சஞ்சய் காவலர் உடையில் பைக்கை ஓர் பெரிய பங்களாவின் முன் நிறுத்தி காலிங் பெல்லை அழுத்தினான்.
“இந்து வா…” சஞ்சய் அழைக்க, வெண்ணிற டாப்பும் ஊதா நிற ஸ்கர்ட்டும் உச்சியில் போனிட்டைலுடன் கையில் இரண்டறை வயது குழந்தை ராகேஷூடன் சோர்ந்து முகம் வாட நின்றிருந்தாள் இந்துஜா.
கதவு திறக்கப்பட, “நீங்க…” என்ற அந்த வீட்டு பெண்மணி கமலா இந்துஜாவை பார்க்கவும் முழுதாக கதவை திறந்தார்.
“வாங்க” இருவரையும் அழைத்தவர்… “பிரியா…பிரியா….” சத்தமிட்டார்.
அறையிலிருந்து விரைந்து வந்து பிரியசகி இருவரையும் பார்த்து எவ்வித உணர்வுமில்லாமல் படியிலிருந்து இறங்கினாள். அவளின் பின்னே அவளது கணவன் சரணும் வந்தார். அவர் மருத்துவர்.
சரண் புன்னகையுடன், “சஞ்சய் சார் வாங்க…” அழைக்க, இருவரும் கை குலுக்கிக் கொண்டனர்.
“பிரியா…” அவளது மாமியார் அவளை உலுக்க, நம்பமுடியாத அதிர்ச்சியில் இருந்த பிரியசகியின் விழிகள் தன் தோழியையும் அவள் கையிலிருக்கும் குழந்தையையும் கவனித்துக் கொண்டிருந்தது.
சஞ்சய் பிரியசகியை நெருங்கி, ராக்கி பிறந்து மூன்று மாதத்திலே உடல் நலமில்லாமல் யமுனா போயிட்டா. இரு நாட்களுக்கு முன் வீட்டிற்கு திருடன் வந்து விட்டான். யமுனா புருசனையும், சித்தியையும் கொல்ல பார்த்திருக்கான். சித்தியை காப்பாற்ற முடியவில்லை. ராகவன் மச்சான் மருத்துவமனையில் நினைவில்லாமல் இருக்கார். “ஒரு வாரம் மட்டும் இந்துவையும் ராக்கியையும் பார்த்துக்கோ” என்று ஒரு உணர்ச்சியில் பிரியசகியின் கரம் பற்றி விட்டான்.
அவள் சஞ்சையை பார்த்து தன் கணவனை பார்க்க, அவள் கவனம் வேறு பக்கம் இருப்பதை பார்த்த சஞ்சய் அவ்விடம் நோக்கினான். சரண் இருவரின் கரத்தை பார்த்தவாறு இருந்தான்.
ஓ! சாரி சாரி… விலகிய சஞ்சய், தன் தங்கையை பார்த்தான்.
சஞ்சயை பார்த்து பிரியசகி ஏதோ சொல்ல வாயெடுக்க, “தாராளமா இருக்கட்டும் சார். நாங்க பார்த்துக்கிறோம். நீங்க சாப்பிட்டு போங்க…பிரியா…” அழுத்தி அழைத்தான் சரண்.
இருக்கட்டும். அவளை பத்திரமா பார்த்துக்கோங்க. அது போதும் எனக்கு. யாருமில்லாமல் நிக்கிறா. அம்மா அப்பா திருவண்ணாமலையில் திருமண விஷேசத்துக்கு போயிருக்காங்க. அங்க போயிட்டு திருப்பதி சுவாமி தரிசனம் முடிச்சிட்டு தான் வருவாங்க. நாளை தான் திருமணம். கொஞ்சம் பார்த்துக்கோங்க. எங்க வீட்ல தனியே விட சரியா படலை என்று பிரியசகியை பார்த்தான்.
அவள் முகம் சரியாதது போல இருப்பது சஞ்சைக்கு தோன்றினாலும் இரு தோழிகளின் நெருக்கம் தெரிந்தவனுக்கு கண்டிப்பாக இங்கே இருந்தால் மட்டுமே இந்து இயல்புக்கு திரும்புவாள் என எண்ணினான். பிரியசகி இந்துவை அணைத்து குழந்தையை பார்த்தாள்.
“நான் வாரேன் இந்து. அம்மா, அப்பா வந்தவுடன் உன்னை அழைக்க வந்துருவோம். மாமாவை மருத்துவமனை சென்று நான் பார்த்துக்கிறேன். இதோ சகி இருக்கா பாரு” கண்கலங்க தன் தங்கையை பார்த்து குழந்தையை முத்தமிட்டு “ராக்கி சமத்தா இருக்கணும்” மற்றவர்களிடம் தலையசைத்து சென்றான்.
இந்துஜாவிற்கு ஓர் அறையை கொடுத்து, “தேனு…இந்த பொண்ணோட பொருட்களை அவ்வறையில் வை” சத்தமிட்ட கமலா, “கவலைப்படாதம்மா. நாங்க எல்லாரும் இருக்கோம்”.
பொம்மை போல தலையை திருப்பி அவரை பார்த்து விட்டு பிரியசகியை பார்த்தாள்.
“வாங்கம்மா…” தேனு அறைக்கு அழைத்து செல்ல, இந்துஜாவுடன் பிரியசகியும் சென்றாள்.
சஞ்சைக்கு பிரியசகியின் மெலிந்த உருவம் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை. கருத்தில் பதிந்திருந்தால் அவள் கண்களில் பதுக்கி வைத்திருந்த வலியும் அவளின் தொனதொன பேச்சும் இல்லாமல் ஏதோ தவறாக உள்ளது என கண்டறிந்திருப்பான். அவன் தங்கையும் காயப்படப் போவதை அவன் அறியவில்லை.
அவ்வறையில் இந்துஜா அமைதியாக ஏதும் பேசாமல் அமர்ந்திருக்க, “ஜா” அவள் தோளில் கரம் பதித்தாள் பிரியசகி.
“பிரியா…” கதறி விட்டாள் இந்துஜா. குழந்தை அவள் அழுவதை பார்த்து கத்தினான்.
கல்லூரி முடியும் வரையாவது எங்களுடன் இருந்திருக்கலாமே பிரியா. மருத்துவம் படிக்க இவரை திருமணம் செய்து வந்துட்ட.
பள்ளி படிக்கும் போது அப்பா தற்கொலை செய்து இறந்து போனார். உனக்கே தெரியும். பின் எங்களது வாழ்க்கை பாதையே மாறியது.
ராக்கி பிறந்து சில மாதங்களிலே அக்காவும் போயிட்டா. ராகவ் மாமா ரொம்ப கஷ்டப்பட்டார். இப்ப அம்மா….பிரியசகியை அணைத்து அழுதாள் இந்துஜா.
மாமாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருச்சு. பெரியம்மா, பெரியப்பாவுக்கு அம்மா இறந்த செய்தி கூட தெரியாது. தெரிந்தால் வழிபாடு தள்ளிப் போய்டும்னு நான் தான் சொல்ல வேணாம்னு சொல்லீட்டேன்.
சஞ்சய் அண்ணாவுக்கு பாக்குற பொண்ணு எதுவும் செட் ஆகலை. அதான் வேண்டுதலுக்காக போயிருக்காங்க. அண்ணாவால் போக முடியல..அண்ணா மட்டும் இல்லைன்னா நானும்…அவள் சொல்லும் முன் அவள் வாயை அடைத்து ஷ்ஷ்…என்றாள்.
அழாத ஜா. பாரு குழந்தை பாக்குறான் ..
நேம் என்ன சொன்ன?
ராகேஷ்…ராக்கி..
ராக்கி செல்லம், உங்களுக்கு என்ன வேணும்? ஆசையுடன் குழந்தையிடம் கேட்டாள் பிரியசகி.
ராக்கி அழுதான்.
“ராக்கி அத்தைடா…. அழக்கூடாது” இந்துஜா கூற, “அத்த…” குழந்தை பிரியசகியிடம் தாவியது.
“ம்ம்! வாரேன்” என்று பிரியசகி எழுந்து, “உணவுண்ணும் போது பார்க்கலாம்” கூறி அவள் செல்ல, முகத்தை அழுந்த துடைத்த இந்துஜா ராக்கியுடன் பால்கனிக்கு சென்றாள்.
கமலா முன் வந்த பிரியசகி அமைதியாக ஏதும் பேசாமல் அவரை பார்த்தாள்.
“இங்க ஏன்டி நிக்குற? எம் பிள்ளைய பார்க்க போ” சத்தமிட்டார்.
லேசான தலையசைப்புடன் பிரியசகி அவர்கள் அறைக்கு சென்றாள். சரண் அறையில் இல்லை.
“ஜா நீ இங்கேயா வரணும். உன் அண்ணாவுடனே இருந்திருக்கலாம். இப்பொழுது நான் என்ன செய்வது? என்னையே என்னால் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. இந்த இராட்சனனிடமிருந்து உன்னை எவ்வாறு நான் பாதுகாப்பேன்? கலக்கமுடன் ஏதாவது செய்தே ஆக வேண்டும் இல்லை ஜாவின் வாழ்க்கையும் என் வாழ்க்கை போல நாசமாகிடும்” சிந்தனையில் ஆழ்ந்தாள் பிரியசகி.
படுக்கையில் சிந்தனையுடன் இருந்த அவளை கண்டவாறு உள்ளே வந்த சரண் தனது சட்டையை கழற்றி தூக்கி எறிந்து விட்டு பிரியசகியின் தொடையில் அவனது காலை வைத்து அழுத்தினான்.
திடுக்கிட்ட அவள் சரணை பார்க்க, “என்னடி யோசிச்சிட்டு இருக்க? உன்னோட தோழியை நானே பார்த்துக்கிறேன்” குரூரமான அவன் பேச்சில் திகைத்து…
“ப்ளீஸ், அவள விட்ருங்க. என்னை என்ன வேண்டுமானாலும் செஞ்சுக்கோங்க. அவ ஏற்கனவே குடும்பத்தை இழந்த வலியில் இருக்கிறாள்” கையெடுத்து கும்பிட்டாள்.
பளாரென அவளது கன்னத்தில் அறைந்தான் சரண்.
பொத்தென படுக்கையில் விழுந்தாள்.
“ப்ளீஸ்..அவள் சென்ற பின் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்க. அவளுக்கு நான் கஷ்டப்படுவது தெரிந்தால் தாங்க மாட்டாள்…” அழுது கொண்டே பிரியசகி கூறினாள்.
“அவள் சென்ற பின்னா? அவள விடுவேன்னு உனக்கு நினப்பா?” பயங்கரமாக சிரித்தான் சரண்.
சரண் காலில் விழுந்த பிரியசகி, “அந்த குழந்தையை அநாதை ஆக்கிட்டாதீங்க” கதறினாள்.
பிரியசகியை எத்தி தள்ளி அவளது கழுத்தில் சரண் அவன் காலை வைத்து அழுத்தி, “நாளை அவள் எனக்கு வேண்டும். நீ ஏதாவது அவகிட்ட சொல்லி தப்பிக்க வச்ச உன்னோட தோழியும் அந்த குட்டிப்பையனும் உயிரோட இருக்க மாட்டாங்க…” மிரட்டினான்.
அவனை பற்றி பிரியசகி அறிந்தது தானே!
சரி சரி…அவங்கள எதுவும் செய்யாதீங்க. அவளிடம் கூறுகிறேன்….
கீழே விழுந்து கிடந்த அவளது முடியை பற்றி இழுத்து படுக்கையில் போட, அவன் எண்ணம் அறிந்த பிரியசகி அவளது விழிகளை இறுக மூடினாள்.
பிரியசகியின் ஆடையை கிழித்தெறிந்து அவளை ஆக்ரோசமாக முற்றுகையிட்டான். மூடியிலிருந்த விழிகளில் இருந்து அருவி கொட்டியது…
ஆடையை போட்டு எழுந்து பிரியசகியை போர்வையில் சுருட்டி உள்ளிருந்த அறைக்கு சரண் இழுத்து செல்ல, “என்னால முடியலங்க. இப்ப வேண்டாம்” மயக்கத்துனூடே பேசினாள்.
அவள் கூறுவதை காதில் வாங்காதவன் போல தரதரவென இழுத்து சென்று அவனது பெல்ட்டை கழற்றி அவளை அடித்து துன்புறுத்தினான். அவளது உடல் அதிர்ந்து அதிர்ந்து தூக்கி போட்டது. வெறி தீர அவளை அடித்து வெளியே சென்று விட்டான். உடலும் மனதும் சோர்வுடன் மயங்கி இருந்தாள் பிரியசகி.
இவை எதுவும் அறியாத இந்துஜா தன் அக்கா யமுனா மகன் ராக்கியுடன் பால்கனிக்கு வந்தவள் எதிர்வீட்டை பார்த்தாள். இதை போன்ற வீடில்லாமல் சற்று சிறியதாக தான் இருந்தது. ஆனால் அதன் அமைப்பு அவள் மனதை கவர்ந்தது.
“விச்சு…இன்று விடுப்பு எடுத்து தியேட்டர் சென்றது மட்டும் அண்ணாவுக்கு தெரிஞ்சது உனக்கு மட்டுமல்ல எங்களுக்கும் தர்ம அடி விழும்” என்றான் விஷ்ணுவின் நண்பன்.
“ஆமா, அதுக்காக இப்ப போகாமல் நான் எப்பொழுது தான் சுத்துறது. அண்ணா எஞ்சாய் பண்ணவே விட மாட்டேங்கிறான்” புலம்பினான் விஷ்ணு.
விச்சு, நேற்று சுருதி உங்கிட்ட பேச வந்தா. என்னடா சொன்னா?
ஹூம்…அவள் என்ன பேசப்போறா. அவள் என்னை காதலிக்கிறான்னு நல்லா தெரியுது. எனக்கும் அவளை பிடிக்கும். அவ சொல்ல பயப்படுறா…அழுமூஞ்சிடா அவ…
இந்த வருசத்துக்குள்ள சொல்லுவான்னு நினைக்கிற? ஒருவன் கேட்டான்.
எனக்கு தோணலைடா…என்றான் விஷ்ணு.
நீ சொல்ல வேண்டியது தான?
நானா? அண்ணாவுக்கு தெரிஞ்சது கொன்னே போட்ருவான்..
அம்மாவை சப்போர்ட்டுக்கு அழைச்சுக்கோடா..
அம்மா தானா? அண்ணாவே கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கிறான்னு வருத்தத்துல்ல இருக்காங்க. நான் என் காதலை கூறி அவங்கள கஷ்டப்படுத்த விரும்பலை…
நம்ம மோனா மேம்மை உன் அண்ணாவோட கோர்த்து விட்ரு…
“கோர்க்கவா? என் தோலை உரிச்சி உப்பு போட்டு ப்ரை பண்ணிடுவான்” விஷ்ணு கூறிய தொனியில் நண்பர்கள் சத்தமாக சிரித்தனர்.
“சித்து சிரி சிரி….” நண்பர்கள் சிரிக்கும் சத்தம் கேட்டு ராக்கியும் சிரித்தான் தன் சித்தியின் கன்னத்தை இழுத்தவாறு.
“நம்ம ஏரியால என்னடா குழந்தை சத்தம் கேட்குது?” மொட்டை மாடியில் மாலை மங்கும் வெய்யோனை ரசித்தவாறு பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் எழுந்தனர்.
அந்த ஆரஞ்சு நிற விடியலில் ராக்கியுடன் நின்று கொண்டிருந்த இந்துஜாவை பார்த்து நண்பர்கள் வாயை பிளந்து அவளை ரசித்தனர்.
“ஹேய்….” கையை ஆட்டினான் விஷ்ணு.
இந்துஜா தான் பேசும் அனைவரிடமும் நன்றாக பேசுவாளே! அவளும் கையை ஆட்டினாள்.
ஐ அம் விஷ்ணு…விச்சு..
இந்துஜா…
“ரொம்ப அழகா இருக்க இந்து” ஒருவன் கமெண்ட் அடிக்க, அவளிடம் லேசாக புன்னகை விரிந்தது.
நாங்க கல்லூரி இறுதியாண்டு. நீ என்ன படிக்கிற?
ஐ அம் கம்பிளீட்டடு எம்.ஏ வரலாறு..
வாவ்…நாங்களும் தான்..
அவன் தலையில் தட்டிய விஷ்ணு, டேய் அவங்க படிச்சி முடிச்சிட்டாங்க. நம்மை விட பெரிய பொண்ணு என்றான்.
“எப்ப முடிச்சீங்க?” ஒருவன் கேட்க, பைக் சத்தம் கேட்டது.
“அய்யய்யோ! அண்ணா வந்துட்டான்” விஷ்ணு பதற, தெரு முனையில் வண்டி சத்தம் கேட்டு இந்துஜாவை தவிர்த்து நண்பர்கள் அனைவரும் ஓடினார்கள்.
ஒருவன் மற்றவன் கரத்தை பற்றி இழுத்து விஷ்ணு வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் இடையில் இருக்கும் சந்துக்குள் குதித்தான்.
ஏய்ய்…இந்துஜா பதற, அவர்கள் இருக்கும் மாடியில் ஓடி வந்து குதித்தனர் இருவர்.
அவர்களின் செயலில் ராக்கி குஷியுடன் சத்தமிட்டு சிரித்தான். இந்துஜா பயந்து போனாள்.
“அடேய், என்னை எதுக்குடா இங்க இழுத்துட்டு வந்த?” விஷ்ணு பக்கமிருந்த தன் நண்பனை அடித்தான்.
“இப்ப எப்படி வீட்டுக்கு போறது? அண்ணாகிட்ட நல்லா மாட்டினேன்” விஷ்ணு புலம்பியவாறு இந்துஜாவை பார்த்தான்.
வண்டி சத்தம் அருகே கேட்கவும் இந்து எங்கள பார்க்காத. அண்ணா கண்டுபிடிச்சிருவான்.
இந்துஜாவும் ராக்கியும் அவர்களை பார்த்து விட்டு பைக்கில் வருபவனை பார்த்தனர்.
நல்லநிறம். ஆறடி உயரம். பெண்களை கவரும் அழகன். அவன் இனியவன்.அரசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறான்.
கேட் கதவை திறந்து பைக்கை உள்ளே நிறுத்தி வெளியே வந்தான். அவன் பார்வையில் எதையோ கண்டு கொண்டான் என இந்துஜாவிற்கு புரிந்தது.
பக்கமிருந்த சந்துக்கு சென்று விஷ்ணுவின் நண்பர்கள் காதை பிடித்து இழுத்து வந்தான்.
“அய்யோ அண்ணா! வலிக்குது” அவர்கள் கத்த, கைத்தட்டி சிரித்த ராக்கி இந்துஜாவிடமிருந்து எம்பி குதிக்க, மேலிருந்து கீழே விழுந்த ராக்கியை பிடிக்கிறேன் என அவளும் விழ, அவளை விழாமல் பிடித்தனர் விஷ்ணுவும் அவன் நண்பனும்.
ராக்கி அழத் தொடங்கினான். அவன் கத்தலில் அக்கம் பக்கத்து வீட்டிலிருந்து அனைவரும் வந்தனர். கமலாவும் தேனும் வெளியே வந்தனர்.
அதே நேரம் இனியவன், விஷ்ணுவின் தாய் நெடுங்குழலி வெளியே வந்தார். விஷ்ணுவின் மற்ற நண்பர்களும் இனியவனும் அதிர்ந்து பார்த்தனர்.
“இந்து எங்களால பிடிக்க முடியல. கை வழுக்குது” விஷ்ணுவின் நண்பன் சத்தம் போட, தன் அண்ணனை பார்த்த விஷ்ணு.. “அண்ணா ராக்கியை பிடி” சத்தமிட்டான்.
இந்துஜா கையிலிருந்து ராக்கி கீழே விழ, பாய்ந்து அவனை பிடித்தான் இனியவன். வீல்லென கத்தினான் ராக்கி. குழலி விரைந்து குழந்தையை கையில் வாங்கி இந்துஜாவை பார்த்தார்.
“இந்தூதூதூ…..”விஷ்ணு சத்தமிட, அவளும் கத்திக் கொண்டே கீழே விழுந்தாள்.
“பொண்ண புடிடா யவா…” நெடுங்குழலி சத்தமிட, அவளை பிடித்து இனியவனும் கீழே விழுந்தான்.
அவன் முதுகு தரையில் பட, இனியவன் மீது முன்னோக்கி பாதுகாப்பாக விழுந்த இந்துஜாவின் மென்மை அவன் மார்பில் அழுந்த, ஸ்பரிசத்தில் அதிர்ந்திருந்தான் இனியவன்.
விழுந்த வேகத்தில் இந்துஜாவின் நெற்றி தரையில் பலமாக மோத இரத்தம் வழிந்தது.
இந்து நெற்றியிலிருந்த இரத்தத்தை பார்த்த தேனு வீட்டினுள் சென்று அவரது அறையில் இருக்கும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பெட்டியை எடுத்து வந்தார்.
“அய்யோ என்னாச்சு?” கமலா பதறுவது போல இந்துஜாவிடம் வந்தார்.
“பொண்ணுக்கு இரத்தம் வருது” குழலி பதற, இந்துஜா அழுது கொண்டே
“புள்ளைக்கு ஒன்றுமில்லைம்மா. உனக்கு தான் இரத்தம் வருது” நெடுங்குழலி அழும் ராக்கியை தோளில் போட்டு தட்டியவாறு தன் மகனை பார்க்க, அவன் விழுந்த இடத்திலிருந்து எழவில்லை.
“சித்து……” இந்துஜாவின் நெற்றியை தொட்டு பால்பற்கள் தெரிய சத்தமாக அழுதான் ராக்கி.
“ஒன்றுமில்லை ராக்கி. எனக்கு வலிக்கல” புன்னகைத்து அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் இந்துஜா.
இந்துஜாவின் கண்ணீருடனான புன்னகையை பார்த்துக் கொண்டிருந்த இனியவனை அவன் தாய், விஷ்ணு, அவன் நண்பர்களும் ஆழ்ந்து பார்த்தனர்.
“நீங்க எதுக்கு எங்க வீட்டுக்கு வந்தீங்க?” சத்தமிட்டவாறு சரண் விஷ்ணுவிடம் சண்டைக்கு வந்தான்.
எல்லாரும் வேடிக்கை பார்க்க, இடையே வந்த இனியவன் விஷ்ணுவை பளாரென அறைந்தான்.
“யவா…” நெடுங்குழலி சத்தமிட, “இவன் எதற்கு விடுப்பு எடுத்தான்? இந்த பேச்சு தேவையா?” கடிந்தான்.
“அண்ணா நாங்க…” விஷ்ணுவின் நண்பன் இடைபுக, ரஞ்சித் நான் உன்னிடம் பேசலை. படிப்பை விட படம் பார்ப்பது முக்கியமா? இப்ப இது வேற? ஆக்ரோசமாக சரணை முறைத்தான் இனியவன்.
சாரி சார்…அண்ணா மீதுள்ள பயத்தில் தான் உங்களது பால்கனி பக்கம் குதித்தோம். இப்படி நடக்கும்ன்னு நினைக்கலை. சாரி இந்து என்று விஷ்ணு ராக்கியை பார்த்துக் கொண்டே நகர்ந்தான்.
தன் சித்தியிடமிருந்து ராக்கி கீழிறங்கி மழலை சத்தமுடன் தத்தி தத்தி நடந்து விஷ்ணுவிடம் வந்தான். அவனது மழலை குரலில் விஷ்ணுவும் நின்றான். எல்லாரும் வேடிக்கை பார்த்தனர்.
இந்துஜா ராக்கி பின்னே வந்தாள்.
விஷ்ணு, அவனுடன் இருந்த நண்பன் மற்றும் இனியவனை பார்த்த ராக்கி, விஷ்ணுவின் காலை பிடித்து அவன் பின் நின்று இனியவனை எட்டி பார்த்து அரிசி பற்கள் தெரிய சிரித்தான்.
நெடுங்குழலி சிரித்தவாறு ராக்கியை தூக்கினார்.
இனியவன் அருகே வந்த இந்துஜா, சார் நீங்க இந்த பசங்க காதை பிடிச்சு இழுத்து வந்தீங்கல்ல? ஹடு அன்ட் சீக் எல்லாரும் விளையாடுறீங்கன்னு நினைச்சு இவன் உங்களிடம் வர தான் எம்பி விழுந்துட்டான். விளையாட்டு ஆர்வம் தான்…
“தேங்க்ஸ் விச்சு” என்று விஷ்ணு மற்றும் அவளுக்கு உதவிய விஷ்ணுவின் நண்பனிடம் கை கொடுத்து விட்டு, “உங்களுக்கும் ரொம்ப தேங்க்ஸ் சார்” என்று இனியவன் எதிர்பாராத நேரம் அவன் கரத்தை இழுத்து குலுக்கி விட்டு, “ராக்கி வா….நாம அப்புறம் விளையாடலாம்” நெடுங்குழலியை பார்த்து புன்னகைத்து நகர்ந்தாள்.
“இவங்ககிட்ட என்ன பேச்சும்மா?” கமலா கேட்க, “அவங்க தான ஆன்ட்டி கெல்ப் பண்ணாங்க” பேசிக் கொண்டே ராக்கியுடன் உள்ளே செல்ல, அவன் இவர்களை பார்த்து அழகாக சிரித்தான்.
“அந்த பொண்ணும் குட்டிப்பையனும் அழகா இருக்காங்கல்ல?” நெடுங்குழலி கேட்க, தன் தாயின் எண்ணம் போகிற போக்கை எண்ணி அவரை முறைத்து இனியவன் நகர்ந்தான். அனைவரும் அவ்விடம் விட்டு கலைந்தனர்.
“அம்மா அண்ணாவை பார்த்தாயா?” விஷ்ணு கேட்க, “உள்ள வாரீங்களா?” கடுமையாக சத்தமிட்டான் இனியவன்.
“வாங்கடா…” நெடுங்குழலி விஷ்ணுவின் நண்பர்களை அழைக்க, “ஆத்தாடி போதும்பா. உள்ள வந்தோம். அண்ணா காதை தனியே பிச்சு எடுத்துருவார்” அவன் நண்பர்கள் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.