அத்தியாயம் 3 :

அதிகாலையிலே  எழும் பழக்கம் கொண்டவன் ஆதலால் தன்னுடைய EXCERSISE யை முடித்துக்கொண்டு TOWELலால் துடைத்து கொண்டு மாடி ஏறினான்..

இவனை வரவேற்கவோ இல்லை, வெளியே செல்லும்போது BYE சொல்லவோ யாரும் கிடையாது … சிறு வயதிலேயே அம்மாவைபிரசவ வழியில் இழந்து இருந்தான்.. அதன் பிறகு தந்தையையும் இழந்து விட்டான்  ..

இவனை வளர்த்தது தாத்தா, பாட்டி தான் ….அவன் நேரமோ என்னவோ அவர்களையும் இந்த ஐந்து வருட இடைவெளியில் இழந்து விட்டான்….

“இவள் விட்டு சென்ற பிறகு இவன் பட்ட வலியும் வேதனையும் சொல்ல முடியாத ஒன்று”…இந்த வலியை மறக்கவோ என்னவோ! கடினமாக உழைத்தான்…இந்த சிறு வயதில் அவனின் முன்னேற்றம் அனைவரும் பேசும்  அளவிற்கு வளர்ந்து விட்டான் ..ஆனாலும் இதை எல்லாம் என்னோடு கொண்டாட யார் இருக்கிறார்கள்??.என்று தான் அவனுக்கு தோன்றும் ..

“இதுக்கு மேல உன்னை விட்டு  என்னால இருக்க முடியாதுடி …உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்ன்னு  எனக்கு  தெரியும்டி “…

இவளை பார்பதற்கு முன்பு வரை இனி அவள் தனக்கு வேண்டாம், ஏன் அவளை பார்க்கக்கூட கூடாது என்று தான் நினைத்து இருந்தான்..

ஆனால் !!!அவளை மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு  பார்த்த போது,

“நேற்று நான் பார்த்தது உன்னை தானா  சொல்

இன்று நான் பார்பதும் உன்னை தானா  சொல்

“ஆடை மாற ஜாடை மாற கூந்தல் பாதம் யாவும் மாற”

“கண்களோ உன் கண்களோ ஏன் மாறவில்லை” …..

அம்மா! GOOD MORNING……

அப்பா எங்கே மா?வெளியே சென்று விட்டாரா? என்று கேட்டவளுக்கு,

“ம்” ……என்ற ஒற்றை பதில் அளித்தார்.. அதிலே அவளுக்கு புரிந்து விட்டது இன்னைக்கு காலையிலே ஒரு பிரச்சனை உருவாகி விட்டது என்று புரிந்து கொண்டவள்.. அவர்களே, கூறட்டும் என்று அமைதி காத்தாள்….

அவள் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது, அஞ்சு! அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறார் ..அப்பாவின் நண்பனின் மகன் அவங்க FAMILYல எல்லாருக்கும் OK நீ என்ன சொல்ற?

பாதி சாப்பட்டோடு கை கழுவி விட்டு எழுந்து விட்டாள்…

அவளின் தாய்க்கோ கோவம் உச்சத்தை அடைந்தது…எவ்வளவு தான் இவளிடம் பொறுமையாக கேட்பது ..

தனது பொறுமையை இழந்தவர் ,உன் மனசுல அப்படி என்ன தான்டி வெச்சு இருக்க!!! வெளிய சொன்ன தான தெரியும் ..

நீயும் நிம்மதியா இல்லாம எங்களையும் நிம்மதியா இருக்க விடாம சாகடிக்கிற….இன்னைக்கு ஒரு முடிவு சொல்லிட்டு நீ எங்க வேணாலும் போ….

“நான் உங்களுக்கு அவ்வளோ தொல்லையா இருக்கேனாமா !!!

உன் வயசுல இருக்க எல்லா பொண்ணுங்களும் அவங்க வீட்டுல சொல்றத கேட்டு கல்யாணம் பண்ணி  இன்னைக்கு ரெண்டு கொழந்தைக்கு அம்மாவா இருகாங்கடி..எங்களுக்கு இருக்க ஒரே பொண்ணு நீ உனக்கு கல்யணம் பண்ணி வெச்சி அழகு பாக்கணும்ன்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா ,உன்னோட சுயநலத்துக்காக வாழ்ற எங்கள பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாற்ற…

அவளின் அப்பா “சுமதி அமைதியா இரு அஞ்சு நீ கெளம்புடா ஆனா  யோசிச்சி ஒரு நல்ல முடிவை சொல்லுடா  என்றுகூறினார் ..

இரவு எல்லாம் அவனின் நினைவில் அழுது கரைபவள் தூக்கத்தை தொலைத்து இருந்தாள்.. இதில் இன்று இவளுக்கு மாதவிடாய் பிரச்சனை வேறு  இது போதாது என்று இவர்கள் வேறு காலையிலே நம்மளை அழ வைக்க தான் வேண்டுமா ???

அவர்களையும் குறை சொல்ல முடியாது நேற்று இரவு கலந்து கொண்ட party சிலர் இவர்களின் வளர்ச்சியின் மேல் பொறமை கொண்டவர்கள் வெறும் பெண் பிள்ளை வைத்து கொண்டு இந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே  இருக்கிறார்ளே  என்று சில ஆண் மகன்களை பெற்ற தாய்மார்கள்  “ஏன் இன்னும் உங்கள் பெண்ணுக்கு திருமணம் செய்யவில்லை உங்கள் பெண்ணுக்கு வேறு எதாவது உடலில் பிரச்சனையா என்று கேட்டு அவர்களை நோக்கி ஒரு விஷ குண்டுவை தூக்கி எறிந்தனர் ..

அதோட effect தாங்க இந்த marriage டாக் …..

ஒருவாறு தன்னை சமாளித்து கொண்டு அலுவலகத்தை நோக்கி சென்றாள்…அங்கு சென்றதும் சில கோப்புகளை பார்த்து கொண்டு இருந்தவள் ,மேலிடத்தில் இருந்து போன் வந்ததும் அதை எடுத்தவள் “ஓகே சார்” என்று கூறி வைத்து விட்டாள்…

ஐயோகடவுளே  !!! இருக்கிறது போதாதுன்னு  இவனை வேற போய்ட்டு பாக்கணுமா?? எல்லாம் ஏன் நேரம் என்று சிறிது நேரம் யோசித்தவள் கிளம்ப ஆயத்தமானாள்…

Companyயை நோக்கி சென்றாள்..அவள் வரும்போது மேலே இருந்து பார்த்தவன் ,casual ஆக வெளியே வந்தான்,ஒன்றும் தெரியாது போல் வாங்க collector madam என்றான்

“ம்” என்றவள் ,வேலை எல்லாம் நல்ல தான போகுது என்றாள்..

 உங்க புண்ணியத்துல நல்லா போகுது madam என்றான் ..

சற்று  நேரம் எல்லா வேலையும் சுற்றி பார்த்து விட்டு வந்தவள் ,எல்லாம் ஓகே தான் நம்ம கெளம்புவோம் என்று முடிவு செய்தவள்..

சார் EVERYTHING இஸ் ஓகே  …நான்  கெளம்பறேன் என்று கூரியதும் தான் அவன் அவளை கவனித்தான் ..

மிகவும் சோர்ந்து  போய் இருந்தாள் என்னவாக இருக்கும் என்று கணித்தவன் அவளின் அவசரத்தை உணர்ந்தவன்..ஒன்றும் பேசாது தன்னோடைய அறைக்கு அழைத்து சென்று “feel free da” பிரெஷ் ஆகிட்டு இரு  வந்துறேன் … வெளியே சென்றவன் pad எடுத்து வந்து அவளிடம் கொடுத்தவன் எதுவும் சொல்லாமல் வெளியே சென்று விட்டான்..

அவள் காலையில் இருந்த மன நிலையில் அதை எடுக்க மறந்து விட்டாள் …அதற்காக தான் அவசரமாக கெளம்பினாள்..

 இதை கூட புரிந்து கொள்ள முடியாதவனா அவன்..”ஈருடல் ஓருயிர்” என்று வாழ்ந்தவன்..அந்த “மூன்று மாத கல்யாண”  வாழ்கையில் அவளின் சிறு கண் அசைவுகளை கூட சொல்லாமலே புரிந்து கொண்டவன்…..

அவளுக்கே அவளை நினைத்து வேதனையாக இருந்தது,அவனின் பாசம் அவள் அறியாத ஒன்றா என்ன ?? அன்று தோன்றும் அதே பிரமிப்பு இன்றும் அவளுக்கு தோன்றுகிறது…

அவன் தன் அருகாமையில் இருக்கிறான் என்ற நினைப்பில் அங்கே இருந்த SHOFA வில் கண் அயர்ந்தாள் ..அவளுக்கு மதிய உணவை வாங்கி வந்தவன் குழந்தை போல் தூங்கும் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்…

அவள் முகம் சொல்லொண்ணா துயரத்தில் இருக்கிறது என்பதை அவள் அழுத விழிகளே கூறுகிறது என்னவென்று சொன்னால் தானே தெரியும் அவ்வளவு அழுத்தமாக இருக்கிறாள் …

அவளையே பார்த்து கொண்டு இருந்தவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்தான் எவ்வளவு வருடத்திற்கு பிறகு,

 ….இதுக்கு மேல் அவள் அருகில் இருந்தாள், “அவளிடம் மொத்து தான் வாங்க வேண்டும்” என்று முடிவு செய்தவன் சற்று தள்ளி சென்று அஞ்சு என்று அழைத்தான்  உடனே அவள் எழ வில்லை உடல் வலி அதிகமாக இருந்ததால் அதுவும் காலையில் ஒன்றும் சாப்பிடாமல் வந்ததால் என்னவோ அவளால் எழ கூட முடியவில்லை…

அவளின் அருகில் சென்றவன் அவளை தொட்டு எழுப்பினான், சற்று அசதியாக தான் எழுந்தாள்..

“வாங்க madam சாப்பிடலாம்” என்றான்

இல்ல சார் இருக்கட்டும் நான் கிளம்பறேன்..வேலை முடிச்சி குடுத்துட்டு தான் போக சொன்னதாக சொன்னிங்க இப்ப நீங்க கெளம்பினா என்ன அர்த்தம்ங்க என்றான் ………

சரியான devil சார் நீங்க என்றாள் …

Oh thank you madam …நீங்க சொன்னா சரியா   தாங்க இருக்கும்

வா சாப்பிடலாம், என்று அழைத்தவன் அனைத்தையும் tableலில் எடுத்து வைத்தான் ….அதை அவளுக்கு பரிமாறி விட்டு தானும் எடுத்து வைத்து சாப்பிட்டான்… சாப்பிடும் வரை இருவருக்குள்ளும் அப்படி ஒரு அமைதி கடைசியாக தயிரை அவள் தட்டில் ஊற்றி சாப்பிட வைத்தான் …அவனுக்கு நன்றாக தெரியும் அவள் தயிர் இல்லாமல் சாப்பிட மாட்டாள்  என்று …”அதும் மட்டும் இல்லை அவள் பசியும் தாங்க மாட்டாள்” என்று நன்றாக தெரியும் அதனால் தான் அவளை கட்டாய படுத்தி சாப்பிட அழைத்தான் …..

…வேலை செய்யும் இடத்தை மறுபடி ஒரு முறை பார்த்து விட்டு வந்தவள் ,எல்லாம் ஓகே தான் சார் பார்த்துகோங்க நான் கெளம்பறேன் ….

அவன் முகம் சற்று கடுமையாக ஆனது ,அப்படி என்ன அவசரம் இரு போலாம் என்று LAPTOPல் முகம்  புதைத்து கொண்டான்…அவனின் கோபம் அவள் அறிந்த ஒன்றே!!! அதனால் சற்று அமைதியாக இருந்தாள் ..

 நான் collector ஆஹ இல்லை civil engineer அஹ என்று யோசித்து கொண்டு இருக்கும்போதே,, அவன் civil engineering படிச்சி முடிச்சிட்டு அது வேண்டாம் ..நான் ஆனா collector ஆக தான் ஆவேன்னு profession  மாத்திகிட்டு இதுல பெருமை வேற நான் collectorன்னு …

அவனை முறைத்து வைத்தாள்…ஏதுவா இருந்த என்ன நான் படிச்சி  தான வாங்கினேன்,என்று கூறிவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள்….

அவன் வேலை செய்வது போல் laptop ல் நுழைந்து கொண்டான் நீங்கலாம் நெனைக்கிற மாறி நம்ம hero வேலைலாம் பார்க்களை அவனோட heroineயை தான் laptopலில் இருந்து சைட் அடித்து கொண்டு இருந்தான் …

உள்ள போய்ட்டு ரெஸ்ட் எடு! என்று கூறி விட்டு, அவளுக்காக சில வேலைகளை பார்த்து விட்டு  இப்பவே கண்ண கட்டுதுda  சாமி நமக்கு மட்டும் ஏன் இத்தனை வில்லன் வாழ்கையில எங்கு எங்கு இருந்து தான் வரானோ ….

Ufff………

 மத்தவங்கள விட “இவ தான்” எனக்கு பெரிய வில்லியா  இருக்காளே!!!!!

 …இப்ப இவள எப்படி சமளிக்கிறது  என்று யோசித்தவன்,வேறு வழி  இல்லை கேட்டு விட வேண்டியது தான் அவளுக்கு கஷ்டமாக தான் இருக்கும் ஊசி போடாமல் காய்ச்சல் போகுமா என்ன???  ….

  என் பொண்டாட்டிக்கு மாப்பிள்ளை பாக்க இவனுங்க யாரு ???அவ்வளவு ஆத்திரமாக வந்தது …..

இவளை பார்ப்பதர்க்கு முன்பு வரை அவள் வேண்டாம் என்று தான் முடிவு செய்து இருந்தான் ஆனால் என்று அதை உணர்ந்தானோ அன்றிருந்து அவளை கண்காணிக்க அவள் வீட்டிலே ஆளுங்களை போட்டு இருந்தான் …

    சரி அவளை போயிட்டு  சமாளிப்போம், என்று அவன் உள்ளே செல்லும்போது அவள் உறங்கி இருந்தாள் “உறங்கும் போது அவளையும் அறியாமல் அவளின் தாலி செயின் வெளியே வந்தது”அதை பார்த்தவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம் கண்ணில் நீர் வழிந்தது ….

“அவளின் அருகிலே அமர்ந்தவன் தாலி செயின் யை தொடும்போது அவள் எழுந்து பார்த்து  பதறி விட்டாள்  ….

 என்ன டி இது ???இதுக்கு என்ன தான்டி  அர்த்தம்??என்று கேட்டு கத்தினான் …..

 அவள் ஏதும் பதில் சொல்லாமல் அழுததால் கோபம் கோபமாக இவனுக்கு வந்தது ….

ஒன்று அழ வேண்டியது இல்லை என்றால் அழுத்தமாக இருக்க வேண்டியது……. “இதற்க்கு மேல் இவளிடம் பொறுமையாக இருந்தாள் வேலைக்கே ஆகாது” என்று முடிவு செய்தவன் தன்  மனதை கல்லாக்கி கொண்டு கேட்டு விட்டான் ,

“நான் கட்டின தாலியை கழட்டு டி” !!!!!!

அதை கேட்டவள் மயங்கி அவன் மேலே சரிந்தாள்…………

 அஞ்சு…..