மிகப்பெரிய மண்டபம் என்பதால், அதனுடனான தோட்டமும் பெரியதாகவே இருந்தது.
தேசிகன் ஏற்பாடு செய்திருந்த உணவும் தன்விக்கு மிகவும் பிடித்து போனது. “உங்களுக்கு பிடிச்சது எது?” என்று கேட்டு அவனுக்கு அதை வைத்து, தானும் அதை சுவைத்து என்று அவர்களுக்கான நேரம் இனிமையாகவே சென்றது.
இறுதியாக இனிப்பு வர, தன்வி அவனுக்கு தானே ஊட்டினாள்.
“வாவ். என்ன அதிசயம் இது” என்றபடி தேசிகன் வாங்கி கொள்ள,
“ஹேய். என்னடி. நான் சொல்லியிருக்கேன் இல்லை. தேங்க்ஸ் எப்படி சொல்லணும்ன்னு” தேசிகன் கடுப்பாக,
“அப்புறம் எதுக்கு வாய் திறக்குறீங்க” என்று திரும்ப இனிப்பு வாங்கியவனை கிண்டலடித்தாள் தன்வி.
“இது போனஸ். வீட்டுக்கு போனவுடனே எனக்கு தேங்க்ஸ் சொல்ற பார்த்துக்கோ” என்றான் கணவன் அதிகாரமாக.
“ஏன் வீட்டுக்கு? இங்கேயே சொல்றேன்” என்று தன்வி அருகில் வர,
“நோ, நோ. நம்ம ரூம்ல தான் தேங்க்ஸ் சொல்லணும்” மனைவியை அப்படியே நிறுத்தினான் தேசிகன்.
‘புல்லா கட்டிப்பிடிக்க என்ன கேடித்தனம்’ தன்வி முனக,
“கிடைக்கிறதே அது ஒன்னு தாண்டி” என்று அவளை மேலிருந்து கீழாக கள்ள பார்வை பார்த்தான் தேசிகன்.
“பிராடு” என்று சிவந்த தன்வி அவனை அடிக்க போக,
“பொண்டாட்டிகிட்ட நல்லவனா இருந்து என்ன சாதிக்க போறேன். போடி” என்று அவளின் கையில் சிக்காமல் ஆட்டம் காட்டினான்.
தோட்டம், மண்டபம் என்று ஓட்டமாக ஓடி, தன்வியின் கையில் சிக்கியவனுக்கு, நன்றாகவே அடி விழுந்தது.
“போதும்டி. இருக்கிற கோவத்தை எல்லாம் மொத்தமா இறக்குற” என்று மனைவியை நிறுத்தினான் தேசிகன்.
தன்வியின் போன் ஒலிக்க, தேசிகன் குடிக்க தண்ணீர் எடுத்து வர சொன்னான்.
தேசிகனின் தம்பி அரவிந்தன் தான் அழைத்திருந்தவன், “எப்போ ஊருக்கு வரீங்க அண்ணி?” என்று கேட்டான்.
தேசிகன் அதுபற்றி எதுவும் சொல்லாததால், தன்வி டிக்கெட் பற்றி யோசிக்க, அவளின் மௌனத்தில், “நீங்க வந்தா தான் அண்ணன் வீட்டுக்கு வரணும்ன்னு அம்மா சொல்லிட்டாங்கண்ணி” என்றான் கொழுந்தன்.
தன்வி கணவனை உர்ரென பார்க்க, “என்ன? யாரு?” என்று உதட்டசைத்தான் தேசிகன்.
தன்வி அவனும் கேட்கும்படி செய்ய, “அண்ணா மேல இருக்கிற கோபத்தை வேற எப்படியும் காட்டுங்க. ஆனா நம்ம வீட்டுக்கு மட்டும் வந்துடுங்கண்ணி” என்றான் அவன் விடாமல்.
“வீட்டுக்கு வந்து அவரை அடிச்சா நீங்க சப்போர்டுக்கு வர மாட்டிங்களே?” என்று தன்வி வம்பிழுக்க,
“அண்ணனை அடிப்பீங்களா?” தம்பிக்கு அதிர்ச்சி.
தேசிகன், “ஏய் அதெல்லாம் அவன்கிட்ட சொல்லதடி” என்று மனைவியின் காதில் சொல்ல, தன் கை முட்டியில் அவனை இடித்து தள்ளிவிட்டவள், “ஏன் அடிக்க கூடாதா?” என்று கொழுந்தனிடம் கேட்டாள்.
“ஆஹா. வலிக்குதுடி” என்று வயிற்றை பிடித்து கொண்டு தேசிகன் மெல்லிய குரலில் அலற,
அரவிந்தோ, “அது. அது உங்களுக்குள்ள. அம்மாக்காக வீட்டுக்கு வாங்கண்ணி” என்றான்.
“அத்தைக்காக கண்டிப்பா வருவேன்” என்று தன்வி சொல்ல,
“நன்றி, நன்றி அண்ணி. உங்களுக்கு டிக்கெட் பார்க்கவா? இல்லை அண்ணா பார்த்துப்பான். நான் அவன்கிட்ட பேசுறேன்” என்று அரவிந்தன் மகிழ்ச்சியுடன் போனை வைக்க,
“ஏங்க டிக்கெட் போட்டீங்களா இல்லையா? உங்க தம்பி தான் கூப்பிடுறார் போல. போன் எடுங்க” என்றாள் தன்வி.
தேசிகனோ மனைவியின் வருடலில் உலகையே மறந்தவன் போல் நிற்க, “நடிக்காதீங்க. போன் எடுங்க” என்று அதட்டினாள் மனைவி.
“உனக்கெங்கே அதெல்லாம் தெரிய போகுது” என்று சலித்து போன் எடுத்தவன், தம்பியிடம் பேசினான்.
“வரோம்டா. ஆஹ்ன் உன் அண்ணிகிட்ட கோவப்படாம வரேன். வைடா பெரிய மனுஷா” என்று போனை வைத்தான் தேசிகன்.
“கிளம்பலாமா மேடம்”
“டிக்கெட்?” என்று தன்வி கேட்க,
“அதை நான் பார்த்துகிறேன். எல்லாம் அவன் பக்கத்துல தான் இருந்திருப்பாங்க. கிளம்பிட்டீங்களா? எப்போ வருவீங்க? இன்னும் காணலைன்னு இனி தொடர்ந்து போன் வரும்” தேசிகன் சொல்ல,
“ஹேய் வெய்ட். ஏதோ அத்தை நான் வந்தா தான் நீங்க வீட்டுக்குள்ள வரணும் சொல்லிட்டீங்களாமே? அதனால தான் என்னை விடாம கூட்டிட்டு போறீங்களா என்ன?” என்று வம்பு சண்டைக்கு நின்றாள் தன்வி.
“என்னோட ஹாப் பொண்டாட்டியே உனக்கு அப்படி தோணுதா என்ன?” என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்டினான் தேசிகன்.
“அதென்ன ஹாப் பொண்டாட்டி?”
“இந்த சண்டை மட்டும் தான் நமக்குள்ள நல்லா நடக்குது. கட்டில் சண்டையும் இதே மாதிரி பிளாக்பஸ்டர் ஆயிடுச்சுன்னா நீ என்னோட முழு பொண்டாட்டியா ப்ரொமோட் ஆகிடுவ. அப்புறமென்ன சக்ஸஸ் மீட் வைச்சு கொண்டாடிலாம். என்ன சொல்ற?” என்று குறும்பாக கண்ணடித்தான் நல்லவன்.
“ச்சீ. நீங்களும், உங்க பேச்சும்” தன்வி முகம் சுருக்க,
“ஹேய் என்னடி? ஏன் நான் கட்டில் சண்டையை பிளாக்பஸ்டர் ஆக்க மாட்டேனா என்ன? வாய்ப்பு கொடுத்து பாரு”
“காட் உங்களோட”
“முதல்ல கால்ஷீட் கொடுடி. இந்த வாரம், அடுத்த வாரம், இல்லையா? அடுத்த மாசம்? அதுக்கு மேல முடியாது. நீ சீக்கிரம் கொடுத்தே ஆகணும்”
“நீங்க வாங்க முதல்ல. நாம கிளம்பலாம்” என்று தன்வி அவன் கைப்பற்றி இழுக்க,
“உன்னை கால்ஷீட் கொடுக்க வைச்சே தீருவேன்” என்றபடி கார் எடுத்தான்.
“ஏங்க ஏர்போர்ட் அந்த பக்கம் போகணும்?” தன்வி வழி மாறியதில் சொல்ல,
“தெரியும்டி சென்னை சிங்காரி. நாம கார்லே தான் ஊருக்கு போக போறோம்” என்று அறிவித்தான்.
“ஐயோ. அவ்வளவு தூரம் எல்லாம் நான் மாட்டேன்ப்பா” என்று தன்வி அலற,
“நீ ஊருக்கு ரீச் ஆகும் போது, என்ன சீக்கிரம் வந்துட்டோம்ன்னு கேட்ப” என்றான் தேசிகன்.
“வேகமா போவீங்களா?”
“ம்ஹூம். என் பொண்டாட்டியை மயக்கியே, ஊருக்கு கூட்டிட்டு போயிடுவேன்”
“அதான் ஆல்ரெடி பண்ணியிருக்கீங்களே? மயக்க மருந்து கொடுத்து”
“ச்சு. அந்த மயக்கம் வேற. இப்போ புருஷன்கிட்ட மயங்கிறது வேற”
“சரி என் பொண்டாட்டிகிட்ட நான் மயங்கியே ஊருக்கு போறேன். விடு” என்றான் தேசிகன்.
“நீங்க மயங்கினா அப்புறம் கார் யாரு ஓட்டுறது?”
“உன்னை கொல்ல போறேண்டி. ரொமான்டிக்ன்னா, என்னன்னு கேட்ப போல” தேசிகன் காண்டாகிவிட்டான்.
“ஏதோ இப்போதான் நமக்கான நேரம் கிடைச்சிருக்கு. சந்தோஷமா இருந்துக்கலாம்ன்னு பார்த்தா விட மாட்டேங்கிற” என்று கணவன் எகிற,
“அதென்ன இப்போ? நாம நினைச்சா எல்லா நேரமும் நமக்கான நேரம் தான்” தன்வி வேகமாக சொன்னாள்.
“க்கும். நாம நினைச்சா இல்லைடி. உன் அப்பா நினைக்கணும். எந்த நேரம் அவரை விட பெரிய வில்லங்கத்தை கொண்டு வருவாருன்னே தெரியாது. அதுவரைக்கும் நமக்கான நேரம் தான். இப்போ நாம ரோட் டிராவல் பண்ண போறோம்” என்று முடிவாக சொல்லிவிட்டான் தேசிகன்.
“நான் சொல்ற பாட்டை எல்லாம் போட்டுட்டு வருவியாம். நாம பேசிட்டே ஊர் போய் சேருவோமாம்”
“அதுக்கெதுக்கு பாட்டு?” தன்வி கேட்க,
“இல்லை இது சரிவராது. உன்னை கட்டிபிடிச்சா தான் நீ அடங்குவ” என்று காரை ஓரமாக நிறுத்திவிட்டு, மனைவியை தன் மடிக்கு கொண்டு வந்து நன்றாகவே அணைத்து கொண்டான்.
“ஏங்க மூச்சு வாங்குது” என்று அவனின் இறுக்கத்தில் பெண் திணற,