சந்துரு “சொல்லுங்க.. என்ன பண்ணனும்” என்றான்.. என்னமோ தான் தோற்றுவிட்டதை.. குத்தி காட்டுகிறானோ என எண்ணம் சந்த்ரஷேகருக்கு.
ஷிவா “நீங்க சொல்லுங்க முதலில்” என்றான், நிதானமாக.
சந்துரு, முடிவே செய்துக் கொண்டான் ஷிவா நம்மை கிண்டல் செய்கிறான் என.. சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டு “அஹ.. அதான் என்னால் 50 கோடி கொண்டு வர முடியலையே.. என் ஷேர்ஸ் எல்லாம் கொடுக்க வேண்டியதுதான்” என்றான்.. விரல்களால் டேபிளில் தாளாம் போட்டுக் கொண்டே. அவனால் இறங்கி போக முடியவில்லை.
ஷிவா புன்னகைத்தான்.
சந்துரு, எதையும் கணக்கில் எடுக்க கூடாது என ஒரு பேரு மூச்சு விட்டான்.. நிமிர்ந்து அமர்ந்தான்.. “லேகா..” என சொல்லி ஷிவாவை பார்த்தான்.
ஷிவா “ஷேகர்.. அது என்னுடைய.. எங்களின் விஷயம்.. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
“எப்போ.. இன்னும் எத்தனைநாள் ஆகும்.. அவ அதுக்குள்ள..” என சொல்லிக் கொண்டே எழுந்தவன்.. “அதையெல்லாம் நீங்க யோசிப்பீங்கன்னு நாங்க நினைக்க கூடாதுதான். அஹ.. கல்யாணமே இதற்காகத்தானே செய்தீங்க. இல்லையென்றால், இந்நேரம்.. நீ லேகாவை பார்த்திருப்பியா” என்றான், நக்கலாக.
ஷிவா நிதமாகவே இந்த வார்த்தைகளை உள்வாங்கினான்.. அப்படியே பதிலும் “ம்.. உண்மைதான். இந்த ஷேர்ஸ் இல்லை என்றால்.. லேகாவை நான் பார்த்திருக்க மாட்டேன்தான். என் வீட்டில் என்ன பார்க்கிறார்களோ அவர்களைத்தான் மணம் முடித்திருப்பேன்.. அஹ.. நாம் இப்படி பேச வேண்டியதே இல்லை. அஹ.. போதுமா.. என்ன என்ன.. இப்போ” என எழுந்தான் ஷிவா.
சந்துருவும் எழுந்தான்.. தலையை கோதிக் கொண்டே இங்கும் அங்கும் நடந்தான்..
ஷிவா உனக்கும் அவளுக்கும் இதே வேலை.. முடிந்ததையே பேச வேண்டியது..” என முனகியவன்.. “எல்லாம் முடிந்து போன விஷயம். இதை பேசி பேசி நீ என்னை காயப்படுத்த நினைத்தாய் என்றால், வீண். நீ தோற்றுவிடுவாய்.” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.
இருவருக்கும் நடுவில் நிறைய முரண்கள்.. அத்தனையும் கொட்டிவிட இருவரும் தயாராகதான் நின்றனர்.. பலவகையில் மாறிமாறி கொட்டி திட்டிக் கொண்டனர். ஆனாலும் லேகா என்பவள் நினைவு வர.. கொஞ்சம் தங்களை தாங்களே அமைதியாக்கிக் கொண்டனர்.
அந்த நேரத்தில்.. ஷிவாவின் அட்வகேட் வந்தார்.
ஷிவா சந்துரு இருவரும் அடுத்து பேசிக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்தனர்.
காபி வந்தது.. மூவரும் பருகினர்.
சந்துருவின் அட்வகேட் வந்துவிடுவார் இன்னமும் சிறிது நேரத்தில்.
வடிவேலு வந்தார் மகனின் அறைக்கு, இப்போது.
சந்துருவை பார்த்து முறைத்துவிட்டு மகனிடம் “என்னப்பா.. இவன் சவால் விட்டது எல்லாம் காற்றோடு போச்சில்ல.. நாம் சொன்னதை செய்வான். ம்.. என்ன? லேட் ஆகிடுச்சி அவ்வளவுதானே” என்றார்.. வக்கிலீன் அருகே அமர்ந்துக் கொண்டு.
ஷிவா “அப்பா.. போதும்.” என்றான்.
சந்துரு “அஹ.. சாதாரணமானவர்கள் நாங்கள். எங்களுக்கு பையன் பொண்ணு வாழ்க்கை முக்கியம். அதை வைத்து விளையாட எங்க அம்மா சொல்லி தந்ததில்லை” என வடிவேலுவை முறைத்தவன் “அதனால், நீங்க கேட்பதை கொடுத்துதான் ஆகணும். ம்..” என்றான்.
வடிவேலு “போதும் நிறுத்து.. இதை நீ முன்னாடியே செய்திருந்தால்.. இப்படி உன் அக்கா அங்கே இருக்க வேண்டியதில்லை. அவள் அழகுபோல.. ஷிவாவோட வாழ்ந்திருக்கலாம். எல்லாம் நீங்களாக செய்துக் கொண்டது.” என்றார்.
ஷேகர் “என் வக்கீல் வந்ததும் பேசிக்கலாம்” என பொதுவாக சொல்லி எழுந்து சென்றுவிட்டான் வெளியே. தோற்று விட்டதாக உணர்ந்தான். லேகாவிற்காக எல்லாவற்றையும் கொடுக்க முடிவு செய்துவிட்டான் சந்துரு. ‘ஷிவாவின் ஈகோ.. இந்த கம்பெனி.’ அதில்லாமல் அவனால் சரியாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த சந்துரு.. அக்காவின் வாழ்க்கை சரியாக இருக்க.. ஷிவா சரியாக இருக்க வேண்டும் என எண்ணி.. முடிவெடுத்துக் கொண்டான்.. எல்லாவற்றையும் கொடுத்துவிட.. அதேநேரம்.. அவர்கள் தருகிறேன் என சொன்ன.. சொத்துக்களையும் ஏற்க விரும்பவில்லை.. அவன்.
ஷிவா தந்தையிடம் “அப்பா.. அவனை ஏன்ப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க. நீங்க லேகாவை பற்றியெல்லாம் இதில் இழுக்காதீங்க” என்றவன்.. வக்கிலிடமிருந்து.. அந்த கோப்புகளை வாங்கிக் கொண்டான் கவனமாக. இதை வடிவேலுவும் பார்த்தார்.
ஷிவா “நான் பார்த்துகிறேன் ப்பா.. சிட்பண்ட் என்கையில்தான் இருக்கும்.. நீங்க போங்க.. கிளம்புங்க.. பிரச்சனையை பெருசாக்காதீங்க.” என்றான் கோப்புகளை தன் கையில் வைத்துக் கொண்டு நிதானமாக.
வடிவேலுவிற்கு என்னமோ இருக்கிறது என புரிய.. சட்டென மகனின் கையிலிருந்து கோப்புகளை வாங்கிவிட்டார்.
“முடியாது டா..” என்றவர்.. அப்படியே அமர்ந்துக் கொண்டார் “நீ சொல்லும் வரை நகரமாட்டேன்” என்றார்.
சற்று நேரம் பொறுத்து பார்த்த ஷிவா எல்லாவற்றையும் சொன்னான்.
வடிவேலு கொந்தலளித்தார்.. “ஏன் டா.. இதுக்காடா.. இவ்வளவு கஷ்ட்டப்பட்டேன் நான்.. என் தம்பியை கூட உள்ளே விட்டதில்லை.. நான் வந்து ஒருநாள் அமர்ந்திதில்லை இந்த இடத்தில்.. உனக்குன்னு வைச்சிருந்தேன் டா.. இப்படி அந்த சந்துருவை உள்ளே விடுறீயே டா.. வேண்டாம் ஷிவா.. இதை நான் ஒத்துக்க மாட்டேன், கேஸ் போடுவேன் உனக்கு எதிராகவே..” என மிரட்டினார்.
வக்கீல் “அப்படி செய்தால்.. தொழில் பாதிக்கும், மற்றபடி உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை அங்கிள். நாம சந்துருவிற்கு.. எந்த சொத்துகளும் கொடுக்கலையே.. அந்த கார் சார்ஜிங் யூனிட்டில் ஷேர். அதேபோல.. சிட்பண்டில்.. 5% பங்கு வாங்கிட போறோம்.. நோ இஸ்ஷூஸ் சார். எப்போதும் ஷிவா மட்டுமே சேர்பர்சன்.” என்றார்.
வடிவேலு டென்ஷன் ஆகிவிட்டார் “அறிவுகெட்டவனே.. இது உன் சொத்துடா.. இதில் எங்க அப்பன்தான் பங்கு கொடுத்துட்டார்ன்னா.. நீயும் அவன்கிட்ட தூக்கி கொடுக்கிற.. இதில் கார் கம்பெனியில் பார்ட்னர் வேற.. டேய்..” என மேசை மீது குத்தினார்.. அதில் அவரின் தங்கசட்டமிட்ட மூக்குகண்ணாடி அதிர்ந்து அடங்கியது.
ஷிவா திடமாகவே நின்றான்.
வடிவேலு “இங்க பாரு.. இது ஞாயம் கிடையாது.. ஷிவா. இது நம்மோடது டா” என்றார்.
வக்கீல் எழுந்து வெளியே வந்துவிட்டார்.
ஷிவா எந்த விளக்கமும் சொல்லத் தயாராகயில்லை. தந்தை.. லேசாக தடுமாறத் தொடங்கவும்.. க்ரிஷ்’ஷை அழைத்தான் ஷிவா. அவரை வீட்டில் விட சொன்னான்.
வடிவேலுவை, தாங்கியபடியே க்ரிஷ் வந்தான் வெளியே.. அப்போது சந்துரு அவனின் வக்கீல் என இருவரும் வர.. வடிவேலு வெறி கொண்டார் சந்துருவின் சட்டையை பிடித்துவிட்டார் “ஏன் டா.. நீயும் உன் அக்காவும் திட்டம் போட்டு.. நினைச்சதை நடத்திகிட்டீங்கல்ல.. எப்படி எப்படி சாதரணமானவர்களா? சாத்தான்கள் டா.. நீங்க ரெண்டுபேரும். அப்படி என்ன டா செய்தீங்க என் பையனை.. இப்படி புத்தி கெட்டு போய் நிற்கிறான்..” என்றார் ஆத்திரமாக கண்கள் சிவக்க.
க்ரிஷ் அவரின் கைகளை விலக்க முற்பட்டு தோற்றான். ஆபீஸ் முழுவதும் வேடிக்கை பார்த்தது இதை. என்ன பேசுகிறார்கள் என தெரியவில்லை.. சிலருக்கு கேட்டிருக்கலாம்.. ஆனால், கண்கள் பார்த்தது இந்த காட்சியை.
சந்துரு ஒருவார்த்தை பேசவில்லை.. அவரின் உணர்வுகளை ஏதும் சொல்லவில்லை.. ‘ஆனந்தமாக இருந்தவருக்கு என்ன ஆகிற்று’ என யோசனைக்கு சென்றான். ஷிவா தந்தையிடம் சொல்லிய விவரம் இன்னமும் சந்துருவிற்கு தெரியாதே.. அதனால் சின்ன குழப்பத்தில் இருந்தான்.
க்ரிஷ் வடிவேலுவின் கைகளை விலக்கவிட்டான். சந்துரு தன் ஷர்ட்’டினை சரி செய்துக் கொண்டான் “மாமா.. ஹாஸ்ப்பிட்டல் போங்க முதலில்” என்றான்.
க்ரிஷ் அவரை கூட்டிக் கொண்டு போனான்.. தனதறையில் அமர வைத்து.. காபி கொடுத்தான். ஏசியை குறைத்து வைத்தான். வடிவேலுவின் சுவாசம் இன்னமும் கொதித்துக் கொண்டிருந்தது. க்ரிஷ்’ஷிடம் நிறைய பேசினார்.. கோவமாக.
க்ரிஷ், பொறுமையாக கேட்டுக் கொண்டான் எல்லாவற்றையும்.
அங்கே ஷிவாவின் அறை.
ஷிவாவின் வக்கீல்.. பேசத் தொடங்கினார் “சந்துரு.. நாங்க ஒரு முடிவுக்கு வந்திருக்கோம். இருதரப்பிற்கும் சாதகமாகதான் இருக்கும் இது. அதாவது தாத்தா உங்களுக்கு கொடுத்த 30% பங்குகளில் நாங்கள் 5% மட்டும் கேட்க்கிறோம். ஷிவா எப்போதுமே இதன் தலைவராக இருக்க விரும்புகிறார், அதற்காகத்தான்.” என்றார்.
சந்துரு ஏதும் பேசவில்லை. சந்துருவின் வக்கீல் “அதற்கு பதில்..” என தொடங்கினார்.
இப்போது சுந்தரம் வந்தார்.
ஷிவா காலையில் அழைத்து சொல்லியிருந்தான். சந்துரு நேற்று இரவே.. ஷிவா அழைத்து தன்னிடம் பேசியதும் சொல்லிவிட்டான் தன் மாமனாரிடம்.. ‘நாளை வாங்க போசலாம்’ என. அதனால் வந்துசேர்ந்தார். பொதுவான நலம் விசாரிப்புகள் நடந்தது.
மீண்டும் ஆரம்பமானது பேச்சுகள்.. இப்போது, ஷிவாவின் வக்கீல் “கார் சார்ஜிங் தொழிலில் சந்துருவை பங்குதாரராக சேர்த்துக் கொள்ளுகிறோம்.. சொல்ல போனால்.. ஷிவா அதில் ஸ்லீப்பிங் பார்ட்னர். அந்த தொழிலை வளர்க்க.. மேலும் மெருகூட்ட.. என எல்லா முடிவுகளையும் எடுக்கும் உரிமை சந்துருவிற்கு மட்டுமே.” என்றார்.
சந்துருவின் முகம் தெளிந்தது.
ஷிவா “உனக்கு எந்த சொத்துக்களும் தரவில்லை.. உன்னுடைய திறமையை பார்த்து.. இந்த முடிவு.. சரிதானே” என்றான்.
சந்துருவிற்கு, நிம்மதியானது.. ஆனாலும் “ம்.. லேகா..” என்றான்.
ஷிவா “நாம இப்போது.. இதை பற்றி மட்டும் பேசுவோம், ஷேகர். என்னை கொஞ்சம் நம்பு” என்றான் ஓய்ந்த சலித்த இறைந்த குரலில்.