தீக்ஷிக்கு, ஸமஸ்ட்டார் எக்ஸாம் முடிந்திருந்தது.. கணவனோடு நேரம் செலவிடலாம் என வீடு அவர்களின் அப்பார்மென்ட் வந்தாள். கணவனுக்கு அழைத்தாள் வரும் வழியில், சந்துரு அழைப்பினை ஏற்கவில்லை.
தீக்ஷி சமைப்பதற்கு என பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
சந்துரு எப்போதும் வீட்டினை சுத்தமாகவே வைத்திருப்பான்.. தீக்ஷி அதை மெச்சிக் கொண்டே கணவனுக்கு.. செய்தி அனுப்பினாள்.. ‘பாஸ்தா செய்கிறேன்.. சீக்கிரம் வாங்க’ என. சந்துரு அதை பார்த்ததற்கான அறிகுறி தெரியவும் பெண்ணவள், குளித்து.. சமையல் செய்யத் தொடங்கினாள்.
இன்று சந்துரு, எப்போதும் வேலை முடிந்து வரும் நேரத்தைவிட தாமதமாகியது.. ஆனாலும் இன்னமும் வரவில்லை கணவன்.
தீக்ஷிக்கு, பதினோருமணிக்கு மேல் ஆகவும்.. பசி தாங்க முடியவில்லை.. பாஸ்டா’வை ஓவனில்.. மீண்டும் ஹீட் செய்துகொண்டு.. கணவனை அழைத்தபடியே உணவினை உண்ணத் தொடங்கினாள்.
சந்துரு, அழைப்பினை ஏற்கவில்லை. அதற்கும்மேல் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தான் வீட்டிற்கு.
தீக்ஷி படம் பார்த்துக் கொண்டே சோபாவில் கிட்டத்தட்ட படுத்திருந்தாள். சந்துரு கதவினை திறந்துக் கொண்டு உள்ளே வர.. பெண்ணவள் எழுந்தாள்.
தீக்ஷிக்கு, என்ன நடக்கிறது என தெரியவில்லை. படிப்பில் கவனமாகியிருந்தால்.. கணவனோடு பேசும் போது.. அவன் சொல்லுவதுண்டு.. ‘இங்கே சென்றேன் உன் அப்பாவோடு.. இந்த கிளைன்ட்டுடைய ப்ரோசல் சைன் ஆகிறது என சொன்னான்.. அப்புறம் உன் அண்ணன் ஒரு எலெக்ட்ரிக் ப்ராஜெக்ட் பண்றான்.. நான் போய் பார்த்துட்டு வந்தேன்.. நாளை கோவை போறேன்’ என இப்படியேதான் இருவரும் பேசினர் பொதுவான விஷயங்களை. மற்றது ஏதும் சந்துரு சொல்லவில்லை. இவளும் கேட்கவில்லை.
தீக்ஷி கணவன் அறைக்கு செல்வதை பார்த்து.. எழுந்து அவனோடு வந்தாள் “என்னாச்சு.. ட்ரிங்க்ஸ் எடுத்திருக்கீங்களா” என்றாள்.
சந்துரு “ம்.. இது புது கிளைன்ட்.. கொஞ்சம் பேசவேண்டி இருந்தது.. அதான், நீ தூங்கு காலையில் பேசிக்கலாம்” என்றான்.
தீக்ஷி ஒன்றும் பேசாமல் வெளியே வந்துவிட்டாள். ஒருமாதிரி அழுகையாக வந்தது.. கணவன் ‘தன் வரவினை எப்போதும் எதிர்பார்த்திருப்பான்.. அவனே வந்து அழைத்து செல்லுவான்.. தன்னோடு இருபதற்கு விரும்புவான்.. ஆனால், இப்போது நான் முதல்முறையாக சமைக்கிறேன்.. வந்திருக்கிறேன்.. என்னை அவன் கண்டுக்கொள்ளவில்லையே’ என எண்ணம்… கண்ணீர் துளிர்த்தது.. அப்படியே படம் பார்த்துக் கொண்டே இருந்தாள்.. எப்போது உறங்கினாலோ அவளுக்கே தெரியாது.
அதிகாலையில் சந்துரு, எழுந்து வந்து பார்க்க.. டிவி ஆன் மோடில் இருந்தது. மனையாள் அப்படியே உறங்கியிருப்பதையும் பார்த்தான்.
தீக்ஷியின் அருகில் சென்று பார்க்க.. கண்ணீர் கோடுகள்.. அவளின் சந்தன நிறத்தில்.. கலங்கலாக தெரிந்தது கணவனுக்கு. சந்துரு, என்னவாகிற்று ‘ஏதாவது பிரச்சனையா.. அதான் வந்தாளோ.. இல்லையே.. எக்ஸாம் முடிந்தது எனதானே சொன்னாள்.. எதற்கு அழுகை இவளுக்கு’ என யோசிக்கத் தொடங்கிவிட்டான்.
தீக்ஷியின் அருகில் கீழே அமர்ந்துக் கொண்டான்.. தீக்ஷி நல்ல உறக்கத்தில் இருக்க.. சந்துரு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. லேசான கண்ணீர் கோடுகளை தன் விரல்களால் துடைத்தான். அவளை எழுப்பும் எண்ணத்தில் சற்று.. விரல்களை அழுத்திதான் துடைத்தான்.
அவளோ எழுந்துக் கொள்ளவேயில்லை. அன்றுபோல இன்றும் எதோ செய்கிறாள் என உணர்ந்த கணவன் “திக்க்ஷி.. டைம் ஆகுது.. எழுந்தால்.. பேசிவிட்டு ஆபீஸ் போவேன்” என்றான் மெல்லிய குரலில்.
தீக்ஷிக்கு காது கேட்டது நன்றாகவே, கணவன் அருகில் இருக்க வேண்டியே.. பெண்ணவள் அப்படி உறங்குவது போல பாசாங்கு செய்ய.. இப்போது கணவன் அதை கண்டுக் கொண்டதும்.. திரும்பி படுத்துக் கொண்டாள்.. “நீங்க ஆபீஸ் போக வேண்டாம்” என்றபடி.. கண்திறக்காமல் சொல்லிவிட்டு மீண்டும் தன் பாசாங்கினை தொடர்ந்தாள்.
கணவன் “அஹ.. ம்.. வேண்டாம். நம்ம.. வேலவன்தானே லேட்’டாக போய்க்கலாம். ஓகே. ஆனால், சும்மா எப்படி லேட்டாக போவது.. ஏதாவது ஸ்பெஷல்..” என்றான், கணவனாக.
தீக்ஷி புன்னகைத்துக் கொண்டாள்.. சின்ன வெட்கத்தோடு. “என்ன என்ன ஸ்பெஷல்.. பாஸ்தா இருக்கு..” என்றவள்.. ‘வேலவன்’ என்ற யோசனையோடு “ஏன் உங்க ஆபீஸ்.. வேலை..” என்றாள்.
சந்துரு “நான் வேலையை விட்டுட்டேன் திக்க்ஷி” என்றான்.
சந்துரு, வேலையை விட்டுவிட்டது பற்றி மனையாளிடம் சொல்லவேயில்லை. தீக்ஷி இதுவரை தெரியாது. அவளுக்கு இப்போது இது தெரிய அரண்டு போனாள்.. விழி விரித்து.. பார்த்தாள் கணவனை.
அவளுக்கு, கணவனின் இயல்பான வாழ்க்கைமுறை பிடித்திருந்தது.. அப்பா பெரியப்பா அண்ணன் போல இல்லை சந்துரு, வேலை.. வீடு.. குடும்பம்.. என அவனின் ப்ரெசென்ட்ஸ் எல்லா இடத்திலும் இருப்பது பிடித்திருந்தது.
இப்போது வேலையை விட்டது.. நேற்று தாமதமாக ட்ரிங்க்ஸ் எடுத்துக் கொண்டு வீடு வந்தது.. எல்லாம் பயத்தை தந்தது பெண்ணுக்கு. இவரும்.. என்னிடம் ஏதும் சொல்லவில்லை.. கெட்ட பழக்கம் வேறு.. என கோவமாக வர.. எழுந்து அமர்ந்தாள்.. கண்கலங்க.
சந்துரு “என்னாச்சு ம்மா” என்றான்.
தீக்ஷி எழுந்து தன் அறைக்கு சென்றுக் கொண்டே “வேலையை விட்டுடீங்களா.. என்கிட்டே சொல்லவேயில்ல” என்றாள், கோவம் கூட இல்லை.. அழுகையான குரல்தான் வந்தது.
அங்கேயே நின்றிருந்த கணவன்.. கொஞ்சம் அரண்டு போனான்.. ‘ஆமாம், இவளிடம் நான் கருத்து கேட்க்கவும் இல்லை.. சொல்லவும் இல்லை..’ என தோன்ற.. தலையை பின்னால் கோதிக் கொண்டே.. நிமிர்ந்தான்.
தீக்ஷி தனதறைக்குள் சென்றுவிட்டிருந்தாள்.
சந்துருவிற்கு புரிந்தது.. ‘ஆமாம் யாரிடமும் நான் சொல்லவில்லை அக்கா அப்பா தீக்ஷி என யாரிடமும் நான் சொல்லவில்லை’ என அப்போதான் உணர்ந்து நின்றான். சிலபல மாற்றங்கள்.. தங்களையறியாமலேயே நடந்திடுகிறது.. அவனுக்கு எதையும் யோசிக்க நேரம் இருக்கவில்லை.. இப்போது தீக்ஷி கேட்கவும் கண்முன்னே கடந்து, நடந்தவைகள்.. நினைவில் வருகிறது.
தீக்ஷி “நான் என் வீட்டுக்கு போறேன்” என்றாள், காதுகளில் தோடு போட்டுக் கொண்டு.
சந்துரு புருவம் உயர்த்தினான் “சரி.. இந்தா காபி குடி முதலில்.. பேசிக்கலாம்” என எடுத்து வந்த தந்தான்.
தீக்ஷி வாங்கிக் கொண்டு சோபாவில் அமர்ந்து குடிக்க தொடங்கினாள்.
சந்துரு அருகில் அமர்ந்தான் “இல்ல, யாரிடமும் சொல்லலை. தப்புதான். சாரி” என்றான்.
தீக்ஷி “ஒரே வார்த்தையில் எல்லாம் சரியாகிடுமா” என்றாள் கண்கலங்க.
சந்துரு பேசாமல் அமர்ந்திருந்தான்.
“நேற்று ட்ரிங்ஸ் எடுத்திருக்கீங்க.. புதுசாக இருக்கு.. யார் அப்பாகூட போனீங்களா.. இன்னும் என்னவெல்லாம் செய்யறீங்க” என்றாள் அழுகையும் சங்கடமும் சேர்ந்த குரலில்.
சந்துரு அதே அமைதியோடு அமர்ந்திருந்தான்.
தீக்ஷி “உங்களுக்கு எதுக்கு அந்த சொத்து.. பங்கு.. எல்லாம். ஏன் இந்த லைப் உங்களுக்கு பிடிக்கலையா.. உங்களால் சம்பாதிக்க முடியாதா.. எதுக்கு இப்படி நல்லா இருக்குற நீங்க.. கெட்டு போறீங்க” என்றாள்.
சந்துருவிற்கே புரிகிறது.. ஆனால், அவள் சொல்லவும் கொஞ்சம் எரிச்சலாக “என்ன இப்போ.. ஒருநாள் ட்ரிங்க் பண்ணது தப்பா..” என்றான்.
தீக்ஷி “இது வேண்டாம் நம்ம வாழ்க்கைக்கு.. அப்படியே வேண்டுமென உங்களுக்கு தோன்றினால்.. கேஸ் போடுங்க.. இப்படி வேலையை விட்டுட்டு.. இதில் தொலையாதீங்க” என்றாள்.
சந்துரு பெண்ணவளின் கைகளை தனக்குள் எடுத்துக் கொண்டான்.. “இது அம்மாவோட சொத்து தீக்ஷி. நானும் அதில் ஒரு பங்கு டா.. எனக்கும் வேலவனுக்கும் தொடர்பு வேண்டும். ப்ளீஸ்.. விட்டுட்டேன்.” என்றான்.
மனையாளின் முகம் தெளியவில்லை.
சற்று நிமிடங்கள் கடந்தபின் கணவன்.. “உனக்கு ஒன்னு சொல்லவா.. நான் இப்போ, எந்த க்ளைன்ட்டினையும் பார்ப்பதில்ல.. அஹ.. எனக்கு உன் அண்ணனோட எலெக்ட்ரிக் கார் சார்ஜ்ஜிங் ப்ராஜெக்ட் பிடிட்ச்சிருக்கு” என சொல்லி மூச்சு விட..
“உங்களுக்கு என் அண்ணன் செய்வதேதான் வேண்டுமா.. வேற ஏதாவது செய்ங்களேன்.. ஏன் அவர்கிட்டவே போறீங்க” என்றாள் கோவமாக.
“ஐயோ, அவன் கொடுக்கமாட்டான் சந்துரு.. இன்னும் இன்னும் சண்டைதான்.” என எழுந்தாள்.
கணவன் அவளின் கைபற்றி அமரவைத்தான்.. “அது நான் பார்த்துக்கிறேன்.. இன்னிக்கு, என்கூடதான் நீ.. படம் பார்க்க போலாமா” என்றான்.
மனையாள் முடியாது என தலையசைத்தாள்..
“சரி, கோவில்” என்றான்.
அமைதியாக இருந்தாள்.
“சரி கோவில் போலாம்.. எப்படியாவது குழந்தையை பாஸ்செய்ய வைத்திடு ஆண்டவா என வேண்டிக்கணும்.. ம்.. எத்தனை தேங்காய்” என்றான் விளையாட்டாக.
பெண்ணவள் “ஆமாம்.. எப்படியாவது என் புருஷனுக்கு நல்ல புத்தி கொடு.. என் அண்ணன் கூட சண்டை போட வைக்காதேன்னு வேண்டனும்.. எத்தனை தேங்காய்..” என்றாள் கணவனிடம்.. அதே விளையாட்டு குரலில்.
சந்துரு இமைக்காமல் அவளையே பார்த்துவிட்டு.. அவளின் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான்.. பெண்ணவள் இந்த முன்னறிவிப்பு இல்லா.. முத்தத்தில்.. மெல்ல மெல்ல தன்னை தொலைத்தாள்.
நீண்ட.. முறையான முத்தம்.. இனிதாகவே முடிந்தது.
கணவன் அவளின் சிவந்த கன்னங்களை பார்வையால் வருடினான்.. பின் “ம்..” என்றான் அவளின் உதடுகளையே பார்த்துக் கொண்டு.
பெண்ணவளின் பார்வை கணவனின் கண்களை பார்க்க.. அவனோ “என்ன.. என்னைத்தானே திரும்ப படித்தாய்.. அதே போல இதுவும் வேண்டும்” என்றான் சலுகையாக.
பெண்ணவள் கூச்சத்தோடு.. நெருங்கி அவனின் இதழ்களை முத்தமிட.. கணவனின் இதழ்கள் அதை வழிமொழியத் தொடங்கியது.