நண்பன் தியாகுவின் வீட்டை கெளதம் வந்தடைந்த போது மதியமாகியிருந்தது. தோழனை அழைக்கவிமானநிலையம் செல்வதற்கு முன்னரே சமையல் வேலையெல்லாம் முடித்து வைத்திருந்தான் தியாகு.
இலகு ஆடைக்கு மாறி வந்த கெளதம் சாப்பாட்டை ருசித்து சாப்பிட்டான்.
“மச்சான் என் சாப்பாடேஉனக்குஇவ்ளோடேஸ்ட்டாதெரியுதுன்னாஎவ்ளோகாஞ்சுபோயிருக்கன்னுநல்லாபுரியுதுடா” எனகிண்டல்செய்தான்தியாகு.
தாத்தா இறக்கும் வரையசோவிடத்தில் வேறு சிந்தனையே இல்லை. துக்கத்திலிருந்து மீள முடியாமல் இருப்பதை விட தம்பிக்கு துணையாக இருக்க வேண்டும் என புரிந்து மெல்ல மெல்ல அவளேதான் தேறிக் கொண்டாள்.
முன்பின் பழக்கமே இல்லாத கெளதம் தன் கழுத்தில் தாலி கட்டி விட்ட ஒரே காரணத்தால் கணவனாக யசோவின் மனதில் ஆழமாக பதிந்து போனான்.
மகனின் முடிவு பற்றி ஏதும் சொல்லாமல், “ஆறு மாசம் கழிச்சு கெளதம் வருவான், அப்ப வந்து யசோவை அவனோட கூட்டிட்டு போவான்” எனகருணாகரனிடம் சொல்லியிருந்தார் சண்முகம். அவர்மூலமாகயசோவுக்கும்அவ்விஷயம்சொல்லப்பட்டது.
நவீனும் அக்காவிடம், “நமக்குத்தான் மாமா இருக்காரே க்கா, இனியும் அழக் கூடாது” என்றான். அதன் பின் கெளதம் வந்து அவளது சிந்தையை நிறைக்க ஆரம்பித்து விட்டான்.