இரவு 47

பகல் ஒளி வேகமாக மறைந்து கொண்டு இருக்க, மயூரி கத்தி கத்தி பார்த்துவிட்டு தொண்டை வறண்டு போக அமைதியாகியவள்.  பொறுமையாக மூச்சை இழுத்து விட்ட படி அவளை சுற்றிக் கேட்கும் சத்தங்களை கேட்கத் தொடங்கினாள். ஃபேன் ஓடும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது. வேறு எந்த சத்தமும் கேட்காமல் போக, “ என்ன இங்க கட்டிப் போட்டுட்டு எங்கயோ போய்ட்டான் போல” “ என்று யோசித்தவளுக்கு அவளை கடத்தியது பெண் என்று  கூடத் தெரியவில்லை. திடீரென்று ஒரு கை முகத்தை மூட, யார் என்று கவனிக்கும் முன், மயங்கியிருந்தாள் மயூரி.  இப்படி எதுவும் தெரியாமல் மயூரி அவள் பின்னால் கட்டியிருந்த கையை மெதுவாக பின்னாலேயே கீழே இறக்கிக் கால் வழியே முன்னோக்கி கொண்டு வந்தவள், எழுந்து அமர்ந்தபடி கண்களை திறந்து பார்த்தாள். அது ஒரு பெரிய அறை ஆனால் காலியாக இருந்தது. அங்கு நடுவில் ஒரு கட்டில் மட்டும் போட்டிருந்தது.

 பின், அந்த அறையின் மூலையில் நிறைய இடம், ஏதோ தோண்டப்பட்டது போல இருக்க, அதை அனைத்தையும் பார்த்தவள் “என்ன இந்த இடம் இப்படி இருக்கு? கைக்கோ கிட்டஏதாவது மாட்டிக்கிட்டோமா “ என்று பயந்தபடி வாயால் வேகமாக அவள் கைக்கட்டை அவிழ்த்துவிட்டு பின் அவள் கால் கட்டையும் அவிழ்க்க அந்த கட்டின் அடியில் இரும்பு சங்கிலி கொண்டு அந்த இடத்தில் அவளை கட்டிப்போட்டு இருந்ததை  அப்போது தான் கவணித்து பதட்டமான மயூரி அங்கே ஏதாவது இதை உடைக்க கிடைக்குமா என்று சுற்றிப் பார்க்க இவள் திரும்பவும்.  இவள் பின்னே வாயில் கை வைத்து அவளை அதிர்ந்து பார்ப்பதுபோல மாஸ்க் போட்ட  ஒரு பெண் அமைதியாக சேரில் அமர்ந்திருக்க அவளை பார்த்து பயந்த மயூரி “ நீங்க யாரு…” என்று கேள்வி எழுப்ப அதற்கு அந்த பெண் அவள் கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து ‘சூப்பர்’ என்பதுபோல காட்டி விட்டு கைதட்ட அதில் கடுப்பான மயூரி “ப்ச் யார் நீ இங்க என்ன எப்படி? உன்னையும் கடத்தி வந்துடாங்களா “ என்று கேள்வியாகக் கேட்டுக்கொண்ட மயூரிக்குத் திடீரென்று அந்த பெண்ணின் உடை நினைவுவர “ஏய்! கோயில்ல என்னைத் தாண்டி போன பெண்ணு…..’ என்று யோசித்தவளுக்கு ஆவேசம் வந்தது போல “ என்னை கடத்துனது நீதானேடி …உன்னை…’ என்று அவள் அருகில் செல்ல, கால் சங்கிலியின் நீளம் பத்தாமல், தொப் என்று கீழே விழுந்த மயூரி “ யார் டி நீ என்னை ஏன்டி கடத்தின?’ என்று கத்தத் தொடங்க மயூரி செய்வதை கால் மேல் கால் போட்டுப் பார்த்தபடி வாய்விட்டு சிரித்தாள் அவள்.

இங்கு இப்படி மயூரி ஒருபுறம் இந்தப் பெண்ணிடம் மாட்டிகொண்டு தவிக்க அங்கே ஆர்யன் தெருத்தெருவாக மயூரியைச் சுற்றியன் பார்க்கும் நபரிடம் எல்லாம் விசாரித்தபடி படி சென்னையையே சுற்றி வந்தான். அப்போது நடு ரோட்டில் வண்டி திடீரென்று நின்று விட என்ன என்று கீழே இறங்கி பார்க்க  பெட்ரோல் காலி ஆகி இருந்தது. அது கூட கவனிக்காமல் வண்டியில் வந்திருக்கிறான் ஆர்யன். பின் வண்டியை தள்ளிய படி அந்த கார் எங்காவது கண்ணில் படுகிறதா என்று பார்த்து கொண்டு அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்தவனுக்கு அப்போது தான்  நினைவு வந்தவனாக கிருபாக்கு கால் செய்து மாணிக்கத்தை பார்க்க சொல்லிவிட்டு.  பின் ஸ்டெல்லாவின்  நினைவு வந்து அவளுக்கு கால் செய்தான்.

ஸ்டெல்லா அன்று விடுமுறை எடுத்து இருந்தாள் அதனால் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் வந்திருந்தாள். அப்போது திடீரென்று இரண்டு பெண்கள் இவளை நோக்கி வந்து “ ஹாய் மேம் …. நாங்க போலிஸ், ஒரு கேஸ் பத்தி விசாரிக்கனும் பக்கத்துல இருக்க ஸ்டெசன் வர வறிங்களா “ என்று அழைக்க அவர்களை மேலும் கீழும் சந்தேகமாக பார்த்த ஸ்டெல்லா “ ஐடி காட் இருக்கா மேம் “ என்று அமைதியான குரலில் கேட்க அவர்களும் அவர்களிடம் இருந்த கார்டை காட்ட இவளும் வேறு எதுவும் பேசாமல் அவர்கள் பின்னேயே சென்றாள். அப்போது  அங்கு வேலை பார்க்கும் ராதாவும் இவர்களுடன் சேர்ந்து கொள்ள ஸ்டெல்லா ராதாவை ஒரு நிமிடம் உற்று பார்த்து விட்டு பின் எதுவும் பேசாமல் இவள் பைக்கில் ஏறிக்கொள்ள அந்த பெண் பொலிஸில் ஒருவர் இவள் பின் ஏறிக்கொண்டார்.  பின் நால்வருமாக அருகில் இருந்த ஸ்டெசன்கு சென்று இறங்க அப்போது தான் ஆர்யன், ஸ்டெல்லாவிற்கு அழைத்திருந்தான்.

நிலையம் உள்ளே நடந்து கொண்டே போனை எடுத்து பார்த்த ஸ்டெல்லா ஆர்யனின் நம்பர் என்றதும் புருவம் சுருக்கி யோசித்தவள் போனை எடுத்து காதில் வைத்து “ ஹலோ,  ஆர்யன் “ என்று பேச, மறுபக்கம் இருந்து ஆர்யன்

“ஸ்டெல்லா உங்க ஹெல்ப் வேணும் கொஞ்சம் எமர்ஜென்சி ..” என்று பதற்றத்துடன் ஆர்யன் பேசுவதை கவனித்த ஸ்டெல்லா “ என்ன ஆச்சி ஆர்யன் ஏதாவது பிரச்சனையா “

“ அது ஸ்டெல்லா மயூரியை எதோ ஒரு பொண்ணு கோவில்ல  வச்சி கடத்திடாங்களாம் “ என்று சொன்னதும் அவள் நடை நின்று விட “ என்னது “ என்று அதிர்ந்து கேட்க “ ஆமா ஸ்டெல்லா காலையில கடத்திருக்காங்க போலிஸ் கிட்ட கேட்ட வண்டி திருட்டு வண்டின்னு சொல்றாங்க என்ன செய்றதுன்னு தெரியல்லை, ஜெய் ஒரு பக்கம் தேடுறாங்க நான் ஒரு பக்கம் தேடுறேன், கொஞ்சம் உங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுங்க ஸ்டெல்லா “  என்று அவன் குரல் மெலிந்து சோர்வாக ஒலிக்க “ டொன்ட் வரி ஆர்யன் நான் என்னன்னு பாத்துட்டு உங்களுக்கு கால் பண்றன் நீங்க பயப்படாதீங்க “ என்று சொல்லி வைத்தவள் மனதில் “ அந்த பொண்ணுக்கு மட்டும் ஏன் இப்படி, ஜீசஸ் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க “என்று வேண்டிய படி போனில்  யாருக்கோ மேசேஜ் ஒன்றை அனுப்பி விட்டு நிமிந்து பார்க்க இவளை தான் மூவரும் பார்த்து கொண்டு நின்று இருந்தனர்.

அப்போது தான் இவள் இருக்கும் இடம் உணர்ந்து முகத்தை பழைய படி சாதாரணமாக வைத்து கொண்டு “ யாரை இங்க பாக்கணும் “ என்று தைரியமாக பேச அவளை பார்த்து மூவருக்கும் பிரம்மிப்பு தான் இந்த மாதிரி ஒரு பெண்ணை ஸ்டேஷன் அழைத்து வந்தால் பயந்து வீட்டுக்கு கால் செய்து வர முடியாது என்று அடம் பிடித்து ஒரு வழி பண்ணிவிடுவார்கள் ஆனால் இவளோ அமைதியாக வருகிறாள் என்று வியப்புடனே உள்ளே கர்ணா இடம் அழைத்து செல்ல அங்கே கர்ணாவும் இவள் ஸ்டேஷன் வந்ததிலிருந்து கவனித்து கொண்டு தான் இருந்தான். அவனுக்கு வியப்பு தான் ஆனால் அதை எதையும் வெளியில் காட்டாமல் அவள் வந்ததும் அவளை சேரில் அமர சொன்னவன் ராதாவையும் அமர வைத்தான்.

ஸ்டெல்லா கர்ணாவை பார்த்து “ சொல்லுங்க சார் எதோ கேஸ் பத்தி பேசனும்னு சொன்னாங்க “ என்று அவளே தொடங்க “ ஒரு மர்டர் கேஸ் பத்தி விசாரிக்க தான் உங்கள கூப்பிட்டேன் இஃப் யூ டோன்ட் மைண்ட் உங்க நேம் “ “ என் நேம் கூட தெரியாம தான் விசாரிக்க கூப்டிங்களா “ என்று சார்ப்பாக பேச “  இதோ பாருங்க மிஸ் அந்த இறந்து போன பொண்ணு நீங்க அரேஜ் பண்ண பார்டிக்கு தான் கடைசியா வந்துருக்கு அதான் உங்கள கூப்டு விசாரிக்குறோம் “  அதை கேட்ட உடனே ஸ்டெல்லா அவள் அருகில் இருந்த ராதாவை திரும்பி உற்று பார்த்தவள் “ நீங்களும் அந்த பார்டிக்கு வந்தீங்க தான “ என்று சரியாக கேட்டு விட  உடனே ராதா

 “ ஆமாங்க,  நானும் வந்திருந்தேன் தான் என் கூட வாணின்னு ஒரு பொண்ணு வந்திருந்தாங்களே அந்த பொண்ணு யார் கூட போச்சின்னு பாத்தீங்களா ? “ அதை கேட்டு   “ ம்ம்ம்…” நெற்றி தட்டி யோசித்தவள் “ அந்த பார்டி நான் இதுக்கு முன்னாடி வேலை பார்த்த கம்பெனி ஓனர் அரேன்ஜ் பண்ண சொன்னான்னு தான் உங்கள கூப்பிட்டேன் அது ஒரு பிரைவேட் பார்டி தான் அந்த கம்பெனி ஓனரோட சேர்த்து அஞ்சி பேர் கலந்துகிட்டாங்க அந்த பார்ட்டியில “ என்று நன்றாக யோசித்தவள் எதோ நினைவு வர பதட்டத்துடன்” அந்த பொண்ணு வாணி போட்டோ இருக்கா சார் “   “ இருக்கு மிஸ்  “ என்று ஒரு ஃபைலில் இருந்து அந்த பெண்ணின் போட்டோவை எடுத்து காட்ட அதை பார்த்த ஸ்டெல்லா வின் முகம் வெளிற தொடங்க “ இவங்க நெஜமா அன்னைல இருந்து தான் காணாம போனாங்களா ? “  அதை கேட்ட ராதா “ ஆமாங்க அதுக்கப்புறம் தான் அவ காணாம போனா அவ காணாம போனதில்ல இருந்து தொடர்ந்து அவள மாதிரி நிறைய பேரு காணாம போய்டாங்க, இப்போ அவ உடம்பு கிடைச்சிருக்கு ன்னு சார் சொல்றாங்க “ என்று அனைத்தையும் உளற கர்ணா “ ராதா…” என்று அதட்டி விட்டு ஸ்டெல்லா விடம் திரும்பி “ உங்களுக்கு வாணி யார் கூட போனான்னு தெரியும் தான மிஸ்  “ என்று அவளை உற்று பார்க்க , கர்ணாவை பார்த்து எச்சில் விழுங்கியவளின் முகம் பயத்தை வெளிப்படையாக காட்டி பேச முடியாமல் தலையை மட்டும் அவள் அசைத்தால்.

இங்கு மயூரியை பார்த்து சிரித்து கொண்டு இருந்தவளின் சிறிப்பு சட்டென்று நின்று விட மயூரியை வெறித்து பார்க்க அந்த பார்வையில் மயூரியின் உடலே நடுங்கி போய் விட்டது. அந்த நடுக்கத்தை எதையும் வெளி காட்டாத படி “ யார் நீங்க உங்களுக்கு என்ன வேனும்னு என்ன கடத்தி இருக்கிங்க.  ..” என்று பொறுமையாக அந்த பெண்ணின் கண்ணை பார்த்து கேட்ட,  அதற்கு அந்த பெண் மயூரியை பார்த்த படி முகத்தில் மாட்டியிருந்த இருந்த மாஸ்க்கை அவிழ்க்க, அந்த முகத்தை பார்த்த மயூரிக்கு தலை சுற்றுவது போல உலகமே சுற்ற தொடங்கியது.

இங்கு ஸ்டேஷனில் ஸ்டெல்லா அன்று நடந்ததை சொல்ல தொடங்கினாள் “ நான் பிஏ வா சேர்ந்து இரண்டு வருஷமா வர்க் பண்ணிட்டு இருந்தன். அப்போ ஏதோ பார்ட்டின்னு என்ன என் எம்.டி. பீச்சுக்கு மூனு பெணுகள கூட்டி வரச் சொன்னா எனக்கு அதுல அங்க வேலை செய்யப் பிடிக்கல்லை இருந்தும் உடனே வேலையை விட்டு நிற்க முடியாத சூழ்நிலை, சோ போய் நான் தான் பொண்ணுங்கள புக் செஞ்சி அந்த பார்ட்டியை பீச்ல, நான் தான் ஏற்பாடு பண்ண இந்த பெண்ங்க வந்ததும் பணம் கொடுத்துட்டு, கிளம்பப் போகும்போது அந்த இவன்ட் ஆர்கனெய்சர் நான் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகிருச்சி  ன்னு உடனே பணம் வேணும்னு  அங்க வெயிட் பண்ண சொல்லிட்டான். நானும் அங்க வெயிட் பண்ண பிடிக்காம பக்கத்தில இருந்த ரோட்ல ஒரு டீ கடையில வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்போ தான் அந்த கார் அங்க வந்து நின்னுச்சி அதில இருந்த இந்தப் பெண்ணு தான் இறங்கினா,  இறங்கி பக்கத்தில இருந்த மெடிக்கல் ஹாப்க்கு போனா நான்  இப்பதான பார்ட்டியில விட்டுட்டு வந்தோம் இவளன்னு யோசிச்சிட்டு அவளைப் பார்த்துட்டு இருந்தேன். உள்ளே போனவ வேகமா வெளியே வந்து அந்த கார் டிரைவர் வின்டோவை தட்டவும் அந்த ஜன்னல் கீழே இறங்கிச்சி, அப்போ தான் நான் அவன பார்த்தேன். அங்க இருந்தது வேற யாரும் இல்ல இலன் ஜெயன் நான் இப்போ வர்க் பண்ற  கம்பெனி எம்டி “