விடியல் 51

காலை ஒன்பது மணி. சூரியன் அனைவரையும் எழுப்பி தன் வேலையைச் சரியாக செய்துகொண்டிருக்க, இங்கு குமரன் வீட்டில் மட்டும் நிலவோடு ஒளியும் சேர்ந்து உறங்க, அங்கு விடியலுக்கு இடமில்லாமல் போனதோ என்று கவிதையாக நம் தீபா சுடர் அவர்கள் நடுவில் வேந்தன் என்று மூவரும் விடிந்ததுகூட தெரியாமல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். எப்போதும் காலையில் எழுந்திருக்கும் பழக்கம் உள்ள சுடர் தீபா இருவருமே நேற்று இரவு வேந்தனுடன் பல வருடம் கழித்துப் போட்ட ஆட்டத்தின் விளைவாக விடிந்தும் அதை உணராமல் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர். இரவு வேளை முடிந்து காலை வந்த குமரனும் இவர்கள் தூங்குவதைக் கண்டு காலை டிபனுக்கு சட்னி மற்றும் இட்லி செய்து ஹாட்பாக்சில் வைத்துவிட்டுத் தூங்கிப்போனான்.

ஆதியோ ஸ்கூலில் இருந்தபடி சுடர் வேந்தன் வராததை பார்த்து என்னமோ ஏதோ என்று போனை எடுத்து சுடருக்கு கால் செய்தான். இங்கு சுடர் போனை அவள் அருகில் இருக்கும் மேஜையில் வைத்துவிட்டு நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள் . அப்போது பார்த்து போன் சத்தம் கேட்க தூக்கத்திலேயே போனை எடுத்து காதில் வைத்து “ஹலோ…” என்று பேச, போனின் அந்தப் பக்கம் இருந்த ஆதி அவளின் உளறலான குரலில் கேட்டு அவன் உதட்டைக் கடித்து சிரித்துக்கொண்டு மிக மெதுவாக “சுடர்..” என்று அழைக்க, அதற்கு “ம்ம்ம் ஆதி..” என்று தூக்கத்திலேயே பேசினாள். அதற்கு ஆதி “ தூங்கிட்டு இருக்கியா சுடர் ?” அதற்கும் அவள் “ம்ம்ம்” மட்டும் சொல்ல, “ஸ்கூலுக்கு வரலையா சுடர்?” அதற்கும் “ம்ம்ம்” தான் வந்தது. இதைக் கேட்ட ஆதி ஏதோ யோசித்து பின் “என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா சுடர்?” என்று கேட்க, அதற்கும் “ம்ம்ம்” என்று சொல்ல, அதைக் கேட்டு ஆதி சத்தமாக சிரிக்க அந்த சத்தத்தில் தான் அடித்துப் பிடித்து எழுந்தாள் சுடர்.

எழுந்த சுடருக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் திரு திருவென்று விழித்துப் பின் நினைவு வந்தவளாக தன் போனை எடுத்து காதில் வைக்க அங்கு ஆதி “ சுடர் சுடர் “ என்று அவளை அழைத்துக்கொண்டு இருக்க “ சாரி சார் கொஞ்சம் தூங்கிவிட்டேன் அண்ட் ஸ்கூலுக்கு வர முடியாது வேணும்னா மதியம் வரேன் சார் “ என்று கடகடவென்று ஒப்பிக்க சிரிப்பை நிறுத்திய ஆதி “ இல்லை பரவாயில்லை லீவ் எடுத்துக்கோ நான் பார்த்துக்கிறேன் “

“தாங்க்யூ சார் “ என்று போனை கட் செய்துவிட்டாள். தன் போனை ஒரு முறை பார்த்து ஆதி “ தூக்கத்துல மட்டும் ஆதின்னு கூப்பிடுவா “ என்று சிரித்தி கொண்டு அவன் தலைமுடியை கோதிக்கொண்டே சென்றுவிட்டான். இங்கு போனை கட் செய்த சுடர் அந்த போனை வைத்தே அவள் நெற்றியில் அடித்துக்கொண்டு “ சுடர் என்னடி பண்ணி வச்சிருக்க “ என்று அவள் கண்களை கைகளால் மூடி சிரித்துவிட்டு பின் போனை எடுத்து நேரம் பார்க்க அதில் சரவணனின் மெசேஜ் ஒரு காஃபி ஷாப் லொகேஷனோடு வந்திருப்பதைப் பார்த்து “அச்சோ இது வேற இருக்குல “ என்று ஒரு நிமிடம் அமர்ந்தபடி எதையோ யோசித்தவள் பின் வேந்தன் தீபா இருவரையும் எழுப்பி உணவு உண்ண வைத்துவிட்டு இவள் கிளம்பினாள். சுடர் கிளம்புவதைப் பார்த்த தீபா “ ரொம்ப லேட் ஆகிருச்சேடி ஸ்கூல்ல ஒன்னும் சொல்ல மாட்டாங்களா “ என்று சுடர் கிளம்புவதைப் பார்த்து கேட்க அதற்கு முழித்த சுடர் பின் “ டெஸ்ட் வைக்கணும் நிலா அதான் போறேன் “ என்று சம்பந்தம் இல்லாத பதிலை சொல்லிவிட்டு சென்றாள். சுடர் செல்வதை  பார்த்து “ இவ ரொம்ப ஸ்ட்ரிக்ட் போலயே ஸ்கூல்ல “ என்றுவிட்டு வேந்தனுடன் விளையாட சென்றுவிட்டாள்.

வெளியே வந்த சுடர் ஆட்டோவில் சரவணன் சொன்ன காபி ஷாப்க்குச் சென்று இறங்கி சுற்றிப் பார்த்தாள். அந்தக் கடையில் வெளியே ஒரு காரைத் தவிர வேறு எதுவும் இல்லை. உள்ளே மகிழன் மற்றும் சரவணன் மட்டும்தான் இருப்பார்கள் போலும் என்று எண்ணியபடி உள்ளே செல்ல, அந்த ஷாப்பே காலியாக இருந்தது. உள்ளே ஒரு மேஜையில் சரவணன் அவனுடன் மகிழன் தொப்பி கூலிங் கிளாஸ் சகிதமாக உட்கார்ந்து இவளைத்தான் பார்த்திருந்தான்.

அவனைப் பார்த்ததும் முகம் கோபத்துக்கு மாற, முகத்தைக் கடுமையாக வைத்தபடி அங்கு சென்று அமர்ந்தாள். சுடர் அமர்ந்ததும் ஒருவன் ஜூஸ் ஒன்று எடுத்து வந்து வைக்க, அதை உற்றுப் பார்த்த சுடர், “இதுல என்ன கலந்திருக்க?” என்று முறைத்தபடி அவனை நிமிர்ந்து பார்க்க,

 “நான் ஏன் கலக்கப் போறேன் சுடர்? அன்னைக்கு நடந்ததுகூட ஒரு ஆக்சிடென்ட்தான். புரிஞ்சுக்கோ சுடர்.”

 “ ஓ… ஆக்ஸிடெண்ட் சரி, சரி, முடிஞ்சதைப் பத்தி பேசி என்ன ஆகப் போகுது? இருந்தாலும் எனக்கு இந்த ஜூஸ் வேணாம். நீயே குடி” என்று நகர்த்தியபடி எதிரில் அமைதியாக இருந்த சரவணனைப் பார்த்து, “என்ன, வரச் சொல்லிட்டு இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் லாயர் சார்?” என்று திடீரென்று இவனிடம் திரும்பிய சுடரை பார்த்து ஒரு சிரிப்புடன்

“இல்லை, பேசிட்டு இருந்தீங்களேன்னு அமைதியா இருந்தேம்மா.” என்று மகிழனை பார்த்து பேச சொல்லி கண் காட்ட அய்யோ பாவம் அதை எதையும் கவனிக்காத மகிழன் சுடரை மட்டும் கண் எடுக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

“சுடர்னே பேசுங்க எனக்குப் எந்த பிரச்சனையும்  இல்லை லாயர் சார் “ என்று மகிழனைக் கண்டுகொள்ளாமல் சரவணனுடன் பேச, “ அன எனக்கு இருக்கும்மா இங்க ஒருத்தன் கடிச்சி வச்சிறுவான் “ என்று மனதில் நினைத்த சரவணன் “சுடர் கொஞ்சம் என் ஃபிரண்ட் சொல்றதையும் பொறுமையாகக் கேளுங்க. அவன் பக்கம் ஏதாவது நியாயம் இருக்கும்னு உங்களுக்குத் தோணலையா?“

 “ஓ… லாயர்னு ப்ரூவ் பண்றீங்களா?“ என்று நக்கலாகச் சிரித்து, “என்னை கூப்பிட்டுப் பேசணும்னு சொன்னது நீங்க. அவன் கூப்பிட்டு இருந்தா நான் வந்தே இருந்திருக்க மாட்டேன் அப்படி இருக்க நான் எப்படி இவ கூட பேச .“ இப்படி இவர்கள் பேசியதைக் கேட்டு எங்கே சுடர் நமக்கு இல்லையோ என்று பயந்த மகிழன், சுடர் கையைப் பிடித்து, “சுடர் நான் சொல்றத கொஞ்சம் கேளு. நான் வேணும்னு எதுவும் பண்ணல. சுடர் ப்ளீஸ் கொஞ்சம் கேளேன் “ எனக் கெஞ்ச, கடுப்பான சுடர் அவன் கைகளை உதறியபடி, “நானும் இப்படித்தானே அன்னைக்கு கெஞ்சினேன்? விளையாடாத மகிழன், பயமா இருக்குன்னு நீ கேட்டியா? இங்க உன்னைப் பார்த்து நீ பேசுறத கேட்டுப் போக வந்தேன்னு நினைச்சியா? அதுதான் இல்லை. நீ என்கிட்ட இப்படி கெஞ்சிறத கடைசியா ஒரு தடவை பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன். அதைப் பார்க்கவும் செஞ்சிட்டேன். சோ பாய்“

என்று அவன் தொட்ட கையை அங்கு இருந்த டிஷ்யூவால் துடைத்துவிட்டுச் செல்ல, ஒரு நிமிடம் சுடரைப் பார்த்து வியந்துபோய் மகிழன் நிற்க, சரவணன் தான் அவனை உலுக்கி நினைவுக்கு வர வைத்து, “டேய் நீ இப்போ போகலைன்னா சுடர் என்னைக்குமே உனக்கு இல்லடா“ என்று தள்ளிவிட, மகிழனும் சுதாரித்து  “சுடர் சுடர்…” என்று கத்தியபடி அவள் பின்னேயே சென்றான். அதற்குள் சுடர் மகிழனைத் திரும்பிப் பார்த்தபடி வேகமாக ரோட்டைப் பார்க்காமல் கிராஸ் செய்ய, அப்போது பார்த்து வேகமாக ஒரு கார் ஹாரன் அடித்தபடி சுடரை மோத வர, அதைப் பார்த்து ஓடி வந்து கண் இமைக்கும் நேரத்தில் சுடரைத் தள்ளிவிட்டு, அந்தக் மீது மகிழன் மோதி விட்டான். ரோட்டில் விழுந்த சுடர்க்கு அங்கு நடப்பதை உணரவே சிறுது நேரம் எடுத்தது. பின் அவளே உணர்வுக்கு வந்து மகிழனைப் பார்க்கும்போது அவன் உடல் முழுக்க காயங்களுடன் ரோட்டில் மயங்கி இருந்தான்.

அதைப் பார்த்து சுடர் பதற்றமாகி அவன் அருகே அவள் செல்லும் முன் சரவணன் அவனை நெறிங்கி இருந்தான். மகிழனைப் பார்த்த சரவணன் வேக வேகமாக அவனை யாரும் அடையாளம் காணும் முன் டிரைவர் உதவியுடன் தூக்கிக் காரில் அமர வைத்து இவன் ஏறி அமர சுடரும் காரின் முன்புறம் இவர்களுடன் ஏறிக்கொண்டாள். பின் கார் புயல் வேகத்தில் ஆஸ்பத்திரியை அடைய மகிழனை அட்மிட் செய்தனர். டாக்டரும் அவனுக்குச் சிகிச்சை ஆறம்பிக்க சுடர் சரவணன் இருவரும் பதற்றத்துடன் வெளியே நின்றுகொண்டு இருந்தார்கள்.

சிறுதி நேரம் களித்து டாக்டர் ஒருவர் வந்து “பெரிய இன்ஜூரிஸ் எதுவும் இல்லை மயக்கத்துல இருக்காங்க கண்முழிச்சதும் பார்க்கப் போகலாம் “ என்று சொன்ன பிறகு தான் இருவருக்கும் மூச்சே வந்தது. அதன் பின்னரே இருவரும் ஆஸ்பத்திரி சேரில் அமர சுடர் அவள் கண்களை மூடியபடி சேரில் தலை சாய்ந்து சோர்ந்து அமர்ந்திருந்தாள் அதை பார்த்த சரவணன் “சுடர் கொஞ்சம் உங்ககிட்ட பெர்சனலா பேசலாமா “ அதற்கு கண்களை மூடியபடியே “ம்ம்ம் “ என்று சுடர் சொல்ல “ஏன் மகிழனை வேண்டாம்னு சொல்றீங்க சுடர் “ அதைக் கேட்ட சுடர் கண்களைப் படக்கென்று திறந்து அவனை முறைக்க “ முறைக்காதீங்க எனக்குத் தெரியும் உங்களை ஏமாத்திட்டுப் போன கோபம் தானே அவன் என்கிட்ட எல்லாம் சொன்னான் அப்போ நீங்க கேக்கணும்னு நினைச்சத நான் அவன் கிட்ட கேட்டன் அதுக்கு அவன் என் கிட்ட சொன்னதைத்தான் இப்போ நான் உங்ககிட்ட சொல்றேன் “ என்று சிறிது நேரம் அமைதியாகி பின் சரவணன் பேசினான்

“அன்னைக்கு அவன் பர்த்டே அப்போ நீங்க வந்துட்டு போனது அவங்க அப்பாக்கு தெரிஞ்சிருச்சு, அவர் அதுக்கு மகிழனை கூப்பிட்டு ஒன்றுதான் சொன்னாராம் அந்தப் பொண்ணு உயிரோடு வாழணுமா இல்லை செத்து உன் கூட இருக்கணுமான்னு நீயே முடிவு பண்ணுன்னு,  அதைச் சொல்லிட்டு பதில் கூட எதிர்பார்க்காம போய்விட்டாராம் அப்போ தானு மகிழனுக்கு அவங்க அப்பா பத்தி முழுசா எதுவும் தெரியலன்னு புரிய வந்துச்சா. அப்போ கூட அதை அவன்  பெருசா எடுத்துக்கல்லையாம். ஆனா அதுக்கு அப்புறம்தான் அவர் முழு முகத்தையும் அவன் கிட்ட காட்டியிருக்காரு. மகிழனை ஆள் விட்டு வாட்ச் பண்ண வச்சிருக்காரு, அவன் போனை ஒட்டுக் கேட்டுருக்காறு அதைத் தெரிந்துதான் உங்களுக்கு கால், மெசேஜ் பன்றத எல்லாத்தையும் நிறுத்தியிருக்கான். அவங்க அப்பா எலெக்‌ஷன்க்கு நின்ன டைம் வேற. அவர் அவனைத் தனியாவே விடல்லை. இதையெல்லாம் மீறிதான் அன்னைக்கு உங்களைப் பார்க்க வந்தான். ஆனா அதையும் அவங்க அப்பா தெரிஞ்சிகிட்டு அவனை மிரட்டி உன்னை விட்டுப் பிரியல்லைன்னா உன்னைக் கொல்லச் சொல்லி ஆளை மகிழன் பின்னாடியே அனுப்பி வைத்திருக்காரு .

 அதுக்கு பயந்துதான் உன்னை திட்டி கண்டபடி பேசி உங்களை அனுப்பியிருக்கான் மகிழன். நீங்க திரும்பி அவனைப் பார்க்க வரக் கூடாதுன்னு மகிழன் நினைச்சான். அப்பறம் அவுங்க அப்பா கட்சில பிசி ஆகிட்ட அப்பறம் கூட திரும்பி உங்களைத் தேடி வந்துருக்கான் அன நீங்க அங்க இல்லை. அன்னைல இருந்து அவங்க அப்பாவைவிட பலமா ஆகணும், உங்களைக் கண்டுபிடிச்சி மேரேஜ் பண்ணிக்கணும்னு இப்போ வரை காத்திருக்கான் உங்களுக்காக. நீங்க கிடைக்கலைன்னா இப்படியே வாழ்ந்து செத்துப் போயிருப்பான். இப்போ கூட உங்களை அவுங்க அப்பா கண்ணுல இருந்து மரச்சி பாத்துட்டு இருக்கான். உங்களுக்காக அவன் அப்பவ ஜெயிலுக்கு அனுப்ப கூட ப்ளன் போட்டு வச்சிருக்கன்  இதுக்கு மேல உங்க இஷ்டம் சுடர்” என்று அமைதியாகிவிட்டான் சரவணன்.

இதையெல்லாம் கேட்டு கண்கலங்கிய சுடர் எதையோ யோசித்தபடியே அமர்ந்திருக்க, அப்போது அங்கு வந்த நர்ஸ், “சார் முழிச்சிட்டாரு” என்று சொல்லிவிட்டுச் செல்ல, சுடர் வேகமாக எழுந்து அவனைப் பார்க்கச் சென்றான். இதைப் பார்த்துச் சிரித்த சரவணன் நிம்மதியாகக் கண்களை மூடிச் சாய்ந்து கொண்டான் . ரூமுக்குள் நுழைந்த சுடர், மகிழன் அருகே கண்கலங்கி நிற்க, அவளை நிமிர்ந்து பார்த்த மகிழன், அவள் கையைப் பிடித்தபடி, “மன்னிச்சிரு சுடர்” என்று கண்ணீர் விட்டான்.