இரவு 56

என்னுடன் நீ இருந்தால் நரகம் கூட சொர்க்கமாய் இனிக்கிறதே!

தினக்கரன் பத்தாம் வகுப்பில் நல்ல முறையில் தேர்ச்சி அடைந்திருந்தான். அவனை அவன் அம்மா, அவன் படித்திருந்த பள்ளியை விட்டு மிகத் தள்ளி ஒரு பள்ளியில் சேர்த்திருந்தார். அன்று அவள் கம்பள் தந்து சென்றதோடு சரி, தேவியை அதன் பின் தினக்கரனால் பார்க்கவே முடியவில்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றும்போது எல்லாம் அவள் தந்த அந்த சிறு வளையத்தை பார்த்து, அதை நெஞ்சோடு அணைத்துப் பிடித்துக்கொள்வான். கழுத்தில் வளையம் அணிந்திருப்பது தன் அன்னைக்குத் தெரியக்கூடாது என்று சட்டையில் இருக்கும் கழுத்துப்பட்டையையும் சேர்த்துப் போடத் தொடங்கினான் தினக்கரன். அவன் அன்னை கேட்டதற்கு, “ இது டிசிப்ளின்காக, மேம் சொல்லிக்கொடுத்தது, இதை போட்டா நல்லா படிக்கிற பையன்னு சொல்லுவாங்களாம்” என்று சொல்லிச் சமாளித்தான்.

இப்படியே பன்னிரண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்துப் பாஸ் ஆகினான். உடனே, அவன் அம்மா, பி.காம் எடுத்துப் படிக்கச் சொல்ல, மனதில் மூன்று வருடம் தான் என்று கணக்குப் போட்டவன் மகிழ்ச்சியாகவே அதையும் படித்து முடித்தான். படித்து முடித்த கையோடு, அவன் வேலை தேடி செல்ல, அவன் அம்மா, அவன் தலையில் கல்லைப் போடும் வகையில், “ சி.ஏ.க்கு அப்ளை பண்ணு “ என்று சொல்லிவிட்டார். முதன் முதலாக அன்று தான் அவனை மறந்து தினக்கரன் அவன் அம்மாவை எதிர்த்து பேசினான் . உடனே அவன் அம்மா பெல்ட்டால் அடி போட்டு வெளுத்து விட்டார், பாதத்தில் சூடு வேறு வைத்து விட்டு இருட்டு அறையில் இரண்டு நாள் அவனைத் போட்டு அடைத்து விட்டார்.

வேறு வழி இல்லாமல் தினக்கரனும் சம்மதித்து விட்டான். மனதில் பெரும் வழி அவன் லட்சுமியை பார்க்கவே முடியாதோ என்று தவிப்புடன் சி.ஏ படித்து கொண்டு இருந்தவன் காதில் வந்து விழுந்தது லட்சுமியின் அப்பா அம்மா, வின் இழப்பு. அதை கேட்டு தினக்கரன் துடித்து போய்விட்டான். அதை கேட்ட மறு நொடி வீட்டிற்கு வேகமாக வந்து பார்க்க அவன் அம்மாவும் அப்பாவும் சாவகாசமாக பேசிக்கொண்டு இருந்தனர்.

“ ஏன்டி உங்க அண்ணன் அண்ணி இறந்துட்டாங்களாமே, நீ போய் பார்க்கால்லையா? “ என்று தினகரனின் தந்தை கேட்டார் , அதற்கு அவன் அம்மாவோ

“ ம்ம்ம்… தெரியும் தெரியும், இப்போ போய் நான்  பார்த்தா, அவன் பெத்து  போட்ட இரண்டையும் என் தலையில கட்டிடுவாங்க “

“ ஆமா உன் அண்ணன் பிள்ளைங்க சாகமா தான் இருக்காங்கள “

“ம்ம்ம் நான் கூட அவுங்களும் போய் சேர்ந்திருப்பாங்க, அந்த நிலமும் நமக்குத்தான் இனிமே சொந்தம்னு நினைச்சேன், “ என்று சலித்துக் பேசுவதை கேட்ட தினகரனுக்கு கோபமாக வந்தது. அதோடு சேர்ந்து அழுகையும் வர, என்ன செய்வது என்று தந்திரமாக யோசிக்க தொடங்கினான்.

தினகரன், எப்போதும் போல கல்லூரி முடித்து வருவது போல வந்தவன், அவன் அம்மா அருகில் அமர்ந்து, அவன் ஷூவை  கழற்றியபடி, “ அம்மா மாமா வீடு கீழே இடிஞ்சி விழுந்துருச்சாமே இந்த மழைல? “ என்று ஒன்றும் தெரியாதவன் போல கேட்டு வைக்க, அதற்கு அவன் அம்மா “ ஆமா அதுக்கு இப்போ என்ன? “ என்று குரலை உயர்த்தி பேச , அவரை கண்டுகொள்ளாதது போலவே தினகரன்,  “ அது அம்மா இந்த கவர்மெண்ட் அதுக்கு ஆயிரம் கணக்கில்ல பணம் தருதாமே, என் ஃபிரண்டு சொல்லிட்டு இருந்தான். அதான் உன் கிட்ட சொன்னேன் ம்மா. சரி, டைம் ஆச்சி. நான் போய் படிக்கிறேன். “ என்று எழுந்து சென்று விட்டான்.

தினகரன் போனதும் நன்றாக யோசித்த அவன், அம்மா, அவன் நினைத்தது போலவே அங்கே சென்று பணத்தை வாங்கி வர சென்றவர், திரும்பி வரும் போது கூடவே லட்சுமி மற்றும் மாணிக்கத்தை யும் அழுத்து வந்தார். அதை பார்த்த பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது தினக்கரனுக்கு. வந்த நிம்மதியும் வந்த நொடியில் போனது போல, அவனது அம்மா லட்சுமியை பாத்திர கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டார். லட்சுமி படிப்பைத் மீண்டும் தொடர வைக்க என்ன செய்வது என்று யோசித்தவன் நேராக லட்சுமியை பார்க்க அவள் வேலை செய்து கொண்டிருந்த பாத்திர கடைக்கு முன்னே, அவள் வேலை முடியும் நேரமாக பார்த்து சென்று நின்றுவிட்டார்.

லட்சுமி இரவு ஒன்பது மணி போல வேலை முடித்து வெளியே வர அங்கு ஒரு ஓரமாக தினகரன் நின்றுகொண்டிருப்பதை பார்த்தும் பார்க்காதது போல் நடந்து சென்றவள் அருகில் ஓடி வந்த தினகரன் தயங்கிய குரலில் “தேவி….. கொஞ்சம் உங்க கிட்ட போசனும் இங்க  வாறிங்களா “ என்று தயங்கித் தயங்கி அழைத்தான். முன்பைப் போல் தேவியுடன் பேச மிகவும் தயங்கினான் தினக்கரன், தான் பார்த்த தேவியோ சிறு பெண் ஆனால், வீட்டிற்கு வந்த தேவியோ நன்றாக வளர்ந்து குமரியாக வந்திருக்க இவளுக்கு நம்மளை நினைவு இருக்குமா என்ற தயக்கத்துடன் பேசினான்.

நடந்து சென்ற தேவி தினகரன் அழைப்பில் நின்று அவனை திரும்பி பார்க்க அங்கே இருந்த மரத்தடியை காட்டி “ கொஞ்ச நேரம் தான் ஒரு விஷயம் பேசணும் “ என்று கேட்கவும் லட்சுமியும் எதுவும் பேசாமல் உடனே அந்த மரத்தடியை நோக்கி நடக்க தினகரனும் அங்கு சென்றான். அங்கே லட்சுமியை பார்க்காமல் தரையைக் பார்த்தபடி “ நீங்க இந்த வேலைக்கு போகாதிங்க,  எங்க அம்மா கிட்ட இருந்து கவர்மெண்ட்  தந்த காசை எப்படியாவது வாங்கி தரேன் நீங்க மெட்ராஸ்ல ஆஸ்டல்ல தங்கி உங்க படிப்ப முடிங்க அங்க என் தோழி ஒருத்தி இருக்கா அவ உதவி செய்வாள். உங்க படிப்பு முடியும் வரை மாணிக்கம் இங்கேயே இருந்து படிக்கட்டும் நான் பார்த்துக்கிறேன் “என்று தரையோடு பேசி முடிக்க, அதை கேட்ட லட்சுமி “ நீங்க ஏன் எனக்கு உதவி பண்ணணும் “ என்று கேட்கவும் அதை கேட்டு வேகமாக அவள் முகத்தை பார்த்த தினகரன் “ நான் செய்யாம வேற யார் தேவி செய்வா “ என்பது போல பார்க்க லட்சுமி அதை கவிக்காதது போல “ நீங்க சொல்றது போல செஞ்ச உங்க அம்மா என் தம்பியை வீட்டில்ல வச்சி பார்த்துக்கபாங்கனு நினைக்கிறீங்களா, முதல்ல அவனைத்தான் துரத்தி விடுவாங்க. அதுவும்  இல்லாம எனக்கு படிப்புல அவ்வளவு ஆர்வம் இல்லை அப்பாவுக்காகப் தான் படிச்சேன் அவ்வளவு தான் அதனால எனக்கு மேலே படிக்கிற ஆசை இல்லை என் தம்பியை விட்டுப் போகவும் விருப்பம் இல்லை “ என்று திரும்பி செல்ல தினகரன் தலையை குனிந்த படி சோகமாக “ அப்போ என்னை மறந்துட்டியா தேவி “ என்று எண்ணிக் கொண்டு இருக்கும் போது “ இன்னும் எத்தனை வருஷம் நீங்க படிக்கணும் தினா “ என்று லட்சுமி சத்தம் கேட்கவும் அதில் வேகமாக தலையை நிமிர்ந்து பார்த்தான். லட்சுமி தான் நின்று கொண்டு இருந்தாள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை சாதாரணமாக தான் அந்த கேள்வியை கேட்டாள். அதற்கு தினகரன்

 “ இப்போ இரண்டாவது வருஷம் படிச்சிட்டு இருக்கேன் இன்னும் ஒரு வருஷம் போதும். எப்படியாது முடிச்சிடுவேன் “ என்று நம்பிக்கையுடன் அவள் கண்களை பார்க்க, லட்சுமி சிறு தலையாட்டலுடன் நடந்து செல்ல அவளுடனே நடந்து சென்றான் தினகரன்.

லட்சுமி அவனிடம் எதுவும் பேசவில்லை என்றாலும் அவனுடனே நடந்து வர தினக்கரனுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. எங்கு லட்சுமி தன்னை மறந்து விட்டாளோ என்று நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு லட்சுமியின் தினா என்ற அழைப்பும் அவள் மறக்காமல் அவன் படிப்பை பற்றி விசாரித்ததே போதுமானதாக இருக்க சந்தோஷமாகவே அவளுடன் நடந்தான். லட்சுமியும் ஆரம்பத்தில் தினக்கரன் இவளைப் பார்க்காமல் அவன் வீட்டில் இருப்பதை பார்த்துவிட்டு தன்னை இவன் மறந்து விட்டான் என்றே நினைத்திருந்தவளுக்கு இன்று இவனே வந்து அக்கறையாக பேசியதும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. இருந்தும், சாதாரணமாக தினக்கரனுடன் பேச முடியாமல் அவளின் வயதின் காரணமாக வெட்கமாக வர, அவள் பேசாமலே அவனுடன் நடக்க தொடங்கினாள். இருந்தும், அவள் உதட்டருகே சிறு சிரிப்பு ஒட்டிக்கொண்டு போகமாட்டேன் என்று கூற, தினக்கரனுக்கு அதை காட்டாமல் மறைத்த படி நடந்தாள்.

இருவரும் இப்படி ஒருவர் அருகில் மற்றவர் என்று அமைதியாக வீட்டை நோக்கி நடந்து செல்ல தினக்கரன் வீடு அருகில் வந்ததும், அங்கேயே நின்றுகொண்டான், உடனே அவனை திரும்பி பார்த்த லட்சுமியிடம் “ நீ முதல்ல போ தேவி, நான் பின்னாடியே வறேன்” என்று அங்கேயே நின்றுவிட்டான். லட்சுமியும் அவனை திரும்பி திரும்பி பார்த்தபடியே சென்றாள். லட்சுமி சென்று அரை மணி நேரம் கழித்தே வீடு சென்றான் தினக்கரன் தாமதமாக வீட்டிற்கு வந்ததை பார்த்து அவன் அம்மா என்ன என்று கேட்க அதற்கு “ஸ்பெஷல் கிளாஸ், எக்ஸ்ட்ரா கோச்சிங்” என்று ஏதோ சொல்லி சமாளித்து விட்டான்.

இதுவே தினமும் வாடிக்கையாக இருந்தது லட்சுமி வேலை முடியும் நேரம் சரியாக அங்கே அவளை பார்க்க தினகரன் சென்றுவிடுவான். அங்கு போகும் வழியில் எது கண்ணில் படுகிறதோ அதை வாங்கி சென்று லட்சுமியிடம் அதை கொடுப்பவன் “ எங்க  அம்மாக்கு தெரியாம நீயும் மாணிக்கமும் சேர்ந்து சாப்பிடுங்க “ என்று சொல்லிவிடுவான். லட்சுமி ஏது பணம் என்று கேட்டதற்கு “ நான் படிக்கிற படிப்புல சில வேலை பார்த்த காசு வரும் அதுல தான் வாங்கி வறேன் தேவி “ என்று சிரிப்புடன் கூறுபவனை கண்ணிமைக்காமல் லட்சுமி பார்த்துக்கொண்டிருக்க அதற்கு தினகரன் வெட்கத்தோடு  தலைகோதுவது லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.

இப்படியே தினமும் அவளுடன் செல்பவன், வாய் ஓயாமல் அன்று நடக்கும் விஷயத்தை எல்லாம் அவன் தேவியிடம்  சொல்லுவான் அவற்றையெல்லாம் சிரித்த முகமாகவே கேட்டு ரசிப்பாள் லட்சுமி. ஆனால் வீட்டில் இருக்கும் போது தவறி கூட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள மாட்டார்கள் தலையை குனிந்த படியே லட்சுமி போவதும், வீட்டுக்குள்ளே வரும்  தினக்கரன் அறையை விட்டு வெளியேவே வரமாட்டான். லட்சுமி இதை தம்பி இடமும் ஒரு நாளும் பகிரமாட்டாள் சிறு பையனின் மனதை கலைக்கக்கூடாது என்று தினக்கரனை பற்றி எதுவும் சொல்லாமல் அவள் மனதோடு மறைத்து பாதுகாத்து வந்தாள்.

இப்படியே நாட்கள் செல்ல அன்று இரவு வினோத் லட்சுமியிடம் அவன் கேவலமான காதலை சொல்லி அதற்கு லட்சுமி அவனை திட்டி விட்டு வெளியே வந்தவள் முகமே சரியில்லை. ஏதோ யோசித்தபடி லட்சுமி வருவதை பார்த்த தினகரன் அவள் அருகே வந்து “என்ன ஆச்சு தேவி ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டும் லட்சுமி சொல்லவில்லை. லட்சுமி நினைவு எதுவும் இங்கு இல்லை வினோத் காதல் சொல்லும் போது தினகரனின் முகமே அவள் கண் முன் வந்து செல்ல அதுவே அவளின் பதட்டத்திற்கு காரணம். இவ்வளவு நாளாக தினகரனுக்கும், அவளுக்கும் இருக்கும் உறவை பற்றி லட்சுமி யோசித்ததே இல்லை. ஆனால் இன்று அது என்ன உறவு?’ என்று தெளிவாக தெரிந்துவிட சந்தோஷத்திற்கு பதிலாக பயமே தோன்றியது லட்சுமிக்கு. அதற்கு காரணம் தினகரனின் தாய் அவர் இவளை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார் அப்படியிருக்க இவர்களின் உறவு?’ என்று கலங்கிய லட்சுமியின் கை தானாக தினகரனின் கைகளை பிடித்துக்கொண்டது.

லட்சுமி திடீரென்று கையை பிடிக்கவும் சந்தோஷத்தில் அவள் முகத்தை பார்த்த தினகரனுக்கு அவள் முகம் காட்டும் குழப்பத்திலும் சோகத்திலும் அவளை புரிந்தவனாக அவள் கையை எடுத்து அவன் கைகளுக்குள் அடக்கி வைத்து கொண்டு “ எதையும் நினைச்சி கஷ்டப்படாத தேவி நான் இருப்பேன் உனக்காக ” என்று சொல்லவும் தான் அவளின் முகமே தெளிந்தது.

அதன்பின் வினோத் வீட்டில் வந்து பேசியது தினகரனுக்கு தெரியாது. அவன் காதுக்கு அந்த செய்தி வரும் முன் லட்சுமி சம்மதம் சொல்லியிருந்தால், தினகரனுக்கு இந்த விஷியம் தெரிந்து லட்சுமியை கத்தி தீர்த்து விட்டான் அதற்கு லட்சுமி “ தினா, சொல்றதைக் கேளு அந்த ஓனர் ரொம்ப நல்லவர். அவர் சொன்ன வேலைன்னா நல்ல வேலையா தான் இருக்கும் நான் ஒரு ரெண்டு வருஷம் அங்க போய் சம்பாதிச்சிட்டு, காசோட இங்க வந்துறேன் தினா” என்று கொஞ்சிக் கெஞ்சி அவனையும் சம்மதிக்க வைத்தாள். தினக்கரனுக்கு மனமே இல்லை ஆனால் அவன் தேவியிடம் போறடவும் முடியவில்லை இயல்பிலேயே சாதுவான அவனுக்கு போறடவும் தெரியவில்லை.

 லட்சுமி செல்லும் நாளும் வந்தது. அவளை அழைத்து செல்ல வந்த பாட்டி காரில் வந்து இவளை அழைத்து செல்ல, லட்சுமி அவள் தம்பிக்கு ஆயிரம் பத்திரம் சொல்லியவள் கண் தினகரனைத் தான் தேடியது. அவன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை. லட்சுமி எங்கே அவனை பார்க்காமல் சென்றுவிடுவோமோ என்று கண்கள் நிமிடத்திற்கு ஒருமுறை தெருமுனையையே பார்த்து காத்திருக்க, கடைசி வரை தினகரன் வரவில்லை. காரும் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி சென்றது.

உன்னை கான எத்தனை யூகம் ஆயினும் என் உயிர் உனக்காக அங்கேயே காத்திருக்கும். ஆனால் என் உடல், நாட்கள் செல்ல செல்ல அது வயதாகி அழிந்து போய்விடுமே உன்னை காணாமல் எங்கு என் கண்கள் ஒளியை இழந்துவிடுமோ என்ற பயத்தோடு உனக்காக நான் காத்திருக்கிறேன்.