சதாசிவம் புரியாமல் பார்க்க, “சென்னையில இவங்களோட ஆபிஸ் ஓபன் பண்ண போறாங்க. அதுக்காக நம்ம பேங்கை தான் அப்ரோச் பண்ணியிருக்காங்கஎன்றார்.

ஓஹ்மாமனாருக்கு இது புது தகவல். ஏன் எங்ககிட்ட சொல்லலை? யாரோ சொல்லி நாங்க தெரிஞ்சுக்கணுமா

உங்க வேலை எல்லாம் எந்தளவுல இருக்கு?” என்று தேசிகனிடம் கேட்டார் அவர்.

ஆல்மோஸ்ட் முடியுற ஸ்டேஜ் தான் சார்என்று தேசிகன் பதிலளிக்க,

அதே கட்டிடம் தானே? என்ன சொல்றாங்க?” என்று மேலும் கேட்டார்.

அதே தான் சார். ரேட் கொஞ்சம் அதிகம். அதுல

விலை பத்தி விட்டுடுங்க சார். மிஸ்டர் சதாசிவத்தோட மருமகனா போயிட்டீங்க. என்னவா இருந்தாலும் எங்க சைட்ல இருந்து நாங்க முடிச்சு கொடுக்கிறோம்என்றார் அவர் இடையிட்டு.

முழுதாக கேட்காமல் இதென்ன? தேசிகனுக்கு அவரின் இந்த அணுகுமுறை ஒப்பவில்லை

என்ன சார். நான் சொல்றது சரி தானே. எங்க பேங்கோட மதிப்புமிக்க கஸ்டமர் நீங்க. உங்க மருமகனுக்கு நாங்க  செய்ய மாட்டோமா?” 

லோன் எவ்வளவுஎன்று சதாசிவம் தேசிகனிடம் கேட்காமல், அவரிடம் கேட்க

அவர் இரண்டிலக்க கோடியை சொன்னவர், ஏரியா ஒர்த் தான் என்றார்

கட்டிடத்துல போய் அவ்வளவு ஏன் போடணும்?” என்று மாமனார் கேட்க,

அங்க இத்தனை கிரவுண்ட் இடமும் இருக்குஎன்றான் தேசிகன்.

ஆமா சார். நல்ல பெரிய இடம். சிட்டியில இந்த மாதிரி இடத்தை உங்க மருமகன் எப்படி கண்டிப்பிச்சார் தெரியலை. சட்டுன்னு அடிச்சு தூக்கிட்டார்என்றார் அந்த வங்கியாள்.

சதாசிவம் அமைதியாக இருக்க, “என்ன சார் உங்களுக்கு பிடிக்கலையா?” என்று கேட்க,

நான் சொல்றதுக்கு என்ன இருக்கு சார். அவரோட பணம், அவரோட ரிஸ்க்என்றுவிட்டார் மாமனார்.

இதை தனியாக சொல்லியிருந்தால் தேசிகன் கண்டு கொண்டிருந்திருக்கவே மாட்டான். ஆனால் மூன்றாம் மனிதர் முன் சொன்னது அவன் பொறுமையை வெகுவாக சோதித்தது.

தன்வி ஹாலுக்குள் வர, தேசிகன் வீட்டு இளைஞர்கள் அவளை பிடித்து கொண்டனர்.

இங்கு மாமனார், மருமகனிடம் சூடு ஏற ஆரம்பித்திருந்தது.

என்ன சார் இப்படி சொல்றீங்க? உங்க மருமகன்?”

சார். நான் இதைப்பத்தி அவர்கிட்ட பேசிக்கிறேன். நீங்க சாப்பிட்டீங்களா?” என்று தேசிகன் வங்கியாளிடம் கேட்டான்.

ஆச்சு சார்என்றவர், “நீங்க இந்த லோன் பத்தி எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க. அப்போதான் நாங்க மேற்கொண்டு ஏதும் பண்ண முடியும்என்றார் சதாசிவத்திடம்.

சதாசிவத்திற்கு அந்த நேரம் சுத்தமாக நிதானம் இல்லை. அதனாலே மனிதர், “இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? லோன் வாங்கிறது அவர், கொடுக்க போறது நீங்க? நான் எங்க இடையில வந்தேன்?” என்று கேட்டுவிட்டார்.

இல்லை தேவைப்பட்டா ஷூரிட்டி

வாட்? நான் ஏன் ஷூரிட்டி கொடுக்கணும்? உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கா?” என்று பாய்ந்துவிட்டார்.

சார்

இதை இத்தோட விடுறது பெட்டர்என்றான் தேசிகன் அழுத்தமாக.

சார். வாங்க நாம கிளம்பலாம்என்று வங்கியாளுடன் வந்த உதவியாளர் அவரை இழுத்து கொண்டு சென்றார்.

என்ன? இதெல்லாம் தான் உன் பிளானா? பொண்ணை கட்டிக்கிட்டு, பணத்தையும் அடிச்சுட்டு போலாம்ன்னு பார்க்கிறியா?” என்று தேசிகனிடம் கொதித்தார் சதாசிவம்.

என்னடா அதிசயமா மாமனாரும், மருமகனும் ஒண்ணா இருக்காங்க? என்று உறவுகள் அடிக்கடி இவர்கள் பக்கமே பார்த்து கொண்டிருந்ததால், ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து எல்லாம் இவர்களை நெருங்கிவிட்டனர்.

தன்வி கணவனுக்கும், அப்பாவிற்கும் இடையில் வர, தேசிகன் அவளை ஒரு கையால் பிடித்து தன் பக்கம் நிற்க வைத்து கொண்டவன், “வார்த்தையை விடாதீங்கஎன்று மாமனாரிடம் எச்சரித்தான்.

என்ன? என்ன பண்ணிடுவ நீ? என்னை மிரட்டுறியா? நான் என்ன இல்லாததையா சொன்னேன்? பணத்துக்கு கணக்கு போட்டு தானே பேங்கரை விட்டு என்கிட்ட பேச சொன்ன நீ?” 

ஏங்க இதென்ன, கொஞ்சம் அமைதியா இருங்கஎன்று சுதா கணவரை கண்டிப்புடன் அதட்டி அடக்க

அவரோ திமிறி கொண்டு, “எனக்கு முதல்ல இருந்தே இவன் மேல நம்பிக்கை இல்லை. யார் கேட்டா என் பேச்சை? இத்தனை கோடி வேணும்ன்னு பேங்க் ஆளு வைச்சு என்கிட்ட பேசுறான். எவ்வளவு கேடித்தனம்

அப்படி எந்த அவசியமும் எனக்கில்லை. நீங்க இதுக்கு மேல ஒரு வார்த்தை பேச கூடாதுதேசிகன் கடினமாக சொன்னான்.

பேசினா என்ன பண்ணுவ? உன்னோட எண்ணமெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? என் பொண்ணை ஏன் விடாம கட்டிக்கிட்டன்னு நான் சொல்லவா? எனக்கு உன்னோட உண்மையான முகம் தெரிஞ்சிடுச்சு”

அப்படியென்ன உண்மை சொல்லுங்க கேட்போம்

உன் அம்மாக்காக தானே? அவங்க உன்னை மன்னிக்கணும்ன்னா என்ன வேணா செய்வேன்னு சொன்ன இல்லை

ஆமா சொன்னேன், அதுக்கென்ன இப்போ?”

பார்த்தியா தன்வி. நான் சொல்றது சரிதான் பாரு. அவன் உன்னை திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கிட்டது அவனோட அம்மாக்காக தான். குற்ற உணர்ச்சி, அது இதுன்னு நம்மகிட்ட எல்லாம் கதை விட்டிருக்கான்என்று மகளை அவனிடம் இருந்து பிரித்து தன்னிடம் நிறுத்தி கொண்டார்.

தன்விக்கு புதிதான இந்த செய்தியில், புரியா பாவனையுடன், அப்படியா என்று கணவனை பார்க்க, அவனோ இவளை நேர்பார்வை பார்த்து கொண்டிருந்தான்.

இங்க பாருங்க. இப்போ இந்த பேச்சு எல்லாம் வேண்டாம். ஏற்கனவே நீங்க அதிகம் பேசிட்டிங்க. போதும்என்றார் தேசிகனின் மாமா கோவமாக.

இருக்கிற உண்மையை சொன்னா அதிகம் பேசிட்டினா? ஏன் உங்க குட்டு எல்லாம் உடைஞ்சிடும்ன்னு பயமா உங்களுக்கு?”

இல்லை உங்கமேல நாங்க வைச்சிருக்கிற கொஞ்சநஞ்ச மரியாதையும் போயிட கூடாதுன்னு பார்க்கிறோம்என்றார் அவர்.

உன் மரியாதை யாருக்கு வேணும். நீங்க எல்லாம் திட்டம் போட்டு என் பொண்ணு வாழ்க்கையில விளையாடிருக்கீங்க. உங்களை எல்லாம் நான் சும்மா விட மாட்டேன்

தன்வி. நீ உன் வீட்டுக்காரரை கூட்டிட்டு கிளம்புஎன்று சுதா மகளை விரட்ட,

மனோகர் தேசிகன் கை பற்றி கொண்டு நடக்க பார்த்தான். தேசிகன் கால்களை அழுத்தமாக ஊன்றியவன்தன்வியை பார்க்க அவளின் கையோ சதாசிவத்திடம் சிக்கிருந்தது.

என் பொண்ணு வர மாட்டா? நீ எனக்கு முதல்ல பதிலை சொல்லு

என்ன பதில் வேணும் இப்போ உங்களுக்கு?” தேசிகன் ஓர் முடிவோடு கை கட்டி நின்றுவிட்டான்.

உன் அம்மாவை சமாதானம் படுத்த என்ன வேணா செய்வேன் சொன்ன தானே நீ?”

ஆமா சொன்னேன். ஆனா அந்த என்ன வேணா உங்க பொண்ணு இல்லை. நீ. நீ தான்என்று அவர் முன் விரல் நீட்டி ஆக்ரோஷமாக சொன்னான்.

ஏங்கஎன்று தன்வி வர,

இவ்வளவு நேரம் நீ இடையில வரலை இல்லை. இப்போவும் அப்படியே இருக்கணும். போ. தள்ளி போ. போடிஎன்று கர்ஜிக்க, தன்வி முதன் முறையாக அவன் கோவத்தில் தானே கால்களை பின்னெடுத்துவிட்டாள்

உன் பொண்ணு இங்க பேச்சே இல்லை. உனக்கும், எனக்கும் தான் பேச்சு. பேசு, இப்போ என்ன பேசுறியோ பேசு

தம்பி நீங்க இப்படி எல்லாம் மரியாதை இல்லாம பேச கூடாதுஎன்று சுதா சொல்ல,

அத்தை. உங்களுக்கு தெரியாது. உங்க புருஷனால, நான் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கேன்னு உங்களுக்கு ஒரு சதவீதம் கூட ஐடியா இல்லை. ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. முழுசா ஒரு மாசம் இவரால நான் ஜெயிலுக்குள்ள இருந்திருக்கேன்

அதுவும் சாதாரணா கேஸ் இல்லை. மோசமான கேஸ்ல. ஜெயில் வாழ்க்கை எப்படி இருக்கும்ன்னாவது இந்த மனுஷனுக்கு தெரியுமா? என்னை மாதிரி ஒரு பையன், அத்தனை குற்றவாளிகளோட எப்படி இருந்திருப்பேன்? நைட்டும், பகலும் போராட்டத்தோடே இருந்திட்டு வந்திருக்கேன்.”

அப்போதான் ஆரம்பிச்ச என் தொழில், போட்ட என் பணம், எனக்கிருந்த நல்ல பேர், எங்க குடும்ப கௌரவம், மானம் மரியாதை எல்லாம் இவரால மொத்தமா போச்சு

உங்க பொண்ணுக்கு நான் தாலி கட்டின ஒரே காரணத்தினால, இந்த சொசைட்டில நான் எவ்வளவு அவமானபட்டிருக்கேன்னு உங்களால நினைச்சு கூட பார்க்க முடியாதுஎங்க வீட்டு பிள்ளைங்க காலேஜ்ல, ஸ்கூல்ல எந்தளவு பாதிக்கப்பட்டாங்கன்னு உங்களுக்கு எதாவது தெரியுமா?”

உன்னை யாரு என் மகளுக்கு கட்டாய தாலி கட்ட சொன்னா, அதுக்கான பலனை நீ அனுபவிச்சு தானே ஆகணும்?” சதாசிவம் எகிறினார்.

அனுபவிச்சுட்டேன். இன்னமும் அனுபவிச்சுட்டே தான் இருக்கேன். என்ன பார்க்கிற? ஆமா உன் முகத்தை பார்க்கிறதே எனக்கான தண்டனை தான்

சதாசிவம் ஒருமாதிரி நின்றுவிட, ” “ஏங்க ப்ளீஸ் போதும்தன்விக்கு கண்கள் கலங்கிவிட்டது.

என்னடி போதும். என்ன போதும். இவ்வளவு நடந்தும் நான் ஏன் உன் பின்னாடி வந்தேன்னு ஒரு நிமிஷமாவாவது நீ யோசிச்சு பார்த்திருப்பியா? சொல்லு. சொல்லுடிஎன்று அவளின் முகத்திற்கு நேரே கத்த

தன்விக்கு அவன் கோவத்தை கையாள தெரியாமல், முடியாமல் நடுங்கி நின்றுவிட்டாள்.

தேசிகா. போதும்யா. விடு. தன்வி பயப்படுறா பாருஎன்று தேசிகனின் மாமா தான் அவனை அணைத்து கட்டுப்படுத்த.

என்னை பார்த்து இவளுக்கு பயமா? அவங்கப்பாவை பேசுறேன்னு மேடம்க்கு தாங்கலை

தேசிகா. விடு சாமி

அவங்கப்பா கை பிடிச்சுட்டு நிக்கிறா? அப்போ நான் யாராம் அவளுக்கு?”

ஏய் உன்னை தான் சொல்லு. நான் யார் உனக்கு? சொல்லுடி” 

தேசிகா. ப்ளீஸ் உன்னை நீ கண்ட்ரோல் பண்ணுமனோகர் அவனிடம் கேட்டுக்கொண்டு நிற்க,

வாய் திறக்க மாட்ட இல்லை. நான் யாரு உனக்குன்னு சொல்ல மாட்ட இல்லை. சொல்லாத. சொல்லதடி. தேசிகன் தான் உனக்கு எப்போவும் தேவையே இல்லையே!”

தேசிகன். என்ன இது? ப்ளீஸ்என்று தன்வி நடந்து கொண்டிருப்பதை கிரகிக்கவே முடியாமல் தவித்து கலங்கி போய் நிற்க,

என்னை வேணாம் சொன்னப்பறமும் நான் உன்னை கட்டிகிட்டேன் பார்த்தியா அதுதான் நான் பண்ண தப்பு. அதனால தான் இந்த மனுஷன் என்னை இவ்வளவு பேசுறார்? யாருக்கு வேணும் இவர் பணம்? நீ வேணும்ன்னு வந்தேன்டி. ஆனா. நீ. போடிஎன்று கையை அவளின் முகத்திற்கு நேரே வீசிவிட்டு சென்றான்.