அத்தியாயம் 4:

மயங்கிவளை அருகில் இருந்த மருத்துவ மனைக்கு அழைத்து  சென்றான் …ஒன்றும் இல்லை ரொம்ப SLEEPLESS ஆக  இருந்ததால மயங்கிட்டாங்க நல்லா சாப்பிட்டு ,நல்லா தூங்க சொல்லுங்க…

RESTLESS ஆக இருக்காங்க நல்ல பாத்துகோங்க…இப்ப போய்ட்டு அவங்கள பாருங்க ..ஓகே MAM THANK YOU….

“தூங்க முடியாத அளவுக்கு அவளுக்கு அப்படி என்ன தான் பிரச்சனை???”…..

அவளிடமே கேட்டு விட வேண்டியது தான்…

அஞ்சு என்று அழைத்ததும் கொஞ்சம் சுய நினைவிற்கு வந்தவள்,சற்று நேரத்திற்கு முன்பு, நடந்தது அவளுக்கு நினைவிற்கு வந்தது..”உடனே அவனது சட்டையை பிடித்து இருந்தாள்” ..”எப்படி உன்னால தாலிய கழட்டி குடு என்று கேட்க தோணிச்சு சொல்லு” என்று கத்த ஆரம்பித்தாள்….

“எந்த உரிமை ல நீ அத வெச்சிகுவ அத சொல்லுடி” என்றான்..

”நான் வேண்டாம்ன்னு நீயே முடிவு பண்ணி சொல்லாம கூட விட்டுட்டு போய்ட்ட” இதுக்கு மேல உனக்கு எதுக்குடி அந்த தாலி…

என்கிட்ட குடுத்துட்டு வீட்டுக்கு கெளம்பி போய்கிட்டே இரு…

குடு என்று கையை நீட்டியதும் ,அவளோ பயந்து பின்னோக்கி நகர்ந்தாள் ஒரு கட்டதிற்கு மேல் நகர முடியாமல் சுவற்றின் மேல் முட்டி நின்றாள்.. அவன் அவளுக்கு மிக அருகில் வந்ததும் நகர முயன்றாள்,”நகர முடிந்தாள் தானே நகர்வாள் அந்த அளவுக்கு அவன்  அவளின் இடையை வளைத்து பிடித்து இருந்தான்” ..

“என்னை தொடாதிங்க கையை எடுங்க  என்றாள் அதை எல்லாம் அவன் கேட்பவனா”  என்ன???

நீ சொன்னதும் யோசிக்க வேண்டியது தான்,கைய எடுக்கிறேன் ஆனா நீ தாலிய கழட்டு நான் எடுக்கிறேன் என்று வீம்பாக அப்படியே நின்றான் .

அவனின் அருகாமையில் அவள் தன்னை இழந்து  கொண்டு இருந்தாள் அதனால் தான் அவள் “கைய எடு” என்று கூறி விட்டாள்…

இவளே இப்படி என்றாள் அவனோ அவளிடம் தன்னை மொத்தமாக இழந்து விட்டான்.. எத்தனை நாள் ஏக்கம் அவளின் அருகாமையை விட்டு நகர முடியாமல், அவளின் கழுத்தில் முகம் புதைத்தான் ..அவன் கை அவளிடம் தானாகவே எல்லை மீறியது..”எப்படி டி அப்போ பாத்த மாறி அப்படியே இருக்க என்ன கொஞ்சம் இளச்சிட்ட” அவ்ளோதான் …

கை எடுக்க முடியுமா இல்லையா?நீங்க இன்னொரு பொண்ணோட husband மறந்துறாதிங்க அவள் இப்படி பேசியதும் அவனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது…..

பாத்தியா நீயே, சொல்ற அப்போ தாலிய குடு என்று முதலில் இருந்து வந்தான் ..

“இவனை என்ன தான் பண்றது” …

என்னால முடியாது வேற என்ன வேணாலும் சொல்லுங்க இது மட்டும் முடியாது ..

அப்படியா………

“சற்று யோசித்தவன் இதுக்கு மேல இவளுக்கு நம்ம காதல புரிய வைக்க  முடியாது இனி அதிரடி தான் இவளுக்கு சரி பட்டு வரும்”…

அவன் ரொம்ப கூல் ஆக chairஇல் உட்கார்ந்து  கால் மேல் கால் போட்டு  அமர்ந்துகொண்டு,”நீ எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணனுமே”?பண்ணுவியா ??

“என் பொண்டாட்டி ஏன் வீட்டுக்கு வர வரைக்கும்,நீ என் கூட என் வீட்டுல இருக்கனும்”….

முடியுமா என்ன ???

அது முடியாது என்று கூறி விட்டாள் …..

அப்போ உன் மேல் உனக்கே நம்பிக்கை இல்லையா???

என் வீட்டுல என்னனு சொல்றது என்னால முடியாது ….

அது உன் பிரச்சனை ரெண்டு நாள் டைம் எடுத்துக்கோ …இல்லைனா மூன்றாவது நாள் நம்ம ரகசிய கல்யாணம் வெளிய வரும் …

இப்போ வீட்டுக்கு கெளம்பு …..

அவனையே பார்த்தவள் என்னை மிரட்றியா??

YES BABY….இது கூடவா உனக்கு தெரில??

“உன் சின்ன  மூளைய வெச்சிகிட்டு ரொம்ப யோசிக்காத  ஓகே வா” ….

இப்போ கெளம்பு உன்ன DROP பண்ணிட்டு கிளம்பறேன்..

காரில் செல்லும்போது இருவருக்குள்ளும் அப்படி ஒரு அமைதி….அவள் தான் அதை கலைத்தாள்..

என்னை பழி வாங்க நினைக்கிறியா???

அப்படியா!!!! எனக்கு ஏன் அப்படி தோணல,இப்படிலாம் யோசிச்சா தான் ஒருவேளை collector ஆக முடியுமா madam ???

உன்னை பழி வாங்க நெனச்சிருந்தா இந்த ஐந்து வருசத்துள்ள எப்போ வேணாலும் பண்ணிருப்பேன்…

இப்பவும் சொல்றேன் ரொம்ப யோசிக்காத …நீ சரியாக  யோசிச்சிருந்தா இந்த கேள்வி தேவை இல்லாத ஒன்று இப்போ!!!….

 அதுவும் சரி தான் என்று அமைதியாகவே இருந்தாள் ..

“ANJUUU” என்று ஆசையாக அழைத்தான் அதில் அவள் மொத்தமாக தன்னை இழந்து விட்டாள்…அவள் மூளை இயங்க மறுத்தது…

தன்னோடைய மொத்த காதலையும்  ஒரே வார்த்தையில் கூற முடியுமா என்ன இதோ கூறி விட்டானே …

இருந்தாலும் என்று யோசித்தவள் ……..

அவள் ஏடாகூடமாக எதையாவது யோசிப்பதற்கு முன்பு,அவளை யோசிக்க விடாம இப்போ நான் எதாவது பண்ணனுமே ஆனா என்ன பண என்று யோசித்தவன்,

“இப்பவே  என் கூட வந்துறேன் ….என்னால இதுக்கு மேல உன்னை விட்டு இருக்க முடியலடி” …

காரை அவளின் வீட்டுக்கு செல்லும் வழியில் ஓரமாக நிறுத்தியவன் …”அவளின் கையை பிடித்து தன் நெஞ்சில் வைத்து எவ்ளோ நாள் ஆச்சுடி இவ்ளோ பக்கதுல இருந்து ,எப்படி உன்னால இருக்க முடிஞ்சுது”

எனக்கு இந்த ஐந்து வருடமும் அவ்வளவு வேதனையாக இருந்தது தெரியுமா என்று கூறி விட்டு அவளின் மடியில் படுத்து விட்டான் …ஒரு 5 MINUTES da படுத்துகிறேன்…

அவள் மடி அவன் கண்ணீரால் நனைந்தது ….அவனின் அழுகை அவளையும் அழ வைத்தது…அதில் ஓரிரு துளிகள் அவன் மேல் பட்டு தெறித்தது …

ANJUUUU உனக்கு என்ன தான்டி பிரச்சனை!!அதும் SLEEPLESS ஆக இருக்கற அளவுக்கு என்னடா உனக்கு ஆனது சொன்னால் தானே எனக்கும் தெரியும் …

அவள் அமைதியாகவே இருந்தாள் இதற்க்கு மேல் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தவன்,அவளின் கையில் சில TABLETS கொடுத்தான்…

நல்ல ரெஸ்ட் எடு ஏதுவாக  இருந்தாலும் பார்த்து கொள்வோம் என்றான் … அவள் அருகில் சென்று அவள் நெற்றியில் இதழ்  பதித்து TAKE CARE da…

அவள் இறங்குவதர்க்கு முன்பு ,அவனை அவ்வளவு இறுக்கமாக அணைத்து இருந்தாள்..”இன்னும் இவ மாறவே இல்லை என்று அவளின் அணைப்பே சொல்லாமல் சொல்லியது அவள் அவனை எவ்வளவு மிஸ் பண்ணியிருப்பாள்” என்று புரிந்தது..கிட்டத்தட்ட 15 நிமிடம் அப்படியே இருந்தாள்….

ANJUU எதுக்குடி உன்ன நீயே கஷ்டபடுத்திக்கிற வா! நம்ம வீட்டுக்கு போலாம் இப்பவே ..

“BAVA” என்று அழைத்தவள் ,ஏதும் கூறாமல் அழுதுகொண்டே இருந்தவளின் அணைப்பு கூடிகொண்டே போனது…

சொல்லு மா …

 என்னை உங்களுக்கு பிடிக்கலையா,பிடிக்காம தான் விட்டுட்டு போனிங்களா ???

இது என்னடா புது காதையா இருக்குது! …எவென் பாத்த வேலைடா இது எல்லாம் ..

ஏன்டி இந்த சந்தேகம்??மூன்று மாதம் என்னோடு வாழ்ந்துருக்க,அப்படியும் உனக்கு சந்தேகம் வருதுனா,அப்போ நான் தான் சரி இல்லையோ??

அவள் அவனை ஒரு மாதிரி பார்த்து வைத்தாள்,என்ன டா அவ்வளவு ஆசையா மாமன பாக்கிற …

ரொம்ப ஆசை தான் சார்க்கு??

ஆமா Bangaram(தங்கம்)….எவ்வளவு ஆசைன்னா  உன் கூட மறுபடியும் வாழ்ந்து பாக்கணும் போல இருக்குடி ….

என் கூட இப்பவே வந்தறேன் …எங்கயாவது போய்டலாம்….

சரி நான் கேளம்பிறேன் என்றவள் …

Madam என்றவன், அவளது சேலையை சரி செய்து விட்டான்,அவனை அணைத்து விலகிய பிறகு சேலையும் விலகியது ,அதில் அவள் கையை எடுங்க என்றாள் ..

ரொம்ப பண்ணாத டி ..இதுக்கு முன்னாடி உனக்கு  நான் இந்த மாறி வேலை பாத்ததே இல்லையா???

அதில் அவள் முகம் சிவந்து போனது ….

இதுக்கு மேல இவகூட இருந்தா சரியா வராது என்று யோசித்தவன் ,ஒரு பெரு மூச்சை விட்டவன், அவள் அழுத விழிகளை தொடைத்து விட்டான்,அவள் தலை முடியை சரி செய்தவன் “இப்போ கெளம்பு” …

நான் சொன்னத மறந்துறாத சரியா ??

“ரெண்டு நாள் தான் டைம் ,மூன்றாவது நாள் என் கூட நீ வரணும் இல்லைனா எப்படி வர வைப்பேன்னு உனக்கு நல்லா தெரியும்” …..

அவள் கலக்கமாகவே இறங்கி சென்றாள் …அவள் வீட்டின் உள்ளே செல்லும் வரை கண்ணாடி வழியாக பார்த்தவன்..இவனும் கெளம்பி வீட்டிற்க்கு சென்று விட்டான் …

வீட்டிற்கு சென்றதும் தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்து படுத்தவன் ,அவளின் அருகாமையை மிகவும் நாடினான் …இன்னும் ரெண்டு நாள் எப்போ தான் போகுமோ என்று தோன்றியது…

அவளுக்கே உரிய அவளின் நறுமணம் அவனின் மேல் இன்னும் இருப்பது போல் தோன்றியது..

உடனே அவளுக்கு போன் செய்தான் ,உடனே எடுத்து விட்டாள்…

ARE YOU OK BABY??சாப்பிட்டியா,TABLET லாம் போட்டியா??இப்போ வலி பரவால்லையா ?

“ம்” என்றாள் …

வீட்டிலே ஒன்னும் பிரச்சனை இல்லையே ??

“இதுவரைக்கும் இல்லை இனி நீ எடுக்கிற முடிவுல தான் இருக்கு என்றாள்”..

“என் பொண்டாட்டிய என்கூட அனுப்பி வைங்கன்னு கேட்கிறது தப்பா” என்ன ??..நம்ம நாடு ரொம்ப தான் கெட்டுபோச்சு போ ..

சரி அத விடு BANGARAM…

அப்பறம் என்றான் …

என்ன அப்பறம் என்றாள் …

இந்த பொண்ணுங்களே இப்படி தான் திடீர்னு நல்லா பேச வேண்டியது அப்பறம் வேதாளம் முருங்க மரம் ஏறின மாறி பேச வேண்டியது….

எனக்கும் tired ஆக இருக்கு நீயும் நல்ல தூங்கு ,தூங்காம எதையாவது யோசிக்காத சரியா??love you and good night என்றான் ..

அவன் கொடுத்த தைரியத்தில் இவளும் உறங்கி விட்டாள்..

நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றாக உறங்கி எழுந்தாள் …எழுந்ததும் குளித்து விட்டு வந்தவள்,போன் யை  எடுத்தவள் “good morning msg” வந்து இருந்தது ..

அதை பார்த்து விட்டு வந்தவள் ,ஒரு purple colour சேலையை அணிந்து கொண்டு ,வழக்கம் போல் அவளின் தாய் அவளின் பின்னலில் மல்லிகை சரத்தை வைத்து விட்டார்  …

Anjuu இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கடா என்றார் …

அவளின் தந்தை வந்தார்..வந்ததுமே நீ என்ன டா யோசிச்சிருக்க! என்றார் …

நல்ல முடிவா சொல்றேன்.. அப்பா, அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு வெளியூர்ல இருக்கு போய்ட்டு வந்துறேன் ….

மீட்டிங்க்கு என்னைக்கு எப்போ கெளம்பனும் என்றார் ?

நாளை கழித்து செல்ல வேண்டும் என்றாள் ….

அவர் சிறிது சந்தேகமாக அவளை பார்த்தார் ???

அவள் சிரித்து கொண்டே சென்று விட்டாள்.

அவள் சிரித்ததும் தான் அவருக்கு இன்னும் சந்தேகமாக வந்தது ..

செல்லும் அவளையே யோசனையோடு பார்த்து கொண்டு இருந்தார்…