ஞாயிறு, தீக்ஷி சந்துரு இருவரும் சித்தூர் வந்து லேகாவை பார்த்தனர்.
லேகா, முன்போல தனித்திருக்கவில்லை.. ஹாலில் அமர்ந்து பேசினாள்.. இயல்பாக இருப்பதுபோல காட்டிக் கொண்டாள்.
ரமேஷ் தந்தையாக “சந்துரு, வேண்டாமே நமக்கு இந்த பங்குகள்..” என்றார்.
சந்துரு “ஏன்?” என்றான் கடுப்பாக.
“லேகாவை நீ யோசிக்கவேயில்லையா” என்றார்.
“ஓ.. அப்போ, நான் எழுதி கொடுத்ததும் வந்து அவன் லேகாவை கூட்டி போனால்.. எல்லாம் சரியாகிடும் அப்படிதானே” என்றான்.
தந்தைக்கு, இதுவும் சரியில்லை என புரிகிறது. ஆனால், லேகா இப்படி இருப்பதை பார்க்க முடியவில்லை. ரமேஷ் ஷிவாவிடம் பேச வேண்டும் என எண்ணிக் கொண்டார்.
சந்துரு, லேகாவிடம் பேசினான்.. ஏதேதோ பேசினான் சம்பந்தமேயில்லா விஷயங்களை பற்றி. அவளை வெளிகொனற முயன்றான்.. ஆனால், தீக்ஷி அதை எளிதாக செய்தாள்.
ம்.. தீக்ஷி, சமைக்கிறேன் என கீழே சமையலறையில் நின்றுக் கொண்டு ‘அண்ணி.. அடுத்து என்ன கட் பண்ணனும்.. ஆமாம்.. தண்ணீர் எவ்வளவு ஊற்ற வேண்டும்.. ’ என கேட்டு.. சமையல் என எதோ செய்ய முற்பட்டு.. எல்லோரின் முகத்திலும் தவிர்க்க முடியாத புன்னகையை கொண்டு வந்தாள், பெண்.
சந்துருதான் அந்த சமையலை நேர் செய்ய வேண்டி இருந்தது.. அதுவும் லேகாவின் மனதை இதமாக்கியது. ‘தீக்ஷியை, தம்பி நல்லவிதமாகவே பார்த்துக் கொள்ளுகிறான்’ என உணர்ந்தாள்.
லேகாவோடுதான் சந்துரு உண்டான்.. அவளோடு பேசி.. அவள் உறங்க ஏதுவாக.. அவள் ரசிக்கும் பாட்டுகளை எல்லாம் தேர்வு செய்து போட்டுவிட்டு.. என சந்துரு அக்காவை கவனித்து.. அவள் உறங்கியதும்தான் மேலே சென்றான்.
தீக்ஷி, எதோ படித்துக் கொண்டிருந்தாள். சந்துரு உள்ளே வந்து அப்படியே கட்டிலில் சாய்ந்துக் கொண்டான்.. லேகாவின் உயிர்ப்பில்லா புன்னகை.. அவனை வாட்டியது.. அழுகையாக வந்தது.. ‘என்னால் விட்டுத்தர முடியும்.. ஏன் நான் அப்பா சொல்லுவது போல இருக்கிறேன்’ என தன்னையே நொந்துக் கொண்டான்.
தீக்ஷி கணவன் ஏதாவது பேசுவான் என பார்க்க.. அவன் அமைதி என்னமோ செய்ய.. தீக்ஷி “என்னாச்சு” என்றாள்.
கணவன் ‘ஒன்றுமில்லை’ என தலையசைத்தான்.
தீக்ஷி அவனின் முகம் பார்த்து எதிரில் வந்து அமர்ந்தாள் “என்னாச்சு.. அண்ணியை நினைத்து கவலையா” என்றாள்.
“நான் பேசுகிறேன்.. ம்..” என்றாள்.. சின்ன கண்களால் இமைக்காமல் நோக்கி.
“அவன்கிட்டவெல்லாம் உன்னை பேச சொல்லிட்டு நான் வேடிக்கை பார்க்க முடியுமா.. லேகாவையே தூக்கி எரிச்சிட்டான்.. மனுஷனா அவன். எனக்கு வரும் கோவத்திற்கு..” என சொல்லி மெத்தையை குத்தினான் வேகவேகமாக.
தீக்ஷி அதிர்ந்து பார்த்தாள்.
இரண்டு நொடிகளில் கோவம் போகவும்.. மனையாளை திரும்பி பார்த்து.. அவளின் அதிர்ந்த முகம் கண்டு.. அமைதியானான் சந்துரு.
தீக்ஷி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
சந்துரு “இதெல்லாம் சரியா, இப்படி அவள் அன்பினை.. அலட்சியப்படுத்தலாமா? உங்கள் வீட்டிலிருந்து யாருமே வந்து ஒருவார்த்தை பேசவில்லை.. ஷிவா எப்படி இருக்கிறான் இப்படி” என ஆதங்கத்தை கொட்டத் தொடங்கிவிட்டான்.
அத்தோடு “இருக்கட்டும்.. பார்க்கிறேன்.. இதனால்தானே எதையும் சொல்லவில்லை எங்களிடம். ம்.. காட்டுகிறேன் நான் யாரென காட்டுகிறேன்” என்றான் வெறியாக சின்ன குரலில்.
தீக்ஷி “இல்ல சந்துரு.. நீங்க இவ்வளவு கோவம் கொண்டால்., பிரச்சனை பெரிதாகும்.. நீங்க இவ்வளவு ஹார்ஷ்ஷாக தேவையில்லை.. அது உங்களுக்கான பங்குதான் நீங்கள் எதையும் நிருபிக்க வேண்டியதில்லை.. அண்ணாகிட்ட பேசுங்க.. யாராவது.. இருதரப்பிற்கும் பொதுவானவர்களை வைத்து பேசுங்க.. இல்லை, கோர்ட் இருக்கு.. கேஸ் போட்டு சால்வ் செதுக்கலாம்.. நீ பெரியாயவனா? நான் பெரியவனா? சண்டை வேண்டாமே” என்றாள்.
சந்துரு எழுந்துவிட்டான் “ஏன் வேண்டாம்.. என்னால் அவனோடு மோதமுடியாதா.. ஏன் என்னால் அதை செய்ய முடியாதா.. பயப்படுறீயா” என்றான் எரிச்சலாக.
மனையாள் சற்று மிரண்டு போனாள்.. ஆனாலும், அந்த பார்வை இல்லை என்னுடையது என எண்ணி “இல்ல, அப்படி இல்லைங்க.. நான் அப்படி சொல்லலை” என்றாள்.
“வேற எப்படி.. நீயும் அப்படிதானே.. என்னால் முடியாதுதானே நினைக்கிற.. உங்க பெரியப்பா அண்ணன் எல்லோருக்கும் எங்களை கண்டால் அப்படிதானே எண்ணம்” என்றான், கோவமாக. அவர்கள் மேல் உள்ள கோவத்தை மனையாள் மேல் சட்டென கொட்ட்டிவிட்டான்.
தீக்ஷி அமைதியாகிவிட்டாள்.
சந்துரு, எழுந்து மொட்டைமாடிக்கு சென்றுவிட்டான். அவனுக்கு கோவம் எரிச்சல்.. என்ன செய்வது என பல யோசனைகள்.. மனையாள் பேசவும் அது அவனுக்கு தவறாக தெரிய.. மீண்டும் கோவம்.
தீக்ஷிக்கு சந்துருவின் நிலை பயத்தினைதான் கொடுத்தது.. தன் வீட்டு ஆட்கள் போல.. மாறிவிடுவானோ என. அமைதியாக தனது பொருட்கள் எல்லாம் எடுத்து வைத்து.. கண்மூடி படுத்துக் கொண்டாள். ஆனாலும் உறக்கம் வராமல் கணவனின் வருகைக்காகவும் காத்திருந்தாள்.
சற்று நேரத்தில்.. சந்துரு கதவை திறந்துக் கொண்டு வரவும்.. லேசாக திரும்பி பார்த்து.. மீண்டும் கண்மூடிக் கொண்டாள், தீக்ஷி.
சந்துரு “என்ன இன்னமும் தூங்கலையா” என்றான்.
“ம்.. தூங்கிட்டேன்” என்றாள்.
சந்துரு அவளின் பக்கம் வந்து நின்றான்.. கைகளை கட்டிக் கொண்டு. அவள் உறங்காமல் இருப்பது.. எதோ செய்ய.. “என்ன.. நானில்லாமல் தூக்கம் வரலையா” என்றான்.
பெண்ணவள் போர்வையை சட்டென விலக்கி.. பார்த்துவிட்டு.. மீண்டும் போர்த்திக் கொண்டாள்.. பின் “எனக்கு யார் இல்லையென்றாலும் தூக்கம் வரும்..” என்றாள், வீம்பாக.
கணவன் தாடையை தடவிக் கொண்டே நின்றான்.. பேசவில்லை.
பெண்ணவள் மீண்டும் போர்வையை விலக்கி முகம்காட்ட.. “இப்படி என்னை டோவ்ன் பண்றமாதிரி பேசாத..” என்றான், கரகரப்பான குரலில்.
எழுந்து அமர்ந்தாள் தீக்ஷி.
மனையாளின் மருண்ட விழிகள் எதோ செய்ய.. சந்துரு புன்னகைத்தான் “நானில்லாமல் நீ தூங்க கூடாதுன்னுதான் எனக்கும் ஆசை.. ம்.. பார்ப்போம்..” என சொல்லிக் கொண்டே.. தன்னிடம் வந்து படுத்துக் கொண்டான்.
என்னமோ அன்று இருந்த கணவனில்லை இன்று.. என தீக்ஷி எண்ணிக் கொண்டு அவனையே பார்த்திருந்தாள்.
சந்துரு “என்ன, என்ன அப்படி பார்க்கிற..” என்றான்.
தீக்ஷி “எங்க அண்ணன் மாதிரி.. பெரியப்பா மாதிரி மாறிடாதீங்க..” என்றாள்.. மனதிலிருப்பதை மறையாமல்.
சந்துரு இமைக்காமல் பார்த்திருந்தான்.. தீக்ஷி திரும்பி படுத்துக் கொண்டாள்.
தீக்ஷிக்கு, கணவனிடம் சின்ன தயக்கம் ஒதுக்கம் இருக்கிறது. அதற்காக அவனை பிடிக்காது என இல்லை. ஆனால், ஒரு பயம்.. இப்போது வந்து அமர்ந்துக் கொண்டது.. அவளிடம். ‘அண்ணன் பெரியப்பா எல்லாம் அப்படியே.. சந்துருவை வளர விட்டுவிடுவார்களா என்ன..’ என ஒரு பெருமூச்சு. அஹ.. அவர்களின் உண்மைமுகம் தெரிந்தவள்தானே இவள்.. அதனால், ஒரு ஆதங்கம் ‘இவர் விட்டுவிடலாமே’ என. ஆனால், அதற்கு கணவன் மனம் வாடுவதும்.. பொருக்க முடியவில்லை அவளால். யோசனையோடுதான் உறங்கினாள்.
“சரி, எனக்கு ஒரு டௌட்.. லதா ஆன்ட்டி, தவறு செய்த புருஷனை அக்ஸப்ட் செய்துக்கிட்டாங்க.. உன்னை இப்படி வெறுத்துட்டாங்க.. எப்படி முடியுது.. அதுவும் ஐந்து வயதுவரை.. பாசமாக வளர்த்த ஒரு குழந்தையை எப்படி ஒதுக்க முடியும்” என்றான்.
தீக்ஷி, கண்களை துடைத்துக் கொண்டாள்.. ஏதும் சொல்லவில்லை அமைதியாகவே வந்தாள்.
சந்துரு, அவள் மனதில் இருக்கும் வருத்தத்தை அறிய விரும்பி கேட்டான்.. தன் மனதிலிருந்ததை சொன்னான். சந்துருவிற்கு மனையாளிடம் யாரும் பேசாமலிருப்பது வருத்தம்தான். அன்று, ஷிவாவின் அலுவலகத்தில் சந்தித்த போது.. முதல்முறையாக உற்று கவனித்தான்.. தன்னிடம் வரவேற்பாக பேசியவர்கள்.. தீஷியிடம் பேசவேயில்லை.. வருத்தமாகவே இருந்தது. கவனித்தவன், தானும் அவர்களை மதித்து பேசவில்லை. ஆனால், நடந்த களையோபரங்களில்.. தீக்ஷியின் விஷயம் மறந்தே போகிற்று. இப்போது அதை பேச.. தீக்ஷியின் மௌனமே கணவனுக்கு விடையாக கிடைத்தது.
கேட்டிருக்க கூடாதோ என அவனுள் எண்ணம்.. யோசனையோடு வந்தான்.
பின்.. எதோ பாடல் ஒன்றினை போட்டுவிட்டான். இசை.. இதமாக்கியது அந்த பயணத்தை.
தீக்ஷி கண்களை மூடி அதில் கரையத் தொடங்கினாள்.
சற்று தூரம் சென்றதும் மனையாளை திரும்பி பார்த்தான் சந்துரு.. உறங்கிவிட்டாலோ என. ஆனால், அவளின் கண் ஓரத்தில் லேசாக கண்ணீர்.
சந்துரு, தன் பெருவிரலால் அதை துடைத்தான்.. அவளின் தலையை லேசாக வருடினான். விழித்துக் கொண்டாள், பெண். கண் திறக்கவில்லை.. கணவனின் வருடல் வேண்டுமாக இருந்தது.. அமைதியாக இருந்தாள்.. அவளின் கருவிழி உருளுவது அவனுக்கும் தெரிகிறது. ஆனால், கண்டுக் கொள்ளாமல்.. மீண்டும் வருடினான். இருவரும் ஏதும் நடந்ததாக காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அஹ.. அன்பின் படிநிலைகளில் இதுவும் ஒன்று.
தீக்ஷியை அவளின் வீட்டில் இறக்கிவிட்டான்.. உள்ளே வந்து காலை உணவு உண்டு, தன் அலுவலகம் கிளம்பினான்.