“நாளை மறுநாள்.. நாள் நல்லா இருக்கு.. பிரிச்சு எழுதியாச்சு.. சைன் பண்ணி.. ரிஜிஸ்ட்டர் பண்ணிடலாம். டாகுமென்ட்ஸ் எல்லாம் சரி பார்த்திடு..” என்றான், நல்ல திடமான குரலில்.
சந்துரு.. ஷிவாவின் கண்களைப் பார்த்தான்.. அலட்சிய பார்வைதான்.. உதடுகளில் புன்னகை.. சந்துரு, விடாமல் பார்க்க.. எதோ சோகம்.. இழுத்து வைத்த புன்னகைதான் அது என புரிகிறது அவனுக்கு. லேகாவின் நினைவு இருக்கிறது என சந்துரு எண்ணிக் கொண்டான். அதற்காகவே இந்த முடிவு என ஷிவாவின் பாவனை சொல்லாமல் சொல்லியது அவனிடம்.
ஷிவா புன்கைத்தான் “ஆல் தி பெஸ்ட்.. எனக்கு பிறகு, நீதான் அதிகமான ஷேர்ஸ் வைச்சிருக்க.. எனக்கிருக்கும் அதே ரைட்ஸ் உனக்கும் இருக்கு. எதுவாக இருந்தாலும் யாரையும் கேட்க்காமல்.. என்னிடம் நேராக கேளு.. பேசு. நாம இன்னமும் நீண்ட தூரம் போக போறோம்.. டிரஸ்ட் ஈச் அதர்.” என்றவன் எழுந்து சந்துருவை பார்த்து கை நீட்டினான் “போனது போகட்டும். இனி நல்லாதாக எல்லாம் நடக்கட்டும்.” என்றான்.. நிறைந்த மனதோடு.. அதனால் விளைந்த புன்னகையோடும்.
சந்துரு ஷிவாவின் கைகளை பற்றிக் கொண்டான்.. கண்களில் லேசான நீர் படலம்.. நிதானத்தோடு.. “தேங்க்ஸ் போர் டிரஸ்ட்டிங் மீ. அம்மாவின் சொத்து.. உரிமை.. இதை விடகூடாதுன்னு நினைச்சேன். நானாக ஏதும் கேட்கவில்லை.. தாத்தாவாக கொடுப்பதை எப்படி விடுவது. ம்.. அதான், கொஞ்சம் லேகாவை யோசிக்காமல் எதையோ யோசித்து என்னமோ நடந்திடுச்சி” என்றான்.
ஷிவா சந்துருவின் கைகள் மேல் தன் மற்றொரு கையை வைத்து அழுத்தி.. “அப்படியெல்லாம் இல்லை சந்துரு. நீ நிறைய யோசிச்சிருக்க.. நாங்கதான் எதையும் யோசிக்கலை. அஹ..” என்றான்.
பற்றிய கைகளில் இருவரும் இருக்கத்தை கூட்டினர்.
“ விடு..” என ஷிவா மீண்டான் “எனக்கும் நாளைக்கு தொழிலில் பலம் வேண்டுமே.. தாத்தா அதை யோசித்துதான் ஏற்பாடு செய்திருப்பார் ஷேகர்.. கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். ஓகே.. இட்ஸ் நாட் டூ லேட். லெட்ஸ் ஸ்டார்ட் டூகேதர்..” என்றான் திடமாக.
சந்துரு புன்னகையோடு.. ஷிவாவின் கைகளை பார்த்துக் கொண்டே மெதுவாக தன் விரல்களை தளர்த்தினான்.. ஷிவா புன்னகை மாறாமல்.. மீண்டும் ஒருமுறை.. சந்துருவின் கைகளை நம்பிக்கையாக அழுத்தி.. விடுவித்தான்.
அடுத்து என்ன செய்வது என இருவருக்கும் தெரியவில்லை.. இரண்டு நொடிகள் அமர்ந்திருந்தனர் அப்படியே.
சுந்தரம் “சந்தோஷம் ப்பா.. இப்படியே இரேண்டுபேரும்.. சேர்ந்து தொழில் பண்ணுங்க.. பிரச்சனைகள் வரும்தான். பேசி தீர்த்துக்கங்க. எல்லாம் சரியாகிடும்.. சரி சாப்பிட போகலாமா.. வெளிய வெயிட் பண்றாக” என்றார்.
சந்துரு ஷிவா சுந்தரம் க்ரிஷ் வக்கீல் இருவர் என அருவரும் உண்பதற்கு சென்றனர். சந்துரு ஷிவா இருவரும் பேசிக் கொள்ளவில்லை. மற்றபடி உரையாடல் நிகழ்ந்தது.. எல்லோரோடும்.
வடிவேலு, மதியமே தங்களுடைய.. பீச் ஹவுஸ் சென்றுவிட்டார்.. மனைவியிடம் அழைத்து பேசியிருந்தார்.. ஷிவாவின் செயல்கள் குறித்து.. ‘நம்ம பையன் இப்படி ஏமாறுவான் என தெரியாமல் போய்விட்டது.. அப்படியே தூக்கி கொடுத்துவிட்டான்’ என வருத்தம் கோவம்.. எரிச்சல் என எதிர்மறை எண்ணங்கள் கலந்த உணர்வில் பேசிக் கொண்டிருந்தார்.
வசந்திக்கும் ‘மகன் இப்படி மாறுவான் என எதிர்பார்த்திருக்கவில்லை. லேகாவை திருமணம் செய்துக் கொள்ள சொல்லி.. தான்தான் அவனிடம் பேசினேன். இப்போது அவளுக்காக.. இந்த முடிவா’ என கணவனிடம் அவரும் புலம்பினார்.
வடிவேலுவிற்கு.. ஒருவகையில் தெரியும்.. லேகாவை திருமணம் செய்யாவிட்டால்.. சந்துரு.. இப்படி அமைதியாக இருந்திருக்க மாட்டான் என அவருக்கு தெரிகிறது புரிகிறது. லேகாவினால்தான்.. மகன் வேலவனில் இப்போதும் தலைவனாக இருக்க முடிகிறது என தெரியும் அவருக்கு. ஆனாலும்.. முழுவதையும் மகன் வாங்கிக் கொள்ளவில்லை என ஆதங்கம்.
அஹ.. ஆசை என்பது வரைமுறைக்கு உற்பட்டவை. நமது சக்திக்கும்.. கட்டுபாட்டிற்கும்.. எண்ண அலைகளுக்கும்.. நடுவே கட்டமைக்கபடுபவை. தேவையான முற்சியும் பயிற்ச்சியும் இருந்தால் கிடைக்கும். ஆனால், பேராசை என்பது இதற்கு முற்றிலும் முரணானவை.. எல்லாம் எனது சொந்தமாக வேண்டும்.. என கட்டமைக்கப்படும்.. முயற்சிகள்.. பயிற்சிகள். அதனால், நம் கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகளும் நடக்கலாம்.. இது போல.
வசந்தி ஷிவாவின் வீடு வந்துவிட்டனர், இரவே.
ஷிவா நேரமாக வீடு வந்துவிட்டான்தான். ஒருமாதிரி.. நிதானமான சிந்தனையில் இருந்தான்.. நாளை நடைபெற வேண்டிய.. பதிவு. அதை அடுத்து.. ஷேகரை, இந்த கார் தொழிலில் அறிமுகம் செய்வது. அடுத்து லேகாவிடம் எப்படியாவது நேரில் சென்று பேசிவிடுவது.. என கோர்வையாக தன் சிந்தனையை கட்டமைத்துக் கொண்டிருந்தான்.
வேலை செய்பவர் சூப் கொண்டு வந்து கொடுத்தார்.. ஷிவா அதை ஊதி ஊதி பொறுமையாக குடித்துக் கொண்டே அவளோடு அமர்ந்து அன்று பார்த்த.. ஹாரார் படத்தினை இன்றுதான்.. கவனம் வைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
வசந்தி வந்தார்.
“வா ம்மா..” என்றான்.
மகனுக்கு அப்போதே புரிந்துவிட்டது.. அம்மா வந்த நோக்கம்.. டிவியை ஆப் செய்துவிட்டு அமர்ந்தான்.
வசந்தி “என்ன டா செய்து வைத்திருக்க.. உனக்கு அந்த லேகாவை கல்யாணம் செய்து வைத்தே.. எல்லா ஷேர்ரினையும் உன் பேரில் வாங்கிக்க வேண்டிதான். அதையே காரணமா வைச்சி.. இப்படி எல்லாவற்றையும் கொடுத்திட்டு வந்திருக்க..” என தொடங்கி தன் பேச்சினால் மகனை வாட்டிக் கொண்டிருந்தார். லேகாவை பற்றி பேச்சுகளும்தான் அதிகமாகியது. ‘அவளுக்காகத்தான் இப்படி நம் தொழிலை அவனிடம் கொடுக்கிறாயா?’ என கேள்வி கேட்டு நின்றார்.
ஷிவா “அம்மா.. நான் கொடுக்கலை.. தாத்தா கொடுத்துவிட்டார். நான் லேகாவை திருமணம் செய்த காரணத்தினால்.. 5% வாங்கிக் கொண்டிருக்கிறேன்.. புரிந்துக்கொள்ளுங்க. நான் அவளை திருமணம் செய்ததால்தான் இது கிடைத்தது.. இதைத்தானே நாம் திட்டமிட்டோம்.. இப்போதும் என்ன ஆகிற்று அப்படியேதானே நடந்திருக்கு” என.. விளக்கினான்.
அவருக்கு புரியவில்லை.. ஷிவாவின் கையிலிருந்து கொடுத்துவிட்டதாகவே குற்றம் சொன்னார்.
ஷிவா “அம்மா.. லேகா என் வைப் ம்மா.. சந்துரு என் மச்சினான்.. எனக்கு எதிராக என்றும் திரும்பமாட்டான். நான்தான் இப்போதும் சிட்பண்ட்டினை நிர்வகிப்பேன். அவன் இதில் வரமாட்டான். புரிந்துக் கொள்ளுங்கள்.. எத்தனைமுறை சொல்லுவது. இந்த பேச்சு இத்தோடு போதும் நான் லேகாவை கூப்பிட போகிறேன். நீங்க ஏதும் பழசை பேசாமல் இருந்தால்தான்.. அவள் இங்கே நிம்மதியாக இருக்க முடியும்.. சொல்லிவிட்டேன். இத்தோடு எல்லாம் சரியாகிவிட்டது” என அப்போதே முடித்துக் கொள்ள சொல்லி பேசினான் மகன்.
வசந்திக்கு கோவம் தீரவில்லை. புலம்பிக் கொண்டே இருந்தார்.
ஷிவாவின் மனநிலை தெளிவாகவே இருந்தது.. அன்னையின் புலம்பல், தந்தையின் கோவம் எல்லாம் அவனை கொஞ்சம் வாட்டினாலும், மனையாளை தடைகள் இல்லாமல் நெருங்க.. போதுமான வழிகள் கிடைத்துவிட்டதாக உணர்ந்து.. மனதுள் சந்தோஷமாகவே இருந்தான்.
அடுத்த இரண்டுநாளில் ரிஜிஸ்டர் முடிந்தது. அபிஷியல் அன்னோன்ஸ்மென்ட் வேண்டும் என.. மீண்டும் ஷேர்ஹோல்டர்ஸ் மீட்டிங் நடந்தது.
வடிவேலு சுந்தரம்.. வெங்கடாசலத்தின் அக்கா கணவர்.. சந்துரு என்ற புதுவரவோடு மீட்டிங் தொடங்கியது. சந்த்ரஷேகர் பங்குதாராக சேர்ந்தான், வேலவன் சிட்பண்டில்.
அப்போதே சின்ன எலெக்ஷன் மூலம்.. ‘ஷிவபாலன்’ டிரக்ட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டான்.
வடிவேலு புன்னகையோடு.. மகனை வந்து கட்டிக் கொண்டார்.
எல்லோரும் ஷிவாவிற்கும் சந்துருவிற்கும் வாழ்த்துகள் சொல்லினர். சில லீகல் நடைமுறைகள் முடிந்தது. மீட்டிங் முடிந்தது.
சரியாக தீக்ஷி அழைத்தாள்.. கணவனுக்கு. அவனும் ஆவலோடு போனினை காதில் வைக்க.. தேன் வந்துதான் பாய்ந்தது “வாழ்த்துகள் சந்துரு சர்” என
அவளின் கணவன் “தேங்க்ஸ்.. மேடம்.” என சொல்லி அமைதியானான்.
இருவருக்கும் எதோ நிம்மதி.. ஷிவாவின் முடிவினை இருவரும் நம்பினர்.. யாருக்கும் பாதகமில்லாமல் அரவணைத்து போவதாக உணர்ந்தான் சந்துரு. செயல்களின் விளைவே நம்பிக்கை.. இப்போது நம்பிக்கை ஷிவாவின் மேல் வந்தது சந்த்ரஷேகருக்கு. லேகாவையும் விடமாட்டான்.. என நம்பிக்கை வந்தது.
தீக்ஷி “என்ன சத்தமேயில்லை..” என்றாள்.
“லேகாவிடம் சொல்லு.. ஷிவா டிரெக்டர் ஆகிவிட்டார் என.. சொல்லிவிடு” என்றான் மெதுவான குரலில். பின் “லஞ்ச்க்கு போறேன்.. அப்புறம் பேசுகிறேன்..” என சொல்லி வைத்தான்.
தீக்ஷி புன்னகையோடு கேட்டுக் கொண்டு அழைப்பினை துண்டித்தாள்.
வடிவேலு கிளம்பிவிட்டார் உடனேயே.
எல்லோருக்கும் பஃப்பே முறையில் லஞ்ச் நடந்தது. சந்துரு, க்ரிஷ் இருவரும் பேசிக் கொண்டே உண்டனர்.
ஷிவா, உணவு உண்டுக் கொண்டே.. தன் மனையாளின் புகைப்படத்தினை பார்த்துக் கொண்டிருந்தான். தானே அவளுக்கு அழைத்தான்.
லேகா கடையில் இருந்தாள்.
கணவன் ‘இத்தனை மாதங்களில் அழைக்கவேயில்லை.. இப்போது என்ன.. சந்துரு சொன்னது போல.. எல்லாம் முடிவாகிவிட்டதுதானே..’ என யோசனையோடு நின்றிருந்தாள்.
அழைப்பு ஓய்ந்து போனது.
ஷிவா செய்தி அனுப்பினான் “நான் டிரெக்டர்ராகி விட்டான்” என.
லேகா உடனே அந்த செய்தியை பார்த்தாள். மனது படபடவென அடித்துக் கொண்டது.. ஒருமுடிவோடு “வாழ்த்துகள். அஹ.. சீக்கிரமாக உங்க எண்ணம் நிறைவேறியதில் வாழ்த்துகள். உங்கள் நோக்கம் முடிந்தது.. இனி என்னை தொந்திரவு செய்ய வேண்டாம்.. சீக்கிரமாக டிவோர்ஸ் கொடுத்துவிடுங்கள்” என செய்தி அனுப்பினாள்.
ஷிவா, மனையாள் உடனே பதில் அனுப்பியதில்.. ஆர்வமாக பார்க்க.. அதிர்ந்து போனான். உணவு தொண்டையில் இறங்கவில்லை.. அப்படியே வைத்துவிட்டு.. தன் அறைக்கு வந்து சேர்ந்தான். கண்கள் சிவந்தது.. கைகள் நடுங்கும் போல.. இருந்தது. இறுக்கி மூடிக் கொண்டான் தன் கைகளை.