அவளின் சின்ன கைகளால் மெல்ல அந்த அறையின் கதவை திறந்து எட்டி பார்க்க அந்த காரிடரில் பெண்களும் ஆண்களும் சிலர் தள்ளாடியபடி, சிலர் புகைபிடித்தபடி என்று நடந்து அவரவர் அறைக்குள் போவதும் வருவதும் என்று இருக்க அதை பார்த்து கதவை வேகமாக மூடிய மயூரி கதவில் காது வைத்து சத்தம் குறைய காத்திருந்தாள். சத்தம் அடங்கியதும் மீண்டும் மிக மெதுவாக கதவை திறந்து லேசாக எட்டி பார்க்க அங்கே ஓரிருவரை தவிர வேறு யாரும் இல்லை அவர்களும் ஏதோ நின்று பேசிக்கொண்டு இருக்க மயூரி அந்த அறையை விட்டு வெளியே வந்தவள் பொறுமையாக கதவை மூடி விட்டு அவள் போட்டு இருந்த பாவடையை தூக்கி பிடித்தபடி மெல்ல மாடி ஏறியவள் படி அருகே இருந்த அறையை லேசாக திறந்து பார்த்தாள். உள்ளே யாரும் இல்லை என்றதும் முகம் ஏமாற்றத்துக்கு மாற “ ச்சா இன்னைக்காவது இந்த அம்மாங்க பார்க்கிற வேலைய கண்டுபிடிக்கலாம்ன்னு பார்த்தா இப்படி இன்னைக்கு அம்மா இங்க இல்லையே “என்று முனங்கிய அந்த பத்து வயதே ஆன மயூரி திரும்ப அங்கே யாரோ படி ஏறி வரும் சத்தம் கேட்டு பயந்தவள் வேகமாக கங்காவின் அறைக்குள் நுழைந்தவள் கங்காவின் அலமாரிக்குள்ளும் பயந்து ஏறி அமர்ந்து கொண்டாள்.
அந்த அறைக்கு தான் கங்கா ஒருவனுடன் உள்ளே வருவதை அந்த அலமாரியின் உள்ளே இருந்தபடி அதன் இடைவெளியில் வழியாக மயூரி பார்த்தாள். உள்ளே சிகரெட்டை புகைத்து கொண்டு கங்காவின் தோளில் கை போட்டு வந்தவன் அந்த புகையை அவள் முகத்தில் ஊதி கங்காவின் முடியை பிடித்து இழுத்து கொண்டு கட்டில் அருகே சென்று அவன் புகைத்த அந்த சிகிரெட்டை அவள் காலில் போட்டு அணைத்தான் அதில் கங்காவுக்கு வலி எடுக்க “ அ…” என்று அவள் கத்தவும் கங்காவின் உதட்டில் மிக மோசமாக முத்தம் கொடுக்க அவன் தொடங்கிவிட அதை பார்த்த மயூரி உடல் தூக்கி போட கைகளை வைத்து கண் மூடிக்கொள்ள அவள் காதுகளில் கேட்க முடியாத அளவு முனகல் சத்தமும் கங்கா வலியில் கத்தும் சத்தமும் தொடர்ந்து கேட்க மயூரி காதுகளையும் மூடியபடி “ இது வேண்டாம்…கங்காம்மா வேண்டாம் சொல்லு…” என்று மனதில் சொல்லிக்கொண்டே இருந்தவள் காதுகள் மூடியும் அந்த சத்தங்கள் கேட்க தான் செய்தது.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாள் என்று தெரியவில்லை திடீரென்று கங்காவின் அழுகை சத்தம் மட்டும் கேட்க கண்களை திறந்து பயந்து கொண்டே அந்த இடைவெளி வழியே பார்க்க அங்கே கங்கா கட்டிலில் படுத்தபடி அழுதுகொண்டு இருந்தவள் பின் எழுந்து உடை மாற்றி சென்றுவிட்டாள். மயூரி அவள் சென்றதும் மெதுவாக அந்த அலமாரி விட்டு கீழே இறங்கியவள் பயந்து பயந்து எப்படியோ அவள் அறைக்கு சென்று விட்டாள்.
டிவி, கார்ட்டூன்ஸ், படங்கள் என்று எதுவுமே பார்த்து வளராத மயூரிக்கு லட்சுமி சொல்லி தரும் பாடங்கள் மட்டுமே தெரியும் மற்றும் கங்கா வெளியில் செல்லும் போதெல்லாம் வாங்கி வரும் கதை , ஓவியம் , பொம்மை புத்தகம் தான் அவளின் வாழ்க்கை என்று இருந்த மயூரிக்கு அந்த அறையே உலகம் என்று ஆனது. அந்த இடத்தை விட்டு வெளியே பகல் பொழுதில் கூட செல்ல விட மாட்டாள் லட்சுமி, அது இந்த இடத்தை நடத்துபவள் கண்ணில் மயூரி படவே கூடாது என்று பார்த்து பார்த்து என்று நான்கு வருடம் எப்படியோ சென்று விட்டது. என்னதான் மயூரி சொல் பேச்சு கேட்கும் நல்ல பிள்ளையாக இருந்தாலும் சில சமயம் அவளும் அடம்பிடிக்க தான் செய்வாள் அப்போது எல்லாம் லட்சுமி பூதம் பேய் என்று பயமுறுத்தி வைத்துவிடுவால். இருந்தும் மயூரி இரவு ஆனால், வேலை என்று சொல்லி லட்சுமி எங்க செல்கிறார் இவர்கள் என்ன வேலை பார்க்கிறார்கள் என்று ஆர்வமும் அதிகமாக நாளுக்கு நாள் வளர இதில் கங்கா வேறு “ நாங்க இந்த பூதத்துக்கு சாப்பாடு போடுற வேலை பாக்குறோம் அப்படி பூதத்துக்கு சாப்பாடு போட்ட, மத்தவங்கள அது சாப்பிடாது “ என்று எதேதோ ஒலறி வைக்க மயூரி எப்படியாவது அவர்கள் பார்க்கும் வேலையை நேரில் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள். அதன் விளைவுதான் மயூரியைக் கங்கா அறைக்குச் செல்ல வைத்தது. அங்கே சென்றவள் என்ன என்று புரியாமலே பலதை பார்த்து அதில் பயந்து உடம்பு முடியாமல் ஜூரம் வந்து இரண்டு நாளாக லட்சுமி மற்றும் கங்காவை பயமுறுத்தி விட்டாள்.
இரண்டு நாள் கழித்து தெளிவானவள் லட்சுமி மடியில் படுத்தபடி கங்கா மற்றும் லட்சுமி முகத்தில் கையில் இருந்த காயங்களை வருடியபடி “ பூதத்துக்கு சாப்பாடு போட்டா உங்கள சாப்பிடாதுன்னு தான சொன்னீங்க அப்புறம் ஏன் அந்த பூதம் உங்கள இப்படி பண்ணிருக்கு கங்காம்மா “ என்று கங்காவை பார்க்க மயூரியின் கேள்வியில் லட்சுமி மற்றும் கங்கா இருவரும் பயந்துபோய் “ என்ன சொல்ற மயூ “ என்று லட்சுமி கேட்க அதற்கு மயூரி அவள் அறைக்கு சென்று பார்த்ததை சொல்ல கங்கா தேம்பி தேம்பி அழ தொடங்கி விட்டாள் இப்படி மயூரி அவளை பார்த்து விட்டதை நினைத்து அவள் அழுக ,மயூரி அவள் கண்ணீரை துடைத்தபடி “ அழுவாத கங்காம்மா நீ இனிமே வேலைக்கு போகாத என் கூட நைட் அலமாரில ஒளிஞ்சிக்கொ “ என்று பேசவும் கங்கா அவளை கட்டி கொண்டு அழுகவும் அப்படியே படுக்கையில் இருந்து எழுந்து கொண்டாள் மயூரி.
கட்டிலில் தலையை பிடித்து அமர்ந்த மயூரி “ அச்சோ மயூ எதையெல்லாம் இன்னும் பார்த்து வச்சிருக்க..” என்று கண்களை கை கொண்டு மூடியவள் பின் மெல்ல எழுந்து பாத்ரூம் சென்று ஃபிரஸ் ஆகி வந்தவள் நேரம் பார்க்க மணி பத்து என்று காட்டவும் “ அட இவ்வளவு நேரம் தூங்கிடேனே இன்னைக்கு “ என்று வேகமாக வெளியே செல்ல அங்கே ஹாலில் லட்சுமி டிவியில் ஓடும் எதோ ஒரு நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருக்க அதை ஒரு புன்னகையுடன் நின்று பார்த்தாள்.
லட்சுமி சென்னை வந்து ஒரு வாரம் ஆகிறது கல்கத்தாவில் எல்லா புரோசிஜரையும் முடித்து விட்டு இங்கே வந்து ஒரு வாரம் ஆகிறது. இங்கு வந்து முதல் வேலையாக மயூரி, இவள் பார்க்கும் டாக்டரிடமே அவரையும் காட்ட டாக்டரும் சரியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் சொல்லிவிட்டார். பின் மயூரி அவளுடனே லட்சுமியை வைத்து கொண்டால் அதில் மாணிக்கம் தான் மிகவும் வருந்தி போனார். லட்சுமி அருகிலே செல்ல முடியாத நிலை தன் அக்காவை கூட வைத்தும் பார்த்துக்கொள்ள முடியாது மயூரி வீட்டில் வைத்து தள்ளி நின்று மட்டுமே பார்த்து கொள்கிறார் சீக்கரம் அவருக்கு சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கையுடன். லட்சுமி வந்ததிலிருந்து மயூரி இரவில் அவருடன் தான் தூங்க முயன்று அதில் வெற்றியும் கண்டு விட்டால் இரவு முழுதாக தூங்க முடியவில்லை என்றாலும் இரவு சிறிது நேரம் கழித்தாவது தூங்குகிறாள். இப்போது அவளுக்கு இல்யூசன் வருவது இல்லை இப்படி கனவுகள் மட்டும் தான் அடிக்கடி வருகிறது அதுவும் கங்காவை பார்த்து வந்ததிலிருந்து அவர் சம்பந்தம் பட்ட நினைவுகள் பல வர தொடங்கி இருக்கிறது இப்படி இன்று வந்தது போல. கங்காவையும் சென்னைக்கு அழைக்க அவர் மறுத்துவிட்டார். இருந்தும் ஏதாவது அவருக்கு செய்ய வேண்டும் என்று நினைத்த மயூரி அங்கு ஒரு முக்கியமான இடத்தில் கடை ஒன்றை சொந்தமாக அவர்களுக்கு வாங்கி கொடுத்துவிட்டாள். முதலில் அதை ஏற்கவும் கங்கா தயங்கவே செய்தால் பின் காசு கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிக்கறேன் என்று பேச்சுவார்த்தை நடத்தி சொல்லி ஒப்புக்கொள்ளவும் வைத்துவிட்டாள்.
இதை எல்லாம் நினைத்து சிரித்தபடி கிச்சன் உள்ளே செல்ல அங்கே ஒரு பெண் பாத்திரம் விளக்கிக் கொண்டு இருக்க அவரை பார்த்த மயூரி புன்னகையுடன் “ குட் மார்னிங் க்கா… “ என்று சொல்ல அதற்கு அவர் “ முழிச்சிட்டீங்களா ம்மா இப்போ தான் மாணிக்கம் ஐயா, உங்களுக்கு பால் கொடுத்துட்டு போனாரு நில்லுங்க நான் சூடு பண்ணி தறேன் “ என்று அவர் கைகளைக் கழுவ போகவும் மயூரி “ சூடு தானே க்கா பண்ணணும் நான் பண்ணிக்கிறேன் நீங்க வேலைய பாருங்க “ என்று பாலை சூடு செய்து அதை க்ளாஸ் ஒன்றில் ஊற்றி கொண்டு வெளியே சென்றாள். இங்கு சென்னை வந்து முதல் வேலையாய் மயூரி விட்டோடு தங்கி வேலை பார்க்க ஒருவரை வைத்தது தான் பெயர் சரளா கணவன் இல்லை பையன் ஒருவன் மட்டும் தான் அவனும் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பு படிக்கிறான். இங்கு மயூரி நல்ல சம்பளத்துக்கு அழைத்ததும் வந்துவிட்டார். அவர் தங்க அவள் வரையும் அறையை பாதியாக மாற்றி பிரித்து கொடுத்து விட்டாள்.
கிளாஸில் பாலை குடித்தபடி ஹாலில் வந்து அமர்ந்தவள் அதில் எதோ சீரியல் ஓடி கொண்டு இருக்க அதை பார்த்துவிட்டு “ இதை ஏன் பாக்குறீங்க லட்சுமம்மா உங்களுக்கு பாட்டு தான ரொம்ப பிடிக்கும் அத பார்ப்போம் “ என்று பாட்டு சேனலுக்கு மாற்றி விட்டு லட்சுமி மடியில் படுத்து கொள்ள அவர் கை தன்னை போல மயூரியின் தலையை வருட தொடங்கி விட்டது. லட்சுமி க்கு எதுவும் தெரியவில்லை என்றாலும் இப்படி மயூரி மடியில் படுத்தாள் தலையை கோதி விடுவது, அவள் அருகில் அமர்ந்து இருந்தாள் அவள் தோளில் சாய்ந்து கொள்வது என்று சிலது மட்டும் செய்வார் இதில் மயூரிக்கு தான் நிறைய நம்பிக்கை வந்தது லட்சுமிக்கு பழைய நினைவு அனைத்தும் வந்து விடும் என்று .
லட்சுமி மடியில் மயூரி படுத்துகொண்டே டிவியை பார்க்க அதில் கத நாயகன் மற்றும் நாயகி நெருக்கமாக நடனம் அடுவது போல இருக்க அதை பார்த்து அவள் காதுகளில் கங்காவின் முனங்கல் சத்தம் கேட்க மயூரிக்கு குமட்டி கொண்டு வர எழுந்து பாத்ரூம் நோக்கி ஓட மயூரி அவள் ரூம் வந்ததும் குமட்டல் நின்றுவிட காதில் கேட்ட சத்தமும் நின்று விட்டது. உடனே மயூரி கட்டிலில் அமர்ந்த படி “ என்னடா இது…” என்று தலையை பிடித்து அமர்ந்தவள் பின்” சரி காத்து கொஞ்சம் வாங்கலாம்” என்று அவர் அறை பால்கனியில் நின்று கொண்டு இருந்தவள் அப்படியே கீழே பார்க்க அங்கே இவர்கள் அப்பார்ட்மெண்ட் தள்ளி ஒரு பார்க் இருக்க அங்கு இருப்பவர்களை பால்கனியில் நின்றபடி பார்த்து கொண்டு இருந்தவள். அந்த பார்க்கில் ஒரு ஓரமாக அமர்ந்து இருந்த காதல் ஜோடி பக்கம் கண்கள் திரும்ப இவள் பார்க்கும் நேரம் பார்த்து அந்த காதல் ஜெடியில் அந்த பையன் அந்த பெண்ணின் உச்சன் தலையில் முத்தம் கொடுக்க மயூரிக்கு மீண்டும் குமட்ட பாத்ரூம் சென்று வாந்தியே எடுத்துவிட்டால். வாந்தி எடுத்த மயூரி தலையில் கை வைத்த படி “ இது என்ன புதுசா “ என்று பயந்து போய் அமர்ந்துவிட்டாள்.
பின் சரளாவிடம் “ அர்ஜன்ட் வேலையா நான் வெளிய போயிருக்கேன்னு அங்கிள் கிட்ட சொல்லிருங்க க்கா அப்படியே லட்சு ம்மாவை பாத்துகொங்க “ என்று சொல்லிவிட்டு அவள் டாக்டரை பார்க்க சென்றுவிட்டாள். டாக்டர் மேரி முன் பதட்டத்துடன் அமர்ந்தவள் “ டாக்டர்… என்னால ரெண்டு பேர் சேந்து இருக்குறத பாக்க முடியல டாக்டர் “ என்று தயக்கத்துடன் சொல்ல அவள் சொல்ல வருவது புரியாமல் மேரி “ கொஞ்சம் தெளிவா தயங்காம என்னன்னு சொல்லுங்க மயூரி “ என்று டாக்டர் கேட்கவும் தயக்கத்துடன் மயூரி அவளுக்கு காலை வந்த கனவு பின் இவளுக்கு வாந்தி வந்த காரணம் என்று அனைத்தையும் சொல்லியவள் “ இது என்ன டாக்டர் புதுசா..” என்று அவரை பார்க்க அதற்கு மேரி “ இது புதுசு இல்ல மயூரி இது உங்க சின்ன வயசு டிராமா உங்க நினைவு திரும்பி வர தொடங்குனதுல அதுவும் திரும்பி வந்துருக்கு “
“ திரும்பினா அப்போ இத சரிபண்ண முடியாத டாக்டர் “
“ நீங்க நினைச்சா முடியும் மயூரி உங்க மனசு தான் இதை சாதரணம் தான்னு நீங்க உங்க மைண்ட மாத்துறதுல தான் இருக்கு “ என்று டாக்டர் சொன்னதை கேட்ட மயூரி அவரிடம் மேலும் எதுவும் கேள்வி கேட்காமல் விடை பெற்று வந்து நின்றது என்னம்மோ அன்று ஆர்யன் கூட்டி வந்த பாலத்துக்கு தான். மதிய நேர வெயிலில் அங்கு காரை பாலத்தின் ஒரு ஓரத்தில் நிறுத்தியவள் அந்த இடத்தை பார்த்து கொண்டு இருந்தாள். நினைவு முழுக்க ஆர்யன் தான் லட்சுமி திரும்பி வந்தது, அவள் பிரச்சனைகள் சரியானது என்று அனைத்தும் நன்றாக செல்ல மயூரி இப்போது தான் சிறிது சிறிதாக ஆர்யனை பற்றி நினைக்க தொடங்கி இருந்தாள்.
இந்த ஒரு வாரத்தில் ஆர்யனும் வேலை முடித்து வந்ததும் மயூரியுடன் கடைக்கு செல்வது காலை சில நேரம் ஒன்றாக நடப்பது என்று இருவரும் நெருங்கி இருக்க அதை தடுக்கும் விதமாக இப்படி ஒரு பிரச்சனை. இதை எல்லாம் நினைத்தபடி அந்த ஏரியை வெறித்தபடி இருக்க அவள் போன் சத்தம் எழுப்பியது யார் என்று எடுத்து பார்க்க ஆர்யன் தான் இப்போதெல்லாம் இருவரும் போனில் நிறைய பேச தொடங்கி இருக்கின்றன காதல் மட்டும் தான் சொல்லவில்லை மற்ற படி காதலர்கள் போல தான் இருவரும் சுற்றி வந்தனர். அவன் பெயரை போனில் பார்த்த படி இருந்தவள் போனை எடுக்கவில்லை அவள் ஒற்றை கண்ணில் இருந்து நீர் வடிய அதை துடைத்த படி ஒரு முடிவும் எடுத்துவிட்டால். பெருமையாக உக்காந்து யோசிச்சி எடுக்குற பல முடிவுகளே சில சமையம் சரியாக இருக்காத போது, இவள் இப்படி ஆர்வக்கோளாறாக இருக்கும் எடுக்க போகும் முடிவு ?.