அப்போது விக்ரம் கூறிய செய்தியை கேட்டவன் உள்ளம் கொதித்து போனது. ஆனாலும் தன் உள்ளத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்தாது குரலில் நிதானத்தையும் கை விடாது, “நீ என்ன செஞ்ச விக்ரம்…?’’ என்று கேட்டான். 

அங்கிருந்தோரின் அலைபேசியில் பதிவாகியிருந்த ஆர்கலியின் புகைப்படத்தை மீட்க முடியாத வகையில் அழித்துவிட்டு, அந்த வெளிநாட்டவனை கூடுதல் உதவிக்கு வந்திருந்த நவ்கர் நகர் காவலர்களிடம் ஒப்படைத்ததாக கூறினான். 

“ம்…! ஆள் எப்படியிருந்தான். ஏதாச்சும் ஸ்மெல் செய்ய முடிஞ்சதா…?’’ என்றான் அருண். “மேமை குறிவச்சி எதுவும் நடந்த மாதிரி தெரியல சார். இட்ஸ் நாட் ய ப்ளானுடு இன்சிடன்ட். ஜஸ்ட் ய ஆக்சிடண்டல் ஒன். அவனோட பிரண்ட் கூட அவன் போதையில இருக்குறதா சொன்னான். ஆனா எனக்கு ஆளைப் பார்த்தா தான் சரியா தோணல. சிங்கிள் ஹான்டா பவுன்சர்ஸ் ரிஸ்ட் போன் பிராக்சர் செஞ்சி இருக்கான்.’’ என்றான் விக்ரம் கவலையோடு. 

“சரி விடு. நான் பார்த்துகிறேன். வெளிய இந்த விஷயம் லீக் ஆக கூடாது. அதுக்கு என்ன செய்யணுமோ செஞ்சிடு. ஆரு அப்பார்ட்மென்ட் தான் போறேன். அப்பாவுக்கும் வருணுக்கு எதுவும் சொல்ல வேண்டாம். ஆரு சேப்னு மட்டும் அப்பாவுக்கு மெசேஜ் செஞ்சிடு.’’ என்றவன் முதலில் சென்றது நவ்கர் நகரின் காவல் நிலையத்திற்கு தான். 

உள்ளே நுழைந்தவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதுமே, விநாயக் அவனிடம் மரியாதை தொனியில் பேச தொடங்கினார். “அவனை நான் பார்க்கலாமா…?’’ என்று அருண் கேட்டதுமே, “கான்ஸ்டபிள்…’’ என்று குரல் கொடுத்தவர் ஒரு ஓரமாய் அமர்ந்திருந்த லூகாவை அழைத்து வர சொன்னார்.

அந்த இடம் சற்றே இருளில் இருந்ததால் அருண் முதலில் அவனை கவனிக்கவில்லை. தான் ஒரு காவல் நிலையத்தில் அமர்ந்து இருக்கிறோம் என்ற எந்த கவலையும் இல்லாது கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவன், இரு கைகளையும் தலைக்கு முட்டு கொடுத்து அண்ணாந்து பார்த்து விழிகளை மூடியிருந்தான். 

கான்ஸ்டபிள் லேசாக அவனை தட்ட, விழி திறந்து முறைத்த அவன் பசிய விழிகளை கண்ட அருணுக்கு சிலீர் என்றானது. “கம் தேர்…’’ என்று கான்ஸ்டபிள் முன்னே நடக்க, எழுந்து நின்றவனின் தோற்றத்தில் அருணுக்கு மூச்சு முட்ட தொடங்கியது. 

‘ப்ளடி ஹெல். இவன் என்ன இப்படி இருக்கான்..’ என்ற எண்ணம் மனதில் தோன்ற விழி எடுக்கமால் நடந்து வருபவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.  

அவன் வெளிப்புற தோற்றத்திலேயே அருண் மிரண்டிருக்க, அவனை நெருங்கிய லூகா, அவன் மீதிருந்த பார்வையை கொஞ்சமும் விலக்காது, “ஹாய்… மிஸ்டர் அருண். ஐயம் லூகா.’’ என்றதும் அப்படியே உறைந்து போனான். 

“உனக்கு எப்படி என் பேர் தெரியும்…’’ அவனுக்கு தமிழ் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை மறந்து இக்கட்டில் தாய் மொழி தன்னை மீறி வெளிவந்திருந்தது. அதற்கு அவன் பதில் சொல்லவில்லை. லேசான புன்னகையை மட்டுமே கொடுத்தான். 

அதற்கு மேல் அவனைப் பார்க்க வலுவின்றி அருண் வேகமாய் விநாயக்கின் புறம் திரும்பினான். அவனுக்கு புரியக் கூடாது என்பதற்காக ஹிந்தியில் தன் உரையாடலை தொடர்ந்தான். “யார் இவன்…! இவனைப் பத்தி ஏதாச்சும் டீடைல்ஸ் இருக்கா…?’’ என்றான் பதட்டமாய். 

அப்போது தான் அலைபேசியில் விக்ரம் பகிர்ந்தது நினைவிற்கு வந்தது. ‘இவனிடம் ஏதோ இல்லை எதுவுமே சரியில்லை.’ என்று தானும் மனதிற்குள் எண்ணிக் கொண்டான். 

விநாயக் அருணிடம், “சார்…! இவர் ஜஸ்ட் டூரிஸ்ட். போர் டேஸ் முன்னாடி தான் இந்தியாவுக்கு வந்து இருக்கார். பாஸ்போர்ட்ல இவர் நேடிவ் பிரான்ஸ்னு இருக்கு. நாளைக்கு மதியம் இவருக்கு ரிடர்ன் ப்ளைட் டிக்கெட் கூட புக்காகி இருக்கு. இவரோட பிரண்ட் ஜேம்சும் இவரும் நேத்து ஹைமால் கிளப்புக்கு போய் இருக்காங்க. அந்த கிளப் பத்தி தான் உங்களுக்கு தெரிஞ்சி இருக்குமே சார். லீகல் ப்ராதல் நடக்குற இடம்.மும்பைல எல்லா பப்லையும் அப்படித்தான் போலன்னு நினச்சி தான் உங்க சிஸ்டரை தெரியாம கிஸ் செஞ்சிட்டதா ஜேம்ஸ் வாக்கு மூலம் கொடுத்து இருக்கார். இனி என்ன செய்யலாம்னு நீங்க தான் சொல்லணும்.’’ என்றார் ஹிந்தியில். 

தன் அருகில் நின்று கொண்டிருந்த லூகாவை பக்க வாட்டில் பார்த்தவன், “இவன் எதுவும் பேசமாட்டானா…?’’ என்றான் கடுப்புடன். 

“சார் நாங்க அவர்கிட்ட பேச ட்ரை பண்ணும் போதே, அவருக்கு நம்ம ப்ரனவுன்சேசன் புரியாதுன்னு அவர் பிரண்ட் உள்ள வந்துட்டார்.’’ என்றார் விநாயக். 

“ஓ… சரி நான் போய் என் சிஸ்டரை பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்றேன். நீங்க அதுக்குள்ள பிரான்ஸ்ல இவன் யாரு. இவன் அடையாளம் என்ன…? எல்லாத்தையும் தோண்டி எடுத்து வையுங்க.’’ என்றவன் லூகாவை முறைத்துக் கொண்டே வேகமாய் அங்கிருந்து கிளம்பினான். 

இப்போது தங்கை எகிறி விட்டு செல்லவும், அவனை எல்லாம் சும்மா விட சொல்லக் கூடாது என்ற தகிப்பில் விநாயக்கிற்கு அழைத்தான். இவன் அழைப்பை ஏற்றதும், மறுபக்கம் விநாயக், “சார்…! மிஸ்டர் லூகாவை இன்டர் போல் ஆபிசர்ஸ் வந்து கூட்டிட்டு போயிட்டாங்க. எங்களுக்கே ஒன்னும் புரியல. சார்ஜ் ஷீட் எல்லாம் கேன்சல் செய்ய சொல்லிட்டாங்க. இந்த விசயத்தை பெருசு பண்ணாம நீங்க கடந்து போறது தான் நல்லதுன்னு எனக்கு தோணுது.’’ என்றார். 

“ஓ… தாங்க யூ மிஸ்டர் விநாயக்.’’ என்றவன் அத்தோடு அலைபேசியை அணைத்தான். ‘ஏன் இவனை இன்டர் போல் வந்து அழைத்து செல்ல வேண்டும்…?’ என்ற கேள்வி உள்ளுக்குள் அரித்தது.  

இப்போது அவனை ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் போய், இனி அவன் தன் தங்கையை எதுவும் செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்க, தலையை பற்றிக் கொண்டு இருக்கையில் அமர்ந்தான். 

தன் கோபத்தை எங்கு கொட்டுவது எனப் புரியாது அமர்ந்திருந்தவனிடம் வசமாக வந்து சிக்கினாள் சாரு. அவளை உறக்கம் அறவே அண்டவில்லை. கண்ணை மூடினால் பசிய நிற கண்கள் மின்ன, ஆருவை நோக்கி நடந்து வந்த லூகாவே அவள் கண் முன் தோன்றி படபடக்க வைத்தான். 

அவள் அறையில் குடிநீர் தீர்ந்திருக்க,  சமையலறையில்  இருக்கும் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து  நீரை எடுக்கலாம் என எண்ணியவள் தன் அறையிலிருந்து வெளியே வந்தாள். கதவு திறக்கும் ஒலியில் நிமிர்ந்து பார்த்த அருணின் கண்களில் பட்டது சாரு தான். 

‘இவன் இன்னும் போகவில்லையா…?’ என்ற பாவனையை கண்களில் காட்டி சாரு விழிக்க, “வா… இங்க…’’ என்றான் கடுமையான குரலில் டெசிபலை குறைந்து. 

சாரு நடுங்கிக் கொண்டே அருகில் வர, “உனக்கு எத்தனைவாட்டி சொல்லியிருக்கேன். ஆரு எங்க வெளிய போனாலும் முதல்ல எனக்கு இன்பார்ம் செய்யணும்னு. பிரண்ட்ஸ் அவளுக்கு தானே சர்ப்ரைஸ்னு சொல்லியிருக்க மாட்டாங்க. உனக்கு முன்னாடியே எங்க போகப் போறீங்கன்னு தெரிஞ்சி இருந்து இருக்கும் இல்ல. நீ ஏன் சொல்லல.’’ என்றான் குற்றம் சாட்டும் தொனியில். 

“அது வந்து… சார்… லேடில்ஸ் ஹால்னு சொன்னதால பிரச்சனை எதுவும் வராதுன்னு நம்பி தான் நான் எதுவும் சொல்லல. அவளோட பாடிகார்ட்ஸ் கூட வந்தா பிரண்ட்ஸ் அன் ஈசியா பீல் பண்ணுவாங்க.’’ என்று வார்த்தைகளால் தந்தியடித்து பதில் சொன்னாள். 

“என்னது…! பிரண்ட்ஸ் அன் ஈசியா பீல் பண்ணுவாங்களா…? உன்னோட சின்ன அலட்சியம் இன்னைக்கு ஆருவை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு தெரியுமா…? யாருன்னே தெரியாதா ஆம்பிள்ளை தொட்டு முத்தம் கொடுத்தா எப்படி இருக்கும் தெரியுமா…?’’ என்று பேசிக் கொண்டே அவளை நெருங்கியிருந்தான் அருண். 

அவன் எப்போதும் போல மிரட்டிக் கொண்டிருக்கிறான் என்று பவ்யமாக நின்று கொண்டிருந்தாள் சாரு. மிக அருகில் அவளை நெருங்கியவன், இடைபற்றி அவளை தன்னோடு இழுத்து அணைத்து, அவள் இதழ்களின் அருகே தன் மூச்சின் வெப்பம் உராய நின்றான்.  

முதலில் திகைத்து நின்றாலும் சாரு, பின் அவனிடமிருந்து விடுபட முயன்றாள். அதற்குண்டான வெகுமனை அருண் அழுத்திப் பிடித்திருந்த அவளின் இடைக்கு கொடுத்தான். திமிறி முடியாது, வலியின் பிரதிபலிப்பாய் அவள் கண்களில் இரு நீர் துளி திரள அதன் பின்பே அருண் தன் பிடியை தளர்த்தினான். 

அவள் விழிகளில் திரண்ட நீரோடு அவனை புரியாது பார்க்க, “ஆப்ட்ரால் நீ ஒரு ட்ரைவரோட பொண்ணு. உன்னை நான் நெருங்கி தான் வந்தேன். அதுக்கே உனக்கு இப்படி வலிச்சா என் தங்கச்சிக்கு எப்படி வலிச்சி இருக்கும். இனி ஒரு முறை அவ விசயத்துல ஏதாச்சும் தப்பா நடந்தது… தொலச்சிருவேன் ராஸ்கல். பொண்ணுன்னு தான் இதோட விடுறேன். அப்படியே மூஞ்ச சோகமா வச்சி என் தங்கச்சி முன்னாடி சீன் கிரியேட் செஞ்சிட்டு இருந்த…! இந்த அருணோட இன்னொரு முகத்தை காட்ட வேண்டி வரும். நீங்க அன் ஈசியா பீல் செய்ய கூடாதுன்னு பர்த்டே அதுவுமா அவளை எவ்ளோ அன் ஈசியா  பீல் செய்ய வச்சி இருக்கீங்க. இது இதோட முடியணும்னு கடவுளை வேண்டிக்கோ. ஏதாச்சும் தப்பா நடந்தது… அதுக்கு பதில் சொல்லப் போற ஆள் நீயா தான் இருப்ப…’’ என்று அவளிடம் கத்தியவன், கதவை திறந்து கொண்டு எதிரேயிருந்த தன் குடியிருப்பை நோக்கி நடந்தான். 

   

அவன் வருவான்.