ரஞ்சனை முறைத்த தீபா “உருட்டுன்னு சொல்லாத ரஞ்சன் அப்புறம் அவ்வளவுதான்“ “அய்யோ மாஸ்க் போடாமலே என் நிலா தீபாவ மாறுறாங்களே சூப்பர் சூப்பர் நல்ல இம்ப்ரூவ்மென்ட் தீப்ஸ்“ “ஆமா ரஞ்சன் எனக்கு ஒரு டவுட் உனக்கு தீபாவை பிடிக்குமா இல்லை நிலாவை பிடிக்குமா “ “ரெண்டும் நீதானடி அப்பறம் என்ன கேள்வி இது“ “ரெண்டும் நான் தான் ஆனா முன்னாடி நீ தீபா வேற நிலா வேறன்னு தானே குழம்பின“ “ஆமா, அது என்னமோ உண்மைதான் போலீஸா இருந்துட்டு இப்படி ரெண்டு பொண்ண ஒரே நேரத்துல சைட் அடிக்கிறேனேன்னு எப்படி கில்ட்டா இருந்துச்சு தெரியுமா“ “சரி கில்டா இருந்தது போதும் இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க“ “ரெண்டுல ஒன்னுலாம் சூஸ் பண்ண முடியாது ரெண்டும் எனக்குதான்“ “இதுவே ரெண்டு பேரும் வேறு வேறு பொண்ணா இருந்தா“ “அப்பவும் ரெண்டும் எனக்குதான் இந்த சைட் நிலா அந்த சைட் தீபான்னு வாழ்ந்திருப்பேன், நல்லவேலை அப்படி எதுவும் நடக்கல“ என்று நெஞ்சில் கைவைக்க “போலீஸா இருந்துட்டு பேசுற பேச்ச பாரு“ என்று அவன் தோளில் அடிக்க அப்போது பார்த்து கதவு தட்டும் சத்தம் கேட்க அதை கேட்ட பிறகுதான் இருவருக்கும் வீட்டில் இருக்கும் நினைவே வந்தது அதை நினைத்து இருவரும் சிரித்தபடி வெளியே செல்ல அங்கு சுடர் கையில் காபி தட்டுடன் நின்றுகொண்டு இருந்தாள்.
அவளை பார்த்து சிரித்த ரஞ்சன் “தங்க்யூ சுடர்“ என்று காபியை எடுக்க “காப்பி கொடுத்ததுக் கெல்லாம் தேங்க்யூ சொல்வீங்களா? “ “தேங்க்யூ காபிக்கு இல்லை எனக்கு கால் பண்ணதுக்கு“ “அதுக்கு தேங்க்யூ மட்டும் பத்தாதே வேற வெயிட்டா நான் எதிர்பார்ப்பேனே மாமா“ “என்னது மாமாவா“
“ஆமா , என் அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா அப்போ மாமா தானே எனக்கு “ என்று சிரிக்க அவள் மகிழ்ச்சியைப் பார்த்து தீபாவும் சிரிக்க இவர்களைப் பார்த்த ரஞ்சன் “ எப்பவும் இப்படி சந்தோஷமா சிரிச்சிட்டே இருங்க, இப்போ நான் கிளம்புறேன் எனக்காக கீழே ஒரு ஜீவன் வெயிட் பண்ணுது “ என்று காப்பியை வேகமாக குடித்துவிட்டு வைக்க தீபா “ யாரு வெயிட் பண்ற ரஞ்சன் “ “ வேற யாரு நம்ம சிங்கம் தான் “ அதைக் கேட்டு தீபா அமைதியாக ரஞ்சனைப் பார்க்க ரஞ்சன் கண்களாலேயே நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு குமரனிடமும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.
அவன் கிளம்பியதும் குமரன் “ யாருமா அந்த சிங்கம் அவர் பேரைக் கேட்டதும் நீ ஏன் சோகமா ஆன “ “அது அவர் கூட வேலை பார்க்கிற போலீஸ் மாமா அப்புறம் நளினியோட ஹஸ்பண்ட் “ என்று சொன்னதும் குமரன் முகமும் மாற அதை பார்த்த தீபா “ ரொம்ப யோசிக்காதீங்க மாமா அவர் பார்த்துப்பார் நீங்க போய் நிலாக்கு சம்மந்தம்னு புனிதா சித்தி கிட்ட சொல்லுங்க “ என்று மகிழ்ச்சியுடன் அறைக்குள் சென்றுவிட்டாள். அன்று இரவு தீபா சமைப்பதாகச் சொல்லிவிட சுடர் அறையில் எதையோ யோசித்தபடி அமர்ந்து இருக்க அப்போது மெசேஜ் வந்த சத்தம் கேட்க அவள் போனை எடுத்துப் பார்த்தாள் அதில் ஆதி “ டுடே என் பேபிய பார்க்காம நாளே போகல” என்று அனுப்பி அதனுடன் ஒரு சோக இமோஜி ஒன்றையும் அனுப்பியிருக்க அதைப் பார்த்து என்ன பதில் அனுப்ப என்று தெரியாமல் அதைப் பார்த்தபடியே இருக்க அப்போது ஆதி அடுத்த மெசேஜ் ஒன்று அனுப்பி இருந்தான் “ பேப் என்ன பார்க்காம நீயும் என்ன மிஸ் பண்ணியா “ என்று ஹார்ட் ஒன்று அனுப்பி வைக்க அதன் பின் “ என் வாழ்வின் ஒளி நீயடி உன்னைக் காணாமல் என் நாள் ஒளி இழந்து போனதடி , அதை ஒளியூட்ட நாளை ஒளியாக வருவாயா எனைத்தேடி இப்படிக்கு என்னவளுக்காக காத்திருக்கும் உன்னவன் “ என்று அனுப்பிவிட்டு ஒரு சிரித்த ஸ்மைலியோடு “ குட் நைட் செல்லம் “ என்று அனுப்பி இருந்தான்.
அதை எல்லாம் படித்த சுடர் ஆதியை நினைத்து பயந்து தான் போனால். எங்கு இவள் வேண்டாம் என்று சொன்னதும் இவளை வற்புறுத்துவானோ என்று. இவ்வாறு அவள் யோசிக்கும்போது மகிழனிடம் இருந்து கால் வர அதை உடனே கட் செய்து வாட்சப் மெசேஜ் சென்று “சொல்லு மகி“ என்று அனுப்பி வைத்தாள். அதற்கு மகிழன் “ஏன் போன் கட் பண்ண சுடர்?“ என்று பதில் மெசேஜ் செய்ய அதற்கு சுடர் “அது வீட்டுல எல்லாரும் இருக்காங்க மகி.“ “வீட்டில் இருந்தா என்ன சுடர்? நீ இன்னும் நம்ம விஷயத்தை பத்தி சொல்லலயா.“ “அது மகி“ என்று தயங்கி பின் தீபாவை பெண் கேட்டு ரஞ்சன் வீட்டில் இருந்து கால் செய்ததை சொல்லி “அதான் சொல்ல முடியல. ஆனா மார்னிங் சொல்லிறேன் மகி.“ “சீக்கிரம் சொல்லு சுடர். நீ என் கூட இருந்தாதான் சேஃப். ஞாபகம் இருக்குல்ல?“ “இருக்கு மகி. நாளைக்கு மார்னிங் மாமா வந்ததும் பேசுறேன், சரியா?“ “ம்ம்ம், நீ சாப்டியா சுடர்?“ என்று சிறிது நேரம் நார்மலாக சாட் செய்துவிட்டு “குட் நைட் சுடர்“ என்று அவன் அனுப்பிய பின்தான் மூச்சே வந்தது சுடருக்கு. பின் மனதில்” வீட்டில் முதல்ல சொல்லணும். என்ன ஆனாலும் அப்புறம் பார்த்துக்கலாம்”, என்று எழுந்து சாப்பிட சென்றுவிட்டாள்.
மறுநாள் காலையும் விடிய சுடர் அனைத்து வேலையையும் முடித்து ஸ்கூலுக்குக் கிளம்பி குமரனுக்காக ஹாலில் அமர்ந்திருக்க வேந்தனைத் தீபா கிளப்பிக்கொண்டிருந்தாள். அப்போது சரியாக வேலை முடிந்து குமரன் உள்ளே வர அவனை அழைத்து ஹாலில் அமர வைத்த சுடர் தீபாவை அழைத்து ஒரு தயக்கத்துடன் “நான் வந்து மகிழனையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்“ என்று சுடர் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து எழுந்த தீபா
“ஏ லூசு என்ன சொல்ற அவனை மேரேஜ் பண்ணிக்கப் போறியா? அவன் உன்னை மயக்க மருந்து கொடுத்து ரேப் பண்ணவன்டி“ என்று கத்த சுடர் உடனே “நிலா ரேப்னு சொல்லாத அது ஒரு ஆக்சிடென்ட்“
“அதை நீ நம்பு நான் நம்ப மாட்டேன், ஆமா நீ எப்படி அவனை மன்னிச்ச? நேத்து வரை அவன் மேல கோபத்துலதான இருந்த?“ என்று தீபா கேட்டதற்கு நேற்று நடந்த அனைத்தையும் சொல்லி “அவர் எனக்காக அவங்க அப்பாவையே எதிர்த்து வராரு“
“அவன் அப்பன் பெரிய உத்தம பாரு இவ கஷ்டப்பட்டு எதிர்த்து வர அவனே ஒரு ஃப்ராடு. ஊர்ல இருக்க எல்லா தப்பையும் பண்ணிட்டு சுத்துறான் அவன விட்டு வந்த என்ன வராட்டி என்ன“
“அவர் அப்பா தான் கெட்டவரு நிலா அவர் இல்லை“ இதை பார்த்த குமரன் “ இவ்வளவு பிரச்சனை இருக்க வீட்டுக்கு நான் உன்னை எப்படி அனுப்பம்மா?“ “மாமா அவர் பார்த்துப்பாரு மாமா எனக்கு ஒன்னும் ஆகாது நம்புங்க“ “எனக்கு பயமா இருக்கே ம்மா . நேத்து வரை வில்லனா பார்த்த ஒருத்தனுக்கு நான் எப்படி உன்னைக் கொடுப்பேன் சுடர்?“ “மாமா அவர் நல்லவருதான் மாமா ஒரு வாய்ப்பு கொடுங்க மாமா“ என்று சுடர் கெஞ்சுவதை பார்த்த குமரன் “சரி உன் விருப்பம். ஆனா என் முழு மனச நான் சம்மதிக்கல“ அதை கேட்டு சுடர்
“மாமா“ என்று பார்க்க, அவளைப் பார்த்த குமரன், “ஆதியைப் பத்தி யோசிச்சியாம்மா?“ அவன் பெயரை கேட்டுத் தலைகுனிந்த சுடர், “இன்னைக்கு ஸ்கூல்ல போய் பேசுறேன் மாமா“ என்று தீபாவை பார்க்க, அவள் சுடரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொள்ள, சுடர் பெருமூச்சு ஒன்று விட்டபடி, “நான் ஸ்கூலுக்குக் கிளம்புறேன்“ என்று வேந்தனை அழைத்துக்கொண்டு சென்றாள்.
சுடர் சென்றதும் தீபா குமரனைப் பார்த்து, “ஆதி சார் பத்தி சுடர் ஏன் யோசிக்கணும் மாமா?“ என்று கேட்க, அதற்குக் குமரன், “அவன் சுடரைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டான்மா. சுடரும் ஓகேன்னு சொல்ற மாதிரிதான் இருந்துச்சு“ இதைக் கேட்டு தீபா, “சரியான லூசு உங்க அக்கா பொண்ணு. நிம்மதியான வாழ்க்கையை வேணாம்னு அவனைப் போய்க் கல்யாணம் பண்ணிக்கப் போறா பிசாசு“ என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டிக்கொண்டே சென்றுவிட்டாள்.
வேந்தனின் கையைப் பிடித்து நடந்துகொண்டு சுடர் பள்ளியை நோக்கி எதையோ யோசித்தபடியே செல்ல, வேந்தன் சுடர் முகத்தைப் பார்த்தபடியே வர, அதைச் சிறிது நேரம் கழித்தே கவனித்த சுடர், “என்னடா என்னை பார்த்துட்டே வர? ஏதாவது சொல்லணுமா?“
“ஆமாம்மா, நீங்க வந்து ரெண்டு நாள் முன்னாடி என் அப்பா என்கிட்ட சீக்கிரமா வரப்போறாருன்னு சொன்னீங்களே, எப்போ வருவாரும்மா?“ இதைக் கேட்டு அவன் தலையை ஆட்டிய சுடர், “சீக்கிரமாவே வந்துருவாரு உங்க அப்பா. இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணு“ என்று அவன் கன்னம் கிள்ளி, அவனை க்ளாஸ் சுக்கு அனுப்பி வைத்தாள்.
பின் ஸ்டாஃப் ரூமை நோக்கி நடந்தபடி சுடர் ஆதியைத் தேட, அவனைக் காணவில்லை. எப்போதும் சுடர் வரும் வரை பள்ளி வாயில் அருகிலேயே இருக்கும் ஆதி, இன்று அவள் கண்ணிலேயே படவில்லை என்றதும் அவளுக்குப் புரிந்து போனது தன் மாமா ஆதியிடம் அனைத்தையும் சொல்லிவிட்டார் என்று.
அதை எண்ணி ஒரு பெருமூச்சு ஒன்று விட்ட படி சுடர், ஸ்டாஃப் ரூமை நோக்கிச் சென்றாள். அதன் பின் பள்ளி முடியும் வரை ஆதியை அவளால் பார்க்க முடியாமல் போனது. பள்ளி முடிந்ததும் எப்பவும் போல பிரின்சிப்பல் ரூம் நோக்கி சுடர் வாணியுடன் செல்ல, வாணி “சுடர் மேம், உங்களுக்கு அந்த நியூஸ் வந்துச்சா?” “என்ன நியூஸ் மேம்?”
“அதான் நம்ம ஆதி சார் அவர் வேலையை விட்டுப் போகப் போறாராம் அந்த நியூஸ்.”
“ஏன் என்ன ஆச்சு அவருக்கு எதுக்கு வேலைய விட்டு போறாறு?” என்று அதிர்ந்து கேட்க, அதற்கு வாணி “உங்களுக்கு எதுவுமே தெரியாதா மேம்? நம்ம ஆதி சார் தான் இந்த ஸ்கூல் சேர்மேன்னு”
“சரி, அதுக்கு அவர் வேலையை விட்டுப் போறதுக்கும் என்ன சம்பந்தம் மேம்?”
“மேம், உங்களுக்குப் புரியலையா? முதல்ல சேர்மன் எதுக்கு பிரின்சிப்பலா இருக்கணும்? அப்படியே பிரின்சிப்பலா இருந்தாலும் மெயின் பிரான்ச்ல இல்லாம இங்க ஏன் இருக்கணும்?” “ஆமா, ஏன் இங்க இருக்கனும் “ என்று கேள்வியாக பார்க்க
“அதுவா இங்க கிட்ட வாங்க“ என்று சுடரை அருகில் அழைத்து “சார் இங்க வேலை பார்க்கிற யாரையோ லவ் பண்ணியிருப்பாரு போல . அந்த லவ் இப்போ பிரேக்கப் ஆயிருக்கும் போல அதான் திரும்பி மெயின் பிராஞ்சிக்கே போறாரு“ என்று சொல்லி முடிக்கும் முன் சுடர்
“இல்லை அப்படி எதுவும் இருக்காது“ என்று பதட்டமாகப் பேச “உங்களுக்கு ஒண்ணும் தெரியாது மேம். சார் கொஞ்ச நாள்ல டோட் பண்ணிங்கல. திடீர்னு சிரிக்கிறது, வேக்கபடுறதுன்னு சந்தோஷமா நேத்து வரை இருந்துட்டு, இன்னைக்கு அவரைப் பார்க்கணுமோ என்னவோ ரோபோ மாதிரி விரப்ப முகத்தை வச்சிட்டு ஒரு மாதிரி இருந்தாரு. பாவம் லவ் ஃபெயிலியர் போல.“ அதைக் கேட்ட சுடர் ஏதோ பேச வர, அதற்குள் ஆபீஸ் வந்துவிட, பேச வந்ததை விட்டுவிட்டு, ஆபீசில் ஆதியைத் தேடனால், அவனைக் அங்கு காணவில்லை.
அப்போதும் வாணி “பார்த்திங்கல எப்பவும் வேலை பார்த்துட்டு இருக்கிற சாரைக் இப்போ இங்க காணோம் பாருங்க. நான் சொன்னதுதான் கரெக்ட்“ என்று வெளியே செல்ல, சுடர் “மேம், நீங்க முன்னாடி போங்க. நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன்.“ என்று வாணியை அனுப்பிவிட்டு, பியூனை அழைத்து “சார் எங்க அண்ணா?“ என்று கேட்க
“ஓ.. அண்ணா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?“ “என்ன மேம் சொல்லுங்க.“ “கீழ என் பையன் இருப்பான். அவனை கொஞ்சம் இங்க கூட்டிட்டு வர்றீங்களா?“ அதற்கு அவரும் உடனே “சரி மேம்“ என்று சென்றுவிட, போனில் தீபாவை அழைத்து வேந்தனை கூட்டிச் செல்லச் சொல்லலாம் என்று போனை எடுக்க, அப்போது ஆதி சரியாக ஆபீசுக்குள் நுழைந்தான்.