நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறதோ என்ற விரக்தியில் இருந்தாள் .இந்த இரண்டு நாளாக அவன் இங்கு வரவும் இல்லை, அவளை தொந்தரவும் ,செய்யவும் வில்லை ..
அவனிடம் கேட்டும் விட்டாள் …”என்னோட விஷயத்த கொஞ்சம் RECONSIDER பண்ணா நல்லார்குமே”! என்றாள்…
அப்படியா சொல்ற என்றான் ..”சரி அப்போ, ஓகே நீ இன்னைக்கே கெளம்பி வா நம்ம வீட்டுக்கு போலாம் என்று அன்றே கூறி விட்டான்” …எதுவும் பேசாத நாளைக்கு ரெடி ஆக இரு நம்ம வீட்டுக்கு போலாம் அவ்ளோதான் …நான் வொர்க்ல இருக்கேன் “BYE” என்றான் ..
“நம்ம hero வொர்க்லாம் போகலங்க இவள நேர்ல சமாளிக்க முடியாது என்று தான் பிஸி ஆக இருப்பது போல் காட்டி கொண்டான்” ..
அம்மா, அப்பாவை எப்படி சமாளிப்பது ஒரு வேளை அவர்கள் கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது அவர்களும் பாவம் தான் ,அவனும் பாவம் தான் …
இதற்க்கு மேல் யோசித்தாள் மண்டை வெடித்து விடும் போல் இருந்தது அதனால் BALCONY வந்து சற்று நேரம் அமர்ந்து இருந்தாள்”…
நாளைல இருந்து அவன் கூட இருக்க வேண்டுமா??”அவனோடு இருந்தாள் நான் என்னை இழந்து விடுவேனே என்ன தான் செய்வது”???
“அவன் தான் கூறினானே என் மனைவி வரும் வரை என்று அது வரைக்கும் தான என்று அவளை அவளே சமாதானம் செய்து கொண்டாள் …
அவர்கள் வீட்டில் நான் எப்படி இருக்க முடியும் ??என்னவனை வேறு ஒருத்திக்கு நான் எப்படி விட்டு குடுக்க முடியும் ?இவன் “எதற்காக மறுபடியும்” என் வாழ்வில் வந்தான்…
“நாம் எவ்வளவு தான் யோசித்தாலும் அடுத்த நாளுக்கு காலம் நம்மளை அழைத்து தான் செல்லும்”…
அவளுக்கு தான் பயமாக இருந்தது …”இரவே அவன் அவளுக்கு msg செய்து இருந்தான் எந்த திங்க்ஸ்ம் நீ எடுத்து வர வேண்டாம்” என்றான் …
ஏதோ யோசித்து கொண்டே சாப்பிட்ட மகளை, அவளின் பெற்றோர்களுக்கும் யோசனையாக இருந்தது ..
என்ன anjuu அப்படி ஒரு யோசனையா இருக்க?
“ஒன்னும் இல்லை மா” என்றாள் ..
கொஞ்ச நாள் தானடா JOLYஆக இரு சரியா …
சாதாரண GREEN காட்டன் SAREEளையும் தேவதை போல் இருந்த மகளை அவள் தாய் எப்பொழுதும் போல் அவளை பெருமையாக பார்த்தார்..
அழகும் அறிவும் ஒன்று சேராது என்பார்கள் அது பொய்யோ என்று தான் அவருக்கு அந்த நிமிடம் தோன்றியது…
சரி அம்மா அப்பா நான் கெளம்பறேன் என்றாள்…
லீவ் எழுதி கொடுத்திட்டியா?? என்று msg வந்து இருந்தது
கொடுத்தாச்சு என்றாள் ..ஓகே என்றான்
பார்த்து போடா எதாவதுன்னா போன் பண்ணுடா என்று அவளின் பெற்றோர்கள் அவளை வழி அனுப்பி வைத்தனர்..
“இன்னைக்கு office போ நான் evening வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் சரியா என்று போனில் கூறி கொண்டு இருந்தான் ”
இவன் என்ன தான் நினைத்து கொண்டு இருக்கிறான், என்று அவளுக்கு அவ்வளவு கோவமாக வந்தது..
நீ உன் மனசுல என்ன தான் நினைத்து கொண்டு இருக்கிறாய்..நீ சொல்றத கேட்டு நான் ஆடணுமா என்ன?
ஆமா anjuu கண்டிப்பா கேட்டு தான் ஆகணும்..
போடா …என்று கூறிவிட்டு போனை கட் செய்து இருந்தாள் ..
மாலை அனைத்து வேலையும் முடித்து கொண்டு அவனுக்காக காத்திருந்தாள் ,அவளை காக்க வைக்காமல் உடனே வந்து விட்டான்..
வெளியே இறங்கி வந்தவன் ,அவளுக்காக door கதவை திறந்து உட்கார வைத்து பின் காரை ஸ்டார்ட் செய்தான்..
என்ன collector madam அமைதியா வறிங்க அவன் கேட்டதும் அழ ஆரம்பித்து விட்டாள் ..
“அவள் அழுததும்” அவனுக்கு என்னவோ போல் ஆனது,
“இங்க பாரு anjuu உன்னை நான் கடத்தி கிட்டு போற மாறி பண்ணாத” ..
“நான் அழல விடுங்க” ..
பிறகு playlist ல ஒரு படலை போட்டு விட்டான் ..
“முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் ,நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா” …
அவனோ இந்த பாடலை போட்டதும் அவளை திரும்பி பார்த்தான் உறங்கி விட்டாள்..
அடிப்பாவி !!!!இவளுக்கு நம்ம லவ்வை எப்படி தான் புரிய வைய்க்கிறது …
காரை ஒரு ஹோட்டல் முன்பு நிறுத்தினான்..”anjuu” என்று அவளை உலுக்கினான் ..
”எழுந்தவள் ஏங்க கத்துறிங்க என்று !!! கூலாக கேட்டால்
“எல்லாம் ஏன் நேரம்டி ,ஏன் சொல்ல மாட்ட”.. “நல்லா கும்பகர்னி மாறி தூங்கிட்டு கேட்கறா பாரு கேள்வி”..
இல்லைனா பார்சல் பண்ணுங்க வீட்டுல போயிட்டு சாப்பிட்டுக்கலாம் என்று கூறிவிட்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்..
ஹோட்டலில் சாப்பிட்டால் தெரிந்தவர்கள் யாரவது பார்த்து அப்பாவிடம் சொல்லி விட்டாள் என்ன செய்வது என்று தான் ,பார்சல் பண்ண சொன்னாள் ..
சரி என்றவன் …பார்சலை வாங்கி வந்து காரை வீட்டை நோக்கி செலுத்தினான்..
அவள் தான் ஆரம்பித்தாள்,உங்க WIFE எங்க போயிருக்காங்க என்ன ஆச்சு அவங்களுக்கு என்றாள் ..
அவனுக்கு வெறி ஆனது ,இவள என்ன தான் செய்வது,பேசாம உண்மைய சொல்லிருவோமா ,சொன்னால் இப்பவே எங்க வீட்டுக்கு கார விடுன்னு சொல்லிருவா…இது சரி வராது
அதெல்லாம் உனக்கு எதுக்கு அமைதியா இரு சரியா என்றான்…
நான் என்ன பேசணும் பேச கூடாதுன்னு நாளைக்கு ஒரு லிஸ்ட் போட்டு குடுங்க நான் அதையே FOLLOW பண்ணிக்கிறேன் என்று முகத்தை திருப்பி கொண்டாள் …
இங்க பாரு da நீ தேவை இல்லாம எதையும் யோசிக்க வேண்டாம்ன்னு தான் ஆரம்பத்துல இருந்து சொல்றேன் …நீ ஏன் கேட்கவே மாற்ற??
“என் WIFE ஆல உனக்கு எந்த பிரச்சனயும் வராது ,நீ GUILT ஆக பீல் பண்ற மாறி எதுவும் நடக்காது சரியா”…
“ம்” என்றாள் ..
நான் எதுக்கு உங்க கூட கொஞ்ச நாளைக்கு இருக்கனும்,ஏன் கூட இருந்தா உங்களுக்கு அப்படி என்ன கிடைக்க போகுது ??என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டு வந்தாள்
இவனுக்கோ இவ எப்ப தான் வாய மூடுவாளோ என்றானது…
அதற்குள் வீடு வந்து விட்டது ….தப்பிச்சோம்டா சாமி என்று தான் அவனுக்கு இருந்தது …
அவள் இறங்கும்போது அவளுக்கு ஒரே பதட்டமாக இருந்தது ஏனென்றால் அவர்கள் இருவரும் வாழ்ந்த வீடாச்சே …
அவனை சற்று கலக்கமாக பார்த்தாள்…
அவனோ அந்த சூழ்நிலையை இலகுவாக்க,
“ஏன்டா ANJUUU இவ்வளவு அழகான பையன் கூட இருக்க போறோம்ன்னு பயமா இருக்கா”??
அவளோ அதற்க்கு, நெனப்பு தான் …..அதுக்கு லாம் வேற ஆள் பாருங்க
பார்க்கவா என்றான் …
அவளோ அவனை முறைத்தாள் ..
உனக்கு வேண்டாம்னா எனக்கும் வேண்டாம் டா ..அதுக்கு எதுக்கு இப்படி பார்த்து வைக்கிற ..
“BAVA” எனக்கு பசிக்குது உள்ளே அழைத்துக்கொண்டு செல்வீர்களா, இல்லை இங்கயே இருந்து பேசிகிட்டே இருக்க போறோமா …
அவள் BAVA என்று அழைத்ததும் அவன் அவளை ஆசையாக பார்த்தான்…
அவள் அவனை எப்படி அப்படி அழைத்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை ஒருவித சங்கடத்துடன் பார்த்தாள்..
SORRY டா உள்ளே போலாம் ..
உள்ளே சென்றவள் ஆச்சர்யமாக வீட்டை பார்த்தாள்..ஏனென்றால் அவள் விட்டு சென்ற அனைத்தும் அப்பபடியே இருந்தது..
என்னைகாவது நீ வருவன்னு தெரியும் அதனால தான் அப்படியே விட்டு வைத்திருந்தேன்…காலையில் தான் CLEAN பண்ண சொன்னேன் ..
அப்படி என்ன தான் இருக்குனு தான யோசிக் கிரிங்க…சொல்றேன் சொல்றேன் ..அவர்களின் திருமண புகைப்படம் தான் ஹாலில் பெரிதாக மாட்டி வைத்திருந்தான்..ஐந்து வருடத்திற்கு முன்பு வைத்தது…
இவர்களின் வீடு சென்னையில் திருவாண்மையூர் பீச் ஹவுஸ் …அவர்களின் திருமணம் ஆன நாள் அன்று இவன் இவளுக்கு பரிசாக கொடுத்தான்…
அந்த வீட்டில் இருக்கும் அனைத்து பொருள்களும் அவளின் விருப்பபடி வாங்கியது தான்…
நீ இல்லாத வீட்டுக்கு நான் வந்ததே இல்ல anjuu இன்னைக்கு தான் நானும் வரேன்…நம்மள உள்ளே அழைக்க யாரும் இல்லன்னு வருத்தபடாம உள்ளே வா…
அவன் அப்படி சொன்னதும் தாத்தா,பாட்டிக்கு என்ன ஆச்சு என்று பதட்டமாக கேட்டாள்..
அவர்கள் இந்த ஐந்து வருட இடைவெளியில் இறந்துவிட்டார்கள் அஞ்சு..ஏற்கனவே வயதானவர்கள் SO,
என்ன ஏன் கூப்பிடல..
கூப்பிட்டா நீ வந்து இருப்பியா என்ன..
நான் கூப்பிட்டு இருந்தாலும்,நீ வந்து இருக்க மாட்ட என்று கோவமாக கூறினான்..
அந்த நாளை தயவு செஞ்சு நியாபக படுத்தாத சரியா..
அவன் அப்படி கூரியதும் அவளுக்கு என்னவோ போல் ஆனது..
SORRYY என்று அழுது கொன்ற கூறினாள் …அவனின் தாத்தா பாட்டி என்னை எப்படி பார்த்து கொண்டார்கள் அவர்கள் இறந்த அப்போ கூட வர முடியாத பாவி நான் என்று தான் தோன்றியது..
உன்னோட அவசர புத்தியால,அவங்களை பத்தி கூட யோசிக்காம போய்ட்ட டி!!
அவள் அழுது கொண்டே அவன் காலில் போய் விழுந்தாள்…என்னை மன்னிச்சிருங்க நான் இப்படிலாம் பன்னிருக்கவே கூடாது என்று அழுது கரைந்தாள்..
சில விஷயங்களை மாத்த முடியாது அஞ்சு அதை விடு,நெனைச்சாலே வேதனைய இருக்கிறது என்று அவனும் அழுதான்..
அவள் அழுவதை அவனால் பார்க்க முடியவில்லை…
ஆனாலும் அஞ்சு என்னணி நீ இப்படி அன்னைக்கு அனாதையாக விட்டிருக்க கூடாது என்றதும் அவள் இன்னும் தேம்பி தேம்பி அழுதாள் …சிறுது நேரம் அழுகையில் கரைந்தவர்கள்,
சரி anjuu சாப்பிடலாமா?? இல்ல பிரெஷ் ஆகிட்டு சாப்பிடலாமா???
பிரெஷ் ஆகிட்டு சாப்பிடலாம் பாவா..
உன் டிரஸ்லாம் அந்த ரூம்ல இருக்கு பிரெஷ் ஆகிட்டு வா! என்று கூறி சென்று விட்டான் ..
அந்த ரூம்மிற்கு சென்றவள் அங்கிருந்த புகைப்படத்தை பார்த்து அழ ஆரம்பித்து விட்டாள்…
“அவ்வளவு அழகாக அவளுடைய அனைத்து புகைப்படங்களும் சுவற்றில் மாட்டப்பட்டு இருந்தது” ..இவளுடைய புகைப்படங்கள் அனைத்தும் ஏதோ கதை சொல்வது போல் தான் தோன்றும்..
அவளுக்கு தேவையான அணைத்து உடைகளும் அவளுக்காக அன்று வாங்கி குமித்து வைத்திருந்தான்…இதை எல்லாம் பார்த்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது அதற்க்கு மேல் முடியாமல் சத்தமாக அழ ஆரம்பித்தாள்.. அவன் அதற்குள் குளித்து விட்டு வெளியே வந்தான் இவளை காணவில்லையே! என்று ரூமுக்கு முன் வந்தவன்..
Anjuu உள்ள வரவா??என்ன ஆச்சு பயந்துட்டியா ???ஆர் you ஓகே …
பசிக்குதுன்னு சொன்ன சீக்கிரம் குளிச்சிட்டு வா சாப்பிடலாம் என்று கூறியவன் வெளியே சென்று விட்டான் ..
என்ன தான் மனைவியாக இருந்தாலும் அவளுக்கும் பழைய நினைவில் இருந்து வெளியில் வர சிறிது காலம் தேவைப்படும் அதனால் நாம் சற்று தள்ளி இருப்பது நல்லது தான்…
அவன் அவளை நெருங்கினால் அவள் வேண்டாம் என்று கூற போவதில்லை..இருவருக்குள்ளும் முதலில் பேசி தீர்த்து கொள்ள வேண்டியது அவ்வளவு இருக்கு ..
அவள் குளித்துவிட்டு ஒரு பிங்க் நிற சுடிதாரில் தலை முடியை தளர்வாக பின்னி இருந்தாள் தலை முடியில் தண்ணீர் சொட்டியது ..
இந்த நேரத்துல எதுக்கு தல குளிச்சிருக்க என்றான்..
அது வந்து என்று சொல்ல வந்தவள் ,அதை புரிந்தவன் ஓகே என்று விட்டான் ..
அதுக்கு எதுக்கு பின்னியிருக்க என்று கூறிவிட்டு அவளிடம் ஒரு க்ளிப்பை கொடுத்து FREEYA விடு இல்ல தலை வலிக்கும் என்றான் ..
வீட்டுக்கு இன்பார்ம் பண்ணியா anjuu ??
அய்யோ மறந்துட்டேன் ….
முதலில் உங்க அப்பனுக்கு இன்போர்ம் பன்னு என்றவனை, முறைத்துகொண்டே “வீட்டிற்கு அழைத்து தான் ஹோட்டல்ல தங்கிருக்கேன் பத்ரமா இருக்கேன் பா” என்று கூறி வைத்து விட்டாள் …அவன் அதற்குள் சாப்பாடு அவளுக்கு எடுத்து வைத்தான்
எங்க அப்பா மேல உங்களுக்கு அப்படி என்ன தான் கோவம் ???