என்னுள்ளே அவனின் தேடல் -1

அந்த பெரிய மாலில் உள்ள மீட்டிங் ஹாலில் அனைவரையும் பிடித்துக் கத்திக்கொண்டிருந்தார் அந்த மாலின் உரிமையாளர் சக்திவேல் நாராயணன் அந்த ஐம்பது வயதிலும் அனைவரையும் சமாளித்து விடும் வல்லமை கொண்டவர், ஆனால் அவரையே புலம்பும் படி செய்தவன் தான் அவரின் மூத்த மகன்,சொல்வார்களே தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்று அதுபோலத்தான் இவனும் ஆனால் என்ன அனைத்து ஆண் குழந்தைகளும் அம்மா செல்லம் என்றால் இவன் அப்பா செல்லம். மிகப்பெரிய அதிபர்களுள் ஒருவர் தான் சக்திவேல் நாராயணன். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தந்தையும் மகனும் எலியும் பூனையும் ஆவார்கள் அது ஷாட்ஷாத் தொழில் ஒன்றே. அவனுக்கு அவனுடைய தாத்தாவின் விவசாயம் தான் என்றும்‌ பிடித்தது, ஈர்த்தது. சிறுவயதிலிருந்தே‌ அதில் நாட்டம் அதிகம் அவனுக்கு…..ஆதலால் தந்தையின் தொழிலில் நாட்டமில்லை. அவன் அதிகம் விரும்பி படித்து தெரிந்து கொண்டதும் விவசாயம் ஒன்றே.

அவரின் குடும்பத்தைப் பற்றி பார்ப்போம் ..சக்திவேல் நாராயணன் திருப்பூர் மாநகரின் தொழில் அதிபர்களுள் ஒருவர். அவரின் மனைவி விசாலாட்சி. பெயரை போலவே மனமும், யாரையும் மனம் நோகும்படி பேசாதவர்.அவர் தான் அந்த வீட்டின் மகாராணி.அவருக்காக அவரை முன்னிட்டு கட்டப்பட்டது தான் அந்த மால். ஆனால் அவருக்கு உலகம் குடும்பம் மட்டுமே….

சக்திவேல் நாராயணன் – விசாலாட்சி தம்பதியர்க்கு மூன்று மக்கள், கடைக்குட்டி அவ்வீட்டின் இளவரசி அபூர்வா அவளுக்கு 25 வயதாகிறது, சக்திவேல் குடும்பத்தின் செல்வ சீமாட்டி. அவள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருக்கும் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியயை.. அவளுக்கு நேர்  மூத்தவன் வினயானந்த். அவன் 27 வயதில் க்ளீன் சேவ் ,சந்தன நிறத்தில் எப்பொழுதும் கூடியேறிய புன்னகையுடனே வளைய வருபவன் பக்கா ஜென்டில்மேன் தோற்றத்தில் இருப்பவன் அவனது தந்தையின் தொழில்களை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கும் மூத்தவன் தான் நம் நாயகன் சர்வானந்த் 29 வயதில் முறுக்கு மீசை, கையில் காப்பு , கழுத்தில் புலி சீற்றத்துடன் கூடிய டாலர் செயின் என கம்பீரத்துடனும் மற்றவர் பார்வையில் பயத்துடன் கூடிய மரியாதையும் பெற்றவன்…..

அவன் விவசாயம் சார்ந்த பொறியியல் பட்டத்தை பெற்று, தன் தாத்தாவின் நிலத்தில் வெள்ளாமை செய்து இப்பொழுது தனக்கென தனி தேங்காய் மில்லையும் , இயற்கையான உரம் பெற ஆலோசக தலைவராகவும் இருக்கிறான்…

சக்திவேல் நாராயணனின் தாய் தந்தை கந்தசாமி-தெய்வானை. என்ன தான் நாகரீகம் வளர்ந்தாலும் தன் சொந்த நிலத்தில் அறுவடை செய்து  வாழ வேண்டும் என‌ நினைப்பவர்கள். அதனால் மகனின் வளர்ச்சி பெருமிதம் தந்தாலும் விவசாயமே தெய்வம் என வாழ்பவர்கள்….

மாலை கவிழும் மஞ்சம நேரத்தில் குருவிகளின் கூச்சலிடல், கிளிகளின் கொஞ்சும் சம்பாஷனைகள் என தோப்பில் வரப்பு கட்டி கொண்டிருந்தான் சர்வானந்த் ,அவனின் எண்ணம் முழுதும் விவசாயம் ஒன்றே.

ஆனால்   அவனையே எண்ணங்களில் மட்டுமே   வாழ்ந்து கொண்டிருக்கிறாள் ஒருத்தி. ஆம்  அவனின் மாமன் பெற்ற தங்க ரதம் தான் அவள் யமுனா‌.ஆனால் சர்வாவிற்கோ  அப்படி ஒரு எண்ணம் இல்லை அத்தை மகள் என்ற பாசம் மட்டுமே …… அவள் பொறியியலில் கணினி அறிவியல் துறையை முடித்தாள் . பெற்றவர்களுக்காக படித்தவள் காலம்  செல்ல செல்ல அவளுக்கு ஐடி துறையின் மீது இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. அவள் கல்லூரி முடித்து அதே நேரம் அரசு தேர்வெழுதி விவசாய  துறையை தேர்ந்தெடுத்து வேளாண்மை செயலராக தங்கள் ஊரிலேயே பணிக்கு சேர்ந்த  நாள்…. அப்பொழுது புகார் அளிக்கவென வந்திருந்தான் சர்வா …..இவளோ அவனை கண்டதும் சொல்லாத காதலில் சுகமான தாலாட்டு போல பதிய வைத்துக் கொண்டாள் . ஆனால் அவனோ புகார் அளிக்க மட்டுமே வந்தேன் முடிந்துவிட்டது கிளம்புகிறேன் எனும் ரீதியில் சென்று விட்டான்…….அன்று வீட்டிற்கு திரும்பிய யமுனாவிற்கு மனம் முழுவதும் ரணமாக காதலின் வலி.. வந்தவள் தலைவலி எனக்கூறி அறைக்கு சென்றவள் தான் அவள் கையில் இருந்த தழும்பை வருடி கொடுத்தபடி என்னை விட்ருவிங்களா மாமா!! என கண்ணீருடன் வாய்விட்டு கூறிக்கொண்டாள்….

அந்த தழும்பு ஏற்பட்ட நாள் அவள் வாழ்வின் மறக்க முடியாத நாள். அவள் காதல் வெளிப்பட்டு அப்பொழுது தான் அவளின் அக்கா‌விற்கும் யமுனாவின் காதல் தெரிந்ததுமீனாட்சி மகளை சாப்பிட அழைக்க அவள் செல்லாமல் தந்தையும் சாப்பிட மாட்டார் என அறிந்தவராக முகத்தை கழுவி விட்டு வந்தமர்ந்தாள்அவளின் தந்தை ஏன் கண்டு முகவாட்டமா இருக்கு என மகளின் முகத்தை பார்த்து கேட்க அவளோ திணறினால் ப்பா அது ..த்..தலைவலி பா எனக் கூற ,ரொம்ப வலிக்குதாடாஎன கேட்க , இல்லை பா இப்போ பரவாயில்லை எனக்கு போதும் என எழுந்து கொண்டாள். இன்னும் சிறிது நேரமிருந்தால் தந்தை கேள்விகளால் துளைத்தெடுப்பார் என்று

அறைக்கு வந்தவள் படுத்துக் கொண்டாள் ,கண்ணை முடிய அடுத்த நொடி, அந்த நாள் காட்சி பிம்பமாக அவள் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது, அது ஒரு ஞாயிற்றுக்கிழமை யமுனாவும் அவள் அக்காவும் அவர்களது கடைக்கு சென்ற போது வித்யாவின் தோழியை  சந்திக்க அவள் வண்டியை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தாள்.அப்பொழுது எதிர்திசையில் சர்வா யாருடனோ பேசிக் கொண்டே நடந்து வர எதிரில் வேன் ஒன்று கட்டுப்பாடின்றி வந்தது.நொடிப்பொழுதில் அந்த சம்பவம் .. .

யமுனாவோ கார் வேகமாக வருவதை பார்த்து மாமா வண்டி என  கத்திக் கொண்டு ஓடினாள். ஆனால்  அதற்குள் அவனை இடித்திருந்தது‌ வேன்..

யமுனா சர்வாவை நெருங்கும் நேரத்தில் அவளையும் உரசி இருந்தது ஒரு கார் , அவள் கையில் அடிபட்டிருக்க  அதை கண்டுகொள்ளும் நிலையில் அவள் இல்லை ..சர்வா வேன்  இடித்ததில் கீழே விழுந்து மயங்கிருக்க , இவளோ அவனருகே வந்து மாமா! மாமா கண்ண தெறந்து பாருங்கமாமா ப்ளீஸ் பாருங்க ..அதற்குள் வித்யா வந்திருக்க

 

யமுனாவோ அதெல்லாம் தெரியாமல் பிதற்றிக் கொண்டிருந்தாள்மாமா  என்னை தவிக்க விடுறீங்க, என அழுதே ஓய்ந்தாள்.அதற்குள் வித்யா ஒருவரை உதவிக்கு அழைத்து சர்வாவை காரில் ஏற்றி யமுனாவையும் அமரச் சொல்லியவள் . வீட்டிற்கு அழைத்து தகவல் சொல்லி விட்டு வித்யாவும் அவர்கள் வந்த வண்டியை எடுத்துக் கொண்டு மருத்துவமனையை நோக்கி விரைந்தாள்அதற்குள் சர்வாவை மருத்துவர்கள் பரிசோதனைக்கு அனுப்பி இருக்க, வித்யா கண்டது அவ்வளவு பெரிய மருத்துவமனையில் வரவேற்பறை முன் இருந்த கோவிலில் கீழே மடிந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தவளை என் மாமான்ன  எனக்கு அவ்வளவு பிடிக்கும், ப்ளீஸ் என் மாமாக்கு‌ எதும் இருக்கக்கூடாது.எனக் கூறியவற்றை தான்…. வித்யா ஓடிச்சென்று யமுனாவை  எழுப்பியவள் அவளது அடிபட்ட கைக்கும் சிகிச்சை அளிக்கச் சொன்னாள்..அதற்குள் அனைவரும் வந்து விட அனைவருமே பயந்து தான் போயினர்யமுனா முகத்தில் ஈயாடவில்லை . வித்யா தான் அனைவரையும் சமாளித்தாள் சர்வாவை இடிச்சத நேர்ல பார்த்ததுதல பயந்துட்ட கொஞ்ச நேரம் விடுங்க சரியாகிடுவா என்றாள்விசாலாட்சி அழுதே கரைந்தார். சர்வாவிற்கு ஒன்றும் இல்லை என்ற‌ பின் தான் அனைவருக்கும் முகத்தில் உயிரே வந்தது . அப்பொழுதும் யமுனா அசைந்த பாடில்லை ,சர்வா கண் திறந்து பார்க்கும் வரையும் அப்படி தான் இருந்தாள். அவன் கண் திறந்து பார்த்த ஐந்து நிமிடத்தில் கிளம்பி விட்டாள் .   அவளுக்கு இப்பொழுது தனிமை தேவை.அதனால் கிளம்பி விட்டாள்.யமுனாவின் அம்மா மீனாட்சி தான் அண்ணிக்கு தோள் கொடுத்து அண்ணனுக்கு உறுதுணையாக இருந்தார். சர்வா சரியாகி வர மூன்று மாதங்கள் ஆனது.அது வரையிலும் விசாலாட்சியுடன்  இருந்து உதவியது மீனாட்சி தான்.வித்யா வீட்டிற்கு சென்று தங்கையிடம் கேட்க அழுது கொண்டே ஆம் என்றாள்.வித்யாவோ இதுக்கு ஏண்டி அழுற.. சந்தோஷமான செய்தி தான !!  என்ன கா  நீ, அப்பாக்கு தெரிஞ்சா  கொன்னே  பொட்ருவாருநீ யார்க்கிட்டயும்  சொல்லாத ! என்ன நடக்குமோ அத நடக்கும்எனக் கூறினாள். சக்திவேலின் ஒன்று விட்ட தங்கை மகள் தான் யமுனா.  சிவசங்கரன் – மீனாட்சி தம்பதியர்க்கு இரண்டு மக்கள் .இளைய மகள் தான் நம் நாயகி  யமுனா 27 வயது காரிகை. அவளுக்கு மூத்தவள் வித்யா அவளுக்கு திருமணமாகி பக்கத்து ஊரில் வசித்து வருகிறாள்.அவளுக்கு ஒரு பெண்,ஒரு ஆண்.அவளது கணவன் சொந்தமாக தொழில் செய்து வருகிறான்.சிவசங்கரன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் வைத்து நடத்திக் கொண்டு விவசாயத்தையும் பார்த்து வருகிறார். யமுனாவிற்கு வரன் பார்த்து வருகின்றனர்.காதல் என்றாலே பாவம் என்று கூறும் கூட்டத்தில் அவளின் மனதில் உள்ள ஆசையை  நிறைவேற்றுவரா சிவசங்கரன்???

சர்வாவிற்கு குடும்பம், விவசாயம் இரண்டும் தான் முதலில் ,ஆம் அவனுக்கும் காதல் உண்டு!!!பல வருடங்களாக மனதில் வைத்து கொண்டிருக்கும் அவளவனின் காதல் யாரோ!!தந்தையின் ஆசை, நம் நாயகியின் காதல் இரண்டையும் நிறைவேற்றுவனா நம் நாயகன்….

அவனின் மனதிலும் அவளா….

காலம் தான் பதில் சொல்லும்!!

என்றும் என் உள்ளத்தில் உன் நினைவுகள் மட்டுமே!!

காத்திருக்கிறேன் ஆவலுடன் உன் நினைவுகளையும்

 ஸ்பரிசங்களையும் நிறைத்து நீ எனை சேர்வாய் என !!!

காத்திருப்பும் சுகமென புரிந்து கொண்டேன் உன் வருகையால்