அந்த அறையில் எரியும் மஞ்சள் விளக்கை அணைத்து விட்டு, வெள்ளை விளக்கை எரிய விட அனைத்தும் தெளிவாக தெரிந்தது அறையின் ஒரு புறத்தில் வரிசையாக பெண்களின் ஆடைகள் ஹேங்கரில் தொங்க விட்டு இருக்க, அதன் அருகே டிரெஸ்ஸிங் டேபிளில் நிறைய மேக்கப் பொருட்கள் நிறைந்து இருந்தது அதோடு கருப்பு கலர் லென்ஸ் களும் நாலைந்து இருந்தது, இவை அனைத்தையும் பார்த்த கர்ணா “ இ இஸ் டேன்ஜரஸ், சீக்கரமா அவன கண்டுபிடிக்கணும் “ என்று நினைத்து கொண்டு இருந்தவனுக்குப் போன் வர போனை எடுத்து பேசியவனுக்கு ஜெய்யின் போன் சுவிட்ச் ஆஃப் ஆவதற்கு முன்பு இருந்த லோகேஷனை கண்டுபிடித்து கூறியிருந்தன. அதை கேட்டு விட்டு, போனை வைத்த கர்ணா அங்கு அதிர்ந்து நின்று கொண்டு இருந்த ஸ்டெல்லா மட்டும் ஆர்யனிடம் திரும்பி” சோழிங்க நல்லூர் கிட்ட உங்க எம்டி க்கு பிராப்பர்ட்டி ஏதாவது இருக்க” என்று கேட்க, தீடீர் என்று கேட்ட குரலில் திடுக்கிட்ட ஸ்டெல்லா கர்ணா குரல் என்றதும் நிதானம் ஆகி “சார் பிராப்பர்ட்டி எங்க எங்க இருக்குன்னு டிடெய்ல்ஸ் எல்லாம் எனக்கு தெரியாது சார், பட் அதல்லாம் அவரோட ஃபேமிலி லாயர் பாஸ்கர் சார் தான் பார்த்துட்டு இருக்காரு சார் அவர் கிட்ட கேட்டா தெரியும் சார் “ “ அவரோட காண்டாக்ட் டிடெய்ல்ஸ் உங்க கிட்ட இருக்க ? “ “ம்ம்ம், இருக்க சார் , இதோ கால் பண்றேன்” “ என்று கால் செய்தால் ஸ்டெல்லாவும்.
முதலில் பாஸ்கரின் ஆபிசுக்கு போன் செய்தால் ஸ்டெல்லா, போன் எடுக்கவில்லை என்றதும் நேரத்தை பார்க்க அது எட்டு என்று காட்டியது அதை பார்த்து விட்டு அவர் பர்சனல் எண்ணிற்கு போன் செய்ய உடனே எடுத்திருந்தார் பாஸ்கர் “ ஹலோ யாரு “
“ ஹலோ சார், நான் ஜெய் சார் பிஎ ஸ்டெல்லா பேசுறன் சார் “
“ ம்ம்ம், சொல்லும்மா, எதுக்கு கால் பண்ணிருக்கீங்க “
“ ஜெய் சாரோட பிராப்பர்ட்டி ஏதாவது சோழிங்க நல்லூர் கிட்ட இருக்கா சார் “
“ அத ஏன் ம்மா நீ கேட்குற “ என்று அவர் அதட்டல் தொனியில் பேச அதில் கடுப்பான ஸ்டெல்லா அதை குரலில் காட்டாமல் “ எமர்ஜென்சி சார் ப்ளீஸ் சொல்லுங்க “
“ என்ன எமர்ஜென்சி அத முதல்ல சொல்லுங்க “ என்று அவர் பதில் சொல்லாமல் நேரத்தை வீக் ஆக்கி கொண்டு இருக்க ,ஸ்டெல்லா பேசியதை கேட்ட கார்ணா “ நான் பேசுறேன் தாங்க “ என்று கை நீட்ட ஸ்டெல்லாவும் போனை கொடுத்துவிட்டாள். போனை காதில் வைத்த கார்ணா “ ஹாய் சார் நான் இன்ஸ்பெக்டர் கார்ணா, ஒரு கடத்தல் கேஸ் விஷயமா எங்களுக்கு இந்த டிடெய்ல்ஸ் அவசரமா வேணும் , நீங்க போன்ல சொல்கிறீர்களா இல்ல ஸ்டேஷன் வறிங்களா? “ போலிஸ்க்கே இருந்த துணியில் பேசினான், அதில் ஜர்க் ஆன பாஸ்கர் “ நமக்கு எதுக்கு வம்பு “ என்று நினைத்து கொண்டு
“ அச்சோ சார் இல்ல நான் போன்லயே சொல்லிடுறேன் அங்க சோழிங்கநல்லூர் பக்கத்துல தான் இளன் ஓட அப்பா அம்மா வீடு இருக்கு சார் அத தவிர அங்க வேற எந்த பிராப்பர்ட்டியும் இல்ல சார் “
“ அந்த ப்ராபெட்டி அட்ரஸ் சொல்லுங்க “
என்று அந்த அட்ரஸை வாங்கியவன் வேகமாக அந்த இடத்திற்கு சென்றான். ஆனால் இவர்கள் செல்லும் முன் அங்கு நிலைமை கைமீறி சென்றிருந்தது.
இரவு மணி பத்து போலிஸ் ஜீப் வேகமாக சோழிங்கநல்லூரை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அதை தொடர்ந்து ஆர்யன் ஸ்டெல்லாவை பைக்கில் கூட்டி கொண்டு அவர்கள் பின்னேயே சென்று கொண்டு இருந்தான். ஆர்யனுக்கு உள்ளுணர்வு எதோ தவறாக நடக்க போகிறது என்று சொல்லிக்கொண்டே இருக்க அப்படி எதுவும் நடக்க கூடாது என்ற வேண்டுதலோடு மிக வேகமாக சென்று கொண்டு இருந்தான்.
போலிஸ் கார் மற்றும் ஆர்யன் பைக் இரண்டும் அந்த காட்டின் முன் வந்து நின்றது. அதை பார்த்த கர்ணா “ வீடுன்னு சொன்னாங்க காடு மாதிரி இருக்கு “ என்று கீழே இறங்கி பார்த்தான் அந்த காட்டை சுற்றி மதில் சுவர் கட்டப்பட்டு இருக்க முன்னால் ஒரு பெரிய கேட் துரு பிடித்த நிலையில் அதன் மேல் கொடி படர்ந்து இருந்தன. அதை சுற்றி பார்த்த கர்ணா இவர்கள் பக்கம் திரும்பி “ எதுக்கும் நீங்க இங்கேயே இருங்க நாங்க மட்டும் போய் பாத்துட்டு வரோம் “ என்று சொல்ல அதை கேட்ட ஆர்யன் “ஸ்டெல்லா இங்கயே பாதுகாப்பாக இருக்கட்டும் சார் நான் மட்டும் உங்க கூட வரனே ப்ளீஸ் “ என்று கெஞ்ச கர்ணாவும் “ ஓகே ஆர்யன் ஆனா எங்க பின்னாடி தான் நிக்கணும் “என்று சொல்ல அதற்கு ஆர்யனும் சரி என்று சொன்னதும் பாதுக்காப்பாக துப்பாக்கி எடுத்து கொண்டு, ஸ்டெல்லாவுக்கு ஒரு போலிஸ் துணையாக நிறுத்தி விட்டு ஐந்து பேரும் உள்ளே சென்றான்.
பாதைகள் தெரியாதபடி செடிகள் பெரிதாக மண்டி கிடக்க அதை தள்ளி கொண்டு உள்ளே நடந்து சென்றனர். ஐந்து நிமிடம் போல நடந்த பிறகே அந்த மாளிகையும் அதன் கீழ் பகுதியில் ஒரு அறையில் ஒளியும் அந்த இரவில் கண்ணில் தெரிந்தது. அதை நோக்கி அனைவரும் வேகமாக சென்றனர். அர்யன் எதை நினைத்து பயந்து கொண்டு இருந்தனோ அதுவே மெய்யாகும் வகையில் இவர்கள் அங்கு சென்று பார்க்கும் போலுது மயூரி நெற்றியில் இருந்து ரத்தம் வடிய ஜெய்யின் மடியில் நினைவு இன்றி கிடந்தாள். ஜெய்யோ அவளை மடியில் போட்டு கொண்டு “ மயூ… மயூ.. எழுந்திரி மயூ..என்ன ஆச்சு மயூ….சாரி மயூ முழிச்சி பாரு மயூ எனக்கு பயமா இருக்கு மயூ..” என்று கத்தி அழுது கொண்டு இருக்க மயூரியை அந்நிலையில் பார்த்த ஆர்யன் ஜெய்யை தள்ளிவிட்டு அவன் முகத்தை அடித்து உடைத்திருந்தான் “ என் மயில் என்னடா பண்ண உன்ன, அவ உன்ன எங்க வச்சிருந்தா, அவள போய் இப்படி பண்ணிட்டியே…..” என்று போலீஸ் வந்து தடுத்து பிடிப்பதற்குள் அவள் முகம் முழுக்க ரத்தமாக வழிந்து இருந்தது.
போலிஸ் பிடித்து விளக்கிய பிறகே ஆர்யனுக்கு மயூரி நிலை நினைவு வர அவளை வேகமாக கையில் ஏந்தியபடி வெளியில் ஓடி கொண்டு “ மயிலு..மயிலு.. எழுந்திரிடி நான் வந்துட்டேன் பாரு மயிலு..” என்று அவளை எழுப்பியபடி வெளியில் ஓட இங்கே கர்ணா அதற்குள் அம்பிளஸ்க்கு கால் செய்து இருந்தான். ஆர்யன் முடிந்தவரை வேகமாக மயூரியை தூக்கி கொண்டு வெளியே சென்றான். வெளியே இருந்த ஸ்டெல்லா ஆர்யன் மயூரியை தூக்கி கொண்டு ஓடி வருவதை பார்த்து எதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டு அங்கு நின்ற காவலரிடம் பேசி அவர்கள் வந்த இரண்டு காரில் ஒன்றில் மயூரியை ஏற்றி கொண்டு வேகமாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றன.
அங்கு மருத்துவமனையில் மயூரியை பார்த்த டாக்டர் பெரிய அடி எதுவும் இல்லை அதிர்ச்சில தான் மயங்கிடாங்க என்று சொல்லி சென்ற பிறகு தான் ஆர்யனுக்கு மூச்சே வந்தது. மயூரிக்கு நெற்றியில் ஏழு தையல் போட்டு அவள் முழிப்பதற்காக அனைவரும் காத்திருக்க மயூரி கண் திறக்கவே இல்லை. அந்த பங்களாவில் நடந்தது எதோ மயூரியின் மூளைக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்திருக்க அதன் விளைவாக மயூரி கோமாவுக்கு சென்றிருந்தாள். டாக்டரும் என்ன எல்லாமோ சிகிச்சை செய்து விட்டனர். ஆனால் பலன் தான் இல்லை. இப்படி வெளியே மயூரியை கோமாவில் இருந்து வெளியே கொண்டு வர அனைவரும் போராடிக் கொண்டு இருக்க இங்கு மயூரியும் அவள் நினைவுகளுடன் போராடி வெளியே வரும் வழி தெரியாமல் தவித்து கொண்டு இருந்தாள். கடலில் கரையும் பனி கட்டியாக அவள் நினைவில் கரைந்து கொண்டு இருக்கிறாள் அவள் முழுதாக கரையும் முன் கரை சேர்வாள இல்லை கரைந்து போவாள.
இங்கு ஜெய் மயூரியை தூக்கி சென்ற ஆர்யன் பின்னேயே ஓட பார்க்க அவனை பிடித்து நிறுத்தி கைவிலங்கு போட்டு அழைத்து சென்றனர். ஜெய் சென்ற பிறகு அந்த அறையை சுற்றி பார்த்தான் கார்ணா அந்த அறையில் ஒரு இடத்தில் கட்டில் ஒன்று இருக்க அதன் அருகே சென்று பார்த்தான். அதில் இருந்த மெத்தை ரத்த கறைகளால் நிறைந்து இருந்தது. அதை பார்த்தபடி நகர்ந்து கட்டிலை தாண்டி செல்ல அந்த அறையில் போடப்பட்டு இருந்த டைல்ஸ்கள் உடைக்க பட்டு மண் தறையாக இருந்தது அந்த கட்டிலை தாண்டி, அதை நெற்றி சுருங்க பார்த்த படி செல்ல அங்கு சுவற்றோரம் பள்ளம் தோண்டப்பட்ட அடையாளம் தெரிய கார்ணா உடனே தோண்டுவதற்கு இருவரை அழைத்து வந்து தோண்ட சொன்னான். அவர்களும் அந்த இடத்தை தோண்ட தொடங்க, தோண்டி சிறிது தூரத்திலேயே ஒரு பெண்ணின் உடல் கிடைத்தது. கர்ணா உடனே அதன் அருகிலும் தோண்ட சொல்லிவிட்டு ஃபாரன்சிக் டீம் மற்றும் ஆம்புலன்ஸையும் வரவழைத்தான். அந்த அறை முழுக்க தோண்டியதில் ஐந்து பெண் உடல் கிடைத்தது. அதை சந்தேகமாக பார்த்த கர்ணா “இவன் ஆறு பேற தான் கொன்றிருக்கிறானா “ என்று யோசித்து கொண்டு இருக்க ஆம்புலன்ஸ் மற்றும் ஃபாரன்சிக் டீம் வந்து அந்த உடல்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது ஒரு பெண்ணின் சடலத்தை எடுத்து சென்ற ஒருவன் தெரியாமல் அதே குழியில் விழுந்து விட அவன் தட்டுத்தடுமாறி எழுந்து நின்று கொண்டு “ ஒன்னுமில்ல தெரியாம விழுந்துட்டன் “
என்று அவன் மீது இருந்த மண்ணை தட்டி விட்ட படி அந்த குழியில் விட்டு நகர்ந்தவனுக்கு அந்த குழியின் மண் இவன் விழுந்த வேகத்துக்கு உள்ளே அமுங்கியது போல விழுந்த நபருக்கு தோன்ற உடனே அந்த குழியில் மீண்டும் இறங்கி தோண்ட தொடங்கினான். அதில் இன்னொரு பெண்ணின் சடலம் கிடைத்தது. தோண்ட தோண்ட ஒரே குழியிலேயே பல பெண் சடலங்கல் கிடைக்க வர அதிர்ந்து தான் போனார்கள் அங்கு இருந்த அனைவரும். மொத்தம் முப்பத்தி இரண்டு சடலங்கள் அந்த அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. வாணியுடன் சேர்த்து முப்பத்தி மூன்று சடலம், முப்பத்தி மூன்று கொலை, முப்பத்தி மூன்று உயிர்கள் ஏன் எதற்காக இத்தனை உயிர்கள் இதற்கான பதில் ஜெய்யிடமே.