. இதமாக ஒட்டிய உதடுகள், நொடி கூட கூட வேகம் பிடித்தது. தனா அவளின் உதடுகளை முழுதும் தனக்குள் இழுத்து கொண்டவன், ருசிக்க ஆரம்பித்தான்.
அவனின் கைகள் அவளின் உடலில் வலம் வர, அனு கணவனின் வேக தீண்டலில் திணறி போனாள். தனா அவளின் புடவையில் கை வைக்க, அங்கு போர்வையே உடையானது. தனாவின் இத்தனை வருட காதல், கட்டுப்பாடு அங்கு எல்லை மீற, அனுவிற்கு சுகவேதனை. தனாவின் ஒவ்வொரு முத்தமும் அவனின் தேடலை சொல்ல, அனு மயங்கி போனாள்.
தனாவின் விரல்கள், உதடுகள் மனைவியை முழுதும் ஆக்கரமிக்க, அனு கணவனை தன்னோடு இறுக்கி கொண்டாள். அவளின் உணர்ச்சி வேகம் கணவன் உதடுகளில், முதுகில், நெஞ்சில் அடையாளங்களாக மாறியது. தனா மனைவியின் துடிப்பை ரசித்தவன், அவனின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவள் முழுதும் எடுத்தே ஓய்ந்தான்.
காதலின் வாசம், அங்கு வேர்வையின் வாசமாக மாறி போக, மூச்சு காற்றின் வேகமும் அவர்களின் காதலை போல உச்சத்திற்கு சென்று வந்தது. அனு கண்கள் மூடி அந்த நொடிகளை ரசிக்க, தனா மனைவியை இன்னும் இன்னும் கூடி போன காதலுடன் பார்த்தான்.
அவனின் ஒவ்வொரு அணுவும் அவனின் அனுவை உணர்ந்திருக்க, மாபெரும் திருப்தி அவனுக்கு. இத்தனை வருடங்கள் அனுவிற்கான அவனின் அணுக்களின் ஏக்கம் இன்று நிறைவடைந்திருக்க, புது ரத்தம் பாய்ந்தது. அதன் வீரியமும் அதிகமாக இருக்க, தனாவும் திரும்ப வேகம் எடுத்தான்.
கண் மூடியிருந்த அனு, கணவனின் தீண்டலில் கண் விழித்து பார்க்க, அவனோ அவள் காயம்பட்ட உதடுகளை இதமாக கவ்வி கொண்டான். “ஸ்ஸ்..” அனு லேசான எரிச்சலில் முகம் சுளிக்க,
விலகியவன், “சாரிடி.. என் கண்ட்ரோல்லே நான் இல்லை..” என்றான். சொல்லும் போதே அவனின் வெட்கம் மனைவிக்கு புரிய, அனு காதல் மயக்கத்துடன் அவனை அணைத்து கொண்டாள்.
தயங்காமல் அவன் உதடுகளை தான் ருசித்தவள், அவனுக்கான தன் காதலை வெளிப்படுத்தினாள். தனா அந்த நேரம் வானில் தான் பறந்தான். அனுவின் காதலுக்காக இன்னும் இன்னும் கூட போராடியிருக்கலாம் என்று தோன்றியது.
“திரும்ப கேட்கிறேன் உனக்கு எப்படி நன்றி சொல்றது..? எதாவது சொல்லு, செய்றேன்..” என்றான் கணவன். அனு என்ன சொல்வாள்..? அவளுக்கு எதுவும் தோன்றவும் இல்லை. அவளுக்கு வேண்டியது காதல் தான். அவள் போராடியதும் இவனுக்காக தான். இரண்டுமே அவளுக்கு கிடைத்திருக்க வேறென்ன வேண்டும் என்ற நிறைவு தான்.
எதுவும் சொல்லாமல் அவன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள். தனா பொங்கி வந்த காதலுடன் மனைவியை பிணைத்து கொண்டான். அந்த இரவு அவர்களுக்கான கூடலை மட்டும் கொடுக்கவில்லை. அவர்களின் ஆழமான, அழகான காதலை மற்றவருக்கு வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த காதல், புரிதல், அன்பு கடைசி வரைக்கும் இருக்க வேண்டும் இது தான் அவர்களின் வேண்டுதலாக இருந்தது. தவமாக இருந்து கிடைத்த காதல், வாழ்நாள் இறுதி வரை உடன் வர வேண்டும். அது தான் இறுதி வெற்றி. அதை தான் அனு ஆசைப்பட்டாள்.
தனாவும் அதை தான் அனுவிற்கு கொடுக்கிறான், இனியும் கொடுப்பான், அவன் வாழ்நாளின் இறுதி நொடி வரை கொடுப்பான். அந்த நம்பிக்கை அனுவிற்குமே இருக்க, அவர்கள் காதல் பவனி சரியான இடத்தில் தான் நிலை நின்றிருக்கிறது.