…….அதிகாலையில் எழுந்தவளுக்கு ஏனோ மனம் சற்று உறுத்த ஆரம்பித்தது, இனி அடிக்கடி அவனை பார்க்க நேரிடுமே என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு மனதில் சிறு தைரியம் தோன்றியது ….
“இனி அவனை கண்டு பயந்து ஓடி ஒளிய முடியாது எதுவாக இருந்தாலும் சமாளிப்போம் என்று சிறு நிம்மதியோடு குளிக்க ஆயத்தமானாள்”.
அஞ்சலியின் மூளை இப்படி யோசித்தால்! அவள் மனமோ ,அவனை காண்பதே போதுமானது! என்று நிம்மதி கொண்டது.
“வழக்கம் போல் தன் மகளை ஆசையோடு பார்த்த சுமதி, “அஞ்சலி என்ன டா இன்னைக்கு ஒரே சந்தோசமா இருக்க மாறி இருக்கு”என்றார்..
அப்படியா சொல்றிங்க! என்று கூறியவள் உடனே தன்னை கண்ணாடியில் வெகு நாட்களுக்கு பிறகு பார்த்தாள்,இல்லை இல்லை வெகு வருடத்திருக்கு பிறகு தன்னை கவனித்து பார்த்தாள் தாய் கூறியது உண்மை தான் போல. இன்று ஏனோ புத்தம் புது ரோஜாவை போல் இருக்கிறோம் என்று அவளுக்கே கூட தோன்றியது .
“சிறு புன்னகையோடு அலுவலகத்திற்கு சென்றாள்.அவள் புன்னகையை அவள் அலுவலகத்தில் இருப்பவர்கள் மட்டும் இல்லை வேறு ஒருவனும் ரசித்து கொண்டு தான் இருந்தான்.
அவள் உள்ளே நுழைந்ததில் இருந்து ரசித்து கொண்டு தான் இருந்தான் ,கருப்பு வண்ண சேலை அவளை மேலும் அழகாக காட்டியது. அந்த புடவை அவளின் நிறத்தை சற்று தூக்கி காட்டியது அதும் அவள் இடையை பார்க்கும்போது அவன் மனதிற்க்குள் ஒரு பாடல் தான் தோன்றியது ,
அவள் அவனை சற்று நெருங்கியதும் சுதாரித்து விட்டாள் ,தன்னை தேடி வந்து இருக்கும் அவனை பார்க்கதது போல் போய் அமர்ந்து விட்டாள்..அதை பார்த்தவனுக்கு “அவன் காதின் இரு பக்கமும் கடுப்பில் புகை வராத குறை தான்” அதில் சிறு நிம்மதி அடைந்தவள்,
THEN சொல்லுங்க சார்! எதுக்காக என்ன தேடி வந்துருக்கிங்க அதற்க்கு பதில் கூறாமல் “ஒரு கோப்புகளை நீட்டினான்”.அதை வாங்கியவள் உட்காருங்க சார் என்றாள் ..”அது அந்த பயம் இருக்கட்டும்” என்பது போல் அவளை பார்த்தான்.
அதை அவள் படிக்க ஆரம்பித்ததும் ,இவன் அவளை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்தான்…
“முதலில் அவள் கழுத்தை தான் பார்த்தான் சிறு கோல்ட் செயின் அணிந்து இருந்தாள் அவன் எதிர்பார்த்த எதுவும் இல்லாததால் சிறு ஏமாற்றம் அடைந்தான் .வெகு வருடத்திருக்கு பிறகு அவளை இவ்வளவு அருகாமையில் பார்க்கிறான்””…வழக்கம் போல் அவள் முகத்தில் EXTRA அழகாக இருக்கும் அந்த “மூக்குத்தியை” பார்த்து கொண்டு இருந்தான் ..அது அவளிடம் அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று …
அவள் அருகாமையில் இருக்கும்போது எல்லாம் ,அவள் காதில் கோலம் போட்டு கொண்டே கூறுவான் “என்ன ஏன் டி இப்படி உன் பக்கம் இழுக்குற என்று உருகி குழைவான்”.அதில் அவள் முகம் சிவந்து தன்னை விரும்பியே அவனிடம் சரண் அடைவாள் .
அதை எல்லாம் சற்று யோசித்தவன் அவளை ஏக்கத்துடன் பார்த்தான்…
அவளோ அதை எல்லாம் கவனிக்கமால் “தன் வேலை தான் முக்கியம்” என்பது போல் கோப்புகளை பார்த்து கொண்டு இருந்தவளை, “இவளை என்ன தான் செய்ய”?
உடனே அவனை கவனித்தவள் என்ன என்று கண்ணால் கேட்டவள்,அவளிடம் சற்று திமிராக எப்படி கலெக்டர் மேடம்! என் சைடுல இருக்க எல்லா problem சரி ஆகிடிச்சா, இப்ப APPROVAL பண்ணுவிங்க தான ,அவளுக்கு நன்றாக தெரியும் பணம் கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும் நடக்கும் என்று ….
அவளோ ரோம்ப CASUAL ஆக இதெல்லாம் எங்களுக்கு தெரியும் சார் என்றாள்..
அப்படியா? …. என்று தெரியாதவன் போல் கேட்டான்
உங்க வேலை முடிஞ்சுதுல அப்பறம் என்ன சார் கெளம்பலாம் இல்லையா???
ஏனோ தெரியவில்லை அவளிடம் வம்பு இழுப்பது அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது …
அப்றம் COLLECTOR மேடம் ப்ரீயா இருந்த வாங்களேன் ஒரு காபி TEA குடிக்கலாம் ..
எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்ல சார் ..அவனுக்கு நன்றாக தெரியும் அவள் அருந்த மாட்டாள் என்று,
மேல் உத்தரவு மேடம் SITEயை நீங்க வந்து அடிக்கடி பார்க்க வரணும் என்று கூறினான் அவன் அப்படி கூறியதும் “அவனை சந்தேகமாக பார்த்தாள்” இதுக்கு எவ்வளவு சார் காசு கொடுத்தீங்க என்று கேட்டு விட்டாள்..
அவன் முகத்தில் அப்படி ஒரு கோவம் அதை சமாளித்து முகத்தில் சிறு புன்னகையோடு சரிங்க மேடம் என் வேலை முடிந்தது என்று சைகையில் கூறியவன் எழுந்து கிளம்பினான் சற்றுதூரம் நடந்தவன், திரும்பி வந்து அமர்ந்து
”இன்னும் ஏன் யாரையும் கல்யாணம் பண்ணிகளா????
இதற்க்கு என்னவென்று பதில் கூறுவாள் .
“உன்னால் தான்” என்று..எவ்வளவோ பேர் இதை கேட்டு இருக்கிறார்கள்அன்று எல்லாம் அமைதியாக இருந்தவள் ஆனால் இன்று இதில் சம்மந்தபட்ட்டவனே கேட்டு விட்டானே …
பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் கலங்கிய கண்களோடு அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்………
இவ்வளவு வருஷத்துல இனி ஒரு தடவ கூட உன்னை பார்க்க கூடாதுன்னு தான் இருந்தேன் “ஆனா பாரு விதி” அப்படி விடவில்லையே என்ன பொண்ணுடி நீ !!“என்னை விட்டுடு எப்படிடி உன்னால போக முடிஞ்சுது” ………
உன்னை நான் கண்ணுல வெச்சி பாத்துகிட்டேன்டி …”என் அம்மாவுக்கு அப்பறம் உன்ன தானடி அதிகமா நம்பினேன்டி”! ….ஒருவேளை உன் அப்பன் அதிகமா பணம் வெச்சிருக்க எவனாவது பாத்து வெச்சதால எங்கிட்ட சொல்லாம கூட ஓடி போய்டியா ????
அப்படி என்ன தான் டி உனக்கு என் மேல கோவம்????
இவன் கேட்ட அனைத்து கேள்விக்கும் சற்று நேரம் அமைதியாக இருந்தவள் அதற்க்கு மேல் தாங்க முடியாமல் எழுந்தவள் ,மூச்சு முட்டுவது போல் தோன்றியதும் வெளியே சென்று விடலாம் என்று நகர்ந்தாள்,அவன் வழியை மறித்து நின்றான்.
நான் கேனயன் மாறி கேட்டுகிட்டே இருப்பேன் நீ உன் இஷ்டத்துக்கு கெளம்பற பதில் சொல்லிட்டு போடி என்று கையை பிடித்து கொண்டான் !!!
இதற்க்கு மேல் முடியாது என்று ,தரையில் அமர்ந்து முகத்தை மூடி மடியில் புதைத்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் ….
அவன் ஏதோ ஒரு வேகத்தில் கேட்டு விட்டான் …”இவ்வளவு நடந்தும் தான் மட்டும் ஏன் அவள் அருகில் தன்னை இழக்கிறோம்” என்ற கோவத்தில் கேட்டு விட்டான்..
ஆனால் அவளுக்கு என்னை போல் ஏன் எந்த சலனங்களும் இல்லையே என்ற கோவத்தில் கேட்க ஆரம்பித்து விட்டு” இப்போ ஏன்டா கேட்டோம்” என்று ஆகி விட்டது ..
அவள் அழுததை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை அன்றும் சரி இன்றும் சரி ..அவளை மாதவிடாய் காலத்தில் மட்டும் இல்லை மற்ற நாட்களிலும் அவளை குழந்தை போல தாங்கியவன்…ஆனால் இன்று அவள் அழுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை..
நல்ல வேளையாக வெளியில் இருக்கும் யாருக்கும் இது தெரியாது ,தெரிந்தால் அவளின் தந்தைக்கு உடனே NEWSசென்று விடும் அதற்காக ரகசியமாக ஒரு ஆளையும் நியமித்து இருந்தார்.
அவளின் அருகில் அமர்ந்தவன் “பங்காரம்” (தங்கம் என்று அர்த்தம் தெலுங்கில் ) அழைத்தான் …அவன் அப்படி அழைத்ததும் அவளின் அழுகை இன்னும் அதிகரித்தது..
“பாவா” என்று அவனை கட்டி கொண்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள்,அவனை விட்டு வந்த பிறகு, இதை அதாவது அவர்களின் ரகசிய திருமணத்தையும் அவனை விட்டு வந்ததையும் எப்படி யாரிடம் சொல்வது என்று தெரியாமல் அனைவரிடமும் மறைத்து வைத்து இருந்தாள்,ஏனென்றால் அவளின் வயது அப்பொழுது 22.
இத்தனை வருடம் பூட்டி வைத்ததாலோ என்னவோ ,அதும் அவனே கேட்டதும் அழுகை அவளுக்கு அதிகரித்தது ….தேம்பியவளை முதுகில் தேற்றியவன் அப்போழுது தான் அவன் கை ஒன்றை உணர்ந்தது…
அதை உணர்ந்ததும் அவன் கை ஒரு நொடி சந்தோசத்தில் திடுக்கிட்டது …ஆனாலும் அதை வெளியில் காட்டாமல் அவளுக்கு தேவையான ஆறுதலை அளித்தான்.அழுகை குறைந்ததும் அவளுக்கு தண்ணீரை கொடுத்து குடிக்க வைத்தான் ..
“இதற்க்கு மேல் நாம் இருந்தால் அவள் சங்கடமாக பீல் பண்ணுவாள் என்று சொல்லாமல் கிளம்பி விட்டான் .”
அவள் அழுத முகத்தை பார்த்த பின்பு ஏனோ அவன் மனமும் சோகத்தில் நிறைந்தது ,இவ்வளவு காதலை வைத்துகொண்டு ஏன் என்னை விட்டாய் பிரிந்தாள்???பாருக்கு சென்றான் அங்கு சென்றும் குடிக்க பிடிக்காமல் வீட்டிற்கு சென்றுவிட்டான் ..
வீட்டிற்கு சென்றவன் தன் அறையில் ஒரு புகைப்படத்தை பார்த்தவன் முகம் சொல்லொண்ணா துயரத்தில் இருந்தது …
“பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம் ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி”
“உனக்கெனவே காத்திருந்தலே கால் அடியில் வேர்களும் முளைக்கும் காதலில் வலியும் இன்பம்தானே தானே”
…..இந்த ஐந்து வருடத்தில் இந்த படலை ஆயிரம் முறை கேட்டு இருப்பான் …இன்றும் கேட்கிறான்… தனக்கு ராசி ஒன்று இல்லையோ “எனக்கு பிடித்த எதுவுமே என் கூட ரொம்ப நாளைக்கு ஏன் இருக்க மாட்டேங்குது”….அவள் வெளியில் அழுது விட்டாள் ஆனால் இவனுக்கு ஆறுதல் யார் அளிப்பார் ??கண்ணில் வழிந்த கண்ணீரை தொடைக்க கூட தோணாமல் உறங்கி விட்டான்….
NUVVE NAA PRANAM BANGARAM(நீ என் உயிர்டி தங்கம் )
இங்கு இவன் இப்படி என்றால் அங்கு அவளோ ??எனக்கு மட்டும் ஏன் கடவுளே “இவ்வளவு சோகத்தை கொடுக்கிற கொஞ்சம் நான் நிம்மதியா இருக்க கூடாதா” என்று அழுகையில் கரைந்தாள்…..
அவன் சென்ற பிறகு கொஞ்சம் நிதானத்துக்கு வந்தவள் மிகவும் தர்ம சங்கடமாக வருந்தினாள் ..இதற்கு மேல் இங்க இருக்க முடியாது என்று முடிவு செய்தவள் வீட்டிற்கு சென்றாள் …நல்ல வேலையாக வீட்டில் யாரும்ம் இல்லை …இருந்திருந்தால் தன்னால் அவர்களும் கஷ்ட படுவார்கள் என்று யோசித்தவள் உடனே தன் அறைக்கு சென்றாள்..
படுக்கையில் படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை துக்கம் தான் தொண்டையை அடைத்தது…அழுகை வர மறுத்தது …இன்னொருத்தியின்கணவனை கட்டி கொண்டு அழுது விட்டோமே என்று மிகவும் வருந்தினாள்..
ஆனால் அவள் மனமோ! “அவன் என் கணவன் யாருக்கும் விட்டு குடுக்க முடியாமல் பிடிவாதம் செய்தது” ..
தானும் தன் மனம் கவர்ந்தவனும் திருமணத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படத்தை தன் கை போனில் வருடியது …
அந்த புகைப்படத்தில் அவனின் “முகம் பிரதி பலிக்கும் சந்தோஷம் உண்மை தான்” ஆனால் “இன்று ஏன் நம்பிக்கையை பொய்த்து போக வைத்தான்” ..
ஏன் அவனிடம் நான் கோழையாகவே இருக்கிறேன் இப்பொழுதும் என் மனம் அவன் அருகாமையை தான் நாடுகிறது .