Malar Soodum Penmai 24 2 13072 “நமக்காக காத்திட்டிருக்காங்க இல்லை. உங்க வீட்டுக்கு போலாம். சீக்கிரம்” என, தன்வி உடனே அறைக்கு சென்றாள். சில நிமிடம் கண்ணீர் கரைந்த பின்னே, தன்வி தயாராக ஆரம்பித்தாள். “நன்றி. நன்றி மாப்பிள்ளை” என்று வாசுதேவன் அவன் கை பிடித்து குலுக்க, “தேசிகன் கூப்பிடுங்க. அதென்ன மாப்பிள்ளை” என்றான் தேசிகன். தம்பியை தோளோடு அணைத்து கொண்ட ராஜேந்திரன், “சுதா மாப்பிளைக்காக மதியம் விருந்து அமர்க்களமா இருக்கணும்” என்றார். “இதோ இப்போவே சொல்லிடுறேன் மாமா” என்று அவர் வீட்டுக்கு அழைத்து பேச, “அந்த மாப்பிள்ளைக்கு மட்டும் தானா? அப்போ நான் டியூட்டிக்கு கிளம்புறேன்” என்றான் மனோகர். “மாப்பிள்ளை. என்ன இது, அப்படியெல்லாம் இல்லை” என்று சதாசிவம் உடனே பெரிய மருமகனிடம் சென்று அவனின் கை பற்றிக்கொண்டார். முதலில் இருந்தே மனோகர் என்றால் மாமனாருக்கு தனிப்பிரியம். “மாமா. நான் சும்மா வம்பிழுத்தேன். நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க” என்றான் மனோகர். தன்வி அதற்குள் தயாராகி வந்துவிட, குடும்பமாக எல்லாம் கிளம்பினர். காரில் வைத்து தேசிகனின் கையோடு கோர்த்து கொண்டாள் தன்வி. சுதா இருவரும் ஆரத்தி எடுத்து, வீட்டிற்குள் அனுமதித்தார். சதாசிவம் இளைய மருமகனுக்கு இருக்கை வசதி செய்து, குடிக்க எடுத்து வர சொல்லி, விருந்து ஏற்பாட்டை கவனித்து என்று மனிதர் அங்கும், இங்கும் நடந்து கொண்டே இருக்க, “ப்பா. ப்ளீஸ் உட்காருங்க” என்றாள் தன்வி. “இருக்கட்டும்டா” என்று தந்தை மறுக்க, “நான் போன் பேசிட்டு வரேன்” என்று தோட்டத்திற்கு சென்றான் தேசிகன். சதாசிவம் மகளின் பக்கம் அமர, பெண் அவரின் தோள் சாய்ந்து கொண்டாள். “அப்பா இனிமேல் கவனமா இருக்கேன்டா” என்றார் சதாசிவம். “தெரியும்ப்பா” என்றாள் மகள். ராஜேந்திரன், “என்ன நடக்குது இங்க?” என்று அவர்களுடன் அமர, “பெரியப்பா” என்று மகள் நிமிர்ந்து அமர்ந்தவள், “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள். “சொல்லு தன்வி” என, தேசிகனின் தொழில் பற்றி எல்லாம் சொன்னாள் தன்வி. இப்போது அது தடைபட்டு நிற்பதையும் சொல்லி, “நாம எதாவது செய்ய முடியுமா பெரியப்பா?” என்று கேட்டாள். சுதா முதற்கொண்டு எல்லாம் தன்வி பேச்சில் அங்கு கூடிவிட்டனர். சதாசிவத்திற்கு அவரால தான் அந்த தடை என்பது புரிந்து போனது. “எனக்கு இதுபத்தி தெரியும். நான் உங்க கல்யாணம் முடிவாகவும் மாப்பிள்ளைகிட்ட பேசினேன். தேசிகன் அப்புறம் பார்த்துக்கலாம் மாமான்னு முடிச்சுட்டார்” என்றார் ராஜேந்திரன். “ப்பா. நாம அவருக்கு சப்போர்ட் பண்ணி ஆகணும். கேன்சல் ஆன அப்ரூவலை திரும்ப வாங்கணும்” என்றான் ராஜேந்திரனின் இளைய மகன். “என் அப்பாக்கு அங்க நல்ல பழக்கம். நான் பேசவா மாமா” என்று வாசுதேவனின் மனைவி கேட்டாள். “அப்ரூவல் இப்போவே வாங்கிடலாம்மா. ஆனா தேசிகன் அதை விரும்ப மாட்டார்” என்றார் ராஜேந்திரன். “அப்புறம் அவர் தொழில் என்னாகிறது? எப்படியும் பணத்தை கொடுத்துதான் நிலத்தை எல்லாம் வாங்கியிருக்கார். அவ்வளவு ஏக்கரையும் சும்மா வைச்சிட்டு இருக்க முடியுமா?” என்று கேட்டான் வாசுதேவன். “இல்லைண்ணா. நம்மளோட தொழில் பண்றது போல, அதுலயும் பண்ணிட்டு தான் இருக்காங்க, ஆனா இவங்களே பண்ண நினைச்சதை பண்ண முடியலை. அறுவடையை வெளியே கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க” என்று தன்வி சொல்ல. “அவங்களுக்கு பணத்துக்கு இப்போவும் பிரச்சனையில்லை. ஆனாலும் தேசிகன் தொழில் பக்கம் திரும்ப போக மாட்டேங்கிறார்” என்றார் ராஜேந்திரன் பெருமூச்சுடன். “தேசிகன் அந்த கேஸ்னால பாதிக்கபட்டிருக்கான். அவங்க அப்பாவை எதிர்த்து நின்னவனுக்கு அந்த கேஸ் ஒரு கறையா படிஞ்சிருச்சு. அவனுக்கு ஆகாதவங்க, அதை பெருசு பண்ணிட்டாங்க. அத்தனை வருஷம் அவன் சம்பாதிச்ச பேர் எல்லாம் அதுல அடிபட்டிருச்சு. அதனால கூட அவன், திரும்ப தொழில் பத்தி நினைக்காம இருக்கலாம்” என்றான் மனோகர். தன்விக்கு மனதெல்லாம் பிசைந்தது. நேற்று போல் திரும்ப கணவனின் நெஞ்சம் கேட்டது அவளுள்ளம். தோட்டத்தில் முரளியுடன் பேசி கொண்டிருந்த தேசிகனை பார்த்து தன்னை சமாளித்து கொண்டாள் தன்வி. “அந்த கேஸ் பொய்ன்னு அதிகார பூர்வமா அறிவிக்கலாமா?” என்று கேட்டாள் ஸ்ருதி. “ம்ஹூம். அதை பண்ண முடியாது. பண்ணவும் கூடாது. நமக்காக செஞ்ச அதிகாரிங்க எப்படி திரும்புவாங்கன்னு சொல்ல முடியாது. பெரிய மாமாவோட பதவி வரைக்கும் பெருசாகும்” என்றான் மனோகர். “வேறென்ன வழி இருக்கு?” என்ற கேள்வி முளைத்தது. “தன்வி. நீ பண்ணலாம். அவருக்கான சர்ப்ரைஸ்ன்னு சொல்லி எல்லாம் சரி பண்ணிடலாம். அவரும் உனக்காக அக்சப்ட் பண்ணிப்பார்” என்று ராஜேந்திரனின் இளைய மருமகள் சொல்ல. “சர்ப்ரைஸ் கதை எல்லாம் அவர்கிட்ட வேலைக்கு ஆகாது அண்ணி. சூப்பர். எனக்கு ரொம்ப சந்தோஷம், நான் பண்ணா என்ன, நீ தொழில் பண்ணா என்ன, இரண்டும் ஒண்ணுதான் நீயே பண்ணுன்னு என்கிட்ட கொடுத்துட்டு போயிடுவார்” என்றாள் தன்வி. “கண்டிப்பா தேசிகன் செய்வான்” என்றான் மனோகரும். “அவரா விருப்பபட்டு திரும்ப இதை கையில எடுக்கணும், அது ஒன்னு தான் வழி. வேற இல்லை” என்றார் ராஜேந்திரன். தன்விக்கும் அந்த எண்ணம் தான். ஆனாலும் பெரியப்பாவிடம் கேட்டால் ஏதேனும் வழி கிடைக்கும் என்ற சின்ன நம்பிக்கையும் பொய்த்து போனது. எல்லோருக்கும் அவரை நல்லா புரிய வைச்சிருக்கார். ஏனோ மெல்லிய புன்னகை பூத்தது. தேசிகன் ஏதோ முரளியை வம்பிழுத்தபடி, முகம் முழுக்க புன்னகையுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான். அதில் தன்னை போல் தன்விக்கும் புன்னகை கூடியது. “தேசிகன் பிளான் மட்டும் நடந்திருந்தா, நல்லாவே தொழில் பண்ணியிருப்பார்” என்று வாசுதேவன் சொல்ல, “அவர் படிப்புக்கு அந்த பிளான் பண்ணதே பெரிய விஷயம், என்னண்ணா?” என்று கேட்டாள் தன்வி. “என்ன சொல்ற நீ?” என்று வாசுதேவன் கேட்க, “என்னண்ணா. ப்ளஸ் டூ டிராப் அவுட் அவர், உங்களுக்கு தெரியாதா?” என்று தேசிகனை பார்த்தபடி அவனின் மனைவி கேட்டாள். “என்ன ப்ளஸ் டூ முடிக்கலையா?” என்று ஸ்ருதி அதிர, சதாசிவம் அப்படியா என்று முதலில் அண்ணனை தான் பார்த்தார். அவரிடம் சந்தேகம் வெளிப்படையாக தெரிய, மனிதருக்கு வாய் வேறு துறுதுறுத்தது. இப்போது தான் தொழில் பற்றி பேசி, எல்லார் பார்வையும் அவரை குற்றம் சாட்டி முடிந்திருந்தது. அதனாலே மனிதர் மிகவும் நிதானித்து, “ண்ணா” என்றார். “உங்க தம்பிகிட்ட நீங்க சொல்லலையா மாமா? சொல்லியிருப்பீங்க நினைச்சேன்” என்று தேசிகன் வேறு தோள்களை குலுக்கி, மாமனார் நெஞ்சத்தை உலுக்கினான். “என்னண்ணா. நீங்க தான் ஏதோ சொன்னீங்க?” என்று சதாசிவம் அண்ணனையே பார்த்தார். அவருக்கு தேசிகன் மருமகனாக வருவதே பிடிக்கவில்லை எனும் போது அவர் வேறெதையும் இந்த நொடி வரை விசாரித்திருக்கவில்லை. தந்தையின் டென்க்ஷனில், “ப்பா. நான் சும்மா சொன்னேன். அவர் டபுள் டிகிரி. பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட் முடிச்சிருக்கார்” என்றாள் தன்வி தானே. “என்னடா தன்வி” என்று சதாசிவம் மகளை கடிந்து கொண்டார். வெளிநாட்டில் மகளை படிக்க வைத்த மனிதருக்கு, மருமகன் படிக்கவில்லை என்றால் நெஞ்சம் வலிக்காதா? “சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் டென்சன் ஆவியாடா நீ?” என்று ராஜேந்திரன் தம்பியை கேட்க. ‘இது சின்ன விஷயமா?’ என்று அண்ணனிடம் கண்களால் சண்டையிட்டார் தம்பி. வாய் திறக்க அவருக்கு பயம். அப்புறம் என் வாயே என் கண்ட்ரோலுக்கு வராம எதாவது பேசி வைக்கும். எனக்கு தேவையா அது?’ சதாசிவம் உஷாராகிவிட்டார். தேசிகன் உதட்டுக்குள் புன்னகையை அடக்க, தன்வி அவனை கடுப்பாக பார்த்தாள். இவரை வம்பிழுக்க போய் என் அப்பா டென்சன் ஆனது தான் மிச்சம்! பெண் சலித்து கொண்டாள். சுதா வேறு மகளை தனியே அழைத்து சத்தம் போட்டார். “உன் அப்பா முன்னாடி எந்த விளையாட்டையும் வைச்சுக்காத. அப்புறம் விளையாட்டு வினையா போயிடும் பார்த்துக்கோ” என்று கண்டிக்க, “சரி, சரிம்மா” என்று தலையாட்டி கொண்டு வந்தாள். விருந்தும் தயாராகிவிட, குடும்பமாக அமர்ந்து உண்டனர். தன்வி கணவன் நன்றாக உண்கிறானா என்பதையே கவனித்து கொண்டிருக்க, “நீ சாப்பிடுடி” என்று அவளை உண்ண வைத்தான் தேசிகன். அதன் பின் பேச்சு, வீட்டுக்குள்ளே படம், என்று இரவு உணவு வரை கலகலப்பாகவே சென்றது. “கிளம்பலாமா?” என்று தன்வியிடம் ரகசியம் பேசினான் கணவன். “நைட் இங்க தங்கலையாங்க?” என்று தன்வி அதிர்ச்சியுடன் கேட்க, தேசிகன் அவளின் எதிர்பார்ப்பில் மௌனமாகிவிட்டான். மனைவி அறைக்கு வந்தவன், போன் பேசுவது, அறைக்குள் நடப்பது என்றே இருக்க, “இப்போ என்ன உங்களுக்கு?” என்று தன்வி அவன் முன் கைகட்டி நின்றாள். “நம்ம வீட்டுக்கு போகணும்” என்றான் தேசிகன். “வாங்க போலாம்” என்று அவன் கை பிடித்து கொண்டாள் பெண். “ஏன் கிளம்புறீங்க, என்னாச்சு?” என்ற வீட்டினர் கேள்விகளை எல்லாம் தன்வி சமாளித்து கொள்ள, தேசிகன் முகம் மலர, எல்லோருக்கும் சொல்லி கொண்டு மனைவியுடன் அவன் வீடு வந்துவிட்டான். முரளி மதிய உணவும் முடியவும், வெளியே சுற்ற கிளம்பியிருந்தான். இரவு சதாசிவம் வீட்டில் தான் தங்குவான் என்பதால், தேசிகன் கதவை மூடி கொண்டு அறைக்கு வந்தான். “இப்போ சந்தோஷமா?” என்று தன்வி கேட்க, “ரொம்ப சந்தோஷம்” என்று மனைவியின் இடையில் கை கொடுத்து வளைத்தான். “நோ. நோ. நீங்க என் இடுப்பை மட்டும் பிடிக்காதீங்க” என்று தன்வி அலறி அவன் கையில் இருந்து வெளியே வர, “ஏன்? அப்படி என்ன பண்ணிட்டேனாம்?” என்று தேசிகன் திரும்ப அவளை நெருங்கினான். “நோங்க. என்னால சேரி கட்டவே முடியலை” “அதான் ஏன் சேரி கட்டலை நீ?” என்று தேசிகன் திமிறிய மனைவியை தன் கைக்குள் கொண்டு வந்திருந்தான். “கட்டினா எல்லோருக்கும், எல்லாம் தெரிஞ்சிடும் பரவாயில்லையா?” “அப்படி என்ன தெரிஞ்சிடும். காட்டு நீ?” என்று அவளின் டாப்ஸ்ஸை தூக்கியவன், கண்கள் விரிந்து தான் போனது. அவளின் இடையில் அங்கங்கு சிவந்து போயிருந்தது. “ரொம்ப படுத்திட்டேனாடி” என்று விரலால் வருட, “ரொம்பவே” என்றாள் மனைவி அவன் விரலை விலக்கியபடி. “ச்சு. இப்போ என்ன உனக்கு?” என்றவன் விரல்கள் அவன் கட்டுப்பாட்டையும் மீறி அவள் இடையை இறுக்கமாக பற்றிக்கொண்டது. “ஏங்க?” என்று பெண் திணறி, கணவனோடு ஒன்ற, “மருந்து போட்டு விடுறேண்டி” என்று அவளை கட்டிலுக்கு கொண்டு வந்தவன், சமத்தாக சிவந்த இடங்களுக்கு வைத்தியம் செய்தான். “முடிஞ்சது” என்று தேசிகன் நிமிரவும், தன்வியின் மூச்சு காற்று சீரானது. “இரு ஊதி விடுறேன்” என்று திரும்ப இடைக்கு போக, “இல்லை, இல்லை வேண்டாம்” என்று கணவன் தலை முடியை பிடித்து கொண்டாள். “என்னடி இப்போ. விடு என்னை” “உங்களை நம்ப மாட்டேன்” என்று தன்வி அவன் நெஞ்சிலே குத்த, “உனக்கு பிடிச்ச இடத்தை நீயே வலிக்க வைப்பியா” என்று வியாக்கினம் பேசினான். “நீங்க பண்ணதை விட, இது ஒன்னுமில்லை” என்று தன்வி சிலுப்ப, “அவ்வளவு தானே. காயம் பண்ணிடு” என்று அவன் டிஷர்ட்டை உருவிவிட்டான். தன்விக்கு புரிந்து போனது. வேறேதோ திட்டம் போட்டுவிட்டான் கேடி. “இந்த ஆட்டத்துக்கே நான் வரலை. எனக்கு தூக்கம் வருது” என்று முழுதும் போர்த்தி கொண்டாள் பெண். “அதெப்படி. நானும் நீயும் சமம். உனக்கு வலிக்க வைச்ச மாதிரி நீ எனக்கும் வலிக்க வைச்சே ஆகணும்” என்றவன், போர்வையோடு அவளின் டாப்ஸையும் காணாமல் போக செய்திருந்தான். “அச்சோ” என்று தன்வி அலறி, கணவனையே கட்டி கொள்ள, அது இன்னும் இம்சையாகி போனது. “என்ன பண்றீங்க நீங்க” என்று தன்வி தவிக்க, “இனிதான் பண்ண போறேன்டி” என்று மனைவியை அணைத்து கொண்டவன் கண்களில் அவ்வளவு விஷமம். “திரும்ப என் இடுப்புக்கு போனீங்க அவ்வளவு தான்” என்று தன்வி சொல்ல, “ச்சே, இன்னைக்கு எனக்கு பிடிச்ச வேற இடம்” என்று அவளின் கழுத்தில் முகம் புதைத்துவிட்டான். தேசிகன் உதடுகள் அவனின் வெப்பத்தை, மனைவியின் உடலில் பாய்ச்ச, தன்விக்கு மொத்தமும் நடுங்கி போனது. “இல்லை நீங்க இடுப்புக்கே போங்க” என்று தன்வி வேகமாக சொல்ல, “ம்ஹூம் மாட்டேன். என்னை ரொம்ப சோதிச்சதை நான் என்னன்னு பார்க்க வேண்டாமா?” என்றவன் அடுத்தடுத்த செயலில், தன்வி இயல்பிற்கே வரவே அடுத்த நாள் ஆகிவிட்டது.