தந்தை “இல்லம்மா.. இப்படி எல்லாம் சொல்லாத.. உனக்கு ஒன்னு தெரியுமா.. ஷிவாவிற்கு உடல்நலமில்லாமல் போச்சு போன வாரம்.. லேகா மருத்துவமனை வந்தாள்.. அவதான் ம்மா.. ஷிவாவை அட்மிட் செய்தது.. இரண்டுநாள் ஷிவா ஹாஸ்ப்பிட்டலில் இருந்தான். நான்தான் கூட இருந்தேன். லேகா.. ரெண்டு நாளும் அங்கேதான் இருந்தது. அவங்க பேசிக்கிட்டுதான் இருப்பாங்க.. நீ கவலை படாத டா.. சரி பண்ணிடலாம்.. நீ மாப்பிள்ளையை பார்த்துக்க” என்றார்.
“ஆமாம் டா.. அவர்களுக்குள் எதோ கோவம். அவ்வளவுதான். நான் கேட்டுக் கொள்ளவில்லை ஏதும்.. ஷிவா அப்படி பொறுப்பில்லாமல் இருக்கமாட்டான்.. நீ வொர்ரி பண்ணிக்காதா.” என்றார்.
“ஓகே ப்பா..” என சொல்லி மேலும் ஏதேதோ பேசி இருவரும் அழைப்பினை துண்டித்தனர்.
தீக்ஷி, சந்தோஷமாக இருந்தது. எப்படியோ இவர்கள் இருவரும் சேர்ந்துவிட்டால் போதுமென. தன் நேரத்தை இனிமையாக செலவிட எண்ணினாள்.
அடுத்த ஒருவாரம் லீவ்.. தீஷிதான் தினமும் சமையல், வகையாக தினமும் செய்யத் தொடங்கினாள். உணவு சுவையாக இருக்கிறது என அவளே நம்பிக் கொண்டு.. கணவனையும் நம்ப வைத்துக் கொண்டிருந்தாள்.
சந்துரு காலையில் கிளம்பும் போது.. தோசை.. சப்பாத்தி என.. உணவுகளை சமைக்கிறாள் தீக்ஷி. சந்துருவும், மனையாளின் முகம் வாடக் கூடாது என உண்டுவிட்டுத்தான் செல்லுவான்.
ஒருசில நேரம் நன்றாவும் இருக்கிறது, உணவுகள்.. சந்துரு “இன்னிக்கு பூரி.. சூப்பர் செஃப்” என பாராட்டி.. பின்னிலிருந்து அவளை அணைத்துக் கொண்டு.. தன் கையால் ஊட்டிவிட்டான்.
தீக்ஷி, கணவனின் அணைப்பில் சிலிர்த்து போனாள்.சமையல் அடுத்தநாள் இன்னும் ருசியாகவே இருந்தது. அப்போது சந்துருவின் அணைப்பு.. நெஞ்சோடு நெஞ்சாக இருந்தது.
மதியம் மெஸ்ஸிலிருந்து வரும் உணவுகளைதான் உண்டாள். இரவில் இருவரும் சேர்ந்து உண்டனர். தீக்ஷியை காத்திருக்க வைக்காமல் நேரமாக வீடு வந்து சேர்ந்தான். அவளின் யோசனைப்படி.. அவளின் தந்தையோடு அதிகம் சேருவதில்லை.. ம்.. தன் மாமனாரிடமிருந்து கொஞ்சம் தள்ளி இருந்தான். ஆனால், தினமும் பேசிவிடுவான் “மாமா எப்படி இருக்கீங்க.. ஏதாவது பார்ட்டி இருக்கா.. நான் வரணுமா” என. சும்மாவானும் கேட்டிடுவான்.
சுந்தரம் மகள் பேசியதிலிருந்து மாப்பிள்ளையை பாதுகாக்கத் தொடங்கிவிட்டார். அதனால், ஏதும் இரவு விருந்துக்கு அழைப்பதில்லை. பகலிலேயே தனது நண்பர்களை பார்த்து வந்தனர்.
சந்துருவின் கவனம்தான் வேறுபக்கம் திரும்பிவிட்டதே, அதனால், சந்துருவும் அதிகம் மாமனாரை நாடுவதில்லை.
இப்போது க்ரிஷ் சந்துரு இருவரும் அதிக நேரம் செலவிட்டனர். ஷிவா, எலேக்ட்ரிக் சம்பந்தமான எந்த வேலையாக இருந்தாலும்.. க்ரிஷ் சந்துருவிடம் சொல்ல.. இருவரும் சேர்ந்தே செய்தனர்.
அஹ.. க்ரிஷ் சொல்லுவதோடு சரி.. சந்துருதான் பார்த்து பார்த்து செய்யத் தொடங்கினான்.
அத்தோடு, முழு நேரமாக ஒரு டாகுமென்ட் தயாரித்து.. எலெக்ட்ரிக் கார்களுக்கான மெயின்ட்டனஸ்.. பாட்டரிகள்.. அதற்கான தேவைகள் பற்றி நீண்ட டாகுமென்ட், அதில் எலேக்ரிட்க் வண்டிகளுக்கான டீலர்ஷிப் எடுப்பது பற்றி நிறைய சொல்லியிருந்தான். அதன் எதிர்கால பயன்பாடுகள்.. மார்கெட் தேவைகள்.. லாபம் என சொல்லியிருந்தான். க்ரிஷ்ஷிடம் கொடுத்தான்.. ஷிவாவிடம் அதை சேர்த்திடுவான என தெரியும். அதனால் கொடுத்தான். சந்துரு இதில் நாட்களை கடத்த.. வந்த வேலையை மறந்தான்.
!@!@!@!@!@!@!@!@!@
ஷிவா, அலுவலகம் வந்து சேர்ந்தான். தினமும் சந்துருவின் ரிபோர்ட் பார்ப்பதை வேலையாக வைத்திருந்தான். அத்தோடு, க்ரிஷ்ஷின் வாய்மொழியாக சந்துரு, பற்றி கேட்டுத் தெரிந்துக் கொள்ளுகிறான்.
அந்த கார் சார்ஜிங் சென்ட்ர் பக்கம் போவதேயில்லை ஷிவா. எல்லாம் க்ரிஷ் மூலமாக.. சந்துருவை பார்த்துக் கொள்ள சொல்லுகிறான். அதன் திறப்புவிழா நாட்கள் நெருங்குகிறது.. வடிவேலு, அடிக்கடி மகனுக்கு போன் செய்து.. விசாரித்தார்.. ‘வேலையாகிவிட்டதா… அடுத்த இடத்தின் வேலையை எப்போது தொடங்குவாய்.. நான் மினிஸ்ட்டரிடம் பேசிவிட்டேன். நீ எதையும் பார்ப்பதேயில்லையா’ என அதட்டினார் மகனிடம்.
ஷிவா சந்துரு கொடுத்த ரிபோர்ட்டின் சாப்ட் கோப்பி ஒன்றை.. தந்தைக்கு அனுப்பி வைத்துவிட்டான்.
வடிவேலுவிற்கு, சந்தேகம்தான் அந்த ரிபோர்ட் பார்த்ததும்.
அதன்பிறகுதான் க்ரிஷ்ஷிடம் வினவினார்.. ‘என்னடா ஷிவா ரிபோர்ட்டா இது.. வேறு போல இருக்கு.. என்ன, பிளான் மார்ரிவிட்டனா?’ என வினவினார்.
க்ரிஷ், சந்துரு பற்றி அப்போதுதான் விவரமாக சொல்ல.. வடிவேலுவிற்கு நிம்மதி ‘மகன்.. நல்ல வேலை செய்திருக்கிறான்.. வேலைக்கு வேலையும் ஆச்சு.. பங்கும் அவனுக்கு கிடைக்காது’ என நிம்மதியானார்.
ஷிவாவிற்கு, தந்தையின் அழைப்பு தொல்லை.. இல்லாதது நிம்மதியாக தன் வேலையை பார்க்க முடிந்தது.
ம்.. என்னமோ இப்போதெல்லாம் தந்தை தாய் பேசினாலும்.. தொழில் பற்றி விசாரித்தாலும் என்னமோ டென்ஷன் ஆகிறது. எதற்கு கேட்க்கிறார்கள்.. என. அத்தோடு லேகா சந்துரு விஷயத்தில் தாங்கள் செய்ததை அந்த அழைப்புகள் நினைவுப்படுத்திகிறது.
ம்.. அவன் லேகாவோடு மருத்துவமனைக்கு சென்ற பிறகு.. ஷிவாவின் சிந்தனையில் மாற்றம் நிறைய. அதை அவனால்.. ஆராய முடிகிறது.. ஒரே பக்கமாக யோசித்துவிட்டேனோ என.. இப்போதெல்லாம் அவனால் பகுத்துணர முடிகிறது. அது வருத்தமும் தருகிறது.. தெளிவையும் தருகிறது. ஷிவா தன்னை தானே ஸ்த்திரப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தான்.. அந்த மருத்துவமனை வாசத்திற்கு பிறகு.
ம்.. லேகாவோடு, ஷிவா மருத்துவமனையில் இருந்த போது.. தன் மனையாள் தன்னிடம் பேசுவாள்.. கேள்வியாவது கேட்பாள்.. சண்டை போடுவாள் என ஏதேதோ எண்ணினான்.
ஆனால், லேகா எந்த கேள்வியும்.. சண்டையும் இல்லாமல்.. அமைதியாக இருந்தாள். ஏன்? வேலவன் பற்றி பேசகூட இல்லை. தானாக ஆரம்பித்தாலும்.. அவள் ‘நீங்க முதலில் உடம்பை பாருங்க.. மற்றதை அப்புறம் பேசலாம்’ என்றுவிட்டாள். அந்த எழுபத்தியிரண்டு மணி நேரமும்.. வரமா சாபமா என தெரியாமலே அவளோடு இருந்தான்.
லேகா புன்னகைக்கவில்லை.. முன்போல படபடவென பேசவில்லை.. எனக்கு உடல்நலமில்லை என.. அவள் அழுக கூட இல்லை. ம்.. கல்போல இறுகி இருந்தாள்.. கணவன் முன்.
கணவன், மனையாளின் இந்த இறுக்கத்தில்.. தடுமாறினான்.. ‘பிக் ராக்’ என திட்டினான் தனக்குள். அவளிடம் பேசவேமுடியவில்லை. ஆனால், என்னை அவள் தொட்டால் மட்டும்.. எப்படி உருகுகிறது என் தேகம்.. அவளின் பேச்சிற்கு ஏன் என் காதுகள் காத்திருக்கிறது.. என அவனால் ஆராய்ச்சி மட்டுமே செய்ய முடிந்தது.
மூன்று நாட்களும்.. சாபத்தில் பெற்ற வரத்தினை அனுபவித்து.. தன் அப்பார்மென்ட் வந்து சேர்ந்தான் ஷிவா.
ஷிவா, உணர்ந்த காதலை, இழந்த துக்கத்தில் துவண்டுதான் போனான். முழு ஒய்வு.. ம்.. யோசனை மனையாள் பற்றி மட்டுமே. குடும்பம் பற்றியோ.. உறவுகள் பற்றியோ சிந்தித்தேயிரதாவனின் நினைவில் தங்களின் உறவு பற்றிய சிந்தனை மட்டுமே.
ஒரு முடிவுக்கு வந்தான்.. இது தண்டனை எனக்கு. ‘அவள் மட்டுமே போதும் என அவள் குடும்பத்தை பற்றி யோசிக்கவில்லை நான். எப்படி தம்பியை அவள் விடுவாள்.. மாட்டாள்.. நான் அவளிடம் உணமையாக இல்லாததற்கான தண்டனை இந்த பிரிவு’ என தன்னை சமாத்தப்படுத்திக் கொண்டுதான் வேலையை பார்க்க வந்தான்.
அந்த நாள்.. செம்பருத்தி பூ டீ.. ABC பவுடர் என எல்லாம் எடுத்துக் கொண்டு.. க்ரிஷ் காலையில் வீடு வந்தான். “அண்ணி கொடுத்துவிட்டாங்க.. டெயிலி இதை சாப்பிடனுமாம்..” என்றான்.
கருவேலன் குச்சியை கண்ட எஜமான் ரஜினியானான் ஷிவா.. அப்போது. முதலில் அதையெல்லாம் பார்த்து.. பாலில் கலந்து அப்போதே குடித்துவிட்டு.. அலுவலகத்திற்கும் எடுத்துக் கொண்டுதான் கிளம்பினான்.
இப்போதும் ஒருவர் அருகிலிருக்கும் போது, அதன் அருமை தெரிவதேயில்லை தானே. காயம் கண்டு.. கத்தி கதறி.. அவர் நினைவால்.. வாடி வந்தங்கி நிற்கும் போதுதானே.. அன்பின் ஆழம் புரிகிறது.. மனித இருப்பின் அவசியம் தெரிகிறது.
மனையாள் அழைக்கவில்லை அப்போதும்.. இவன் அழைத்தான்.. எடுக்கவில்லை லேகா. விட்டுவிட்டான்.. ‘தண்டனை என ஆனபின் எதற்கு.. தப்பிப்பது.. அனுபவிக்கிறேன்’ என அப்போது மனதார ஏற்றுக் கொண்டான்.
அன்றிலிருந்து அவளுக்கு அழைப்பதில்லை.. ஆனால், மனையாளை மனதில் வைத்து சந்துருவின் நிலையை யோசிக்க தொடங்கினான், ஷிவா. அதன் விளைவே.. சந்துருவை தன் அறைக்கு அனுமதித்தது.. தன் லாப்டாப் கொடுத்தது. அவன் கொண்டுவந்த பார்ட்டிக்கு, தானே பணம் கொடுத்தது. இதை எதையும் தந்தையிடம் சொல்லாதது. ‘ம்.. சந்துரு இந்த வேலவனில் இருந்தால்.. லேகா சந்தோஷப்படுவாள்..’ என எல்லாம் செய்தான்.
ஆனாலும், பார்த்துக் கொள்ளலாம்.. சந்துருவிடம் சொல்லிவிடலாம்.. ‘இது என் வேலவன்.. இதில் நீ தலையிட கூடாது என சொல்லிவிடலாம்.. அஹ’ எனதான் அவனின் எண்ணம். அதனால் எல்லாம் செய்தான்.
ஆனால், சந்துருவின் பார்வை.. அந்த எலெக்ட்ரிக் பக்கம் வந்தது.. அவனே எதிர்பாராதது. அதனால், ஷிவா காய்களை நகர்த்த.. வழி ஈசியாக கிடைத்தது.
வாழ்க்கையின் நகர்வுகளை.. யாராலும் யோசிக்க முடியாதே.