இரவு 48

“ அன்னைக்கு எனக்கு அவர் யார்னு தெரியாது, ஆனா ஒரு மாசம் கழிச்சி நான் அவர் கம்பெனில பிஏ வா ஜாயின் பண்ண பிறகு தான் தெரியும் அவர் தான் அந்த கம்பெனி எம்டின்னு. “ என்று கர்ணாவை நிமிர்ந்து பார்த்தவள் “ அந்த பொண்ணு டெத்துக்கு அவர் தான் காரணமாக இருப்பாருன்னு நினைக்கிறீங்களா சார் “    “ வாய்ப்பு இருக்கு மிஸ்… உங்க நேம் “ என்று மீண்டும் கேட்க “ ஸ்டெல்லா சார் “   “ ஓகே மிஸ் ஸ்டெல்லா அவரா இருக்க வாய்ப்பு அதிகமாவே இருக்கு ஏன்னா அன்னைக்கு நைட்ல இருந்து தான் அந்த பொண்ண காணோம்  சோ அவர் கிட்ட விசாரிச்சா தான் தெரியும் , உங்க எம்டியை இங்க கால் பண்ணி வரவைக்க முடியுமா “ “ ம்ம்ம் சார் தோ கால் சொல்லுங்க  “ என்றதும் ஸ்டெல்லா ஜெய்க்கு அழைக்க அவன் போன் சுவிட்ச் ஆஃப் என்று வர, உடனே வீட்டுக்கு அழைத்து பார்த்தாள் அங்கேயும் போன் எடுக்க வில்லை என்றதும் “ போன் சுவிட்ச் ஆஃப் னு வருது சார் “ “ சரி அவர் இப்போ எங்க இருப்பாருன்னு தெரியுமா அங்க போய் நேர்ல பேசிக்கலாமே “என்று கர்ணா எழுந்து கொள்ள “ சார்ரோட ஃபிரண்ட யாரோ கடத்திட்டாங்க சார், சோ அவங்கள்ள தேடிட்டு இருக்குறதா சொன்னாங்க சோ எங்க இருப்பார்ன்னு தெரியல்லையே “ “ ப்ச். அப்போ சரி நீங்க கிளம்புங்க , வெளியில இருக்க அதிகாரி கிட்ட உங்க எம்டி வீட்டு அட்ரஸ்,  கம்பெனி அட்ரஸ் எல்லாம் கொடுத்துட்டு போங்க “ என்று ஏதோ யோசித்தபடி சொல்ல ஸ்டெல்லாவும் எழுந்து வெளியே சென்றாள்.

அங்கு வெளியில் ஆர்யன் காவலரிடம் ஏதோ பேசிக்கொண்டு இருக்க அவன் அருகே வந்த ஸ்டெல்லா “ ஆர்யன் மயூரி பத்தி எதாவது தெரிஞ்சுதா “ என்று கேட்க ஸ்டெல்லா குரல் கேட்டு திரும்பிய ஆர்யன் நிலை மிக மோசமாகவே இருந்தது அதை கண்களால் அளந்த படி ஸ்டெல்லா ஆர்யனை பார்க்க “ இல்ல ஸ்டெல்லா நானும் எல்லாம் இடமும் தேடி பார்த்துட்டேன் அந்த காரைக் கண்டு பிடிக்க முடியல அதான் இங்க வந்து எதுவது கண்டுபிடிச்சி  இருக்காங்கலர்னு கேட்க வந்தேன் “ என்றவன் அந்த காவலரிடம் திரும்பி “ கொஞ்சம் வேகமா கண்டு பிடிங்க சார் “ என்று சொல்லி ஸ்டெல்லா அருகில் வந்து “ நீங்க இங்க என்ன பண்றிங்க ஸ்டெல்லா “  “ ஒரு கேஸ் விஷயமா வந்தேன் ஆர்யன், சரி ஜெய் சார் எங்க அவர் உங்க கூட இல்லையா “  “ மயூரி தேடி போனவர் தான், போன் பண்ண சுவிட்ச் ஆஃப் வருது எங்கன்னு தெரியல “ என்று சோர்ந்து சொல்ல  அங்கே கார்ணா ராதாவுடன் ஏதோ பேசிக்கொண்டு வந்தவன் இவர்களை பார்த்து விட்டு அருகில் வந்தான்.

“ நீங்க இன்னும் கிளம்பல்லையா மிஸ் ஸ்டெல்லா “ என்று ஆர்யனை ஒரு பார்வை பார்த்து விட்டு பேச, ஸ்டெல்லா “ அது நான் சொன்னேனே சார் ஜெய் சாரோட ஃபிரண்ட கடத்திட்டாங்கன்னு, அவங்களோட அஸ்பண்ட் இவர் தான் சார் “ என்று அறிமுகம் படுத்தி வைக்க ஆர்யனை பார்த்த கர்ணாவுக்கே பாவமாக இருந்திருக்க வேண்டும். கர்ணாவே அவன் அருகே சென்று “ டோன்ட் வரி சீக்கிரமாகவே கண்டுபிடிச்சிடலாம்,  அவங்கள எங்க வைச்சி எப்படி கடத்தினாங்க ன்னு சொல்லுங்க என்னால முடிஞ்ச ஹெல்ப்ப பண்ணுறேன் “

“ மார்னிங் கோவிலுக்கு எங்க அத்தை அப்புறம் வீட்டுல வேலை பாக்குற அக்கான்னு மூனு பேரும் போனாங்க போன இடத்துல எதோ ஒரு பொண்ணு கார்ல வச்சி இவள மட்டும் கடத்திட்டு போய்டாளாம்,  அவ கடத்துன வண்டி திருட்டு வண்டின்னு சொல்றாங்க “ என்று சொல்லி முடித்த ஆர்யன் நம்பிக்கையோடு கர்ணா வை பார்க்க கர்ணா “ கூட ரெண்டு பேர் போய்ருக்காங்க இருந்தும் இவங்கள மட்டும் கடத்தி இருக்காங்கன்னா யாரோ அவங்களோட எனிமி பார்த்த வேலையா தான் இருக்கும் அவர்களுக்கு எதிரின்னு யாராவது இருக்கிறாங்களா “

“இல்ல சார் அப்படி யாரும் இல்லை இப்படி கடத்துற அளவு யாரும் இல்ல சார் “

“ சரி அவங்க கோயிலுக்கு போறது யார் யாருக்கெல்லாம் தெரியும் “

“ எங்க அப்பா அப்புறம் வீட்டுல வேலை பாக்குற அக்கா அவ்வளவு தான் சார் எனக்கே மார்னிங் கிளம்புற முன்னாடி தான் சொன்னா எங்க வீட்டு வேலை பாக்குற அக்கா தான் கோவிலுக்கு போலாம்னு சொல்லி கூப்பிட்டாங்களாம் “

“ உங்க வீட்டுல வேலை பாக்குற அக்கா அவுங்க எங்க இருக்காங்க இப்போ “

“ ஆஸ்பிட்டல்ல சார், அவங்களுக்கும் அடிபட்டுருக்கு. எங்க அத்தை அப்பா எல்லாரும் அங்க தான் இருக்காங்க “

“ சரி அவர்களுக்கு கால் பண்ணுங்க இப்போ “ என்று சொல்லவும் ஆர்யன் வேகமாக அவன் அப்பாவிற்கு கால் செய்து சரளாவிடம் கொடுக்கா சோல்ல அவரும் கொடுத்தார்.  போனை வாங்கிய சரளவும் “ தம்பி மயூரி ம்மா பத்தி ஏதாவது தெரிஞ்சிதா ப்பா …போலிஸ் ஏதாவது சொன்னாங்களா “

“ இப்போ ஸ்டேஷன்ல்ல தான் இருக்கேன் க்கா கடத்தல் பத்தி எதோ உங்க கிட்ட விசாரிக்கனும்னு சொன்னாங்க அக்கா, இதோ போன அவர் கிட்ட தறேன் பேசுங்க “ என்றுவிட்டு போனை கர்ணா விடம் தர போனை வாங்கிய கர்ணா “  நீங்க தான் மயூரி கிட்ட கோவிலுக்கு போகலாம்னு சொன்னதா “

“ ஆமா சார் நான் தான் இன்னைக்கு பூஜை பண்ண நல்லதுன்னு சொன்ன சார் “

“ சரி நீங்க கோவிலுக்கு அதுவும் அந்த கோவிலுக்கு போற விஷயம் யாருக்கெல்லாம் தெரியும்? “

“ வீட்டுல இருக்கவுங்க ளு‌க்கு மட்டும் தான் சார் தெரியும்? “

“ வீட்டுல இருக்கவுங்கன்னா யார் யாரு ? “

“ மாணிக்கம் ஐயாக்கு, எனக்கு, ஆர்யன் தம்பிக்கு அவ்வளவு தான் சார்“

“ இவங்களை தவிர வேற யாருக்கும் தெரியாதா? நல்ல யோசிச்சி பாருங்க   நீங்க எதேச்சையாக  யார் கிட்ட யாவது சொன்னீங்களா?”  சரளவும்  இங்கே நன்றாக யோசித்தவர் நினைவு வந்தவராக “ நான் சொல்லல சார், ஆனா மயூரி ம்மா தான் நாங்க கோவிலுக்கு போய்டு இருக்கும்போது அவுங்க ஃபிரண்டு தம்பி பேரு….ஜெய் அவர் கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க சார் “ என்று சொல்ல இங்கே கர்ணாக்கு எதோ நெருட “ கடத்துன பெண்ணை நீங்க பார்த்தீங்களா எப்படி இருந்தாங்க? “

“ நல்ல உயரமா இருந்திச்சி சார் மூஞ்சில மாஸ்க் போட்டிருந்துச்சு சார் முகத்த பார்க்கல அந்த பொண்ண நான் எவ்வளவு அடிச்சும் அசறாம எங்கள தள்ளி விட்டு மயூரி ம்மாவ தூக்கிட்டு போய்டா “  என்று சரளா சொன்ன அனைத்தையும் மனதில் ஓட்டி யோசித்த படியே கர்ணா “ சரிம்மா ..” என்று போனை வைத்தவன் ஆர்யனிடம் திரும்பி “ எத்தனை மணிக்கு கடத்துனாங்க உங்க மனைவியை “

“ காலையில ஒரு பத்து மணி கிட்ட இருக்கும் சார் “ அதை கேட்டு தலை ஆட்டியபடி கர்ணா ஸ்டெல்லா பக்கம் திரும்பி “ இன்னைக்கு பத்து மணிக்கு ஜெய் எங்க இருந்தாங்கனு தெரியுமா “ என்று கேட்ட அவர் கேட்க வருவது ஆர்யன் க்கு புரியாமல் “ ஜெய் பத்தி எதுக்கு விசாரிக்குறாங்க? “ என்று மனதில் நினைத்தபடி ஸ்டெல்லாவை பார்க்க கர்ணா கேட்க வருவது ஆர்யனுக்கு புரியவில்லை என்றாலும் ஸ்டெல்லாவுக்கு புரிய வர ஒரு திகைத்த பார்வையுடன் கர்ணாவை பார்த்தவளுக்கு திடீரென்று உடல் நடுங்க தொடங்க “ அது..அது.. இன்..இன்னைக்கு..கா..கா…”என்று திக்கிய ஸ்டெல்லா மூச்சி விட முடியாமல் அவள் முகம் பயத்தில் வெளிறி போக அவளையே பார்த்து கொண்டு இருந்த ஆர்யன் தண்ணீர் எடுத்து அவளிடம் கொடுக்க  கர்ணா “ ரிலக்ஸ் ஸ்டெல்லா மூச்சை இழுத்து விடுங்க ஒன்னுமில்லை “ என்று சமாதானம் செய்ய இங்கே ஆர்யனுக்கு எதோ பயம் நெஞ்சை வந்து அடைக்க தொடங்கியது, எந்த உணர்வையும் முகத்தில் காட்டமல் தைரியமாக இருக்கும் ஸ்டெல்லாவே பயந்து பேச முடியாமல்  தடுமாறுகிறாள் என்றாள் விசியம் ரொம்ப பெரியது என்று மட்டும் ஆர்யனுக்கு தெளிவாக புரிந்தது.

இங்கு தண்ணீர் குடித்து ஒரு நிலைக்கு வந்த ஸ்டெல்லா கண்களை இறுக்க மூடி திறந்தவளாக முகத்தை பழையபடி கொண்டு வந்து மூச்சு இழுத்து பிடித்தபடி “ இன்னைக்கும் எப்பவும் போல நான் வர்க் போன ஆனா ஒரு ஒன்பது மணி போல ஜெய் சார் வந்து இன்னைக்கு இருக்க மீட்டிங்  எல்லாம் கேன்சல் பண்ணிடு, நீ ஆஃப் எடுத்துக்கொன்னு சொல்லிட்டு எங்கயோ கிளம்பி போய்ட்டார்” என்று கடகடவென இதை சொல்லி முடித்தவள் மூச்சை விட்டுவிட்டு “ ஜெய் சாருக்கு மீட்டிங் கேன்சல் பண்ண பிடிக்காது அப்படியே பண்ணலும் எனக்கு இப்படி சடன்னா ஆஃப்  கொடுக்க மாட்டாறு தனிப்பட்ட விஷயமாக இருந்தா கூட, நானும் அவர் கூட போயிருவேன் மயூரி மேம் பாக்கன்னா என் கிட்ட இன்பார்ம் பண்ணிட்டு தான் போவார், ஆனா இன்னைக்கு ஆஃப் சடன்னா கொடுத்தது  நான் கூட காலைல எதோ டென்சன் யோசிக்கல “ என்று கர்ணாவை நிமிர்ந்து பார்த்து “ ஒருவேளை அந்த மர்டர் கேஸ் சார் பண்ணிருந்தா, மயூரி இப்போ ஜெய் கூட தான் இருப்பால சார் “ என்று கண்களில் பயம் தெரிய பேசினாள்.  ஸ்டெல்லா பேசியதை கேட்டு இடிந்து போய் விட்டான் ஆர்யன்.

ஸ்டெல்லா சொன்னதை கேட்ட கர்ணாவுக்கும் ஜெய் மீதே சந்தேகம் வர உடனே வேகமாக செயல்பட வேண்டும் என்று எண்ணியவன் க்ரைம் டிபார்ட்மென்ட்டிற்கு கால் செய்து ஜெய்யின் போன் இருக்கும் லோகேசனை அனுப்பும் படி சொல்லி வீட்டு “ ஸ்டெல்லா ஜெய் அட்ரஸ் சொல்லுங்க எதுக்கும் அங்கே போய் செக் பண்ணிறலாம் “என்று சொல்லவும் , உடனே ஸ்டெல்லாவும் அட்ரஸ் சொல்லி விட்டு அவளும்  ஆர்யனும் கூட சேர்ந்து அவன் வீட்டிற்கு சென்றனர் . அங்கு அவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல் சென்றனர்.  ஜெய் வீட்டு முன் கர்ணா வந்து இறங்கியவன் அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்தவர்களை ஒரு பார்வை பார்த்து வீட்டு இவனுடன் வந்த இரண்டு கான்ஸ்டபிலை உள்ளே சென்று தேட சொல்லிவீட்டு கர்ணா அந்த வீட்டை சுற்றி நடக்க தொடங்கினான் .

சரியாக அப்போது தான் ஸ்டெல்லாவும் ஆர்யனும் அங்கு வந்து இறங்கினர். ஜெய் வீடு மிக பெரியது அவன் வீட்டை சுற்றி தோட்டம் போல் அமைத்து வீடே அருமையாக இருக்கும்.  அதை அனைத்தும் சுற்றி பார்த்த கர்ணா அங்கு இருந்த கேமராக்களை பார்த்து வீட்டு அங்கு வேலை செய்து கொண்டு இருந்த ஒருவனை அழைத்து “ சார் இன்னைக்கு எப்போ வீட்டுக்கு வந்தார் “ என்று கேட்க , போலீஸை பார்த்து ஏற்கனவே பயந்து கொண்டு இருந்த அவன் பயத்தோடு சொல்ல தொடங்கினான் .

“சார் காலைல ஒரு ஒன்பது மணிகிட்ட வந்துட்டு அவர் என்னோரு கார எடுத்துட்டு போனாரு “  அதை கேட்டு விட்டு அவனை அனுப்பிய கர்ணா ஸ்டெல்லா விடம் “இங்க இந்த கேமர ஃபுட்டேஜ் பாக்குற ரூம்  எங்க இருக்கு “ என்று சுற்றி இருந்த கேமரவை காட்டி கேட்க உடனே ஸ்டெல்லா அங்கு பூட்டி இருந்த ஒரு அறையை காட்டி “ இந்த ரூம் தான் சார் “ என்று காட்டவும் பூட்டி இருந்த கதவை காலால் உடைத்து கொண்டு உள்ளே சென்ற கர்ணா அந்த கம்புட்டரை ஓப்பன் செய்ய பார்க்க அது பாஸ்வெட் கேட்டது, உடனே ஸ்டெல்லா “ மயூரி சீறோ த்ரி டென் ன்னு போடுங்க “ என்று சொல்ல அதை போட்டவுன், அதுவும்  திறந்து கொண்டது. அதை பார்த்த கர்ணா “அவுங்க நேம்ம பாஸ்வர்ட போடுற அளவு ஃபிரண்டா “ என்று தலையை அசைத்து விட்டு காலை ஜெய் வந்த நேரத்தை ஓட்டி பார்க்க, காரில் வந்து இறங்கிய ஜெய் அவன் ரூமில் இருந்து எதோ பை ஒன்றை எடுத்து வந்தவன் கீழே கரஜில் நின்று கொண்டு இருந்த அதே கருப்பு வண்டி அதவது மயூரியை கடத்தி சென்ற  அதே வண்டியை எடுத்து சென்றான்.

அந்த வண்டியை பார்த்த ஆர்யன் “ சார் இந்த வண்டி தான் சார் , அப்போ ஜெய் அவன் தான் கடத்துனான அன ஏன் ..எதுக்கு” என்று குளம்பி நிற்க இவர்கள் நோக்கி ஒரு கான்ஸ்டபிள் ஓடி வந்து “ சார் அந்த ரூம வந்து பாருங்க “ என்று அழைத்து செல்ல ஜெய்யின் ரூம் அதற்குள் மற்றோரு அறை பூட்ட பட்டு இருக்க அதை போலிஸார் உடைத்து உள்ளே சென்று இருந்தனர். அந்த அறையில் மஞ்சல் லைட்டின் ஒலியில் அத்தனை உடைகள் அனைத்தும் பெண்கள் அணியும் உடை அதோடு விக் காண்டக் லென்ஸ் மயக்க மருந்து என்று அனைத்தும் அழகாக அடுக்கி வைத்து இருந்தது அதை பார்த்த அங்கு  இருந்த அனைவருமே ஆடி தான் போனாவந்களாக மனதில் “ யார்டா நீ எதுக்காக இதெல்லாம் பண்ணிட்டு இருக்க “ என்ற கேள்வி தான் ஓடிக்கொண்டு இருந்தது.