இது என்னுடைய முதல் NOVEL.இதில் வரும் நாயகன் நாயகி:பிரகாஷ் குமார் -கீதாஞ்சலி.இந்த கதாபாத்திரங்களில் வரும் அனைவரும் என்னுடைய கற்பனையே.
அத்தியாயம் 1 :
“காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை”
“என்னோடு உன்னை ஒன்றாக்கும்வரை என்ன செய்தும் வலி தீர வில்லை”……..
இந்த பாடலை கேட்டு கொண்டிருந்தவள் தான் நம் கதாநாயகி கீதாஞ்சலி நாம் அவளை அஞ்சலி என்றே அழைப்போம் .இவள் வயதோ 28 .மாநிறமும் இல்லை பால் நிறமும் இல்லை இரண்டும் கலந்து இருப்பாள் .அடர்த்தியான நீளமான கூந்தலை உடையவள் .நேர்த்தியான மூக்கு அதில் சிவப்பு நிற வைர மூக்குத்தி .பார்பவர்களைதிரும்பி பார்க்க வைக்கும் அழகை உடையவள் .துருதுரு வென்று இருப்பவள் ஆனால் இன்றோ எதனால் இவ்வளுவு வெறுமை என்று அவளை சூழ்ந்து இருப்பவர்களுக்கு யாருக்கும் தெரியாது ஏன் அதற்கான காரணம் அவளுக்கே கூட தெரியாது .அவளின் வெறுமைக்கு காரணம் அவனிடமே உள்ளது …..
“காலை எழுந்ததும் கண் விழிக்க பிடிக்காமல் படுத்தே இருந்தவள் திடீரென்று அவள் கை கழுத்தில் இருந்த தாலியை தொட்டு பார்த்தது .அதை தொடும்போது அவளின் மணவாளனையே நினைத்தது .அவள் தாலியை இந்த ஐந்து வருடத்தில் என்றோ கழட்டி வீசிருக்கலாம் ஆனால்….
“அவளுள் இன்றும் புரியா புதிராய் இருக்கும் ஒரே கேள்வி ஏன் எனை விட்டு சென்றான்? என்பது தான்”.இந்த ஐந்து வருடத்தில் ஒரு முறை கூட என் நியாபகம வரவில்லையா ?என் நினைவுகள் அவனை சிறிதும் பாதிக்கவில்லையா ?”
இதற்க்கு மேல் யோசித்தால் சரி வராது என்று எழுந்தவள் குளிக்க ஆயத்தமானால் .இனி அவனை பற்றி யோசிக்கவே கூடாது ஏன் பார்க்கவேகூடாது என்றுமுடிவு செய்தால் அதன் பிறகே மனம் ஓரளவுக்கு அமைதியாக இருப்பது போல் தோன்றியது .இந்த சிறு நிம்மதியும் இன்று மாலையில் இழக்க நேரிடும் என்று அவளுக்கு தெரியுமா என்ன ??? விதி வலியது னு சொல்லுவாங்க அது நம்ம நாயகியை மட்டும் விட்டு வைக்குமா என்ன?.
“பிங்க் நிற சேலையில் அழகாக மாடியில் இருந்து இறங்கி வந்தவள் …
‘அம்மா ’…….
என்ன ‘TIFFON’ என்று கேட்டு கொண்டு அழகாக படி இறங்கி வந்தவளை அவளின் தாய் சுமதி வாஞ்சையுடன் பார்த்தார் ..அவளின் நீண்ட கூந்தலுக்கு மல்லிகை சரத்தை சூடி விட்டார்.அவள் தற்போது சிரித்து வாழ்வதே அவளின் தாய் தந்தைகாக தான். வசதியான குடும்பத்தை சேர்த்தவள் வேலைக்கு சென்றே அக வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. ஆனாலும் தன்னுடைய சிறு வயது முதல் தமிழ் நாடு அரசு அதிகாரியாக(TNPSC) ஆக வேண்டும் என்ற ஆசைக்காக கடினமாக உழைத்து முதல் முயற்சியிலே வெற்றியும் அடைந்தாள்..
அவளின் தந்தையும் தாயும் BUSINESS MAGENET என்றே கூற வேண்டும் .அவ்வளவு வேலை இருந்தும் தன்னுடைய ஒரே மகளை ஆசையோடும் அன்போடும் வளர்த்தனர் .
அம்மா அப்பா BYE என்று கூறியவள் அவசரமாக சென்றாள்…“அவள் தந்தை டேய் ‘அஞ்சு KUTTY உன்னுடைய ‘GOVT ID CARD’ மறந்துட்டு போறடா என்று கூறியவரை வாஞ்சையுடன் பார்த்தவள் “தேங்க்ஸ் PA” என்றுகூறியவள் ஒரு செல்ல முத்தத்தை அவரின் கன்னத்தில் பதித்து விட்டே சென்றாள். அதை வாங்கி பெருமையாக அணிந்து கொண்டு போகும் தன்னுடைய மகளையே சிறிது நேரம் யோசனையாக பார்த்து கொண்டு இருந்தார் ஸ்ரீராம் .
“அவள் சென்றதும் அவர்கள் அவளை நினைத்து வருந்தினர்.
அவளின் தாய் “இவ வயசு பொண்ணுங்க எல்லாம் ரெண்டு கொழந்தைக்கு அம்மாவா இருக்காங்க அனா இவ மட்டும் ஏங்க எதையோ எழந்த மாறி இருக்கா “ என அழ ஆரம்பித்து வீட்டார்.
“அவளின் இந்த சோகத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் சரி அவனை சுமா விடவே மாட்டேன்” என்று ஆக்ரோசமாக கூறினார்.
தன்னுடைய ‘GOVT OF TAMILNAADU’ என்ற வாகனத்தில் இறங்கினாள்.இறங்கியதும் தன்னுடைய கெத்தான நடையுடன் அலுவலகத்தை நோக்கி சென்றாள் அனைவரும் பவ்யமாக வணக்கத்தை வைத்தனர் “ம்” என்ற ஒற்றை வார்த்தையோடு தலையை அசைத்து விட்டு சென்றாள்.அவளுக்கான GEETHANJALIIAS. என்ற BORADவைக்க பட்ட இடத்தில் அமருவதற்கு முன் ,சுவற்றில் மாட்டி வைக்கப்ட்ட்ட “பெரியார் ,சுபாஷ்சந்திர போஸ், அம்பேத்கர்” அனைவரையும் வணங்கி விட்டே அமர்ந்தாள் இது அவளின் அன்றாட வழக்கமும் கூட.எப்பவும் போல் தனது வேலையை தொடங்கினாள் சில கோப்புகளை புரட்டி பார்த்தவள் GOVT சொன்ன அளவுகளையும் மீறி ஒரு கட்டிடடம் கட்டி கொண்டு இருக்கிறார்கள் என்று இருந்தது உடனே விரைந்து அந்த இடத்தை நோக்கி சென்றாள்…….
“P.G.S CONSTRUCTION COMPANY” என்ற பெயரை பார்த்தாள் ஆனால் சரியாக கவனிக்கவில்லை ஒரு வேலை அவள் கவனித்து இருந்தால் எதிர் காலத்தில் வர போகும் பிரச்சனை சரி செய்து இருப்பாளோ என்னவோ???
‘EXCUSE ME MISTER…! என்று அழைத்ததும் ஒருவன் போன் பேசிக்கொண்டே திரும்பினான் .அவனை பார்த்ததும் சற்று நிலை தடு மாறி தான் விட்டாள்.இவள் காட்டிய சிறு முக மாறுதலை கூட அவன் முகம் காட்டவில்லை அவன் முகமோ அவ்வளவு வெறியோடு பார்த்தது.
“என்னவனா இவன் !!!!!!
எத்தனை நாள் உருகி உருகி பார்த்த அழகு முகம்.ஐந்து வருடத்திற்கு முன்பு பார்த்த அதே முகம் ..அன்றோ ஆசையோடு பார்க்கும் அவனின் கண்கள் இன்று வெறியோடு பார்க்கிறது .
ஆண்களுக்கே உரிய உயரம் ,சிரித்தால் அவனின் கன்னத்தில் விழும் அழகு கன்னத்து குழி .பால் நிறத்தில் இருக்கும் அவனின் நிறம், GIM கு செல்வதால் அதற்கு ஏற்ற உடல் வாகு ..மொத்ததில் பெண்களை ஏங்க வைக்கும் அழகு .அந்த கண்ண குழியில் எத்தனை முறை முத்தம் கொடுத்திருப்பாள் ..
அவனோ அவளை சற்றும் எதிர்பார்க்கவில்லை COLLECTOR வாருவார்கள் என்று தெரியும் அனால் இவள் எப்படி இங்கே என்று தான் யோசித்தான் .அவன் தான் முதலில் சுதாரித்தான் .
என்ன கலெக்டர் மேடம் இப்படி வெச்ச கண்ணு வாங்காம
பாக்குறிங்க ‘ஐந்து வருடத்திற்கு முன்பு பார்த்த மாறி அப்படியே இருக்கேனா’.இல்லை இன்னும் அழகா ஆகிட்டேனா.
ஓகே விஷயத்துக்கு வருவோம் ‘என்ன விஷயமா வந்துருகிங்க .சற்றே நிதானத்துக்கு வந்தவள் அவனுக்கு சற்றும் நான் திமிறில் குறைவில்லை என்று காட்ட விரும்பினாள்
“LOOK MISTER பிரகாஷ் குமார்”உங்கள சும்மா ஆபீஸ்தேடி பாக்க வர நான் ஒண்ணும் உங்க பொண்டாட்டி ஒன்னும் இல்லை ஓகே வா…
பாரா!!! COLLECTOR மேடம் க்கு இவ்ளோ வாய்லாம் பேச தெரியுமா என்ன ?????.படிச்சி தான் வேலை வாங்கினிங்களா இல்லை உங்க அப்பன் காசுல வாங்கின வேலையா ??
தனது கனவையே காசு கொடுத்து வாங்கினேன் என்று கூறுகிறானே!!இவனை என்ன செய்தால் தகும் என்று யோசித்தவள், அப்போ நீங்க இந்த COMPANY உங்க அப்பா காசுல தான் கட்டிக்கிட்டு இருக்ககின்கிளோ???
“ஹே !வாய மூடு டி”.இந்த வேலையால தான இவ்ளோ பேசிக்கிட்டு இருக்க உன்கிட்ட இருந்து அத பிடுங்கி உன் திமிர அடக்கி காட்றேன் டி
பரவலையே சார் கு இபோ தமிழ் லாம் நல்ல பேச வருதே!வேரி குட் .ANYWAYS BESTOFLUCK MISTER PRAKASH KUMAR…இந்த பில்டிங் அஹ நீ எப்படி கட்டி முடிப்ப னு நானும் பாக்றேன்….
மேடம் ,இது ஆசை ஆசயா என் பொண்டாட்டிக்காக ரெடி பண்ணிட்டு இருக்கேன் …அவ்ளோ சீக்கிரம் உங்களால என்கிட்ட இருந்து எதையும் பிரிச்சிற முடியாது.
இந்த “GREAT PRAKASH“நெனச்ச்சா மட்டும் தான் ஏதுவா இருந்தாலும் என்னை விட்டு போக முடியும் .
அவன் தன் மனைவிக்காக தான் என்று கூறியதுமே உடைந்து விட்டாள்…
“என்னை ஏன்டா பாத்தோம் நு இனி டெய்லிஅழனும் டி”
அவள் எதுவும் கூறாமல் சென்று விட்டாள்..அவள் கீழே சென்று கார் ஏறும்வரை மேலே இருந்து பார்த்து கொண்டு தான் இருந்தான் …
“இவளே உலகம் என்று இருந்தவன் அன்று .அவள் காதலோடு பார்க்கும் சிறு பார்வைக்காக ஏங்கி தவிப்பவன்.அன்று அவன் கூறிய ஒரே வார்த்தைகாக இன்றும் அதே மாறி தான் புடவையில் நீண்ட கூந்தலுடன் எனக்கு பிடித்தது போலவே இருக்கிறாள்…
அந்த கூந்தலில் முகம் புதைத்து அவளுக்கே உரிய நறுமணத்தில் தன்னை தொலைப்பவன்…அன்று சற்று உடல் பூசியது போல் இருப்பாள் இன்றோஇவ்வளவு இளைத்து விட்டாள்.அவள் சென்ற பிறகு கண்ணீரோடு எவ்வளவு நேரம் அமர்ந்து இருந்தானோ அவனுக்கே தெரியவில்லை…
“அவளை இன்று பார்த்த பிறகு மனதும் உடலும் தன்னவள் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது..தன்னிடம் சொல்லாமல் கூட விட்டு சென்றவளை ஏன் இந்த மனம் அவளையே நாடுகிறது …அவளுடைய சிறு அணைப்பிற்காக அவன் மனமோ ஏங்கியது பொறுக்க முடியாமல் அதை மட்டுபடுத்த பாருக்கு சென்று விட்டான் ..
ஆண் மனம் பாருக்கு சென்று தன்னை மறக்க முயல்கிறது ஆனால் இங்கு பெண் மனமோ அழுது தீர்த்து கொள்கிறது.
அலுவலக நேரம் முடிந்ததும் வீட்டிற்கு வந்தவள் அம்மாவிடம் சற்று நேரம் சிரித்து பேசிவிட்டு தன்னுடைய தனிமை என்னும் நேரத்திற்கு சென்று விட்டாள்…
அவனை அங்கு பார்த்ததும் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு இல்லை ..ஐந்து வருட ஏக்கம் அவனை பார்த்தால் போதும் என்ற மனதிற்க்கு இதுவே என் வாழ்நாளுக்கும் போதும் என்றே தோன்றியது…
அவன் ஒவ்வொரு முறையும் அவளை அணைக்கும் போது அதில் பாதுகாப்பயே உணர்வாள்..அதனால் தான் என்னவோ அவனிடம் தன்னை மொத்தமாக தொலைத்து இருந்தாள்…
அவளின் இந்த திடீர் திருமணம் வீட்டில் யாரும் அறியாத ஒன்று ..அதை பெற்றோரிடம் மறைக்க அவள் படும் பாடு அவளே அரிவாள் .
“அவர்களின் ரகசிய திருமணம் யாரும் அறியா ஒன்று அன்று இரவு அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும்.இந்த தாலிக்கு மட்டும் அன்று ஆயிரம் முத்தங்களை அளித்திருப்பான்..அவனின் எத்தனை நாள் ஏக்கம் என்று அவன் ஆசையாக கூறுவதை கேட்டு இருக்காளே” ..
“ ஆனால் இன்று அதை பார்க்கும்போது அவன் வேண்டும் என்றே தோன்றுகிறது..ஆனால் மற்றொரு மனமோ அவன் வேறு ஒருத்தியின் கணவனாக இன்று இருக்கிறான் இனி அவனை பற்றி சிந்திக்கவே கூடாது மூளை கூறினாலும் அவள் மனமோ அதை ஏற்க மறுத்தது..
“அழுது அழுது ஓய்நதவள் உறங்கியும் போனாள்”…..
“கண்ணான கண்ணே என் கண்ணாளா என் உள் மன காதலை கண்டாயா”…………