மனம்கொள்ள காத்திருக்கிறேன்!

25

சந்துருவிற்கு, வீடு வந்தும்கூட சிந்தனை லேகாவிடம்தான் இருந்தது.. ஏதேனும் பிரச்சனையாகுமோ என. நீண்டநேரம் அறைக்கு வராமல்.. ஹாலில் அமர்ந்துக் கொண்டிருந்தான் சந்துரு.

சந்துரு தீக்ஷி இருவரும்.. சரியான நேரத்தில் தீக்ஷியின் வீடு வந்து சேர்ந்தனர். தீக்ஷி, தன்னுடைய உடமைகளை எடுத்து வைக்க உள்ளே சென்றுவிட்டாள்.

பெரிய வீடு.. மேலும் கீழுமாக இரண்டு போர்ஷன்களை கொண்ட வீடு.. கீழே வாடகைக்கு இருக்க.. மேலே தீக்ஷியின் ஜாகை. இப்போது இந்த மூன்று மாதமாக சந்துருவும் அடிக்கடி இங்கே வருகிறான். அலுவலகத்திற்கு அருகே இருப்பதால்.. இரவு தாமதமானால் இங்கே மனையாளின் வீடு வந்துவிடுவான்.

பழக்கமான இடம்தான் சந்துருவிற்கு.. ஆனால், அக்காவை நினைத்து பதட்டமானான். அழைத்து கேட்க்க கூடாது என தீக்ஷி எச்சரித்துவிட்டுதான் தன் வேலையை பார்க்க சென்றிருக்கிறாள். அத்தோடு அவனுக்கும் தெரிகிறது.. நீண்டநாள் சென்று சேர்ந்திருக்கிறார்கள்.. ஷிவா, மனையாளை.. தன் அக்காவை காலில் விழுந்து கூட்டி சென்றுவிட்டான் என தெரிகிறது. ஆனாலும்.. எதோ பதட்டம். யோசனையோடு போனினை எடுத்து பார்ப்பவதும்.. வைப்பதுமாக.. இருந்தான்.

தீக்ஷி, உடைமாற்றிக் கொண்டு, நாளைக்கு தேவையானவைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

கணவனை இன்னும் காணோமே என அழைத்தாள், உள்ளிருந்தே சத்தமாக “சந்துரு என்ன பண்றீங்க தனியா.. இருட்டினை பார்த்து பயந்துடுவீங்க உள்ளே வாங்க” என்றாள் விளையாட்டாக.

சந்துருவிற்கு காதில் விழுகிறது.. புன்னகைக்கிறான்.. ஆனாலும் எழவில்லை அவன்.. கையிலிருந்த போனிலிருந்து லேகாவின் எண்ணுக்கு அழைத்துவிட்டான்.

இப்போதுதான் இவர்களும் வந்து சேர்ந்தனர். ஷிவா, காரினை சரியான இடத்தில் பார்க் செய்துவிட்டு.. இருவருமாக சேர்ந்துதான் வீடு வந்தனர். காரில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.. அமைதியாகவே வந்தனர். நீண்ட தூர பயணம்.. அசையும் மின்விளக்குகளின் ஒலியை வெறித்து பார்த்துக் கொண்டே.. தன்னவனின் செய்கையை எண்ணி எண்ணி.. கண்கள் மினுக்க அமர்ந்துக் கொண்டிருந்தாள் லேகா.

ஷிவாவிற்கு, எது வேண்டுமோ அது வந்த சேர்ந்த ஆனந்தம். பேச எப்போதும் அவனிடம் வார்த்தைகள் இருந்ததில்லை.. செய்கைதான்.. அவனின் மொழி. இப்போதும்.. ஆனந்தத்தில் பேசாமல் சாலையில் கவனமாகயிருந்தான்.

உள்ளே வந்தனர்.. ஷிவா “வெல்கம்” என சொல்லிக் கொண்டே உள்ளே அழைத்து வந்தான் தன்னவளை.

லேகாவிற்கு பதட்டமாகவே இருந்தது. கணவன் அதை உணர்ந்து.. உள்ளே வந்தவளை பின்னிலிருந்து அனைத்துக் கொண்டான்.. “சாரி..” என்றான் ஆழ்ந்தகுரலில்.

மனையாள் “போதும்..” என்றாள்.. நிதானமானக் குரலில்.

தன்னவளின் தோள்வளைவில்.. முத்தமிட்டு.. தன் தாடையையை பதித்துக் கொண்டான்.. “நீயில்லாமல் இது வீடாகவே இல்ல” என்றான், வீட்டினை சுற்றி பார்வையை சூழலவிட்டபடி.

லேகா அனைத்திருந்த கணவனின் கையினை பிடித்துக் கொண்டாள்..

“இனி இப்படி போகாத” என்றான்.. தன்னவளை இன்னமும் இறுக்கி அனைத்துக் கொண்டு.

பெண்ணவளும் பதில் சொல்லவில்லை.. கைகளால் தன்னவனின் சிகை வருடி.. நெற்றியில் முத்தமிட்டாள். நிமிடங்களாக நீண்டது இந்த அனைப்பு.

அப்போதுதான் சந்துரு அழைத்தான் லேகாவிற்கு..

இருவருக்கும் அழைப்பு சப்தம் கேட்டாலும் அவசரம்காட்டவில்லை.. போனை எடுக்க.

மீண்டும் இரண்டாம்முறை அழைக்க..

ஷிவா “உன் தம்பிக்கு சந்துருன்னு பேர் வைத்ததற்கு பதிலாக லஷ்மணன்’ன்னு வைச்சிருக்கணும் டி..” என சொல்லி.. மனையாளை விடுவித்தான்.

இருவருக்கும் புன்னகை..

லேகா அழைப்பினை ஏற்றாள்.

சந்துரு “ஒன்னும் பிரச்சனையில்லையே” என்றான்.

லேகா நிதானமாக போனோடு கிட்சேன் செல்லுவது போல “ஒண்ணுமில்ல டா.. வந்து சேர்ந்துட்டோம். நீங்க எப்போ போனீங்க” என்றாள்.

ஷிவா இருவரும் பேசட்டும் என அறைக்கு வந்தான்..

சந்துரு நிம்மதி பெருமூச்சுவிட்டு “ம்.. அப்போவே வந்துட்டோம். அப்புறம் லேகு, ஷிவா..” என சொல்ல..

தீக்ஷி வந்துவிட்டாள் “சந்துரு” என்றாள்.. அதிர்ச்சியாக. பேச வேண்டாம் என சொல்லியும்.. அழைத்திருக்கிறானே என எண்ணம் அவளுக்கு.

சந்துரு மனையாளிடம் கைகாட்டி ‘ஷ்..’ என்றவன், போனில் “ஷிவாவிற்கு, தொழிலை தவிர வேறு பிடிப்பில்லை போல.. ஏதாவது செய்து நம்மை பயப்பட வைச்சிடுறான்.. அதான் கூப்பிட்டேன். ஓகே.. வைக்கட்டுமா.. மாம்ஸ் கொஞ்சம் நல்லவன்தான்.. ம்.. வைக்கட்டுமா” என்றான். யோசனையோடு.

லேகா “என்ன டா யோசிக்கிற.. நல்லவர்தான் டா” என்றாள் சின்னக் குரலில் அழுத்தமாக.

சந்துருவிற்கு நிம்மதி, லேகுவின் வார்த்தையை உள்வாங்கிக் கொண்டவன்.. ஒரு நொடி இடைவேளை விட்டு “நீ சொன்னால் சரிதான்.. குட்நைட்” என சொல்லி அழைப்பினை துண்டித்தான். 

சந்துருவிற்கு, தம்பியாக அவளை ஒட்டி பிறந்தவனின் கவலை.. லேகாவிற்கு பெரிதாக தோழிகள் இல்லை.. அதிகம் மனதை மறைக்கமாட்டாள்தான். ஆனாலும், காயம்பட்டாலும் காட்டிக் கொள்ளமாட்டாள்… என அவளோடு பிறந்தவனுக்கு தெரியுமே. அதனால், அக்கறையில் விசாரித்துக் கொண்டான். இருவருக்கும் திருப்தி.. இப்போது.

சந்துருவிற்கு, முறைத்துக் கொண்டு நின்ற மனையாளை.. இப்போதுதான் அவன் கண்களுக்கு தெரிய.. அவளிடம் புன்னகையோடு ஏதும் பேசாமல்.. தன்னிரு கைகளில் அவளை அள்ளிக் கொண்டு.. தங்களின் அறைக்கு வந்துவிட்டான். 

மறுநாள், சந்துரு தீக்ஷி இருவரும்.. கிளம்பினர்.. மனையாளை கல்லூரியில் விட்டு சந்துரு அலுவலகம் வந்து சேர்ந்தான்.

தீக்ஷி, தன் தந்தைக்கு அழைத்து.. “அண்ணன், நேற்று அண்ணியை வந்து கூட்டி போயிட்டாங்கப்பா” என விஷயத்தினை தெரியப்படுத்திவிட்டாள், காலையிலேயே.

சுந்தரம் தன் அண்ணனிடம் அழைத்து விஷயத்தை சொன்னார்.

ஷிவா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க.. லேகாவின் அலைபேசிக்கு.. வடிவேலு அழைத்தார்.

லேகா.. பூரி செய்துக் கொண்டிருந்தாள் காலை உணவாக.. உதவிக்கு ஆள் இருந்ததால்.. அவர் கையில் கரண்டியை கொடுத்துவிட்டு.. அழைப்பினை ஏற்றாள்.

வடிவேலு “மருமகளே!.. வந்துவிட்டாயா” என்றார் ஆனந்தமாக.

லேகாவிற்கு அந்த குரலே இனிதாக “ஆமாம் மாமா” என்றாள்.

ஷிவா தயாராகி வந்து அமர்ந்தான்.. யார் பேசுகிறார்கள் என கேட்டுக் கொள்ளவில்லை.. தன் லாப் எடுத்து அமர்ந்தான்.

லேகா நடந்ததை.. பொதுவாக சொன்னாள். கணவன் மண்டியிட்டதை பற்றி பேசவில்லை. பொதுவாக வந்தார் பேசினார்.. கூட்டி வந்துவிட்டார்.. நேற்று இரவே வந்துவிட்டேன்.. என சொன்னாள், இறுதியாக “அத்தையிடம் சொல்லிவிடுங்கள் மாமா” என பேசி முடித்தாள்.

வடிவேலுவும் ‘சரி’ என சொல்லி.. அழைப்பினை துண்டித்தார்.

ஷிவா, டிபன் முடித்து அலுவலகம் கிளம்பினான்.

மதியமாக லேகாவிற்கு.. அவளின் அத்தையிடமிருந்து அழைப்பு வந்தது. லேகா எடுத்து பேசத் தொடங்கினாள்.

வசந்திக்கு, அழைக்க வேண்டும் என இல்லை.. கணவன் சொல்லிவிட்டார்.. அதனால் அழைத்தார்.

லேகா அழைப்பை ஏற்று அமைதியாகவே இருந்தாள்.

வசந்தி ‘பேசுவாள் மருமகள்’ என நொடி நேரம் அமைதியாகவே இருந்தார்.. அவள் பேசும் வழியை காணோம்  என தெரியவும்.. “எப்படி லேகா இருக்க.. நீ திரும்ப வந்துட்டேன்னு மாமா சொன்னார்” என்றார்.

லேகாவிற்கு சங்கடமாகவேதான் இருந்தது..  அதை காட்டமுடியாதே “ஆமாம் அத்தை.. நீங்க எப்படி இருக்கீங்க” என்றாள்.

வசந்தி அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் “எங்களுக்கு தெரியாமல் அவன் ஹாஸ்பிட்டல் போயிருக்கான். நீயும் சொல்லலை. அவனை பார்ப்பதை விட உனக்கு மத்தவங்க தானே பெரிதாக போயிட்டாங்க.. என்னமோ போங்க.. யாரையும் ஏதும் சொல்றதுகில்ல” என்றார் சலிப்பான ஒரு குரலில்.

லேகா “அத்தை.. எல்லோரும்தான் எனக்கு முக்கியம்.. ” என்றாள்.

இருவருக்கும் ஒரு கோவம்.. அதை கொட்டிட பார்க்கின்றனர். ஆனாலும், நிதானமாகிக் கொண்டனர்.

வசந்தி “அவனை பார்த்துக்கோ..” என தொடர்ந்து எதோ சொல்ல வர..

லேகா “தோட்டத்துக்கு போனால்.. தேங்காய் கீரை கொடுத்துவிடுங்க அத்தை.. வெள்ளரிக்காய் காய்க்குதா.. தோட்டத்து காய் எதுவுமே வரலை அத்தை.. கொடுத்துவிடுங்க அத்தை” என்றாள்.

வசந்திக்கு கோவமாகவே வந்தது இந்த அதிகாரத்தில்.. சாதாரணமாகதான் லேகா கேட்க்கிறாள்.. ஆனால், பேச்சின் பாதியில் இடைமறித்தது என்னமோ போலிருந்தது வசந்திக்கு. ஆனாலும், வார்த்தைகளை கொட்டவில்லை வசந்தி.. “ம்.. இந்தவாரம் கொடுத்துவிடுகிறேன். அங்க யார் இருக்கா.. பார்த்து சமைக்கன்னு கொடுக்கலை.. இனி வந்திடும்.. சரி நான் வைக்கட்டுமா” என்றார்.

அஹ.. இப்படியாக மாமியார் மருமகள் இருவரும் பேசி முடித்து வைத்தனர்.

இரவில் சுந்தரம் லதா இருவரும் அழைத்து பேசினார் லேகாவிடம்.. சுந்தரம் அமைதியாக் பேசி “ஷிவாவோடு வாம்மா.. அவன் இங்கே வரவேயில்லை.. நீ கூட்டி வா..” என மருமகளிடம் பொறுப்பினை கொடுத்து பேசி.. இலகுவாக்கினார் உறவினை. 

லதா, எதற்கும் அலட்டிக் கொள்ளாமல்.. ‘நல்லா இருக்கியா லேகா.. ஷிவாவிற்கு உடம்பு முடியலைன்னு கேள்விபட்டேன்.. அதான் நீ வந்துட்டில்ல.. இனி அவன் சரியாகிடுவான்..’ என பேசி முடித்தார்.

லேகாவிற்கு.. இந்த பேச்சு வார்த்தைகளே போதுமானதாக இருந்தது. 

அந்த வார இறுதியில் கணவனோடு தரமணி சென்றாள். ஷிவாவிற்கு என தயார் செய்யும் ABC மால்ட்டினை எடுத்து சென்றிருந்தாள்.. தன் மாமனார் இருவருக்கும்.

எப்போதும் போல.. மாமியார் இருவரும்.. அளந்துதான் பேசினர். இவளை தலையசைத்து வரவேற்றதுடன் சரி.. இவளிடம் பெண்கள் இருவரும் அதிகம் பேசவில்லை. லேகாவிற்கு அதையெல்லாம் கவனிக்கும் அளவிற்கு நேரமில்லை. கிட்சென் சென்று.. வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டாள்.. வேலையாட்களோடு.

மாமனார் இருவரும்.. மருமகளின் சமையலை மெச்சிக் கொண்டே உண்டனர். அப்போதே தானும் அவர்களோடும் தன் கணவனோடும் அமர்ந்து உண்டுவிட்டாள் பெண்.

மதியம் சுந்தரம் எதோ செய்தி பார்க்க என.. அமர்ந்தார் டிவி முன், லேகாவும் அவரோடு அமர்ந்து அரசியல் செய்திகள் பார்த்து.. விவாதிக்க தொடங்கிவிட்டாள்.

ஷிவா, பெரிதாக பேசமாட்டான். உண்ணும் போது அன்னையோடு பேசினான் தந்தை கேட்ட கேள்விகளுக்கு பதில்.. என அவனும்  உண்டு தன் அறைக்கு சென்றுவிட்டான். 

வடிவேலு வசந்தி என எல்லோரும் மதிய ஓய்வுக்கு சென்றுவிட்டனர்.

லேகா உறங்க செல்லவில்லை.. சின்ன  மாமனார் உறங்க செல்லவும்.. எதோ படம் ஒன்றினை போட்டு அமர்ந்துக் கொண்டாள் ஹாலிலேயே. எதற்கும் பழகிக் கொண்டாள் லேகா. தன்னை இவர்கள் கேட்ட வேண்டும்.. கவனிக்க வேண்டும்.. என எதையும் எதிர்பார்க்கவில்லை. கணவனிடம் மட்டுமே அந்த பார்வையும் கோவமும். மற்றபடி உறவுகளை பழகி கொண்டாள்.

வசந்தியின் சித்த சித்தப்பாவின் அறுபதாவது பிறந்தநாள் விழா. ஷிவா லேகா இருவரும் கிளம்பி சென்றனர்.

இனிமையான உறவுகளின் விழாவாக இருந்தது. லேகாவிற்கு, தன் தம்பியை அழைக்காதது வருத்தமாக இருந்தது. தன் கணவனிடம் அப்போதே சொன்னாள் “ஏங்க, தீக்ஷியும் நம் வீட்டு பொண்ணுதானே.. அதெப்படி, அவளை கூப்பிடாமல் விட்டாங்க..” என.

ஷிவாவிற்கு முதலில் ஏதும் புரியவில்லை.

மனையாளுக்கு கோவமாகவே வந்தது, பொறுமையாக விவரித்தாள் “இல்ல.. உங்க அம்மாவின் சொந்தமாகவே இருக்கட்டும்.. ஏன் தீக்ஷி சந்துருவை இந்த விசேஷத்திற்கு கூப்பிடவில்லை.” என்றாள்.

ஷிவா புருவம் உயர்த்தினான் “கூப்பிடலையா.. எனக்கு தெரியாதே” என்றான்.

லேகாவிற்கு கோவம் வரவில்லை.. தன்னவனை பற்றிதான் தெரியுமே.. ஆனாலும் இந்த அதிர்வில் புன்னகை எழுந்தது அவளிடத்தில்.. “அப்படியா.. கேட்ப்போமா உங்க அம்மாகிட்ட” என்றாள்.