ரவு 37

வேகமாக சுற்றிக்கொண்டு இருக்கும் மின்விசிறிக்கு நேராக அமர்ந்திருந்தும், முகம் முழுக்க வியர்த்து கொட்ட கைகளை கட்டியபடி, எதிரில் அமர்ந்திருந்த கர்ணாவை பார்த்து கொண்டு இருந்தான் அந்த ஏரியா மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் செல்வம். கர்ணா அவனை மேலிருந்து கீழே அளந்தபடி “ அன்னைக்கு  அந்த பெண்ணுகளை அந்த பார்டிக்கு  அனுப்பி வச்சது நீதானே “ என்று அவனை முறைத்த படி கேட்க, எச்சிலை கூட்டி விழுங்கிய செல்வம் “ ஆமா சார் ஏதோ கம்பெனி பார்ட்டின்னு சொன்னாங்க சார் எந்த கம்பெனி என்னென்னு எனக்கு ஞாபகம் இல்லை சார் “ என்று கைகள் உதற சொல்ல, “ எதுவுமே ஞாபகம் இல்லையா வந்து கேட்டவன் அதுக்கு அப்புறம் உன் கிட்ட பெண்ணு கேட்டு வரல்லையா என்ன ? “

 “ சார் வந்தது பையன் இல்லை, வந்தது பெண்ணு ஏதோ பெரிய கம்பெனி பார்டின்னு மூனு பொண்ணுங்க  வேணும்னு கேட்டு வந்து கொஞ்சம் அட்வான்ஸும் கொடுத்து வரச் சொல்லுச்சி நானும் பணம் நிறைய கிடைக்கிதுன்னு அனுப்பினேன் “

“என்னது பெண்ணா..” என்று அதிர்ந்த  கர்ணாவை பார்த்து “ஆமா சார் போண்ணு தான் ஒரு இருபது வயசுக்கு மேல இருக்கும் தைரியமா நான் இருக்குற இடத்துக்கே வந்து இத்தனை வயசு குள்ள இருக்கணும் பொண்ணுங்க ன்னு விவரம்லாம் சொல்லிச்சி சார்”

“ எந்த இடத்துல பார்ட்டி நடந்துச்சி “

“  சென்னை அவுட்டர் ஏறியல பீச் சார் “

“ டேய் என்ன உளறுர  பார்ட்டின்னு சொல்ற, இப்போ பீச்ன்னு சொல்ற, “ என்று கோபமாக எழுந்திரிக்க  அதில் பயந்த செல்வம்

“நிஜமா சார் பீச்ல தான் பார்ட்டன்னு வரச் சொல்லிச்சி அந்த பொண்ணு”

“சரி அந்த பொண்ணு  எப்படி இருக்கும்னு நியபகம் இருக்க உனக்கு? “

“ஆ… ஞாபகம் இருக்கு சார் வெள்ளையா ஐந்தரை அடிக்கு மேல உயரம் இருக்கும், முடி நல்ல சுருண்ட முடி சார், சட்டை பேண்ட் தான் போட்டு இருந்துச்சி கண்ணில கண்ணாடி போட்டு இருந்துச்சி சார் “

“ அது எப்படி இவ்வளவு கரைட்டா சொல்ற, “ என்று சந்தேகமாக அவனை கர்ணா பார்க்க அந்த பார்வையில் மீண்டும் பயந்த செல்வம் “ அச்சச்சோ சார் எனக்கு பசங்க ஞாபகம் இருப்பாங்களோ இல்லையோ, பொண்ணுங்கள மறக்கவே மாட்டேன் சார் “ என்று செல்வம் சொன்னதைக் கேட்டு கர்ணா நன்றாக அவனை முறைத்தபடி படி “ ராதா எங்க அவ இருக்கிற இடம் உனக்கு தான் தெரியும்னு சொல்றாங்க “

“சார் ராதாவுக்கு பெண் குழந்தை பிறந்துச்சி சார் அதனாலதான் இந்த தொழிலை விட்டு போறன்னு  சொன்னா. அதான் நானும் கொஞ்சம் ஹெல்ப் பண்ண வேற எதுவும் இல்லை சார் “

“ ஓ… இப்போ அவுங்க எங்க இருக்காங்க “ அதற்கு அவன் “சார்…” என்று இழுக்க “ என்னடா “ என்று கர்ணா முறைக்கவும் “ நீங்க இப்போ அவள தேடி போன அவ இருக்க இடம் எல்லாருக்கும் எப்படி ஆவது தெரிஞ்சிடும் சார் அப்புறம் திருப்பி அவ இந்த தொழிலுக்கு வர மாதிரி ஆகிடும் சார், நான் சத்தியமா சொல்றன் சார் அவளுக்கு இத பத்தி ஒன்னும்மே தெரியாது சார் “  அதை கேட்டு செல்வத்தை சந்தேகமாக பார்த்த கர்ணா

“என்ன ராதாக்கு ரொம்ப ஹெல்ப் பண்ற மாதிரி இருக்கு “

“ சார் அந்த குழந்தைகாக இந்த தொழில விட்டு போகணும்னு சொன்ன சார் அதன் அந்த குழந்தை முகத்துக்காக பண்றேன்  சார் “ என்று பவ்வியமாக சொல்ல கர்ணா “ சரி நீ என் கூட வா..” என்று எழுந்திருக்க அதில் பயந்த செல்வம் “ அதான் நான் எல்லாத்தையும் சொல்லிட்டேனே சார் “ என்று அவன் பயந்து பின் செல்ல “ டேய் உன்ன புடிச்சிலாம் உள்ள போட மாட்டேன்…அந்த பொண்ண அடையாளம் சொல்லிட்டு போ “ என்று அவனை கூட்டி ஸ்டேசன் சென்றான்.

இங்கு அப்பார்ட்மெண்டில் ஜெய் போனை பார்பதும் பின் கதவை பார்பதும் என்று ஹாலிலேயே அமர்ந்து இருக்க அவனை பார்த்த மாணிக்கம் “ போர் அடிக்குதா தம்பி “ என்று கேட்ட படி அவன் அருகில் அமர “ ஆமா அங்கிள் மயூரிய வேற கொஞ்சம் நேரம் தூங்கிட்டு வா..ன்னு அனுப்பிட்டிங்க உங்க பையன் என்னன்னா சமைக்குறன்னு போயிட்டான் நீங்க இப்போ தான் வர்றீங்க , போர் அடிக்காதா பின்ன “ என்று அலுத்துகொள்ள , மாணிக்கம் “ அப்போ வாங்க  வாக்கிங் மாதிரி போய்டு வருவோமா தம்பி எனக்கு இங்க இருக்க ஒரு மாதிரி இருக்கு “ என்று மாணிக்கம் சொல்லவும் அதுக்காக தான் காத்திருந்தேன் என்பது போல மாணிக்கத்தை அழைத்து கிளம்பிவிட, ஆர்யன் மட்டும் தான் அந்த வீட்டில் இருந்தான்.

அவனும் வீட்டில் இருந்த சிறு வேலைகளையும் முடித்து இரவு உணவு வேலைகளையும் முடித்து விட்டு அப்போது தான் சோபாவில் அமர்ந்தான். அப்போது வீட்டின் காலிங் பெல் சத்தம் கதவை திறக்க சொல்ல ஆர்யன் சலிப்பாக “சாவி எடுத்திட்டு போலனா ஏன் கதவ லாக் பண்ணிட்டு போனும் இந்த அப்பாவ “ என்று கதவை திறக்க ஃபார்மல் சார்ட் பேண்ட் அணிந்து, தன் சுருள் முடியை ரப்பர் பேண்டில் ஒன்றாக சேர்த்து கட்டி, கண்ணில் கண்ணாடி போட்டு முகத்தை இறுக்கமாக வைத்து ,ஒரு ஆராயும் பார்வையை வீசியபடி ,இவன் தோள்பட்டை உயரத்திற்கு ஒரு பெண் கையில் சில ஃபைல்லுடன் நின்று கொண்டு இருந்தாள்.

அவளை யார் என்பது போல பார்த்த ஆர்யன் “ யார் வேணும் “ என்று கேட்டு நின்றான். அதற்கு அவள் “ ஜெய் சார், அவரை பார்க்கணும், இங்க தான் வர சொன்னாரு “ என்று முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல் பேச ஆர்யன் “ நீங்க யாரு….” என்று புருவம் சுருக்க யோசித்த படி கேட்க  “ நான் அவர் பிஏ ஸ்டெல்லா “ என்று சொல்லி இப்போ உள்ளே போலாமா என்பது போல அவனை நேருக்கு நேர் நிமிர்ந்து பார்க்க ஆர்யன் “ உள்ள வாங்க…” என்று அழைத்து சோபாவில் அமர வைக்க, சோபாவில் அமர்ந்த படி “ சார் எங்க “ என்று கேட்க ஆர்யன் “ வாக்கிங் போயிருக்காங்க இதோ வந்துருவாங்க “ என்று சொல்லிய படி அவள் எதிரே அமர்ந்தான். நார்மலாக யாரவது புதிதாக இடத்துக்கு வந்தால் சுற்றி வீட்டையோ இல்லை அந்த இடத்தையோ பார்ப்பது தான் வழக்கம் ஆனால் இந்த ஸ்டெல்லா லேசாக கூட தலையை திருப்பி எதையும் பார்க்காமல் எதிரில் இருந்த ஆர்யனையே பார்க்க அவனுக்கு தான் சங்கடமாக போனது.

ஆர்யன் உடனே தலையை திருப்பியபடி “என்ன இப்படி பார்க்கிறாங்க “ என்று முனங்கியபடி “ இதோ வந்துறன் “ என்று சமையலறைக்கு சென்று மயூரிக்கு நேரத்தை பார்த்து அழைக்க உடனே போனை எடுத்த மயூரி “அங்க தான் ஆர்யன் வரேன் “ என்று போனை வைத்து விட ஆர்யன் வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஏதாவது தரனுமே என்று யோசித்தவாறு ஃப்ரிஜ்ஜில்  இருந்த சாத்துக்குடி ஜூஸை மயூரிக்கும் சேர்த்து ஊற்றி கொண்டு அறைக்கு வர மயூரியும் அப்போது தான் கதவை திறந்து கொண்டு அறைக்கு வந்தால்.

ஹாலில் ஸ்டெல்லாவை பார்த்து விட்டு நீயா? என்று அவளை அதிர்ந்து பார்க்க அப்போது கையில் ஜூஸுடன் வந்த ஆர்யன் “வா.. மயூரி….இங்க பாரு சாரோட பிஏ வந்துருக்காங்க “ என்று பேசியபடி மயூரியிடம் ஜூஸை நீட்ட அதை எடுத்துக்கொண்ட மயூரி மெதுவான குரலில் “ இந்த ஜெய் எருமை எங்க, இவளை வர சொல்லிட்டு அவன் எங்க போனான்? “ என்று பல்லை கடித்து கொண்டு பேச ஆர்யன் “ அப்பாவோட வாக்கிங் போயிருக்காங்க ஏன் என்ன ஆச்சி “

“ரோபோவை இங்க விட்டுட்டு வரவச்சிட்டு வாக்கிங் இப்போ ரொம்ப முக்கியம் “ என்று பேசியவள் ஜூசை எடுத்து கொண்டு சோபாவில் அமர மயூரி பேசியதை புரியாமல் பார்த்த ஆர்யன் ஸ்டெல்லா விடம் ஜூசை நீட்ட  அவள் ஆர்யனை நிமிந்து பார்த்து “ நோ தேங்க்ஸ் “ என்று எடுக்காமல் விட அதை பார்த்த மயூரி “ இதோ ஆரம்பிச்சிட்டாள “ என்று உதட்டை சுழித்து ஜூசை பருக ஆர்யன் தட்டை டேபிளில் வைத்து விட்டு மயூரியுடன் சோபாவில் அமர்ந்து கொண்டான்.

 ஸ்டெல்லா சோபாவில் அமர்ந்திருந்தவள் ஜெய்க்கு போனை போட்டு பார்க்க மாணிக்துடன் சென்றவன் போனை இங்கேயே விட்டு போயிருக்க அது இங்கே தான் சத்தம் போட்டது உடனே போனை அணைத்தவள் அந்த ஃபைலை பார்ப்பதும் பின் போனை பார்ப்பதும் என்று இருந்தவளை மயூரி ஜூசை குடித்தபடி பார்த்தவள் சலிப்பாக தலையை அசைத்து கொள்ள அதை பார்த்த ஆர்யன் மயூரி அருகே சாய்ந்து “ என்ன அவுங்கள அப்படி பார்க்கிற மயூரி “ என்று கேட்க அதற்கு மயூரியும் ஆர்யன் பக்கம் சாய்ந்து ஸ்டெல்லாவை பார்த்த படி “ வேற எப்படி பார்க்க ஆரி, சரியான ரோபோ அவ தெரியுமா “

 “ என்ன சொல்ற மயூரி “ என்று அவளை பார்க்க, மயூரி “ ஆமா ஆர்யன் புரோகிராம் பண்ணி வச்ச ரோபோ மாதிரி தான் எல்லாம் செய்வா அவ வேலை ஆகனும்னா நல்ல பேசுவா வேலை முடிஞ்சதும்  ஒரு வார்த்தை எக்ஸ்ட்ரா பேசமாட்டா என்னன்னா என்னதான் அத மீறி எஸ்ட்ரா சும்மா விளையாட்டுக்கு கூட ஏதும் பேச மாட்டா  “ “ என்னது.. “ என்று கேள்வியாக ஆர்யன் கேட்க “அதுவும் இல்லாம,  ஒரு புராஜெக்ட் சக்சஸ் பார்ட்டியில ஒரு டீம் லீடர் தெரியாம மேல கை போட்டு பேசிட்டான் அத பேட் டச்ன்னு அவன் கையை உடச்சிட்டா “

அதை கேட்டு ஹாக் ஆன ஆர்யன் “ என்னதுது கைய உடைச்சிட்டாங்கலா “

“ம்ம்ம் அந்த சம்பவத்துல இருந்து நானே விஸ் பண்ண கூட அந்த பொண்ண தொட மாட்டேன், ஆனா நல்ல வர்க் பண்ணுவா ஜெய் சொல்ற எல்லா வர்க்கையும் கரெக்ட்டா முடிப்பா அதான் இவளயே வச்சிட்டு சுத்துரான் அந்த கிருக்கன் “ என்று இருவரும் பேசியது ஸ்டேல்லா காதுகளில் விழ தான் செய்தது  இருந்தும் “ எதோ எங்கயோ கத்துது “ என்ற தொனியில் தான் அமர்ந்து இருந்தாள்.

ஸ்டேல்லா வந்து பத்து நிமிடம் கழித்தே ஜெய் மற்றும் மாணிக்கம் வந்தனர். ஜெய் வந்த உடனே அந்த ஃபைலை அவனிடம் கொடுத்து விட்டு அவள் நிற்க ஜெய்யும் அந்த ஃபைலை தீவிரமாக பார்த்தபடி “ இதுல இருக்க டீட்டெயில் எல்லாம் கரெக்ட்டா…” என்று கேட்க அதற்கு ஸ்டெல்லா “ ஹன்டரட் பெர்சென்ட் கரெக்ட் சார் நல்ல செக் பண்ணிட்டேன் “

 “ம்ம்ம்…” என்று அதை பார்த்து முடித்த ஜெய் நிமிர்ந்து ஆர்யனை பார்த்து “ நம்ம இன்னைக்கு நைட் திருச்சிக்கு போறோம் ரெடியா இருங்க “ என்று சொல்ல அதை கேட்ட மயூரி “என்னது எங்கள விட்டு நீங்க மட்டும் என்னது திருச்சிக்கு “ என்று மயூரி கேட்க ஜெய் “ வினோத் இருக்க இடம் தெரிஞ்சிருச்சி திருச்சில ஒரு ஹோமில இருக்கான் “ அதை கேட்ட மாணிக்கம் “ என்னது ஹோமில இருக்கிறானா “

 “ஆமா அங்கிள் பதினைந்து வருசம் முன்னாடி ஸ்ட்ரோக் வந்துருக்கு அவனுக்கு அவனை அவன் பொண்டாட்டியும் பிள்ளையும் பாக்க முடியாதுன்னு அங்க சேர்த்து இருக்காங்க அதான் அவனுக்கு ஏதாவது ஆகுறதுக்குள்ள போகணும் மயூரியும் நீங்களும் இங்க இருங்க நான் ஆர்யன் கூட போயிட்டு வந்துறேன் “ என்று ஜெய் சொல்லவும்

 மயூரி “ஏன் ஏன் எங்கள மட்டும் விட்டு போறீங்க நாங்களும் வருவோம் “ என்று அடம்பிடிக்க ஜெய் “ இதோ பாரு மயூ அங்கிள் பாவம்ல ரொம்ப வீக்கா இருக்காங்க நீ அவர்களை பாத்துட்டு இங்கயே இரு மயூ “ அதை கேட்ட  மயூரி மாணிக்கம் அங்கிளை நிக்க வைத்து அவர் கைகளை மடக்கி அவர் ஆம்ஸை காட்டி “ யார வீக்குன்னு சொல்ற எங்க அங்கிள் வீக்கா “  என்று முறைக்க மாணிக்கமும்  “ நானும் வர தம்பி “ என்று சொல்லவும் பிளைட்டில் ஐவரும் கிளம்பி மறுநாள் காலை வினோத்தின் முன் அமர்ந்து இருந்தனர்.