சூரியன் 8

“பிரியசகி, எல்லாமே தயாரா இருக்கு. எழுந்திரு. நீ வீழ்ந்திருக்கும் நேரமில்லை எழுந்திரு” சத்தமிட்டான் இனியவன்.

பிரியசகி சோர்வுடன் கரத்தை நீட்டினாள். ஒரு பக்கம் சுவர்ணலதாவும் மறுபக்கம் இந்துஜாவும் அவளை தூக்கி நிறுத்தினார்கள்.

வயிற்றை பிடித்துக் கொண்டு சரண் முன் அவள் வர, இனியவன் ஒரு பைல்லை அவளிடம் நீட்டினான்.

சரண் மூஞ்சியில் அந்த பைல்லை விட்டெறிந்து அவளது தாலியை கழற்றி அவன் மீது சினமுடன் எறிந்து, அவளை பிடித்திருந்தவர்களை நகர்த்தினாள் பிரியசகி.

எதுவும் பேசவில்லை. அவனை உறுத்து விட்டு இனியவனை பார்த்தாள்.

இனியவன் சரண் முன் வந்து, “இனி நீங்கள் கோர்ட்டில் சந்திக்கலாம். இது நீங்கள் இருவரும் கையெடுத்திட்ட விவாகரத்து பத்திரம்….”

பிரியசகி, ஒரு வாரம் கழித்து தான் கோர்ட் ஆர்டர் வந்தது. ஆனால் உங்களை இந்த நிலையில் ஒரு வீடியோவை உங்களது வக்கீலுக்கு அனுப்பினேன். அவர் இன்றே முடிச்சிறலாம்னு சொன்னார். பதினொரு மணிக்கு உங்க கேஸ் கோர்ட்டில் நடக்கும் என்றான்.

“விவாகரத்தா? நான் எங்கே கையெழுத்திட்டேன்?” சரண் அப்போதும் ஆணவமுடன் கேட்டான்.

“நான் தான் உங்களிடம் உங்களுக்கு தெரியாமல் கையெழுத்து வாங்கினேன்” தேனு அக்கா வந்தார்.

வாட் தி கெல்?

கிழிந்த உதட்டினூடே சிறு புன்னகை பிரியசகியிடம்..

உங்களுக்கு தெரியாமல் நானே வக்கீல் ஏற்பாடு செய்து அவரிடம் உங்களை பற்றி கூறி பேசவும் வைத்தேன் என்ற இனியவன், அவனை நெருங்கி முழுக்கை சட்டையை மடக்கி சரண் வயிற்றில் ஓங்கி குத்தினான்.

நீயெல்லாம் மனுசனாடா ச்சீ…கேவலமான பார்வையை உதிர்த்து, “ஆல் தி பெட் பிரியசகி” என்றான்.

கையை நீட்டி, “ரொம்ப தேங்க்ஸ் சார்” என்றாள் வயிற்றை பிடித்தவாறு.

“முதல்ல ஹாஸ்பிட்டல் போங்க. சாப்பிடுங்க. எத்தனை நாள் இந்த பரதேசி சாப்பிட, தூங்க விடாமல் செய்தானோ?” திட்டிக் கொண்டே தன்னவளை கண்ணில் நிரப்பி வீட்டிற்குள் சென்றான் இனியவன்.

“இந்து…” விஷ்ணு அழைக்க, பெரியம்மா கிளம்பலாமா? என்னாலும் முடியல. பிரியாவை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லணும்..

நோ..என்ற சஞ்சய், அம்மா வீட்டுக்கு போகலாம். பெண் மருத்துவரை வரச் சொல்கிறேன்.

“வீட்ல எப்படிப்பா?” நாகேந்திரன் கேட்க,

“நான் பார்த்துக்கிறேன்பா. ஹாஸ்பிட்டல் போனா நிறைய கேள்விக்கு பதில் சொல்லணும். இவள ஒரு மாதிரி பார்ப்பாங்க. எதுக்கு? வீட்லயே பார்த்துக்கலாம்” அவன் கூற, அவர்கள் சென்றனர்.

வண்டியில் செல்லும் போதே சஞ்சய் அவனுக்கு தெரிந்த மருத்துவரை அழைத்து விசயத்தை சுருக்கமாக கூறி அவன் வீட்டிற்கு வர சொல்லி அழைப்பை துண்டித்தான்.

சஞ்சய் வீட்டிற்கு வரவும் காரிலிருந்து இந்துஜாவையும் சுவர்ணலதாவையும் பிடித்துக் கொண்டு பிரியசகி இறங்கவும் சரியாக இருந்தது.

பெற்றோர் அறையின் பக்கமிருக்கும் அறைக்கதவை திறந்த சஞ்சய், கண்ணாலே தன் தாயை அழைத்தான்.

முதலில் அவன் உள்ளே சென்று சன்னலை திறந்து படுக்கையை நேராக்கி பிரியசகியை பார்த்துக் கொண்டே வெளியே சென்றான்.

“மாமா, ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கலாமே!” பிரசாத் கேட்க,

சேர்க்கலாம். கோர்ட்டுக்கும் செல்லணும். வக்கீல் யாருன்னு தெரியலை. இனியவனிடம் விவரம் அடங்கிய அனைத்து கோப்புகளையும் வாங்கணும் என்றான்.

மாமா, நானும் வாரேன்..

“டாக்டர் வந்துட்டு போகட்டும். நாம கிளம்பலாம்” சஞ்சய் அமர, அவனுடன் மற்றவர்களும் அமர்ந்தனர்.

“நீ அவகிட்ட பேசலாம்ல? அவளுக்கு ஆறுதலாக இருக்குமே!” சஞ்சய் அவன் கஷ்டத்தை காட்டிக் கொள்ளாமல் பிரசாத்தை பார்த்தான்.

என்ன பேச? பேச எதுவும் இல்லை…

“அண்ணா, என்ன இப்படி சொல்ற? அவ நம்ம பிரியா. அவள் எந்த நிலையில் இருந்திருக்கிறாள்? நாம் தான் அவளை கவனிக்காமல் விட்டுட்டோம்” நவீன் வருந்தினான்.

“அவளை கவனிக்க நாம யாரு?” விரக்தியுடன் பிரசாத் பேச, இருவரும் அவனை பார்த்தனர்.

“அண்ணா, நீங்கள் இருவரும் காதலித்தீர்கள்” நவீன் கூற, “முடிந்த விசயத்தை பேசாதே!” கடுமையாக கண்டித்தான்.

“அவளுக்கு சரியானா நீ பார்த்துக்க மாட்டீயா?” சஞ்சய் பிரசாத்தை கவனிக்க,

“என்னால அவள பார்த்துக்க முடியாது. எனக்கெல்லாம் அவ செட் ஆக மாட்டா. உங்களுக்கு என்ன மாமா அவள் மீது அக்கறை?” சஞ்சயின் ஒரு தலைகாதல் தெரிந்தும் கேட்டான் பிரசாத்.

அவளுக்கென யாருமில்லை. அவள் குணத்திற்கு சும்மா இங்கே இருக்க மாட்டா. சரியானவுடன் கிளம்பிடுவா. தனியா இருக்கிறதும் பிரச்சனைல்ல? அதான் கேட்டேன்.

எங்களோட ப்ரேக் அப் எதற்குன்னு நினைச்சீங்க? அவங்க பாட்டியாலா?….இல்லவே இல்லை. அவளால் தான். நம்ம ஜா மாதிரி யாருடனும் சண்டைக்கு செல்ல மாட்டாள். ஆனால் ரொம்ப பொசசிவ். எங்க பக்கத்து வகுப்பு பொண்ணு என்னோட பேசிட்டான்னு அவளை அடிச்சிருக்கா…

அதை கேட்டதுக்கு உனக்கு என்னோட பேச போராகிடுச்சா? அதான் அவளோட பேசுனியா? கேட்டு எனக்கு இருந்த பிரச்சனையில் மேலும் பிரச்சனையாக தான் இருந்தாள். அப்புறம் என்ன செய்ய? நானே ஒதுங்கி விட்டேன். அப்பவும் விடாமல் அந்த பொண்ணை என்னோட சேர்த்து பேசவும் கோபத்தில் நானும் வாய்க்கு வந்தபடி திட்டிட்டேன். அவளே ப்ரேக் அப் சொல்லீட்டு போயிட்டா….அப்புறம் பேசுவதை நிறுத்திட்டோம். ஜாவுக்கு கூட இந்த விசயம் தெரியாது…

சஞ்சய் இதழோரம் விரக்தி புன்னகை அரும்பியது.

“அண்ணா என்ன ஜோக்கா சொன்னான்?” என்றான் நவீன்.

உங்களுக்கு புரியலடா. அவளுக்கு உன்னை விட யாரும் முக்கியமில்லைன்னு அப்பவே சொல்லி இருக்கா. அதான் இந்த பொசசிவ். வளர்ந்தும் புரியலையா?

“எல்லாம் பட்டால் தான் புரியும்” பிரசாத் கூற,

ஆமா..ஆமா…பிரியாவை சமாளிப்பது கஷ்டம் தான்.

ஓ! அப்படியா? இந்து?

“அதை விட கஷ்டம்” சொல்லி சிரித்தான் நவீன்.

பெண் மருத்துவர் செவிலியருடன் வந்தார்.

“ஹாய் சஞ்சய்” இளம்பெண் மருத்துவர் ரக்சனா தனது கூலிங் கிளாசை கழற்றி அவனிடம் கையை நீட்டினார்.

புன்னகைத்த சஞ்சய், “வாங்க மேம்” கையெடுத்து கும்பிட, அந்த மருத்துவர் முகம் மாறியது.

நவீன் சிரித்தான். அவனை முறைத்த அப்பெண் சஞ்சய் பின் செல்ல, அறையை காட்டினான்.

அம்மா, இந்து வெளிய வாங்க….

இந்துஜாவின் கரம் பற்றியிருந்த பிரியசகி சஞ்சயையும் அவளுடன் வந்த பெண்ணையும் பார்த்து அச்சமுடன் இந்து கையை இறுக பற்றினாள்.

சஞ்சய் அவர்களிடம் வந்து, “சகி டாக்டர் தான் வந்துருக்காங்க. அவங்க கேக்குறது நீ பதில் சொல்லணும்” இந்துஜா கையை எடுத்து விட்டான். பிரியசகி கண்ணிலிருந்து நீர் வழிந்தது.

“இந்து நீ போ” கண்ணாலே சைகை செய்து சஞ்சய் பிரியசகி கண்ணீரை துடைத்து, “உனக்கு சீக்கிரம் க்யூர் ஆகிடும். பயப்படாத” அவள் கரம் பற்றி அந்த பெண் மருத்துவரை பார்த்தான்.

பணி என்று வரவும் சீரியசாக அவர் வேலையை கவனிக்கலானார்.

“சார், நீங்களும் வெளியே இருங்க” என்று செவிலியரை அழைத்தார். கதவை தாழிட்டு செவிலியரும் உள்ளே வந்தார்.

மணி எட்டரைக்கு மேலானது.

மருத்துவர் வெளியே வந்தார்.

பதட்டமுடன் சுவர்ணலதா அவரருகே வந்து, “பெரிய பிரச்சனை எதுவும் இல்லையே!” கேட்டார்.

சாரி மேம், அந்த பொண்ணு ரொம்ப வீக்கா இருக்காங்க. அவங்கள அடிச்சி காயப்படுத்தி இருக்காங்க. உடலில் அங்கங்கு காயமாகி கன்னிப் போயிருக்கு. சஞ்சயை பார்த்து தயங்கியவாறு,

“இந்த பொண்ணு யாரு சார்? சொந்தமா?” கேட்டார்.

“என்னோட தோழி தான். என்னாச்சு?” கண்ணீருடன் இந்துஜா கேட்க,

இந்த பெண்ணோட பெண்ணுருப்பு ரொம்ப காயமா இருக்கு. கணவனுடன் உடலுறவு கொண்டது போல தெரியல. ஏதோ மிருகத்துடன்…தயங்கி சுவர்ணலதாவை பார்த்தார்.

முக்கியமான விசயம் என்று சஞ்சயை ஏறிட்டார். அவன் கண்கள் குளம் கட்டி இருந்தது.

இந்த பொண்ணுக்கு மூன்று முறை கரு கலைஞ்சிருக்கு. கடைசியாக சில நாட்களுக்கு முன் நடந்திருக்கும் போல. இந்த பொண்ணுக்கு காயமானது நான்கைந்து பேர் சேர்ந்து கற்பழித்தால் பெண்ணுறுப்பு இருக்கும் நிலையை கடந்திருக்கு.

எப்படி இவ்வளவு வலியை தாங்குனாங்கன்னு தெரியல. சார் நீங்க போலீஸ். உங்களிடம் நான் சொல்ல தேவையில்லை. அந்த பொண்ணை கவனமா பார்த்துக்கோங்க…

அனைவர் கண்ணிலிருந்து கண்ணீர் வெளிப்பட்டது. லதாவும் இந்துஜாவும் அழுது கொண்டிருந்தனர்.

“மருந்தை வாங்கிட்டு வாங்க..” அவள் பிரசாத்தை பார்க்க, இவ்வளவு நேரம் பிரியசகியை திட்டிக் கொண்டிருந்த அவனும் கண்ணை துடைத்து மருந்து வாங்க சென்றான்.

“என்ன பண்ணலாம்?” சஞ்சய் கேட்க, எல்லாரும் அவனை பார்த்தனர்.

ஆறு மாதம் போகட்டும் பார்க்கலாம். அவங்க ஓய்வில் இருக்கட்டும். குளுக்கோஸ் ஏறிட்டு இருக்கு. அவங்க தூங்கிட்டு இருக்காங்க. யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தயங்கியவாறு,

சஞ்சய், மத்தவங்களுக்காக எப்போதும் பிரச்சனையின் முன் நிப்பீங்க. தெரிஞ்ச பொண்ணு. பார்க்காமல் எப்படி விட்டீங்க? அவர் கேட்க, முணுக்கென கண்ணீர் வந்தது அவனுக்கு.

சாரி சார்…

தொண்டையை செருமி நேரத்தை கவனித்து, “கோர்ட்டுக்கு இவங்கள அழைச்சிட்டு போகலாமா? இன்று இவங்களுக்கு விவாகரத்து…”

நோ சார், நான் இவங்களோட மருத்துவ நிலையை ரிப்போர்ட்டாக தயார் செய்து தாரேன். இந்த நிலையில் இவங்க அலைவது சரியில்லை. ஒரு வாரம் படுக்கையிலிருந்து எழ வேண்டாம். நன்றாக ஓய்வெடுக்கணும்..

சத்தான ஆகாரம், ஆயின்மென்ட், மருந்துகளை நேரம் தவறாமல் குடுங்க. நீங்க மருத்துவமனை அழைத்து வராமல் இருந்தது கூட நல்லது தான். முடிந்தவரை நானும் வந்து பார்த்துக்கிறேன்.

“சார், விவாகரத்துன்னு சொல்றீங்க? பிரஸ் வரையும் போனால் இவங்க வாழ்க்கையை பாழாகிடும். பார்த்துக்கோங்க” அம்மருத்துவர் செவிலியரிடம் ஏதோ கூறி,

“செவிலியர் இன்று மட்டும் இருப்பாங்க. மற்ற நாளில் யாராவது அவங்களுடனே இருங்க. சகஜமா பேசுங்க” சொல்லி சென்றாள் ரக்சனா.

சஞ்சயை சைட் அடிக்க வந்த அப்பெண்ணோ பிரியசகியின் நிலை எண்ணி கவலையுடன் சென்றாள். அனைவரும் பிரியசகியை வெளியே நின்று பார்த்தனர்.

“அம்மா இந்து அவ முன்னாடி இப்படி அழாதீங்க. சாதாரணமா பேசுங்க” தொண்டை அடைக்க சொன்ன சஞ்சய், “நானும் பிரசாத்தும் கொஞ்சம் வேலையா வெளிய போயிட்டு வாரோம். அவளுக்கு சாப்பிட தயார் செய்யுங்க” மனம் முழுக்க கவலைகள் ஏறிட பிரியசகியை எண்ணியவாறே பிரசாத்துடன் இனியவன் வீட்டிற்கு சென்றான்.

பிரியசகி, இந்து குடும்பத்தினர் கிளம்பும் முன்னே வீட்டிற்குள் நுழைந்து விட்டான் இனியவன்.

“அம்மா, என்ன பேசிட்டாங்க? இந்துவை எப்படி சமாதானப்படுத்த முடியும்?” மனம் கேள்விகளால் முரண்ட அவனறைக்கு செல்ல இருந்தவனை தடுத்து நிறுத்தியது ராக்கியின் ஆடை.

இந்துஜா இருந்த அறைக்கு சென்றான் அவன். அவள் வரும் முன் எப்படி அவ்வறை இருந்ததோ அப்படியே தான் இருந்தது. இந்துஜா மற்றும் ராக்கியின் ஆடைகள் மட்டும் அலமாரியில் அடுக்கப்பட்டும், அழுக்கு துணியிலும் போட்டு வைத்திருந்தாள்.

கேசவனின் லிட்டில் பிரின்சஸ் இதுவரை வீட்டு வேலைகள் செய்ய கற்றுக் கொள்ளவில்லை. அவளுக்கு தெரிந்தது ராக்கிக்கு தேவையானதை செய்வது மட்டுமே!

அலமாரியில் இருந்த அவளது தொடை அளவிலான ஷார்ட் கவுனை எடுத்தவன் அங்கேயே தூக்கி அடித்தான்.

“என்ன ஆடைன்னு போடுறா?” மனதில் அந்நேரம் திட்டினாலும் நேற்றைய இதழ் தீண்டல் இன்னும் வேண்டும் என்ற எண்ணம் பிறக்க, தானாக கண்ணீர் மழை பொழிந்தது.

“இனி என்னுடன் பேசுவாளா? இல்லை பார்க்க கூட மாட்டாள்” தலையை பிடித்து அமர்ந்தான்.

“யவா…” குழலி சத்தம் கேட்க, கதவை அடித்து சாற்றி தாழிட்டான்.

“யவா…” குழலி பதறி அவ்வறைக்கு செல்ல, விஷ்ணுவும் ஓடி வந்தான்.

தன் அம்மாவை முறைத்து அவரை நகர்த்திய விஷ்ணு, “அண்ணா வெளிய வா. பேசலாம்” அழைத்தான்.

“உன்னோட வேலைய பாரு” சினமுடன் கூறி அவளது லாங் சுடி ஒன்றை எடுத்து அதனை அணைத்து படுத்து விட்டான்.

அண்ணா…அண்ணா…விஷ்ணுவின் கத்தல் காற்றில் கரைந்தது.

விச்சு, என்னடா?

“என்ன நொன்னடா? இந்துவோட அண்ணாவை சேர்த்து வைக்க எவ்வளவு ஆசைப்பட்டோம்? எல்லாம் கை கூடும் வேலையில் உன்னோட வாய வச்சுட்டு சும்மா இல்லாம இந்துவை இப்படி பேசிட்ட. போ…இனி அண்ணா திருமணத்தை பற்றி மறந்துரு.. இந்து பாவம் ஏற்கனவே அத்தை இறந்துட்டாங்கன்னு கஷ்டத்துல இருந்தா. பேசுன பாரு பேச்சு..உன்னை வச்சிட்டு. ராக்கி மேலுள்ள பாசத்தில் அவனை எண்ணியவாறு அண்ணா உள்ளே போயிட்டான் பாரு. ராக்கியை வச்சாவது இருவரையும் சேர்த்திருக்கலாம். போ..என்னமும் செய்” விஷ்ணு சினமுடன் அவனறைக்கு சென்றான்.

வருத்தமுடன் குழலி, இந்துவிடம் என்ன பேசிட்டோம்? கேசவன் அண்ணா தவறு செய்யவில்லை தான். செய்திருந்தாலும் இந்துவிடம் தான் பேசியது தவறு என்று எண்ணினாரே தவிர அவளை சந்தித்து மன்னிப்பு கேட்கும் எண்ணமெல்லாம் இல்லை. அவருக்கும் ஈகோ இருக்கும் தானே!

இவள் இல்லைன்னா எம் புள்ளைக்கு வேற பொண்ணா இல்லை என்று இனியவனுக்கு இந்துஜா மீது காதல் வந்ததை அறியாமல் மீண்டும் பெண் பார்க்கும் படலத்தை தொடங்க எண்ணியவாறு வேலையை கவனிக்க சென்றார் நெடுங்குழலி.

எட்டு மணியாகியும் மகன் எழாமல் இருக்க அவ்வப்போது இனியவன் வருகிறானா? எட்டி பார்த்துக் கொண்டிருந்தார் குழலி.

விஷ்ணு தயாராகி தன் அன்னையை பார்த்தான்.

“யவா இன்னும் எழவில்லையா?” விஷ்ணுவை பார்த்தார்.

“எனக்கு தெரியாது” என்றவன் நேரத்தை பார்த்து, “நேரத்தை முறையாக கடைபிடிப்பானே!” என்று இனியவனுக்காக அறைக்கதவை தட்டினான்.

நான் எங்கும் வரவில்லை..

வரலையா? அண்ணா கல்லூரிக்கு போகணும். மறந்துட்டீயா?

எழுந்து அமர்ந்த இனியவன் கதவை திறந்து லேசாக தலையை நீட்டினான்.

“அண்ணா நகரு” விஷ்ணு இனியவன் தலையை உள்ளே தள்ள, அறையை காண முயற்சித்த விஷ்ணுவை வெளியே தள்ளி கதவை அடைத்தான்.

அண்ணா…

“நான் தயாராகிட்டு வாரேன். நீ கிளம்பு” இனியவன் குரல் கொடுக்க, தோளை குலுக்கி நகர்ந்தான் விஷ்ணு.

இனியவன் அவனறைக்கு செல்லும் வரை அமைதியாக வேடிக்கை பார்த்த விஷ்ணு இந்துஜா அறையை காணச் சென்றான்.

அந்தோ பரிதாபம்! அவ்வறையை வெளியிலிருந்து பூட்டி சென்றிருந்தான் இனியவன்.

“பூட்டு போட்டுருக்கான். அண்ணா இவ்வாறு செய்ய மாட்டான். சோ ஏதோ உள்ளது” எண்ணமுடன் ஹால் சோபாவில் அமர்ந்தான்.

விஷ்ணு உண்டு கொண்டிருந்தான். இனியவன் கீழே வந்து அவனது பையினை எடுத்து வெளியே செல்ல, “யவா…சாப்பிட்டு போ…”அழைத்தார்.

எனக்கு பசிக்கல..

அண்ணா, சாப்பிட்டு போ.

“பசிக்கலன்னு சொல்றேன்ல” கத்தி விட்டு நிற்காமல் வெளியே வந்தான்.

பைக்கிலிருந்து சஞ்சயும் பிரசாத்தும் இறங்கினார்கள்.

இனியவன் அவர்களை கண்டு வீட்டினுள்ளே பார்க்க, கண்கலங்க குழலி “யவா சாப்பிடாம போன நானும் சாப்பிட மாட்டேன்” சத்தமிட்டுக் கொண்டே வெளியே வந்து இவர்களை பார்த்தார்.

இனியவன் இருவரையும் முறைத்து நகர, “இனியவா ஒரு நிமிடம்…” கரகரத்த குரலில் அழைத்தான் சஞ்சய்.

ஏதும் பேசாமல் இனியவன் சஞ்சயை பார்த்தான்.

சகி விசயத்தில் மிகப்பெரிய உதவி செஞ்சிருக்க. ரொம்ப தேங்க்ஸ்….வக்கீலுக்கான விவரம் வச்சிருந்தா கொடுக்குறீயா?

“உள்ள வாங்க” அழைத்தான் இனியவன்.

இருக்கட்டும். நீ எடுத்துட்டு வா..

கார் சத்தத்தில் திரும்பிய சஞ்சய் சிவந்த முகமுடன் சரணை வெறித்தவாறு தன்னை கட்டுப்படுத்த முயன்று அவன் கரத்தை அவனே பற்றிக் கொண்டிருந்தான். காரை எடுத்த சரண் இவர்களை பார்த்துக் கொண்டே காரை செலுத்தினான்.

“மாமா…” பிரசாத் சஞ்சய் கரத்தை பற்ற, அவனை பார்த்து “இவன சும்மா விடக் கூடாதுடா” பல்லை கடித்தான்.

“கோர்ட்டுல இவனை பார்த்துக்கலாம் மாமா. வந்த வேலையை பாருங்க” என்றான்.

“பிரியசகியை மருத்துவமனையில் சேர்த்தீர்களா மாமா? மருத்துவர் என்ன சொன்னாங்க?” இனியவன் கேட்டான்.

“நாங்க உறவுமுறையை கொண்டாட வரலை. எங்களுக்கு வக்கீல் பற்றிய விவரம் மட்டும் தாங்க” என்றான் பிரசாத் இனியவனையும் குழலியையும் முறைத்தவாறு.

இப்பொழுது தான் விஷ்ணு வெளியே வந்தான்.

வாங்க மாமா, வாங்க அண்ணா இருவரையும் அழைத்தான் அவன்.

பிரசாத் முகம் சுளிக்க, கொஞ்சம் சீரியஸ்னு தான் சொல்லி இருக்காங்க. நாங்க மருத்துவமனை போகவில்லை. வீட்ல தான் இருக்கா. குளுக்கோஸ் ஏறிட்டு இருக்கு…நிறுத்தினான்.

என்ன சீரியஸ்? விளாவரியாக அறிந்து கொள்ள இனியவன் கேட்டான்.

“அதெதுக்கு உங்களுக்கு?” பிரசாத் கேட்க,

“பிரசாத் அதிகம் பேசாத. அமைதியா இரு. எல்லாரையும் சாதாரணமாக எண்ணக் கூடாது” என்று சஞ்சய் இனியவனை பார்த்த பார்வையில் மாமா கண்டுபிடிச்சிட்டாரோ? விஷ்ணு அவனை கவனிக்க, “சஞ்சய்கு தெரிந்து விட்டது” என்று இனியவனுக்கு புரிந்தது.

“சொல்லக் கூடாத விசயமா மாமா?” இனியவன் பிரசாத்தை பார்த்துக் கொண்டே கேட்டான்.

“எம் மாமாவ நீங்க மாமான்னு அழைப்பதை நிறுத்துங்க” பிரசாத் இனியவனை முறைத்தான்.

“பிரசாத் அமைதியா இரு. நான் பேசவா வேண்டாமா?” சினமுடன் சஞ்சய் கேட்க, அமைதியாக இனியவனை பாராதவாறு திரும்பிக் கொண்டான் பிரசாத்.

“சொல்லக் கூடாத விசயம்னு இல்லை. சொல்ல முடியவில்லை” சஞ்சய் வார்த்தைகள் தடுமாறியது.

“ரக்சனா தெரியுமா இனியவா?” சஞ்சய் கேட்க,

தெரியும் மாமா.

ரக்சனாவை தான் அழைத்தேன். அவ தான் வீட்ல வச்சி பார்த்தா. அவட்ட கேட்டுக்கோங்க. நான் சொல்லிக்கிறேன். இப்பொழுது பைல்ஸ் தர்றீங்களா? கேட்டான்.

ம்ம்! நீங்க உள்ளே வரலாமே!

“எதுக்கு கழுத்த பிடிச்சு வெளிய தள்ளவா?” பிரசாத் மீண்டும் இடைபுகுந்தான்.

“என்ன அண்ணா உங்களுக்கு பிரச்சனை?” விஷ்ணு கேட்டான்.

“அண்ணாவா? நானா? உனக்கா?” பிரசாத் சீறினான்.

“அமைதியா இருக்கீங்களா? நான் யாரையும் சமாதானப்படுத்தும் நிலையில் இல்லை” சத்தமிட்டான் சஞ்சய்.

பிரசாத் நீ வண்டியை எடு..

மாமா..

போ என்றான் சஞ்சய்.

இவர்களை பார்த்துக் கொண்டே தன் தாயை முறைத்து இனியவன் அவனறைக்கு சென்று எடுத்து வந்தான்.