ஆகாய சூரியன் அவன்
சூரியன் 1
“யக்கா இருங்க..போன் வருது. நான் பார்த்துட்டு வாரேன்” ஊர்க்கதைகள் பேசிக் கொண்டிருந்த இளமதி பக்கத்து வீட்டு பெண்மணியிடம் கூறி வீட்டிற்குள் விரைந்தார்.
கைபேசியை எடுத்து பேசியவர் பதட்டமுடன் அதனை அணைத்து தன் கணவர் கேசவனுக்கு அழைப்பு விடுத்தார்.
சொல்லும்மா?
ஏங்க, ஸ்கூல்ல இந்து பெரிய பசங்க மண்டைய உடைச்சுட்டாளாம். அவங்க டீச்சர் பள்ளிக்கு இப்பொழுதே வரச் சொன்னாங்க…
எனக்கு வேலை இருக்கும்மா. நீ போயி பார்த்துட்டு வாம்மா…
நானா? உங்க புள்ளைக்கு நானா செல்லம் குடுத்தேன்.? மூத்தவ யமுனா யாரிடமாவது ஏதாவது வம்பு செய்திருக்கிறாளா? அவள் இருக்கும் இடமே தெரியாது. ஆனால் இந்துவை நான் கண்டித்தால் கூட என்னை திட்டி அவளை செல்லமாக வளர்க்கிறேன்னு கெடுத்து வச்சுருக்கீங்க பயங்கரமாக கடிந்தார்…
சிரித்த கேசவன், சரி நானே பார்த்துக்கிறேன்.
என்ன இளிப்பு வேண்டி இருக்கு. நான் உங்களை காரசாரமாக திட்டுகிறேன். உரக்குதா? இல்லையா? மேலும் கேசவனை காய்ச்சி எடுத்தார்.
சின்னப்புள்ளைங்க இப்படி தான்மா இருக்கும்.
“ஆமா.. அஞ்சு படிக்கும் போதே இப்படி? இனி இன்னவெல்லாம் செய்ய இருக்கிறாளோ! சீக்கிரம் பள்ளிக்கு போங்க” கணவரை திட்டிக் கொண்டே அழைப்பை துண்டித்தார் இளமதி.
கேசவன்- இளமதி நடுத்தர குடும்பத்தினர். இளமதிக்கு எல்லாம் சரியாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். ஆனால் கேசவன் அவ்வாறெல்லாம் இல்லை. அன்பின் மறுஉருவம். யாரையும் எந்த நேரத்திலும் அதிர்ந்தும் காயப்படுத்த மாட்டார். இவர்களுக்கு இரு மகள்கள்.
மூத்தவள் யமுனா. அமைதியாக இருப்பாள். எந்த சண்டைக்கும் செல்ல மாட்டாள். பெற்றோர் சொல் வேதவாக்கு.
இளையவள் இந்துஜா. அப்படியே எதிர்மாறு. படுசுட்டி. வம்பென்று வந்து விட்டால் யாரென்று பார்க்க மாட்டாள். தந்தையின் லிட்டில் பிரின்சஸ்.. தந்தை போல அன்பிற்காக உயிரை விடும் நல்ல குணம்..
“இந்துஜா பன்னீரிடம் மன்னிப்பு கேள்” ஆசிரியை அதட்ட, அவரை முறைத்து நின்று கொண்டிருந்தாள்.
“டீச்சர்…” கேசவன் ஆசிரியையை பார்த்து விட்டு தன் மகளை கண்டு, கண்ணாலே “என்ன?” புருவம் உயர்த்தினார்.
இந்துஜாவின் விழிகள் அவளருகே நின்று கொண்டிருக்கும் அவளது வகுப்பு தோழன் நவீனை காட்டி பன்னீர் மற்றும் அவன் நண்பர்களிடமும் சென்றது.
சார் உங்க பொண்ணு படிக்கிறதெல்லாம் இல்லை. சேட்டை தான். அவளோட இரு வயது மூத்தவனை கல்லால் தாக்கி அவன் கன்னத்தில் வேற அடித்து இருக்கிறாள் ஆசிரியை அவளை முறைத்தார்.
“இந்தும்மா, எதுக்கு இப்படி செஞ்சீங்க?” கேசவன் அமைதியாக அதே நேரம் ஆசிரியையிடம் அழுத்தமான பார்வையை வீசி தன் மகளை பார்த்தார்.
நவீன் அருகே ஒரு வயதே மூத்தவனான அவனது அண்ணன் பிரசாத்தும் இருந்தான்.
அப்பா, நவீன் அப்பா நம்ம வீட்டுகிட்ட தான இருந்தார். அவர் இறந்ததும் நவீனுக்கு பிரசாத்தை தவிர யாருமில்லை தானே!
“ஆம்” அவர்களை பார்த்து மகளை கவனித்தார்.
அநாதை பயலெல்லாம் விளையாடக்கூடாதாம்…
அப்புறம் என்று இந்துஜா பிரசாத்தை காண, அவன் சீற்றமுடன் பன்னீரை தான் முறைத்துக் கொண்டிருந்தான்.
அப்பா…இந்த பன்னீர் நவீன் அப்பாவை பத்தி ரொம்ப தப்பு தப்பா பேசினான். அதனால் நவீன் அவனிடம் என்னோட அப்பாவை பத்தி பேசாதீங்கன்னு சொன்னான்.
அப்படிதான் பேசுவேன். என்னடா பண்ணுவன்னு நவீனை இவங்க எல்லாரும் சேர்ந்து தள்ளி விட்டுட்டாங்க. அதான் நான் அவனை தூக்கி விட்டு அவனை கல்லால் அடித்தேன்.
அப்புறம் அவன் என்னிடம் உரண்ட இழுத்தான். அதான் அடிச்சுட்டேன்…
நவீனையும் பிரசாத்தையும் கண்ட கேசவன், பிரசாத்தின் இயலாமையும் நவீனின் கையிலிருந்த சிராய்ப்பையும் பார்த்து ஆசிரியையிடம்,
டீச்சர், என் பொண்ணு செய்தது தவறு தான். ஆனால் பன்னீர் நவீன் பிரசாத்திடம் பேசியதற்காக மன்னிப்பு கேட்கணும். பன்னீர் தலையில் அடிபட்டதை பார்த்த நீங்க நவீனின் சிராய்ப்பை காணவில்லை என்று ஆசிரியையை உறுத்து பார்த்தார்.
ஏழாம் வகுப்பு படிக்கும் பன்னீரும் அவன் தோழர்களும், “இந்த பொடிபயலுக கிட்ட எங்களால மன்னிப்பு கேட்க முடியாது. அந்த பொண்ணு தான் எங்களிடம் மன்னிப்பு கேட்டணும்” என்றான்.
“அவன் யாரு தெரியுமா? நம்ம ஊரு பிரசிடன்ட் மகன். அவனை மன்னிப்பு கேட்க சொல்றீங்க” பன்னீரின் தோழன் கூற, ஓரச்சிரிப்புடன் இந்துஜாவை அவன் பார்த்தான்.
அப்பா என்னால மன்னிப்பு கேட்க முடியாது. இவன் என் சடையை பிடிச்சு தூக்கிடுவானாம் என்றாள்.
பார்வை மாற கேசவன் பன்னீரை பார்த்து, “அப்படியாப்பா? என் பொண்ணு மேல கை வைப்பியா?” கேட்ட அவர் பார்வையில், “டீச்சர் விடுங்க. போனா போயிட்டு போகுது. நான் அப்பாவை சமாளிச்சுகிறேன்” பன்னீர் நழுவ பார்த்தான்.
அவன் தோளில் கை போட்ட கேசவன், “சும்மா எம் பொண்ணோட சடையை இழுத்து பாரேன்..” அவனை ஆழமான பார்வை பார்த்தார்.
இல்ல, இருக்கட்டும் டீச்சர். நாம வகுப்பிற்கு போகலாம்.
என்ன டீச்சர், எம் பொண்ணு சொன்னது போல பன்னீர் அந்த பசங்களிடமும் என் பொண்ணிடமும் மன்னிப்பு கேட்கணும்ல? என்றார்.
டீச்சரோ செய்வதறியாது பன்னீரை பார்த்தார்.
கேசவன் கண்களில் ரௌத்திரம் தெரிந்தாலும் புன்னகைத்த வண்ணம் பன்னீர் தோளில் இருந்து கையை எடுத்தார்.
பொதுவாக “சாரி” என்று பன்னீரும் அவன் தோழர்களும் கூறி விட்டு அகன்றனர்.
“டீச்சர் நீங்க ரெண்டு பக்கமும் விசாரித்து விட்டு கூப்பிட்டு இருக்கலாம்” ஆசிரியையிடம் கேசவன் கூற, ஆசிரியை கேசவனை முறைத்துக் கொண்டே அகன்றார்.
அன்றைய வகுப்பு முடிந்த அர்த்தமாய் மணி அடிக்க, தன் மகளை பார்த்தார்.
“அப்பா, உங்க இளாகிட்ட பெருசா சொல்லிறாதீங்க. இளா வச்சு செஞ்சிருவா” பாவமாக முகத்தை வைத்தாள் இந்துஜா.
“பார்த்துக்கலாம்டா” அவரது கையை மடக்கி தன் மகள் கையுடன் இடித்து அவர்களின் செல்ல சைனை போட்டுக் கொண்டனர்.
“தேங்க்ஸ் அங்கிள்..” பிரசாத் கூற, கேசவனை ஏக்கமுடன் பார்த்தான் நவீன்.
இருக்கட்டும்பா. இன்னும் அதே வீட்டில் தான இருக்கீங்க?
“ஆமா அங்கிள்” பிரசாத் கூறி தன் தம்பி நவீனுடன் நகர, இருவரையும் மறித்து நின்றாள் கேசவனின் குட்டி இளவரசி.
கேசவன் தன் மகளை ஆழ்ந்து பார்த்தார்.
பிரசாத், நவீன் கரத்தையும் பற்றிய இந்துஜா தன் தந்தையை ஆசையாக பார்த்தாள். பிரசாத்தும் நவீனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
என்னம்மா?
அப்பா, நேற்றிரவு நவீன் தந்தையின் நினைவில் எங்கேயோ போயிட்டான். பிரசாத் அவனை கண்டுபிடிக்க கஷ்டப்பட்டான். அவங்கள பார்த்துக்க யாரும் இல்லைப்பா. அதனால…தயங்கி மூவரையும் பார்த்தாள்.
அதனால…??? தந்தை புரிந்தும் புரியாமலும் மகளை காண,
“இவங்க இருவரையும் நாம வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடலாமா?” கேட்டாள். கேசவனுக்கு தூக்கி வாரி போட்டது.
நவீன், பிரசாத்தை ஏற்கனவே அவரும் அறிவார். நல்ல பிள்ளைகள் தான். அவருக்கு இதில் பிரச்சனையில்லை. தன் மனைவி என்ன செய்வாள்? சிந்தித்த அவர், “நாம எப்படிம்மா?” சங்கடமாக இரு பிள்ளைகளையும் பார்த்தார்.
ஏம்பா, தப்பா?
“தப்பில்லைடா செல்லம். ஆனால் அப்பாவிற்கு ஊதியம் பத்தாதேம்மா. நால்வரையும் படித்து ஆளாக்குவது கஷ்டமாச்சே…” தாடையை தேய்த்துக் கொண்டே அவர் தன் மகளை பார்த்தார்.
ப்ளீஸ்பா…..
பிரசாத் தன் தம்பியின் நலனை கருத்திற்கொண்டு பட்டென கேசவன் காலில் விழுந்து விட்டான். பள்ளியில் அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.
கேசவன் பதறி அவனை தூக்கி விட்டார்.
நான் படிக்காமல் வேலைக்கு போய் பணம் தாரேன் அங்கிள். என்னோட தம்பியை என்னால பார்த்துக்க முடியல. பாதுகாப்பான இடம் கிடைத்தால் மட்டும் போதும். அவன் படிக்க கூட பணம் நானே சம்பாதிக்கிறேன் என்றான். கண்கலங்க நவீன் தன் அண்ணனை பார்த்தான்.
சிந்தனையுடன், “மூவரும் பள்ளியில் இருக்கும் உங்களது பொருட்களை எடுத்து வாருங்கள்” அவர்களை அனுப்பி மெடிக்கல் சென்று மருந்து வாங்கி வந்தார். மூவரும் வந்தனர்.
நவீனை தூக்கி கல் இருக்கையில் நிற்க வைத்து, அவனுக்கு மருந்து போட்டு விட, யமுனாவும் தன் தந்தையிடம் வந்து விட நால்வரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
பிரசாத், நவீன் தந்தை இரு நாட்களுக்கு முன் தான் தீராத மனநோயால் உலகை விட்டு பிரிந்தார். பின் அவர்களின் சொந்தங்களும் அவர்களை அப்படியே விட்டு சென்றனர். இருவருக்கும் ஒரு வயதே வித்தியாசமானதால் பிரசாத் தன் தம்பியை பார்த்துக் கொள்ள கடினமாக இருந்தது.
பிரசாத் அன்பும் பண்பும் நிறைந்த சிறுவன். நவீன் கொஞ்சமாக சேட்டைகள் செய்தாலும் யாரிடமும் எதிர்த்து நிற்க மாட்டான். தன் பெற்றோர் பற்றி கூறவும் வந்த சினத்தில் பன்னீரை எதிர்த்து பிரச்சனையாகி விட்டது.
நால்வரும் வீட்டிற்கு வந்தனர்.
யமுனா விரைந்து வீட்டிற்குள் ஓடி தன் தாயின் கரம் பிடித்து இழுத்து வெளியே வந்தாள்.
இளமதி இரு பசங்களையும் பார்த்து, “என்னடா திடீர்ன்னு வந்துருக்கீங்க?” அவர்களின் புத்தகப்பை தன் கணவன் கரத்தில் இருப்பதை புரியாமல் பார்த்தார்.
“அம்மா…” இந்துஜா பள்ளியில் நடந்ததை கூறி பிரசாத், நவீன் நம் வீட்டில் தான் இருப்பார்கள் என்று கூறவும் அவரின் முகம் முற்றிலுமாக மாறியது.
கேசவன் இருவரின் கை பிடித்து படியேற, “நில்லுங்க” சத்தமிட்டார் இளமதி.
“பொம்பள புள்ளைங்க இருக்கிற வீட்ல கண்ட பசங்களையும் அழைச்சிட்டு வாறீங்க” சீறினார்.
இளா…புரிஞ்சுக்கோ…பசங்க தனியா இருக்கிறது கஷ்டம் தான? நம்ம யமுனா, இந்துவுக்கும் துணையாக இருப்பாங்கல்ல?
என்ன துணை? அதான் நாம இருக்கோம்ல்ல? இவனுகள அவங்க சொந்தமே அழைச்சிட்டு போகல. நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துருக்கீங்க?
“அம்மா…அவங்க நம்ம வீட்ல இருக்கட்டும். அப்பாகிட்ட நான் தான் கேட்டேன். அவங்களுக்கு யாருமில்லை” இந்துஜா இடைபுகுந்தாள்.
ஏன்டி, ஸ்கூல்ல பிரச்சனை செய்தது போதாதுன்னு வீட்டுக்கும் பிரச்சனை இழுத்துட்டு வந்துருக்க? இங்க என்ன பணம் கொட்டியா கிடக்கு. இது சத்திரமில்லை. கண்ட அநாதை பசங்களையும்….அவர் சொல்லி முடிக்கும் முன் அவர் கன்னம் சிவந்தது.
எதற்கும் தன் மனைவியிடம் அனுசரணையாக செல்லும் கேசவன் தன் மனைவியை அடித்து விட்டார்.
கண்ணீருடன் அப்படியே அமர்ந்தார் இளமதி. வாயிலிருந்து பேச்சே வரவில்லை. யமுனா தன் தந்தையை முறைத்தாள்.
“அங்கிள், நாங்க எங்க வீட்லயே இருந்துக்கிறோம்” அவர்கள் கேசவன் கையிலிருந்த புத்தகப்பையை வாங்க வந்தனர்.
“ஒரு முடிவெடுத்து விட்டு மாறும் பழக்கமெல்லாம் எனக்கில்லை. நீங்கள் எங்களுடன் தான் இருக்கணும்” அவர் இளமதியையும் மீறி இருவரையும் வீட்டிற்குள் அழைத்து சென்றார்.
இந்துஜா தன் தாய் அருகே வந்து அவர் கன்னத்தை வருடினாள்.
“போடி…உங்களுக்காக தான்டி இந்த பசங்க வீட்டுக்குள்ள வேண்டாம்ன்னு சொல்றேன். மத்தவங்க கண்டபடி பேசுவாங்கடி…” இந்துஜாவை தள்ளினார்.
“அம்மா ப்ளீஸ், இப்ப அவங்க இடத்துல நாங்க இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?” இந்துஜா கூற,
“பெரிய மனுசி மாதிரி பேசுற…” சத்தமிட்டார்.
“என்ன சத்தம்? ஊருக்கு நான் பதில் சொல்லிக்கிறேன். எல்லாரும் உள்ள வாங்க” கேசவன் அழைத்தார்.
தலையில் அடித்துக் கொண்டு இளமதி தன் மகள்களுடன் உள்ளே சென்றார்.
இளா…பசங்க இருவரும் படிக்க தான் செய்வாங்க. நாம தான் படிக்க வைக்கணும். எல்லாம் பார்த்துக்கணும்..
படிக்க வைக்க பணத்துக்கு எங்க போறது? ஏற்கனவே படிப்பு, வீட்டு செலவுன்னே பணம் போத மாட்டேங்குது.
“அங்கிள், நான் படிக்கலை. என்னை ஏதாவது வேலையில் சேர்த்து விடுங்க..” கேசவன் முன் வந்து நின்றான் பிரசாத்.
“படிப்பு மிகவும் முக்கியமானது பிரசாத். என்னதான் நான் கணக்கராக இருந்தாலும் எனக்கான வருமானம் போதவில்லை. நான் வேறு அதிகப்படியான வேலை கூட பார்த்துக் கொள்கிறேன். நீங்க படிச்சே தீரணும்” உறுதியாக இருந்தார் கேசவன்.
“நம்ம மாணிக்க அண்ணே செட்ல கார் க்ளீனிங் வொர்க் மாலை சென்று பார்க்கவா அங்கிள்? ஏற்கனவே கேட்டிருந்தேன்…” பிரசாத் கூற, தன் மனைவியை மனதில் வைத்து “சரி” என்று கூறி விட்டார்.
என்ன தான் இவர்கள் வீட்டினுள் வந்தது பிடிக்கவில்லை என்றாலும் பிரசாத் வேலை செய்தால் கொஞ்சம் பணம் கிடைக்கும் என்று மனதை ஆறுதலாக்கி கொண்டார் இளமதி.
யமுனாவிற்கும் இரு சிறுவர்களும் வந்தது பிடிக்கவில்லை. ஆனால் பிரசாத் நவீனுக்கு நமக்கென ஒரு குடும்பம் இருக்கிறார்கள் என்ற நிம்மதி.
எல்லார் முன்னும் பிரசாத் இந்துஜா முன் மண்டியிட்டு, அவளது கரத்தை பற்றி அவன் கண்ணில் ஒற்றிக் கொண்டு, “தேங்க்ஸ் ஜா” என்றான் கண்ணீருடன்.
“எதுக்கு பிரசாத்? நாம ப்ரெண்ட்ஸ்…” இந்துஜா நவீன் பிரசாத்தை பார்த்து புன்னகைத்தாள்.
யமுனாவை தவிர மூவரும் மிகவும் நெருக்கமானார்கள். பிரசாத்தை வேலைக்கு அனுப்புவது பிடிக்கவில்லை என்றாலும் கேசவனால் தன் மனைவியை எண்ணி அவனிடம் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.
சிறுசிறு வேலைகள் செய்து பணத்தை நேராக கேசவனிடம் கொடுத்தான் பிரசாத்.
“இதை நீயே வச்சுக்கோ” கேசவன் முடிப்பதற்குள் அதை இளமதி பிடுங்கி சென்று விடுவார்.
இளா…கேசவன் அழைக்க, “சாப்பாட்டுக்கு இருக்கட்டும்” என்று சொல்லி அவர் வேலையை கவனித்தார். பின் படிப்பது, உணவுண்ணுவது முடித்து படுத்து விடுவான் பிரசாத்.
பக்கத்து வீட்டு பெண்மணிகள் இளமதியிடம், நவீன் பிராசத்தை வெளிய அனுப்ப ஐடியா செய்து கொடுத்தனர். ஆனால் இளமதி அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. பிரசாத் அவருக்கு பெரிதும் உதவியாக இருக்கிறானே!
அதற்காக சிறுவர்களிடம் நன்றாகவெல்லாம் நடந்து கொள்ளவில்லை. எரிச்சலுடனும் கோபமுடனும் தான் பேசுவார்.
முதல் நாள் பக்கத்து வீட்டு பெண்மணி, பொம்பள புள்ளைங்க இருக்கிற வீட்ல எதுக்குடி பசங்கள விட்ட? சண்டை போட்டாவது அவங்களை வெளியே அனுப்பிடு என்றார்.
தன் கணவன் கூறியது போல கூறி அவர் வாயை அடைத்தார் இளமதி.
நவீனும் பிரசாத்தும் என்னோட பசங்க தான். உனக்கு என்ன பிரச்சனை? நாங்க பள்ளி, ரேசனில் கூட அவர்களது பெயரை சேர்க்க ஏற்பாடு செய்யப் போகிறோம். உனக்கு பிரச்சனைன்னா அவங்கள வச்சு பார்த்துக்கிறியா? கேட்க, அந்த பெண்மணி வாயடைத்து கொண்டார்.
நவீனுக்கு எப்போதும் ஜா தான். ஜா..ஜா..ஜா…என்று எப்போதும் இந்துஜா பின்னாலே சுற்றினான். கூடப் பிறவாத மனங்களாக பழகினார்கள்.
மூவரும் ஒரே வீட்டில் இருப்பதால் பள்ளியில் அனைவரும் கேலி செய்ய, இந்துஜா பிரச்சனையை இழுத்து விட்டாமல் அவளை எப்போதும் தடுத்தாள் இந்துஜா, நவீனின் தோழி பிரியசகி…
பிரியா விடு. அந்த பன்னீரை ஒரு வழி செய்துட்டு வாரேன்…
வேண்டாம் ஜா. அவன் தான் திமிருத்தனமா செய்றான்னா நாமும் செய்யணுமா? அவளுக்கு பாதுகாவலாக இருவரும் இருந்தனர்.
பிரியசகிக்கு ஒரே ஒரு பாட்டி மட்டும் தான். பிறப்பிலே பெற்றோரை இழந்தவள். நல்ல அழகு. நேர்த்தியான உடை. இந்துஜா போல தான் அவளும் சுட்டித்தனமாக ஏதாவது செய்து கொண்டே இருப்பாள். மற்றவர்களுடன் மல்லுக்கு மட்டும் நிற்க மாட்டாள்.
பள்ளி விட்டு செல்லும் போது நவீன் தன் அண்ணன் பிரசாத் புத்தக்கப்பையை வாங்க, இந்துஜா, பிரியசகி, நவீன் எப்போதும் சேர்ந்தே தான் செல்வார்கள். வேலை இல்லாத நேரங்களில் அவ்வப்போது பிரசாத்தும் இவர்களுடன் இணைந்து கொள்வான்.
இளமதிக்கு பிரசாத், நவீனின் நடவடிக்கையில் மனம் நிம்மதியடைய, அவரும் அவர்கள் தன் மகள்களுடன் பழக விட்டு விட்டாலும் கண்காணிப்பு இருந்து கொண்டு தான் இருக்கும்.
அண்ணன், அக்கா, தம்பி, தங்கையாக தான் பழகினார்கள். யமுனா மிகவும் நெருங்கவில்லை என்றாலும் அவர்களுடன் நேரம் செலவழித்தாள்.
அன்று பள்ளி விடுமுறை நாள்.
“மதி…” அழைத்துக் கொண்டே கேசவன் வீட்டிற்கு வந்தார் சுவர்ணலதா. இளமதியின் உடன் பிறந்த சகோதரி. அவர் பின்னே லதாவின் கணவர் நாகேந்திரனும் மகன் சஞ்சயும் வந்தனர்.
“பெரியம்மா வாங்க…” புன்னகையுடன் யமுனா அழைக்க, விளையாட்டில் மும்பரமாக இருந்த நவீன், இந்துஜாவும் எட்டிப் பார்த்தனர்.
சஞ்சயை பார்த்து, “அண்ணா…” இந்துஜா சஞ்சயிடம் ஓடி வந்தாள்.
அக்கா, வா..வா…ஏங்க யாரு வந்துருக்கா பாருங்க.
“வாங்க மாமா. சஞ்சய்…வா..” மலர்ந்த முகத்துடன் இளமதி தன் தமக்கை குடும்பத்தை வரவேற்றார்.
கேசவனும் அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்து இவர்களை வரவேற்றார்.
“பிரசாத் நவீன்…” கேசவன் சத்தம் கொடுக்க, இருவரும் அவர்கள் முன் வந்து நின்றனர். அவர்களை அறிமுகப்படுத்த புன்னகைத்த நாகேந்திரன் இருவரையும் அருகே அழைத்து அவர்களிடம் எவ்வித பாகுபாடின்றி சிரித்த முகமுடன் பேசினார். லதாவும் நன்றாகவே பேசினார்.
சஞ்சய் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். சஞ்சய்கு பிரசாத்தை பார்க்கவுமே பிடித்து போனது.
“நம்ம வீட்லயே தங்கிக்கலாமேக்கா…” இளமதி கூற, பக்கத்து வீட்டுக்கு தான வரப் போறோம் மதி. நாளை காலை பால்காய்ச்சலாம்ன்னு இருக்கோம்.
மாமா வேலை…???
சென்னையில் தான்மா. அதனால தான் உங்க வீட்டுக்கு பக்கத்துல வீடு புடிச்சிருக்கேன். பார்த்துப்பீங்கல்ல? கணவன் மனைவி இருவரையும் பார்த்தார்.
“நாங்க பார்த்துக்கிறோம் அங்கிள்” என்றான் பிரசாத்.
சத்தமாக சிரித்த நாகேந்திரன், நல்ல புள்ளைய தான் புடிச்சிருக்கீங்க..என்றார்.
“பிரசாத் அதிகபிரசங்கித் தனமா பேசாதன்னு சொல்லி இருக்கேன்ல” சத்தமிட்டார் இளமதி. அவன் வாயை மூடிக் கொண்டான்.
“சித்தி அவனை எதுக்கு திட்டுறீங்க?” சஞ்சய் பிரசாத்திற்காக பேசினான்.
அவன விடுங்க…என்று அவர்கள் பேச, “சஞ்சயையும் நம்ம பசங்க படிக்கும் பள்ளியிலே சேர்க்கலாமே!” கேசவன் கேட்க, அங்க தான சேர்க்கப் போறோம்.
“ஹைய்…அண்ணாவும் எங்களுடன் பள்ளிக்கு வரப் போறாங்க” குதித்தாள் இந்துஜா.
நவீன், பிரசாத்தை பெற்றோர் இடத்திலிருந்து கேசவனும் இளமதியும் பார்த்துக் கொண்டாலும் அவர்களை இருவரும் அங்கிள் ஆன்ட்டி என்று தான் அழைத்தார். ஏனோ அம்மா அப்பா என்று அவர்களால் அழைக்க முடியவில்லை.
சஞ்சயை மாமா என்றே அழைத்தனர். சஞ்சயும் அவர்கள் படிக்கும் அதே பள்ளியிலே படித்தான்.