அன்று நடக்க போகும் விபரீதம் தெரியாமல் மயூரி நன்றாக தூங்கி கொண்டு இருந்தாள். ஆர்யன் வாக்கிங் செல்ல மயூரியை எழுப்பி பார்த்துவிட்டு அவள் எழவில்லை என்றதும் இவன் மட்டும் தனியாக சென்றுவிட்டான். வாக்கிங் முடித்து வந்தவன் “ அப்பா மயில் முழிச்சிட்டாளா…” என்று ஷூவை கலட்டிய படி கேட்க “ இல்ல ஆரி இன்னும் எழுந்து வரல “ என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்கு சென்றுவிட்டார். ஆர்யன் “ என்ன இன்னைக்கு இப்படி தூங்குறா..” என்று உள்ளே செல்ல போக மாணிக்கம் ஒரு கையில் காப்பி மற்றொரு கையில் பால் என்று எடுத்து வந்து ஆர்யன் கையில் கொடுக்க அதை வாங்கி கொண்டு “ தாங்க்ஸ் ப்பா…” என்று அவன் அறைக்கு எடுத்து செல்ல அங்கே மயூரி போர்வையை கழுத்துவரை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கி கொண்டு இருந்தாள். ஆர்யன் எடுத்துவந்த பால் மற்றும் காப்பியை டேபிலில் வைத்து விட்டு மயூரி அருகே அமர்ந்தவன் அவள் காதில் துணியை வைத்து கூச செய்ய மயூரி சிணுங்கிய படி “ஆரி….”என்று அடுத்த பக்கம் திரும்பி படுத்துவிட அவள் அருகே அவளை அணைத்துக்கொண்டு ஆர்யனும் படுத்துவிட மயூரி முகம் தூக்கத்திலே மலர்ந்தபடி அவன் கையில் தலை வைத்து அவன் பக்கம் திரும்பி படுத்துகொண்டால்.
ஆர்யனும் அவள் தலையை கோதியபடி “ மயிலு…” என்று மென்மையாக அழைக்க மயூரி “ம்ம்ம்…” என்று “ மயிலு, எனக்கும் உன் கூட இப்படியே படுக்க தான் ஆசை, ஆனா வேலைக்கு போனும்டி எழுந்துரு மயிலு மணி ஆச்சு “என்று அவளை உலுக்க “ இன்னும் கொஞ்சம் நேரம் ஆரி…” என்று இன்னும் நன்றாக அவனுக்குள் நுழைந்து உறங்க ஆர்யன் “ நான் வாக்கிங் முடிச்சி மணி எட்டு ஆக போது மயிலு “ என்று அவன் உலுக்க மயூரி “ என்னது எட்டா “என்று வேகமாக எழுந்து நேரம் பார்த்தவள்
“ அச்சோ இன்னைக்கு காலைல கோயிலுக்கு போலாம்னு சரள அக்கா சொன்னாங்களே…டைம் ஆச்சு …டைம் ஆச்சு” என்று வேகமாக எழுந்து பாத்ரூம் செல்ல போக அவளை பிடித்து நிறுத்திய ஆர்யன் “ பொறுமையா… மயிலு “ என்று நிதானம் படுத்த “ லேட் ஆச்சு ஆரி அக்கா எதோ பூஜை காலையிலயே போகனும் சொன்னாங்க “ என்று பாத்ரூம் உள் நுழைய அவளை பார்த்து சிரித்து கொண்டே மாணிக்கம் ரூம் பாத்ரூம் சென்று குளித்து வர மயூரி கோல்டன் கலர் அனர்கலி டாப் மற்றும் பின்க் நிற பேண்ட் மற்றும் சால் அணிந்து தலையை அழகாக பின்னி அதற்கெற்ற வளையல் அணிந்து பூ வைத்து அழகாக கிளம்பி இருந்தாள். அவளை பார்த்து கோண்டே ரூம் வந்த ஆர்யன் மயூரியை ரசனையாக பார்த்து அவளை பின்னிருந்து அணைத்த படி “ முன்னாடியே சொல்லிருந்தா நானும் வந்துருப்பன் மயிலு “ என்று சோகமாக முகத்தை அவள் தோள் மீது வைக்க, கண்ணாடி வழியே ஆர்யனின் சோகமான முகத்தை பார்த்து “ சாரி ஆரி நேத்து உன் கிட்ட சொல்லனும் தான் நினச்சேன் அப்பறம் அங்கிள் சப்பாத்தி பண்ணாங்கள நான் ஹெல்ப் பண்ண போனனா, மறந்துட்டேன் ஆரி , சாரி…. “ என்று அவன் கன்னம் கிள்ளி கொஞ்ச “ சரி விடு ஆனா இவினிங், என் கூட வெளிய வரணும் ஓகே வா“
“ ம்ம்ம் டபுள் ஓகே “ என்று வேகமாக தலையாட்ட ஆர்யன் மயூரி கன்னத்தில் அழுந்த முத்தம் கொடுத்து விட்டு “ சரி பாய் மயிலு நான் கிளம்புறேன் டைம் ஆச்சு பாத்து போய்ட்டு வாங்க “ என்று கிளம்பிவிட்டான். கோவிலுக்கு சென்றவள் திரும்பி வரமாட்டாள் என்று தெரிந்து இருந்தாள் அவளை அனுப்பி இருந்திருக்க மாட்டனோ.
இங்கு மயூரியும் மாணிக்கத்திடம் சொல்லி விட்டு சரளா, லட்சுமி மயூரி என்று மூவராக அருகில் இருக்கும் நாகாத்தம்மன் கோவிலுக்கு காரில் சென்று கொண்டு இருக்க ஜெய்யிடம் இருந்து கால் வர காரை ஓட்டியபடி போனை எடுத்து “ சொல்லு ஜெய் எப்படி இருக்க என் நியாபகம்லாம் இருக்கா உனக்கு “
“ நான் கேட்க வேண்டிய கேள்விய நீ கேட்குற எருமை, கல்யாணம் ஆனதும் என்னை மறந்தாச்சு ஒரு கால் இல்ல மெசேஜ் இல்ல போ மயூ “ என்று கோபித்து கொள்ள, ஒற்றை கண்ணை மூடி நாக்கை கடித்த மயூரி “ சாரி ஜெய் கொச்சிக்காதடா… நான் மேரேஜ்க்கு எடுத்த லீவ் வர்க் பண்ணவே டைம் சரியா இருந்துச்சிடா.. கோச்சிக்காத..ப்ளீஸ் “
“ சரி, சரி கோச்சிக்கல , என்ன வண்டிங்க சத்தம் கேட்குது கார் ஓட்டிட்டு இருக்கியா மயூ “
“என்ன அதிசயம் என் மயூ மேரேஜ் அப்புறம் பக்தில மூழ்கிட்டா போல “
“டேய்… இதுக்கு முன்னாடி நானு கோவிலுக்கு போனதே இல்லாத மாதிரி பேசாதடா “
“ சரி சரி பார்த்து பத்தறமா போயிட்டு வாங்க, என்ன ரொம்ப தூரம்மா கோவில் “
“ இல்லடா பக்கத்துல இருக்க நாகத்தம்மன் கோவிலுக்கு தான்டா” “ ஓ… சரி பார்த்து மயூ விட்டுக்கு போயிட்டு கால் பண்ணு பேசலாம் பாய் “
“ம்ம்ம் பாய்டா “ என்று வைத்துவிட கோவிலும் வந்து விட்டது . காரில் இருந்து மூவரும் இறங்க சரளா சென்று பூஜை தட்டு மாலை என்று வாங்கி வர மூவரும் சென்று நன்றாக சாமியை கும்பிட்டு சிறிது நேரம் அமர்ந்து இருந்து விட்டு வெளியே வந்தனர்.
அப்போது மயூரி இருவரையும் அங்கேயே நிற்க சொல்லிவிட்டு காரை எடுக்க செல்ல திடீரென்று லட்சுமி மயூரியின் கையை பிடித்து கொண்டு அவள் முகத்தையே பார்க்க மயூரி “ லட்சு ம்மா விடுங்க , நான் போய் கார் எடுத்துட்டு வரேன் “ என்று சொல்லி பார்த்தும் அவர் விடாமல் இருக்க சரளா “ சரி ம்மா நாங்களும் வரோம் இங்க தான “ என்று மூவரும் நடந்து காரை நோக்கி செல்ல அங்கே ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கார்கள் நிறுத்த பட்டு இருந்தது அதில் முதல் கார் மயூரி உடையது அதன் பின் இரண்டு கார்கள் நின்று கொண்டு இருக்க மயூரி காரை எடுக்க முன்னால் நடந்து செல்ல லட்சுமி அவள் சாலை பிடித்தபடி அவள் பின்னாலேயே சென்றார்.
அப்போது இவர்களை தாண்டி ஒரு பெண் மாஸ்க் அணிந்து வெள்ளை டாப்ஸ் மற்றும் நிறைய வண்ணங்கள் கலந்த ஒரு மிடி அணிந்து நல்ல உயரமாக இவர்களை கடந்து இவர்கள் பின் நிறுத்தி இருந்த காரின் பின்னால் ஏறிக்கொண்டால். மயூரியின் போன் எதோ மெசேஜ் வந்த சத்தத்தில் அதிர என்ன வென்று போனை பார்த்து கொண்டே நடந்து வர அந்த காரில் ஏறிய பெண் மயூரி அந்த காரின் அருகில் வரவும் அவள் முகத்தில் துணியை வைத்து அமுக்க அதை பார்த்து சரளா “ ஏ… என்ன பண்ற “ என்று கத்தியபடி அவளை அடிக்க அதுவும் மின்றி மயூரியும் எவ்வளவோ போராட அது பலன் இன்றி அவள் நினைவிலந்து மயங்கி சரிய அவளை இழுத்து வண்டிக்குள் போட்டு கதவை சாத்தி வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்து போக சரளா கத்தியபடி அந்த வண்டி பின்னாலேயே ஓட லட்சுமி அவர் கையில் இருந்த மயூரியின் ஷாலை பார்த்து விட்டு அந்த வண்டியை பார்த்தவர் கண்கள் கலங்கி தண்ணீர் சொறிய “ மயூரி….”என்று கத்தி கொண்டு மயங்கி சரிந்தார்.மயூரி மீண்டும் கடத்த பட்டாள்.
காரின் பின்னாடி ஓடிய சரளாவும் கல்லில் தடுக்கி கீழே விழுந்தார். அவர் கால் கை என்று அடிப்பட்டு ரத்தம் வர சுற்றி இருந்தவர்கள் அவரை தூக்கிவிட்டு “ உங்க கூட இருந்த இன்னொரு அம்மாவும் மயங்கி ரோட்ல விழுந்து கிடக்குறாங்க ம்மா “ என்று சொல்லி அவர்கள் ஒதுங்கிக்கொள்ள சரளா லட்சுமியிடம் ஓடிச்சென்று அவரை எழுப்ப அவர் முழிக்கவே இல்லை. உடனே அங்கு இருந்த ஒரு ஆட்டோவில் அந்த ஆட்டோ ஓட்டுனர் உதவியுடன் லட்சுமியிடம்யை ஏற்றிக்கொண்டு ஆர்யனுக்கு போன் போட அவன் போன் சைலண்டில் இருக்கவே அவன் எடுக்கவில்லை. உடனே அவர் மாணிக்கத்திற்கு போன் செய்து நடந்ததை கூறவும் பதறிவிட்டார் மாணிக்கம். “ என்னம்மா சொல்ற? பாப்பாவை கடத்திட்டாங்களா?” என்று பயத்தில் கத்தியவர், ஆர்யனுக்கு போன் செய்யவும் அவன் எடுக்கவே இல்லை. உடனே வீட்டை சாத்திவிட்டு போனை ஆர்யனுக்கு போட்டபடியே ஆட்டோவில் லட்சுமி வைத்திருந்த மருத்துவமனைக்கு சென்றார்.
மாணிக்கத்திற்கும் சரி சரளாவிற்கும் சரி பதற்றத்தில் போலீசுக்கு போன் செய்ய தோன்றவே இல்லை. இங்கு ஆர்யன் அப்போது தான் மீட்டிங் முடித்து வந்தவன், போனை எடுத்து, பார்க்கவும் சரளா மற்றும் மாணிக்கம் இருவரும் மாற்றி மாற்றி கால் செய்து இருக்கவே “ என்ன இத்தனை முறை கால் பண்ணிருக்காங்க “ என்று யோசித்தபடி, மாணிக்கத்திற்கு கால் செய்ய போக அதற்குள் அவரே கால் செய்து இருந்தார். அதை பார்த்து ஆர்யன் நெஞ்சம் வேகமாக அடித்துக்கொள்ள ஒரு நடுக்கத்துடனே, போனை எடுத்து, காதில் வைத்து “ ஹலோ…” என்று சொல்லி முடிக்கும்முன் மாணிக்கம்
“ ஆரி நம்ம பாப்பாவ கோவில்ல யாரோ கடத்திட்டாங்களா ப்பா…” என்று பதற்றத்துடன் சொல்ல ஆர்யன் “ என்ன…ப்பா “ என்று அவன் காதுகளை நம்ப முடியாமல் கேட்க “ கார்ல வச்சி யாரோ ஒரு பொம்பள கடத்திட்டாளாம் அத பாத்துட்டு அக்கா மயங்கி விழுந்துவிட்டாளாம் நான் ஹாஸ்பிட்டல்க்கு போயிட்டு இருக்கிறேன்ப்பா என்ன பண்றது ஆரி “ என்று அழுது விடுபவர் போல பேச ஆர்யனுக்கு பேச முடியமல் தொண்டையில் எதோ சிக்கி கொண்டது போல வழிக்க, அப்படியே அமர்ந்து விட்டான்.
மாணிக்கம் போனில் தொடர்ந்து அவன் பெயரை சொல்லி அழைக்க மூச்சை இழுத்து பிடித்தவன் “ நீங்க போங்க நான் வறேன்ப்பா “ என்று போனை வைத்து விட்டு வேகமாக மயூரி காணாமல் போன பகுதிக்கு அருகிலுள்ள காவல் நிலையம் சென்று புகார் கொடுத்து விட்டு வெளியே வந்தவனுக்கு ஜெய் நினைவு வர வேகமாக அவனுக்கு போன் செய்து நடந்ததை சொல்ல அவன் அலறிவிட்டான் “ என்ன சொல்றிங்க ஆர்யன் “ என்று கத்தியவன், அடுத்த பத்து நிமிடத்தில் அந்த நிலையத்திற்கு வந்து காவல்துறை ஆணையர் மூலமாக மயூரியைத் தேடுவதில் அதிக கவனம் செலுத்த வைக்க அடுத்த அரை மணி நேரத்தில் மயூரி கடத்தப்பட்ட கார் ஒரு திருட்டுக்கார் அதில் நம்பர் ப்ளேட் உண்மை இல்லை கார் சென்ற திசையும் தெரியவில்லை என்று சொல்லி விட அந்த காரின் புகைப்படத்தை வைத்து கொண்டு ஆர்யன் , ஜெய் இருவரும் ஒவ்வொரு பக்கமாக தேடி அலைந்து கொண்டிருந்தனர்.
இங்கு ராதா வேலை பார்த்து கொண்டு இருந்த சூப்பர் மார்கெட்டிற்கு அந்த பெண் வந்து இருக்க ராதா உடனே கர்ணாவுக்கு கால் செய்து விட்டாள். அவன் அங்கு அருகில் மப்டியில் இருந்த பெண் போலீஸை விட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி அவளை அழைத்து கொண்டு வந்து விட்டான்.
காலை பொழுது முடிந்து இரவு கவிழ காத்திருக்கும் நேரத்தில் ஆர்யன் தெரு தெருவாக அலைந்து கொண்டு இருக்கையில் இங்கு சென்னையில் ஒரு மூளையில் இருந்த அந்த பங்களாவில் மயூரிக்கு மயக்கம் தெளிந்து அவள் கத்திக்கொண்டிருந்த அதே சமயம் அங்கு கர்ணா முன் அந்த பெண் அவனையே பார்த்தபடி அமர்ந்து இருந்தாள்.