இரவு எட்டு மணி வீட்டில் டீ வீ பாடல் ஓடிக் கொண்டிருக்க….
அதை பார்த்து அதை போல ஸ்டெப் போட்டுக் கொண்டிருந்தாள் ஆறு வயது ஸ்ராவணி.
பாப்பா சவுண்ட் கம்மி பண்ணு அண்ணா படிக்கறான் என்று கத்திய நிலா, அவள் கேட்காததில் டேய் அவளை கம்மி பண்ண சொல்லு என்று சுதர்ஷனிடம் ஒரு அதட்டலிட
பாப்பா என்ற அவனின் அழுத்தமான குரல்… அடுத்த நொடி ஸ்ராவணி ஒலியை குறைத்து அண்ணனிடம் ஓடிவந்தவள் அண்ணா ஸ்ராவணி குட் குட் கேர்ள் என்றாள்
நோ நாட் குட், வென் அம்மா டோல்ட் யு டிட் நாட் டூ என்றான் அதே அழுத்தமான குரலில்
அவ்வளவு தான் அண்ணனின் குரலில் உதடு பிதுக்கி ஒரு அழுகையை ஆரம்பிக்க
ஷ் என்று ஒற்றை விரல் கொண்டு சுதர்ஷன் மிரட்ட
அவ்வளவு தான் கண்கள் கலங்க உதடு பிதுங்க அப்படியே நின்றாள்.
எங்கே எந்த சத்தமும் காணோம் என்று எட்டி பார்த்த நிலா, மகள் நின்று கொண்டிருந்த கோலம் பார்த்து, அரிசி ஆட்டிக் கொண்டிருந்த கையை வேகமாக கழுவி
டேய் என்னடா பண்ண, பண்ணக் கூடாதுன்னு சொல்லணும் எதுக்குடா மிரட்டுற என்றபடி மகளை கைகளில் அள்ள, அவ்வளவு தான் அப்படி அழுகை ஸ்ராவணி.
அம்மா வின் தோளில் முகம் புதைத்துக் கொள்ள
மா செல்லம் குடுக்காதீங்க, நீங்க முதல் தடவை சொன்ன போதே அவ கேட்டிருக்கணும் என்றான் அதே அழுத்தமான குரலில்
ஆரம்பிச்சிட்டான்டா என்று சொல்லியபடியே கௌரிஷ் வீட்டிற்க்குள் நுழைந்தவன், மா குடுங்க என்று அவளை கைகளில் வாங்கிக் கொண்டான்
இப்படியாக ரூல்ஸ் ராமானுஜமாக சுதர்ஷன் பதினைந்து வயதில் இருந்தவன் பத்தாம் வகுப்பு படித்தான். எல்லோரையும் அனுசரித்து அரவனைப்பவனாக கெளரிஷ் பதினைத்து வயதில் அவனும் பத்தாம் வகுப்பில் இருந்தான். ஆம் இருவரும் இரட்டையர்கள். அதன் பிறகு ஒன்பது வருட இடைவெளியில் பிறந்தவள் ஸ்ராவணி. சுட்டி தனமும் குறும்பும் நிறைந்தவள் அம்மாவின் செல்லம் கொண்டே அனைத்தும்.
இன்னைக்கு பாப்பா என்ன பண்ணினா என்று கேட்டுக் கொண்டே கெளரிஷ் அவளை வெளி திண்ணைக்கு அழைத்து சென்று அமர்த்திக் கொள்ள, அவனிடம் என்ன நடந்தது என்று கதை பேசிக் கொண்டே அண்ணன் மேல் சாய்ந்து கொண்டாள்.
கெளரிஷ் தூங்கிட போறா இட்லி குடு என்று வேகமாக தட்டில் இட்லி கொண்டு வந்து குடுக்க, வேகமாக எழுந்து சென்று கைகளைக் கழுவி வந்தவன், தங்கைக்கு ஊட்ட, அவளும் அண்ணனிடம் கதை பேசியபடியே சாப்பிட
திண்ணையில் கால் நீட்டி ஆசுவாசமாய் நிலா அமர்ந்து கொள்ள, புத்தகத்தை மூடி வைத்து அம்மாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான் சுதர்ஷன். இவர்களின் வீட்டின் கேட் திறந்திருந்தது.
பெரிய வீடு, கீழேயே சமையல் கூடம், உணவறை, பூஜை அறை, படிக்கும் அறை, பெரிய கூடம், மூன்று படுக்கை அறை என்று விஸ்தாரமாக இருந்தது. திண்ணைக்கு பக்கத்தில் வெளியே நிறைய இடம், பக்கவாட்டில் ஒரு அறை என்று இருக்கும்.
மேலேயும் சில அறைகள் என. இன்னொரு வார்த்தையில் வீடல்ல பங்களா
இவர்கள் ஐவரையும் எதிர் வீட்டின் பிரமாண்ட வெளி கேட் திறந்திருக்க, அதில் வராண்டாவில் ஆளும் கட்சி அமைச்சர் மட்டுமல்லாது கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கேசவ நாராயணன் அமர்ந்திருந்தார். அவரின் அருகில் கை கட்டி பவ்யமாய் நின்று கொண்டிருந்தவன் பார்வை இவர்களை தொட்டு தொட்டு மீண்டு கொண்டிருந்தது.