அத்தியாயம் 6:

அவன் அப்படி கூறியதும் அவளுக்கு கண்கள் கலங்கியது..

சரி விடுங்க அதான் நான் இருக்கேன்ல அப்பறம் என்ன ??

எத்தனை நாளைக்கு என் கூடவே இருப்ப,முன்னவும் இப்படி தான சொன்ன,பின்ன எதுக்குடி என்கிட்ட சொல்லாம கூட ஓடி போன…

என்னது நான் ஓடி போனன…நீங்க எதுமே சொல்லமலா நான் போய்டேன்..

தேவை இல்லாம என்ன பேச வைக்காதிங்க …

இவ என்னடா புது கதையாவே சொல்றா? …

என்னமோ நடந்துருக்கு எவன் பாத்த வேலைன்னு தான் தெரில ….கூடிய சீக்ரமா  கண்டுபிடிக்கிறேன்….

உங்க அப்பனா மட்டும் இருக்க கூடாதுன்னு வேண்டிக்கோ என்றான் ..

எங்க அப்பவா திட்டலனா உங்களுக்கு தூக்கமே வராதா?..

மறுபடியும் சொல்றேன்டி ..உங்க அப்பாக்கும் எனக்கும் ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கு அது என்னனு தான் தெரில…

நான் நெனைக்கிறது மட்டும் CONFORM ஆச்சு அன்னைக்கு உங்க அப்பனுக்கு இருக்கு ..

உங்க அப்பன்கிட்ட உன்னையும் காட்ட மாட்டேன், என் பிள்ளையையும் காட்ட மாட்டேன்…நீ என்ன செல்லம் சொல்ற உனக்கு ஓகே தான….

அவளோ அவனை ஆவேன பார்த்து வைத்தாள் ..

சரி அதலாம் விடு…

இப்ப தூக்கம் வருதா இல்ல கொஞ்சம் நேரம் பேசலாமா என்றான்..

அதையும் நீங்களே சொல்லிருங்க …

அப்டிங்கற …

“இரு வரேன்” என்றவன் கிட்சென்க்கு சென்றவன் சூடாக பாலை வைத்து அவளுக்கும், அவனுக்கும் எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்

பாலை கொடுத்ததும்  அவனை ஒரு மாறி பார்த்தாள் …

அவளின் பார்வைக்கு அர்த்தம் புரிந்தவன்,அவனுக்கு சிறிது அவளிடம் விளையாடி பார்க்கலாம் என்று தோன்றியது…

நீ என்ன பண்றனா நம்ம ரூமுக்கு போயிட்டு வெயிட் பண்ணு நான் வந்துறேன் சரியா!!!…

என்ன பாத்த உங்களுக்கு எப்படி தெரியுது …

உண்மையாவே சொல்றேன் பேபி ,பார்க்க சும்மா அப்படி இருக்க தெரியுமா??

நானும் எவ்வளவு நேரம் தான் நல்லவன் மாறியே நடிக்கிறது என்று அவளை நெருங்கினான் ,அவளோ அவனை கலவரமாக பார்த்தாள்..

ஏதும் நடக்காதுன்னு சொன்னதுலாம் பொய்யா??

சொன்ன மாறியே நடந்துகனுமா என்ன ?உன்ன பழி வாங்க தான்டி இவ்வளவு நாடகம் நடத்துனேன்..ஏன் நல்ல நேரமோ இல்ல, உன் கேட்ட நேரமோ இப்படி வந்து மாட்டிக்கிட்ட என்று கூறி கொண்டே அவளது இடையை  வளைத்து அவளது கழுத்தில்  முகம் புதைத்தான்.

அவளுக்கு அவ்வளவு ஆத்திரமாக வந்தது,சீ கைய எடு வெட்கமா இல்ல என்றாள்..

இல்லை டி..இப்போ என்னங்கற அவனும் வீம்பாகவே கூறினான்..

உன்ன நம்பி அன்னைக்கு ஏமாந்த மாறி, இன்னைக்கும் ஏமாந்து தான் போயிட்டேன் என்று கத்தினாள்…

இப்போ புரியுதுடி என்னை நீ சந்தேகத்துல தான் விட்டுட்டு போயிருக்கனு தெளிவா புரியுது..

இவ்வளவு நேரம் உங்கிட்ட சும்மா விளையாட்டுக்கு தான்டி பண்ணேன்.. ஆனா, இப்போ தெளிவாக புரிஞ்சுது ஏன் என்னை விட்டு போனன்னு ….

ஏன் கூட மூன்று மாசம் வாழ்ந்துருக்க அப்பவும்  கூட நம்பிக்கை இல்லாம தான வாழ்ந்துருக்க …

அப்படித்தான சொல்லு …..

அவள் எதுவும் பேசாமல் பால்கனிக்கு சென்று விட்டாள்..

இங்க ஒருத்தன் கத்திக்கிட்டு இருக்கான்.. இவ பாட்டுக்கு போயிட்டு இருக்கா என்று பொலம்பிகொண்டு அவள் பின்னே சென்றான்…

அவளுக்கு அந்த பால்கனி என்றாள் அவ்வளவு பிடிக்கும்..அவளுக்கு சிகப்பு  ரோஜா பிடிக்கும் என்பதால் அவளுக்காக வரவழைத்தான் …

அவன் அங்கு வந்தபோது அவள் அமைதியாக ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு நிலாவை பார்த்து கொண்டு இருந்தாள்..

Casual ஆக உட்காந்து இருக்கிறதா பாரு! …கொஞ்சம் தள்ளி உட்காரு  நானும் பார்க்கிறேன் என்று அவளை இடித்து கொண்டே அமர்ந்தான் …

“இங்க இருந்து பார்க்க நிலா நல்லா இருக்குல…

எதுமே நாடக்காத மாறி பேசறத பாரு ??

நல்ல தான் madam இருக்கு ….

அந்த நிலா அழகா இருக்கா இல்லை, நிலா மாறி இருக்க என் பொண்டாட்டி அழகானு தான் தெரில..

அவள் சிறிது வெட்கத்தில் முகம் சிவந்தாள்..

“பாவா”….இன்னைக்கு night எந்த சண்டையும் வேண்டாம்…

எதாவது எடக்குமடக்கா கேட்க வேண்டியது அப்பறம் நான் தான் எல்லாத்துக்கும் காரணம்ன்னு அழ வேண்டியது ….இந்த பொண்ணுங்களே இப்படிதான் போல

அப்டிங்கள சார் ,எத்தனை பொண்ணுங்கள உங்களுக்கு அப்படி தெரியும்?…

சண்டை வேண்டாம்ன்னு சொன்ன மாறி இருந்துச்சு …

சொன்னேனா என்று யோசிப்பது போல் சைகை செய்தாள்…

அதில் தன்னை மொத்தமாக அவளிடம்  தொலைத்து இருந்தான்…

அவனை அவ்வளவு ஏக்கமா பார்த்தாள்…எத்தனை வருட  ஏக்கம் இது…

என்ன madam பார்வைலாம் ஒரு மாறியா  இருக்கு என்றான் ,அவளோ சிறு புன்னகையுடன் தன் கையை அவனது கையோடு கோர்த்துக்கொண்டு அவனது தோளில் தலை சாய்த்தாள் …

இன்னைக்கு நைட் இவ்வளவு அழகா இருக்கும்ன்னு நெனச்சி கூட பார்க்கல  தெரியுமா,எங்க வீட்டுலயும் பால்கனில  EVERY night கொஞ்சம் நேரம் அங்க இருந்துட்டு தான் ரூமுக்கு போவேன்… ஆனாலும் இவ்வளவு மன நிம்மதி இருந்தது இல்லை..இரவில் நல்லா தூங்கி எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா ??உங்க கூட இருக்கும்போது தான் நல்லா  தூக்கம் வர மாறி இருக்கு …

இப்போ தெரியுதா என்னை விட்டு உன்னால இருக்க முடியாதுன்னு …

உண்மை தான்ங்க …

சிறிது நேரம் எதுவும் பேசாமல் அவன் மடியில் தலை சாய்த்தாள் …சாய்ந்தவள் உறங்கியும் போனாள்…அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.. சிறு குழந்தை போல் அவன் சட்டையை பிடித்து கொண்டு  உறங்கும் அவளை பார்த்தபோது அவன் மனம் வலித்தது..

“என்ன ஏன்டி நம்பவே மாட்டேங்கற” என்று புலம்பிக்கொண்டு இருந்தான் …..

அவள் தூக்கம் கலையாதவாறு அவளை தாங்கள் தங்கிருந்த ரூமிற்கு தூக்கி சென்றான் …அவளை அப்படியே பெட்டில் படுக்க வைத்து BEDSHEET யை போர்த்தி விட்டு அவனும் உறங்கி விட்டான் …இவனும் பல நாள் தூக்கத்தை தொலைத்து தான் இருந்தான் அதற்காக தான் ட்ரிங்க்ஸ்சை  கையில் எடுத்து இருந்தான்..

ஆனால் இன்றோஅவள் பக்கத்தில் இருப்பதால் என்னவோ இவனும் நன்றாக உறங்கி விட்டான்..

காலையில் இவன் முதலில் எழுந்து இருந்தான் …எழும்போது  தன் மனையாள் தன்னருகில்  இருக்கிறாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை…

அவளை தொந்தரவு செய்யாமல் ,WORK OUT செய்யும் பழக்கம் உடையவன் ஆதலால், வெளியே சென்று முடித்துவிட்டு உள்ளே வரும்போது காபி வாசம் அவனை வா என்று அழைத்தது..

அவள் என்னுடன் இருப்பதே பெரிய பாக்கியம் என்ன செய்தாவது அவளை தன்னுடன் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றுமுடிவு செய்து விட்டு ,ரூமிற்கு சென்று பிரெஷ் ஆகிவிட்டு,FILES எல்லாம் எடுத்து கொண்டு ஹாலிற்கு வந்தான் ..

5 மினுட்ஸ் இருங்க சாப்டுட்டு போலாம், முடிச்சிட்டேன் என்றாள் …

“ம்”என்றான்…

ஏதோ கோப்புகளை புரட்டி பார்த்து கொண்டு இருந்தான்,அவள் மேசையில் அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தாள் ..

சார் வரிங்களா,சாப்பிடலாம் அப்போது தான் அவளை பார்த்தான் …

குளித்து விட்டு சிவப்பு நிற புடவை அணிந்திருந்தாள்,தலை முடியை விரித்து விட்டு இருந்தாள் கொஞ்சம் அதில் மல்லிகை சரத்தை வைத்திருந்தாள்..

அப்போது தான் வீட்டையும் கவனித்தான் சாமி எல்லாம் கும்பிட்டு வீடே ஒரு பக்தி மயமாக காட்சி அளித்தது…

என்னடா இது நம்ம வீடா ஏதோ கோவில்க்கு வந்த  மாறி இருக்கு..

என்ன TIFFON அஞ்சு?இட்லி உங்களுக்கு பிடிச்ச தக்காளி சட்னி ,உருளைகிழங்கு குருமா …

அவனுக்கு எடுத்து தட்டில் வைத்தாள் அவன் அவளுக்கு தட்டில் எல்லாம் வைத்து மாறி மாறி பரிமாறி கொண்டனர்..

You KNOW anjuu ,ரொம்ப நாளைக்கு பிறகு வீட் டு சாப்பாடு சாப்பிடுறேன்…

லஞ்ச்க்கு வருவிங்க தான இல்லை வொர்க் ஏதும் இருக்கா,அவன் கிளம்பும்போது கேட்டாள்..

DOUBT தான் anjuu ,இன்னைக்கு இம்போர்டனட் மீட்டிங் இருக்கு மா.. இரவு வருவதற்கும் LATE ஆகும் ..

சரி என்றவள் …..

BYE anjuu என்றவன், திரும்ப வந்து அவளிடம் நின்றான் … “தாலி எங்கடி ,வழக்கம் போல் மறைத்து போட்டு இருந்தாள் அதை எடுத்து வெளியே போட்டான் இனிமேல் மறைக்கும் அவசியம் வராது தைரியமாக போடு” என்றான்..

அவன்  தொடும்போது அவளுக்கு உடல் கூசியது அதை அறிந்தவனுக்கு மனம் உல்லாசம் ஆனது ..

ஏன் அஞ்சு உன்னை நான் தொட்டதே இல்லையா?

அதை மறைக்க WHAT ABOUT YOUR WIFE? என்று கேட்டதும் அவனுக்கு கோவமாக வந்தது …

இப்பவும் சொல்றேன் அவளை பத்தி பேசுவது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என்று கோவமாக கூறிவிட்டு சென்றான்..

அப்போ என்னை இதை எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்றிங்களா !!!இதை கேட்கும்போது அவளுக்கு கண்ணு கலங்கியது ..

சரியான இம்சை டி நீ …

“காலையிலே இவ்வளவு கேள்வி கேட்காம உங்க அப்பன் கிட்ட போய்ட்டு மொக்கைய போடு போ என்றான்”

அது எல்லாம் எனக்கு தெரியும் போ ….

நீ அடங்கமாட்ட அப்படித்தான,உனக்கு ஒரு ட்ரீட்மென்ட் குடுக்கிறேன் இரு ,அருகில் வந்து அவளின் கன்னத்தில் ஒரு இதழ் பதித்து விட்டே சென்றான் ..

இட்லியும் சூப்பர். இட்லி மாறி இருக்க உன் கன்னமும் SUPERO சூப்பர்டி Bangaram …

இனி அதிகமா பேசின இப்படி தான் பதில் சொல்லுவேன் உனக்கு ஓகே வா ????என்று கூறிவிட்டு தப்பித்து விட்டான் அவளிடம் ..

அவனின் ஸ்பரிசத்தில் தன்னை தொலைத்து விட்டாள்…அவனின் அருகாமை வேண்டும் என்றே தோன்றியது அவள் முகம் அப்போது செவ்வானமாக சிவந்தது…

இவளுக்கே இப்படி என்றாள் அவனுக்கோ எப்படா மீட்டிங் முடியும் இவளை எப்பதான்  வந்து பார்க்கிறதுன்னு ஆவலாக இருந்தான் …

இப்படி ஒரு சந்தோசத்தை இழந்து விட்டேனா நான்…தனக்காக ஒருவர் இருப்பது கூட சுகம் தான் ..தன்னை விட கொடுத்து வைத்தவன் இந்த உலகத்தில் யார் இருப்பார்கள்  என்று தான் அந்த நிமிடம் தோன்றியது ..

நல்லபடியாக மீட்டிங்கை முடித்தவன் நேரத்தை பார்த்தான் இரவு 9 என்று காட்டியது …அப்போது தான் அவனுக்கு நியாபகம் வந்தது போனை எடுத்து பார்த்தான் அவளிடம் இருந்து 10 MISSED CALLS வந்து இருந்தது …

அடகடவுளே ….

ஒரு ஷாப்பிங் மால் செட்றவன் அவளுக்காக 10 சாரியை  வாங்கியவன் ,சீக்கிரம் வீட்டிற்கு கிளம்பி விட்டான்…

தன்னிடம் இருந்த சாவியை வைத்து திறந்து விட்டு உள்ளே சென்றான் ,உள்ளே அவளை காணவில்லை…”anjuu” என்று அழைத்தான் எங்குமே காணவில்லை..

அவன் உலகமே இருண்டது போல் ஆனது …

ANJUUU என்று கத்தினான் ….

“என்னை ஏன்டி விட்டுட்டு போயிடுற” ..

அவன் கண்முன் ஒரு” LETTER” தென்பட்டது …