கேஸ் முடிவுக்கு வந்த பிறகே சென்னை சிறிது சிறிதாக இயல்புக்கு திரும்பி கொண்டு இருந்தது. சுடர் மற்றும் தீபா இருவர் திருமணத்தையும் ஒன்றாக வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட ஆதியை கையில் பிடிக்க முடியவில்லை.
ரஞ்சனின் தந்தை மூர்த்தியுடன் சேர்ந்து கொண்டு அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டு இருந்தான். மூர்த்தியும் ஆதியை தன் மகனைப் போலத்தான் பார்த்தார். அதில் ஆதிக்கு மிகுந்த மகிழ்ச்சியும் கூட. சுடர் ஆதி திருமணத்தில் யாருக்கு சந்தோஷமோ இல்லையோ, நம் வேந்தனுக்கு மிகுந்த சந்தோஷம் அந்த சந்தோஷத்தில் பள்ளி முழுவதும் ஆதி தான் தன் அப்பா என்று தம்பட்டம் அடித்து கொண்டு இருந்தான்.
இதில் சுடர்தான் மிகவும் பாதிக்கப்பட்டாள். இதுவரை அவளுடன் பேசாத டீச்சர் கூட இவளைத் தேடி வந்து இவள் கதையைக் கேட்டு நின்றனர். இதுவே பழைய சுடர் என்றால் ஏதாவது பொய் சொல்லி சமாளித்திருப்பாள். ஆனால் இப்போ இருக்கும் சுடர் அவளை அவளாகவே ஏற்றுக்கொண்டாள். தவறுகள் செய்யாத நபர் உண்டோ என்று புரிந்து தெளிந்தவள். அதற்காக அனைவரிடமும் சென்று அவள் கதையைக் கூறவும் இல்லை. அவளுக்கு நெருக்கமான நபர்களுக்கு மட்டும் அவளைத் பற்றி சொல்லியிருந்தாள். அவர்களும் அவளை அவளாக ஏற்றுக்கொள்ள அது போதும் அவளுக்கு. மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை என்று ஒதுங்கிச் சென்றுவிடுவாள்.
தீபா பழையபடி அவள் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டாள். ஆனால் என்ன வித்தியாசம் என்றால், இப்போதெல்லாம் அவள் மாஸ்க் அணிவதில்லை. ஆபிஸிலும் அனைவரிடமும் இயல்பாகப் பழகத் தொடங்கி இருந்தாள். சிறிது சிறிதாகத் தன் கூட்டை விட்டு வெளியே வந்து கொண்டு இருக்கும் நிலையில் தான் ரஞ்சன் கேஸ் விஷயமாக வெளியூர் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டுச் புறப்பட்டது. கிளம்பி சென்றவன் முதலில் தினம் ஒரு கால், பின் சில மெசேஜ் என்று தீபாவுடன் மறவாது பேசுவான் . பினு நாட்கள் செல்ல செல்ல போன் செய்வதை நிறுத்தி மேசேஜ் மட்டும் செய்தான். இப்போது அதுவும் இன்றி கடந்த மூன்று நாட்களாக அவனிடம் இருந்து எந்த ஒரு மெசேஜும் வரவில்லை. கால் செய்தால் சுவிட்ச் ஆஃப் என்று வர, தீபா பயம் மீண்டும் அவளை ஆள ஆரம்பித்தது.
திருமண நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்க, அனைவரும் குமரன் கட்டிய அவன் வீட்டிற்கே சென்றுவிட்டனர். அங்கு சொந்தங்கள் அனைவரும் ஒன்று சேர மகிழ்ச்சி மட்டுமே சூழ்ந்திருந்தது. ஆனால் நம் தீபாவோ ரஞ்சன் பற்றி எதுவும் தெரியாமல் பதட்டத்துடனே இருந்தாள். அவள் பதட்டத்துடன் இருப்பதைப் பார்த்த சுடர், ஆதியை அழைத்து “இந்த ரஞ்சன் மாமா எங்கேதான் போனாங்க? மேரேஜ் அப்போ கூட கேஸ்னு போகணுமா என்ன?” “இதைத்தான் நான் மூர்த்தி அப்பா கிட்டயும் கேட்டேன். அதுக்கு அவரு என்ன சொன்னாரு தெரியுமா?” என்று சுடர் முகம் பார்க்க
“அப்படி என்ன சொன்னாரு?” என்று அவள் கேட்க
“அவ அவன் தங்கச்சி கல்யாணத்துக்கே ரெண்டு நாள் முன்னாடிதான் வந்தான். அதை நான் கேட்டு திட்டுனதுக்கு அவன் சொல்றான், “ப்பா நான் என் கல்யாணத்துக்கே இப்படித்தான் ப்பா வருவேன்” ன்னு சொல்லிட்டு போய்ட்டான். அதனால நீ பயப்படாத. கேஸ் முடிச்சிட்டு டைம்க்கு வந்துருவான்னு போய்ட்டாரு.“
இதைக் கேட்டு வாயைப் பிளந்த சுடர், “என் அக்கா எப்படி இவரைப் போய் லவ் பண்ணா? எனக்கு டவுட்டா இருக்கு.“ என்று யோசிக்க
அதற்கு ஆதி “இப்போ இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம்?“ என்று முறைக்க அதற்கு சுடர் “ஆமா, அதை அப்புறமா யோசிக்கிறேன். நீங்க ஃபர்ஸ்ட் யாரையாவது அனுப்பி ரஞ்சன் மாமா எங்கன்னு பாருங்க. அக்கா ரொம்ப ஃபீல் பண்றா.“
“சரிடி, நான் யாரையாவது விட்டு விசாரிச்சிட்டு சொல்றேன்.“ என்று சென்றுவிட்டான் ஆதி. இங்கு தீபவோ எதை எதையோ யோசித்தபடி வீட்டு வளாகத்தில் தனியாக அமர்ந்திருக்க, இவளைப் மாடியில் இருந்து பார்த்த குமரன் கீழே இறங்கி வந்து அவள் அருகே அமர்ந்தான்.
தீபா குமரனைப் பார்த்துவிட்டு நார்மலாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொள்ள முயல அதைப் பார்த்த குமரன்,
“எல்லாத்தையும் மனசுலயே வச்சிட்டு இருக்காத தீபா.“ என்று கடிந்துகொள்ள, தீபா என்ன சொல்ல என்று தெரியாமல் தலை கவிழ்ந்தாள். குமரன் தீபா இருவரும் அமர்ந்திருப்பதைப் பார்த்து சுடரும் அவர்களுடன் இணைந்தபடி தீபாவிடம் வேறு விஷயங்கள் பேசி அவளைத் திசை திருப்பிக்கொண்டிருந்தாள்.
அப்போது அவர்கள் வீட்டு முன்புறம் அந்தக் கருப்பு நிற எஸ்யூவி கார் வந்து நின்றது. அதிலிருந்து ரஞ்சன் இறங்க, அவனைப் பார்த்த மறு நிமிடம் அவனை நோக்கிச் செல்லத் துடித்தா கால்களை அடக்கியபடி முகத்தில் எதையும் காட்டாமல் அமைதியாக தீபா நிற்க அவளைப் பார்த்த ரஞ்சன், அவள் முகத்தை வைத்தே அவன் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள் என்று அறிந்துகொண்டவனாக அவளை நோக்கி மன்னிப்புக் கேட்கும் பார்வை ஒன்றை வீச, அதைக் கண்டுகொள்ளாத தீபா.
அவள் தலையைத் திருப்ப அப்போதுதான் அந்தக் காரில் இருந்து ஒரு பெண் இறங்கி நிற்பதை பார்த்தாள். அவள் சுடிதார் அணிந்து இடை வரை இருந்த முடியைப் பின்னலிட்டிருந்தாள். வயது 30 இருக்கும் ஆனால் உடல் என்னமோ மெலிந்துதான் இருந்தது. ஆனால் பார்க்க அழகாகவும் வட இந்தியப் பெண் என்று சொல்லும் வகையிலும் இருந்தாள்.
முதலில் அவளை கவனிக்காத தீபா, பின் அவள் ரஞ்சன் இறங்கிய காரில் இருந்து இறங்கவும் யார் என்பது போல உற்றுப் பார்த்தாள். அங்கு நின்ற குமரன் மற்றும் சுடர் கூட யார் இவர் என்றுதான் பார்த்தனர். அதுவும் அந்தப் பெண் அந்தக் காரில் இருந்து இறங்கிய தோற்றம் ஏதோதையோ பார்த்து பயந்து பயந்து இறங்கியவர் போல இருந்தது. கீழே இறங்கியதும் தான் போட்டிருந்த சால்வையை வேகமாகத் தலையில் போட்டு, கையில் இருந்த ஹேண்ட் பேக்கை இறுக்கிப் பிடித்துக்கொண்டு ரஞ்சன் அருகில் வந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தபடி இவர்களை நோக்கி திரும்பினாள்.
அப்போதுதான் எதிரில் இருக்கும் கேட்டுக்கு அந்தப் புறம் நிற்கும் மூவரையும் பார்த்தார். முதலில் இவர்களைப் பார்த்துப் பயந்து முகத்தை மறைத்துக்கொண்ட பின், திடீரென்று எதையோ நினைத்து மீண்டும் தலையை உயர்த்தி தீபாவை கண் இமைக்காமல் பார்த்தவர், வேகமாக அந்தக் கேட்டைத் திறந்தபடி தீபாவை நோக்கிச் சென்று அவளைக் கண்கள் கலங்கப் பார்த்தவர், மெதுவாக அவர் கைகளை எடுத்து மிக மெதுவாக தீபாவின் கன்னம் பற்றிக்கொண்டு “மாதவ் பாய் ஜேஸ்ஸே லக் ரஹி ஹோ “ என்று சொல்லிக்கொண்டு அவர் அழ தொடங்கி விட்டான்.
இதைப் பார்த்த சுடர், “யாரு இவங்க? என் அக்காவ பார்த்துட்டு ஏதோ கொச கொசன்னு பேசிட்டு அழுறாங்க“ என்று மனதில் எண்ணிக்கொண்டாள். குமரனோ, “யாரு இவங்க? ஆனா இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி ஃபீல் ஆகுதே“ என்று யோசித்தபடி நின்றான். அந்தப் பெண் அழுவதைப் பார்த்த ரஞ்சன் அவள் அருகே வந்து, “அழாதீங்க யசோதா“ என்று அவனிடம் இருந்த கைக்குட்டையை நீட்ட, இங்கு நடப்பது ஒன்றும் புரியாமல் பார்த்த தீபா ரஞ்சனைப் பார்த்து, “இவங்க யார்?“ என்பதை கண்கள் அசைத்துக் கேட்க, ரஞ்சன் அவன் கண்களாலேயே “வெயிட் பண்ணு “ என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணிற்கு குடிக்கத் தண்ணீர் கொடுத்து குடிக்க சொல்லி கொண்டு இருக்கும் போது, அங்கு மற்ற சொந்தங்களும் ரஞ்சனைப் பார்த்து விசாரிக்க வந்துவிட்டனர். அங்கு வந்த அனைவரையும் பார்த்த யசோதா பயந்து தீபா அருகே சென்று ஒளிந்தபடி, “தராவ்னா ஹே“ என்று சொல்ல.
அங்கு வந்த அனைவரும் புதிதாக அங்கு இருக்கும் யசோதாவைப் பார்த்துவிட்டு ரஞ்சனிடம் “யார் தம்பி அவங்க?” என்று கேட்க, அதற்கு அவன் “அவங்க கிட்டயே கேளுங்க, அவங்களே சொல்லுவாங்க” என்று சொல்ல, அதைக் கேட்ட சுடர்
“மாமா, வந்ததுல இருந்து புரியாமலே பேசுறாங்க. நீங்களே என்னன்னு சொல்லுங்க” என்று பேசும் சுடரை, தீபா பின் நின்றபடி எட்டிப் பார்த்த யசோதா, மீண்டும் கண்ணீர் விட, அதைப் பார்த்த குமரனுக்கு ஏனோ கோபம்தான் வந்தது.
“என்ன, இந்தப் பொண்ணு வந்ததுல இருந்து அழுதுட்டே இருக்கு?” என்று நினைத்தபடி முறைக்க, அவன் முக மாற்றத்தைப் பார்த்த யசோதா, மீண்டும் தீபா பின் மறைந்து மெல்லிய குரலில் “நான் யசோதா மாதவ் கிரிஷ்ணா தங்கச்சி” என்று பேசினால், அவள் பேசியது அங்கு அருகில் நின்று கொண்டிருந்த தீபா, குமரன், சுடர் இவர்களைத் தவிர வேறு யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. இதைப் பார்த்த ரஞ்சன்
“விட்டா இன்னைக்கு முழுக்க பேச விட மாட்டாங்க போல” என்று நினைத்தவன், யசோதா பக்கம் திரும்பி “யசோதா, நீங்க கொஞ்சம் தீபாவை விட்டுட்டு இங்க வந்து நின்னு பேசுங்க. அப்போதான் எல்லாருக்கும் கேட்கும்”
என்று அழைக்க அதற்கு யசோதா தலையை அசைத்து மறுத்தபடி தீபாவையும் அழைத்துக்கொண்டு நடந்தவர் திரும்பி சுடரை “நீயும் வரியா?” என்பதுபோல பார்க்க அதற்கு சுடர் அவர் சொல்ல வந்தது புரிந்தவளாக “நான் வரல” என்று தலையை அசைத்துவிட்டு குமரன் அருகே போய் நின்றுகொண்டாள்.
குமரனைப் பார்த்த யசோதா மீண்டும் பயந்து வேகமாக ரஞ்சன் சொன்ன இடத்தில் அனைவர் நடுவிலும் நின்றுகொண்டு தீபாவின் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்து சுடரைப் பார்த்து கொண்டே பேசத் தொடங்கினாள்.
“நான் யசோதா மாதவ் ஓட தங்கச்சி” என்று அனைவரின் முகத்தையும் ஒருமுறை சுற்றிப் பார்க்க அனைவரும் “சரி அதுக்கு என்ன?” என்பதுபோல குழப்பமாகப் பார்க்க அவர்கள் ஏன் இப்படி பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்தவளாக கண்களை மூடித் திறந்தபடி “தீபநிலா, சுடர் ஒளி இவங்க அப்பா தங்கச்சி” என்று தமிழ் வார்த்தையைத் தேடித் தேடிப் பேசினாள்.
அவள் சொன்னதைக் கேட்டு அங்கு இருந்த அனைவரும் குழம்பி நிற்க சுடர் “இதோ பாருங்க, நீங்க யாரோன்னு நினைச்சு பேசுறீங்க. எங்க அப்பா பேரு மாதவன், மாதவ் இல்லை” என்று சுடர் சொன்னதையே தான் அங்கு அனைவரும் சொல்ல யசோதா “இல்ல, உங்க அப்பா நிஜ நேம் மாதவ் கிருஷ்ணா. அவன் என் அண்ணா” என்று திக்கி தினறி சொன்னதைக் கேட்டு தீபா அவள் கையை யசோதாவிடம் இருந்து உருவிக்கொண்டு திகைத்துப் பார்த்தாள்.
அதை கேட்டு கொண்டு இருந்த குமரன் “ இதோ பாருங்க எக்க அக்கா அஸ்பண்ட் பேரு மாதவன் நீங்க தப்பா மாரி வந்துடிங்க இங்க மாதவ்ன்னு யாரும் இல்லை “ அதை கேட்டு யசோதா அவள் கையில் இருந்த பையில் இருந்து டைரி ஒன்றை எடுத்து தீபாவிடம் நீட்டியபடி “ நான் சொண்ணது க்ரைட் தான் இத படி அண்ணா ஓட டைரி “ என்று நீட்ட அதை கை நடுங்க தீபா வாங்கி திறந்தாள்.
அதன் முதல் பக்கத்தில் “ அன்புள்ள என் காதல் மனைவி குழலிக்கு மாதவன் என்கின்ற மாதவ் கிரிஷ்ணா எழுதி கொள்வது “…