உன்னுடன் வாழும் வாழ்க்கை கனவாகிலும் அந்த கனவில் விழித்து எழாத வரம் கேட்டு நிற்கின்றேன். கனவிலாவது உன்னவனாக வாழ வேண்டி…
லட்சுமியை உறங்க வைத்து விட்டு வெளியே வந்த தினகரன் மாணிக்கம் கைகளை பிடித்து கொண்டு “ மாணிக்கம் தயவுசெஞ்சி உங்க அக்காவை எனக்கு கல்யாணம் பண்ணி கொடு , மிச்ச இருக்க வாழ்க்கையாவது அவள் கூட நான் சந்தோஷமா வாழ ஆசைப்படுறேன் மாணிக்கம் “ என்று கை ஏந்தி நிற்க அங்கிருந்த அனைவரும் தினகரனை வியந்து தான் பார்த்தனர்.
அவரது மனைவி சின்னப்பொண்ணு இறந்ததும் அவள் அம்மா வீட்டு பக்கம் இருந்த அனைவரும் இவருக்கு அவரது சொந்தத்திலேயே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க பார்க்க தினகரன் முடியவே முடியாது என்று திண்ணமாக மறுத்து விட்டான். அந்த காரணத்தினாலேயே யாருடனும் சேராமல் தனது மகளை தனியாக யாரின் துணையும் இன்றி வளர்த்து வந்தான். அப்படி இருந்த தினகரன் இப்படி திடீரென்று திருமணம் பற்றி பேசவும் அனைவருக்கும் அதிர்ச்சி தான்.
மாணிக்கம் “ என்ன பேசுறீங்க, எங்க அக்கா வயசு என்ன அதுவும் இல்லாம உங்க பொண்ண பக்கத்துல வச்சிட்டு பேசுற பேச்சா இது “ என்று தயக்கமாக ப்ரியாவை பார்க்க அப்போது மயூரி “ அங்கிள் நீங்க உண்மையாவா பேசிறிங்க “ என்று தினகரனை பார்த்து கேள்வி கேட்க தினகரன் “ உண்மையா தான் ம்மா இத்தனை வருஷம் என் தேவி பட்ட கஷ்டம் எல்லாம் போதும் இனிமே ஆவது அவள் சந்தோஷமா இருக்க தான் கடவுளாகப் பார்த்து இப்படி அவள் பழைய நினைவ மறக்க பண்ணியிருக்கிறார் “
“என்ன தான் அக்கா எல்லாத்தையும் மறந்தாலும் அவள் எப்படி…. முதல்ல உங்க பொண்ணு ஒத்துப்பாங்களா….” என்று மாணிக்கம் கேட்க
ப்ரியா “ எனக்கு சந்தோஷம் தான் மாமா. அப்பா, லட்சுமி அம்மாவைப் பத்தி சொல்லும்போதுலாம் எனக்கு ஆசையா இருக்கும் மாமா. ஏன் இவங்களே எனக்கு அம்மாவா வரல்லைன்னு இப்போ அதுவே நடக்கப் போதுன்னா எனக்கு ரொம்பச் சந்தோஷம் மாமா. “ அதை கேட்டு மாணிக்கம் வாய் அடைத்துப் போக ஆர்யன், “ அப்பா, மாமா சொல்றதும் சரிதான் அத்தை இதுக்கு அப்புறம் ஆவது நிம்மதியா வாழட்டும் ப்பா அத்தை பாவம். “
மயூரி “ ஆமாம் அங்கிள், லட்சுமி அம்மா தினகரன் ப்பா கூடப் பேசும்போது அவ்வளவு சந்தோஷமா பேசுனாங்க இது வரை நான் அவங்களை அப்படிப் பார்த்தது இல்லை அங்கிள்,” என்று சொல்ல, தினகரன் மயூரியின் அப்பா, என்ற அழைப்பிலேயே மகிழ்ந்தவராக அவள் தலையை வருட, மாணிக்கம் “ உள்ளே எதுக்கு மயூரி பாப்பா பேரை மயில்னு சொன்னிங்க எதவது காரணம் இருக்கா“ என்று சந்தேகமாகத் தினகரனைப் பார்க்க,
“அது டாக்டர் பழைய விஷியத்தை நினைவுபடுத்தாம இருந்தா அது கடைசி வர நினைவு வராதாம் அதான், மயூரி பெயரால கூடப் அவ நியாபகத்தை திருப்பி கொண்டு வர கூடாதுன்னு “ என்று மாணிக்கம் வாயை அடைத்து விட்டார்.
பின் தினகரன் மயூரி பக்கம் திரும்பி “சாரி ம்மா கொஞ்சம் பயத்துல தான், அப்படிப் பண்ணிட்டேன் “
“பரவாயில்லை பா.. லட்சுமி அம்மா காக என்ன வேணும் நாளும் பண்ணலாம் “ என்று சிரித்தாள் மயூரி.
அதன் பின் மாணிக்கம் தினகரனைப் தடுக்க வில்லை இருப்பினும் லட்சுமியை தனியாகவும் விடவில்லை இருவரையும் கவனித்த படியே சுற்றி வந்தார். மாணிக்கத்தை பொருத்த வரை மீண்டும் தன் அக்கா எதற்காகவும் காயப்படுவதை அவர் விரும்பவில்லை அதனாலேயே லட்சுமியுடனே இருந்தார்.
பதினைந்து நாள் லட்சுமியை மருத்துவமனையில் வைத்திருந்தனர் அந்த பதினைந்து நாளும் லட்சுமி தினகரனிடம் கேள்வியாக கேட்டு துளைத்தெடுத்தாள்.
லட்சுமி கேள்விக்கு சளைக்காமல் தினகரன் கேள்விக்குத் திணறாமல் ஏதோ நடந்தவற்றை சொல்வது போலச் சொல்ல, அதை கேட்டு சுற்றி இருந்தவர்கள்தான், “எப்படி இவர் பொய்யை இவ்வளவு ஈசியா சொல்றார்?” என்று அதிர்ந்து கேட்டு கொண்டிருந்தனர். அவர்களுக்கு என்ன தெரியும், தினகரன் சொல்வதெல்லாம் அவன் லட்சுமியுடன் எப்படி வாழ வேண்டும் என்று சிறிது சிறிதாக அவன் உருவாக்கிய காதல் கவிதை என்று. எத்தனை நாள் லட்சுமியுடன் வாழ்வது போல கனவு கண்டிருப்பான்?
இப்போது அந்த கனவுகளை தான் உண்மை என்று லட்சுமியிடம் சொல்லி கொண்டு இருந்தான். தினகரன் சொல்லும் கதைகளை லட்சுமி மட்டும் இல்லை அங்கிருந்த அனைவரும் வாயை பிளந்துதான் கேட்டுக்கொண்டிருந்தனர்.
மாணிக்கம், “ஒருவேளை அக்கா மும்பைக்குப் போகாம இருந்திருந்தா இப்படித்தான் அக்கா வாழ்ந்திருப்பாளோ?” என்று கண்களைத் திறந்துபடி தினகரனின் கனவுகளுக்கு உருவம் கொடுத்து கொண்டிருந்தார்.
லட்சுமி, “தினா, நம்ம எப்படி திருமணம் பண்ணிகிட்டோம்? நான் மும்பையில இருந்து எப்போ வந்தேன்?” என்று கேள்விகளை அடுக்க, தினகரன் லட்சுமிக்கு சாத்துக்குடி ஜூசை குடிக்க கொடுத்தபடி “ நீ மும்பை போய் இரண்டு வருஷம் கழிச்சி தான் வந்த தேவி.. இங்கு வந்த உடனே மாணிக்கத்தை கூட்டிட்டு உன் வீட்டுக்குப் போய்ட தேவி, அங்க இருந்து தான் வேலை பார்த்துட்டு இருந்த . நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க எங்கே அம்மா கிட்ட கேட்டதுக்கு அவுங்க ஒத்துக்கல தேவி, அஞ்சு வருஷம் போராடி பார்த்தோம், அது சரி வரல்லைனதும், ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டொம் தேவி, “ என்று சொல்லியபடி லட்சுமிக்கு ஜூஸை கொடுத்து முடித்ததும், தினகரன், சொன்ன அனைத்தையும் கேட்ட லட்சுமி அவள் கழுத்தை தொட்டு பார்த்துவிட்டு, “ எங்கே என் தாலி தினா? “ என்று அதிர்ந்து கேட்க, தினகரன்,
“ ஆபரேஷன் பண்ணுணதுல கலட்டி வச்சிடாங்க தேவி, அதுவும் இல்லாம ஆக்சிடன்ட் ஆனதில்ல அது கொஞ்சம் அறுந்திருச்சி அதான் ரெடி பண்ணச் சொல்லி கொடுத்திருக்கிறேன், தேவி “
“ அறுந்திருச்சா தினா? “என்று கலங்கிப் போய் தினகரனை பார்க்க, அதில் மென்மையாக சிரித்த தினகரன், “ஒன்னும் இல்லை தேவி, அடுத்த மாசம் நம்ம கல்யாணம் நாள், வேற வருது. வேணும்னா திரும்பி இன்னொரு முறை நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம், நீ கூட நம்ம மேரேஜ்ஜ ஃபோட்டோ எடுக்கலன்னு பீல் பண்ண ல்ல? இந்த வாட்டி ஃபோட்டோ சேர்த்து எடுத்துடுவோம்.”
தினகரன், பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த மாணிக்கம் மற்றும் ஆர்யன், “ யாருடா நீ? …” என்ற அளவில் தான் பார்த்தனர். மருத்துவமனையில் இருந்த பதினைந்து நாட்களும் மற்றவர்களுக்கும் சேர்ந்து தினகரன்தான் பேசினான், லட்சுமியிடம். ஒரு மாதம் கழித்து, தினகரன், சொன்னது போல, லட்சுமி கழுத்தில் அவர்களின் காதல் வளையத்தையும் சேர்ந்த மாங்கல்யத்தை அணிவித்து, தேவியின் தினகரனாக சந்தோஷமாக கடவுளை வணங்கினர்.
ஆஸ்பத்திரியிலேயே இருந்த தினகரன் லட்சுமி உறங்கும் நேரம் மாணிக்கம் வீட்டிற்கு சென்று வருவான். ப்ரியா அவள் குழந்தையுடன் அப்பாவிற்கு துணையாக இங்கே தான் இருக்கிறாள். அவள் கணவன் மகேஷ் வேலை விஷயமாக ஊருக்கு சென்றுவிட்டு வாரத்திற்கு ஒரு முறை என்று இவர்களை பார்த்து வருவார்.
வீட்டில் இருக்கும் ப்ரியா, மயூரி ஆர்யன் மாணிக்கம் என்று அனைவரிடமும் தினகரன் மற்றும் லட்சுமியின் காதல் கதையை சொல்லுவதை வழக்கமாக வைத்திருந்தாள். அப்படி ஒரு முறை மயூரியிடம் சொல்லும் போது அந்த கம்பலை பற்றி சொல்லியிருக்க மயூரி “ தங்க செயினின்ல வளையத்தை கோர்த்திருப்பாங்களா? “ என்று சந்தேகமாக கேட்க,
ப்ரியா “ அது எனக்கு தெரியாது அக்கா, நான் பார்த்தது இல்லை ஆனா அப்பா சொன்னது வச்சி பாத்தா அப்படித்தான் இருக்கும்.” அதைக் கேட்ட மயூரி அவள் அறைக்குச் சென்று திரும்பி வந்தவள் ப்ரியாவிடம் ஒரு சேயினை காட்டினாள் அது பார்க்க தினகரன் சொன்ன செயின் போல இருக்க அதை பார்த்த ப்ரியா “ இது அந்த செயின்னா அக்கா, இது எப்படி உங்க கிட்ட?”
“ இந்த செயின் லட்சுமி அம்மா என்ன அங்கிருந்து காப்பாத்தி அனுப்பும்போது போட்டுவிட்டது ” என்று மயூரி சொல்ல
“ இது அப்பா சொன்ன சேயின்னா தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன் அக்கா, இதை அப்பா பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவார் “ என்று இருவரும் அந்த சேயினை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
பிரியா சொன்னது போலவே தினகரன் அந்த சேயினையும் அந்த வளையத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதவர் மயூரியிடம் இருந்து அதை வாங்கி அவர் லட்சுமிக்குச் செய்யச் சொன்ன தாலியில் இதைச் சேர்த்துக் கோர்க்கச் சொன்னார்.
ஒரு மாதம் சென்றதும் லட்சுமியை அங்கு அருகில் இருந்த கோவிலில் ஆர்யன், மயூரி, மாணிக்கம், பிரியா, மகேஷ், ஸ்டெல்லா, கிருபா மற்றும் அதித்தி முன்னிலையில் திருமணம் செய்து கொண்டான்.
அந்த தாலியை பார்த்து லட்சுமி கண்கள் கலங்க, தினகரனை நிமிர்ந்து பார்க்க, தினகரன் கண்களை மூடி திறந்தபடி தாலியை கட்டியிருந்தான். அந்த நிகழ்வு அழகாக வீடியோ பதிவு செய்ய பட்டது. பின் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு, அனைவரையும் வேறு வீட்டுக்கு அழைத்து சென்றான் தினகரன்.
அந்த வீட்டை பார்த்து அனைவரும் என்ன என்பது போல தினகரனை பார்க்க, தினகரன் “இனிமே நானும் தேவி அப்பறம் எங்க பொண்ணு எல்லாம் சென்னையில தான் இருக்க போறோம்” என்று சிரிக்க, அதை கேட்டு மாணிக்கம் அதிர்ந்து, அவரை பார்க்க,
லட்சுமி, “ என்ன தினா, நம்ம மாப்பிள்ளைக்கு வேலை திருச்சியில இருக்கப்போது எப்படி இங்க இருக்க முடியும்?” அதற்கு மகேஷ், “ என் வேலையை இங்க மாத்திட்டன் அத்தை. அதனால எந்த பிரச்சனையும் இல்லை அத்தை.”
“அது மாப்பிள்ளை சிரமபடித்திடுடாங்களா? உங்க மாமா?”
“ அப்படியெல்லாம் இல்லை அத்தை. நம்ம சொந்தமெல்லாம் இங்க இருக்கும்போது நாங்க மட்டும் தனியா எதுக்கு அங்க அத்தை?” இதை பார்த்து மாணிக்கம் கண்களை மூடி கைகள் கூப்பி, இறைவனுக்கு நன்றி கூறியவர், “ எங்க அக்கா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாள் கடவுளே! போதும் அவள் பட்டதெல்லாம் இப்போ இருக்கிற மாதிரி, என் அக்கா இனிமேலாவது சந்தோஷமா இருக்க வேண்டும்” என்று மனதார வேண்டிக்கொண்டார்.
இப்படியே அனைத்தும் நன்றாக சென்றது லட்சுமி தினக்கரனுடன் சந்தோஷமாக வாழ தொடங்கி இருந்தார்.
ஒரு வாரம் கழித்து மயூரி எட்டு மாத கருவுடன் டாக்டர் முன்னே அமர்ந்தவள், பதட்டத்துடன் ஆர்யன் கைகளை பிடித்தபடி அமர்ந்திருந்தாள். மயூரி கோமாவில் இருந்து விழித்ததும் டாக்டர் மயூரி, வீக்காக இருப்பதாக சொல்லியிருந்தனர். அதனாலேயே அவளை மிகவும் பத்திரமாக பார்த்து கொண்டான் ஆர்யன். அவளை எங்கும் அவ்வளவாக அலையவிடாமல் பார்த்து கொண்டு இருந்தான்.
அதன் காரணமாக தான் மயூரி இப்போது டாக்டர் என்ன சொல்ல போகிறாரோ என்று பயந்து கொண்டு இருக்க. அவள் பயம் ஒன்றும் இல்லை என்பது போல டாக்டர் மயூரியும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட்டார். அப்போது தான் மயூரி ஆசுவாசம் அடைந்தவளாக நெஞ்சில் கைவைத்து “ டாக்டர் நான் இப்போ டிராவல் செய்யலாமா அதுவும் கொஞ்சம் லாங் டிஸ்டன்ஸ் டிராவல்? “ என்று மயூரி கேட்டதை ஆர்யன் “ எங்க போக இவள் இப்படி கேட்கிறாள் “என்று எண்ணியபடி அவளை பார்க்க டாக்டர் “ம்ம்ம் டிராவல் செய்யலாம் அன பார்த்து அடிக்கடி ட்ரவலிங் வேண்டாம் “ என்று சில சத்து மாத்திரைகளை கொடுத்து அனுப்பிவிட்டார்.
மருத்துவமனை விட்டு வெளியே வந்த ஆர்யன் காரை திறந்து மயூரியை அமர வைத்தவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த படி “ எங்க போக டாக்டர் கிட்ட கேட்ட மயிலு “ என்று கேட்ட மயூரி கண்களை மூடி சாய்ந்தபடி “தமிழ்நாடு நர்சரி அன்ட் பிரைமரி ஸ்கூல் ஆதிச்சநல்லூர்…”